மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

11.11.11

Astrology: கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு மேன்மைக்குரிய மருத்துவர்!

-------------------------------------------------------------------------------------
Astrology: கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு மேன்மைக்குரிய மருத்துவர்!

ஆன்மீகம் cum ஜோதிடக் கட்டுரை

கிழக்குக் கடற்கரைச் சாலை என்றால் தெரியுமல்லவா? தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும்!

East Coast Road (ECR) (Tamil: கிழக்கு கடற்கரை சாலை) is a two lane highway in Tamil Nadu, India, built along the coast of the Bay of  Bengal connecting Chennai to Cuddalore via Puducherry. Presently, the East Coast Road has been extended up to Thoothukudi via Chidambaram, Karaikal, Nagore, Nagapattinam, Thiruthuraipoondi, Muthupet, Adiram pattinam, Meemisal, Thondi, Ramnad. The total length of the road is 690 km from Chennai to Thoothukudi, but as of now work has almost completed till Ramnad, remaining 200 km work on pending.

அந்தப் பெருமை மிகும் கிழக்குக் கடற்கரைச் சாலையின் துவக்கத்தில் ஒரு மருத்துவர் இருக்கிறார். ஃபீஸ் கிடையாது. செலவில்லை. மருந்து விபூதிதான்! அவர் பெயர் அருள்மிகு மருந்தீஸ்வரர். அருள்மிகு என்று போட்டுவிட்டேன். ஆகவே அபத்தமான கேள்விகளுக்கெல்லாம்  இடமில்லை. மீறி அபத்தமாகக் கேட்க விரும்புவர்கள் இடத்தைக் காலி செய்யவும். உங்களுக்கான பதிவு அல்ல இது. இறை நம்பிக்கை  உள்ளவர்களுக்கான பதிவு இது.

மருந்தீஸ்வரர் கோவில் என்றால் எத்தனை பேருக்குத் தெரியும்? திருவான் மியூர் என்றால் அனைவருக்கும் தெரியும். சென்னை சென்ட்ரல் ரயில்
நிலையத்தில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் - தூரத்தில் இருக்கிறது திருவான்மியூர். வங்கக் கடலை ஒட்டியிருக்கும் திருவான்மியூரில் உள்ள மிகப் பெரிய சிவாலயம் மருந்தீஸ்வரர் கோவில். நோய்களைத் தீர்ப்பதற்கென்றே  சிவனார் அவதாரம் எடுத்த கோவில் இது. எந்த நோயையும் போக்கக்கூடிய வலிமை உடையவர் இங்கே உறையும் சிவபெருமான்.அகத்திய
முனிவர் மருந்துகளைப் பற்றியும் மூலிகைகளைப் பற்றியும் சிவனிடம் பாடம் எடுத்துக்கொண்ட ஸ்தலம் இது. அத்துடன் மட்டுமா?  இராமயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் இங்கே வந்து சிவனை வழிபெற்றுச் சென்றதாக வரலாறு கூறுகிறது. (அதற்குச் சான்று கேட்டு  என்னை யாரும் பிறாண்ட வேண்டாம். விக்கி மகராஜாவின் தகவல் சுட்டியைக் கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள்)

வால்மீகி வந்து சென்றதால், திருவால்மீகியூர் என்று பெயர் பெற்ற இவ்வூர் காலப் போக்கில் சொல்வழக்கில் மருவி திருவான்மியூர் என்றாகியதாம்.

தீராத நோயால் அல்லது நோய்களால் வருந்துபவர்கள் ஒருமுறை இத்தலத்திற்குச் சென்று நம்பிக்கையுடன் மனமுருக பிரார்த்தித்து வந்தால்
நோய்கள் தீர்ந்து முற்றிலும் குணமடைவீர்கள். நம்பிக்கைதான் இதில் முக்கியம். வருமுன் காக்க நினைப்பவர்களும் சென்று வரலாம்.

வரும் முன் எப்படித் தெரியும்? வரவிருக்கும் அல்லது எதிர்கொள்ள விருக்கும் ஆறாம் இடத்து நாதனின் திசைதான் அதற்கு அடையாளம்!

1,200 ஆண்டுகளுக்கு முன்பு (ஏழாம் நூற்றாண்டில்) சோழர்கள் காலத்தில் கட்டப்பெற்ற இத்திருக்கோவில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரியார் போன்ற மகான்களால் பாடப் பெற்ற ஸ்தலம் இது.

நாம் பெருமையாக நினைக்கும் சென்னையின் வரலாறு வெறும் 400 ஆண்டுகள்தான். கிழக்கிந்தியக் கம்பெனிக்காரன் வந்து சென்னப்ப
நாயக்கரின் பிரம்மாண்டமான நிலங்களை வளைத்துப்போட்ட பகுதிதான் இன்றைய சென்னை. ஆனால் இக்கோவில் 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனும்போது அதன் வரலாற்றையும், பாரம்பரியத்தையும், பெருமையையும் நீங்கள் அனைவரும் உணரவேண்டும்!

“சார், சென்றவாரம் வைத்தீஸ்வரன் கோவிலைப் பற்றி எழுதினீர்கள். இந்த வாரம் மருந்தீஸ்வரர் கோவிலைப் பற்றி எழுதியுள்ளீர்கள். இரண்டில்
எதற்குச் செல்வது நல்லது?”

“அது உங்கள் வங்கி இருப்பைப் பொருத்தது. இருப்பு அதிகமாக இருந்தால் இரண்டு திருத்தலங்களுக்கும் சென்று வரலாம். இல்லையென்றால்
நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று வரலாம். அதற்கும் வழியில்லை என்றால் சிவன் ஒன்றும் கோவித்துக் கொள்ளமாட்டார். இருக்கும் வீட்டுத் திண்ணையில் இருந்தே அவரை வணங்கி மகிழலாம். திண்ணை இல்லாத வீடு. அடுக்குமாடிக் குடியிருப்பு என்றால் வீட்டுப் பால்கனியில் இருந்தே வழிபடலாம். எல்லாவிதமான வழிபாட்டிற்கும் அவரருள் கிடைக்கும்! அதனால்தான் அவருக்கு Almighty என்று பெயர். இல்லை என்றால் வெறும் Mighty ஆகிப் போயிருப்பார்!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

22 comments:

ananth said...

மீண்டும் தன்வந்திரி, சைவர், வைணவர் என்று ஏதும் சர்ச்சை கிளம்பாமல் இருந்தால் சரி.

என்னைப் போன்று வெளிநாட்டில் இருப்பவர்களும், வீட்டுத் திண்ணையிலோ, பால்கனியிலோ இருந்துக் கும்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

RAMADU Family said...

Guru Vanakkam,

Thanks for the "sthala puranam"

So near ... yet ...

"Thande nugara mandoogam" pola indha perumai theriyama irundhen"

Will visit now

Regards
RAMADU.

தமிழ் விரும்பி said...

அருள்மிகு ஸ்ரீ மருந்தீஸ்வரர் பற்றிய பதிவுக்கு நன்றிகள் ஐயா!
இதில் திருவால்மீகி ஏகிய ஊர் என்பதால் இப்பெயர் என்றத் தகவலும் அறியப்பட்டேன்.
மீண்டும் நன்றி,
அன்புடன்,
ஆலாசியம் கோ

தேமொழி said...

///இல்லையென்றால்
நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று வரலாம். அதற்கும் வழியில்லை என்றால் சிவன் ஒன்றும் கோவித்துக் கொள்ளமாட்டார். இருக்கும் வீட்டுத் திண்ணையில் இருந்தே அவரை வணங்கி மகிழலாம். திண்ணை இல்லாத வீடு. அடுக்குமாடிக் குடியிருப்பு என்றால் வீட்டுப் பால்கனியில் இருந்தே வழிபடலாம். எல்லாவிதமான வழிபாட்டிற்கும் அவரருள் கிடைக்கும்!///

அதுதானே கடவுளுக்கு தெரியாதா நம் நிலைமை. நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி நினைத்தால் எல்லாம் நமக்குள்ளே. கடைசி வரிகள் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம் செல்ல முடியாதவர்களின் மனக்குறைக்கு ஆறுதல் தரும் மருந்து. நன்றி ஐயா.

thanusu said...

வகுப்பறையின் முகப்பில் உள்ள சைடு பாரில் மாணவர் மலர் என்பதற்கு பதிலாக மாண்வர் மலர் என்று இருக்கிறது.

Duraisamy N said...

/--
எல்லாவிதமான வழிபாட்டிற்கும் அவரருள் கிடைக்கும்! அதனால்தான் அவருக்கு Almighty என்று பெயர். இல்லை என்றால் வெறும் Mighty ஆகிப் போயிருப்பார்!
--
நல்ல சிந்தனை.
எல்லா வழிபாடும் முதலில் மனத்தில் (வீட்டில்) இருந்து தொடங்க வேண்டும் என்று உணர்த்தியதற்கு நன்றி.

Govindasamy said...

//எல்லாவிதமான வழிபாட்டிற்கும் அவரருள் கிடைக்கும்! அதனால்தான் அவருக்கு Almighty என்று பெயர். இல்லை என்றால் வெறும் Mighty ஆகிப் போயிருப்பார்!//

ஆகா... இதுதான் வாத்தியார்..

எல்லாவற்றையும் கடந்தவர் கடவுள் என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

arul said...

very nice post sir

Balaji said...

அருமையான பதிவு. தகவலுக்கு நன்றி

இப்படிக்கு
வெங்கட்

ilayaraja said...

காலையில் சிவபெருமானுக்கு பால் அபிசேகம் செய்து அந்த பாலை பக்தர்களுக்கு கொடுப்பார்கள். அந்த பாலை ஒரு மண்டலம் குடித்து வர தீராத நோயும் தீரும் என்பது நம்பிக்கை. காலையில் நடை திறந்த உடன் இது நடக்கும்.

நன்றி சார்

Jagannath said...

இத்தனை வருடங்களாக சென்னையிலிருந்தும் இக்கோவிலுக்குச் சென்றதில்லை. ஆனால் வைத்தீஸ்வரன் கோவில் சென்றிருக்கிறேன். இதுதான் இறைவனின் விளையாட்டு.
இனியாவது இக்கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

இதே போல் கும்பகோணத்தைச் சுற்றியிருக்கும் சோழ நாட்டு நவக்கிரகக் கோவில்களுக்குச் சென்றிருக்கும் நான் சென்னையைச் சுற்றியிருக்கும் தொண்டை மண்டல நவக்கிரகக் கோவில்களைத் தரிசித்ததில்லை.

பொதுவாகச் சென்னைவாசிகள் சென்னையைச் சுற்றியிருக்கும் கோவில்களை விட வெளியூர் கோவில்களுக்கு அதிகமாகச் செல்கிறார்கள். மற்ற ஊர்களிலும் இதே நிலைதானா?

kimu said...

நல்ல பதிவு - நன்றி

முருகராஜன் said...

இன்றைய பக்தி மலரில் மருந்தீஸ்வரர் கோவிலை பற்றிய கட்டுரை தங்களின் தனித்தன்மை வாய்ந்த எழுத்துக்களால் அலங்கரிக்கின்றது.

நன்றி ஐயா.

sasi said...

எனக்கு ரொம்ப மகிழ்சியாக இருக்கிறது. திருவான்மியீர் இல் இருந்த போது வாரத்தில் குறைந்த பட்சம் 4 தடவையாவது போய் வந்திருக்கிறேன். எனக்கு பிடித்த கோவிலும் கூட. திரிபுரசுந்தரி என் இதயத்தில் இருப்பார் எப்போதும். நன்றி.

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
இன்று மிகவும் நல்ல தகவல்களை தெரிந்து கொண்டேன்.மருந்தீஸ்வரர் கோவிலை நோய்களை தீர்க்கும் என்பது மட்டும் தான் நான் அறிந்திருக்கிறேன்,ஆனால் ஸ்தல வரலாற்றை இன்று தான் தெரிந்து கொண்டேன்.ஐயா,நீங்க‌ள் ஆன்மிக‌த்துட‌ன் ஜோதிட‌த்தையும்,மேலும் பல சுவாரசியமான தகவல்களையும் சொல்லி த‌ருவ‌தால் தான் மிக அதிகமான மாணவர்கள் வகுப்பறையில் வந்து பயில்கிறோம்.
ஒவ்வொரு நாளும் வகுப்பறையில் நடத்தும் பாடங்களை என் அம்மாவிடம் தவறாமல் சொல்லி விடுவேன்.மிக்க நன்றி ஐயா!

sriganeshh said...

sir,

1. தலைப்பில் கிழட்டு மருத்துவர் என்று இறைவனைக் குறிப்பிட்டிருப்பது மனதிற்கு என்னவோ போல் இருக்கிறது. ஜீரணிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது. பக்தியின் மிகுதி என எடுத்துக் கொள்வோம் என்றாலும் நாம் இப்படி தலைப்பில் அவரை அழைக்க வேண்டுமா என்று தோன்றுகிறது.

2.இறைவனை எங்கிருந்தாலும் கும்பிடலாம் என்பது சரி. அப்படி என்றால் எதற்காக ஆங்காங்கே வெவ்வேறு பெயர்களில் ஒரு சிவனுக்கு இத்தனை கோவில்கள். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு புராணம், கதை நாம் அறிந்தவை. நாம் அறியாதவை அவற்றின் மூல சக்தி வேறுபாடு. ஆகையால் அந்தந்த கோயில்களுக்கு சென்று வழிபடுவதால் தான் அந்த பலன் பெற முடியும். உதாரணமாக, மதுரை மீனாட்சி, மாதங்கி சொரூபம், திருஆனைக்காவல் அகிலாண்டேஸ்வரி வராகி சொரூபம் ....
சில தினங்களுக்கு முன் ஆசிரியர் பிள்ளை வரம் வேண்டி கிருஷ்ணன் கோயிலுக்கு செல்லவும் என்றார் அப்படி இருக்க என் இப்படி ....

"கிருஷ்ணன்" என்றால் ஒரு பாசம் அதே "சிவன்" என்றால் எப்படி வேண்டுமானாலும் கும்பிடலாம் என்று விதி தளர்த்துதல்.

என் கருத்துரையை மறுப்பு செய்வதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு.

kmr.krishnan said...

//"கிருஷ்ணன்" என்றால் ஒரு பாசம் அதே "சிவன்" என்றால் எப்படி வேண்டுமானாலும் கும்பிடலாம் என்று விதி தளர்த்துதல்.//

இது போல பின்னூட்டங்கள்தான் செய்தி சொல்ல தோதாக அமைகின்ற‌ன. சும்மா வ‌ருகைப் பதிவுகளை விட வாத‌ங்களைக் கிளப்பக் கூடியவையே தேவை.

நமது தெய்வங்களிலேயே மிகவும் இளமையானவர் நடராஜ சிவனே!
அவர் ஆடும் ஆனந்தக் கூத்தை அந்த உரிதிருடியால் ஆடமுடியுமா?
வேண்டுமானால் காளிங்கன் என்ற அப்பாவிப் பாம்பு மீது ஏறி நின்று குதிப்பான். இல்லையென்றால் கோபியருடன் தட்டாமாலை சுற்றுவான்.

நம்ப நடராஜா போல சதாசர்வ காலமும் அவனால் அண்ட சராசரமும் குலுங்க‌ ஆட முடியுமா?

ஹஹ்ஹா! கிருஷ்ண‌ பக்தர்களே இப்ப என்ன சொல்லுவ? இப்ப என்ன பண்ணுவ?

பால சோதிடன் விருத்த வைத்தியன் என்பார்கள்.

ஜோதிடன் இள‌மையாக இருந்தால் மனக்கணக்கு சீக்கிரம் போட்டுப் பலனை சீக்கிரம் சொல்லுவான்.

விருத்த என்றால் வயதான என்று பொருள். ஒரு வைத்தியனுக்கு வயதானால் தான் அனுபவத்தால் நோயின் தன்மை தெரியும்.

அதனால் தான் ஐயா அப்படி மருந்தீஸ்வரனைக் கிழட்டுப்பய(தஞ்சாவூர் தாத்தாவைப் போல) ஆக்கிட்டார்

minorwall said...

///////"கிருஷ்ணன்" என்றால் ஒரு பாசம் அதே "சிவன்" என்றால் எப்படி வேண்டுமானாலும் கும்பிடலாம் என்று விதி தளர்த்துதல். ////////

அதானே?

பிரம்மாஸ்திரம் ஸ்டாக்லே நிறைய வெச்சுருக்கீங்க போலே KMRK சார்..வகுப்பறையில் (இன்டோர்) அங்கங்கே டூர்னமென்ட் லேயும் தொடர்ந்து கலந்துக்குறதாலே KMRK சார்ட்டே எங்கே பிரம்மாஸ்திரம் ஸ்டாக் இருக்காதோ ன்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன்..வூட்டுக் கொல்லையிலே ரகசிய ஆயுத ஃபாக்டரி வெச்சு சொந்தமாத் தயார் பண்றீங்களோ?
ஆனா துரோனாச்சாரியாரையே(வாத்தியார்) லிஸ்ட்லே கொண்டு வந்திருப்பதுதான் கொஞ்சம் புரியலே..

kmr.krishnan said...

///..வூட்டுக் கொல்லையிலே ரகசிய ஆயுத ஃபாக்டரி வெச்சு சொந்தமாத் தயார் பண்றீங்களோ?///

அன்னிக்கு என்னடான்னா ஒருத்தர் புலி லிஸ்டுல சேர்த்துட்டார்.அதுக்கே சர்விலியென்ஸ் ஆரம்பிச்சாச்சு.இன்னிக்கு நீர் என்னை ரகசிய ஆயுத ஃபக்டரியான்னு கோத்து விடறீர்.நாளைக்கு தினத்தந்தியில் என் பேர் வரணும்னு முடிவே பண்ணியாச்சா? அம்மா வேற சட்டப்பேரவையில போட்ட தீர்மானத்தைக் காத்துல பற‌க்க விட்டு மறுபடியும் பால் மாறிடுச்சு.இப்போ இருக்கற அரசாங்கம் தீவிர வாதிகளை தீவிரமா கண்காணிக்கிற அர‌சாங்கம்.உளவுத் துறையில் ஈழத் தமிழர்களின் வலைதளங்களை பின் தொடர ஆள் உள்ளது.ஆயுதம் , ஃபாகடரின்னா வீட்டுக்கு ஆள் வந்துடும்.

அங்க திராவிட இன மானஸ்தர்களோடூ போராட்டம். இங்க 1.பொருளாதாரக் கொள்கைப் போராட்டம் 2.ஒழுக்கம் பற்றிய கொள்கை முடிவுகளோடு போராட்டம்3. இப்போ புதிசா சைவ வைண‌வப் போராட்டம்.
4.எல்லாதையும் மீறி உமது பகடியப் புரிஞ்சுண்டு வேற பதில் சொல்லணும்.
5. தாடி சுவாமிகளை வேற வாட்ச் பண்ணனும்

'இந்த வயசுல சும்மா இருக்கலாமில்லயோ 'கிருஷ்ணா ராமா'ன்னு'மாமிஉபதேசம்;அதற்கு தஞ்சாவூர் பெரியவரோட ஆமோதிப்பு.

எனக்கு என்ன வயசாச்சு மைனர்? இவாள்ளாம் என்னை வயசாச்சு வயசாச்சுன்னு வயசுக்கேத்த பேச்சா பேசுங்கோன்னு சொல்றா. அப்படி ஒரு வயசுக்கேத்த லாங்குவேஜ் இருக்கா?

அந்த துரோணாச்சாரியார் மேட்டர் என் மர மண்டைக்குப் புரியல. இங்க வேண்டமனா நம்ப தாடி சுவாமிகள் பாணில வெள்ளித் திரையில் காண்போம்

minorwall said...

///////'இந்த வயசுல சும்மா இருக்கலாமில்லயோ 'கிருஷ்ணா ராமா'ன்னு'மாமிஉபதேசம்;அதற்கு தஞ்சாவூர் பெரியவரோட ஆமோதிப்பு.////

எனக்கு என்ன வயசாச்சு மைனர்? இவாள்ளாம் என்னை வயசாச்சு வயசாச்சுன்னு வயசுக்கேத்த பேச்சா பேசுங்கோன்னு சொல்றா. அப்படி ஒரு வயசுக்கேத்த லாங்குவேஜ் இருக்கா?///

அவாளுக்கெல்லாம் வயசாச்சொன்னோ?அதனாலே உங்களையும் துணைக்கு கூட்டு

சேர்த்துக்கறா...ஒரு பொறாமைதான்...வேறென்ன?..என்னைக் கேட்டா நீங்க பேசாம லண்டனிலேயே பெர்மனென்ட் ரெசிடென்ஸ் ட்ரை பண்ணியிருக்கலாம்..(லண்டன் நியூஸ் பேப்பர் பாட்டிங்களைப் பத்தின உங்க கமென்ட் படிச்சேன்..) இப்பவும் ஒண்ணும் லேட் ஆகலே..

நீங்க சொன்னமாதிரி வானப்பிரஸ்தம், பூமிப் பிரச்தமெல்லாம் வேணுங்குறவுங்க போயிக்கிடட்டும்..எதார்த்தத்தை வெளிப்படையாச் சொல்ல ஒரு தைரியம் வேணும்..உங்ககிட்டே அது இருக்கவே இருக்கு..அது ஒண்ணுக்காகவே உங்களுக்கு ரசிகையா,அபிமானியா ஆகி யாராவுது

திடீர் லவ் லெட்டர் போட்டுட்டாலும் போட்டதுதான்..எதுக்கும் மாமிகிட்டே பர்சனல் மெயில் ஐடி எல்லாம் சொல்லாம ரகசியமாவே வெச்சுக்குங்க..காதோட சொல்லிட்டேன்.. ஆமாம்..

minorwall said...

////kmr.krishnan said... 4.எல்லாதையும் மீறி உமது பகடியப் புரிஞ்சுண்டு வேற பதில் சொல்லணும்.//////////

அதுல இவ்வளோ சிரமம் இருக்கா?

////////kmr.krishnan said... இப்போ இருக்கற அரசாங்கம் தீவிர வாதிகளை தீவிரமா கண்காணிக்கிற அர‌சாங்கம்.///////

ஆமா..தீவிரமா வாதம் பண்றது தீவிரவாதம் தானே? அதைத் தொடர்ந்து நீங்க செஞ்சுக்கிட்டேதான இருக்கீங்கோ?

//////////kmr.krishnan said... ஆயுதம் , ஃபாகடரின்னா வீட்டுக்கு ஆள் வந்துடும்.////////

மாமி 'இனிமேல் மைனர் கூட 'டூ' வுட்ட்ருங்கோ'ன்னு சொன்னாலும் சொல்லுவாகன்னு நினைக்குறேன்.

////////அந்த துரோணாச்சாரியார் மேட்டர் என் மர மண்டைக்குப் புரியல. //////

அந்த அளவுக்கா ஆகிப் போச்சு..?வாத்தியார் எழுதுன மேட்டரிலே அவருக்கே இப்புடி எதிர்கேள்வி கேட்டுருக்கீங்களே?ன்னு சொல்ல முயற்சித்தேன்..வாத்தியாரைத்தான் துரோனாச்சாரியார் ன்னு சொன்னேன்..பிராக்கெட்லே வாத்தியார் ன்னு சொல்லியிருந்தேனே..

சரி..விடுங்க..இனிமே பகடியைக் குறைச்சுக்குறேன்..

kmr.krishnan said...

///நீங்க சொன்னமாதிரி வானப்பிரஸ்தம், பூமிப் பிரச்தமெல்லாம் வேணுங்குறவுங்க போயிக்கிடட்டும்..எதார்த்தத்தை வெளிப்படையாச் சொல்ல ஒரு தைரியம் வேணும்..உங்ககிட்டே அது இருக்கவே இருக்கு..அது ஒண்ணுக்காகவே உங்களுக்கு ரசிகையா,அபிமானியா ஆகி யாராவுது

திடீர் லவ் லெட்டர் போட்டுட்டாலும் போட்டதுதான்..எதுக்கும் மாமிகிட்டே பர்சனல் மெயில் ஐடி எல்லாம் சொல்லாம ரகசியமாவே வெச்சுக்குங்க..காதோட சொல்லிட்டேன்.. ஆமாம்..//

அதைஏன் கேட்கிறீர் மைனர்!? அன்னிக்கு அப்படித்தான் கோவிலில் ஒரு அம்மணி சூப்பரான சர்க்கரைப் பொங்கலை நெய் சொட்டச்சொட்ட‌ ஒரு தொன்னையில் வைத்து என்னிடம் கொடுத்து விட்டு மாமியின் பக்கமே பார்க்காமல் என்னைப் பார்த்து ஒரு வெட்டு வெட்டி விட்டுப் போய்ட்டா.மாமிக்குக்கோவம் உச்ச மண்டைக்கு ஏறி பி பி எகிறிடுத்து."கோயில்ல வந்துமா, பகவான் நினைப்பு இல்லாம‌ல் மேனாமினிக்கிகளைப் பார்த்து இளிக்கிறீர்" என்று என் தலையை உரல்ல போட்டு இடிச்சுப்பிட்டா.இன்னமும் கோவம் தீரலை.

இது இப்படீருக்க, ஒரு கட்டுகுட்டான பொம்பிளை தோட்டத்துக்குப் புல்லு செதுக்கறேன்னு வந்து கேட் கிட்ட‌ நின்னுண்டு அழிச்சாட்டியம் பண்ரா. எனக்கு உடனே புரிஞ்சுடுத்து அடுத்த வில்லங்கம்டா இதுன்னு.'வேண்டாம் போ'ன்னா
கீழ குனிஞ்சு காலைத் தொட்டு கும்பிட்டு 'இன்னிக்கு நீ வேலைதரலைன்னா நானும் என் கணவனும் தற்கொலை பண்ணிப்போம்;சரியா சாப்பிட்டு 3 நாளாச்சுங்கறா'.இந்தப் பக்கம் பிரம்ம ராட்சசி. அந்தப்பக்கம் மோஹினிப் பிசாசோ, இட்சிணியோ. ஒரு மனுஷன் என்ன பண்ண முடியும் மைனர்?
டேக் இட் ஈசி பாலிசிதான்.//வானப்பிரஸ்தம், பூமிப் பிரச்தமெல்லாம்//

உமக்கு கொஞ்சமும் சமஸ்கிருதமோ,தமிழில் பயன்பாட்டில் இருக்கும் சமஸ்கிருத சொற்களோ பரிச்சயமே இல்லயா?

தசரதன் மகன் தாசரதி, ஜனக‌ன் மகள் ஜானகி என்பதுபோல் வனத்துக்குப் போய்
தவம் செய்வது வானப்பிரஸ்தம்.வனத்தில் வசிப்பது வானரம்.நீர் வானம்=ஆகாயம் என்று பொருள் கொண்டு பூமிபிரஸ்தம் என்று புதிதாக ஒன்றைச் சொல்கிறீர்.என்னுடைய சிஷ்யப் பிள்ளையா வரதுக்கு நீர் கடக்க வேண்டிய தூரம் அதிகம்.