மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

12.11.11

முக்கிய அறிவிப்பு!


-------------------------------------------------------------------------------
முக்கிய அறிவிப்பு!

வாத்தியார் வாரணாசிக்குப் பயணம் செல்கின்றார்.

6.8.11 அன்று இறைவனடி சேர்ந்த தன் தாயாரின் அஸ்தியைப் புனித கங்கையில் தன் கையால் சேர்ப்பதற்காக வாத்தியார் அங்கே செல்கிறார். அவருடைய தாயாரின் அஸ்தி அங்கே உள்ள 210 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, மிகப் பெரிய, நகரத்தார் விடுதியில் பாதுகாப்பாக உள்ளது.

 அதனால் 14.11.11 திங்கட்கிழமை முதல் 19.11.11 சனிக்கிழமைவரை ஒருவார காலத்திற்கு வகுப்பறைக்கு விடுமுறை.

விடுமுறையைக் கொண்டாடுவதோடு பழைய பாடங்களை ஒருமுறை புரட்டிப்படியுங்கள்.

வாரணாசியில் இருந்து திரும்பி வந்தவுடன் வாரணாசியைப் பற்றித் தனது கண்ணோட்டத்தில் வாத்தியாரின் சிறப்புக் கட்டுரை ஒன்று வெளியாகும்.

13.11.11 அன்று வரவேண்டிய மாணவர் மலர் அதற்கு அடுத்தவாரம் - அதாவது 21.11.11 அன்று வெளிவரும்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

29 comments:

shylaja said...

காசிநாதனிடம் எனக்கும் சேர்த்துவேண்டிக்கொள்ளுங்கள்...நல்ல
படியாக எல்லாம் முடித்து வாருங்கள்..

SP.VR. SUBBAIYA said...

/////shylaja said...காசிநாதனிடம் எனக்கும் சேர்த்துவேண்டிக்கொள்ளுங்கள்...நல்ல
படியாக எல்லாம் முடித்து வாருங்கள்..///////

நல்லது சகோதரி. என்னுடைய வாரணாசிப் பயணத்திற்குக் கொடிகாட்ட ஒரு சிவபக்தையே வநததில் எனக்கு அளவிலா மகிழ்ச்சி. நன்றி சகோதரி!

sriganeshh said...

sir,
wishing you very smooth and good journey.

Ramani said...

தங்கள் தாயாருக்கான புனிதப் பயணம்
சிறப்புற அமையவும் பெருமைக்குரிய தங்கள் தாயாரின்
ஆன்மா சாந்தியடையவும் நாங்களும் பிரார்த்தித்துக் கொள்கிறோம்

kmr.krishnan said...

"கால கால கால தஹன காசிநாத பாஹிமாம்;
விசாலாக்ஷி அம்ப சஹித விஸ்வநாத ரக்ஷமாம் !"

அம்மாவின் அஸ்தியை கங்கையில் கரைக்கும் போது இதை சொல்லிக் கரையுங்கள் ஐயா!

இதன் பொருள்:

காலம்(யுகங்கள், ஆண்டுகள், மாதங்கள்,வாரங்கள்,நாட்கள், மணி,நிமிடம்,வினாடி, நாழிகை போன்ற காலக்கணக்கு)
மீண்டும் ஒரு காலம் என்பதற்கு யமன் என்று பொருள்

அவ்விரு காலங்களையும் எரித்து 'காலதஹனர்' என்று பெயர் கொண்ட
காசிக்ஷேத்திரத்தின் த்லைவரைப் பணிவோம்

விசாலாட்சி அம்பாளின் துணையுடன் இருக்கும் விஸ்வநாதர்(எல்லா உலகங்களுக்கும் அதிபர்)நம்மைக் காக்க!

தமிழ் விரும்பி said...

///நல்லது சகோதரி. என்னுடைய வாரணாசிப் பயணத்திற்குக் கொடிகாட்ட ஒரு சிவபக்தையே வநததில் எனக்கு அளவிலா மகிழ்ச்சி. நன்றி சகோதரி!////

சிவா பக்தை மாத்திரமா! அன்னை மீனாட்சியே தனது பச்சைக் கிளியை அனுப்பி இருக்கிறாள் பாருங்கள்.
இறைவன் அருளால் எல்லாவற்றையும் நன்றாக முடித்து வாருங்கள் ஐயா!
நன்றி.

அன்புடன்,
ஆலாசியம் கோ.

தேமொழி said...

வாரணாசியைப் பற்றிய வாத்தியாரின் சிறப்புக் கட்டுரைக்கு காத்திருப்போம், நன்றி.

Thanjavooraan said...

சென்று வருக! வாழ்க்கையில் முக்கியமானது 'பித்ருக் கடன்'. அதனை செவ்வனே செய்து முடித்து வாருங்கள். காசியில் நகரத்தார் சத்திரத்துக்கு நான் சென்றிருக்கிறேன். காசி விசாலாக்ஷி அம்மன் ஆலயத்துக்கு குடமுழுக்கு நடந்த நாள் அது. வாரணாசி வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த என்னையும், என் மகன், மகள், மருமகள், பேரக் குழந்தைகள் அனைவரையும் எதிரில் வந்த நகரத்தார் குழுவினர் எங்களை அவசியம் அவர்கள் சத்திரத்துக்கு வந்து உணவு அருந்திச் செல்லும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அப்போது எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

kimu said...

பாத்து பத்தரம போய்டுவாங்க.

thanusu said...

இறைவணக்கம் புரிபவர்க்கு அவன் ஆசி நிறைய உண்டு. தாங்கள் தாயாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

perumal shivan said...

ellaam nallapadiye nadakkum !senruvaarungal ! vaazhththukkal

ravichandran said...

Respected Sir,

Have a safe and blessed journey... I pray for your safe journey.... get blessing from lord viswanath and hope u will continue a lighthouse for us....

I respect and glorify for your mother's love..

RAMADU Family said...

Guru Vanakkam,

Nalla kariyam, Ungal Thayin Aasi endrum ungaludan irukkum.

Ramadu.

SP.VR. SUBBAIYA said...

எனது வாரணாசிப் பயணத்திற்கு ஆசீர்வதித்த மேன்மக்களுக்கும், வாழ்த்துச் சொன்ன நல் உள்ளங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் அவர்களுடைய பின்னூட்டங்களுக்குத் தனிதனியாக நன்றியைத் தெரிவிக்க விருப்பம்தான். நேரம் இன்மையால் அப்படிச் செய்ய முடியவில்லை. நன்றி வணக்கத்துடன்
வாத்தியார்

முருகராஜன் said...

தங்களின் காசி யாத்திரை மூலம் தங்களின் பித்ரு கடன் நிறைவேற அந்த காசியம்பதியை வணங்கி பிரார்த்தனை செய்கிறோம்.

minorwall said...

அம்மையார் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்..

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
தங்களை வாழ்த்தும் அளவிற்க்கு வயது எனக்கில்லை. மிக முக்கியமான கடமையாற்ற செல்லும் தங்களது இந்த பயணம் சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

உண்மைத்தமிழன் said...

வாத்தியாரே..!

இப்போதுதான் படித்தேன்..!

தாயாரின் ஆன்மா சாந்தியாகட்டும்..!

இருந்தவரையில் அன்பு காட்டி கடமையை முடித்தமைக்கு காசிநாதன் என்றென்றும் உங்களுக்கு அருள் புரிவார்..!

LIC SUNDARA MURTHY said...

திரு சுப்பையா தங்கள் தாயாரின் ஆன்மா சாந்தி பெற காசியில் அஸ்தியை கரைக்க செல்லும் தாங்கள் நீடுழி பல்லாண்டு வாழவும் தங்கள் குடும்பத்தார் தங்களது சந்ததியினர் அனைவரும் பல்லாண்டு நோய் நொடி இன்றி இப்போது போல் அனைவருக்கும் தொண்டற்றிட பிரார்ர்த்த னை செய்கிறேன் காசி யாத்திரை முடித்த பின்னர் கயா சென்று முன்னோர்களின் பித்ரு கடனையும் முடித்து பிரயாகை சென்று வருவீர்கள் என்று நம்புகிறேன் தாங்கள் வெளியிட்டுள்ள காசி படங்கள் அருமையாக இருப்பதுடன் அதற்குண்டான ஏற்ப்பாடுடன் சென்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன்
நான் சென்ற காசி கயா பிரயாகை யாத்திரை பற்றிய விபரங்களை கீழ் க ண்ட எனது வலை தளத்தில் பதிவு செய்துள்ளேன்
www.salemscooby.blogspot.com
licsundaramurthy@gmail.com

V Dhakshanamoorthy said...

தங்களின் பயணம் நலமுடனும்,சிறப்போடும் அமைய வேண்டுமென்று ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன் .
தங்களன்புள்ள
வ.தட்சணாமூர்த்தி

RAJ said...

Wish you a Safe Journey !!! May God Bless you !!!

Anonymous said...

ஒன்னும் சரியாக புரியலைங்க சார்.

பல இடங்களில அதனாலயே கமன்டிருக்கமாட்டோம்...

நானும் தங்களின் பயனவேலை இனிதே நடைபெற இறைவனை வேண்டுகிறேன்.

vidya pathi said...

தங்கள் அன்னையின் ஆன்மா சாந்திக்கு பிராத்திக்கிறேன்...!
பயணம் இனிதாகுக...!!

Jawahar Govindaraj said...

அன்னையின் ஆன்மா சாந்தியடைய அந்த காசி நாதரையும் அன்னபூரணியையும் வேண்டுகிறேன்!
-‍ஜவகர் கோவிந்தராஜ்

iyer said...

வளமுடன் வாழ்க..
வழக்கமான நட்புடன்..

kannan said...

வணக்கம் வாத்தியார் ஐயா!

கடந்த சில காலங்களாக அடியேன் தமிழகம் வந்து இருந்தேன் அதனால் தான் வகுப்புக்கு வர முடியாமல் போகி விட்டது .மேலும் முன்னரே தெரிய படுத்தும் அளவிற்கு எமது நிலைமை இல்லை ஐயா .

நன்றி வணக்கம்.

kannan said...

ஐயா!

அடியவனும், அடியவனின் தந்தையார் மரணத்திற்கு (1998) பின்னர் மறு வருடம் ( 1999) காசி சென்று கங்கை ஆற்றில் முழ்கி தர்ப்பணம் கொடுத்து வந்தேன் ஐயா.

சாஸ்திரம் சொல்லி கொடுக்க சரியான ஆள் அமையாததினால் இறைவன் மேல் பாரத்தை போட்டு விட்டு காசி மற்றும் திரிவேணி சங்கமத்தில் தர்ப்பணம் கொடுத்து வந்தேன் ஐயா.

SP.VR. SUBBAIYA said...

திருமதி ஷைலஜா அவர்கள்,
திருவாளர்கள் ஸ்ரீகணேஷ், ரமணி, கே.எம்.ஆர்.கிருஷ்ணன், தமிழ்விரும்பி, தேமொழி, தஞ்சாவூரான வெ. கோபாலன் அவர்கள்,
கிருஷ்ணமூர்த்தி, தனுசு ராசிக்காரன், பெருமாள் சிவன், ரவிச்சந்திரன், ராமுடு, முருகராஜன், மைனர், ஸ்ரீஷோபனா, உண்மைத்தமிழர், எல்.ஐ.சி சுந்தரமூர்த்தி, பாண்டி தக்‌ஷிணாமூர்த்தி, ராஜ், நல்லக்கண்ணு, வித்யாபதி, ஜவஹர் கோவிந்தராஜ், விசுவநாதன் ஐயர், கண்ணன், ஆகிய அனைவருக்கும் நன்றி
என் காசிப் பயணத்திற்கு வாழ்த்துக்கள் சொல்லி வழியனுப்பிய மேன்மைக்கு மிக்க நன்றி
அன்புடன்
வாத்தியார்

kmr.krishnan said...

'சிவயசிவ" பிளாக் நடத்திய சிவத்திரு. ஜானகிராமன் நினைவாகவே உள்ளது.

ஆர்வத்துடன், வெள்ளந்தியாக எழுதத் துவங்கிய அவர் பல காரணங்களால்
வெளியேறிவிட்டார்.அவர் முதன் முதலாக எழுதிய சிவபரமான கட்டுரையை அது
எந்த மூல நூலில் இருந்து எடுத்தாள‌ப்பட்டது என்பதை நான் எடுத்து இயம்பினேன்.அதன் நீட்சியாகவே வீர சைவர் ஒருவர் அவரை அவர் சிவ அபராதம் செய்கிறார் என்று எல்லாம் கூறி வெறுப் பேற்றி விட்டார்.போகட்டும்.
அது பயனற்ற விவாதம்.

'நமசிவாய' கேள்விப் படுகிறோம்.சிலர் 'சிவாயநம' என்கிறார்கள்.பெரும்பாலும்
'சிவயசிவ' நம் காதில் விழுவதில்லை. ஐந்து எழுத்து மந்திரம். இந்த 3 வகையுமே ஐந்து எழுத்துத்தான்.இதில் எது ஜபிக்கப்பட வேண்டிய ஐந்து எழுத்து?

கோவில் வாசலிலே குடியிருந்தும் கெட்டேனே!தஞ்சையில் 38 ஆண்டுகள் வாழ்ந்தும், சேக்கிழார் அடிப்பொடி சைவசித்தாந்தச் செம்மல், ஆதினத்துக்கு ஆங்கிலத்தில் சித்தாந்த ஆய்வு ஜர்னல் ஆசிரிய‌ருமான‌ திருநெய்த்தானம் நடராஜன் ராமச்சந்திரன் அவர்கள் நிழலில் வாழ்ந்தும் சைவ சித்தாந்தம்
கற்றேன் அல்லேன்.வெட்கமாக இருக்கிறது.

ஜானகிராம‌ன் பிளாக்கைப் பார்த்து இது என்ன 'சிவயசிவ'என்று உள்ளது?ஒரு வேளை எழுத்துப் பிழையோ என்று கூட எண்ணினேன். அவரிடம் கேட்டதற்கு
அவரும் ஏதேதோ விளக்கம் சொன்னார். ஒன்றும் புரியவில்லை.சரி எல்லா தத்துவங்களையும் போல இதுவும் புரியாத ஒன்று என்று எண்ணிக்கொண்டு அமைதியானேன்.

1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தஞ்சையில் ஒரு வழகுரைஞர்
'அண்ணாயிசம்'என்ற தத்துவத்தை தானே எழுதி ஊராரிடம் பரப்பினார்.
அவர் பெயருடன் 'அண்ணாயிசம்' என்ற பட்டம் ஒட்டிக் கொண்டதே தவிர தத்துவம் யாருக்கும் போய்ச் சேரவில்லை.

இந்த விஷயம் மனதில் ஊறிக் கொண்டெ இருந்தது. மனம் 'சிவயசிவ' என்று துடிக்க ஆரம்பித்தது.சப்தரிஷீஸ்வரரை பிரதட்சிணம் செய்யும் போது இந்த விஷயம் ஒரு பிரம்மாண்ட மலை போல வந்து என் வழியைத் தடை செய்வதாக உணர்ந்தேன்.இறையருளால் அந்த தத்துவ மலையை ஏறி இறங்கிவிட்டேன்.

ந என்ற எழுத்து இறையின் அருளையும் குறிக்கும்;நம்முள் உள்ள
அழுக்கையும் குறிக்கும் இதனை திரோதானம் என்பர்.முள்ளினை
முள்ளாலாயே எடுப்பது போல் ந‌மது மலங்களைக் களைவ்து திரோதானசத்தி.

ம என்ற எழுத்துதான் நமது வில்லன் எதிரி. ஆணவ‌ம், கன்மம், மாயை
போன்ற நமது மனத் தடைகள். இவற்றால்தான் நாம் இறை அனுபவம்
இன்னது என்று அறியமல் இருக்கிறோம்.

சி பரமசிவன்;

வ சிவனுடன் கலந்துள்ள சக்தி.(இது தனியானது அல்ல். அவனோடு
இரண்டரக் கலந்து இருப்பதே. பெண் வடிவத்தில் கோவிலில் தனியே
இருப்பினும் அது தனி கிடையாது. "உடனுறை"தான்

ய இதுதான் உயிர்கள், நாம்தான்.

நம சிவாய என்றால் மலங்களைக் குறிக்கும் 'ந‌ம' முதலில் நிற்கிறது.
சிவாய நம என்றால் மலங்களைக் குறிக்கும் நம பின்னால் நிற்கிறது.
'சிவயசிவ' வில் நம என்ற மலம் காணவில்லை.

ஆரம்ப நிலையில், நம் குற்றம் குறைகளுடன் இறைவனின் வழிபாடு செய்யும் போது நமசிவாய என்று சொல்லுதல் வேண்டும். உலகப் பற்று நீங்காதோர்.
நமசிவாய சொல்ல வேண்டும்.

உலகப் பற்றினை நீக்கி, ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்ந்து வருவோர் சிவாயநம சொல்லுத‌ல் தகும்.இந்த ஐந்து எழுத்தில் இறைவனுக்கு முதலிடம் கொடுத்து
நமது ஆணவம் முதலியவை கட்டுப்பாட்டுக்குள்.

சிவயசிவ சொல்பவர்கள் மலம் முழுதும் அகற்றிய முற்றும் துறந்தோருக்கான
புனித வாசகம்.

நமசிவாய நமக்கு நல்ல வழியைக் காண்பிக்கக் கூடியது.

"காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது"
நன்னெறி என்பது மார்க்கம், வழி, தடம், பாதை.நல்ல பாதையை காண்பிப்பது
நமசிவாய.அதனைக்கடைப்பிடிக்கும்போது சொல்ல வேண்டியது நமசிவாய.

நல்ல பாதையில் வந்து சிவநெறிச் செல்வர் ஆகி விட்டீர்கள்.இந்தப் பாதைக்கு வந்து தவம் செய்த‌து கூட நான் செய்தது அல்ல. எல்லாம் அவன் செயல் என்ற எண்ணம் மிகும் போது சிவாயநம சொல்லலாம்.

"நானேயோ தவன் செய்தேன்? சிவாயநம எனப்பெற்றென்
தேன் ஆய் இன் அமுதமும் ஆய் தித்திக்கும் சிவபெருமான்
தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தான்
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே"

இறைவன் "என் உளமே புகுந்த அதனால்" என் 'நம' மலம் காணாமல் போய் விட்டது

இறைவனும் இறைவியும் சிவ வழியில் நிற்பவரின் இருபுறமும் இருந்து காப்பர்.சிவ ய சிவ. முன்னரே சொல்லியபடி ய உயிர். உயிருக்கு உள்ளும் புறமும் இரு புறமும் சிவ சிவ. சிவயசிவ.இந்த நிலையை அடைந்தவரே முத்திப்பேறு அடையப் போகும் பாக்கியவான்.

நமசிவாய=ஸ்தூல ஐந்தெழுத்து உலகப் பற்று நீங்காதோருக்கானது..
சிவாயநம=சூட்சும ஐந்தெழுத்து.உலகப்பற்றை நீக்கியவருக்கானது.
சிவயசிவ=மலம் முழுவதும் விட்டு இறைவனோடு சேர்ந்து இடையறாது
இருப்பது