மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

9.11.11

Astrology ஜோல்னாபை ஆசாமியா நீங்கள்?

-----------------------------------------------------------------------------------

Astrology  ஜோல்னாபை ஆசாமியா நீங்கள்?

ஜோல்னா பை ஆசாமியா நீங்கள்? ஆமாவா? அப்படியென்றால் நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய பக்கம் இது!
-------------------------------------------------------------------------------------------------------------------------
நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பகுதி இரண்டு!

“சார், அஷ்டகவர்க்கம் எப்படிப் போடுவது என்று சொல்லுங்கள்!”

“நீங்கள் எதற்காக அதைக் கணக்கிட்டுப் போட வேண்டும்? உங்கள் ஜாதகத்திற்கு நீங்களே தரையில் உட்கார்ந்து, கையால் போடுவது என்றால் இரண்டு மணி நேரம் ஆகும். ஒரு கிரகத்திற்கு எட்டு அட்டவணை x  7 கிரகங்கள் = மொத்தம் 56 அட்டவணைகள் போட வேண்டும். தவறில்லாமல் கவனத்துடன் போட வேண்டும். பிற்கு அவற்றைக் கூட்டி மொத்த அட்டவணை ஒன்றையும் போட வேண்டும். அந்தச் சிரமம் இல்லாமல் கணினி ஜாதகத்தில் அது எல்லாம் இருக்கும். உங்களுக்கு நொடியில் கிடைத்துவிடும். ஆகவே அதைச் செய்யுங்கள்”

“சரி, கணினியில் எப்படிப்போடுவது?”

“ஜகந்நாதா ஹோரா” என்னும் மென்பொருளை ஒரு புண்ணியவான் இலவசமாக இணைத்தில் தருகின்றார். நமக்குத்தான் (தமிழர்களுக்கு) இலவசம் என்றால் மண், பெண், பொன் ஆகிய மூன்றையும்விட அதிகமாகப் பிடிக்குமே! அதைத்தரவிறக்கம் செய்து, உள்ளீடு செய்துகொள்ளுங்கள் (That is download the software from the net and install it in your computer)

அதற்கான சுட்டி:

அதில் மெனு பாரில் Data என்னும் மெனு இருக்கும் அதிக் கிளிக்கினால் கீழே உள்ளது போன்ற சிறு பெட்டிவரும். அதில் உங்களுடைய பிறப்பு விவரங் களைக் கொடுத்து ஓக்கே பட்டனை அமுக்குங்கள்.

அவ்வளவுதான். முகப்பில் உங்கள் ஜாதகத்தின் முழுவிவரம் இருக்கும். அதை ஒரு பெயர் கொடுத்து உங்கள் கணினியில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் அஷ்டகவர்க்கம் இருக்கும்

அஷ்டகவர்க்கம் தனியாகப் பெரிதாக பிரதி எடுக்கும்படி வேண்டுமென்றால், மீண்டும் மெனு பாரைப் பாருங்கள். அதில் strength என்னும் option இருக்கும். அதைக் க்ளிக்கி வரும் விண்டோவில் கீழ் பகுதியில் உள்ள ashtkavarga என்னும் option கிளிக்கினால் உங்களுக்கு முழுக் கட்டங்களும், அதாவது சர்வாஷ்டக வர்க்கம் + கிரகங்களின் சுயவர்க்கக் கட்டங்கள் அனைத்தும் கீழே இருப்பதைப் போல கிடைக்கும்.

 -----------------------------------------------------------------------------------
விளக்கம் போதுமா?

விரல் சூப்பும் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்று சொல்லிக் கொடுத்துள்ளேன். இப்போதும் புரியவில்லை என்றால், இரண்டுதான் வழி உள்ளது. ஒன்று  உங்கள் தோழியிடம் கொடுத்து இந்தப் பக்கத்தைப் படிக்கச் சொல்லுங்கள். அவர் உதவுவார். தோழி இல்லை ஜோல்னா பை ஆசாமி என்றால், எங்காவது சென்ட்டரில் ரூ.25 ஐக் கொடுத்து உங்கள் ஜாதகத்தை விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள்.
-----------------------------------------------------------------------------------------------
   “சார்,  ஹி.ஹி..எங்கள் லெவலே வேறு. ஒரு அறிவிற்காக (knowledge) எப்படிப்போடுவது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம். ஆகவே அதைச் சொல்லித்தாருங்கள்”

   “ஆகா, அஷ்டகவர்க்கப் பாடம் நடத்தும்போது, அதுதான் முதல் பாடம். பொறுத்திருங்கள்”
------------------------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

------------------------------------
வாழ்க வளமுடன்!

31 comments:

தேமொழி said...

///நமக்குத்தான் (தமிழர்களுக்கு) இலவசம் என்றால் மண், பெண், பொன் ஆகிய மூன்றையும்விட அதிகமாகப் பிடிக்குமே!///

அச்சச்சோ, இதப் படிக்க எனக்கு ரொம்ப அவமானமா இருக்கே.

ஆசாமிகளை விட அவர்கள் தோழிகள் புத்திசாலிகள் என்று சொன்னதற்கு தோழிகள் சார்பில் மனமார்ந்த நன்றி. அப்படியே முடிந்தால் "அஷ்டகவர்க்கம்" என்ற "குறிச்சொல்" இந்த பதிவுக்கு போட்டுவிடுங்கள் ஐயா. ஏகப்பட்ட பின்னூட்டங்களில் பலர் இதைக் கேட்டவாரே இருக்கிறார்கள். நல்ல பதிவிற்கு நன்றிகள்.

தமிழ் விரும்பி said...

////விரல் சூப்பும் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்று சொல்லிக் கொடுத்துள்ளேன்./////

ஹா!ஹா!ஹா!...

ஒரே வரியில் கேள்விக்கு தாட்ப்பா போட்டுட்டேங்க..

///// இப்போதும் புரியவில்லை என்றால், இரண்டுதான் வழி உள்ளது. ஒன்று உங்கள் தோழியிடம் கொடுத்து இந்தப் பக்கத்தைப் படிக்கச் சொல்லுங்கள். அவர் உதவுவார். //////

ஹி..ஹி..ஹி.. இதுக்குத் தான் நாங்கள் பொண்ணுகளேப் படிக்கவேண்டாம்னு செஞ்சு வைச்சிருன்ஜோம்.... இப்பப் பாருங்க என்னாச்சுன்னு!

நான் பதிவை வாசித்துவிட்டு பின்னூட்டம் பக்கம் வரும்போது!!! என் கண்ணில் பட்டதே சகோதிரி தேமொழியின் கண்ணிலும் பட்டுள்ளது....

பாடத்திற்கு நன்றிகள் ஐயா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.

Srinivasa Rajulu.M said...

எண்பதுகளிலே முதன்முதலாக தெரிந்தவர்களின் ஜாதகங்களைக் குறித்துக் கொடுத்து, அஷ்டவர்க்கம் செய்தது நினைவுக்கு வருகிறது. மிகவும் கவனமாகச் செய்ய வேண்டிய ஒன்று. இப்போது திரு.கரூராரின் மென்பொருளும் திரு. நரசிம்ஹாவின் (ஜகன்னாத ஹோரா) மென்பொருளும் இவற்றைப் போன்ற மென்பொருட்களும் மிகவும் உபயோகமாயுள்ளன. ஆனாலும், வாத்தியாரின் பாடத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ஓரிரு முறையாவது நாமே போடும்போது, பராசரர் போன்ற ரிஷிகளின் இந்த முக்கியமான உதவியை நன்றியுடன் நினைக்கத் தோன்றும். வாத்தியாருக்கு அடியவனின் நன்றிகள்.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger தேமொழி said...
///நமக்குத்தான் (தமிழர்களுக்கு) இலவசம் என்றால் மண், பெண், பொன் ஆகிய மூன்றையும்விட அதிகமாகப் பிடிக்குமே!///
அச்சச்சோ, இதப் படிக்க எனக்கு ரொம்ப அவமானமா இருக்கே.//////

தமிழக அரசு ஏழைமக்களுக்கு மாதம் 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்குகிறது. அதை வாங்குவதற்குக் காரில் வரும் (தங்கள் வீட்டு வேலைக்காரி போன்ற தெரிந்தவர்களின் கார்டுகளுடன்) பெண்மணிகளை நான் பார்த்திருக்கிறேன். அந்த அரிசியை மாவாகத் திரித்து சன் ஃளவர் எண்ணெயில் முறுக்கு செய்தால் சூப்பராக இருக்கிறதாம். அதே போல முந்தைய அரசு தேர்தல் சமயத்தில் பகுதி மக்கள் அனைவருக்கும் ஸ்டேட்டஸ் பாகுபாடின்றி இலவச கலர் தொலைக்காட்சிப் பெட்டியை (14” - விலை ரூ.2,000) வழங்கியபோது, அதற்கு என்னவொரு போட்டி தெரியுமா? மாருதி ஸ்விஃப்ட் கார் பெண்மணிகளும், 10,000 ரூபாய் பட்டு சேலை மங்கைகளும் வரிசையில் சில மணி நேரம் காத்து நின்று வாங்கிக்கொண்டு போனார்கள். ஒரு க்வார்ட்டர் லிக்கர், ஒரு பாக்கெட் கோழி பிரியாணி, கைச் செலவிற்கு 100 ரூபாய் கொடுத்தால், நாள் முழுவதும் நின்று வாழ்க கோஷம் போடுவதற்கு எத்தனை ஆட்கள் கிடைப்பார்கள் தெரியுமா? வேறு எந்த நாட்டிலும் இந்த அவலம் இருக்காது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
//////ஆசாமிகளை விட அவர்கள் தோழிகள் புத்திசாலிகள் என்று சொன்னதற்கு தோழிகள் சார்பில் மனமார்ந்த நன்றி. அப்படியே முடிந்தால் "அஷ்டகவர்க்கம்" என்ற "குறிச்சொல்" இந்த பதிவுக்கு போட்டுவிடுங்கள் ஐயா. ஏகப்பட்ட பின்னூட்டங்களில் பலர் இதைக் கேட்டவாரே இருக்கிறார்கள். நல்ல பதிவிற்கு நன்றிகள்.//////

எடுத்துச் சொன்ன மேன்மைக்கு நன்றி. குறிச்சொல்லைச் சேர்த்துவிட்டேன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

SP.VR. SUBBAIYA said...

//////Blogger தமிழ் விரும்பி said...
////விரல் சூப்பும் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்று சொல்லிக் கொடுத்துள்ளேன்./////
ஹா!ஹா!ஹா!...
ஒரே வரியில் கேள்விக்கு தாப்பாள் போட்டுட்டேங்க..
///// இப்போதும் புரியவில்லை என்றால், இரண்டுதான் வழி உள்ளது. ஒன்று உங்கள் தோழியிடம் கொடுத்து இந்தப் பக்கத்தைப் படிக்கச் சொல்லுங்கள். அவர் உதவுவார். //////
ஹி..ஹி..ஹி.. இதுக்குத் தான் நாங்கள் பொண்ணுங்களைப் படிக்கவேண்டாம்னு செஞ்சு வைச்சிருக்கோம்.... இப்பப் பாருங்க என்னாச்சுன்னு!
நான் பதிவை வாசித்துவிட்டு பின்னூட்டம் பக்கம் வரும்போது!!! என் கண்ணில் பட்டதே சகோதிரி தேமொழியின் கண்ணிலும் பட்டுள்ளது....
பாடத்திற்கு நன்றிகள் ஐயா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.//////

இனிமேல் எதையும் நீங்கள் தடுக்க முடியாது ஆலாசியம்.:-)))))))
இடத்துக்கிடம் மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன! அதை மனதில் வையுங்கள். சிங்கையில் உள்ளதா?

SP.VR. SUBBAIYA said...

////Blogger Srinivasa Rajulu.M said...
எண்பதுகளிலே முதன்முதலாக தெரிந்தவர்களின் ஜாதகங்களைக் குறித்துக் கொடுத்து, அஷ்டவர்க்கம் செய்தது நினைவுக்கு வருகிறது. மிகவும் கவனமாகச் செய்ய வேண்டிய ஒன்று. இப்போது திரு.கரூராரின் மென்பொருளும் திரு. நரசிம்ஹாவின் (ஜகன்னாத ஹோரா) மென்பொருளும் இவற்றைப் போன்ற மென்பொருட்களும் மிகவும் உபயோகமாயுள்ளன. ஆனாலும், வாத்தியாரின் பாடத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ஓரிரு முறையாவது நாமே போடும்போது, பராசரர் போன்ற ரிஷிகளின் இந்த முக்கியமான உதவியை நன்றியுடன் நினைக்கத் தோன்றும். வாத்தியாருக்கு அடியவனின் நன்றிகள்.////

நல்லது. உங்கள் விருப்பம் நிறைவேறும். பொறுத்திருங்கள் நண்பரே!

RAJ said...

அஷ்டவர்க்க பரல்களை வைத்து நேரடியாக பலன்களை சொல்வது சரி ஆகுமா ? இல்லை அதன் பின் சில சோதனை முறைகளை செய்து பலம் கண்டறிந்து சொல்ல வேண்டுமா?

SP.VR. SUBBAIYA said...

Blogger RAJ said...
அஷ்டவர்க்க பரல்களை வைத்து நேரடியாக பலன்களை சொல்வது சரி ஆகுமா ? இல்லை அதன் பின் சில சோதனை முறைகளை செய்து பலம் கண்டறிந்து சொல்ல வேண்டுமா?//////

ஸ்கேன் ரிப்போர்ட்டை மட்டும் வைத்து மருந்தைக் கொடுக்கக்கூடாது. நோயாளியையும் சட்டையைக் கழற்றி நன்றாகப் பரிசோதனை செய்ய வேண்டும். அதாவது ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் நன்றாகப் பார்க்க வேண்டும்!

தமிழ் விரும்பி said...

///இனிமேல் எதையும் நீங்கள் தடுக்க முடியாது ஆலாசியம்.:-)))))))
இடத்துக்கிடம் மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன! அதை மனதில் வையுங்கள். சிங்கையில் உள்ளதா?////
மகளிருக்கு என்றுத் தனியாக இல்லை சார்...

ஆணும் பெண்ணும்.. இல்லை பெண்ணும் ஆணும் சமம் என்பதை எங்கும் உணரலாம்...
அதிலும் பெண்ணிற்கு உள்ள சுதந்திரம் அபாரம்...
குற்றம் சுமத்தினால் எந்த ஆணும் உடனே அழைக்கப் பட்டுவிடுவார்.

இதனால், ஒரு பெட்டைக்கு!??? என்று வீர வசனம் எல்லாம் ஆகாது...
வில்லங்கமானவர்கள், வீதியில் உள்ளப் பாளத்தில் அமர்ந்து நோட்டமிடுபவர் என்ற பேச்சே இல்லை..
இன்னும் போனால் பெண்களைத் தேடி அவர்களுக்கு பை தூக்கும் படியான தெளிவான சூழல் இருப்பதால்
அரசாங்கமும் சிரமம் இல்லாமல் அருமையாக இயங்குகிறது....

நம்ம ஊரில் தான் இதற்கெல்லாம் வழியில்லாமல்.. வேறு வழியும் இல்லாமல் இளைஞர் கூட்டம் கட்டவுட் வைப்பது, வெட்டி வம்பிழுப்பது, கெட்ட அரசியல் பேசி தன்னையே மாய்ப்பது, இன்னும் என்னன்னவோ!!! அனைவரும் அறிந்ததே..

இங்கே நிலைமை வேறு... சரியான வயது வந்த உடன் கல்வி, வேலை அடுத்து அவனுக்குத் துணை தேடுவதே தலையாய வேலையாக இருப்பதால் வெட்டி வேலை இல்லாமல் போகிறது... துணையை தேடினப் பிறகு... என்ன ஆண் எல்லாம்.. தேரோட்டித் தான்....
சொல்றத செய்யணும் அவ்வளவு தான்....

இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது.

kmr.krishnan said...

ஜகன்னாத் ஹோராவை புதியவர்களூக்கு நன்கு அறிமுகம் செய்துள்ளீர்கள் அய்யா!நனறி!

ஜோல்னா பைக்காரர்களுக்கு இயற்கையாகவே காதலி கிடையாதா? அல்லது அவர்கள் அந்தக் கவர்ச்சிக்கு எல்லாம் ஆட்பட மாட்டார்களா? ஜோல்னா பைக்காரர்கள் பற்றி மேல் அதிகத் தக்வல் தேவை.

தேமொழிக்கு இலவசம் தேடும் கார்க்காரர்கள் பற்றிச்சொல்லியது அருமை.

ராமகிருஷ்ண மடம் துவங்கிய போது அவர்களுடைய இலவச ஏழைகளுக்கான மருத்துவ சேவை போன்றவற்றை அனுபவிக்க வசதியானவர்களும் வரத்துவங்கினர். "அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டுமா?" என்ற கேள்விக்கு
சுவாமி விவேகானந்தர் "ஆம் அவர்களுக்கும் சேவை செய்யுங்கள்.அவர்கள் மனதால் இன்னும் ஏழைகளே" என்றார்..

சிங்கையில் உள்ள நிலையை தமிழ் விரும்பி சினிமாப்படம் போல் விவரித்துள்ளார்.சிங்கையைப் பற்றிப் பல தகவல்களையும் இங்கே எழுதலாமே!

kmr.krishnan said...

கீழ்க்கண்ட பிளாகில் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனை விவாதிக்கப்பட்டு வருகிறது.விருப்பம் உள்ளவர்கள் பங்கெடுத்துக் கொள்ளலாம்.

"பிராமண நண்பர்களுக்கு வர்ணம்,சாதி, இடஒதுக்கீடு 1, 2 part(october); 3 part நவம்பெர் 2011"

http://sengovi.blogspot.com/

govind said...

Sir,

I have been asking this question many times, pls let me know how to calculate Ashtavargam in Vaakhya method using JHora.

Thank you

santhanakuzhali said...

அய்யா,

அஷ்டவர்க்க பரல்களை பட்றிய பாடங்கள்( ஜகன்னாத ஹொரா )
3வது முறயாக வருகிறது, மட்றூம் சைடு பாரிலும் தினமும்
வருவது தானே,

லேட் கம்மர் ச் என்றால் பழய பாடங்கள் படித்தால் தான் புரிந்து
கொல்ல முடியும், எப்படியும் புதியவர்களூக்கு இது மிகவும் கடினமான
பாடமாகத்தான் இருக்கும்.

நன்றீ

சந்தனக்குழலி நாகராஜன்

SP.VR. SUBBAIYA said...

////////Blogger தமிழ் விரும்பி said...
///இனிமேல் எதையும் நீங்கள் தடுக்க முடியாது ஆலாசியம்.:-)))))))
இடத்துக்கிடம் மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன! அதை மனதில் வையுங்கள். சிங்கையில் உள்ளதா?////
மகளிருக்கு என்றுத் தனியாக இல்லை சார்...
ஆணும் பெண்ணும்.. இல்லை பெண்ணும் ஆணும் சமம் என்பதை எங்கும் உணரலாம்...
அதிலும் பெண்ணிற்கு உள்ள சுதந்திரம் அபாரம்...
குற்றம் சுமத்தினால் எந்த ஆணும் உடனே அழைக்கப் பட்டுவிடுவார்.
இதனால், ஒரு பெட்டைக்கு!??? என்று வீர வசனம் எல்லாம் ஆகாது...
வில்லங்கமானவர்கள், வீதியில் உள்ளப் பாளத்தில் அமர்ந்து நோட்டமிடுபவர் என்ற பேச்சே இல்லை..
இன்னும் போனால் பெண்களைத் தேடி அவர்களுக்கு பை தூக்கும் படியான தெளிவான சூழல் இருப்பதால்
அரசாங்கமும் சிரமம் இல்லாமல் அருமையாக இயங்குகிறது....
நம்ம ஊரில் தான் இதற்கெல்லாம் வழியில்லாமல்.. வேறு வழியும் இல்லாமல் இளைஞர் கூட்டம் கட்டவுட் வைப்பது, வெட்டி வம்பிழுப்பது, கெட்ட அரசியல் பேசி தன்னையே மாய்ப்பது, இன்னும் என்னன்னவோ!!! அனைவரும் அறிந்ததே..
இங்கே நிலைமை வேறு... சரியான வயது வந்த உடன் கல்வி, வேலை அடுத்து அவனுக்குத் துணை தேடுவதே தலையாய வேலையாக இருப்பதால் வெட்டி வேலை இல்லாமல் போகிறது... துணையை தேடினப் பிறகு... என்ன ஆண் எல்லாம்.. தேரோட்டித் தான்....
சொல்றத செய்யணும் அவ்வளவு தான்....
இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது.////////

தேரோட்டுவதும், சொல்வதைச் செய்வதும் யுனிவர்சல் (40 வயதைத் தாண்டிய அத்தனை ஆசாமிகளுக்கும்) அதாவது உலகளாவியது!
விளக்கத்திற்கு நன்றி ஆலாசியம்!

கைகாட்டி said...

தமிழ் விரும்பிsaid...
//------
துணையை தேடினப் பிறகு... என்ன ஆண் எல்லாம்.. தேரோட்டித் தான்....
சொல்றத செய்யணும் அவ்வளவு தான்....
---------/
இந்தியாவில், செலவு செய்ய பணம் இருக்கும் மேல் / மேல்-நடுத்தரக் குடும்பங்களில் இது நடைமுறைதான்.

SP.VR. SUBBAIYA said...

//////Blogger kmr.krishnan said...
ஜகன்னாத் ஹோராவை புதியவர்களூக்கு நன்கு அறிமுகம் செய்துள்ளீர்கள் அய்யா!நனறி!
ஜோல்னா பைக்காரர்களுக்கு இயற்கையாகவே காதலி கிடையாதா? அல்லது அவர்கள் அந்தக் கவர்ச்சிக்கு எல்லாம் ஆட்பட மாட்டார்களா? ஜோல்னா பைக்காரர்கள் பற்றி மேல் அதிகத் தகவல் தேவை.///////

மடங்களில் காவி வேஷ்டிக்கு உள்ள மதிப்பு, நாட்டில் ஜோல்னா பைகளுக்கு உண்டு!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
//////தேமொழிக்கு இலவசம் தேடும் கார்க்காரர்கள் பற்றிச்சொல்லியது அருமை.
ராமகிருஷ்ண மடம் துவங்கிய போது அவர்களுடைய இலவச ஏழைகளுக்கான மருத்துவ சேவை போன்றவற்றை அனுபவிக்க வசதியானவர்களும் வரத்துவங்கினர். "அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டுமா?" என்ற கேள்விக்கு சுவாமி விவேகானந்தர் "ஆம் அவர்களுக்கும் சேவை செய்யுங்கள்.அவர்கள் மனதால் இன்னும் ஏழைகளே" என்றார்.. சிங்கையில் உள்ள நிலையை தமிழ் விரும்பி சினிமாப்படம் போல் விவரித்துள்ளார். சிங்கையைப் பற்றிப் பல தகவல்களையும் இங்கே எழுதலாமே!///////

சொல்லிவிட்டீர்கள் அல்லவா? விரைவில் எழுதுவார்!

SP.VR. SUBBAIYA said...

/////////Blogger kmr.krishnan said...
கீழ்க்கண்ட பிளாகில் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனை விவாதிக்கப்பட்டு வருகிறது.விருப்பம் உள்ளவர்கள் பங்கெடுத்துக் கொள்ளலாம்.
"பிராமண நண்பர்களுக்கு வர்ணம்,சாதி, இடஒதுக்கீடு 1, 2 part(october); 3 part நவம்பெர் 2011"
http://sengovi.blogspot.com///////

நீங்கள் பணி ஒய்வில் இருப்பவர். உங்களுக்கு எல்லாச் செயல்களுக்கும் நேரம் கிடைக்கிறது. வேலைக்குச் செல்பவர்கள் என்ன செய்ய முடியும்? அதற்கு ஒரு வழி சொல்லுங்கள்

SP.VR. SUBBAIYA said...

////Blogger govind said...
Sir,
I have been asking this question many times, pls let me know how to calculate Ashtavargam in Vaakhya method using JHora./////

தோண்டிப் பார்க்க வேண்டும். நோண்டிப்பார்க்க வேண்டும் இரண்டும் செய்யாமல் எதுவும் தானாகக் கிடைக்காது. ஜ.ஹோ வை சும்மா இருக்கும்போதெல்லாம் ஒரு பெண்ணாக நினைத்து சீண்டிப் பாருங்கள். தர்ம அடி முதற்கொண்டு நிறையக் கிடைக்கும்.
நீங்கள் கேட்டுள்ளதற்குப் பதில்: JH opening page >>>>Top Menu Bar >> Preferences >> Select related to calculation option >>>>> Then select Ayanamsa option >>>>> Now you can select your ayanamsa - Lahiri, or Surya Siddgantha - Or Raman or KP

SP.VR. SUBBAIYA said...

Blogger santhanakuzhali said...
அய்யா,
அஷ்டவர்க்க பரல்களை பற்றிய பாடங்கள்( ஜகன்னாத ஹோரா )3வது முறையாக வருகிறது, மற்றும் சைடு பாரிலும் தினமும் வருவது தானே, லேட் கம்மர் என்றால் பழைய பாடங்கள் படித்தால் தான் புரிந்து கொள்ள முடியும், எப்படியும் புதியவர்களூக்கு இது மிகவும் கடினமான
பாடமாகத்தான் இருக்கும். நன்றி
சந்தனக்குழலி நாகராஜன்///////

பழைய பாடங்கள் 500 உள்ளன. எல்லாவற்றையும் படிக்கப் பொறுமை வேண்டாமா? அஷ்டகவர்க்கம் பற்றி வாரத்திற்கு எத்தனை பின்னூட்டம் வருகிறது பாருங்கள். இந்தப் பாடத்தை எல்லோர் கண்ணிலும் படும்படி முகப்புப் பகுதியில் நிறுத்திவைத்தால் கேள்விகளைத் தவிர்க்கலாம்!

minorwall said...

SP.VR. SUBBAIYA said...
Blogger RAJ said...
அஷ்டவர்க்க பரல்களை வைத்து நேரடியாக பலன்களை சொல்வது சரி ஆகுமா ? இல்லை அதன் பின் சில சோதனை முறைகளை செய்து பலம் கண்டறிந்து சொல்ல வேண்டுமா?//////

ஸ்கேன் ரிப்போர்ட்டை மட்டும் வைத்து மருந்தைக் கொடுக்கக்கூடாது. நோயாளியையும் சட்டையைக் கழற்றி நன்றாகப் பரிசோதனை செய்ய வேண்டும். அதாவது ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் நன்றாகப் பார்க்க வேண்டும்!/////////

ப்ளீஸ் டாக்டர்..
இந்த இன்ஜெக்ஷன் மட்டும் வேணாம்..போடாதீங்க..
வலிக்கும்..

அதுனாலே மாத்திரையாவே குடுத்துடுங்க..

minorwall said...

/////////santhanakuzhali said... பழய பாடங்கள் படித்தால் தான் புரிந்து
கொல்ல முடியும், எப்படியும் புதியவர்களூக்கு இது மிகவும் கடினமான
பாடமாகத்தான் இருக்கும்.///////

ஏன் புரிஞ்சுக்கிட்டு கொல்லணும்ன்னு நினைக்குறீங்க?யார் மேல உங்களுக்கு கோவம்?
வாத்தியார் மேலதானே?

thanusu said...

என்னிடம் உள்ளது 7.4 பதிப்பு o.k தானே?. இருந்தும் நாமாகவே கையால் கூட்டி கணக்கு போடா கற்று கொடுக்கும் பாடத்தை அவளோடு எதிர் பார்கிறேன்.

நாழிகை கணக்க்காகட்டும்
சோழிகள் கணக்க்காகட்டும்
தோழிகள் எதற்கு -நாங்களே சிங்கம்ல.

SP.VR. SUBBAIYA said...

//////Blogger கைகாட்டி said...
தமிழ் விரும்பிsaid...
//------
துணையை தேடினப் பிறகு... என்ன ஆண் எல்லாம்.. தேரோட்டித் தான்....
சொல்றத செய்யணும் அவ்வளவு தான்.... ---------/
இந்தியாவில், செலவு செய்ய பணம் இருக்கும் மேல் / மேல்-நடுத்தரக் குடும்பங்களில் இது நடைமுறைதான்./////

இந்தியாவில் என்றில்லை. உலகளாவிய அளவில் 40 வயதிற்கு மேல் எல்லா ஆண்களும் தங்கள் மனைவிக்குச் செய்யும் சேவகம் அதுதான்!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger minorwall said...
SP.VR. SUBBAIYA said...
Blogger RAJ said...
அஷ்டவர்க்க பரல்களை வைத்து நேரடியாக பலன்களை சொல்வது சரி ஆகுமா ? இல்லை அதன் பின் சில சோதனை முறைகளை செய்து பலம் கண்டறிந்து சொல்ல வேண்டுமா?//////
ஸ்கேன் ரிப்போர்ட்டை மட்டும் வைத்து மருந்தைக் கொடுக்கக்கூடாது. நோயாளியையும் சட்டையைக் கழற்றி நன்றாகப் பரிசோதனை செய்ய வேண்டும். அதாவது ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் நன்றாகப் பார்க்க வேண்டும்!/////////
ப்ளீஸ் டாக்டர்..
இந்த இன்ஜெக்ஷன் மட்டும் வேணாம்..போடாதீங்க.. வலிக்கும்..
அதுனாலே மாத்திரையாவே குடுத்துடுங்க..//////

மாத்திரைன்னா பாருக்குப்போய்விட்டு வந்த அசதியில் மறந்துபோகும். அதனால் பார் கேஸ்களுக்கெல்லாம் ஊசிதான்!

SP.VR. SUBBAIYA said...

Blogger minorwall said...
/////////santhanakuzhali said... பழய பாடங்கள் படித்தால் தான் புரிந்து கொல்ல முடியும், எப்படியும் புதியவர்களூக்கு இது மிகவும் கடினமான
பாடமாகத்தான் இருக்கும்.///////
ஏன் புரிஞ்சுக்கிட்டு கொல்லணும்ன்னு நினைக்குறீங்க?யார் மேல உங்களுக்கு கோவம்?
வாத்தியார் மேலதானே?/////

நீங்களே போட்டுக் கொடுப்பீங்க போல! அது தட்டச்சுப்பிழை. அம்மணி உங்களைப் போல நன்றாகத் தெரிந்தவர்தான். பழைய மாணவி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger thanusu said...
என்னிடம் உள்ளது 7.4 பதிப்பு o.k தானே?. இருந்தும் நாமாகவே கையால் கூட்டி கணக்கு போடக் கற்று கொடுக்கும் பாடத்தை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.
நாழிகை கணக்காகட்டும்
சோழிகள் கணக்காகட்டும்
தோழிகள் எதற்கு - நாங்களே சிங்கம்ல.////////

சிங்கம்னாலும் துணைக்குப் பெண் சிங்கம் வேண்டுமல்லவா?

Raja said...

சார், இந்த மென்பொருள் கணிப்புக்கள் தவறாக வருவதுக்கு வாய்ப்புக்கள் ஏதும் உள்ளதா?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Raja said...
சார், இந்த மென்பொருள் கணிப்புக்கள் தவறாக வருவதுக்கு வாய்ப்புக்கள் ஏதும் உள்ளதா?///////

கணிப்புக்கள் என்றால் பலன்களைச் சொல்கிறீர்களா? அதெல்லாம் தரும் மென்பொருள் என்றால் அவர்களே வைத்திருந்து லட்சக்கணக்கில் காசு பார்த்துவிட மாட்டார்களா? இணையத்தில் இலவசமாகத் தருவதற்கு அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?

அது ஜாதகக் கட்டங்களையும், அது சம்பந்தமான இன்னபிற கட்டங்களையும் அட்டவணைகளையும் சமர்த்தாகப் போட்டுத்தரும். அவ்வளவுதான். நீங்கள் கொடுக்கும் பிறப்பு விவரங்களில் தவறு இல்லை என்றால், அது தரும் ஜாதக விவரங்களிலும் தவறு இருக்காது!

ananth said...

ப்ரியா திரைப்படத்தில் ஒலிக்கும் அக்கரை சீமை அழகினிலே என்று தொடங்கும் பாடலில் சிங்கப்பூரைப் பற்றி அதன் ஆசிரியர் சிறிது சொல்லியிருப்பார். அது உண்மையும் கூட.

கிரக நிலைகள்/சஞ்சாரம்/தசா புத்திகள் இவற்றைக் கணிக்கதான் வாக்கிய முறை, திருக்கணித முறை என்று இருக்கிறது. அஷ்டக வர்கம் கணிப்பதற்குமா. என்ன ஐயா குழப்புகிறீர்கள்.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ananth said...
ப்ரியா திரைப்படத்தில் ஒலிக்கும் அக்கரை சீமை அழகினிலே என்று தொடங்கும் பாடலில் சிங்கப்பூரைப் பற்றி அதன் ஆசிரியர் சிறிது சொல்லியிருப்பார். அது உண்மையும் கூட.
கிரக நிலைகள்/சஞ்சாரம்/தசா புத்திகள் இவற்றைக் கணிக்கதான் வாக்கிய முறை, திருக்கணித முறை என்று இருக்கிறது. அஷ்டக வர்கம் கணிப்பதற்குமா. என்ன ஐயா குழப்புகிறீர்கள்.//////

உங்களைக் குழப்ப முடியுமா? வாக்கிய முறை, திருக்கணித முறை ஆகிய இரண்டிற்கும் 2 பாகைகள் வித்தியாசம் என்பது அனைவரும் அறிந்ததே! அதனால் கால சந்திப்பில் பிறந்த ஜாதகர்களுக்கும், ராசி சந்திப்புக்களில் கிரகங்கள் அமையப்பெற்றவர்களுக்கும், ஜாதகக் கட்டங்கள் (ராசிச் சக்கரம், நவாம்சச் சக்கரம், அஷ்டகவர்க்க அட்டவணைகள்) ஒரே போன்று இருக்காது. அதைப் பரிசோதித்துப் பார்க்க நீங்கள் இரண்டு அல்லது மூன்று ஜாதகங்களைப் பரீட்சித்துப் பாருங்கள் ஆனந்த்!

RAJ said...

SP.VR. SUBBAIYA said...
Blogger RAJ said...
அஷ்டவர்க்க பரல்களை வைத்து நேரடியாக பலன்களை சொல்வது சரி ஆகுமா ? இல்லை அதன் பின் சில சோதனை முறைகளை செய்து பலம் கண்டறிந்து சொல்ல வேண்டுமா?//////

ஸ்கேன் ரிப்போர்ட்டை மட்டும் வைத்து மருந்தைக் கொடுக்கக்கூடாது. நோயாளியையும் சட்டையைக் கழற்றி நன்றாகப் பரிசோதனை செய்ய வேண்டும். அதாவது ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் நன்றாகப் பார்க்க வேண்டும்!/////////

அஷ்டவர்க்க பரல்களை கண்டறிந்த பின் ஏகாதிபத்திய சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என ஒரு நூலில் படித்தேன். அது பற்றி அஷ்ட வர்க்க பாடத்தில் விரிவாக கூறுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்