மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

25.11.11

வாரணாசியில் இட்லி சாம்பார்!வாரணாசியில் இட்லி சாம்பார்!

ஒரு பழைய திரைப்படத்தில் எம்.ஆர். ராதா சிங்கப்பூர் மைனர் வேடத்தில் வருவார். வருபவர் ஒரு காட்சியில் இட்லி, புட்டு அவித்து விற்கும் பெண்மணியை இப்படிக் கலாய்ப்பார்:

“அவனவன் நீராவியில கப்பல் விடுறான், ரயில் விடுறான். நீங்க இட்லி, புட்டு விடுறீங்களாடா? விடுங்கடா!!!!!!”

யார்தான் என்னதான் கலாய்த்தாலும் இட்லி சாம்பாருக்கு இணை ஏதும் கிடையாது. சுடச்சுட சாப்பிட்டுப் பாருங்கள். அதன் அருமை தெரியும்.

தமிழனின் அரிய கண்டுபிடிப்பு இந்த இட்லி & சாம்பார்!

யாருக்குக் கொடுப்பது என்பது தெரியாததால் அதற்கு இன்றுவரை நோபல் பரிசு கிடைக்கவில்லை!

எங்கே சென்றாலும், எந்தச் சூழ்நிலையிலும் கெடுதி செய்யாத உணவு இந்த இட்லி சாம்பார்! வயிற்றிற்கு ஆதரவான உணவு. வயது முதிந்தோர்க்கும், நோயில் படுத்திருப்போர்க்கும் அதன் அருமை சற்றுக் கூடுதலாகத் தெரியும்!

சரி, வாரணாசியில் இட்லி சாம்பாருக்கு என்ன செய்வது?

அதைச் சொல்லத்தான் இன்றையப் பதிவு. தொடர்ந்து படியுங்கள்
--------------------------------------------------------------------------------------------------
வாரணாசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது?

இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்: காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!

அதன் முகவரி மற்றும் தொலை பேசி எண் என்ன?

கீழே கொடுத்துள்ளேன்.

அனைவரும் தங்கலாமா?

இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.

சிபாரிசுக் கடிதம் வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது

முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:

Sri Kasi Nattukkottai Nagara Satram
Godowlia,
Varanasi - 221 001 (U.P)
Telephone Nos: 0542 - 2451804,
Fax No: 0542 - 2452404

(ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்)

Naat Koat Satram
Location Godowlia, Tanga Stanad
Behind Sushil Cinema
Varanasi

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
கட்டணம் உண்டா?

உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது.

உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள். ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை பத்து ரூபாய் மட்டுமே! குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி. 20 பேர்கள், 30 பேர்கள், 50 பேர்கள் என்று வருபவர்களுக்கு, அவர்களின் அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன. பாய்கள், ஜமுக்காளங்கள், தலையணைகள் எல்லாம் அங்கேயே கிடைக்கும். அதற்குச் செலவில்லை.

ப்ரைவேசி வேண்டும் என்றால் தனி அறைகள் நிறைய உள்ளன. மூன்று விதமான அறைகள் உள்ளன. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள்
அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற Attached Bath Room and Flush Outஉடன் கூடிய அறைகள். மற்றும் டீலக்ஸ் அறைகள். சுமார் 60 அறைகள் உள்ளன. சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.

மகா சிவராத்திரி, தீபாவளி, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற சமயங்களில் இருக்காது. தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர்கள்வரை வந்து செல்கிறார்கள். அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள் 200 பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள்.

எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும். உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு. அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு 4 காவற்காரர்கள் உள்ளார்கள்.

இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம் கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம்
டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம்

குளியல் அறைகளில் Water Heater  உண்டு
குடிப்பதற்கு Purified Water உண்டு
மின்தடை இருக்காது Full Gen Set வசதி உண்டு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி உணவு?

விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன. இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர். சைவ உணவுகள் மட்டுமே. நம்பிச் சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.

1
காலைச் சிற்றுண்டி: நேரம் 8 மணி முதல் 10 மணி வரை.
இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி - அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். டீ உண்டு
கட்டணம் ரூ.35:00 மட்டுமே

2.
மதிய உணவு: நேரம் 12:30 மணி 2:30 மணி வரை
சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். 90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம். சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40:00 கட்டணம்

ரூ.4,000:00 அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும்.

3. மாலை 4 மணி டீ உண்டு

4. இரவு 7:30 முதல் 9 மணிவரை
இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள்
கட்டணம் ரூ.35:00 மட்டுமே

உணவிற்குக் காலை 8 மணிக்கும் கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாரணசியில் மட்டும்தான் இந்த வசதி உள்ளதா?

இல்லை. அலகாபாத், அயோத்தியா, கயா, நாசிக் ஆகிய 4 ஸ்தலங்களிலும் இந்த வசதி உள்ளது. அது பற்றிப் பிறகு ஒருநாள் பதிவிடுகிறேன்

தமிழ் நாட்டில்?

திருவண்ணாமலை, பழநி, திருச்செந்தூர் போன்று சுமார் 20 ஸ்தலங்களில் இந்தத் தங்கும் வசதி உள்ளது. அது பற்றியும் பிறகு ஒருநாள் பதிவிடுகிறேன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விடுதியைப் பல கோணங்களில் படம் எடுத்துக்கொண்டு வந்தேன். மொத்தம் 100 படங்கள். அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்
----------------------------------------------------------------------------------------------------
வாரணாசியைப் பற்றி இன்னும் செய்திகள் உள்ளன. அவற்றை நாளை தருகிறேன். நாளையுடன் இந்தக் கட்டுரைத் தொடர் நிறைவுறும்!

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

விடுதியின் முபுறத் தோற்றம்
அறிவிப்புப் பலகை!

நுழை வாயிலில் ஒரு பக்கம் படிக்கட்டு, ஒருப்க்கம் லிஃப்ட்,  
                                        இரவு பகலாக டூட்டியில் இரண்டு காவல்காரர்கள்
3 தளங்களுக்கும் போய்வருவதற்கான லிஃப்ட்

நுழைவாயிலில் உள்ள நீண்ட நடை பாதை
                          உங்கள் செருப்புக்களைப் பாதுகாக்க உள்ள ஸ்டாண்டுகள்

நடை பாதையின் உட்புறத்தோற்றம்

முகப்புப் பகுதியில் உள்ள நிலைக் கதவு
விடுதியின் உட்புறம் உள்ள ஈஸ்வரன் கோவில்
 விடுதிக்கோவிலின் உட்புறம்

 விடுதிக்கோவிலின் உட்புறம்
 விடுதிக்கோவிலின் உட்புறம் - படம் 2
உள்ளே விஸ்வநாதர், விசாலாட்சி, விநாயகர், முருகர்
ஆகியோருக்குக் கருவறை உள்ளது. அவற்றைப் படம் எடுக்கவில்லை
இதுபோன்று தங்கும் மண்டபங்கள் பல உள்ளன.
முதல் தளத்தின் முகப்புப் பகுதியில் இருந்து  வெள்யே தெரியும் தெருவின் தோற்றம்
ஆயிரம் சதுர அடி வளாகத்தில் நிர்வாக அலுவலகம்
நிர்வாக அலுவலகத்தில் இருந்து உணவுக்கூடத்திற்குச் செல்லும் வழி
இரண்டாவது தளத்தில் உள்ள தங்கும் அறைகளில் ஒன்று

விடுதிக்குள் இருக்கும் கோவிலின் கோபுரத்தை வளைத்து விரிவாக்கம் நடந்து கொண்டிருக்கிறது

வாரணாசியில் நிறைந்திருக்கும் குரங்குகள் விடுதிக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி
முதல் தளத்தில் துவக்க காலத்தில் கட்டப்பெற்ற தங்கும் அறைகள் உள்ள பகுதி
இரண்டாவது தளத்தின் ஒரு பக்கக் காட்சி

இரண்டாவது தளத்தில் இருந்து மேல் பகுதிக்கான காட்சி
உள் மண்டபங்களுக்கான் நுழைவிடம்

நிர்வாக அலுவலத்திற்குச் செல்லும் படிக்க்ட்டுப் பாதை
அந்தத் தளத்தில் மற்றுமொரு கோணம்

அந்தக் காலத்தில் கட்டப்பெற்ற ஒரு அறையின் தோற்றம்
நிர்வாக அலுவலகத்தில்  பணி செய்யும் அறுவரில் ஒருவர்

வருகைப் பதிவேட்டில் வாத்தியார் தன் கையெழுத்தை இடும் காட்சி
மண்டபங்களில் தங்கள் உடைமைகளைப் பத்திரமாக வைத்துக்கொள்ள உதவும் லாக்கர்கள். சூட்கேஸ்களோடு அப்படியே உள்ளே வைக்கலாம்
லாக்கர்களின் அளவைப் பாருங்கள்

இன்னுமொரு தங்கும் மண்டபம்

அந்த மண்டபத்தில் உள்ள லாக்கர்களின் அணிவகுப்பு

ஒவ்வொரு காலகட்டத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்கள் தங்கள் பொருட்செலவில் விடுதியை மேம்படுத்தியுள்ளார்கள். 2004 - 2007 ஆம் ஆண்டு இருந்த குழுவினர் சுமார் ஐம்பது லட்ச ரூபாய் செலவில் பணிகள் செய்துள்ளார்கள். அதைக் காட்டும் படம். இது போன்ற விவரங்கள் அங்கே காணக் கிடைக்கின்றன

காசி அறக்கட்டளைக்குத் தலைமை தாங்கிய பெரியவர்களின் படம் காட்சிக்கு வைக்கப்பெற்றுள்ளது. நிறைய உள்ளன.  இடது பக்கம் முதல் படம் தேவகோட்டை ஜமீன்தார் திரு. AL.AR. சோமசுந்தரம் செட்டியார் அவர்களின் படம். அவர் லால்பகதூர் சாஸ்திரியின் நண்பர். ராமேஷ்வரம் கோவிலின் பரம்பரை அறங்காவலர்

படத்தில் இருப்பவர் தேவகோட்டை திரு. AR.SM. சோமசுந்தரம் செட்டியார் (அவருடைய காலம் 1861 - 1923) கல்கத்தாவில் பெரிய அளவில் வணிகம் செய்தவர். ஹூக்ளி நதிக்கரையில் ஹெளரா பாலத்தின் அருகே உள்ள எர்சா தெருவில் இடம் வாங்கி, மிகப் பெரிய சத்திரம் ஒன்றைக் கட்டியவர். அதன் இன்றைய மதிப்பு நூறு கோடி ரூபாய். அதை காசி அறக்கட்டளைக்கு அன்றே தானமாகக் கொடுத்துவிட்டார். அவர் சத்திரம் சோவன்ன மானா என்று அனைவராலும் அறியப்பெற்றவர். இலங்கைப் பேராசான் அறுமுக நாவலரின் நண்பர்.

தங்கள் பெற்றோர்களின் பெயரில் ஏதாவது தர்மம் செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்கள், காசியில் நிறையத் தர்மம் செய்துள்ளார்கள். சிலர் இதுபோன்ற தங்கும் அறைகளைக் கட்டிக்கொடுத்துள்ளார்கள். அப்படி ஒரு குடும்பத்தார் கட்டிக் கொடுத்த டீலக்ஸ் அறையின் தோற்றம். கதவிற்கு மேற்புறம் அதை அளித்த குடும்பத்தாரின் பெயர் உள்ளது!

விசுவநாதருக்கு விடுதியில் இருந்து சம்போ கட்டளை செல்லும் போது உடன் செல்லும் பூஜைப் பாத்திரங்கள்

நாளொன்றுக்கு மூன்று வேளைகள். ஒரு வேளைக்கு 30 லிட்டர் பால் விசுவநாதருக்கு விடுதியில் இருந்து சம்போ கட்டளையாகச் செல்கிறது. அதற்கான காட்சிப் படம்
காசித் தீர்த்தம் சிறு செம்புகளில் பல அளவுகளில் தாயாராகின்றது. அவைகள் உங்களுக்கு விடுதி வளாகத்திலேயே விலக்குக் கிடைக்கும்
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உணவுக்கூடம்

உண்வுக்கூடத்தில் உங்களை வரவேற்கும் அன்னபூரணி

சாப்பிடும் கூடம் (Dining Hall)

சாப்பிடும் கூடம் (Dining Hall) இன்னும் ஒரு கோணத்தில்

சாப்பிடும் கூடம் (Dining Hall) மேலும் ஒரு கோணத்தில்

காய்கறிகள் நறுக்குவதற்கென்றே தனியாக ஒருவர் உள்ளார்

சமையல்காரர் திரு. வீராச்சாமி, வேந்தன்பட்டிக்காரர்

சமையல் அறையில் உள்ள சாதனங்கள்

சமையலறைக்குத் தேவையான எரிபொருள் தொகுப்புஉணவு பறிமாறும் பணியாளர்கள் (உள்ளூர்க்காரர்கள்)
Man made Panana Leaf
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அருள்பழுத்த காசியிலே அகிலேசன்றன்
    அடிபரவ நகரத்தார் அமைத்த தர்மம்
இருள்நீக்கி ஒளிபரப்பும் இரவிபோல
    என்றென்றும் நீசில்பெற்று வளமிக்கோங்க
மருள்நீக்கி உலகையெல்லாம் காக்கும் அன்னை
    விசாலாட்சி விசுவேசன் மலர்ப் பதத்தை
பொருள்வழங்கித் தினம் மூன்று காலம் போற்றும்
    புண்ணியராம் தனவணிகர் பொலிந்து வாழ்க!

- என்ற பாடல் எக்காலத்தில் எழுதப்பெற்றதோ! இன்றும் காசியில் காட்சியளிக்கிறது. அதன் படத்தை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

120 comments:

dhilse said...

Dear Sir,
Good photographs and good guidelines, sir.I request you to write like this for Kasi and Gaya.I learned that those who born on Shiva Kothram they have to do their lost rites at Kasi and those who born on Vishnu kothram have to do on Gaya.If you write about those two places, everyone will be benefited and the credit goes to you, sir.
Regards,
J.SENDHIL

kmr.krishnan said...

என்னடா இது நம்ம சப்ஜெக்ட் வாத்தியாரோட பேசி ரொம்ப நாளாச்சே அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். இட்டிலி சாம்பார் படம் போட்டு கொஞ்சம் ஆறுதல் அளித்திர்கள்.

இட்டிலிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று ஓர் இயக்கத்தை ஆரம்பிப்போமா? ஃபேஸ் புக், ட்விட்டெர்ர்னு கலக்கலாமா?

'நாட்கோட்' சத்திரதிற்குக் கோட்டுப் போட்டுக் கொண்டு போக வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கா?ஹிஹிஹி...

பயணம் போவாருக்கு நல்ல தகவல்கள் ஐயா!

மாத வாடகைக்கு 2 பேருக்கு ரூம் தருவார்களா ஐயா?

படங்களுடன் அருமையான பதிவு ஐயா! எது செய்தாலும் ஈடுபாட்டோடு செய்கிறீர்கள்.

2800 பேரில் ஒரு 100 பேர் கூட உங்கள் முயற்சியைப் பாராட்டி பின்னூட்டம் இடாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

Sathish K said...

வந்திக் கிழவியின் பிட்டை சாப்பிட்டு அந்த 'பிட்டுக்கு மண் சுமந்த' ஈசன் புராணம் கொண்டவர்கள் நாம். சிவன் விரும்பி உண்டதை நாம் ரசித்து ருசிக்காமல் இருக்க முடியுமோ!

ஐயா பதிவுக்கு நன்றிகள் பல!

தேமொழி said...

///எம்.ஆர். ராதா சிங்கப்பூர் மைனர் வேடத்தில் வருவார். வருபவர் ஒரு காட்சியில் இட்லி, புட்டு அவித்து விற்கும் பெண்மணியை இப்படிக் கலாய்ப்பார்///

என்ன செய்வது? மைனராய் இருந்தால் கலாய்ப்பதும் கூடவே பிறந்துவிடும் போலிருக்கிறது :-)
புரதமும், மாவுச் சத்தும் நிறைந்தும், நீராவியில் வேகவைக்கப்படுவதால் எளிதாக செரிப்பதினாலும் மருத்துவர்கள் இட்லியை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறார்கள். ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் சீரியல் சாப்பிட்டு பள்ளி செல்லும் குழந்தைகளே ஊட்டச் சத்துள்ள உணவை சாப்பிடுவதாக இளம் தாய்மார்களுக்கு குற்ற உணர்ச்சியை தோற்றுவிக்கும் விளம்பரங்கள் வெளியிடுகிறார்கள்.

படங்கள் அருமை, காணொளி ஏதும் எடுத்தீர்களா ஐயா? சத்திரத்தினுள் நுழைந்துவிட்டால் தமிழகத்தில் உள்ள உணர்வு வந்துவிடும் எனத் தோன்றுகிறது. மற்றுமொரு உபயோகமான தகவல்கள் செறிந்த பதிவிற்கு நன்றி.

Karthikeyan said...

மிகவும் உபயோகமான தகவல்கள். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற முதுமொழிக்கு எடுத்துக்காட்டாக படங்களுடன் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வாத்தியார் அவர்களுக்கு மிக்க நன்றி.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger dhilse said...
Dear Sir,
Good photographs and good guidelines, sir.I request you to write like this for Kasi and Gaya.I learned that those who born on Shiva Kothram they have to do their lost rites at Kasi and those who born on Vishnu kothram have to do on Gaya.If you write about those two places, everyone will be benefited and the credit goes to you, sir.
Regards,
J.SENDHIL/////

நீங்கள் கேட்டுள்ள விபரம் எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்களிடம் விசாரித்துப் பிறகு எழுதுகிறேன். நன்றி செந்தில்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
என்னடா இது நம்ம சப்ஜெக்ட் வாத்தியாரோட பேசி ரொம்ப நாளாச்சே அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். இட்டிலி சாம்பார் படம் போட்டு கொஞ்சம் ஆறுதல் அளித்திர்கள்.
இட்டிலிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று ஓர் இயக்கத்தை ஆரம்பிப்போமா? ஃபேஸ் புக், ட்விட்டெர்ர்னு கலக்கலாமா?
'நாட்கோட்' சத்திரதிற்குக் கோட்டுப் போட்டுக் கொண்டு போக வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கா?ஹிஹிஹி...
பயணம் போவாருக்கு நல்ல தகவல்கள் ஐயா!
மாத வாடகைக்கு 2 பேருக்கு ரூம் தருவார்களா ஐயா?///////

ஒருவாரத்திற்கு மேல் தாங்காது. நமக்கு நம் ஊருதான் சொர்க்கம்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
படங்களுடன் அருமையான பதிவு ஐயா! எது செய்தாலும் ஈடுபாட்டோடு செய்கிறீர்கள்.
2800 பேரில் ஒரு 100 பேர் கூட உங்கள் முயற்சியைப் பாராட்டி பின்னூட்டம் இடாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது.///////

“செய்வன திருந்தச் செய்” எனது தாரகமந்திரங்களில் அதுவும் ஒன்று. எண்ணிக்கைக்கும் பாராட்டிற்கு நான் என்றுமே மயங்கியது கிடையாது.
ஒரு ஆர்வத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்குரிய வாய்ப்பை (நேரத்தையும், மனத்தெம்பையும்) பழநிஅப்பன் நல்கிக்கொண்டிருக்கிறான். அவ்வளவுதான்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Sathish K said...
வந்திக் கிழவியின் பிட்டை சாப்பிட்டு அந்த 'பிட்டுக்கு மண் சுமந்த' ஈசன் புராணம் கொண்டவர்கள் நாம். சிவன் விரும்பி உண்டதை நாம் ரசித்து ருசிக்காமல் இருக்க முடியுமோ!
ஐயா பதிவுக்கு நன்றிகள் பல!/////

நன்றி, வந்திக்கிழவியை நினைவில் கொண்டுள்ள நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger தேமொழி said...
///எம்.ஆர். ராதா சிங்கப்பூர் மைனர் வேடத்தில் வருவார். வருபவர் ஒரு காட்சியில் இட்லி, புட்டு அவித்து விற்கும் பெண்மணியை இப்படிக் கலாய்ப்பார்///
என்ன செய்வது? மைனராய் இருந்தால் கலாய்ப்பதும் கூடவே பிறந்துவிடும் போலிருக்கிறது :-)
புரதமும், மாவுச் சத்தும் நிறைந்தும், நீராவியில் வேகவைக்கப்படுவதால் எளிதாக செரிப்பதினாலும் மருத்துவர்கள் இட்லியை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறார்கள். ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் சீரியல் சாப்பிட்டு பள்ளி செல்லும் குழந்தைகளே ஊட்டச் சத்துள்ள உணவை சாப்பிடுவதாக இளம் தாய்மார்களுக்கு குற்ற உணர்ச்சியை தோற்றுவிக்கும் விளம்பரங்கள் வெளியிடுகிறார்கள்.
படங்கள் அருமை, காணொளி ஏதும் எடுத்தீர்களா ஐயா? சத்திரத்தினுள் நுழைந்துவிட்டால் தமிழகத்தில் உள்ள உணர்வு வந்துவிடும் எனத் தோன்றுகிறது. மற்றுமொரு உபயோகமான தகவல்கள் செறிந்த பதிவிற்கு நன்றி.///////

கலாய்ப்புக்கள் இல்லையென்றால் நகைச்சுவை ஏது. உலகம் வறண்டுவிடும்!!!
காசிக்குச் செல்லும் இரயில் பயணத்தில் பொருள்களுக்குப் பாதுகாப்புக் குறைவு என்பதால், மடிக் கணினியைக்கூட கொண்டு செல்லவில்லை.
உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Karthikeyan said...
மிகவும் உபயோகமான தகவல்கள். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற முதுமொழிக்கு எடுத்துக்காட்டாக படங்களுடன் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வாத்தியார் அவர்களுக்கு மிக்க நன்றி.////////

இருக்கும் வரை நாமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும். போகும்போது எதைக் கொண்டுபோகப் போகிறோம்? வங்கி இருப்பும் வாங்கிப்போட்ட சொத்தும் வழித்துணையாக வருமா?

sekar said...

காசி செல்ல விரும்பும் எங்களைபோல் உள்ள அனைவருக்கும் அருமையான சுவையான தகவல் .நன்றி அய்யா

eswari sekar said...

enna oru unntha mana varthi vankl errupm vankea sotthum guda varathau super

Thanjavooraan said...

காசிக்குச் செல்லும் பலர் எங்கே தங்குவது, நம் சாப்பாட்டுக்கு வழி என்ன என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் நல்ல வழிகாட்டி. ஒருமுறை அங்கு சென்று வந்தால் அங்கிருக்கும் வசதிகள் நன்கு புரியும். நல்ல செய்திகள்; பயனுள்ள செய்திகள். நிச்சயமாக இப்படி ஒரு வழிகாட்டி கிடைப்பது அரிது. தங்கள் பணி சிறப்பானது. வாழ்க தங்கள் பணி.

Duraisamy N said...

மிகவும் பயன் மிக்க தகவல். வெளியிட்ட வாத்தியாருக்கு நன்றி.
பெரும்பாலும் வெளியூரில் உள்ள கோவிலுக்குச் செல்ல நினைக்கும்போது, மனதில் எழும் முதல் கேள்வி - 'எங்கே தங்குவது?' என்பதுதான். தமிழ்நாட்டிலும் (கோவில் உள்ள) ஊர்களில் உள்ள சத்திரங்கள் குறித்து விவரங்களை அளிக்கத் தாங்கள் முன் வந்துள்ளது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடரட்டும் உங்கள் தொண்டு!!

Duraisamy N said...

/--
kmr.krishnan said...
1.ஹனுமான் காட்டில் பாரதியின் சிலை மட்டும் அல்ல. அவர் தங்கிப் படித்த அவருடைய அத்தை (குப்பம்மாள்?)இல்லமும் உள்ளது.
--/
இது முந்தைய பதிவில் வந்த பின்னூட்டத்துக்கான பின்னூட்டம்.

மகாகவி பாரதி, காசிக்குச் சென்று வந்த பின்புதான் 'பாரதி' என்ற பெயரைப் பயன்படுத்த ஆரம்பித்தார் என்று ஒரு ஆய்வு நூலில் படித்துள்ளேன். 'Bharti' என்ற surname கொண்டவர்கள் உ.பி யின் கிழக்குப் பகுதியில் அதிகம் வாழ்கிறார்கள்.

Ravichandran said...

Ayya,

All the photographs are nice & your Idly, Sambar are also very nice..

Your Student,
Trichy Ravi

kmr.krishnan said...

//என்ன செய்வது? மைனராய் இருந்தால் கலாய்ப்பதும் கூடவே பிறந்துவிடும் போலிருக்கிறது :‍)//

சரி!சரி! புரிகிறது. டெல்லிக்காரவுக சொல்லித்தான் எல்லாம் ஒரு பிளானா நடக்கிறாப் போல இருக்கு.

பாப்ப்போம் நம்ம வகுப்பறை எம் ஆர் ராதா என்ன சொல்கிறார் என்று.
ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும்

என்றும் ஜபத்தைக் கைவிடாத நண்பன்,

கே எம் ஆர் கே

arul said...

miga arumayan padangal miga arumayana thagavalgal

CJeevanantham said...

Superb....

You have increased my eager to visit varanasi again.

Thank You.

CJeevanantham said...

Superb....

very nice blog.

very useful.

You have increased the eager to visit varanasi for the people who are studying your blog.

Very nice.

thanusu said...

இந்து மதத்தின் ஈம சடங்குகளுக்கு பிறகு நிறைவேற்றும் இறுதிக்கடன் களை தாங்கி வந்த இந்த தொடர், வாராணாசி நகர், தொன்மையான கட்டடங்கள் மண்ணின் மைந்தர்களின் வாழ்கை முறை யாவையும் சிறப்பாக விளக்கியது.

வாரானாசியின் வரலாறு
அதை தந்த
வாத்தியாருக்கு நன்றிநூறு.
படித்துவிட்டுபோவது யாரு
ஒரு வார்த்தை நீயும் கூறு
வகுப்பறை களை கட்டும் பாரு.

இட்லி சாம்பாரின் சுவை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? வாரானாசியின் இட்லி சாம்பாரின் சுவை வாத்தியார் சொல்லத்தான் வேண்டும். ஆனால் இளைத்த இலையாய் இருக்கும் சமையல்காரரையும் பரிமாருபவர்களையும் பார்த்தல், சுவையை பற்றி கேட்க வேண்டாம் என்றே தோன்றுகிறது .

முருகராஜன் said...

காசியில் தங்கும் வசதி மற்றும் உணவு,இதர விசயங்களை மிக சிறப்பாக தந்தமைக்கு நன்றி!

மேலும் காசியில் நகரத்தார் செய்துள்ள சேவை செம்மையானது,

வாழ்க நகரத்தார்! வளர்க அவர்களது சேவை!

வாழ்க வாத்தியார்! தொடர்க அவரது சீரிய சேவை!

மிக்க நன்றி!

seenivasan said...

Dear Sir,

Last one week, Just I am enjoying whatever the things you have written about kasi yatra . Wether it is positivity or negativity about Kasi.
When I joined your classroom in the year 2009, since then I am daily student of the classroom but most of time I don`t have time to write comments as my profile of job is like that.

Please continue the classroom as usual to en light us.

I am lucky somehow , visited Kasi more than thrice and also visited almost 7 Jothirlinga Temples. But at present I don`t have time to visit Coastal Tamil Nadu (mainly for delta region ) for that rich siva temples.

Please write about ( in feature) about Tirunallaru,Tirvengadu, Tirukadaiyur etc.These are all rich and very old temples & heard from my friends.
Dreaming to have Navagragha tours in near feature.please also provide some tips to visit these Temples .

Thank you very much for writing such a wonderful experience .

G.Seenivasan,
Rohini, New Delhi.

SP.VR. SUBBAIYA said...

////Blogger sekar said...
காசி செல்ல விரும்பும் எங்களைபோல் உள்ள அனைவருக்கும் அருமையான சுவையான தகவல் .நன்றி அய்யா////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சேகர்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger eswari sekar said...
enna oru unntha mana varthai : "vankl irrupm vangiya soththum kooda varathu" super//////

உங்களின் மனம் திறந்த பாராட்டிற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Thanjavooraan said...
காசிக்குச் செல்லும் பலர் எங்கே தங்குவது, நம் சாப்பாட்டுக்கு வழி என்ன என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் நல்ல வழிகாட்டி. ஒருமுறை அங்கு சென்று வந்தால் அங்கிருக்கும் வசதிகள் நன்கு புரியும். நல்ல செய்திகள்; பயனுள்ள செய்திகள். நிச்சயமாக இப்படி ஒரு வழிகாட்டி கிடைப்பது அரிது. தங்கள் பணி சிறப்பானது. வாழ்க தங்கள் பணி./////

உங்களின் மேலான அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி கோபாலன் சார்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Duraisamy N said...
மிகவும் பயன் மிக்க தகவல். வெளியிட்ட வாத்தியாருக்கு நன்றி.
பெரும்பாலும் வெளியூரில் உள்ள கோவிலுக்குச் செல்ல நினைக்கும்போது, மனதில் எழும் முதல் கேள்வி - 'எங்கே தங்குவது?' என்பதுதான். தமிழ்நாட்டிலும் (கோவில் உள்ள) ஊர்களில் உள்ள சத்திரங்கள் குறித்து விவரங்களை அளிக்கத் தாங்கள் முன் வந்துள்ளது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடரட்டும் உங்கள் தொண்டு!!////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///Blogger Duraisamy N said...
/-- kmr.krishnan said... 1.ஹனுமான் காட்டில் பாரதியின் சிலை மட்டும் அல்ல. அவர் தங்கிப் படித்த அவருடைய அத்தை (குப்பம்மாள்?)இல்லமும் உள்ளது. --/
இது முந்தைய பதிவில் வந்த பின்னூட்டத்துக்கான பின்னூட்டம்.
மகாகவி பாரதி, காசிக்குச் சென்று வந்த பின்புதான் 'பாரதி' என்ற பெயரைப் பயன்படுத்த ஆரம்பித்தார் என்று ஒரு ஆய்வு நூலில் படித்துள்ளேன். 'Bharti' என்ற surname கொண்டவர்கள் உ.பி யின் கிழக்குப் பகுதியில் அதிகம் வாழ்கிறார்கள்.//////

தகவலுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Ravichandran said...
Ayya,
All the photographs are nice & your Idly, Sambar are also very nice..
Your Student,
Trichy Ravi//////

எல்லாம் உங்களைப் போன்ற அடுத்த தலைமுறையினருக்காகத்தான்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
//என்ன செய்வது? மைனராய் இருந்தால் கலாய்ப்பதும் கூடவே பிறந்துவிடும் போலிருக்கிறது :‍)//
சரி!சரி! புரிகிறது. டெல்லிக்காரவுக சொல்லித்தான் எல்லாம் ஒரு பிளானா நடக்கிறாப் போல இருக்கு.
பார்ப்ப்போம் நம்ம வகுப்பறை எம் ஆர் ராதா என்ன சொல்கிறார் என்று. ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும்
என்றும் ஜபத்தைக் கைவிடாத நண்பன்,
கே எம் ஆர் கே/////

மைனர் வகுப்பறை எம் ஆர் ராதா என்றால், நீங்கள் வகுப்பறை எம்,ஜி.ஆரா?:-))))))

SP.VR. SUBBAIYA said...

//////Blogger arul said...
miga arumayan padangal miga arumayana thagavalgal////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger CJeevanantham said...
Superb....
You have increased my eager to visit varanasi again.
Thank You.//////

நல்லது. நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger CJeevanantham said...
Superb....
very nice blog.
very useful.
You have increased the eager to visit varanasi for the people who are studying your blog.
Very nice.////

ஒரு தகவலுக்காகத்தான் அனைத்தையும் எழுதுகிறேன். செல்வதும் செல்லாமல் இருப்பதும் அவரவர் விருப்பம்!

SP.VR. SUBBAIYA said...

Blogger thanusu said...
இந்து மதத்தின் ஈம சடங்குகளுக்கு பிறகு நிறைவேற்றும் இறுதிக்கடன் களை தாங்கி வந்த இந்த தொடர், வாராணாசி நகர், தொன்மையான கட்டடங்கள் மண்ணின் மைந்தர்களின் வாழ்கை முறை யாவையும் சிறப்பாக விளக்கியது.
வாரானாசியின் வரலாறு
அதை தந்த
வாத்தியாருக்கு நன்றிநூறு.
படித்துவிட்டுபோவது யாரு
ஒரு வார்த்தை நீயும் கூறு
வகுப்பறை களை கட்டும் பாரு.
இட்லி சாம்பாரின் சுவை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? வாரானாசியின் இட்லி சாம்பாரின் சுவை வாத்தியார் சொல்லத்தான் வேண்டும். ஆனால் இளைத்த இலையாய் இருக்கும் சமையல்காரரையும் பரிமாறிபவர்களையும் பார்த்தல், சுவையை பற்றி கேட்க வேண்டாம் என்றே தோன்றுகிறது/////

அவர்கள் எல்லாம் நின்று பணி செய்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். நாள் முழுவதும் கணினி முன் அமர்ந்து பணி செய்பவர்கள்தான் தாட்டியான உருவத்துடன் இருப்பார்கள்

SP.VR. SUBBAIYA said...

///Blogger முருகராஜன் said...
காசியில் தங்கும் வசதி மற்றும் உணவு,இதர விசயங்களை மிக சிறப்பாக தந்தமைக்கு நன்றி!
மேலும் காசியில் நகரத்தார் செய்துள்ள சேவை செம்மையானது,
வாழ்க நகரத்தார்! வளர்க அவர்களது சேவை!
வாழ்க வாத்தியார்! தொடர்க அவரது சீரிய சேவை!
மிக்க நன்றி!////

நல்லது. உங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி முருகராஜன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger seenivasan said...
Dear Sir,
Last one week, Just I am enjoying whatever the things you have written about kasi yatra . Wether it is positivity or negativity about Kasi.
When I joined your classroom in the year 2009, since then I am daily student of the classroom but most of time I don`t have time to write comments as my profile of job is like that.
Please continue the classroom as usual to en light us.
I am lucky somehow , visited Kasi more than thrice and also visited almost 7 Jothirlinga Temples. But at present I don`t have time to visit Coastal Tamil Nadu (mainly for delta region ) for that rich siva temples.
Please write about ( in feature) about Tirunallaru,Tirvengadu, Tirukadaiyur etc.These are all rich and very old temples & heard from my iends. Dreaming to have Navagragha tours in near feature.please also provide some tips to visit these Temples .
Thank you very much for writing such a wonderful experience .
G.Seenivasan,
Rohini, New Delhi.///////

பொறுத்திருங்கள் நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

தமிழ் விரும்பி said...

நகரத்தார் விடுதி பற்றிய நல்ல பலத் தகவல்கள், சரி, நம்பி செல்ல நல்ல வழியைக் காண்பித்திருக்கிறீர்கள். நன்றிகள் ஐயா!
அடுத்தப் பதிவையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்... நன்றி.
அன்புடன்,
ஆலாசியம் கோ.

ரமேஷ் வெங்கடபதி said...

வாத்தியார் அய்யாவிற்கு நன்றிகள்! எந்த வயது காசி செல்ல உகந்தது என்பதையும், காசியில் கர்மங்களோடு,னம்முடைய விருப்பங்கள் சிலவற்றையும் விட வேணும் என்கிறார்களே..அதை பற்றி விளக்கங்களை எதிர்நோக்கி ஆவலுடன்..!

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
காசி யாத்திரைக்கு என ஒரு "மினி"பட்ஜெட்டை போட்டு கொடுத்து விட்டீர்கள் ஐயா!படங்கள் எல்லாம் மிக அருமை.விடுதியில் சமையலறை "கிரைண்டர்" வரை கவனித்து,ரசித்து படங்களை எல்லாம் எடுத்துள்ளீர்கள்!கலக்கல் ஐயா!படங்களிலிருந்தே விடுதியை நன்றாக பராமரிப்பது தெரிகிறது.நல்ல பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா.

kmr.krishnan said...

///மைனர் வகுப்பறை எம் ஆர் ராதா என்றால், நீங்கள் வகுப்பறை எம்,ஜி.ஆரா?:-))))))//

ஹாஹ் ஹாஹா சரியான கிடுக்கிப் பிடி! அந்தக் காலத்தில் 5 வயது சிறுவ‌னாக
'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' போன்ற எம் ஜி ஆர் படங்களையெல்லாம் ஆவலுடன் பார்த்து ரசித்ததுண்டு.

அட்டையில் கத்திசெய்து, வெள்ளித்தாள் எல்லாம் ஒட்டி பக்கத்தாது ஹிந்தி பண்டிட் விஸ்வநாத ஐய‌ர் பையன் மணியுடன் கத்தி ச‌ண்டையெல்லாம் போட்டு இருக்கிறேன்.ஒரு தரம் நான் எம் ஜி ஆர் என்றால் அடுத்தமுறை அவன் எம் ஜி ஆர். 'அட்டைக் கத்தி எம் ஜி ஆர்' என்று பெயர் வாங்கியுள்ளேன்.மூக்கில் ஒழுகும் சளியை எம் ஜி ஆர் பாணியில் ஸ்டெய்லாக துடைத்துக் கொண்டு சண்டை போடுவோம். அதை ஸ்டெய்ல் என்று அறியாத பெரிசுகள் 'மூக்குச்சளி எம் ஜி ஆர்' என்றும் கூப்பிட்டு அவமானப் படுத்தும்.எம் ஜி ஆருக்கு ஏற்ப‌ட்ட பெரிய அவமானமாகக் கருதி அவர்களுடன் சண்டை போடுவோம்.
இது எப்படியிருக்கு?

Radha Sridhar said...

varanasi varalaru, nattukottai satram padangal miga arumai. During last Deepavali, I was fortunate to visit Varanasi and also had good darshan of 'Thanga Visalakshi'(weighing 32 kgs of gold) in Nagarathar Satram Temple. Very nice.
I heard a very inspiring story about Varanasi. Once Visalakshi asked Lord Viswanatha, Prabho, you are telling that whoever has snanam in this 'Punniya Ganga' will attain moksha. So many are visiting Varanasi, but not many no. are arraining moksha, why?" Viswanatha enacts a play, he lies as a dead body on the Ganges shore, Visalakshi is crying and says , whoever has not done any 'papam' can pour water on him, and he will wake up. So many people cross them, no one dares to pour water. In the evening, one young man comes, he says, one minute, I will bathe in this Ganga river, all my sins will go, then I will pour water on him. Then Viswanatha wakes up, tells Visalakshi, whoever has a dip in this sacred Ganga with all prayers and trust in me, will be removed of all the sins and attain moksha.

Ovvoru indhuvum tharisithu avanarul pera vendiya oor.

Vazhga ungal magatthana ezhuthu pani.
Anbudan,
Radha Sridhar

minorwall said...

வழக்கம்போல் இன்றைய செய்தித்தொகுப்பும் படங்களும் அருமை..வாத்தியாருக்கு நன்றி..எனக்கே கூட ஒரு விசிட் அடிச்சுப் பார்த்தா என்ன?ன்னு தோணிச்சு..விசு என்ன சொல்றாருன்னு பார்ப்போம்..

minorwall said...

//தேமொழி said... என்ன செய்வது? மைனராய் இருந்தால் கலாய்ப்பதும் கூடவே பிறந்துவிடும் போலிருக்கிறது :‍)/////

நீங்க மைனரைக் கலாய்க்காம இருந்தா சரிதான்..

minorwall said...

\\\\\ ///////////பாப்ப்போம் நம்ம வகுப்பறை எம் ஆர் ராதா என்ன சொல்கிறார் என்று.
ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும்
என்றும் ஜபத்தைக் கைவிடாத நண்பன்,கே எம் ஆர் கே

/////////// SP.VR. SUBBAIYA said... மைனர் வகுப்பறை எம் ஆர் ராதா என்றால், நீங்கள் வகுப்பறை எம்,ஜி.ஆரா?:-)))))) ////////////////////

எப்படியோ நம்மளை வில்லனாக்கிப் பாத்து அதிலே ரெண்டு ஜீவனுக்கு சந்தோஷம் என்றால் எனக்கு ரொம்ப திருப்தி..ஆனால் ஒரு விஷயம்..என்னை எம் ஆர் ராதா ஆக்கினா சொல்லிப்புட்டேன்..

ஆமாம்..ஒரே டிஷ்யூம்..டிஷ்யூம்..தான்..

புல்லெட் ப்ரூஃப் எல்லாம் வேலைக்காகாது..நெஞ்சுக்குக் குறி வெக்குறது கிடையாது.. கழுத்தைக் கவர் பண்ணப் பாருங்கோ..KMRK சார்..

minorwall said...

//////////////kmr.krishnan said... டெல்லிக்காரவுக சொல்லித்தான் எல்லாம் ஒரு பிளானா நடக்கிறாப் போல இருக்கு.///////////////

செங்கோட்டை எக்ஸ்ப்ரெஸ்ஸிலே குரூப் ரிசெர்வேஷன் அலாட்மென்ட்லே ஏகப்பட்ட தள்ளுமுள்ளு ஆகிப் போச்சாமே.. இதுக்கிடையிலே அவுகளைத்தான் எதிர்கட்சிக்கு ஓட்டுப் போட்டாருன்னு சொல்லி நீங்கதான் 'அபிஷ்ட்டு..அபிஷ்ட்டு' ன்னு சொல்லி தலையிலே தண்ணியத் தெளிச்சுவிட்டுட்டீங்களாமே? மத்தவுங்க எப்பிடியோ நாங்க அவ்வளோ சீக்கிரம் கைவிட்டுறமாட்டோம்..

இந்த தள்ளுமுள்ளு சீன்,பைப்படித் தகராறு இதிலெல்லாம் நேரடியா களம் இறங்குறது நமக்கு வழக்கமில்லை..அதுனாலே (ட்ரெயின் டிக்கெட் என்ன ட்ரெயின் டிக்கெட்)
அவிகளுக்கும் சேர்த்து ஃபிளைட் டிக்கெட்கூட வாங்குவோம்..(கூட்டணி உறுதியாயிட்டா..இப்பத்தானே அச்சாரம் போட்டிருக்கு..)

thanusu said...

தேமொழி said...என்ன செய்வது? மைனராய் இருந்தால் கலாய்ப்பதும் கூடவே பிறந்துவிடும் போலிருக்கிறது :-)

kmr.krishnan said...சரி!சரி! புரிகிறது. டெல்லிக்காரவுக சொல்லித்தான் எல்லாம் ஒரு பிளானா நடக்கிறாப் போல இருக்கு.
பாப்ப்போம் நம்ம வகுப்பறை எம் ஆர் ராதா என்ன சொல்கிறார் என்று.
ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும்

நாங்களும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் .சச்சின் தான் ஏமாற்றுகிறார். நீங்களாவது ஏமாற்றாமல் அடித்து ஆடுங்கள்.

rajakala said...

thank you very very much for all the information about kasi and i have noted down all the details regarding everything

Gee Tax Clinic said...
This comment has been removed by the author.
kmr.krishnan said...

///மகாகவி பாரதி, காசிக்குச் சென்று வந்த பின்புதான் 'பாரதி' என்ற பெயரைப் பயன்படுத்த ஆரம்பித்தார் என்று ஒரு ஆய்வு நூலில் படித்துள்ளேன். 'Bharti' என்ற surname கொண்டவர்கள் உ.பி யின் கிழக்குப் பகுதியில் அதிகம் வாழ்கிறார்கள்.///

பாரதி எப்போது தன் பெயருடன் பாரதியையும் சேர்த்து எழுத ஆரம்பித்தார் என்பது ஆய்வுக்கு உரியதே. நம்மிடையே இருக்கும் பாரதி சாம்ராட் தஞ்சாவூர் பெரியவரும், அவரது அடி ஒற்றி மற்றொரு பாரதிச் சிங்கமாக உருவாகி வரும் சிங்கப்பூர் ஹாலாஸ்யமும்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

ஆனால் பாரதிப் பட்டம் எட்டயபுரம் சமஸ்தானத்தில் கவிஞர்களுக்கு அளிக்கப்படும் பட்டம்.அதனை பாரதிக்கு மிகச் சிறிய வயதிலேயே எட்டயபுரம் அரசர் அளித்துவிட்டார்.அதனை எப்போதுமுதல் உபயோகித்தார்? அதுதான் கேள்வி.

பள்ளியில் படிக்கும் போதே அவர் பாரதி என்று அறியபட்டிருக்கிறார்.

காந்திமதிநாதன் என்ற தமிழாசிரியர் அவருக்கு 'பாரதி சின்னப்பயல்'என்ற ஈற்றடி கொடுத்து வெண்பா பாடச் சொன்னாராம்.

'காந்திமதி நாதனைப் பார் அதிசின்னப்பயல்' என்று முடியும் வெண்பாவை பாரதி ஆசிரியரை இகழ்ந்து உடனே எழுதினாராம்.

ஆசிரியர் வருந்தினாராம்.உடனே மீண்டும்,

'காந்திமதி நாதர்க்கு பாரதி சின்னப்பயல்' என்று ஆசிரியரைப் புகழ்ந்து மாற்றி எழுதினாராம்.

எனவே பாரதி 10 வயது முதல் பாரதியாக அறியப்பட்டு இருக்கலாம்.

எட்டயபுரம் சமஸ்தானத்தில் பாரதி பட்டம் பெற்றவர்கள் சிலர்.

கோபாலகிருஷ்ண பாரதியார்.
சோமசுந்தர பாரதியார்
சுத்தானந்த பாரதியார்

சிங்கமொன்று புறப்பட்டதே என்று சிங்கையாரும், வந்தோமைய்யா வந்தோனம் வந்த சனத்துக்கு வ‌ந்தோனம் என்று தஞ்சபுரீஸ்வரரும் வந்து, அவ்விரு பாடல்களின் முழு வடிவத்தையும், இந்தக் கேள்விக்கான விடையையும் அளித்து அறியாமை இருள் களைந்து நல் வழிப்படுத்துவார்களாக.

பாரதி என்ற 'ச‌ர் நேம்' உள்ளவர்கள் என்ன வகுப்பார் என்று எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். வெளிப்படையாகவே கேட்கிறேன். அவர்கள் என்ன சாதி வகுப்பு?

ananth said...

நல்ல பல தகவல்களைத் தெரிந்துக் கொண்டேன். அகண்ட அலைவரிசைப் பிரச்சினையால் சில நாட்களாக வகுப்பறைக்கு வர முடியாமல் போய் விட்டது. இதற்கு முன்பு வலையேறியவற்றையும் படித்துப் பார்க்கிறேன்.

//எப்படியோ நம்மளை வில்லனாக்கிப் பாத்து அதிலே ரெண்டு ஜீவனுக்கு சந்தோஷம் என்றால் எனக்கு ரொம்ப திருப்தி.//

வில்லன் என்று சாதாரணமாக சொல்லாதீர்கள். வில்லன் இல்லாவிட்டால் கதாநாயனுக்கு வேலையில்லை. பிறகு யாரை அடித்து துவைத்து தன்னுடைய வீர பிரதாபத்தை நிரூபிப்பது. இதில் கொடுமை என்னவென்றால் தனுஷ் போன்ற நோஞ்சான்கள் தடி தடியான 10 வில்லன்களை ஒரே நேரத்தில் அடித்து உதைப்பது போல் காட்டுவதுதான்.

kmr.krishnan said...

//.நெஞ்சுக்குக் குறி வெக்குறது கிடையாது.. கழுத்தைக் கவர் பண்ணப் பாருங்கோ..KMRK சார்..//

இப்போதான் புதுசா குறிவைக்கப் போறாப்பலன்னா பேச்சு இருக்கு.எப்பவுமே யாரைச் சுடலாம்னு கன்னும் கையுமா அலைய வேண்டியது.

எலக்ஷ‌ன்ல உங்க வெற்றிக்கே அந்த துப்பாக்கிச் சூடுதான் முக்கிய காரணம்.
அப்போ ராதாவும் ,பெரியாரும் காமராஜுக்கு ஆதரவு. கழுத்தில் கட்டுடன் எம் ஜி ஆரின் போட்டோதான் பல வின்னிங் ஓட்டுக்களைப் பெற்றுத் தந்தது.

அதை மறந்துவிட வேண்டாம்.

kmr.krishnan said...

//எதிர்கட்சிக்கு ஓட்டுப் போட்டாருன்னு சொல்லி நீங்கதான் 'அபிஷ்ட்டு..அபிஷ்ட்டு' ன்னு சொல்லி தலையிலே தண்ணியத் தெளிச்சுவிட்டுட்டீங்களாமே?//

எதிர்கட்சிக்கு ஓட்டுப்போட்டா போகட்டும் போன்னு விட்டுடலாம். சேம் சைட் கோல்தான் ஏத்துக்க முடியாது.அதான் கொஞ்சம் ஃபீல் பண்ணேன். அதனால் தண்ணி தெளிச்சு விட்டுட்டேன் என்பதெல்லாம் மைனரின் சித்துவிளையாட்டு.

iyer said...

மாவை தட்டில் இட்டு
அவித்தல் என்ற பொருளில்

இட்டு அவி என்பதே
இட்லி ஆனது என சொல்லி கேள்வி...

நீங்கள் குறிப்பிட்டராதா சொல்லும் புட்டு
பாகப் பிரிவினை படத்தில்

அது சரி உங்கள்

கேமிராவிற்கு கண்கள் ஆயிரமமோ
அனைத்தையும் அள்ளி தந்ததுடுச்சே.

நற்பணிகள் செய்ய
நகரத்தார் விடுதியில்

அன்னதானத்திற்கு யாரை அணுகுவது
பணத்தை எப்படி அனுப்புவது என்ற

அந்த குறிப்பை தந்தால்
அதற்கு தயாராக உங்கள் அய்யர்.

வற்றாத அன்பும்
வளமான ஆர்வமும் அந்த

வாய்ப்பை பயன்படுத்தும்
வாளிப்பான மனமும்

தெம்பையும், தொண்டுள்ளத்தையும்
திருவருள் நல்கும் என்ற உறுதியான

வாழ்த்துக்களுடன்
வணக்கங்களையும் தந்து

பசுமையான நினைவுகளை
பத்திரமாக சுமந்து வந்து தந்தமைக்கு

வாள் பிடித்த வீரனாய்..
தோள் கொடுக்கும் தோழனாய்..

வான் உயர நன்றிகளை
வாரித் தருகிறோம்..

iyer said...

///எனக்கே கூட ஒரு விசிட் அடிச்சுப் பார்த்தா என்ன?ன்னு தோணிச்சு..விசு என்ன சொல்றாருன்னு பார்ப்போம்..///

வாருங்கோ மைனர் வாள்
வாருங்கோ போகலாம்..

சாமி நம்பிக்கையெல்லாம் ஓரமா
சமர்த்தா வைச்சுட்டு போகலாம்

trekking spotக்கு தானே போறோம்
rafting கூட சேர்த்துக்கலாம்

கங்கையிருக்கே எல்லாத்தையும் விட
குளிக்கறதுக்கு ஒங்க ஆச்சாரம் ஒன்னும்
தடையில்லையோன்னோ..

பேட்டரியை ரீசார்ஜ் பண்னோம்மோல்யோ அதெப்போலத்தான்

நம்ம ஒடம்பையும் மனசையும்
ரீசார்ஜ் செய்ய வருஷத்துக்கு ஒரு தரம்
கங்கா ஸ்னானம் வேணுமாக்கும்..

அடுத்த இந்தியா பயணத்தின் போது
அய்யர கூப்பிடுங்கோ..
அய்யரையும் கூட்டின்டு போங்கோ..

(சாப்பாட்டு விஷயத்துல அய்யரை கட்டாய படுத்தப்படாது.. அய்யரின் சாப்பாடு தனி ஆமா சொல்லிட்டேன்)

kmr.krishnan said...

//நாங்களும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் .சச்சின் தான் ஏமாற்றுகிறார். நீங்களாவது ஏமாற்றாமல் அடித்து ஆடுங்கள்.//

தட் ஈஸ் தெ ஸ்பிரிட்! இங்க ஜாலியாவும், அதெ சமயத்தில் புதிய செய்திகளையும் சொல்வதும் தான் நமது நோக்கம்.இதப் புரிஞ்சுக்காம முகம் சுளிக்கிறாங்க‌ சில பேர். இப்ப‌டி எழுதும்போது, நமது முக பாவனை தெரிய நேரில் இல்லாததால், சிலசமயம் யாராவது புண்படும்படி ஆகிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை அதனை உடனே மேல் விளக்கத்தாலும், மாப்புக் கேட்டும் சரி செய்து விடுவேன்.

kmr.krishnan said...

//இந்த தள்ளுமுள்ளு சீன்,பைப்படித் தகராறு இதிலெல்லாம் நேரடியா களம் இறங்குறது நமக்கு வழக்கமில்லை..//

இந்த 'பேக் ஸீட் டிரைவிங்' எங்க‌டவாதான் பண்ணுவான்னு பேர் வாங்கி வச்சிருக்கா. நான் சொறது சரியா இல்லையான்னு தட்சிண மேரு ஸ்வாமிகள் கிட்ட கேட்டுப் பாரும். 'பேக் ஸீட் டிரைவிங்'செய்வது எப்படின்னு பொஸ்தகமே போடப்போறாளாம்.

அந்த டெக்னிக் உமக்கு எப்படி மைனர்வாள்? சஹவாச தோஷமோ?

kmr.krishnan said...

//வில்லன் என்று சாதாரணமாக சொல்லாதீர்கள். வில்லன் இல்லாவிட்டால் கதாநாயனுக்கு வேலையில்லை. பிறகு யாரை அடித்து துவைத்து தன்னுடைய வீர பிரதாபத்தை நிரூபிப்பது.//
ஆம் ஆனந்த்!
சிவபெருமானுக்கு தக்ஷனைப்போல,மஹாவிஷ்ணுவுக்கு நரகாசுரனைப்போல,
ராமருக்கு ராவணனைப்போல, கிருஷ்ணருக்கு கம்சனைப்போல, முருகப்பெருமானுக்கு சூரனைப்போல,

நவயுகத்தில் ஹிட்லர், பால்போட், இடி அமீன், சதாம் ஹுசைன், ஒசாமா,
முடிவில்லாத பட்டியல்...

இவர்களைப்போன்ற ஆற்றல் மிக்கவ‌ர்களுடன் மோதுவதுதான் அழகு.

தனுஷ்.. ஹிஹிஹி..தனுஷு? ஹிஹிஹி...

minorwall said...

//////////ananth said... வில்லன் என்று சாதாரணமாக சொல்லாதீர்கள். வில்லன் இல்லாவிட்டால் கதாநாயனுக்கு வேலையில்லை. பிறகு யாரை அடித்து துவைத்து தன்னுடைய வீர பிரதாபத்தை நிரூபிப்பது. இதில் கொடுமை என்னவென்றால் தனுஷ் போன்ற நோஞ்சான்கள் தடி தடியான 10 வில்லன்களை ஒரே நேரத்தில் அடித்து உதைப்பது போல் காட்டுவதுதான்./////////////////

சமீபத்துலே தமிழ்ப்படம் ஏதோ பார்த்துருக்கீன்ங்கன்னு தெரியுது..நான் கடைசியாப் பார்த்தது 'மன்மதன் அம்பு' ..அவரு வுட்ட அம்பே சொதப்பலாகும்போது மத்தவுங்களையெல்லாம் பார்த்து நமக்கேன் வம்பு?

minorwall said...

/////////// kmr.krishnan said...

//இந்த தள்ளுமுள்ளு சீன்,பைப்படித் தகராறு இதிலெல்லாம் நேரடியா களம் இறங்குறது நமக்கு வழக்கமில்லை..//

இந்த 'பேக் ஸீட் டிரைவிங்' எங்க‌டவாதான் பண்ணுவான்னு பேர் வாங்கி வச்சிருக்கா. நான் சொறது சரியா இல்லையான்னு தட்சிண மேரு ஸ்வாமிகள் கிட்ட கேட்டுப் பாரும். 'பேக் ஸீட் டிரைவிங்'செய்வது எப்படின்னு பொஸ்தகமே போடப்போறாளாம்.

அந்த டெக்னிக் உமக்கு எப்படி மைனர்வாள்? சஹவாச தோஷமோ?/////////

நீங்கதான் இந்த ஜென்மத்துக் கலர்(தமிழிலே வேறவார்த்தை போட்டுப் பாருங்க) மாறி மாறி வரும்னு ஒத்துண்டுருக்கேளே?இப்ப என் ஒரிஜினல் கலர் இதுவா இருக்கலாமில்லே?அதான் இப்புடி..எப்புடி

minorwall said...

///////// thanusu said...
தேமொழி said...என்ன செய்வது? மைனராய் இருந்தால் கலாய்ப்பதும் கூடவே பிறந்துவிடும் போலிருக்கிறது :-)

kmr.krishnan said...சரி!சரி! புரிகிறது. டெல்லிக்காரவுக சொல்லித்தான் எல்லாம் ஒரு பிளானா நடக்கிறாப் போல இருக்கு.
பாப்ப்போம் நம்ம வகுப்பறை எம் ஆர் ராதா என்ன சொல்கிறார் என்று.
ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும்

நாங்களும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் .சச்சின் தான் ஏமாற்றுகிறார். நீங்களாவது ஏமாற்றாமல் அடித்து ஆடுங்கள்./////////

அடிச்சு ஆடாம இருந்தாலும் கூட ரவி சாஸ்த்திரி போல 'டக்' ஆகாம 'டொக்' வெச்சுகிட்டு இருந்தா கூட சரிதான?

minorwall said...

/////// iyer said...

///எனக்கே கூட ஒரு விசிட் அடிச்சுப் பார்த்தா என்ன?ன்னு தோணிச்சு..விசு என்ன சொல்றாருன்னு பார்ப்போம்..///

வாருங்கோ மைனர் வாள்
வாருங்கோ போகலாம்..

சாமி நம்பிக்கையெல்லாம் ஓரமா
சமர்த்தா வைச்சுட்டு போகலாம்

trekking spotக்கு தானே போறோம்
rafting கூட சேர்த்துக்கலாம்

கங்கையிருக்கே எல்லாத்தையும் விட
குளிக்கறதுக்கு ஒங்க ஆச்சாரம் ஒன்னும்
தடையில்லையோன்னோ..

பேட்டரியை ரீசார்ஜ் பண்னோம்மோல்யோ அதெப்போலத்தான்

நம்ம ஒடம்பையும் மனசையும்
ரீசார்ஜ் செய்ய வருஷத்துக்கு ஒரு தரம்
கங்கா ஸ்னானம் வேணுமாக்கும்..

அடுத்த இந்தியா பயணத்தின் போது
அய்யர கூப்பிடுங்கோ..
அய்யரையும் கூட்டின்டு போங்கோ..

(சாப்பாட்டு விஷயத்துல அய்யரை கட்டாய படுத்தப்படாது.. அய்யரின் சாப்பாடு தனி ஆமா சொல்லிட்டேன்)//////

அந்த விசுவநாதனே வேளை தந்துட்டதா நினைச்சுக்குறேன்..

ரொம்ப நாளாச்சு..ட்ரெக்கிங் ஸ்பாட் போயி..

மூவர் கூட்டணியாப் போகலாம்..
ஆனா அவரு அங்க வந்தா டபுள் பெட் ரூம் வேணும்ன்னு கேக்குறாரே..யாருக்கா இருக்கும்?இங்கிருந்தே ரெண்டு பேராப் போறாமாதிரி ஐடியா பண்ணி வெச்சுருக்காரா?இல்லே..அங்கே வாத்தியார் சொன்ன சிவப்பு லிஸ்ட்டிலே எதுவும் செலெக்ஷன் பண்ணுவாரா?ஒண்ணுமே புரியலை..

எதுவா இருந்தாலும் வழக்கம் போல மாமிக்கு தெரியாம தப்பிச்சுட்டாருன்னா அவருக்கு வெச்ச பேருக்கு தப்பாம நடந்துக்கிட்டாருன்னு அர்த்தம்..

kmr.krishnan said...

//(சாப்பாட்டு விஷயத்துல அய்யரை கட்டாய படுத்தப்படாது.. அய்யரின் சாப்பாடு தனி ஆமா சொல்லிட்டேன்)//

மறுபடியும் ஒரு பெரியாரை உருவாக்கி கொஞ்ச நஞ்சம் இருக்கிற பிராம‌ண‌
வாசனையையும் கொட்டிக் கவுத்துப்புடலாம்னு திட்டமிட்டு முடிவு செஞ்சாச்சா?

இப்படித்தானே ஒரு மடிச‌ஞ்சி, பெரியாரைக் காசிக்குக் கூட்டிண்டு போயி, தான் மட்டும் பிராமண சத்திரத்துக்குள்ள நுழைஞ்சி, நன்னா சாப்டுட்டு, வெற்றிலையை கொதப்பிண்டு பெரியார் முன்னால வந்து நின்னது? 'எங்க‌யும் சாப்பாடு கிடைக்கல, எனக்கும் இங்கயே சாப்பாடு வாங்கிக்கொடு அய்யரே!'என்று கேட்ட பெரியாருக்கு "அதெல்லாம் தரமாட்டா இங்க. அப் பிராமணா சாப்பிட்டா சேஷ‌மாயிடும். நீ வேற எங்க‌யாவது பாத்துக்கோ" என்று சொல்லி விட்டு உண்ட மயக்கத்தில திண்ணையில கட்டய சாத்தினானே அந்த மடிசஞ்சி, அவன் செய்த மனிதாபிமானம் அற்ற செயலலால‌ தானே இன்னிக்கு வரைக்கும் நாம கஷ்டப்படரோம்? பெரியாரை அன்னிக்கு எச்சிலை எடுத்து சாப்பிடப் பண்ணிய பாவத்துக்கு அவன் ரெள‌ரவாதி நரகத்தில கல்பகோடி வருஷம் கஷ்டப்படுவான். இது என் சாபம்.

இந்த பந்தின போஜன விஷயத்திலயும், சுத்தம் பாக்கிறோம் என்று மற்றவர்களுடைய மன‌ம் புண்படுமா என்ற எண்ண‌மே இல்லாம பப்ளிகுல‌
நம்முடைய சுத்தத்தை நிலைநாட்ட எண்ணுவதாலும்தான் நாம் தவறாகப்புரிந்து கொள்ளப்படுகிறோம்.

நம்மிடம் இருக்கும் எவ்வளவோ நல்லது இந்த‌ ரெண்டு பாயின்ட்டால ஒன்றுக்கும் உதவாமப் போயிடறது.

என்னமோ தோணித்து சொல்லிட்டேன். மனசுல வைச்சுக்கத் தெரியாது.

kmr.krishnan said...

//எதுவா இருந்தாலும் வழக்கம் போல மாமிக்கு தெரியாம தப்பிச்சுட்டாருன்னா அவருக்கு வெச்ச பேருக்கு தப்பாம நடந்துக்கிட்டாருன்னு அர்த்தம்..//

காசிக்குப்போயிமா சிவப்பு விளக்குப் பகுதியப் பத்தி நெனைப்பு? இதுதான் 'காசிக்குப்போனாலும் கர்மம் தொலையாது' என்று சொல்லி வச்சிருக்கா பெரியவா!

போகட்டும்.

எனக்கு 3 பெண்கள். அதனாலே எங்களுக்குப் பின்னால கர்மா செய்ய யரும் இல்ல. அதப் பத்திக் கவலைபடவும் இல்ல. அதனால் அந்த மயானத் தலைநகர்ல போயி உயிரை விட்டுட்டா மறு பிற‌ப்பு இல்லைன்னு நம்பரதால மாமியோட அங்க போயிடலாமா என்று நப்பாசை.

என்ன கஷ்டம்னாலும், தினம் என்னைப் போட்டு மாமி என்னைப் பிராண்டினாலும் 'கஷ்டத்திலயும் நஷ்டத்திலயும் நா உன் கூட இருப்பேன்' என்று அக்கினி சாட்சியா கையப் பிடிச்சுட்டேனோ இல்லியோ அதனால அந்த சத்தியம் தவறாப் போகாமப் பாத்துப்பேன்.

iyer said...

///இந்த பந்தின போஜன விஷயத்திலயும், சுத்தம் பாக்கிறோம் என்று மற்றவர்களுடைய மன‌ம் புண்படுமா என்ற எண்ண‌மே இல்லாம பப்ளிகுல‌
நம்முடைய சுத்தத்தை நிலைநாட்ட எண்ணுவதாலும்தான் நாம் தவறாகப்புரிந்து கொள்ளப்படுகிறோம்.///

மன்னிக்க..
உங்கள் அன்பு அய்யர் சொல்வது
சுத்தமோ.. ஆச்சாரமோ இல்லை..

அய்யரின் உணவு முறைகள் ஏற்கனவே சொல்லியது தான்..

சுமார் 26 வருடமாக டீ காபி சாப்பிடுவதில்லை

மோர் பால் தயிர் போன்ற பால் பொருட்கள் இல்லை..

சுமார் 12 வருடமாக காரம் சாப்பிடுவதில்லை

சுமார் 8 வருடமாக புளி பொருட்களை சாப்பிடுவதில்லை

சுமார் 2 வருடமாக உப்பு சாப்பிடுவதில்லை.. (வேர்கடலை சாப்பிடும் போது சிலசமயம் தவிர்க்க முடிவதில்லை..)

இனிப்பு பொருட்கள் சர்க்கரை வெல்லம் கிடையாது

இயற்கையாக கிடைக்கும் அறுசுவையை சுவைத்துப் பழகி விட்டது நாக்கு..

அய்யரின் திருக்கயிலாய பயணத்தின் போது 20 நாட்களுக்கான அய்யரின் சாப்பாடு மட்டுமே அய்யருக்கு அதிக லக்கேஜ்ன்னு சொல்லித்தான் ஆகனும்

இதை சுத்தம் ஆச்சாரம் என்று சொல்வது என்றால் அதற்கு அய்யர் என்ன செய்வார்...?

மென்மைதான் வெல்லும்
மேன்மைக்கு துணை நிற்கும்..

பல் வன்மையானது ஒரு காலத்திற்கு பிறகு உடைந்து(உடைபட்டுவிடும்) அல்லது விழுந்து விடும்,,

நாக்கு மென்மையானது
இறுதி வரை நிலைத்து நிற்கும்..

சொல் என்பது ஒரு கல்
அதனை கவணமாக பயன் படுத்தவேண்டும் என்ற தகவலுடன்

அன்பு வணக்கங்களும் வாழ்த்துக்களும்..

kmr.krishnan said...

//நீங்கதான் இந்த ஜென்மத்துக் கலர்(தமிழிலே வேறவார்த்தை போட்டுப் பாருங்க) மாறி மாறி வரும்னு ஒத்துண்டுருக்கேளே?இப்ப என் ஒரிஜினல் கலர் இதுவா இருக்கலாமில்லே?அதான் இப்புடி..எப்புடி//

பரவாயில்லையே! தத்துவததை கொஞ்சம் புரிஞ்சுண்ட மாதிரி இருக்கே!

ஐயா பிளாக் படிச்சதனாலயா? இல்ல ஏதாவது குரு பீடம், மீசை சுவாமிகள், ஆசையானந்தா அப்படின்னு யார் கிட்டயாவது உபதேசமா?

நம்ப முடியாதுங்காணும். மஞ்சள் துண்டு இன்று வரைக்கும் மர்ம‌மாவே இருக்கோல்லியோ? சத்ய சாயி பாபாவே வீடு தேடிப்போய் தரிசிக்கிற‌ அளவு விஷயாதி அல்லவா? உமக்கும் அதெல்லாம் இல்லாம இருக்குமா?

நமக்கேன் வம்பு.எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ? ஆர் கண்டா?

சிவ, சிவ, ஆமையை கவுத்தி போட்டு அடிச்சா சாகும். இதை என் வாயால் சொல்லுவானேன்? என் வேலையப் பாத்துண்டு போறேன்.

kmr.krishnan said...

//அடிச்சு ஆடாம இருந்தாலும் கூட ரவி சாஸ்த்திரி போல 'டக்' ஆகாம 'டொக்' வெச்சுகிட்டு இருந்தா கூட சரிதான?//

டொக் வைக்கிறதுதான் 5 நாள் ஆட்டத்தோட, டெஸ்ட் மேட்ச்சின் அடிப்படை. டொக் வைக்கிறத்தால ஜெயிக்காட்டாலும் டிரா பண்ண முயற்சிக்கலாம்.ஆக‌வே நீங்க டெஸ்ட் மேட்ச் ஆடினா டொக் வைப்பது நல்ல ஆட்டமாக ரசிக்கப்படும்.

அதிரடியா அடிக்கிறது ஒரு நாள் மேட்சுக்கு.ரன் வந்தா வரட்டும், வராட்ட போகட்டும்.பாக்கிறவனுக்கு அந்த நேர சுவாரஸ்யமே முக்கிய‌ம்.

டெஸ்ட் மேட்ச் தியாகராஜ கீர்த்தனை கேட்பது போல.
ஒரு நாள் ஆட்டம் "குறத்தி வாடி என் குப்பி...ஹ.ஹ.ஹ."பாட்டுப் போல.

யார் யாருக்கு எது பிடிக்குமோ அதை எடுத்துக்கலாம்.சர்வ சுதந்திரம்.

மைனரின் டொக் ஒவ்வொண்ணும் ஒரு புதுக் கோணத்தை உண்டாக்கும். அந்த வகையில் அவருடை டொக் ஆட்டத்திற்கு ரசிகன் நான்.

kmr.krishnan said...

//சொல் என்பது ஒரு கல்
அதனை கவணமாக பயன் படுத்தவேண்டும் என்ற தகவலுடன் //

இப்படி விவராமாச் சொன்னாதானே புரியுது!இத்தனை நாளும் 'காப்பி சாப்பிட மாட்டோம்னு', சப்பிடுவோம்னு சொல்றவாளுக்கு பதிலாச் சொல்லிண்டு
அய்யருக்குள்ள இருக்கிறது என்னன்னே தெரியாம, அவனவன் மூளையைப் போட்டுக் கசக்கிண்டு, சுத்தல்ல உட்டுண்டு இருக்கிறதாலதான் கல்லை மாமர‌த்து மேல உட்டு எரிஞ்ச்சோம். மாங்காய் விழுந்தது எங்கள் அதிர்ஷ்டமே.

பெரியார் சம்பவம் சொல்லியது எதற்காக என்றால் அந்த ஒரு ஆஷாடபூதிய வச்சி ஒரு குலததையே பெரியார் தூஷணை பண்ணிட்டார் என்பதை வெளிக்கொணரவே.

நான் எல்லாம் திரைய சட்டுன்னு இழுத்துடர‌ ஆளு. அய்யர் கொஞ்சம் மெதுவா இழுக்கிறார் போல.பரவாயில்லை.

தனிப்பட்ட வகையில் எதையும் மனதில் கொள்ள வேண்டாம். அய்யர் மனம் புண்படுத்தும் நோக்கம் இல்லை.புண்பட்டிருந்தால் க்ஷமிக்கணும்.
வெள்ளைப் புறா பற‌க்க விட்டாச்சு.

kmr.krishnan said...

//சுமார் 26 வருடமாக டீ காபி சாப்பிடுவதில்லை
மோர் பால் தயிர் போன்ற பால் பொருட்கள் இல்லை..
சுமார் 12 வருடமாக காரம் சாப்பிடுவதில்லை
சுமார் 8 வருடமாக புளி பொருட்களை சாப்பிடுவதில்லை
சுமார் 2 வருடமாக உப்பு சாப்பிடுவதில்லை.. (வேர்கடலை சாப்பிடும் போது சிலசமயம் தவிர்க்க முடிவதில்லை..)
இனிப்பு பொருட்கள் சர்க்கரை வெல்லம் கிடையாது
இயற்கையாக கிடைக்கும் அறுசுவையை சுவைத்துப் பழகி விட்டது நாக்கு..//

முன்பே அய்யர் சொன்னதை கவனத்தில் வைக்க‌வில்லை. வகுப்பறையில் கொஞ்சம் கவனக் குறைவாக இருக்கிற மாணவன் நான்.ஏதோ துண்டு துண்டாக சில செய்திகள் அய்யரிடமிருந்து வந்து குழப்பத்தினை கொடுத்துக்கொண்டே இருந்தன‌. அய்யருடைய சாப்பாட்டினைப் பற்றி முழு விவரம் இப்போதுதான் கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன். முன்னரே பின்னூட்டம் இருந்தால் சுட்டினால் என் கவனக்குறைவுக்காக மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஒரு காந்தியப் பெற்றோருக்குப் பிறந்தவன்.காந்திஜி இயற்கை உணவுப் பழக்கக்காரர். எனவே எங்கள் இல்லத்திலும் அந்த இயற்கை உணவுப்பேச்சு அடிக்கடி வரும்,போகும்.காந்தீயத் தொண்டர்கள்,வினோபாஜி தொண்டர்கள் என்று வீட்டுக்கு எப்போதும் அகில இந்திய அளவில் பல்வேறு மொழிக்காரர்கள் விருந்தாளிகள்.அவர்களுடைய விதவிதமான உணவுப் பழக்கங்களுக்கெல்லாம்
ஈடு கொடுத்தவர் என் தாய்.அதனால் நான் பிறந்ததில் இருந்தே இயற்கை, செயற்கை உணவு முறைகள் எல்லாம் அத்துப்படி.

அய்யர் உணவுப் பழக்கத்தை வகுப்பறை மாண‌வர்கள் உடனே ஏற்று செயல் படுத்தி விட வேண்டாம். அது அவரது 'ஸ்பெஷல் நீட்ஸ்'காக அவர் ஆய்ந்து அறிந்து செயல் படுத்துகிறார்.

உதாரணமாக உப்பை திடீரென நிறுத்தினால் பல பக்க விளைவுகள் உண்டாகும்.
கைகால் சோர்வு, நரம்புத்தளர்ச்சி போன்றவை உண்டாகும்.எனவே உங்கள் குடும்பப் பாரம்பரிய உணவுகளை மாற்றும் முன் நன்கு சிந்திக்கவும். ஒருவருக்கு ஏற்பது மற்றவருக்கு ஏற்காது.

உணவு என்பது சைவம், அசைவம், சமைத்தது, சமைக்காதது என்பதாக மட்டும் நினைக்கக் கூடாது.

வயதுக்கேற்ற உணவு,
வேலைக்கேற்ற உணவு,
தட்ப வெப்ப சூழ‌லுக்கேற்ற உணவு,
தேவைக்கேற்ற உணவு,
பொருளாதாரத்திற்கு ஏற்ற உணவு,
பாரம்பரிய உணவு,
பழக்கப்பட்ட உணவு,
ருசியான உணவு,
கிடைக்ககூடிய உணவு

என்று பிரித்துப் பார்க்க வேண்டும்.

இது பற்றிப் பின்னர் எழுதுகிறேன்.

தற்சமயத்திற்கு அய்யர் கூறும் உண்வு முறை அவருக்கு மட்டுமே உரித்தானது என்று எடுத்துக் கொள்க.அல்லது துறவுக்கேற்ற உணவு என்று கொள்க.

kmr.krishnan said...

My comments in sengovi.blogspot.com
TODAY 26TH NOV 2011

//பயணத்தில் பேசுவது என்பது ஒரு கலை. தனக்குப் பிடித்தை மட்டுமே பேசிக்கொண்டிருந்தால், பேச்சு தொடராது. முதலில் உடன் வருபவருக்கு விருப்பமான விஷயங்கள் என்னவாக இருக்கும் என்று யூகிக்க வேண்டும்.//

Good conversation is one in which both get some information unknowwn to them earlier to that conversation.

நல்ல‌தோர் வர்தமானம், சம்பாஷணை என்பது பேசிக்கொண்டு இருக்கும் இருவரும் அந்த பேச்சின் ஊடே அது வரை தாங்கள் அறியாத செய்தியை அறிந்து கொள்ளல் ஆகும்.

இங்கே சம்பாஷணை என்பதே இல்லை. விதண்டாவாதமாகத் தான் இருக்கிறது.
பேசத் துவங்கினால் அது கைகலப்பில் முடிகிறது. எனவே வீட்டில், அலுவலகத்தில், பொது இடங்களில் மனத்தைக் கனக்க வைக்கும் மெள‌னத்தைச் சுமந்து திரிய வேண்டியுள்ளது.

SP.VR. SUBBAIYA said...

//////Blogger தமிழ் விரும்பி said...
நகரத்தார் விடுதி பற்றிய நல்ல பலத் தகவல்கள், சரி, நம்பி செல்ல நல்ல வழியைக் காண்பித்திருக்கிறீர்கள். நன்றிகள் ஐயா!
அடுத்தப் பதிவையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்... நன்றி.
அன்புடன்,
ஆலாசியம் கோ./////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
வாத்தியார் அய்யாவிற்கு நன்றிகள்! எந்த வயது காசி செல்ல உகந்தது என்பதையும், காசியில் கர்மங்களோடு, நம்முடைய விருப்பங்கள் சிலவற்றையும் விட வேணும் என்கிறார்களே..அதை பற்றி விளக்கங்களை எதிர்நோக்கி ஆவலுடன்..!/////

காசிக்குச் செல்ல வயது வரம்பு எல்லாம் கிடையாது. துணை கிடைத்தால் எந்த வயதிலும் செல்லலாம். ஒரு காய், ஒரு பழத்தை விட வேண்டும்
என்பார்கள். அது எல்லாம் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. அப்படி எல்லாம் எந்த விதிமுறையும் கிடையாது. இருந்தால் தெரிந்தவர்கள்
சொல்லட்டும். நானும் கேட்டுக்கொள்கிறேன்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger R.Srishobana said...
வணக்கம் ஐயா,
காசி யாத்திரைக்கு என ஒரு "மினி"பட்ஜெட்டை போட்டு கொடுத்து விட்டீர்கள் ஐயா!படங்கள் எல்லாம் மிக அருமை.விடுதியில் சமையலறை "கிரைண்டர்" வரை கவனித்து,ரசித்து படங்களை எல்லாம் எடுத்துள்ளீர்கள்!கலக்கல் ஐயா!படங்களிலிருந்தே விடுதியை நன்றாக பராமரிப்பது தெரிகிறது.நல்ல பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா./////

நல்லது. நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger kmr.krishnan said...
///மைனர் வகுப்பறை எம் ஆர் ராதா என்றால், நீங்கள் வகுப்பறை எம்,ஜி.ஆரா?:-))))))//
ஹாஹ் ஹாஹா சரியான கிடுக்கிப் பிடி! அந்தக் காலத்தில் 5 வயது சிறுவ‌னாக
'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' போன்ற எம் ஜி ஆர் படங்களையெல்லாம் ஆவலுடன் பார்த்து ரசித்ததுண்டு.
அட்டையில் கத்திசெய்து, வெள்ளித்தாள் எல்லாம் ஒட்டி பக்கத்தாது ஹிந்தி பண்டிட் விஸ்வநாத ஐய‌ர் பையன் மணியுடன் கத்தி ச‌ண்டையெல்லாம் போட்டு இருக்கிறேன்.ஒரு தரம் நான் எம் ஜி ஆர் என்றால் அடுத்தமுறை அவன் எம் ஜி ஆர். 'அட்டைக் கத்தி எம் ஜி
ஆர்' என்று பெயர் வாங்கியுள் ளேன்.மூக்கில் ஒழுகும் சளியை எம் ஜி ஆர் பாணியில் ஸ்டெய்லாக துடைத்துக் கொண்டு சண்டை போடுவோம். அதை ஸ்டெய்ல் என்று அறியாத பெரிசுகள் 'மூக்குச்சளி எம் ஜி ஆர்' என்றும் கூப்பிட்டு அவமானப் படுத்தும்.எம் ஜி ஆருக்கு ஏற்ப‌ட்ட பெரிய அவமானமாகக் கருதி அவர்களுடன் சண்டை போடுவோம்.
இது எப்படியிருக்கு?/////

இந்த அனுபவம் நீங்கள் சொல்லும் வயதில், அந்தக் காலத்தில் பலருக்கும் இருந்திருக்கும் (எனக்கும் உள்ளது)

SP.VR. SUBBAIYA said...

///////Blogger Radha Sridhar said...
varanasi varalaru, nattukottai satram padangal miga arumai. During last Deepavali, I was fortunate to visit Varanasi and also had good

darshan of 'Thanga Visalakshi'(weighing 32 kgs of gold) in Nagarathar Satram Temple. Very nice//////

ஆமாம். தற்சமயம் அதே எடை அளவில், பலர் கொடுத்த பொருள் உதவியில், தங்கத்தில் “சுவர்ணலிங்கத்தையும்” செய்து கொண்டு

போயிருக்கிறார்கள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////I heard a very inspiring story about Varanasi. Once Visalakshi asked Lord Viswanatha, Prabho, you are telling that whoever has snanam in this 'Punniya Ganga' will attain moksha. So many are visiting Varanasi, but not many no. are arraining moksha, why?" Viswanatha enacts a play, he lies as a dead body on the Ganges shore, Visalakshi is crying and says , whoever has not done any 'papam' can pour water on him, and he will wake up. So many people cross them, no one dares to pour water. In the evening, one young man comes, he says, one minute, I will bathe in this Ganga river, all my sins will go, then I will pour water on him. Then Viswanatha wakes up, tells Visalakshi,
whoever has a dip in this sacred Ganga with all prayers and trust in me, will be removed of all the sins and attain moksha.
Ovvoru indhuvum tharisithu avanarul pera vendiya oor.
Vazhga ungal magatthana ezhuthu pani.
Anbudan,
Radha Sridhar/////

உங்களின் மேலான பாராட்டிற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger minorwall said...
வழக்கம்போல் இன்றைய செய்தித்தொகுப்பும் படங்களும் அருமை..வாத்தியாருக்கு நன்றி..எனக்கே கூட ஒரு விசிட் அடிச்சுப் பார்த்தா என்ன?ன்னு தோணிச்சு..விசு என்ன சொல்றாருன்னு பார்ப்போம்..///////

ஆகா ஒருமுறை (விசிட்) அடித்துப்பாருங்கள் மைனர்! பிறகு நீங்கள் மேஜர் ஆகி விடுவீர்கள்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger minorwall said...
//தேமொழி said... என்ன செய்வது? மைனராய் இருந்தால் கலாய்ப்பதும் கூடவே பிறந்துவிடும் போலிருக்கிறது :‍)/////
நீங்க மைனரைக் கலாய்க்காம இருந்தா சரிதான்..//////

காலாய்ப்பு எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் சுவைக்கும்!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger minorwall said...
\\\\\ ///////////பாப்ப்போம் நம்ம வகுப்பறை எம் ஆர் ராதா என்ன சொல்கிறார் என்று.
ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும்
என்றும் ஜபத்தைக் கைவிடாத நண்பன்,கே எம் ஆர் கே
/////////// SP.VR. SUBBAIYA said... மைனர் வகுப்பறை எம் ஆர் ராதா என்றால், நீங்கள் வகுப்பறை எம்,ஜி.ஆரா?:-)))))) ////////////////////
எப்படியோ நம்மளை வில்லனாக்கிப் பாத்து அதிலே ரெண்டு ஜீவனுக்கு சந்தோஷம் என்றால் எனக்கு ரொம்ப திருப்தி..ஆனால் ஒரு

விஷயம்..என்னை எம் ஆர் ராதா ஆக்கினா சொல்லிப்புட்டேன்..
ஆமாம்..ஒரே டிஷ்யூம்..டிஷ்யூம்..தான்..
புல்லெட் ப்ரூஃப் எல்லாம் வேலைக்காகாது..நெஞ்சுக்குக் குறி வெக்குறது கிடையாது.. கழுத்தைக் கவர் பண்ணப் பாருங்கோ..KMRK

சார்..///////

உங்களை எம் ஆர் ராதா என்று விளித்தவர் லால்குடிக்காரர். நான் அல்ல! அதில் எனக்கு உடன் பாடில்லை
வயதானவர்களுக்கு நீங்கள் ஜெமினி கணேசன்
இளைனர்களுக்கு நீங்கள் உலகநாயகன்
எனக்கு நீங்கள் சூப்பர் ஸ்டார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger minorwall said...
//////////////kmr.krishnan said... டெல்லிக்காரவுக சொல்லித்தான் எல்லாம் ஒரு பிளானா நடக்கிறாப் போல இருக்கு.///////////////
செங்கோட்டை எக்ஸ்ப்ரெஸ்ஸிலே குரூப் ரிசெர்வேஷன் அலாட்மென்ட்லே ஏகப்பட்ட தள்ளுமுள்ளு ஆகிப் போச்சாமே.. இதுக்கிடையிலே
அவுகளைத்தான் எதிர்கட்சிக்கு ஓட்டுப் போட்டாருன்னு சொல்லி நீங்கதான் 'அபிஷ்ட்டு..அபிஷ்ட்டு' ன்னு சொல்லி தலையிலே தண்ணியத்
தெளிச்சுவிட்டுட்டீங்களாமே? மத்தவுங்க எப்பிடியோ நாங்க அவ்வளோ சீக்கிரம் கைவிட்டுறமாட்டோம்..
இந்த தள்ளுமுள்ளு சீன்,பைப்படித் தகராறு இதிலெல்லாம் நேரடியா களம் இறங்குறது நமக்கு வழக்கமில்லை..அதுனாலே (ட்ரெயின் டிக்கெட் என்ன ட்ரெயின் டிக்கெட்)அவிகளுக்கும் சேர்த்து ஃபிளைட் டிக்கெட்கூட வாங்குவோம்..(கூட்டணி உறுதியாயிட்டா..இப்பத்தானே
அச்சாரம் போட்டிருக்கு..)//////

ஆமாம், யென் மற்றும் யூரோ கரன்சியில் பேசுவோம்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger thanusu said...
தேமொழி said...என்ன செய்வது? மைனராய் இருந்தால் கலாய்ப்பதும் கூடவே பிறந்துவிடும் போலிருக்கிறது :-)
kmr.krishnan said...சரி!சரி! புரிகிறது. டெல்லிக்காரவுக சொல்லித்தான் எல்லாம் ஒரு பிளானா நடக்கிறாப் போல இருக்கு.
பாப்ப்போம் நம்ம வகுப்பறை எம் ஆர் ராதா என்ன சொல்கிறார் என்று.
ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும்
நாங்களும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் .சச்சின் தான் ஏமாற்றுகிறார். நீங்களாவது ஏமாற்றாமல் அடித்து ஆடுங்கள்.//////

இதில் சச்சின் யார்? தோனி யார்?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger rajakala said...
thank you very very much for all the information about kasi and i have noted down all the details regarding everything/////

நல்லது. நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

Blogger kmr.krishnan said...
///மகாகவி பாரதி, காசிக்குச் சென்று வந்த பின்புதான் 'பாரதி' என்ற பெயரைப் பயன்படுத்த ஆரம்பித்தார் என்று ஒரு ஆய்வு நூலில் படித்துள்ளேன். 'Bharti' என்ற surname கொண்டவர்கள் உ.பி யின் கிழக்குப் பகுதியில் அதிகம் வாழ்கிறார்கள்.///
பாரதி எப்போது தன் பெயருடன் பாரதியையும் சேர்த்து எழுத ஆரம்பித்தார் என்பது ஆய்வுக்கு உரியதே. நம்மிடையே இருக்கும் பாரதி சாம்ராட் தஞ்சாவூர் பெரியவரும், அவரது அடி ஒற்றி மற்றொரு பாரதிச் சிங்கமாக உருவாகி வரும் சிங்கப்பூர் ஹாலாஸ்யமும்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
ஆனால் பாரதிப் பட்டம் எட்டயபுரம் சமஸ்தானத்தில் கவிஞர்களுக்கு அளிக்கப்படும் பட்டம்.அதனை பாரதிக்கு மிகச் சிறிய வயதிலேயே எட்டயபுரம் அரசர் அளித்துவிட்டார்.அதனை எப்போதுமுதல் உபயோகித்தார்? அதுதான் கேள்வி.
பள்ளியில் படிக்கும் போதே அவர் பாரதி என்று அறியபட்டிருக்கிறார்.
காந்திமதிநாதன் என்ற தமிழாசிரியர் அவருக்கு 'பாரதி சின்னப்பயல்'என்ற ஈற்றடி கொடுத்து வெண்பா பாடச் சொன்னாராம்.
'காந்திமதி நாதனைப் பார் அதிசின்னப்பயல்' என்று முடியும் வெண்பாவை பாரதி ஆசிரியரை இகழ்ந்து உடனே எழுதினாராம்.
ஆசிரியர் வருந்தினாராம்.உடனே மீண்டும்,
'காந்திமதி நாதர்க்கு பாரதி சின்னப்பயல்' என்று ஆசிரியரைப் புகழ்ந்து மாற்றி எழுதினாராம்.
எனவே பாரதி 10 வயது முதல் பாரதியாக அறியப்பட்டு இருக்கலாம்.
எட்டயபுரம் சமஸ்தானத்தில் பாரதி பட்டம் பெற்றவர்கள் சிலர்.
கோபாலகிருஷ்ண பாரதியார்.
சோமசுந்தர பாரதியார்
சுத்தானந்த பாரதியார்
சிங்கமொன்று புறப்பட்டதே என்று சிங்கையாரும், வந்தோமைய்யா வந்தோனம் வந்த சனத்துக்கு வ‌ந்தோனம் என்று தஞ்சபுரீஸ்வரரும் வந்து, அவ்விரு பாடல்களின் முழு வடிவத்தையும், இந்தக் கேள்விக்கான விடையையும் அளித்து அறியாமை இருள் களைந்து நல் வழிப்படுத்துவார்களாக.//////

பாரதியாரைப் பற்றிய மேலதிகத் தகவலகளுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger ananth said...
நல்ல பல தகவல்களைத் தெரிந்துக் கொண்டேன். அகண்ட அலைவரிசைப் பிரச்சினையால் சில நாட்களாக வகுப்பறைக்கு வர முடியாமல் போய் விட்டது. இதற்கு முன்பு வலையேறியவற்றையும் படித்துப் பார்க்கிறேன்.
//எப்படியோ நம்மளை வில்லனாக்கிப் பாத்து அதிலே ரெண்டு ஜீவனுக்கு சந்தோஷம் என்றால் எனக்கு ரொம்ப திருப்தி.//
வில்லன் என்று சாதாரணமாக சொல்லாதீர்கள். வில்லன் இல்லாவிட்டால் கதாநாயனுக்கு வேலையில்லை. பிறகு யாரை அடித்து துவைத்து தன்னுடைய வீர பிரதாபத்தை நிரூபிப்பது. இதில் கொடுமை என்னவென்றால் தனுஷ் போன்ற நோஞ்சான்கள் தடி தடியான 10 வில்லன்களை ஒரே நேரத்தில் அடித்து உதைப்பது போல் காட்டுவதுதான்.//////

ஆமாம். அதனால்தான் நான் இப்போது வரும் புதுப்படங்களைப் பார்ப்பதில்லை! நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger kmr.krishnan said...
//எதிர்கட்சிக்கு ஓட்டுப் போட்டாருன்னு சொல்லி நீங்கதான் 'அபிஷ்ட்டு..அபிஷ்ட்டு' ன்னு சொல்லி தலையிலே தண்ணியத் தெளிச்சுவிட்டுட்டீங்களாமே?//
எதிர்கட்சிக்கு ஓட்டுப்போட்டா போகட்டும் போன்னு விட்டுடலாம். சேம் சைட் கோல்தான் ஏத்துக்க முடியாது.அதான் கொஞ்சம் ஃபீல் பண்ணேன். அதனால் தண்ணி தெளிச்சு விட்டுட்டேன் என்பதெல்லாம் மைனரின் சித்துவிளையாட்டு.///////

வேண்டுமென்று அவர் சேம்சைட் கோல் போடவில்லை. தவறிவிஒட்டது. அதை நீங்கள் கவனிக்கவில்லை!

SP.VR. SUBBAIYA said...

Blogger iyer said...
மாவை தட்டில் இட்டு
அவித்தல் என்ற பொருளில்
இட்டு அவி என்பதே
இட்லி ஆனது என சொல்லி கேள்வி...
நீங்கள் குறிப்பிட்டராதா சொல்லும் புட்டு
பாகப் பிரிவினை படத்தில்
அது சரி உங்கள்
கேமிராவிற்கு கண்கள் ஆயிரமமோ
அனைத்தையும் அள்ளி தந்ததுடுச்சே.
நற்பணிகள் செய்ய
நகரத்தார் விடுதியில்
அன்னதானத்திற்கு யாரை அணுகுவது
பணத்தை எப்படி அனுப்புவது என்ற
அந்த குறிப்பை தந்தால்
அதற்கு தயாராக உங்கள் அய்யர்.
வற்றாத அன்பும்
வளமான ஆர்வமும் அந்த
வாய்ப்பை பயன்படுத்தும்
வாளிப்பான மனமும்
தெம்பையும், தொண்டுள்ளத்தையும்
திருவருள் நல்கும் என்ற உறுதியான
வாழ்த்துக்களுடன்
வணக்கங்களையும் தந்து
பசுமையான நினைவுகளை
பத்திரமாக சுமந்து வந்து தந்தமைக்கு
வாள் பிடித்த வீரனாய்..
தோள் கொடுக்கும் தோழனாய்..
வான் உயர நன்றிகளை
வாரித் தருகிறோம்..////////

பதிவில் கொடுத்துள்ள எண்ணிற்குப் போன் செய்தால் அங்கே உள்ள விடுதி மேலாளர் உங்களுக்கு உதவி செய்வார். ஒருநாள் கட்டளைக்கான தொகை ரூ.நான்காயிரம். பணஓலை அல்லது காசோலை மூலம் வித் பேயீஸ் அக்கவுண்ட் ஒன்லி மார்க்கிங் உடன் அனுப்பவும். அனுப்பியவுடன் எனக்கு மின்னஞ்சல் மூலம் சொல்லுங்கள் நான் அது வந்து சேர்ந்த விவரம் தெரிந்து கொண்டு உங்கள் முகவரிக்கு ரசீது அனுப்பிய விவரத்தையும் சொல்கிறேன். உங்களுடைய தர்ம சிந்தனை வாழ்க! விசாலாட்சி உங்களுக்கு எல்லா நலன்களையும் வழங்குவாள்

SP.VR. SUBBAIYA said...

Blogger iyer said.. ///எனக்கே கூட ஒரு விசிட் அடிச்சுப் பார்த்தா என்ன?ன்னு தோணிச்சு..விசு என்ன சொல்றாருன்னு பார்ப்போம்..///
வாருங்கோ மைனர் வாள்
வாருங்கோ போகலாம்..
சாமி நம்பிக்கையெல்லாம் ஓரமா
சமர்த்தா வைச்சுட்டு போகலாம்
trekking spotக்கு தானே போறோம்
rafting கூட சேர்த்துக்கலாம்
கங்கையிருக்கே எல்லாத்தையும் விட
குளிக்கறதுக்கு ஒங்க ஆச்சாரம் ஒன்னும்
தடையில்லையோன்னோ..
பேட்டரியை ரீசார்ஜ் பண்னோம்மோல்யோ அதெப்போலத்தான்
நம்ம ஒடம்பையும் மனசையும்
ரீசார்ஜ் செய்ய வருஷத்துக்கு ஒரு தரம்
கங்கா ஸ்னானம் வேணுமாக்கும்..
அடுத்த இந்தியா பயணத்தின் போது
அய்யர கூப்பிடுங்கோ..
அய்யரையும் கூட்டின்டு போங்கோ..
(சாப்பாட்டு விஷயத்துல அய்யரை கட்டாய படுத்தப்படாது.. அய்யரின் சாப்பாடு தனி ஆமா சொல்லிட்டேன்)//////

ஆகா ட்ரெக்கிங் எல்லாம் போய்விட்டு வந்து அனுபவத்தை படங்களுடன் எழுதுங்கள். வகுப்பறையில் பதிவாக வெளியிட்டு விடலாம்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
//நாங்களும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் .சச்சின் தான் ஏமாற்றுகிறார். நீங்களாவது ஏமாற்றாமல் அடித்து ஆடுங்கள்.//
தட் ஈஸ் தெ ஸ்பிரிட்! இங்க ஜாலியாவும், அதெ சமயத்தில் புதிய செய்திகளையும் சொல்வதும் தான் நமது நோக்கம்.இதப் புரிஞ்சுக்காம முகம் சுளிக்கிறாங்க‌ சில பேர். இப்ப‌டி எழுதும்போது, நமது முக பாவனை தெரிய நேரில் இல்லாததால், சிலசமயம் யாராவது புண்படும்படி ஆகிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை அதனை உடனே மேல் விளக்கத்தாலும், மாப்புக் கேட்டும் சரி செய்து விடுவேன்./////

அது எங்களுக்குத் தெரியாததா என்ன?:-)))))

SP.VR. SUBBAIYA said...

Blogger kmr.krishnan said...
//இந்த தள்ளுமுள்ளு சீன்,பைப்படித் தகராறு இதிலெல்லாம் நேரடியா களம் இறங்குறது நமக்கு வழக்கமில்லை..//
இந்த 'பேக் ஸீட் டிரைவிங்' எங்க‌டவாதான் பண்ணுவான்னு பேர் வாங்கி வச்சிருக்கா. நான் சொறது சரியா இல்லையான்னு தட்சிண மேரு ஸ்வாமிகள் கிட்ட கேட்டுப் பாரும். 'பேக் ஸீட் டிரைவிங்'செய்வது எப்படின்னு பொஸ்தகமே போடப்போறாளாம்.
அந்த டெக்னிக் உமக்கு எப்படி மைனர்வாள்? சஹவாச தோஷமோ?//////

சஹவாச தோஷமோ என்பது வம்புதானே? பாவம் மைனர் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் சரி!

SP.VR. SUBBAIYA said...

Blogger kmr.krishnan said...
//வில்லன் என்று சாதாரணமாக சொல்லாதீர்கள். வில்லன் இல்லாவிட்டால் கதாநாயனுக்கு வேலையில்லை. பிறகு யாரை அடித்து துவைத்து தன்னுடைய வீர பிரதாபத்தை நிரூபிப்பது.//
ஆம் ஆனந்த்!
சிவபெருமானுக்கு தக்ஷனைப்போல,மஹாவிஷ்ணுவுக்கு நரகாசுரனைப்போல,
ராமருக்கு ராவணனைப்போல, கிருஷ்ணருக்கு கம்சனைப்போல, முருகப்பெருமானுக்கு சூரனைப்போல,
நவயுகத்தில் ஹிட்லர், பால்போட், இடி அமீன், சதாம் ஹுசைன், ஒசாமா,
முடிவில்லாத பட்டியல்... இவர்களைப்போன்ற ஆற்றல் மிக்கவ‌ர்களுடன் மோதுவதுதான் அழகு.//////

ஆனந்த் சொன்னவுடன் ஆனந்தமாக ஒப்புக்கொண்டுவிட்டீர். இதுதான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்!

minorwall said...

////////// SP.VR. SUBBAIYA said...
உங்களை எம் ஆர் ராதா என்று விளித்தவர் லால்குடிக்காரர். நான் அல்ல! அதில் எனக்கு உடன் பாடில்லை
வயதானவர்களுக்கு நீங்கள் ஜெமினி கணேசன்
இளைனர்களுக்கு நீங்கள் உலகநாயகன்
எனக்கு நீங்கள் சூப்பர் ஸ்டார்! //////////
'காசிக்குப் போய் வந்தவரை வணங்கி விழுந்து ஆசி பெறுவது நமது சம்பிரதாயம்..'என்று தஞ்சாவூரார் ஏற்கனவே சொல்லியிருந்தார்..அப்பிடி செய்யாமப் போனது தப்புத்தான்..மன்னிச்சு வுட்டுடுங்க..ஏதோ தெரியாம ஏனோ தானோ ன்னு இருந்துட்டேன்..அதுக்காக இப்படியெல்லாம் கோபப்படக்கூடாது..காசி விசுவநாதா..தெய்வமே..எனக்கு வந்த சோதனையைப் போக்கு ..
வாத்தியார் என்ற தெய்வத்திண்ட தெய்வத்தை வணங்குகிறேன்..போதுமா?

minorwall said...

///////////kmr.krishnan said... நம்ப முடியாதுங்காணும். மஞ்சள் துண்டு இன்று வரைக்கும் மர்ம‌மாவே இருக்கோல்லியோ? சத்ய சாயி பாபாவே வீடு தேடிப்போய் தரிசிக்கிற‌ அளவு விஷயாதி அல்லவா? உமக்கும் அதெல்லாம் இல்லாம இருக்குமா?

நமக்கேன் வம்பு.எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ? ஆர் கண்டா?/////////

இதப் பத்தி மெதுவா விலாவாரியா எழுதணுமின்னு நினைச்சு இருக்கேன்..பார்க்கலாம்..

minorwall said...

///////// kmr.krishnan said... மறுபடியும் ஒரு பெரியாரை உருவாக்கி கொஞ்ச நஞ்சம் இருக்கிற பிராம‌ண‌
வாசனையையும் கொட்டிக் கவுத்துப்புடலாம்னு திட்டமிட்டு முடிவு செஞ்சாச்சா?//////////

இரண்டு திராவிடப் பாரம்பரியப் பெருந்தலைகள் பெயரோட இந்த ஆளைத் தொடர்ந்து ஈடு செய்து பேசுவது தாக்குதலுக்கு உள்ளான ஆளை நெளிய வைக்கிறது..தொடர்ந்து இப்படித் தாக்குதல்களை சமாளிக்க முடியவில்லை..நிராயுதபாணியின் மீது ஒரேயடியாக அம்புகளைச் செலுத்தவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்..

minorwall said...

//////////kmr.krishnan said...
//அடிச்சு ஆடாம இருந்தாலும் கூட ரவி சாஸ்த்திரி போல 'டக்' ஆகாம 'டொக்' வெச்சுகிட்டு இருந்தா கூட சரிதான?//

மைனரின் டொக் ஒவ்வொண்ணும் ஒரு புதுக் கோணத்தை உண்டாக்கும். அந்த வகையில் அவருடை டொக் ஆட்டத்திற்கு ரசிகன் நான்.////////////

டொக்..டொக்..டொக்.........டொக்.

Bala.N said...

intha katturai eppadiyavathu valnalil orumurai sendru vara vendum endru avaal erpadukirathu. katturaiku mikka nandri ayya

SP.VR. SUBBAIYA said...

////////Blogger minorwall said...
//////////ananth said... வில்லன் என்று சாதாரணமாக சொல்லாதீர்கள். வில்லன் இல்லாவிட்டால் கதாநாயனுக்கு வேலையில்லை. பிறகு யாரை அடித்து துவைத்து தன்னுடைய வீர பிரதாபத்தை நிரூபிப்பது. இதில் கொடுமை என்னவென்றால் தனுஷ் போன்ற நோஞ்சான்கள் தடி தடியான 10 வில்லன்களை ஒரே நேரத்தில் அடித்து உதைப்பது போல் காட்டுவதுதான்./////////////////
சமீபத்துலே தமிழ்ப்படம் ஏதோ பார்த்திருக்கீங்கன்னு தெரியுது..நான் கடைசியாப் பார்த்தது 'மன்மதன் அம்பு' ..அவருவுட்ட அம்பே சொதப்பலாகும்போது மத்தவுங்களையெல்லாம் பார்த்து நமக்கேன் வம்பு?/////

இப்படியெல்லாம் சொன்னால் படம் எடுக்கிறவர்கள் கதி என்ன ஆகும்?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger minorwall said...
/////////// kmr.krishnan said...
//இந்த தள்ளுமுள்ளு சீன்,பைப்படித் தகராறு இதிலெல்லாம் நேரடியா களம் இறங்குறது நமக்கு வழக்கமில்லை..//
இந்த 'பேக் ஸீட் டிரைவிங்' எங்க‌டவாதான் பண்ணுவான்னு பேர் வாங்கி வச்சிருக்கா. நான் சொறது சரியா இல்லையான்னு தட்சிண மேரு ஸ்வாமிகள் கிட்ட கேட்டுப் பாரும். 'பேக் ஸீட் டிரைவிங்'செய்வது எப்படின்னு பொஸ்தகமே போடப்போறாளாம்.
அந்த டெக்னிக் உமக்கு எப்படி மைனர்வாள்? சஹவாச தோஷமோ?/////////
நீங்கதான் இந்த ஜென்மத்துக் கலர்(தமிழிலே வேறவார்த்தை போட்டுப் பாருங்க) மாறி மாறி வரும்னு ஒத்துண்டுருக்கேளே?இப்ப என் ஒரிஜினல் கலர் இதுவா இருக்கலாமில்லே?அதான் இப்புடி..எப்புடி//////

இந்தக் ‘கலர்’ சூதாட்டத்திற்கெல்லாம் நான் வரவில்லை!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger minorwall said...
///////// thanusu said...
தேமொழி said...என்ன செய்வது? மைனராய் இருந்தால் கலாய்ப்பதும் கூடவே பிறந்துவிடும் போலிருக்கிறது :-)
kmr.krishnan said...சரி!சரி! புரிகிறது. டெல்லிக்காரவுக சொல்லித்தான் எல்லாம் ஒரு பிளானா நடக்கிறாப் போல இருக்கு.
பாப்ப்போம் நம்ம வகுப்பறை எம் ஆர் ராதா என்ன சொல்கிறார் என்று. ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும்
நாங்களும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் .சச்சின் தான் ஏமாற்றுகிறார். நீங்களாவது ஏமாற்றாமல் அடித்து ஆடுங்கள்./////////
அடிச்சு ஆடாம இருந்தாலும் கூட ரவி சாஸ்த்திரி போல 'டக்' ஆகாம 'டொக்' வெச்சுகிட்டு இருந்தா கூட சரிதானே?/////

ராகுல் திராவிட் அண்ணாச்சியைப்போல கட்டைபோட்டு ஆடினாலும் சரிதான்!

SP.VR. SUBBAIYA said...

Blogger minorwall said...
/////// iyer said...
///எனக்கே கூட ஒரு விசிட் அடிச்சுப் பார்த்தா என்ன?ன்னு தோணிச்சு..விசு என்ன சொல்றாருன்னு பார்ப்போம்..///
வாருங்கோ மைனர் வாள்
வாருங்கோ போகலாம்..
சாமி நம்பிக்கையெல்லாம் ஓரமா
சமர்த்தா வைச்சுட்டு போகலாம்
trekking spotக்கு தானே போறோம்
rafting கூட சேர்த்துக்கலாம்
கங்கையிருக்கே எல்லாத்தையும் விட
குளிக்கறதுக்கு ஒங்க ஆச்சாரம் ஒன்னும்
தடையில்லையோன்னோ..
பேட்டரியை ரீசார்ஜ் பண்னோம்மோல்யோ அதெப்போலத்தான்
நம்ம ஒடம்பையும் மனசையும்
ரீசார்ஜ் செய்ய வருஷத்துக்கு ஒரு தரம்
கங்கா ஸ்னானம் வேணுமாக்கும்..
அடுத்த இந்தியா பயணத்தின் போது
அய்யர கூப்பிடுங்கோ..
அய்யரையும் கூட்டின்டு போங்கோ..
(சாப்பாட்டு விஷயத்துல அய்யரை கட்டாய படுத்தப்படாது.. அய்யரின் சாப்பாடு தனி ஆமா சொல்லிட்டேன்)//////
அந்த விசுவநாதனே வேளை தந்துட்டதா நினைச்சுக்குறேன்.. ரொம்ப நாளாச்சு..ட்ரெக்கிங் ஸ்பாட் போயி..
மூவர் கூட்டணியாப் போகலாம்..
ஆனா அவரு அங்க வந்தா டபுள் பெட் ரூம் வேணும்ன்னு கேக்குறாரே..யாருக்கா இருக்கும்?இங்கிருந்தே ரெண்டு பேராப் போறாமாதிரி ஐடியா பண்ணி வெச்சுருக்காரா?இல்லே..அங்கே வாத்தியார் சொன்ன சிவப்பு லிஸ்ட்டிலே எதுவும் செலெக்ஷன் பண்ணுவாரா?ஒண்ணுமே புரியலை.. எதுவா இருந்தாலும் வழக்கம் போல மாமிக்கு தெரியாம தப்பிச்சுட்டாருன்னா அவருக்கு வெச்ச பேருக்கு தப்பாம நடந்துக்கிட்டாருன்னு அர்த்தம்..//////

அவர் பெயரில் ராமரும் இருக்கிறார். முத்துவும் (பழநிஅப்பனும்) இருக்கிறார்.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
//(சாப்பாட்டு விஷயத்துல அய்யரை கட்டாய படுத்தப்படாது.. அய்யரின் சாப்பாடு தனி ஆமா சொல்லிட்டேன்)//
மறுபடியும் ஒரு பெரியாரை உருவாக்கி கொஞ்ச நஞ்சம் இருக்கிற பிராம‌ண‌
வாசனையையும் கொட்டிக் கவுத்துப்புடலாம்னு திட்டமிட்டு முடிவு செஞ்சாச்சா?
இப்படித்தானே ஒரு மடிச‌ஞ்சி, பெரியாரைக் காசிக்குக் கூட்டிண்டு போயி, தான் மட்டும் பிராமண சத்திரத்துக்குள்ள நுழைஞ்சி, நன்னா சாப்டுட்டு, வெற்றிலையை கொதப்பிண்டு பெரியார் முன்னால வந்து நின்னது? 'எங்க‌யும் சாப்பாடு கிடைக்கல, எனக்கும் இங்கயே சாப்பாடு வாங்கிக்கொடு அய்யரே!'என்று கேட்ட பெரியாருக்கு "அதெல்லாம் தரமாட்டா இங்க. அப் பிராமணா சாப்பிட்டா சேஷ‌மாயிடும். நீ வேற எங்க‌யாவது பாத்துக்கோ" என்று சொல்லி விட்டு உண்ட மயக்கத்தில திண்ணையில கட்டய சாத்தினானே அந்த மடிசஞ்சி, அவன் செய்த மனிதாபிமானம் அற்ற செயலலால‌ தானே இன்னிக்கு வரைக்கும் நாம கஷ்டப்படரோம்? பெரியாரை அன்னிக்கு எச்சிலை எடுத்து சாப்பிடப் பண்ணிய பாவத்துக்கு அவன் ரெள‌ரவாதி நரகத்தில கல்பகோடி வருஷம் கஷ்டப்படுவான். இது என் சாபம்.
இந்த பந்தின போஜன விஷயத்திலயும், சுத்தம் பாக்கிறோம் என்று மற்றவர்களுடைய மன‌ம் புண்படுமா என்ற எண்ண‌மே இல்லாம பப்ளிகுல‌ நம்முடைய சுத்தத்தை நிலைநாட்ட எண்ணுவதாலும்தான் நாம் தவறாகப்புரிந்து கொள்ளப்படுகிறோம்.
நம்மிடம் இருக்கும் எவ்வளவோ நல்லது இந்த‌ ரெண்டு பாயின்ட்டால ஒன்றுக்கும் உதவாமப் போயிடறது.
என்னமோ தோணித்து சொல்லிட்டேன். மனசுல வைச்சுக்கத் தெரியாது.///////

மனசுல வைச்சுக்கத் தெரியாது - அப்படியே இருங்கள். பகவான் பார்த்துக்கொள்வான்

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
//எதுவா இருந்தாலும் வழக்கம் போல மாமிக்கு தெரியாம தப்பிச்சுட்டாருன்னா அவருக்கு வெச்ச பேருக்கு தப்பாம நடந்துக்கிட்டாருன்னு அர்த்தம்..//
காசிக்குப்போயிமா சிவப்பு விளக்குப் பகுதியப் பத்தி நெனைப்பு? இதுதான் 'காசிக்குப்போனாலும் கர்மம் தொலையாது' என்று சொல்லி வச்சிருக்கா பெரியவா!
போகட்டும்.
எனக்கு 3 பெண்கள். அதனாலே எங்களுக்குப் பின்னால கர்மா செய்ய யரும் இல்ல. அதப் பத்திக் கவலைபடவும் இல்ல. அதனால் அந்த மயானத் தலைநகர்ல போயி உயிரை விட்டுட்டா மறு பிற‌ப்பு இல்லைன்னு நம்பரதால மாமியோட அங்க போயிடலாமா என்று நப்பாசை.
என்ன கஷ்டம்னாலும், தினம் என்னைப் போட்டு மாமி என்னைப் பிராண்டினாலும் 'கஷ்டத்திலயும் நஷ்டத்திலயும் நா உன் கூட இருப்பேன்' என்று அக்கினி சாட்சியா கையப் பிடிச்சுட்டேனோ இல்லியோ அதனால அந்த சத்தியம் தவறாப் போகாமப் பாத்துப்பேன்.//////

வாக்கு மூலம் எல்லாம் வேண்டாம். உங்களை நம்புகிறோம்!

SP.VR. SUBBAIYA said...

Blogger iyer said...
///இந்த பந்தின போஜன விஷயத்திலயும், சுத்தம் பாக்கிறோம் என்று மற்றவர்களுடைய மன‌ம் புண்படுமா என்ற எண்ண‌மே இல்லாம பப்ளிகுல‌ நம்முடைய சுத்தத்தை நிலைநாட்ட எண்ணுவதாலும்தான் நாம் தவறாகப்புரிந்து கொள்ளப்படுகிறோம்.///
மன்னிக்க.. உங்கள் அன்பு அய்யர் சொல்வது சுத்தமோ.. ஆச்சாரமோ இல்லை..
அய்யரின் உணவு முறைகள் ஏற்கனவே சொல்லியது தான்..
சுமார் 26 வருடமாக டீ காபி சாப்பிடுவதில்லை மோர் பால் தயிர் போன்ற பால் பொருட்கள் இல்லை..
சுமார் 12 வருடமாக காரம் சாப்பிடுவதில்லைசுமார் 8 வருடமாக புளி பொருட்களை சாப்பிடுவதில்லை
சுமார் 2 வருடமாக உப்பு சாப்பிடுவதில்லை.. (வேர்கடலை சாப்பிடும் போது சிலசமயம் தவிர்க்க முடிவதில்லை..)
இனிப்பு பொருட்கள் சர்க்கரை வெல்லம் கிடையாது இயற்கையாக கிடைக்கும் அறுசுவையை சுவைத்துப் பழகி விட்டது நாக்கு..
அய்யரின் திருக்கயிலாய பயணத்தின் போது 20 நாட்களுக்கான அய்யரின் சாப்பாடு மட்டுமே அய்யருக்கு அதிக லக்கேஜ்ன்னு சொல்லித்தான் ஆகனும் இதை சுத்தம் ஆச்சாரம் என்று சொல்வது என்றால் அதற்கு அய்யர் என்ன செய்வார்...?
மென்மைதான் வெல்லும் மேன்மைக்கு துணை நிற்கும்..
பல் வன்மையானது ஒரு காலத்திற்கு பிறகு உடைந்து(உடைபட்டுவிடும்) அல்லது விழுந்து விடும்,,
நாக்கு மென்மையானது இறுதி வரை நிலைத்து நிற்கும்..
சொல் என்பது ஒரு கல் அதனை கவணமாக பயன் படுத்தவேண்டும் என்ற தகவலுடன்
அன்பு வணக்கங்களும் வாழ்த்துக்களும்..///////

சொல்லைக் கல்லோடு உவமை சொன்ன மேன்மைக்கு நன்றி விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
//நீங்கதான் இந்த ஜென்மத்துக் கலர்(தமிழிலே வேறவார்த்தை போட்டுப் பாருங்க) மாறி மாறி வரும்னு ஒத்துண்டுருக்கேளே?இப்ப என் ஒரிஜினல் கலர் இதுவா இருக்கலாமில்லே?அதான் இப்புடி..எப்புடி//
பரவாயில்லையே! தத்துவததை கொஞ்சம் புரிஞ்சுண்ட மாதிரி இருக்கே!
ஐயா பிளாக் படிச்சதனாலயா? இல்ல ஏதாவது குரு பீடம், மீசை சுவாமிகள், ஆசையானந்தா அப்படின்னு யார் கிட்டயாவது உபதேசமா?
நம்ப முடியாதுங்காணும். மஞ்சள் துண்டு இன்று வரைக்கும் மர்ம‌மாவே இருக்கோல்லியோ? சத்ய சாயி பாபாவே வீடு தேடிப்போய் தரிசிக்கிற‌ அளவு விஷயாதி அல்லவா? உமக்கும் அதெல்லாம் இல்லாம இருக்குமா?
நமக்கேன் வம்பு.எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ? ஆர் கண்டா?
சிவ, சிவ, ஆமையை கவுத்தி போட்டு அடிச்சா சாகும். இதை என் வாயால் சொல்லுவானேன்? என் வேலையப் பாத்துண்டு போறேன்.////

No comments :-)))))

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
//அடிச்சு ஆடாம இருந்தாலும் கூட ரவி சாஸ்த்திரி போல 'டக்' ஆகாம 'டொக்' வெச்சுகிட்டு இருந்தா கூட சரிதான?//
டொக் வைக்கிறதுதான் 5 நாள் ஆட்டத்தோட, டெஸ்ட் மேட்ச்சின் அடிப்படை. டொக் வைக்கிறத்தால ஜெயிக்காட்டாலும் டிரா பண்ண முயற்சிக்கலாம்.ஆக‌வே நீங்க டெஸ்ட் மேட்ச் ஆடினா டொக் வைப்பது நல்ல ஆட்டமாக ரசிக்கப்படும்.
அதிரடியா அடிக்கிறது ஒரு நாள் மேட்சுக்கு.ரன் வந்தா வரட்டும், வராட்ட போகட்டும்.பாக்கிறவனுக்கு அந்த நேர சுவாரஸ்யமே முக்கிய‌ம்.
டெஸ்ட் மேட்ச் தியாகராஜ கீர்த்தனை கேட்பது போல.
ஒரு நாள் ஆட்டம் "குறத்தி வாடி என் குப்பி...ஹ.ஹ.ஹ."பாட்டுப் போல.
யார் யாருக்கு எது பிடிக்குமோ அதை எடுத்துக்கலாம்.சர்வ சுதந்திரம்.
மைனரின் டொக் ஒவ்வொண்ணும் ஒரு புதுக் கோணத்தை உண்டாக்கும். அந்த வகையில் அவருடை டொக் ஆட்டத்திற்கு ரசிகன் நான்./////

ரசிகன் என்பது சரிதான். குறத்தி உதாரணம் போதும்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger kmr.krishnan said...
//சொல் என்பது ஒரு கல்
அதனை கவணமாக பயன் படுத்தவேண்டும் என்ற தகவலுடன் //
இப்படி விவராமாச் சொன்னாதானே புரியுது!இத்தனை நாளும் 'காப்பி சாப்பிட மாட்டோம்னு', சப்பிடுவோம்னு சொல்றவாளுக்கு பதிலாச் சொல்லிண்டு அய்யருக்குள்ள இருக்கிறது என்னன்னே தெரியாம, அவனவன் மூளையைப் போட்டுக் கசக்கிண்டு, சுத்தல்ல உட்டுண்டு இருக்கிறதாலதான் கல்லை மாமர‌த்து மேல உட்டு எரிஞ்சோம். மாங்காய் விழுந்தது எங்கள் அதிர்ஷ்டமே.
பெரியார் சம்பவம் சொல்லியது எதற்காக என்றால் அந்த ஒரு ஆஷாடபூதிய வச்சி ஒரு குலததையே பெரியார் தூஷணை பண்ணிட்டார் என்பதை வெளிக்கொணரவே.
நான் எல்லாம் திரைய சட்டுன்னு இழுத்துடர‌ ஆளு. அய்யர் கொஞ்சம் மெதுவா இழுக்கிறார் போல.பரவாயில்லை.
தனிப்பட்ட வகையில் எதையும் மனதில் கொள்ள வேண்டாம். அய்யர் மனம் புண்படுத்தும் நோக்கம் இல்லை.புண்பட்டிருந்தால் க்ஷமிக்கணும்.வெள்ளைப் புறா பற‌க்க விட்டாச்சு.///////

வெள்ளைப் புறாவை விட வெள்ளைக்கொடி நல்லது!:-)))

SP.VR. SUBBAIYA said...

//////Blogger kmr.krishnan said...
//சுமார் 26 வருடமாக டீ காபி சாப்பிடுவதில்லை
மோர் பால் தயிர் போன்ற பால் பொருட்கள் இல்லை..
சுமார் 12 வருடமாக காரம் சாப்பிடுவதில்லை
சுமார் 8 வருடமாக புளி பொருட்களை சாப்பிடுவதில்லை
சுமார் 2 வருடமாக உப்பு சாப்பிடுவதில்லை.. (வேர்கடலை சாப்பிடும் போது சிலசமயம் தவிர்க்க முடிவதில்லை..)
இனிப்பு பொருட்கள் சர்க்கரை வெல்லம் கிடையாது
இயற்கையாக கிடைக்கும் அறுசுவையை சுவைத்துப் பழகி விட்டது நாக்கு..//
முன்பே அய்யர் சொன்னதை கவனத்தில் வைக்க‌வில்லை. வகுப்பறையில் கொஞ்சம் கவனக் குறைவாக இருக்கிற மாணவன் நான்.ஏதோ துண்டு துண்டாக சில செய்திகள் அய்யரிடமிருந்து வந்து குழப்பத்தினை கொடுத்துக்கொண்டே இருந்தன‌. அய்யருடைய சாப்பாட்டினைப் பற்றி முழு விவரம் இப்போதுதான் கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன். முன்னரே பின்னூட்டம் இருந்தால் சுட்டினால் என் கவனக்குறைவுக்காக மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் ஒரு காந்தியப் பெற்றோருக்குப் பிறந்தவன்.காந்திஜி இயற்கை உணவுப் பழக்கக்காரர். எனவே எங்கள் இல்லத்திலும் அந்த இயற்கை உணவுப்பேச்சு அடிக்கடி வரும்,போகும்.காந்தீயத் தொண்டர்கள்,வினோபாஜி தொண்டர்கள் என்று வீட்டுக்கு எப்போதும் அகில இந்திய அளவில் பல்வேறு மொழிக்காரர்கள் விருந்தாளிகள்.அவர்களுடைய விதவிதமான உணவுப் பழக்கங்களுக்கெல்லாம்
ஈடு கொடுத்தவர் என் தாய்.அதனால் நான் பிறந்ததில் இருந்தே இயற்கை, செயற்கை உணவு முறைகள் எல்லாம் அத்துப்படி.
அய்யர் உணவுப் பழக்கத்தை வகுப்பறை மாண‌வர்கள் உடனே ஏற்று செயல் படுத்தி விட வேண்டாம். அது அவரது 'ஸ்பெஷல் நீட்ஸ்'காக அவர் ஆய்ந்து அறிந்து செயல் படுத்துகிறார்.
உதாரணமாக உப்பை திடீரென நிறுத்தினால் பல பக்க விளைவுகள் உண்டாகும்.
கைகால் சோர்வு, நரம்புத்தளர்ச்சி போன்றவை உண்டாகும்.எனவே உங்கள் குடும்பப் பாரம்பரிய உணவுகளை மாற்றும் முன் நன்கு சிந்திக்கவும். ஒருவருக்கு ஏற்பது மற்றவருக்கு ஏற்காது.
உணவு என்பது சைவம், அசைவம், சமைத்தது, சமைக்காதது என்பதாக மட்டும் நினைக்கக் கூடாது.
வயதுக்கேற்ற உணவு,
வேலைக்கேற்ற உணவு,
தட்ப வெப்ப சூழ‌லுக்கேற்ற உணவு,
தேவைக்கேற்ற உணவு,
பொருளாதாரத்திற்கு ஏற்ற உணவு,
பாரம்பரிய உணவு,
பழக்கப்பட்ட உணவு,
ருசியான உணவு,
கிடைக்ககூடிய உணவு
என்று பிரித்துப் பார்க்க வேண்டும்.
இது பற்றிப் பின்னர் எழுதுகிறேன்.
தற்சமயத்திற்கு அய்யர் கூறும் உண்வு முறை அவருக்கு மட்டுமே உரித்தானது என்று எடுத்துக் கொள்க.அல்லது துறவுக்கேற்ற உணவு என்று கொள்க.//////

துறவும் ஒரு பாக்கியம்தான். வாழ்க அய்யர்! வளர்க அவர் புகழ்! கிடைக்க இறைவனருள் அவருக்கு!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
My comments in sengovi.blogspot.com
TODAY 26TH NOV 2011
//பயணத்தில் பேசுவது என்பது ஒரு கலை. தனக்குப் பிடித்தை மட்டுமே பேசிக்கொண்டிருந்தால், பேச்சு தொடராது. முதலில் உடன் வருபவருக்கு விருப்பமான விஷயங்கள் என்னவாக இருக்கும் என்று யூகிக்க வேண்டும்.//
Good conversation is one in which both get some information unknowwn to them earlier to that conversation.
நல்ல‌தோர் வர்தமானம், சம்பாஷணை என்பது பேசிக்கொண்டு இருக்கும் இருவரும் அந்த பேச்சின் ஊடே அது வரை தாங்கள் அறியாத செய்தியை அறிந்து கொள்ளல் ஆகும்.
இங்கே சம்பாஷணை என்பதே இல்லை. விதண்டாவாதமாகத் தான் இருக்கிறது.
பேசத் துவங்கினால் அது கைகலப்பில் முடிகிறது. எனவே வீட்டில், அலுவலகத்தில், பொது இடங்களில் மனத்தைக் கனக்க வைக்கும் மெள‌னத்தைச் சுமந்து திரிய வேண்டியுள்ளது.//////

முதலில் திகைத்துவிட்டேன். வகுப்பறையில் கைகலப்பிற்கு வழியில்லையே என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது. நீங்கள் பேசிய மேடை வேறு என்பது! அதெல்லாம் இங்கே வேண்டாமே சுவாமி. அரைகுறையாகப் படிப்பவர்களுக்குக் குழப்பத்தை உண்டு பண்ணாதா?!

iyer said...

///பதிவில் கொடுத்துள்ள எண்ணிற்குப் போன் செய்தால் அங்கே உள்ள விடுதி மேலாளர் உங்களுக்கு உதவி செய்வார். ஒருநாள் கட்டளைக்கான தொகை ரூ.நான்காயிரம். ///

தங்கள் தகவலுக்கு நன்றிகள்..
மேலாளர் திருவாளர் பனையப்பனிடம் தொடர்பு கொண்டோம். தொகையினை கணினி வழி அனுப்ப தேவையான தகவல்கலான
கணக்கு எண்.449873099, இந்தியன் வங்கி IFSC No.IDIB000G035 ஆகியவற்றை பெற்றுக் கொண்டோம்.

எமது இன்டெர்நெட் வங்கியில் பெயரை சேர்த்து விட்டோம் வங்கயிலிருந்து approvalக்காள காதிருக்கிறோம். வந்தவுடன் தொகை அனுப்பி வைக்கின்றோம்.

தகவல் தந்தமைக்கு நன்றிகள்..
வழக்கமான வணக்கங்களுடன்
வாழ்த்துக்களும்..

iyer said...

///Blogger kmr.krishnan said...
முன்னரே பின்னூட்டம் இருந்தால் சுட்டினால் என் கவனக்குறைவுக்காக மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.///

மாசில்லா அன்பு மனதிலுள்ளபோது
மன்னிப்பா வேண்டாமே தோழரே

பண்பட்ட மனங்கள் என்றுமே
புண்படாதென்பது தாங்கள் அறிந்ததே

பொடியனுக்கு பதவி தந்து
பெரியவனாக்க வேண்டாமே

அய்யரின் உணவு பழக்கம்
அடுத்தவர் கடைப்பிடிக்க அல்ல

பதிலாக சொல்லுகையில்
பதிவாக வந்த தகவல் .. இது

நமது லால்குடியார் சொன்னதை
நம் பங்கிற்கு வழி மொழிகிறோம்..

//அய்யர் உணவுப் பழக்கத்தை வகுப்பறை மாண‌வர்கள் உடனே ஏற்று செயல் படுத்தி விட வேண்டாம்.

தற்சமயத்திற்கு அய்யர் கூறும் உண்வு முறை அவருக்கு மட்டுமே உரித்தானது என்று எடுத்துக் கொள்க//

iyer said...

///துறவும் ஒரு பாக்கியம்தான். வாழ்க அய்யர்! ///

துறவு என்பதற்கு ஞான வழியை
திறப்பது என பொருள் கொள்ளுதலே

இருப்பதை துறப்பது என்பதல்ல என்று
இந்த அய்யருக்கு ஒரு கருத்து உண்டு

காரின் கதவுகளை அடிக்கடி திறந்து
கடவுளே நான் என்னும் துறவிகள்

கனிசமாக இந்திய திருநாட்டிலும்
கடல்கடந்த வெளிநாட்டிலுமிருப்பதால்

அய்யர் என்றுமே உங்கள் நண்பர்
அன்று போலவே இன்றும்

வாள் பிடிக்கும் வீரனாய்
தோள் கொடுக்கும் தோழனாய்..

அளவற்ற அன்போடும்
பங்கமில்லா பாசத்தோடும்

வளமான வாழ்த்துக்களை
பலமான வணக்கங்களுடன் தெரிவித்து

ஆசை அறுமின் ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்

என்ற திருமூலர் வாக்கை சொல்லும்

இந்த திருக்குறளை
இங்கு பாடுகிறோம்..

அற்றவப் என்பர் அவா அற்றார் மற்றையவர்
அற்றாக அற்றாதிலர்

sairamakoti said...

ஜோதிடர் சுப்பையாவுக்கு ஏகப்பட்ட மாண‌வர்கள் இருந்தாலும் நான் எழுத்தாளர்
சுப்பையாவுக்குதான் ரசிகன். உங்கள் எழுதுக்காகவும் திரு. முத்துராமக்ருஷ்ணன் அவர்கள் எழுத்துக்காகவும் மட்டுமே உங்கள் வலை பதிவின் உறுப்பினன்.
எழுத்தாளர் சோமலெ பயண‌க்கட்டுரைகளிலிருந்து, மணியன், சிவசங்கரி, மற்றும் தற்கால எழுத்தாளர்கள் வரை படித்தாயிற்று. உங்கள் காசி யாத்திரை
மிகச்சிறந்த பயணக்கட்டுரை. மேற்கூறிய மூவர் வரிசையில் சேருகிறீர்கள்
நானும் உஙகளைப்போல் கண்ணதாசனின் தாசன். கவிப்பேரரசு எனக்கு அவர் மட்டும் தான்.
"I insist that you seek and remain in good company"-என்று இன்றைய சிந்தனையில் சத்ய சாய் சொல்லி இருக்கிறார். உஙகளுடனான நல்ல தொடர்பு குரித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
அன்புடன்
சீநி. இராமகோடி.

kmr.krishnan said...

//கணக்கு எண்.449873099, இந்தியன் வங்கி IFSC No.IDIB000G035 ஆகியவற்றை பெற்றுக் கொண்டோம்.//

நன்றி அய்யர் அவர்களே! 2011க்கு என் மனைவியார் பெயரில் அடியேன் அனுப்பி விடுகிறேன்.ஆண்டுக்கு ஒன்றாக அடுத்த ஆண்டுகளில் என் குடும்பதார் அனைவரின் பெயரிலும் அனுப்பி விடுகிறேன். ஏற்கனவே திருப்பதிக்கு அவ்வாறு அனுப்பிய அனுபவம் உண்டு

நானும் ஐயரும் இதனை இங்கே பகிர்வது எங்கள் தானம் செய்யும் மனப்பான்மையை பறை சாற்ற என்று தவறாக அவதானிக்கக் கூடாது.

ஐயா அருமையாக எழுதிய கட்டுரையினால் வந்த மன எழுச்சி. ஐயாவின் எழுத்தாற்றலுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை.

மேலும் எங்களைப்பார்த்து பிறரும் அவ்வாறு செய்தால் முறையாக நடந்து
வரும் அன்னதானம் மேலும் சிறப்பாக நடக்கும்.
ஆகவே அந்த கடல் கடந்து இருப்பவர் 'இமேஜ் பில்டிங் டோய்!'என்று கூப்பாடு போட்டாலும் பரவாயில்லை என்று தான் அதை இங்கே வெளிப்படுத்துகிறோம்.

kmr.krishnan said...

///iyer said...
///துறவும் ஒரு பாக்கியம்தான். வாழ்க அய்யர்! ///

துறவு என்பதற்கு ஞான வழியை
திறப்பது என பொருள் கொள்ளுதலே

இருப்பதை துறப்பது என்பதல்ல என்று
இந்த அய்யருக்கு ஒரு கருத்து உண்டு

காரின் கதவுகளை அடிக்கடி திறந்து
கடவுளே நான் என்னும் துறவிகள்

கனிசமாக இந்திய திருநாட்டிலும்
கடல்கடந்த வெளிநாட்டிலுமிருப்பதால்

அய்யர் என்றுமே உங்கள் நண்பர்///

நன்றி!நன்றி!நன்றி!

திறப்பது என்றவுடன் மஹாகவிதான் நினைவுக்கு வந்தார்

அம்மாக்கண்ணு பாட்டு
======================
“பூட்டைத் திறப்பது கையாலே நல்ல
மனந் திறப்பது மதியாலே”
பாட்டைத் திறப்பது பண்ணாலேஇன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.

ஏட்டைத் துடைப்பது கையாலே மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே,
வேட்டை யடிப்பது வில்லாலேஅன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே. 2

காற்றை யடைப்பது மனதாலே இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலேஉயிர்
துணி வுறுவது தாயாலே.

====மஹாகவி பாரதியார்

kmr.krishnan said...

//sairamakoti said...
ஜோதிடர் சுப்பையாவுக்கு ஏகப்பட்ட மாண‌வர்கள் இருந்தாலும் நான் எழுத்தாளர்
சுப்பையாவுக்குதான் ரசிகன். உங்கள் எழுதுக்காகவும் திரு. முத்துராமக்ருஷ்ணன் அவர்கள் எழுத்துக்காகவும் மட்டுமே உங்கள் வலை பதிவின் உறுப்பினன்.//

நன்றி சாய்ராம்கோடி! பூவோடு சேர்ந்து நாறும் மணம் பெறும் என்பது ஐயாவுடன் சேர்ந்து நானும் இந்தப் பாராட்டைபெற்றேன். அய்யாதான் என் எழுத்தாற்றலை வெளிக் கொணரந்தது.அவருக்கு மீண்டும் வந்தனம்.

iyer said...

///நானும் ஐயரும் இதனை இங்கே பகிர்வது எங்கள் தானம் செய்யும் மனப்பான்மையை பறை சாற்ற என்று தவறாக அவதானிக்கக் கூடாது.

மேலும் எங்களைப்பார்த்து பிறரும் அவ்வாறு செய்தால் முறையாக நடந்து
வரும் அன்னதானம் மேலும் சிறப்பாக நடக்கும்.///

சத்தியமான வாக்கினை மிகச்
சரியாக சொன்னீர்கள்..

அறம் செய விரும்பு என
ஆத்திச் சூடியில் சொன்ன பாட்டி

விரும்பினாலே போதும் செய்யும்
விருப்பம் தானே வரும் என்றார்

நினைக்கும் போதே செய்ய வேண்டும்
நிலை மாறி விட்டால் மனம் மாறிடும்

வெண்குழலுக்கு ஆண்கள் செய்யும்
வெட்டிச் செலவு(?)உடன் ஒப்பிட்டால்

நாள் ஒன்றுக்கு ரூ10 ஒதுக்கி வைத்தால்
நாள் தோறும் அன்ன தானம் சிறக்கும்

ஆண்டுக்கு ஒரு முறை பணம் அனுப்பி
அகம் மகிழ்க.. அங்கு உணவு அருந்தும்

அத்தனை உள்ளங்களும் தரும் வாழ்த்து
அனைவரையும் வாழ்த்தும்.. மனதார

சுந்தரருக்கு பொதிசோறு தந்தஇறைவன்
பரஞ்சோதியில்லத்தில் தந்த விருந்து

அப்பூதியடிகள் இல்லத்தில்
அப்பருக்கு அளிக்கப்பட்ட விருந்து என

பட்டியலிட்டால் பல பக்கங்கள் வரும்
பயனுள்ள ஒரு செயலை ஒரு முறை

செய்ய நம்மால் முடியாதா...
செய்ய வேண்டும் என்பதற்காகவே

கணக்கு எண்ணும் IFSC code numberம்
கவனத்தில் வைக்க தரப்பட்டுள்ளது

தொகை அனுப்பியவர்கள் பட்டியலிட
சொல்லாவிட்டாலும் அனுப்பிவீர்கள்
சொல்லாமலே அனுப்பி இருப்பீர்கள்

என்ற
உறுதியான நம்பிக்கையில்..
உள்ளன்போடு வாழ்த்துகிறோம்

விதை நெல்லை உணவாக்கி
விருந்து படைத்த இளையாங்குடியார்

இதைச் சொல்லும் இத்திருக்குறளை
இந்த வகுப்பில் சிந்தனையாக தந்து..

வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்

விடைபெறுகிறோம்
வணக்கங்களுடன்..

kmr.krishnan said...

///மனதார

சுந்தரருக்கு பொதிசோறு தந்தஇறைவன்
பரஞ்சோதியில்லத்தில் தந்த விருந்து

அப்பூதியடிகள் இல்லத்தில்
அப்பருக்கு அளிக்கப்பட்ட விருந்து என

பட்டியலிட்டால் பல பக்கங்கள் வரும்
பயனுள்ள ஒரு செயலை ஒரு முறை

செய்ய நம்மால் முடியாதா...///

பட்டியலோடு நிற்காமல் அந்த வரலாறுகளையெல்லாம் கட்டுரை ஆக்குங்கள்
ஐயர் அவர்களே!

s m swamy said...

நான் 1977‍ல் காசியில், நாட்டுக்கோட்டை சத்திரத்தில் பெற்றோருடன் 3 நாள் தங்கினேன். அப்பொது கவியரசர் எழுதிய ஒரு வெண்பா சுவரில் பார்த்தேன் அது தங்கள் கண்ணில் படவில்லை போல் தெரிகிறது. அதன் சில வரிகள்:
காடு வெட்டிப்பொட்டு கழனிஎல்லாம் திருத்தி
........................
அன்றைக்கு வந்த எங்கள் அம்மா லட்சுமியே
என்ரறைக்கும் நீங்காதிரு.
முழு பாட்டும் நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

S V Ramakrishnan said...

Dear Sir: Just seen. Most useful info for all Kasi visitors. I am planning to go to Kasi in August with a group, but the info will help us in so many ways. Nicely written and presented. Thanks a lot. Regards. S V Ramakrishnan

Palanisamy Narayanasamy said...

Sir, It is very useful information to the persons who are visiting the Holy VARANASI/ KASI first time,like us.We (my wife and me) have planned to go to KASI on 29-09-2015 and We asked somany persons,who are visited KASI earlier regarding the fecilities available in Kasi but no body gave any useful advice in this regard.Unexpectedly when I saw your informations,my doubts and confusions were gone away. I will write some thing after returning from KASI IDDLI & SAMBAR.

Thanks a lot, sir,
Regards,
N.Palanisamy & Mrs.Jothi Palanisamy.

N.R.லோகநாதன் said...

நான் எனது மனைவியும் 2009ம் ஆண்டு முதல்(ஆண்டிற்கு ஒரு முறை)இந்த ஆண்டு2018வரைதொடர்ந்து காசியாத்திரைசென்று வருகிறோம்(சிலநேரத்தில் குடும்ப நண்பர்களுடன்) நாட்டுகோட்டை சத்திரம் இருப்பதால் பயமின்றி செல்கிறோம் குறைந்த கட்டணம் இருப்பதால் 5 அல்லது 6 நாட்கள் சத்திரத்தில் தங்கி சுற்றி பார்த்து விட்டு சென்னை திரும்புவோம்
(பாதுகாப்பு உள்ள இடம்)எனக்கு தமிழ் மொழி மட்டுமே தெரியும் நீங்களும் வாருங்கள் காசி விஸ்வநாதரை தரிசித்து செல்லுங்கள் அன்புடன்
N.R.லோகநாதன். சென்னை.