மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.10.16

கவிதை: திரையிசைப் பாடல்களில் இலக்கணம்!


கவிதை: திரையிசைப் பாடல்களில் இலக்கணம்!

திரைப்படங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியதாகும். அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, பலருக்கும் உண்டு. அதுபோல திரையிசைப் பாடல்களில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட மாத்திரைகள் என்று கூறலாம்.

திரையிசைப் பாடல்களில் தமிழ் இலக்கணம் குறித்த சில செய்திகள் இங்கே உங்களுக்காகக் கொடுக்கப்பெற்றுள்ளது. படித்துப் பாருங்கள்

🖌அடுக்குத்தொடர்:
 ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.

🖌இரட்டைக்கிளவி:
 ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.

🖌சினைப்பெயர்:
 பூபூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.

🖌பொருட்பெயர்:
  கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல

🖌இடப்பெயர்:
 வீடு வரை உறவு வீதி வரை மனைவி!

🖌காலப்பெயர்:
 வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!

🖌குணம் அல்லது பண்புப்பெயர்:
 அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!

🖌தொழில் பெயர்:
  ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!

🖌இறந்த காலப் பெயரெச்சம்:
 வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!

🖌எதிர்காலப் பெயரெச்சம்:
 ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?

🖌இடவாகுபெயர்:
  உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி

🖌எதிர்மறைப் பெயரெச்சம்:
 துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்

🖌குறிப்புப் பெயரெச்சம்:
 அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்!

🖌ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்:  வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.

🖌வன்றொடர்க் குற்றியலுகரம்:
 முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!

🖌நெடிற்றொடர்க் குற்றியலுகரம்:
  நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

🖌உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:
  ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்

🖌இரண்டாம் வேற்றுமை உருபு:
  நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.

🖌மூன்றாம் வேற்றுமை உருபு:
  உன்னால் முடியும் தம்பி! தம்பி!!

🖌பெயர்ப் பயனிலை:
  காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்.

மாணவர்களைப் படிக்க வைக்க எப்படி எல்லாம் ஆசிரியர்கள் கஷ்டபட வேண்டியதாக இருக்கிறது பாருங்கள்!
---------------------------------------------------------------------
2
Someone asked a teacher,
 why do you feel proud of being a teacher?
he smiled and said
" A lawyer's income increases with increase in crime and litigation.
A  doctor's income increases with increase in disease /  illness.
But a teacher's income increases with increase in knowledge, prosperity of people and
 Nation ...!!".
That's why we feel proud...👏👏👏

Dedicated to all Teachers....
=======================================================
படித்தேன், ரசித்தேன்..பகிருகிறேன்
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. வணக்கம் குருவே!
    இவ்வளவு தூரம் இலக்கண சுத்தமாகவும் சினிமா பாடல்கள் பல எழுதப்பட்டுள்ளன என்பதை அறிவும் போது ஏற்படும் மகிழ்ச்சியால் உள்ளம் பூரிக்கிறது. பாடல்களை எழுதியவர்களை மனதார வாழ்த்துகிறோம்!
    ஆசிரியப் பணி என்றுமே பெருமை வாயந்தது என்பதற்கான விளக்கம் அருமை, ஏனெனில் அதுதானே உண்மை!
    வாத்தியாரின் அருமையான பகிர்வுக்கு
    என் அதன் மகிழ்ந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Nice ...

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,இப்படி எல்லாம் உவமையுடன் விளக்கியிருந்தால் புரிந்துகொண்டு படித்திருப்போம்.தண்டனையை தவிர்க்கவும்,மதிப்பெண்னுக்காகத்தானே நம் கல்விமுறையே இயங்குகிறது.விதிவிலக்கு இருக்கலாம் உங்களைப்போல் நல்லாசிரியராய்.நன்றி.

    ReplyDelete
  4. Eru ketta ethirmarai peyaretcham excellent sir

    ReplyDelete
  5. ////Blogger Santharam said...
    Nice post... Good examples !!!!////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    இவ்வளவு தூரம் இலக்கண சுத்தமாகவும் சினிமா பாடல்கள் பல எழுதப்பட்டுள்ளன என்பதை அறிவும் போது ஏற்படும் மகிழ்ச்சியால் உள்ளம் பூரிக்கிறது. பாடல்களை எழுதியவர்களை மனதார வாழ்த்துகிறோம்!
    ஆசிரியப் பணி என்றுமே பெருமை வாயந்தது என்பதற்கான விளக்கம் அருமை, ஏனெனில் அதுதானே உண்மை!
    வாத்தியாரின் அருமையான பகிர்வுக்கு
    என் அதன் மகிழ்ந்த பாராட்டுக்கள்!////

    நீங்கள் மகிழ்ந்து பாராட்டியமைக்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  7. ////Blogger kittuswamy palaniappan said...
    Ayya vanakkam.ARUMAIYANA PATHIVU
    Anbudan/////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி கிட்டுஸ்வாமி!

    ReplyDelete
  8. Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice ...
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  9. ////Blogger kmr.krishnan said...
    Very nice Sir./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,இப்படி எல்லாம் உவமையுடன் விளக்கியிருந்தால் புரிந்துகொண்டு படித்திருப்போம்.தண்டனையை தவிர்க்கவும்,மதிப்பெண்னுக்காகத்தானே நம் கல்விமுறையே இயங்குகிறது.விதிவிலக்கு இருக்கலாம் உங்களைப்போல் நல்லாசிரியராய்.நன்றி./////

    நான் பள்ளியில் படித்த காலத்தில் எனக்குக் கிடைத்த தமிழாசிரியர் முருகுசுந்தரம் அவர்களால்தான் எனக்குத் தமிழின் மேல் அதிக ஆர்வம் உண்டானது. என்றைக்குமே மறக்கமுடியாத மாமனிதர் அவர்!

    ReplyDelete
  11. ////Blogger kannan Malola said...
    Eru ketta ethirmarai peyaretcham excellent sir/////

    நல்லது. உங்களின் இரசனை உணர்வு வாழ்க! நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com