மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

19.11.11

மேலான காசியில் ஒரு மேளச் சத்தம்!

காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் பாதை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேலான காசியில் ஒரு மேளச் சத்தம்!


பகுதி ஒன்று:

வாரணாசியில் வாத்தியார்!

சென்ற 11.11.11 அன்று சென்னை திருவான்மியூரில் இருக்கும் மருந்தீஸ் வரர் கோவிலைப் பற்றிய பதிவு போட்ட நேரம், பதிவு போட்ட அன்றே மாலையில் மருந்தீஸ்வரர் ஒரு வாய்ப்பை நல்க அக்கோவிலுக்குச் சென்று அவரைத் தரிசித்துத் திரும்பினேன்.

அதற்கு அடுத்த நாள், காசிக்குப் பயணம். மாலை 5:30 மணிக்கு கங்கை காவேரி விரைவு இரயிலில் பயணம்.

பழநியப்பன் உத்தரவு இல்லாமல் பயணமா?

பழநியப்பன் இல்லாத இடம் ஏது?

சென்னை திருவான்மியூரில் இருக்கும் அறுபடைவீடு முருகன் கோவிலுக்குச் சென்று பழநிஅப்பனின் உத்தரவைப் பெற்றுக்கொண்டேன்.


ஆறு படையப்பனின் கோவில் வாசலில்!

பயணம் சுகமாக இருந்தது.


வாரணாசியில் இருநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த (அவ்வப்போது புதுப்பிப்பார்கள்) நாட்டுக்கோட்டை நகரத்தார் விடுதியில் தங்கினேன். விடுதிக்குள் விஸ்வநாதருக்கு ஒரு கோவில் உள்ளது. விடுதியில் 500 பேர்கள் தங்கலாம் அத்தனை பெரிய விடுதி. தமிழ் நாட்டில் இருந்து செல்லும் அனைவருக்கும் இடம் உண்டு. அதைப் பற்றித் தனியாக எழுதுகிறேன்.

அங்கே மங்களகரமான வாத்திய இசை ஒலித்துக்கொண்டிருந்தது. காசியில் தமிழர்களின் பாராம்பரிய இசையா? அதுவும் தினமும் மூன்று காலக் கட்டளையாக நகரத்தார் விடுதியில் இருந்து காசி விசுவநாதர் கோவிலுக்கு அபிஷேகப் பொருட்களுடன் ஊர்வலமாகச் செல்லும் நிகழ்வா?


நகரத்தார் விடுதியில் இருந்து ஊர்வலமாகச் செல்லும்
 ‘சம்போ’ கட்டளை

ஆமாம்! அதற்கு நகரத்தார் ‘சம்போ’ கட்டளை என்று பெயர். அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள கடைக்காரர்கள், பொதுமக்கள் எல்லாம் நின்று மரியாதை செய்கிறார்கள். அந்த ஊர்வலத்துடன் செல்பவர்களுக்கு கோவிலுக்குள் நேரடி அனுமதி. விஸ்வநாதருக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடப்பதை அருகிருந்து, எந்தவித தள்ளு முள்ளும் இன்றித் தரிசிக்கலாம்.


ஊர்வலத்துடன், ஒவ்வொரு வேளையும் 30 லிட்டர் பால் நிரம்பிய குடம், (நாள் ஒன்றிற்கு 90 லிட்டர் பால்) ஒரு கூடை நிறைய பூமாலைகள், அர்ச்சனைப் பொருட்கள், ருத்திராட்ச மாலைகள், அரைத்த சந்தன உருண்டைகள் என்று எல்லாம் செல்கின்றன. இன்று நேற்றல்ல - காலம் காலமாக நடைபெறுகிறது. காசி மன்னன் எழுதிக் கொடுத்த கட்டளை. இன்றுவரை தவறாமல் நடக்கிறது.

அத்தனை தூரம் சென்று நமது நாதஸ்வர இசையைக் கேட்டதில் அளவிட முடியாத ஆனந்தம்..

மூன்று நாட்கள் பொழுது போனதே தெரியவில்லை.

காசி இனிப்பாக இருந்தது. அங்கே விற்கும் தேனில் ஊறிய நெல்லிக் கனிபோல இனிப்பாக இருந்தது.

எல்லாவற்றையும் எழுத உள்ளேன். ஒன்றன் பின் ஒன்றாக.


கங்கையில் முங்கிக் குளித்ததை எழுதுவதா? விஸ்வநாதரைக் கண்டு மகிழ்ந்ததை எழுதுவதா? அன்னபூரணியிடம் அரிசி பெற்றுக் கொண்டதை எழுதுவதா? காசி கடை வீதிகளில் ஜட்கா வண்டியில் பயணித்ததை எழுதுவதா? எதை எழுதுவது முதலில்?

மனம் விரும்பும் போக்கில் எழுத உள்ளேன். எனது நடையில்

உங்களின் பிரிவு தாங்க முடியாததாக இருந்தது. கண்மணிகளைப் பிரிந்து ஒருவாரம் இருந்தது ஒருவருடம் இருந்ததைப் போலாகிவிட்டது. அதனால் இந்தக் கட்டுரையை சென்னையில் உள்ள எனது நெருங்கிய உறவினர் வீட்டில் இருந்து பதிவிடுகிறேன்.

இரண்டு நாட்களில் கோவைக்குத் திரும்பிவிடுவேன்.

திரும்பியவுடன் கட்டுரைகள் தொடரும்! பாடங்களும் தொடரும்


காசி விஸ்வநாதர் ஆலயத்தின் நுழைவாயில்!

காசி நகர் கால பைரவர் சந்நிதி வாயிலில்!

காசிக்குப்போய் ஜட்கா வண்டியில் பயணிக்காமல் திரும்புவதா என்று கட்சி கட்டிக்கொண்டு ஒரு ஊர் சுற்றல்  பயணம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்
19.11.11 - 8:30 PM
Camp: சென்னை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!


53 comments:

Thanjavooraan said...

மிக்க மகிழ்ச்சி. காசிக்குச் சென்று வந்தவர்களை வணங்கி ஆசி பெறுவது நமது சம்பிரதாயம். நேரில் சந்திக்கமுடியாவிட்டாலும், மனதால் தங்களை வணங்குகிறேன். காசி சென்ற அனுபவமும், நகரத்தார் சத்திரத்தில் உணவருந்தியதும், ஜட்கா வண்டியில் இந்து சர்வகலாசாலைக்குச் சென்று வந்த அனுபவமும் எனக்கும் உண்டு. அனுமான் காட்டில் தங்கி அங்கு கங்கையில் மூழ்கி எழுந்த இரண்டு நாள் அனுபவம் உங்கள் கட்டுரையைப் பார்த்தவுடன் என் மனத்திரையில் ஓடத் துவங்கிவிட்டது. நன்றி. வாழிய நீவிர்!

தாம்பரம் பிரபு said...

காசி செல்ல இரு வருடமாக நினைத்து போக முடியவில்லை சூல்னிலை காரனமாக..
மதிப்புக்கூரிய வாத்தியார் மூலம் ஒரு ட்ரைலர்.....
நாங்கல் ரெடி அய்யா....

Balasubramanian Pulicat said...

Welcome back. We also missed you and your writings. With best regards,
BALASUBRAMANIAN P.
RIYADH

kmr.krishnan said...

ஜட்கா வண்டி வேகமாக ஓடட்டும்.!தாய்த் தமிழகத்திற்குத் திரும்பிய அய்யாவிற்கு வரவேற்பு.

தேமொழி said...

பயணம் சுகமாக இருந்தது குறித்து அறிந்து மகிழ்ச்சி ஐயா. நீங்கள் எப்பொழுது வருவீர்கள் என்று சொல்லி சென்றும் கூட அர்த்தமின்றி தினமும் வந்து வகுப்பை எட்டிப் பார்த்துப் போவேன். உங்கள் பதிவும் சக மாணவர் குழாமின் பதிவூட்டமும் இன்றி படிக்க என்ன செய்வது என்று ஒரு குழப்பம். இன்று உங்கள் பதிவைப் படித்த பிறகே வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்பியது போல் உள்ளது. படிக்கும் வயதில் பள்ளி இல்லாமல் இருக்காதா என்று இருக்கும், இன்றோ காலம் மாறிவிட்டது. ஹி..ஹி.. ஹீ

SP.VR. SUBBAIYA said...

///////Thanjavooraan said...
மிக்க மகிழ்ச்சி. காசிக்குச் சென்று வந்தவர்களை வணங்கி ஆசி பெறுவது நமது சம்பிரதாயம். நேரில் சந்திக்கமுடியாவிட்டாலும், மனதால் தங்களை வணங்குகிறேன். காசி சென்ற அனுபவமும், நகரத்தார் சத்திரத்தில் உணவருந்தியதும், ஜட்கா வண்டியில் இந்து சர்வகலாசாலைக்குச் சென்று வந்த அனுபவமும் எனக்கும் உண்டு. அனுமான் காட்டில் தங்கி அங்கு கங்கையில் மூழ்கி எழுந்த இரண்டு நாள் அனுபவம் உங்கள் கட்டுரையைப் பார்த்தவுடன் என் மனத்திரையில் ஓடத் துவங்கிவிட்டது. நன்றி. வாழிய நீவிர்!///////

எனக்கு தஞ்சை பிரகதீஷ்வரரே எதிர்கொண்டு வந்து வாழ்த்துக்கள் சொல்லியதுபோல உள்ளது கோபாலன் சார்! நன்றி
காசியைப் பற்றி அனைத்துக் கட்டுரைகளும் உங்களைப் போன்ற இனிய நண்பர்களுக்காகத்தான் எழுத உள்ளேன். அவ்வப்போது வந்து படித்து விட்டு, உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!
அன்புடன்
வாத்தியார்

SP.VR. SUBBAIYA said...

//////////// தாம்பரம் பிரபு said...
காசி செல்ல இரு வருடமாக நினைத்தும் போக முடியவில்லை சூழ்நிலை காரணமாக..
மதிப்பிற்குரிய வாத்தியார் மூலம் ஒரு ட்ரைலர்.....
நாங்கள் ரெடி அய்யா.////////...

வரும் ஆண்டு நீங்கள் சென்று திரும்பும் வாய்ப்பைக் காசி விசுவநாதர் நல்குவார்! வாழ்த்துக்கள் நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////// Balasubramanian Pulicat said...
Welcome back. We also missed you and your writings. With best regards,
BALASUBRAMANIAN P.
RIYADH/////

நல்லது, நன்றி பாலா!

SP.VR. SUBBAIYA said...

////// kmr.krishnan said...
ஜட்கா வண்டி வேகமாக ஓடட்டும்.!தாய்த் தமிழகத்திற்குத் திரும்பிய அய்யாவிற்கு வரவேற்பு.////////

நல்லது. உங்களின் அன்பான வரவேற்பிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

/////// தேமொழி said...
பயணம் சுகமாக இருந்தது குறித்து அறிந்து மகிழ்ச்சி ஐயா. நீங்கள் எப்பொழுது வருவீர்கள் என்று சொல்லி சென்றும் கூட அர்த்தமின்றி தினமும் வந்து வகுப்பை எட்டிப் பார்த்துப் போவேன். உங்கள் பதிவும் சக மாணவர் குழாமின் பதிவூட்டமும் இன்றி படிக்க என்ன செய்வது என்று ஒரு குழப்பம். இன்று உங்கள் பதிவைப் படித்த பிறகே வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்பியது போல் உள்ளது. படிக்கும் வயதில் பள்ளி இல்லாமல் இருக்காதா என்று இருக்கும், இன்றோ காலம் மாறிவிட்டது. ஹி..ஹி.. ஹீ////////

அதென்னவோ நீங்கள் சொல்வது உண்மைதான் சகோதரி! படிக்கும் வயதில் இருந்த மன நிலை இன்று முற்றிலும் மாறி விட்டது., வகுப்பறையை விட்டு வெளியே செல்வதற்கு மனம் ஒப்புக்கொள்வதில்லை! நன்றி சகோதரி!

வருவதற்கும் நேரம் காலம் பார்ப்பதில்லை. உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் எழுதிய நேரத்தை ஒருமுறை உற்றுப் பாருங்கள். எனது ஈடுபாடு தெரியவரும்!

Gift: You and Me(chandrasekar) said...

i(we) also expect your expirence of varanasi trip.

ரமேஷ் வெங்கடபதி said...

காசியின் ரகஸியங்களை உங்களெழுத்துக்களின் வாயிலாக அறிய ஆவலுடன்! நகரத்தார் மடத்தில் தங்குவதற்கு விதிமுறைகளையும், முகவரியையும் அளித்தால் நலமாக இருக்கும்! மேற்கொண்டு ஏதாவது தமிழர் மடங்களோ, தங்கும் விடுதிகளோ இருப்பின் அறிய ஆவல்!

தமிழ் விரும்பி said...

காசிக்கு சென்று புண்ணிய தீர்த்தம் ஆடி அம்மை அப்பனை தரிசித்து வந்திருக்கும் ஆசிரியருக்கு எனது வணக்கங்கள்... நாளைய தினம் எனது பிறந்த நாள் இந்தத் தருணத்தில் தங்களிடம் ஆசியை வேண்டுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களை ஆசிர்வதியுங்கள் ஐயா!
தங்களின் பயணக் கட்டுரைகளை வாசிக்க மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறேன்.
நன்றிகள் ஐயா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.

santhanakuzhali said...

Ayya,

Welcome back to vagupparai,
we are eagerly waiting for the
new lessons and also about ur visit to Kasi -

thanusu said...

வணக்கம் அய்யா.
தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன் . மூன்று மாதமாகிவிட்டது வீட்டை பிரிந்து இன்னும் ஒரு மாதம் எப்படா முடியும் என்று தேதிகளை பார்ப்பேன் அந்த ஆவலுக்கு இணையாக இந்த ஒரு வாரம் இருந்தது. உண்மையில் உங்கள் எழுத்துக்கும் வகுப்பறைக்கும் ஒரு ஈர்கும் சக்தி இருக்கிறது. அத்துடன் நண்பர்களின் பின்னுட்டங்களை பார்க்காமல் இருந்ததுவும் ஒரு மாதிரியாகவே இருந்தது.

minorwall said...

/////////////உங்களின் பிரிவு தாங்க முடியாததாக இருந்தது. கண்மணிகளைப் பிரிந்து ஒருவாரம் இருந்தது ஒருவருடம் இருந்ததைப் போலாகிவிட்டது.///////////
ஆஹா..'மேஜர்' டச் பண்ணிட்டீங்க சார்..
இங்கே அக்டிவா இருந்த ஆளெல்லாம் எங்கே போறதுன்னு தெரியாம எங்கெங்கோ போய் யார்யாரிடமோ எதைஎதையோ பேசிட்டு இந்த ஒரு வாரத்தை கடத்திட்டாங்க..

இனிமேல்தான் நார்மல்க்கு வரணும்..

thanusu said...

தஞ்சாவூர் அய்யா அவர்களே , சென்ற வாரம் பின்னுட்டங்களை நான் சரியாக கவனிக்கவில்லை . டிசெம்பர் 11 இல் நடக்க இருக்கும் பாரதியின் பிறந்த நாளுக்கு அழைப்பு விடுத்தது இருந்தீர்கள். மிக்க நன்றி. இருபினும் டிசெம்பர் 20 க்கு பிறகே இந்தியா வருவேன். தங்கள் அழைப்பு கொடுத்தால் எனக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது இரண்டு கவிதைகளை அனுப்புகிறேன் நமது வகுப்பறையின் சார்பாக வாசிக்கவும். தங்களின் மின் அஞ்சல் முகவரி தரும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

ravichandran said...

Respected Sir,

Happy morning....May your mother's soul get complete rest after this ritual....

Lord viswanath may blessed u lot.. Hope u write with new energy.

Welcome back to our classroom.

RAMADU Family said...

Guru Vanakkam,

We need your blessings. It is very happy to see you back in action.
I know you will be a tired man after a long journey, but your passion and commitment for teaching overrides every other thing. We have so much to learn from you.

Ramadu.

SP.VR. SUBBAIYA said...

///// Gift: You and Me(chandrasekar) said...
i(we) also expect your expirence of varanasi trip./////

பொறுத்திருங்கள். கட்டுரை வடிவாக அனைத்தும் வரும்! உங்களின் ஆர்வத்திற்கு நன்றி

SP.VR. SUBBAIYA said...

///// ரமேஷ் வெங்கடபதி said...
காசியின் ரகஸியங்களை உங்களெழுத்துக்களின் வாயிலாக அறிய ஆவலுடன்! நகரத்தார் மடத்தில் தங்குவதற்கு விதிமுறைகளையும், முகவரியையும் அளித்தால் நலமாக இருக்கும்! மேற்கொண்டு ஏதாவது தமிழர் மடங்களோ, தங்கும் விடுதிகளோ இருப்பின் அறிய ஆவல்!//////

அவை அனைத்தையும் தரவுள்ளேன். காசியில் எந்தெந்தப் பொருட்களை எங்கெங்கு வாங்குவது என்ற விவரங்களையும் தரவுள்ளேன்!

SP.VR. SUBBAIYA said...

////////தமிழ் விரும்பி said...
காசிக்கு சென்று புண்ணிய தீர்த்தம் ஆடி அம்மை அப்பனை தரிசித்து வந்திருக்கும் ஆசிரியருக்கு எனது வணக்கங்கள்... நாளைய தினம் எனது பிறந்த நாள் இந்தத் தருணத்தில் தங்களிடம் ஆசியை வேண்டுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களை ஆசிர்வதியுங்கள் ஐயா!
தங்களின் பயணக் கட்டுரைகளை வாசிக்க மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறேன்.
நன்றிகள் ஐயா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.//////

நம் வகுப்பறை மாணவர்கள் அனைவரின் நலத்திற்கும், செழிப்பிற்கும் காசி விஸ்வநாதரிடம் வேண்டிக்கொண்டு வந்துள்ளேன் தமிழ் விரும்பி.
அவரருளால் அனைவருக்கும் இனி நல்லதே நடக்கும்!

SP.VR. SUBBAIYA said...

/////santhanakuzhali said...
Ayya,
Welcome back to vagupparai,
we are eagerly waiting for the
new lessons and also about ur visit to Kasi -/////

உங்கள் விருப்பம் நிறைவேறும். பொறுத்திருங்கள் சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

///// thanusu said...
வணக்கம் அய்யா.
தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன் . மூன்று மாதமாகிவிட்டது வீட்டை பிரிந்து இன்னும் ஒரு மாதம் எப்படா முடியும் என்று தேதிகளை பார்ப்பேன் அந்த ஆவலுக்கு இணையாக இந்த ஒரு வாரம் இருந்தது. உண்மையில் உங்கள் எழுத்துக்கும் வகுப்பறைக்கும் ஒரு ஈர்கும் சக்தி இருக்கிறது. அத்துடன் நண்பர்களின் பின்னுட்டங்களை பார்க்காமல் இருந்ததுவும் ஒரு மாதிரியாகவே இருந்தது.//////

உங்களின் மன உணர்வுகளுக்கும் உள்ளம் திறந்த பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////// minorwall said...
/////////////உங்களின் பிரிவு தாங்க முடியாததாக இருந்தது. கண்மணிகளைப் பிரிந்து ஒருவாரம் இருந்தது ஒருவருடம் இருந்ததைப் போலாகிவிட்டது.///////////
ஆஹா..'மேஜர்' டச் பண்ணிட்டீங்க சார்..
இங்கே அக்டிவா இருந்த ஆளெல்லாம் எங்கே போறதுன்னு தெரியாம எங்கெங்கோ போய் யார்யாரிடமோ எதைஎதையோ பேசிட்டு இந்த ஒரு வாரத்தை கடத்திட்டாங்க..இனிமேல்தான் நார்மல்க்கு வரணும்../////////

அது மேஜர் டச் அல்ல! மைனர் டச் தான் மைனர்! நேர இழப்பை எல்லாம் பாடங்களின் மூலம் சரி செய்துவிடலாம்! நீங்கள் அனைவரும் form க்கு வாருங்கள் போதும்!.

SP.VR. SUBBAIYA said...

/////thanusu said...
தஞ்சாவூர் அய்யா அவர்களே , சென்ற வாரம் பின்னுட்டங்களை நான் சரியாக கவனிக்கவில்லை . டிசெம்பர் 11 இல் நடக்க இருக்கும் பாரதியின் பிறந்த நாளுக்கு அழைப்பு விடுத்தது இருந்தீர்கள். மிக்க நன்றி. இருபினும் டிசெம்பர் 20 க்கு பிறகே இந்தியா வருவேன். தங்கள் அழைப்பு கொடுத்தால் எனக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது இரண்டு கவிதைகளை அனுப்புகிறேன் நமது வகுப்பறையின் சார்பாக வாசிக்கவும். தங்களின் மின் அஞ்சல் முகவரி தரும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி./////

அவருடைய வலைப்பூவில், அவருடைய மின்னஞ்சல் முகவரி உள்ளதே ராசா!

SP.VR. SUBBAIYA said...

/////ravichandran said...
Respected Sir,
Happy morning....May your mother's soul get complete rest after this ritual....
Lord viswanath may blessed u lot.. Hope u write with new energy.
Welcome back to our classroom////////

வகுப்பறையை நினைத்தாலே எனக்கு ஒரு புத்துணர்ச்சியும், ஒரு புது எனர்ஜியும் தானாக வந்துவிடும் அன்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////RAMADU Family said...
Guru Vanakkam,
We need your blessings. It is very happy to see you back in action.
I know you will be a tired man after a long journey, but your passion and commitment for teaching overrides every other thing. We have so much to learn from you.
Ramadu./////

உண்மைதான். ஆர்வமும், ஈடுபாடும் உள்ள இடத்தில் அலுப்பிற்கும் சலிப்பிற்கும் இடம் இருக்காது. என்னிடம் அலுப்பிற்கும் சலிப்பிற்கும் சான்சே இல்லை! நன்றி நண்பரே!

Duraisamy N said...

உத்திரப் பிரதேசத்தில் வேலை பார்த்தபோது ஒருமுறை நண்பர் மற்றும் அவருடைய பெற்றோருடன் வாரணாசி சென்றேன். அப்போது வெறுமையாக எந்த ஈடுபாடும் இல்லாமல் சென்று வந்தேன். இப்போது நினைத்தாலும் கஷ்டமாக இருக்கிறது. நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று.

Thanjavooraan said...

//தஞ்சாவூர் அய்யா அவர்களே , சென்ற வாரம் பின்னுட்டங்களை நான் சரியாக கவனிக்கவில்லை . டிசெம்பர் 11 இல் நடக்க இருக்கும் பாரதியின் பிறந்த நாளுக்கு அழைப்பு விடுத்தது இருந்தீர்கள். மிக்க நன்றி. இருபினும் டிசெம்பர் 20 க்கு பிறகே இந்தியா வருவேன். தங்கள் அழைப்பு கொடுத்தால் எனக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது இரண்டு கவிதைகளை அனுப்புகிறேன் நமது வகுப்பறையின் சார்பாக வாசிக்கவும். தங்களின் மின் அஞ்சல் முகவரி தரும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி.//

நன்றி. கவிதைகளை அனுப்புங்கள், விழாவில் படிக்கிறேன். மின்னஞ்சல்:‍
privarsh@gmail.com

kmr.krishnan said...

//இங்கே அக்டிவா இருந்த ஆளெல்லாம் எங்கே போறதுன்னு தெரியாம எங்கெங்கோ போய் யார்யாரிடமோ எதைஎதையோ பேசிட்டு இந்த ஒரு வாரத்தை கடத்திட்டாங்க..//

ம்..ம்ம்.. மைனர்வாள் அது அப்படியல்ல! அக்டோபரில் இருந்தே அங்கே
பேசிக் கொண்டுதான் இருக்கேன். யார் யாரோ எதை எதையோ பேசியதற்கு
ஏற்ப‌ட்ட கவுன்டெர் விவாதங்களில் கலந்து கொள்கிறேன்.

எதையோ பேசியது அரியூர் ஆலன், செங்கோட்டை பார்வதி இருவரும்தான்.. அவர்களுக்கு திண்ணையில் இடம் அளித்தது பெருவுடையார்., ஹி.. ஹி. ஹி..

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
தங்களது பயணம் இனிமையான பயணமாக அமைந்திருந்தது என்பதை அழகான படங்களிலிருந்து தெரிந்து கொண்டோம்.ஒரு வார விடுமுறை என்று முடியும் என்று காத்து கொண்டிருந்தேன்.வகுப்பறைக்கு வந்தவுடனே காசி ஷேத்திரத்தை பற்றி அழகான படங்களுடன் "சம்போ" கட்டளை குறித்தும் கூறி "காசி" நகரை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலை தூண்டிவிட்டீர்கள் ஐயா!

iyer said...

பூங்காத்து திரும்பியதும் எம்
பாட்டை விரும்பியதும் மகிழ்ச்சியே

பயணக் கட்டுரை எழுதும் படி முன்னர்
பணிவான வேண்டுகோள் வைத்தோம்

திருவருளின் துணையால் இது பதிவாக
திருஉளம் தந்தமைக்கு நன்றிகள்..

ஆண்டுதோறும் ரிஷிகேஷ் வரை
அய்யர் சென்றுவரும் இப்புனித பயணம்

வாத்தியாரின் எண்ணத்தில்
வரவிருப்பதை ஆவலுடன் நோக்கியே

வழக்கம் போலவே
வணக்கமும் வாழ்த்துக்களும்

karthik said...

hello sir, havent you published the comments and doubts that i had sent to you? i tried searchin in all the 'post comment entry, sections?
my doubts where about k.p bhavas n other stuff ?
thank you..

sriganeshh said...

//காசிக்குச் சென்று வந்தவர்களை வணங்கி ஆசி பெறுவது நமது சம்பிரதாயம். நேரில் சந்திக்கமுடியாவிட்டாலும், மனதால் தங்களை வணங்குகிறேன்.//

தஞ்சாவூர் பெரியவர் சொன்னது போல் அவர் வழியில் ம‌னதால் தங்களை வணங்குகிறேன்.

என் தாய் வழி பாட்டனார் காரைக்குடியிலிருந்தவரை அகில இந்திய சுற்றுலா செல்லும் கோஷ்டியுடன் மூன்று முறை காசி யாத்திரை செய்தவர். நான் கடந்த மாதம் கல்கத்தா சென்ற போது, முயற்சி செய்தும், நண்பர்களின் கட்டுப்பிடியால், டார்ஜிலிங், சிக்கிம் செல்லும் படி ஆயிற்று. வரும் வழியில் பாட்னாவில் இறங்கி கங்கா ஆரத்தி காண முயற்சி செய்தும் முடியாமல் போயிற்று. பாட்னாவில் சனி, ஞாயிறு இரண்டு தினம் மட்டும் ஆரத்தி நடைபெறுகிறது. வரும் ஆண்டு ஏப்ரலில் என் பெற்றோரை அழைத்து செல்ல உள்ளேன்.

தங்கள் கட்டுரை மிகவும் உதவியாய் இருக்கும். ஆவலுடன் இருக்கிறேன்.

காசியில் ஜோதிட நூல்கள் ஏதாவது வாங்கினீர்களா??

@தேமொழி
//படிக்கும் வயதில் பள்ளி இல்லாமல் இருக்காதா என்று இருக்கும், இன்றோ காலம் மாறிவிட்டது. ஹி..ஹி.. ஹீ////////

சகோதரி தேமொழி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.

@மைனர்வால்,
//இங்கே அக்டிவா இருந்த ஆளெல்லாம் எங்கே போறதுன்னு தெரியாம எங்கெங்கோ போய் யார்யாரிடமோ எதைஎதையோ பேசிட்டு இந்த ஒரு வாரத்தை கடத்திட்டாங்க..இனிமேல்தான் நார்மல்க்கு வரணும்..//

பஞ்ச் காமெண்ட் அடிப்பதில் தங்களை யாரும் வெல்ல முடியாது.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Duraisamy N said...
உத்திரப் பிரதேசத்தில் வேலை பார்த்தபோது ஒருமுறை நண்பர் மற்றும் அவருடைய பெற்றோருடன் வாரணாசி சென்றேன். அப்போது வெறுமையாக எந்த ஈடுபாடும் இல்லாமல் சென்று வந்தேன். இப்போது நினைத்தாலும் கஷ்டமாக இருக்கிறது. நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று.///////

அதனால் என்ன? இன்னொருமுறை வாய்ப்பு வராமலா போய்விடும்? வருத்தத்தை விடுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger kmr.krishnan said...
//இங்கே அக்டிவா இருந்த ஆளெல்லாம் எங்கே போறதுன்னு தெரியாம எங்கெங்கோ போய் யார்யாரிடமோ எதைஎதையோ பேசிட்டு இந்த ஒரு வாரத்தை கடத்திட்டாங்க..//
ம்..ம்ம்.. மைனர்வாள் அது அப்படியல்ல! அக்டோபரில் இருந்தே அங்கே பேசிக் கொண்டுதான் இருக்கேன். யார் யாரோ எதை எதையோ பேசியதற்கு ஏற்ப‌ட்ட கவுன்டெர் விவாதங்களில் கலந்து கொள்கிறேன்.
எதையோ பேசியது அரியூர் ஆலன், செங்கோட்டை பார்வதி இருவரும்தான்.. அவர்களுக்கு திண்ணையில் இடம் அளித்தது பெருவுடையார்., ஹி.. ஹி. ஹி../////

ஒன்றும் புரியவில்லை (எனக்கு)!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger R.Srishobana said...
வணக்கம் ஐயா,
தங்களது பயணம் இனிமையான பயணமாக அமைந்திருந்தது என்பதை அழகான படங்களிலிருந்து தெரிந்து கொண்டோம்.ஒரு வார விடுமுறை என்று முடியும் என்று காத்து கொண்டிருந்தேன்.வகுப்பறைக்கு வந்தவுடனே காசி ஷேத்திரத்தை பற்றி அழகான படங்களுடன் "சம்போ" கட்டளை குறித்தும் கூறி "காசி" நகரை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலை தூண்டிவிட்டீர்கள் ஐயா!//////

நல்லது. தொடர்ந்து எழுதவுள்ளேன். அனைத்தையும் படியுங்கள் சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger iyer said...
பூங்காத்து திரும்பியதும் எம்
பாட்டை விரும்பியதும் மகிழ்ச்சியே
பயணக் கட்டுரை எழுதும் படி முன்னர்
பணிவான வேண்டுகோள் வைத்தோம்
திருவருளின் துணையால் இது பதிவாக
திருஉளம் தந்தமைக்கு நன்றிகள்..
ஆண்டுதோறும் ரிஷிகேஷ் வரை
அய்யர் சென்றுவரும் இப்புனித பயணம்
வாத்தியாரின் எண்ணத்தில்
வரவிருப்பதை ஆவலுடன் நோக்கியே
வழக்கம் போலவே
வணக்கமும் வாழ்த்துக்களும்/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

Blogger karthik said...
hello sir, havent you published the comments and doubts that i had sent to you? i tried searchin in all the 'post comment entry, sections?
my doubts where about k.p bhavas n other stuff ?
thank you.//////

கே.பி.ஸ்டெல்லர் ஜோதிட நூல்களை நான் படித்ததில்லை. ஆகவே அது பற்றிச் சொல்ல என்னிடம் விஷயம் ஒன்றும் இல்லை!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger sriganeshh said...
//காசிக்குச் சென்று வந்தவர்களை வணங்கி ஆசி பெறுவது நமது சம்பிரதாயம். நேரில் சந்திக்கமுடியாவிட்டாலும், மனதால் தங்களை வணங்குகிறேன்.//
தஞ்சாவூர் பெரியவர் சொன்னது போல் அவர் வழியில் ம‌னதால் தங்களை வணங்குகிறேன்.
என் தாய் வழி பாட்டனார் காரைக்குடியிலிருந்தவரை அகில இந்திய சுற்றுலா செல்லும் கோஷ்டியுடன் மூன்று முறை காசி யாத்திரை செய்தவர். நான் கடந்த மாதம் கல்கத்தா சென்ற போது, முயற்சி செய்தும், நண்பர்களின் கட்டுப்பிடியால், டார்ஜிலிங், சிக்கிம் செல்லும் படி ஆயிற்று. வரும் வழியில் பாட்னாவில் இறங்கி கங்கா ஆரத்தி காண முயற்சி செய்தும் முடியாமல் போயிற்று. பாட்னாவில் சனி, ஞாயிறு இரண்டு தினம் மட்டும் ஆரத்தி நடைபெறுகிறது. வரும் ஆண்டு ஏப்ரலில் என் பெற்றோரை அழைத்து செல்ல உள்ளேன்.
தங்கள் கட்டுரை மிகவும் உதவியாய் இருக்கும். ஆவலுடன் இருக்கிறேன்.
காசியில் ஜோதிட நூல்கள் ஏதாவது வாங்கினீர்களா??//////

அங்கே கிடைக்கும் புத்தகங்கள் எல்லாம் இந்தியில் அல்லவா இருக்கின்றன. காசியின் வரலாறு பற்ரிய ஆங்கில நூல் ஒன்றையும். காசி நகருக்கான மிகப்பெரிய வரைபடம் ஒன்றையும் வாங்கினேன். இரண்டும் சேர்ந்து ரூ.240:00 விலை!

முருகராஜன் said...

வணக்கம் ஐயா,

வகுப்பாறைக்கு ஒரு வாரம் விடுமுறை பிரிவு மிகபெரிய ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்களின் பதிவு பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி!

காசிக்கு சென்று திரும்பும் தங்களை வணங்கி வரவேற்க காத்திருக்கிறோம் கோவையிலிருந்து இதன்மூலம்,

நன்றி,

arul said...

welcome back to our classroom

redfort said...

Ayya Vanakkam,

Ungalai partha piragu than santhosam.

ennaramum Unganl pathigalai pattriya cithanaithan.


Thanks/Sengotaian.P.K,Tirupur.

Ravichandran said...

Ayya,

I am very happy hear about your Kaasi visit. I hope you have prayed for everyone. Eagerly waiting to see lot of posts.

Sincere Student,
Trichy Ravi

Bala.N said...

Ungal katturai padithathum meethi anupavangalam katturaiyaka eppo varum endru aaval melidukirathu. Eppadiyavathu anku sendru vara antha andavar karunai puriyattum

bhuvanar said...

அய்யா நன்றி.. வருக வருக என்று வரவேற்கிறோம்...

பிளான் இருக்கிறது அய்யா...காசிக்கு செல்ல...இறைவன் துணை புரியட்டும்...

நன்றி

பாண்டியன்

minorwall said...

//////////// SP.VR. SUBBAIYA said...

///////Blogger kmr.krishnan said...
//இங்கே அக்டிவா இருந்த ஆளெல்லாம் எங்கே போறதுன்னு தெரியாம எங்கெங்கோ போய் யார்யாரிடமோ எதைஎதையோ பேசிட்டு இந்த ஒரு வாரத்தை கடத்திட்டாங்க..//
ம்..ம்ம்.. மைனர்வாள் அது அப்படியல்ல! அக்டோபரில் இருந்தே அங்கே பேசிக் கொண்டுதான் இருக்கேன். யார் யாரோ எதை எதையோ பேசியதற்கு ஏற்ப‌ட்ட கவுன்டெர் விவாதங்களில் கலந்து கொள்கிறேன்.
எதையோ பேசியது அரியூர் ஆலன், செங்கோட்டை பார்வதி இருவரும்தான்.. அவர்களுக்கு திண்ணையில் இடம் அளித்தது பெருவுடையார்., ஹி.. ஹி. ஹி../////

ஒன்றும் புரியவில்லை (எனக்கு)!///////////

ஆஜர் ஆன ஆளு கரெக்ட்டு..சொன்ன இடமும் கரெக்ட்டு..
செஞ்சதா சொன்னதும் கரெக்ட்டு..

//////எதையோ பேசியது அரியூர் ஆலன், செங்கோட்டை பார்வதி இருவரும்தான்.. அவர்களுக்கு திண்ணையில் இடம் அளித்தது பெருவுடையார்., ஹி.. ஹி. ஹி../////
இதுதான் சுத்தமா புரியலே..எனக்கே புரியலைன்னா வாரனாசிக்குப் போன வாத்தியாருக்கு எப்பிடிப் புரியும்?

minorwall said...

////////////// sriganeshh said...


@மைனர்வாள் ,
//இங்கே அக்டிவா இருந்த ஆளெல்லாம் எங்கே போறதுன்னு தெரியாம எங்கெங்கோ போய் யார்யாரிடமோ எதைஎதையோ பேசிட்டு இந்த ஒரு வாரத்தை கடத்திட்டாங்க..இனிமேல்தான் நார்மல்க்கு வரணும்..//

பஞ்ச் காமெண்ட் அடிப்பதில் தங்களை யாரும் வெல்ல முடியாது.////////


நன்றி..இதுக்கு ஒருத்தர் ஆஜராகி பதில் சொல்லியிருக்காரு பார்த்தீங்களா?அது என்னன்னு உங்களுக்குப் புரிஞ்சுச்சா?

sriganeshh said...

@minorwall,
எனக்கும் ஒன்றும் புரியவில்லை. எனக்கு தெரிந்ததெல்லாம் நீங்கள் பார்த்திபன் ஸ்டைலில் போட்டு வாங்கியது தான்.

Sathish K said...

//காசிக்குச் சென்று வந்தவர்களை வணங்கி ஆசி பெறுவது நமது சம்பிரதாயம். நேரில் சந்திக்கமுடியாவிட்டாலும், மனதால் தங்களை வணங்குகிறேன்.// ஐயா நான் இந்த blogஐ 3 நாட்களாக வாசித்து வருகிறேன். நீங்கள் காசிக்கு சென்று வந்தவுடன், உங்கள் ஆசிர்வாதத்துடன் வகுப்பறையில் இணைவதில் அளவிலா உவகை அடைகிறேன்.

kmr.krishnan said...

//இதுதான் சுத்தமா புரியலே..எனக்கே புரியலைன்னா வாரனாசிக்குப் போன வாத்தியாருக்கு எப்பிடிப் புரியும்?//
மைனர்வாள்! மைனரோட வழக்கமான ஜாலியெல்லாம் ஒதுக்கிட்டு யோசியுமேன் காணும்.
புரியாட்டா உம்மை அரிமா சங்கத்திலேந்து விலக்கிடப் போரா!
அப்புறம் செங்கோடையில் கொடியேத்த முடியுமோ?
அந்த மலை நீலி உங்களுக்கு வழி விடாது.
தட்சிணமேரு சுவாமியார் சாபத்துக்கு ஆளாவீர்ர்!உஷார்!கபர்தார்!ஜாக்கிரதை!

minorwall said...

///////kmr.krishnan said...
//இதுதான் சுத்தமா புரியலே..எனக்கே புரியலைன்னா வாரனாசிக்குப் போன வாத்தியாருக்கு எப்பிடிப் புரியும்?//
மைனர்வாள்! மைனரோட வழக்கமான ஜாலியெல்லாம் ஒதுக்கிட்டு யோசியுமேன் காணும்.
புரியாட்டா உம்மை அரிமா சங்கத்திலேந்து விலக்கிடப் போரா!
அப்புறம் செங்கோடையில் கொடியேத்த முடியுமோ?
அந்த மலை நீலி உங்களுக்கு வழி விடாது.
தட்சிணமேரு சுவாமியார் சாபத்துக்கு ஆளாவீர்ர்!உஷார்!கபர்தார்!ஜாக்கிரதை!////////////

சுத்தம்..