மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.11.11

Astrology வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

-------------------------------------------------------------------------------------
Astrology வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

கோயமுத்தூர் ஸ்ரீஅன்னபூர்ணா ஹோட்டல் சாப்பாட்டைப் போல எல்லாம் கலந்து ருசியோடு இருக்க வேண்டும்.

எல்லாம் என்றால்?

கூட்டு, பொரியல், பச்சடி, சாம்பார், வற்றல் குழம்பு, ரசம், தயிர், ஊறுகாய், வடை, பாயாசம், அப்பளம், சாதம் என்று  எல்லாம் கலந்து, சுவையாக, நிறைவாக இருக்க வேண்டும்.

நல்ல பெற்றோர்கள், அன்பான மனைவி, ஆஸ்திக்கு ஒரு ஆண் மகவு, ஆசையாய் கொஞ்சி மகிழ ஒரு பெண் குழந்தை, நல்ல வேலை, கை நிறையச் சம்பளம், சொந்த வீடு, நான்கு சக்கர வாகனம், நோயில்லாத பெருவாழ்வு, சொந்த பந்தங்கள், இனிய நண்பர்கள் என்று எல்லாம் கலந்த நிறைவான வாழ்க்கை வேண்டும்.

அப்படி அமையுமா?

ஆயிரத்தில் ஒருவருக்கு அப்படி அமையலாம்!

மற்றவர்களுக்கெல்லாம் ஒரு நிறைவான வாழ்க்கை அமைவது கஷ்டம்!

“அனைக்க
ஒரு அன்பிலா மனைவி
வளர்க்க
இரு நோயுற்ற சேய்கள்
பிழைக்க
ஒரு பிடிப்பில்லாத தொழில்
ஆனாலும்
எனோ இன்னும்
உலகம் கசக்கவில்லை!”


என்றான் ஒரு புதுக்கவிஞன். பலருக்கு அப்படித்தான் வாழ்க்கை அமையும்.

ஆனால் எல்லோருக்கும் உரிய மொத்த மதிப்பெண் 337தான். கசக்கவில்லை என்று சொன்னான் பாருங்கள். அதைச் சொல்வதற்கான இடத்தில் அதிகமான பரல்கள் இருக்கும். எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு, எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான். அதற்குரிய இடத்தில் அவனுக்குப் பரல்கள் அதிகமாக இருக்கும். போதாதா?

அரசனும் மகிழ்ச்சியாக இருப்பான். துறவியும் மகிழ்ச்சியாக இருப்பார். நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அல்லது நிம்மதியாக இருப்பதற்கு மினிமம் என்ன வேண்டும்? ஜாதகப்படி என்ன வேண்டும்?

இன்றைய மினிமம் நாளைய பற்றாக்குறை!ஆகவே அதை ஒதுக்கிவிட்டுப் பொதுவாகப் பேசுவோம்.

லக்கினத்தில் குரு இருந்தால், அந்த ஜாதகனின் வாழ்க்கை பொதுவாக நன்றாக இருக்கும். லக்கினத்தில் இருக்கும் குரு அதைக் கொடுத்து  விடுவார். லக்கினத்தில் இருப்பதோடு, 5, 7 & 9 ஆம் பார்வையாக தான் பார்க்கும் இடங்களுக்கான வேலைகளை எல்லாம் செம்மையாகச் செய்து கொடுத்துவிடுவார். லக்கினத்தில் தீய கிரகங்கள் இருந்தால் அதற்கு நேர்மாறான வாழ்க்கை அமையும்!

அதே போல, லக்கினம், ஒன்பதாம் வீடு, பத்தாம் வீடு, மற்றும் பதினொன்றாம் வீடு ஆகிய நான்கு வீடுகளிலும் 28 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களை உடைய ஜாதகனின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். இந்தக் கட்டுரையின் ஐந்தாவது பத்தியில் சொல்லியுள்ளபடி எல்லா நலன்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

என்னிடம் நூற்றுக் கணக்கான ஜாதகங்கள் உள்ளன. அவற்றில் மேல்கண்ட விதிக்குப் பொருந்தி வரக்கூடிய என் நண்பர் ஒருவரின் ஜாதகத்தை உதாரண ஜாதகமாகக் கீழே கொடுத்துள்ளேன். எனக்கு நன்றாகத் தெரியும். நல்ல பெற்றோர்கள், மனைவி, மக்கள், செல்வம், வீடு, வாகனம் என்று எல்லாம் கலந்த நிறைவான வாழ்க்கை அவருடைய வாழ்க்கை. அதனால்தான் அதை இன்று உங்களுக்குப் பயிற்சிப் பாடமாகக் கொடுத்துள்ளேன்.

அந்த 4 வீடுகள் மட்டும் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன?

லக்கினம் - இது முக்கியம். இது நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகன் பலனை அனுபவிக்க முடியும்
ஒன்பதாம் வீடு - பாக்கிய ஸ்தானம். (House of Gains) எல்லா பாக்கியங்களையும் உள்ளடக்கிய வீடு.
பத்தாம் வீடு - நல்ல தொழில் அல்லது வேலை அமைவதற்கு இது முக்கியம்
பதினொன்றாம் வீடு - லாபஸ்தானம். லாபம் என்றால் என்ன வென்று தெரியுமல்லவா?

-----------------------------------------------------------------------------------

1, 9, 10 & 11 ஆம் வீடுகளில் உள்ள பரல்களைப் பாருங்கள். 
அஷ்டகவர்க்கத்தின் மேன்மை இப்போது புரிகிறதா?

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

82 comments:

  1. அஷ்ட வர்க்க பலன்கள் தொடர் வகுப்பு மிக பயனுள்ளது! நன்றி ஐயா!

    ReplyDelete
  2. நல்ல ஒரு ஜாதகம்தான். இது போன்ற‌ பாடங்கள் வரும் போது எனது ஜாதகத்தை ஒப்பிட்டுப்பார்க்கும் வழக்கம் வந்துவிட்டது. சரியோ,தவறோ தெரியவில்லை.

    1ம் இடத்துக்கு 26
    9க்கு 24; 10க்கு 33; 11க்கு 37

    வாழ்க்கை ஓரளவு நன்றாகவே ஓடிவிட்டது.
    என்ன 12ல் 33. நிறைய விரயம் செய்தேன் (எல்லாவற்றையும்)
    6ல் 34 பெரிய அளவு செலவு செய்யக்கூடிய நோய் ஒன்றும் இல்லை(இதுவரை)

    நீங்கள் சுட்டியுள்ளவருக்கு 7ம் இடம் 20 பரல்தானே!? 1,9, நன்றாக அமைந்ததால் மனைவியும் நன்றாக அமைந்ததோ?

    ReplyDelete
  3. குருவருளே திருவருள் என்கிறீர்கள் ....! வக்கிர குருவுக்கு விளக்கு உண்டா?
    நன்றி

    ReplyDelete
  4. any exception for vagra guru(7 th place)?

    ReplyDelete
  5. 'பாவ'த்தில் பரல்கள் சற்றுக் குறைந்து காரகனின் அல்லது பாவாதிபதியின் பரல்கள் சற்று மிகுதியாகக் காணப்பட்டால் பாவபலன் சற்று மிகுமா அய்யா?

    பாடம் மிக எளிமையாக இருந்தது.

    நன்றிகள்.

    ReplyDelete
  6. அன்னபூர்ணா சாப்பாடு அருமை..

    ReplyDelete
  7. 1, 9, 10, 11-ஆம் இடங்களில் முறையே 38, 31, 30, 25 பரல்கள் உள்ளன. வாழ்க்கை அளவுக்கு அதிகமா கசந்து விட்டது. இத்தனைக்கும் அடியேனுக்கு வயது தற்பொழுது 31 முடிந்துள்ளது. 11-ஆம் இடம் குறைந்திருந்தால் மற்றவை நிறைந்திருந்தாலும் இப்படி தான் இருக்குமா ?

    ReplyDelete
  8. Respected Sir,

    Its so useful for all... Thanks again... When will be the Sani peyarchi? Have a plesant day...

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா, வெளியூர்ப் பயணம் முடிந்து இன்றே வகுப்பறைக்கு வருகிறேன். அஷ்டவர்க்கம் பரல்கள் சில சமயங்களில் நான் எதிர்ப் பார்ப்பது போல் ஏனோ அமைவதில்லை. உதாரணத்திற்கு, இங்கிலாந்து இளவரசருக்கு 1, 9, 10, 11 ஆகியவை மிகச் சிறப்பாக இருக்கக்கூடும் என நான் எதிர் பார்த்தேன். அரச குடும்பத்து பிள்ளை, அதற்கு மேல் வேறென்ன வேண்டும், எல்லாம் தானாகவே கேட்கும் முன்னே கிடைத்து விடாதா? ஆனால், அந்த இளைஞருக்கு அவை முறையே 26, 25, 31, 30 என்று இருக்கிறது. அவருடையதை ஒப்பிடும்பொழுது நான் கூட பரவாயில்லை எனத் தோன்றுகிறது. எனக்கு முறையே 30, 27, 30, 32. அஷ்டவர்கப் பாடப் பதிவிற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  10. வாத்தியாருக்கும் சக மாணவர்களுக்கும் வணக்கம்....

    உஸ் அப்பா! வேறொன்று இல்லை கொஞ்சம் அதிகமாகவே அலுவலக வேலைப் பழு அதனாலே வகுப்பறைக்கு வரவில்லை... வந்தாலும் ஒரு ஓரமாக நிற்று பார்த்து விட்டு சென்று விடுகிறேன்...

    இன்றையப் பாடங்கள் நன்று...
    நன்றிகள் ஐயா!

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  11. இசைஞானி இளையராஜா அவர்களின் மனைவி இயற்கை எய்திவிட்டார்கள் என்ற செய்தியை கேள்வியுற்றேன்... நமது வகுப்பறையின் வழியே நாம் அனைவரும் சேர்ந்தே... நமது ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வோம்.

    ReplyDelete
  12. அவசரமாக, தட்டச்சின் போது பிழை.. "அணைத்து" என்று மாற்றிவிடுங்கள் ஐயா! நன்றி.

    ReplyDelete
  13. பிழை உள்ளது என்று கூறிய நானும் பிழை செய்து விட்டேன்...
    "அணைத்து அல்ல அணைக்க" என்பதே சரி. நன்றி.

    ReplyDelete
  14. அ. லக்கினாதிபதி செவ்வாய் 8 ல் -தன் சொந்த வீட்டில் ஆட்சி

    ஆ. லக்கினத்தில் சந்திரன் - களையான் முகம் என்று நினைக்கிறேன்

    இ. 7-க்கு அதிபதி + களத்திர காரகன் சுக்கிரன். அவன் 6 ல் நீசம். பாவிகள் துணையுடன். ஆனால் ஜாதகரின் திருமண வாழ்க்கை பற்றி ஆசிரியர் எதுவும் சொல்லவில்லை. குருவின் 9-ஆம் பார்வை 7-ன் மீது இருப்பதால் தீமைகள் குறைந்திருக்கலாம்.

    துரைசாமி
    எர்ணாகுளம்.

    ஈ.

    ReplyDelete
  15. வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பாடத்திற்குப் பாகற்காய் நல்ல
    காட்சிப் பொருள்தான் என்றாலும், பலாப்பழமே மேலும் சிறந்த உதாரணம்.
    மேலே உள்ள முள், சவுணி போன்ற துன்பங்களையெல்லாம் கடந்து பலாப்பழத்தை சுவைப்பது போல வாழ்க்கை இருந்தாலே சுவைக்கும்.

    ReplyDelete
  16. அஷ்டவர்க்க பலனை மேற்கோள் காட்டிய பதிவு அருமை.குறிப்பிட்ட நபரின் திருமண வாழ்க்கை பற்றிய எந்த விவரமும் இல்லை.7ம் வீட்டில் 20 பரல்கள்,அந்த வீட்டின் அதிபதியும்,களத்திரகாரகனுமாகிய சுக்கிரன் லக்கினம் மற்றும் 7ம் வீட்டிற்கு முறையே 6 மற்றும் 12ம் இடங்களில் இருக்கிறார்.லக்கினாதிபதி 8ல் மறைந்து ஆட்சி பெற்றுள்ளார்.இது அவருக்கு உகந்தயிடமில்லையே.அவர் நின்ற வீடும் 24 பரலுடன் நலிந்து போய் உள்ளது.5 ம் அதிபதியும் ஹாயாக 6 ல் போய் உட்கார்ந்திருக்கிறாரே?.

    ReplyDelete
  17. புதனும் சூரியனும் பரிவர்த்தனை. வாழ்வில் எதுவும் (சரியாக) இல்லை ஆனால் கசக்கவும் இல்லை எனும் ஜாதகம்.

    நான்கில் மாந்தி, துரதிஷ்டசாலி என்று அய்யா சொல்லியுள்ளிர்கள்

    ReplyDelete
  18. ஆசிரியரே, பொதுவாக தீய பலன்களை வழங்குபவர்கள் மறைவிடங்களில் மாட்டியது சாதகமான பலன்களை கொடுத்திருக்குமோ?

    சூரியன், சனி, கேது இவர்கள் ஆறாம் வீட்டில் கூடி, அஸ்தமனம் போன்று ஆனதால்(இந்த தகவல் கொடுக்கப் படவில்லை) ஆறாம் வீட்டின் பரல்கள் எண்ணிக்கை அதனை எதிரொலிக்கிறதா?

    ReplyDelete
  19. Guru Vanakkam,

    Interesting Horoscope. I think the good and bad componsates

    Moon in Lagna
    5th and 6th lord exchange
    9th lord in 11.
    GURU parvai to 5th house all good.


    7th lord in 6th
    Lagnalord in 8th
    8th house having malfics other than venus,

    As guru mentioned, the SAV scores has ruled every other thing out.

    Did he overcome, kutti chukran also, ? probably he might have had a good "MOON dasa" for 10 years FROM THE AGE OF 28 and would have continued his good run,

    Did he had any set back or minor issues on Mars dasa ,which would have been is 5th dasa?

    Regards
    RAMADU

    ReplyDelete
  20. ஒரு
    முற்றும் துறந்த சன்யாசியின் முழுமையான ஜாதக அலசலை

    ஆவலுடன் பார்த்துக் கொண்டபடி
    ஆர்வமாய் காத்திருக்கிறோம்..

    மக்கள் இல்லாத மண்ணிற்கு மகாராஜாக்களாக விரும்புபவர்களை

    பார்த்து சலித்துவிட்டதல்லவா
    பாரை மாற்றும் வேரை பார்க்கணுமே

    அடுத்த சில நாட்களில்
    அய்யரின் பயணம் தொடர்வதால்

    வருகை பதிவிடமுடியாவிடினும்
    வந்து படித்துச் சொல்வோம்..

    வழக்கமான வாழ்த்துக்ளும்
    வணக்கங்களும்

    ReplyDelete
  21. வண‌க்கம் அய்யா,
    நம் காந்தி தாத்தாவுக்கு 22,25,35,39 ஆக அமைந்துள்ளன.லக்னத்தில் பரல்கள் குறைவாக இருந்தாலும் லக்னத்தை 7ம் பார்வையாக பார்க்கின்ற குரு பகவான் தாத்தாவுக்கு மனபலத்தைக் கொடுத்து விட்டார்.ஆக அஷ்டகவர்க்கத்தில் பரல்கள் குறைந்தாலும் கிரக அமைப்புகள் நன்றாக அமைந்து நம்மை தூக்கி நிறுத்த வேண்டும்.நல்ல பதிவு அய்யா.

    ReplyDelete
  22. ஜாதகத்தில் உள்ள டேட்டா வைக் கொண்டு ஜகன்னாத ஹோராவில் கணித்துப் பார்த்ததில் சுக்கிரனும் ஆறுக்குப் போகிறது..குரு வக்கிரம்..
    AV பரல்களில் கொஞ்சம் change ..1 லே 29 , 9 லே 34 , 10 லே 31 ,11 லே 30 என்றாக வருகிறது..எப்படி இருந்தாலும் பதிவின் படி முக்கிய இடங்கள் அனைத்துமே நல்ல பரல்கள் என்பதில் மாற்றமில்லை..

    ReplyDelete
  23. ///////// kmr.krishnan said...


    நல்ல ஒரு ஜாதகம்தான். இது போன்ற‌ பாடங்கள் வரும் போது எனது ஜாதகத்தை ஒப்பிட்டுப்பார்க்கும் வழக்கம் வந்துவிட்டது. சரியோ,தவறோ தெரியவில்லை.////////

    எனக்கு 1ம் இடத்துக்கு 25 ( ஆனால் லக்கினாதிபதிக்கு 33 )

    9க்கு 35; 10க்கு 32; 11க்கு 37

    உங்களைப் போலவே 12ல் 33. நிறைய விரயம் செய்தேன் (எல்லாவற்றையும்)..


    நாங்களும்தான்..


    சேர்த்து வெச்சு என்ன பண்ணப்போறோம்? 12 ஆமிடத்துக்கு உரிய விஷயங்களை அனுபவிச்சா சரிதான்..

    (5 லே 33
    3 லே 30)
    இது ரெண்டும் 30க்கு மேலே..

    ReplyDelete
  24. என் உறவினர் ஒருவருக்கு குரு நீசம் ஆகி இருக்குமிடத்துக்கு 27 பரல்தான் உள்ளது..
    ஆனாலும் சுய வர்க்கத்தில் ஃபுல் மார்க் பெற்று 8 பரல்கள்..இது எப்படி சாத்தியம்?
    ஐந்தாமிட எட்டாமிட குருவின் ஆதிபத்தியத்துக்கு எப்படி பலன்?
    குரு பிசாசாக இருப்பதால் என்று டிக் மார்க் பண்ணிவிடலாமா?(நீங்கள் ஏற்கனவே சொன்னதுதான்..)

    ReplyDelete
  25. /////கைகாட்டி said...
    அ. லக்கினாதிபதி செவ்வாய் 8 ல் -தன் சொந்த வீட்டில் ஆட்சி

    ஆ. லக்கினத்தில் சந்திரன் - களையான் முகம் என்று நினைக்கிறேன்

    இ. 7-க்கு அதிபதி + களத்திர காரகன் சுக்கிரன். அவன் 6 ல் நீசம். பாவிகள் துணையுடன். ஆனால் ஜாதகரின் திருமண வாழ்க்கை பற்றி ஆசிரியர் எதுவும் சொல்லவில்லை. குருவின் 9-ஆம் பார்வை 7-ன் மீது இருப்பதால் தீமைகள் குறைந்திருக்கலாம்.

    துரைசாமி
    எர்ணாகுளம்.//////

    பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை பக்கத்தில் 'கைகாட்டி' என்று ஒரு ஊர் உள்ளது..

    எர்ணாகுளத்துக்காரர் ஏன் இந்தப் பெயர் வைத்தார் என்று புரியவில்லை?

    ப்ரோஃபைல் பிக்சர் செமை மிரட்டலாக இருக்கிறது..வெல் டன்.. கீப் இட் அப்..

    ReplyDelete
  26. ஜகன்னாத ஹோராவின் படி, களத்திர ஸ்தானாதிபதியும் களத்திர காரகனுமான சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் புதனுடன் இருக்கிறான் (29degrees & 49min). ஐந்தாம் அதிபதி சூரியன் நவாம்சத்தில் உச்சம் (Dispositor of 7th Lord). இது பாரிஜாத யோகம் என்பதாகும். நவாம்சத்தில் ஏழாம் அதிபன் தன் வீட்டிலேயே இருக்கிறான்.
    மனைவிக்குச் சில சமயம் நோய் தொல்லை இருக்கலாம் என்றாலும், களத்திரம் நன்றாகத்தான் உள்ளது.

    ReplyDelete
  27. ////// R.Srishobana said...
    வண‌க்கம் அய்யா,
    நம் காந்தி தாத்தாவுக்கு 22,25,35,39 ஆக அமைந்துள்ளன.லக்னத்தில் பரல்கள் குறைவாக இருந்தாலும் லக்னத்தை 7ம் பார்வையாக பார்க்கின்ற குரு பகவான் தாத்தாவுக்கு மனபலத்தைக் கொடுத்து விட்டார்.ஆக அஷ்டகவர்க்கத்தில் பரல்கள் குறைந்தாலும் கிரக அமைப்புகள் நன்றாக அமைந்து நம்மை தூக்கி நிறுத்த வேண்டும்.நல்ல பதிவு அய்யா./////

    அவரின் வாழ்க்கை பாதி நாட்கள் சிறையிலும் உண்ணாவிரதமும் நடைபயணமும் போராட்டங்களும் என்று அடுத்தவருக்கான தியாகமாகவே கழிந்து போனதே..

    சுயநலத்துக்கு என்று செலவிட்ட கணங்கள் குறைவுதான் எனபதுதான் லக்கினாதிபதிப் பிரச்சினை உணர்த்துவதாக நினைக்கிறேன்..

    சராசரிகள் எல்லோரும் விரும்பும் சுக வாழ்க்கையை மனதில் கொண்டுதான் ஆசிரியர் பதிவில் வாழ்வை அனுபவிப்பதற்கு லக்கினாதிபதி முக்கியம் என்று கூறியுள்ளார் என்று நினைக்கிறேன்..

    ReplyDelete
  28. தமிழ்விரும்பி சொன்னதைப்போலே இசைஞானியை இயக்கிய ஆருயிர் பிரிந்ததை அடுத்து எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்..

    ReplyDelete
  29. /////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    அஷ்ட வர்க்க பலன்கள் தொடர் வகுப்பு மிக பயனுள்ளது! நன்றி ஐயா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  30. //////Blogger சில்க் சதிஷ் said...
    நன்றி அய்யா/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  31. /////Blogger kmr.krishnan said...
    நல்ல ஒரு ஜாதகம்தான். இது போன்ற‌ பாடங்கள் வரும் போது எனது ஜாதகத்தை ஒப்பிட்டுப்பார்க்கும் வழக்கம் வந்துவிட்டது. சரியோ,தவறோ தெரியவில்லை.
    1ம் இடத்துக்கு 26
    9க்கு 24; 10க்கு 33; 11க்கு
    வாழ்க்கை ஓரளவு நன்றாகவே ஓடிவிட்டது.
    என்ன 12ல் 33. நிறைய விரயம் செய்தேன் (எல்லாவற்றையும்)
    6ல் 34 பெரிய அளவு செலவு செய்யக்கூடிய நோய் ஒன்றும் இல்லை(இதுவரை)
    நீங்கள் சுட்டியுள்ளவருக்கு 7ம் இடம் 20 பரல்தானே!? 1,9, நன்றாக அமைந்ததால் மனைவியும் நன்றாக அமைந்ததோ?//////

    ஆமாம். அதைத்தான் பதிவில் குறிப்பிட்டு எழுதியுள்ளேன். அவருக்கு எல்லாம் அமைந்தது என்று!

    ReplyDelete
  32. ///Blogger vidya pathi said...
    குருவருளே திருவருள் என்கிறீர்கள் ....! வக்கிர குருவுக்கு விலக்கு உண்டா?
    நன்றி/////

    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு சுட்டாலும் வெண்மை தரும்’ குரு எங்கே இருந்தாலும் என்ன நிலைமையில் இருந்தாலும் நன்மையான பலனையே தருவார்!

    ReplyDelete
  33. ////Blogger arul said...
    any exception for vagra guru(7 th place)?/////

    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு சுட்டாலும் வெண்மை தரும்’ குரு எங்கே இருந்தாலும் என்ன நிலைமையில் இருந்தாலும் நன்மையான பலனையே தருவார்!

    ReplyDelete
  34. /////Blogger Govindasamy said...
    'பாவ'த்தில் பரல்கள் சற்றுக் குறைந்து காரகனின் அல்லது பாவாதிபதியின் பரல்கள் சற்று மிகுதியாகக் காணப்பட்டால் பாவபலன் சற்று மிகுமா அய்யா?
    பாடம் மிக எளிமையாக இருந்தது.
    நன்றிகள்./////

    என்ன கேட்கிறீர்கள் என்பது தெளிவாக இல்லை!

    ReplyDelete
  35. //////Blogger Govindasamy said...
    அன்னபூர்ணா சாப்பாடு அருமை..//////

    இது தெளிவாக இருக்கிறது!:-)))

    ReplyDelete
  36. //////Blogger Sreenivasan said...
    1, 9, 10, 11-ஆம் இடங்களில் முறையே 38, 31, 30, 25 பரல்கள் உள்ளன. வாழ்க்கை அளவுக்கு அதிகமா கசந்து விட்டது. இத்தனைக்கும் அடியேனுக்கு வயது தற்பொழுது 31 முடிந்துள்ளது. 11-ஆம் இடம் குறைந்திருந்தால் மற்றவை நிறைந்திருந்தாலும் இப்படி தான் இருக்குமா?/////

    பாதிக் கிணறு, முக்கால் கிணறு கதை எல்லாம் கிடையாது. நான்கு வீடுகளிலும் பரல் 28ஐத் தொட வேண்டும். அதற்கு மேலும் இருத்தல் நலம் என்றால், 4 வீடுகளிலுமே அப்படி இருக்க வேண்டும். 3 வீடுகளில் மட்டும் உள்ளது என்றால் அது முக்கால் கிணறு தாண்டியதற்குச் சமம்.
    முக்கால் கிணறைத் தாண்டினால் என்ன ஆகும் - தெரியுமல்லவா?

    ReplyDelete
  37. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Its so useful for all... Thanks again... When will be the Sani peyarchi? Have a plesant day...//////

    உங்கள் ஜாதகத்தில் கன்னி ராசியில் இருப்பதைவிட துலா ராசியில் பரல்கள் அதிகமாக இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் கவலையில்லை. சனிப்பெயர்ச்சி உங்களுக்கு நன்மையானதாக இருக்கும்! திருநள்ளாறுதான் நமக்கு முக்கியம். அங்கே சனிப்பெயர்ச்சி விழா 23.12.2011 அன்று நடைபெற உள்ளதாகத் தகவல்.

    ReplyDelete
  38. //////Blogger தேமொழி said...
    வணக்கம் ஐயா, வெளியூர்ப் பயணம் முடிந்து இன்றே வகுப்பறைக்கு வருகிறேன். அஷ்டவர்க்கம் பரல்கள் சில சமயங்களில் நான் எதிர்ப் பார்ப்பது போல் ஏனோ அமைவதில்லை. உதாரணத்திற்கு, இங்கிலாந்து இளவரசருக்கு 1, 9, 10, 11 ஆகியவை மிகச் சிறப்பாக இருக்கக்கூடும் என நான் எதிர் பார்த்தேன். அரச குடும்பத்து பிள்ளை, அதற்கு மேல் வேறென்ன வேண்டும், எல்லாம் தானாகவே கேட்கும் முன்னே கிடைத்து விடாதா? ஆனால், அந்த இளைஞருக்கு அவை முறையே 26, 25, 31, 30 என்று இருக்கிறது. அவருடையதை ஒப்பிடும்பொழுது நான் கூட பரவாயில்லை எனத் தோன்றுகிறது. எனக்கு முறையே 30, 27, 30, 32. அஷ்டவர்கப் பாடப்பதிவிற்கு நன்றி ஐயா.///////

    அவர் வாழ்க்கையெல்லாம் கூண்டுக்கிளி. தங்கக்கூண்டு. உங்களுக்கும் எனக்கும் உள்ள சுதந்திரம் எல்லாம் அவருக்குக் கிடையாது. ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். ஏகப்பட்ட பின் தொடர்ச்சிகள்.

    ReplyDelete
  39. ////Blogger தமிழ் விரும்பி said...
    வாத்தியாருக்கும் சக மாணவர்களுக்கும் வணக்கம்....
    உஸ் அப்பா! வேறொன்று இல்லை கொஞ்சம் அதிகமாகவே அலுவலக வேலைப் பளு அதனாலே வகுப்பறைக்கு வரவில்லை... வந்தாலும் ஒரு ஓரமாக நிற்று பார்த்து விட்டு சென்று விடுகிறேன்...
    இன்றையப் பாடங்கள் நன்று...
    நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ./////

    அதனால் என்ன? இந்த வயதில் அந்த வேலைதான் முக்கியம்.

    ReplyDelete
  40. /////Blogger தமிழ் விரும்பி said...
    இசைஞானி இளையராஜா அவர்களின் மனைவி இயற்கை எய்திவிட்டார்கள் என்ற செய்தியை கேள்வியுற்றேன்... நமது வகுப்பறையின் வழியே நாம் அனைவரும் சேர்ந்தே... நமது ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வோம்.//////

    ஆமாம். தமிழ் பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளது. நாம் அனைவரும் நம் வகுப்பறையின் சார்பில் நமது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்வோம். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்!

    ReplyDelete
  41. //சேர்த்து வெச்சு என்ன பண்ணப்போறோம்? 12 ஆமிடத்துக்கு உரிய விஷயங்களை அனுபவிச்சா சரிதான்..//

    உம்முடைய கவனத்தைக் கவரவே "எல்லாவற்றையும்" என்று எழுதினேன்.
    கற்பூர மூளை தான் உமக்கு மைனர்வாள். சட்டுன்னு பிடித்துக் கொண்டீரே!

    ReplyDelete
  42. /////Blogger கைகாட்டி said...
    அ. லக்கினாதிபதி செவ்வாய் 8 ல் -தன் சொந்த வீட்டில் ஆட்சி
    ஆ. லக்கினத்தில் சந்திரன் - களையான் முகம் என்று நினைக்கிறேன்
    இ. 7-க்கு அதிபதி + களத்திர காரகன் சுக்கிரன். அவன் 6 ல் நீசம். பாவிகள் துணையுடன். ஆனால் ஜாதகரின் திருமண வாழ்க்கை பற்றி ஆசிரியர் எதுவும் சொல்லவில்லை. குருவின் 9-ஆம் பார்வை 7-ன் மீது இருப்பதால் தீமைகள் குறைந்திருக்கலாம்.
    துரைசாமி
    எர்ணாகுளம்.////

    அதைத்தான் பதிவில் குறிப்பிட்டு எழுதியுள்ளேன். அவருக்கு எல்லாம் (களத்திரம் உட்பட எல்லாம்) அமைந்தது என்று!

    ReplyDelete
  43. /////Blogger kmr.krishnan said...
    வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பாடத்திற்குப் பாகற்காய் நல்ல காட்சிப் பொருள்தான் என்றாலும், பலாப்பழமே மேலும் சிறந்த உதாரணம். மேலே உள்ள முள், சவுணி போன்ற துன்பங்களையெல்லாம் கடந்து பலாப்பழத்தை சுவைப்பது போல வாழ்க்கை இருந்தாலே சுவைக்கும்.//////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி! பாகற்காய் கசந்தாலும் அதற்கு ஒரு அற்புத மருத்துவக் குணம் உண்டு. ஆகவே எந்த ஒரு தீமைக்குள்ளும் ஒரு நண்மை இருக்கும். அதுதான் வாழ்க்கை. அதை வலியுறுத்தவே பாகற்காயைப் படமாகத் தந்தேன்!

    ReplyDelete
  44. /////Blogger Rajaram said...
    அஷ்டவர்க்க பலனை மேற்கோள் காட்டிய பதிவு அருமை.குறிப்பிட்ட நபரின் திருமண வாழ்க்கை பற்றிய எந்த விவரமும் இல்லை.7ம் வீட்டில் 20 பரல்கள்,அந்த வீட்டின் அதிபதியும்,களத்திரகாரகனுமாகிய சுக்கிரன் லக்கினம் மற்றும் 7ம் வீட்டிற்கு முறையே 6 மற்றும் 12ம் இடங்களில் இருக்கிறார்.லக்கினாதிபதி 8ல் மறைந்து ஆட்சி பெற்றுள்ளார்.இது அவருக்கு உகந்தயிடமில்லையே.அவர் நின்ற வீடும் 24 பரலுடன் நலிந்து போய் உள்ளது.5 ம் அதிபதியும் ஹாயாக 6 ல் போய் உட்கார்ந்திருக்கிறாரே?./////

    kMRK அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டத்தைப் படியுங்கள் நண்பரே!!

    ReplyDelete
  45. ///////Blogger ATகன‌கமணி said...
    புதனும் சூரியனும் பரிவர்த்தனை. வாழ்வில் எதுவும் (சரியாக) இல்லை ஆனால் கசக்கவும் இல்லை எனும் ஜாதகம்.
    நான்கில் மாந்தி, துரதிஷ்டசாலி என்று அய்யா சொல்லியுள்ளிர்கள்//////

    ஐந்தில் மாந்தியிருந்தால் பைத்தியம் பிடிக்கும் நிலைமையை உண்டாக்குவார். அதற்கு நான்காம் வீட்டு மாந்தி பரவாயில்லை.

    ReplyDelete
  46. Blogger தேமொழி said...
    ஆசிரியரே, பொதுவாக தீய பலன்களை வழங்குபவர்கள் மறைவிடங்களில் மாட்டியது சாதகமான பலன்களை கொடுத்திருக்குமோ?
    சூரியன், சனி, கேது இவர்கள் ஆறாம் வீட்டில் கூடி, அஸ்தமனம் போன்று ஆனதால் (இந்த தகவல் கொடுக்கப் படவில்லை) ஆறாம் வீட்டின் பரல்கள் எண்ணிக்கை அதனை எதிரொலிக்கிறதா?//////

    கரெக்ட்! கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்!

    ReplyDelete
  47. Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    Interesting Horoscope. I think the good and bad componsates
    Moon in Lagna
    5th and 6th lord exchange
    9th lord in 11.
    GURU parvai to 5th house all good.
    7th lord in 6th
    Lagnalord in 8th
    8th house having malfics other than venus,
    As guru mentioned, the SAV scores has ruled every other thing out.
    Did he overcome, kutti chukran also, ? probably he might have had a good "MOON dasa" for 10 years FROM THE AGE OF 28 and would have continued his good run,
    Did he had any set back or minor issues on Mars dasa ,which would have been is 5th dasa?
    Regards
    RAMADU//////

    No set back! இன்றுவரை நன்றாக உள்ளார். ஒரெஒரு குறை. பணியின் காரணமாக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வார். அது சமயம் நாள் கணக்கில் தன் குடும்பத்தினரைப் பிரிந்திருக்க நேரிடும்!

    ReplyDelete
  48. Blogger iyer said...
    ஒரு
    முற்றும் துறந்த சன்யாசியின் முழுமையான ஜாதக அலசலை
    ஆவலுடன் பார்த்துக் கொண்டபடி
    ஆர்வமாய் காத்திருக்கிறோம்..
    மக்கள் இல்லாத மண்ணிற்கு மகாராஜாக்களாக விரும்புபவர்களை
    பார்த்து சலித்துவிட்டதல்லவா
    பாரை மாற்றும் வேரை பார்க்கணுமே
    அடுத்த சில நாட்களில்
    அய்யரின் பயணம் தொடர்வதால்
    வருகை பதிவிடமுடியாவிடினும்
    வந்து படித்துச் சொல்வோம்..
    வழக்கமான வாழ்த்துக்ளும்
    வணக்கங்களும்/////

    உங்கள் விருப்பம் கூடிய விரைவில் நிறைவேறும். அதுதான் துறவியின் ஜாதகம்!

    ReplyDelete
  49. /////Blogger R.Srishobana said...
    வண‌க்கம் அய்யா,
    நம் காந்தி தாத்தாவுக்கு 22,25,35,39 ஆக அமைந்துள்ளன.லக்னத்தில் பரல்கள் குறைவாக இருந்தாலும் லக்னத்தை 7ம் பார்வையாக பார்க்கின்ற குரு பகவான் தாத்தாவுக்கு மனபலத்தைக் கொடுத்து விட்டார்.ஆக அஷ்டகவர்க்கத்தில் பரல்கள் குறைந்தாலும் கிரக அமைப்புகள் நன்றாக அமைந்து நம்மை தூக்கி நிறுத்த வேண்டும்.நல்ல பதிவு அய்யா./////

    அஷ்டகவர்க்கத்துடன் மேலும் பல அமைப்புக்கள் உள்ளன. அவற்றையும் பார்க்க வேண்டும்! நன்றி சகோதரி!

    ReplyDelete
  50. //////Blogger minorwall said...
    ஜாதகத்தில் உள்ள டேட்டா வைக் கொண்டு ஜகன்னாத ஹோராவில் கணித்துப் பார்த்ததில் சுக்கிரனும் ஆறுக்குப் போகிறது..குரு வக்கிரம்..
    AV பரல்களில் கொஞ்சம் change ..1 லே 29 , 9 லே 34 , 10 லே 31 ,11 லே 30 என்றாக வருகிறது..எப்படி இருந்தாலும் பதிவின் படி முக்கிய இடங்கள் அனைத்துமே நல்ல பரல்கள் என்பதில் மாற்றமில்லை../////

    எனக்கு நன்றாகத் தெரிந்தவரின், நன்கு தெரிந்த ஜாதகம். கண்மணிகளின் பயிற்சிக்காகத்தான் அதை வலை ஏற்றினேன். நீங்கள் அதை முழுமையாக சோதித்துப் பார்த்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  51. ////// minorwall said...
    ஜாதகத்தில் உள்ள டேட்டா வைக் கொண்டு ஜகன்னாத ஹோராவில் கணித்துப் பார்த்ததில் சுக்கிரனும் ஆறுக்குப் போகிறது../////

    sorry .. நான் சொல்லியிருப்பது தவறு..புதனும் ஆறுக்குப் போகிறான் என்றிருக்கவேண்டும்..
    புதனைத் தவிர்த்து அனைத்து கிரகங்களும் பதிவிட்டபடியே அமைந்துள்ளன..


    /////Srinivasa Rajulu.M said...
    ஜகன்னாத ஹோராவின் படி, களத்திர ஸ்தானாதிபதியும் களத்திர காரகனுமான சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் புதனுடன் இருக்கிறான் (29degrees & 49min). /////

    அயனம்சா எந்த முறை உபயோகப்படுத்தினார் என்று Srinivasa Rajulu.M சொன்னால் நல்லது என்று நினைக்கிறேன்..மற்றபடி எங்கே தவறு நடக்கிறது என்று தெரியவில்லை..மற்றவர்கள் யாராவது JH உபயோகப்படுத்தினால் கொஞ்சம் அலசிவிட்டு சொல்லவும்..வாத்தியார் கொடுத்திருக்கும் டேட்டாவில் longitude latitude விவரங்களை மேனுவலாக இன்புட் செய்திடவும்..லஹிரி சித்ரபக்ஷ அயனாம்சத்தை நான் உபயோகப்படுத்தினேன்..

    ReplyDelete
  52. //////Blogger minorwall said...
    ///////// kmr.krishnan said...
    நல்ல ஒரு ஜாதகம்தான். இது போன்ற‌ பாடங்கள் வரும் போது எனது ஜாதகத்தை ஒப்பிட்டுப்பார்க்கும் வழக்கம் வந்துவிட்டது. சரியோ,தவறோ தெரியவில்லை.////////
    எனக்கு 1ம் இடத்துக்கு 25 ( ஆனால் லக்கினாதிபதிக்கு 33 )
    9க்கு 35; 10க்கு 32; 11க்கு 37
    உங்களைப் போலவே 12ல் 33. நிறைய விரயம் செய்தேன் (எல்லாவற்றையும்)..
    நாங்களும்தான்..
    சேர்த்து வெச்சு என்ன பண்ணப்போறோம்? 12 ஆமிடத்துக்கு உரிய விஷயங்களை அனுபவிச்சா சரிதான்..
    (5 லே 33
    3 லே 30)
    இது ரெண்டும் 30க்கு மேலே../////

    அதானே! சேர்த்து வச்சு என்ன பண்ணப்போறீங்க? செலவழிச்சோம், அனுபவிச்சோம்கிற சந்தோசமாவது மிஞ்சட்டுமே கே.எம்.ஆர். கே சுவாமி!

    ReplyDelete
  53. /////Blogger minorwall said...
    என் உறவினர் ஒருவருக்கு குரு நீசம் ஆகி இருக்குமிடத்துக்கு 27 பரல்தான் உள்ளது..
    ஆனாலும் சுய வர்க்கத்தில் ஃபுல் மார்க் பெற்று 8 பரல்கள்..இது எப்படி சாத்தியம்?
    ஐந்தாமிட எட்டாமிட குருவின் ஆதிபத்தியத்துக்கு எப்படி பலன்?
    குரு பிசாசாக இருப்பதால் என்று டிக் மார்க் பண்ணிவிடலாமா?(நீங்கள் ஏற்கனவே சொன்னதுதான்..)//////

    ஸ்கூல் தேறாது. ஆனால் பையன் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவான். அதுபோலத்தான். இருக்கும் இடத்திற்கும், கிரகத்தின் சுயவர்க்கப் பரல்களுக்கும் தனித்தனிக் கணக்கு!

    ReplyDelete
  54. Blogger minorwall said...
    /////கைகாட்டி said...
    அ. லக்கினாதிபதி செவ்வாய் 8 ல் -தன் சொந்த வீட்டில் ஆட்சி
    ஆ. லக்கினத்தில் சந்திரன் - களையான் முகம் என்று நினைக்கிறேன்
    இ. 7-க்கு அதிபதி + களத்திர காரகன் சுக்கிரன். அவன் 6 ல் நீசம். பாவிகள் துணையுடன். ஆனால் ஜாதகரின் திருமண வாழ்க்கை பற்றி ஆசிரியர் எதுவும் சொல்லவில்லை. குருவின் 9-ஆம் பார்வை 7-ன் மீது இருப்பதால் தீமைகள் குறைந்திருக்கலாம்.
    துரைசாமி
    எர்ணாகுளம்.//////
    பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை பக்கத்தில் 'கைகாட்டி' என்று ஒரு ஊர் உள்ளது..
    எர்ணாகுளத்துக்காரர் ஏன் இந்தப் பெயர் வைத்தார் என்று புரியவில்லை?
    ப்ரோஃபைல் பிக்சர் செமை மிரட்டலாக இருக்கிறது..வெல் டன்.. கீப் இட் அப்..///////

    அண்ணாச்சியின் மீசையைப் பார்த்தால் எனக்கும் பயமாகத்தான் இருக்கிறது மைனர்!:-)))

    ReplyDelete
  55. ///Blogger Srinivasa Rajulu.M said...
    ஜகன்னாத ஹோராவின் படி, களத்திர ஸ்தானாதிபதியும் களத்திர காரகனுமான சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் புதனுடன் இருக்கிறான் (29degrees & 49min). ஐந்தாம் அதிபதி சூரியன் நவாம்சத்தில் உச்சம் (Dispositor of 7th Lord). இது பாரிஜாத யோகம் என்பதாகும். நவாம்சத்தில் ஏழாம் அதிபன் தன் வீட்டிலேயே இருக்கிறான்.
    மனைவிக்குச் சில சமயம் நோய் தொல்லை இருக்கலாம் என்றாலும், களத்திரம் நன்றாகத்தான் உள்ளது./////

    ஆமாம். அதைத்தான் பதிவில் குறிப்பிட்டு எழுதியுள்ளேன். அவருக்கு எல்லாம் (களத்திரம் உட்பட எல்லாம்) அமைந்தது என்று!

    ReplyDelete
  56. Blogger minorwall said...
    ////// R.Srishobana said...
    வண‌க்கம் அய்யா,
    நம் காந்தி தாத்தாவுக்கு 22,25,35,39 ஆக அமைந்துள்ளன.லக்னத்தில் பரல்கள் குறைவாக இருந்தாலும் லக்னத்தை 7ம் பார்வையாக பார்க்கின்ற குரு பகவான் தாத்தாவுக்கு மனபலத்தைக் கொடுத்து விட்டார்.ஆக அஷ்டகவர்க்கத்தில் பரல்கள் குறைந்தாலும் கிரக அமைப்புகள் நன்றாக அமைந்து நம்மை தூக்கி நிறுத்த வேண்டும்.நல்ல பதிவு அய்யா./////
    அவரின் வாழ்க்கை பாதி நாட்கள் சிறையிலும் உண்ணாவிரதமும் நடைபயணமும் போராட்டங்களும் என்று அடுத்தவருக்கான தியாகமாகவே கழிந்து போனதே..
    சுயநலத்துக்கு என்று செலவிட்ட கணங்கள் குறைவுதான் எனபதுதான் லக்கினாதிபதிப் பிரச்சினை உணர்த்துவதாக நினைக்கிறேன்..
    சராசரிகள் எல்லோரும் விரும்பும் சுக வாழ்க்கையை மனதில் கொண்டுதான் ஆசிரியர் பதிவில் வாழ்வை அனுபவிப்பதற்கு லக்கினாதிபதி முக்கியம் என்று கூறியுள்ளார் என்று நினைக்கிறேன்..//////

    லக்கினாதிபதி வீக்’ என்றால், ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருந்தாலும் அவற்றால் ஜாதகனுக்கு பயன் ஒன்றுமில்லை! அவன் அனுபவிக்க முடியாது. வங்கிக் காஷியர் மாதிரி. சுற்றிலும் பணம். ஆனால் அவருக்கு அது பயன் படாது!

    ReplyDelete
  57. //////Blogger minorwall said...
    தமிழ்விரும்பி சொன்னதைப்போலே இசைஞானியை இயக்கிய ஆருயிர் பிரிந்ததை அடுத்து எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்..////////

    நம் வகுப்பறையின் சார்பில் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்! அவர் ஆன்மா சாந்தியடையட்டும்!

    ReplyDelete
  58. வணக்கம் அய்யா, "லக்கினத்தில் குரு இருந்தால், அந்த ஜாதகனின் வாழ்க்கை பொதுவாக நன்றாக இருக்கும்" - குரு-ம் சந்திரனும் லக்னத்தில் அல்லது கேந்திரத்தில் இருந்தால் கஜேகேசரி யோகம். அத்துடன் கேது அல்லது ராகு இருந்தால் யோக பங்கமா? அதன் பலன் எப்படி அமையும். Thanks for your lession. Vrajesh from London.

    ReplyDelete
  59. கரூர் தியாகராஜன் சொஃப்ட்வேர் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கணித்துப் பார்த்ததில் Srinivasa Rajulu.M சொன்னதுபோலத்தான் வருகிறது..தச இருப்பு 2 வருடம் 3 மாசம் 6 தேதி..

    ஆனால் JH லே முன்பு நான் சொன்னதுபோலே குழப்பம் வருகிறது..

    சரி செய்து முன்னாள் இந்த ரெண்டு சொஃப்ட்வேர்களையும் கொண்டு கணித்து concurrent ரிசல்ட் வருகிறதா என்று பார்ப்பது வழக்கம். JH ஐ சரிசெய்யவேண்டிய அவசியம் இப்போது எழுந்துள்ளதாக நினைக்கிறேன்..

    எனி ஹவ் தேங்க்ஸ் Srinivasa Rajulu .

    ReplyDelete
  60. லக்னாதிபதி செவ்வாய் எட்டில். சனியின் மூன்றாம் பார்வை வேறு அவர் மேல் விழுகிறது. எனவே இளவயது வாழ்க்கை
    போராட்டமாக இருந்திருக்கலாம்.

    செவ்வாய் எட்டாமிடத்திருந்தாலும் ஆட்சி பெற்றிருப்பதால் செவ்வாய் தோஷம் இல்லை.

    லக்னத்திலிருக்கும் சந்திரன் அழகான தோற்றத்தைக் கொடுத்திருப்பார்.

    ஐந்தாமிடத்திலிருக்கும் புதன் நல்ல அறிவைக் கொடுத்திருப்பார். ஆனால் ஆறாமிடத்தின் அதிபதியாக இருப்பதால் அவருடைய தசா புக்தியில் சில கெடுதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    செவ்வாய் தசை புதன் புத்தியிலோ, சுக்கிர புத்தியிலோ ஒரு கண்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.

    ஏழாமிட அதிபதி மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் ஆறில் மறைந்து நீச்சம் அடைந்ததால் நவாம்சத்தில் நல்ல அமைப்பு இல்லாத பட்சத்தில் திருமண தடைகள் ஏற்பட்டிருக்கலாம். களத்திர ஸ்தானம் பாபகர்த்தாரி யோகத்தில் இருந்தாலும் குரு மற்றும் சந்திரன் பார்வையால் தப்பிவிட்டார் என்று நினைக்கிறேன். சுக்கிரன் கேது சேர்க்கை குடும்பத்தில் சில மனஸ்தாபங்களை உண்டாக்கலாம்.

    பாக்யஸ்தான அதிபதி குரு லாப ஸ்தானத்தில் இருப்பதாலும், லக்னாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தை நாலாம் பார்வையாகப் பார்ப்பதாலும் பண வரவுக்குக் குறைவிருக்காது.

    இரண்டாம் இட அதிபதி சுக்கிரன் ஆறில் நீச்சம் அடைந்திருந்தாலும் லக்னாதிபதி செவ்வாயின் ஏழாம் பார்வையை இரண்டாம் இடம் பெறுவதால் சொத்து சேர்க்கைக்குக் குறைவிருக்காது.

    சந்திரன் லக்னத்தோடு சம்பந்தப்பட்டிருபதால் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்கள் இருக்கும்.

    ஐந்தாம் இட அதிபதி சூரியன் ஆறில் மறைந்தாலும் புத்திர காரகன் குரு பார்வையை அவ்விடம் பெற்று இருப்பதால் சற்று தாமதத்திற்குப் பின் குழந்தை பிறந்திருக்கலாம்.

    நான்காம் அதிபதி சந்திரன் லக்னத்தில் அமர்ந்ததால் நல்ல தாய், கல்வி, வாகன யோகம் அமையப் பெற்றிருக்கும்.

    தந்தை காரகன் சூரியன் ஆறில் மறைந்தாலும் ஒன்பதாம் அதிபதி குரு நல்ல இடத்தில் இருப்பதால் தந்தை உறவு சீராக இருந்திருக்கும். ஆனால் சூரியன், கேது சேர்க்கை தந்தை உறவைப் பாதித்திருக்கவும் வாய்ப்புண்டு.

    பதினொன்றாம் இடம் நன்றாக இருப்பதாலும் லக்னாதிபதி செவ்வாய் ஆட்சியில் இருப்பதாலும் நிறைய சகோதர சகோதரிகள், நில புலன்கள் சேர்க்கை இருக்க வாய்ப்புண்டு.

    சனி கேது சேர்க்கை இருப்பதால் செயல்திறன் மிக்கவராக இருக்க வாய்ப்புண்டு.

    ஆகமொத்தம் இந்த ஜாதகம் சொல்வது குரு பார்வை கோடி நன்மை.

    ReplyDelete
  61. அய்யா

    என்னோட மார்க்.,

    1st Place - 34
    9th Place - 29
    10th Place - 36
    11th Place - 29

    But Lagnapathi Sevvai (Vrichiga Lagnam) in 12th Place with 3 suya varga paral along with Ucha Sani 2 suya vargam.

    But 10th Place 36 helped me a lot.

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  62. Also 6, 8 and 12, 25 Paral for all.

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  63. Jagannath said...
    ஆகமொத்தம் இந்த ஜாதகம் சொல்வது குரு பார்வை கோடி நன்மை./////

    பாஸ் கலுக்குறீங்க...வாழ்த்துக்கள்...

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  64. /////நம்முடைய எதிரி எவ்வளவு வலிவோடு இருக்கிறான் என்பதை நாம் நன்றாக உணர்ந்தால்தான், அந்த அளவுக்கு நாம் வளர்ந்தாக வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி நமக்கு இருக்கும்/////

    என்று அண்ணா சொன்னார் என்பதை நினைவுகூர்ந்து

    எங்களது இயக்க வளர்ச்சிக்காக டெல்லியிலிருந்து 'தான் திரும்பி வருவேன்' குரல் கொடுக்கும் அம்மையாரை வாழ்த்துகிறோம்..

    ReplyDelete
  65. /////////bhuvanar said...

    அய்யா

    என்னோட மார்க்.,

    1st Place - 34
    9th Place - 29
    10th Place - 36
    11th Place - 29 \\\\\\\

    என்ன பாண்டியன் பாஸ் ஆகிட்டீங்க போலேருக்கே? கன்க்ராட்ஸ்..
    இந்த செவ்வாய் சனி சேர்க்கை பத்தி எங்கேயோ ஏதோ படிச்சமாதிரி ஞாபகம்..உங்களுக்கு அது ஞாபகம் இருக்கா?

    ReplyDelete
  66. ////////////Jagannath said...

    abcdefghijklmnopqrstuvwxyz //////////

    ஜோதிட சிரோன்மணி பட்டத்தைக் குறிவெச்சுருக்கார் போலேருக்கே
    டெலிகாம் என்ஜினியர்?

    ReplyDelete
  67. /////Blogger minorwall said...
    ////// minorwall said...
    ஜாதகத்தில் உள்ள டேட்டா வைக் கொண்டு ஜகன்னாத ஹோராவில் கணித்துப் பார்த்ததில் சுக்கிரனும் ஆறுக்குப் போகிறது../////
    sorry .. நான் சொல்லியிருப்பது தவறு..புதனும் ஆறுக்குப் போகிறான் என்றிருக்கவேண்டும்..
    புதனைத் தவிர்த்து அனைத்து கிரகங்களும் பதிவிட்டபடியே அமைந்துள்ளன..
    /////Srinivasa Rajulu.M said...
    ஜகன்னாத ஹோராவின் படி, களத்திர ஸ்தானாதிபதியும் களத்திர காரகனுமான சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் புதனுடன் இருக்கிறான் (29degrees & 49min). /////
    அயனம்சா எந்த முறை உபயோகப்படுத்தினார் என்று Srinivasa Rajulu.M சொன்னால் நல்லது என்று நினைக்கிறேன்..மற்றபடி எங்கே தவறு நடக்கிறது என்று தெரியவில்லை..மற்றவர்கள் யாராவது JH உபயோகப்படுத்தினால் கொஞ்சம் அலசிவிட்டு சொல்லவும்..வாத்தியார் கொடுத்திருக்கும் டேட்டாவில் longitude latitude விவரங்களை மேனுவலாக இன்புட் செய்திடவும்..லஹிரி சித்ரபக்ஷ அயனாம்சத்தை நான் உபயோகப்படுத்தினேன்..///////

    காரைக்குடி பகுதி மக்களின் ஜாதகங்களுக்கு நான் பெரும்பாலும் ராமன் அயனாம்சத்தைத்தான் உபயோகிப்பது வழக்கம்! அதுதான் கையில் உள்ள ஜாதகங்களுடன் ஒத்து வருகிறது மைனர்!

    ReplyDelete
  68. vrajesh said...
    வணக்கம் அய்யா, "லக்கினத்தில் குரு இருந்தால், அந்த ஜாதகனின் வாழ்க்கை பொதுவாக நன்றாக இருக்கும்" - குரு-ம் சந்திரனும் லக்னத்தில் அல்லது கேந்திரத்தில் இருந்தால் கஜேகேசரி யோகம். அத்துடன் கேது அல்லது ராகு இருந்தால் யோக பங்கமா? அதன் பலன் எப்படி அமையும். Thanks for your lession. Vrajesh from London.//////

    தீயகிரகங்கள் சேரும்போது யோகங்களால் கிடைக்க வேண்டிய அளவு பலன் கிடைக்காமல் போய்விடும்!

    ReplyDelete
  69. ///////Blogger minorwall said...
    கரூர் தியாகராஜன் சொஃப்ட்வேர் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கணித்துப் பார்த்ததில் Srinivasa Rajulu.M சொன்னதுபோலத்தான் வருகிறது..தச இருப்பு 2 வருடம் 3 மாசம் 6 தேதி..
    ஆனால் JH லே முன்பு நான் சொன்னதுபோலே குழப்பம் வருகிறது..
    சரி செய்து முன்னாள் இந்த ரெண்டு சொஃப்ட்வேர்களையும் கொண்டு கணித்து concurrent ரிசல்ட் வருகிறதா என்று பார்ப்பது வழக்கம். JH ஐ சரிசெய்யவேண்டிய அவசியம் இப்போது எழுந்துள்ளதாக நினைக்கிறேன்..
    எனி ஹவ் தேங்க்ஸ் Srinivasa Rajulu .//////

    தியாகராஜன் கொடுத்துள்ளது நன்றாக இருக்கும். அதிலேயே preference மெனுவில் பாருங்கள். அயனாம்சத்தைத் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது. அதையே பயன் படுத்துங்கள். கண்ட சரக்கை எல்லாம் அடித்து உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள் மைனர்!

    ReplyDelete
  70. //////Jagannath said...
    லக்னாதிபதி செவ்வாய் எட்டில். சனியின் மூன்றாம் பார்வை வேறு அவர் மேல் விழுகிறது. எனவே இளவயது வாழ்க்கை
    போராட்டமாக இருந்திருக்கலாம்.
    செவ்வாய் எட்டாமிடத்திருந்தாலும் ஆட்சி பெற்றிருப்பதால் செவ்வாய் தோஷம் இல்லை.

    லக்னத்திலிருக்கும் சந்திரன் அழகான தோற்றத்தைக் கொடுத்திருப்பார்.
    ஐந்தாமிடத்திலிருக்கும் புதன் நல்ல அறிவைக் கொடுத்திருப்பார். ஆனால் ஆறாமிடத்தின் அதிபதியாக இருப்பதால் அவருடைய தசா புக்தியில் சில கெடுதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.//////

    இதுவரை எல்லாம் சரிதான்!
    +======================

    //////செவ்வாய் தசை புதன் புத்தியிலோ, சுக்கிர புத்தியிலோ ஒரு கண்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.
    ஏழாமிட அதிபதி மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் ஆறில் மறைந்து நீச்சம் அடைந்ததால் நவாம்சத்தில் நல்ல அமைப்பு இல்லாத பட்சத்தில் திருமண தடைகள் ஏற்பட்டிருக்கலாம். களத்திர ஸ்தானம் பாபகர்த்தாரி யோகத்தில் இருந்தாலும் குரு மற்றும் சந்திரன் பார்வையால் தப்பிவிட்டார் என்று நினைக்கிறேன். சுக்கிரன் கேது சேர்க்கை குடும்பத்தில் சில மனஸ்தாபங்களை உண்டாக்கலாம்.//////

    தடைகள், கண்டம் என்பதெல்லாம் முற்றிலும் தவறு!
    +++++++++++++++++++++++++++++++++++++++++==
    ///////பாக்யஸ்தான அதிபதி குரு லாப ஸ்தானத்தில் இருப்பதாலும், லக்னாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தை நாலாம் பார்வையாகப் பார்ப்பதாலும் பண வரவுக்குக் குறைவிருக்காது.
    இரண்டாம் இட அதிபதி சுக்கிரன் ஆறில் நீச்சம் அடைந்திருந்தாலும் லக்னாதிபதி செவ்வாயின் ஏழாம் பார்வையை இரண்டாம் இடம் பெறுவதால் சொத்து சேர்க்கைக்குக் குறைவிருக்காது.
    சந்திரன் லக்னத்தோடு சம்பந்தப்பட்டிருபதால் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்கள் இருக்கும்.///////

    இது மூன்றும் சரிதான்!
    ++++++++++++++++++++++
    //// ஐந்தாம் இட அதிபதி சூரியன் ஆறில் மறைந்தாலும் புத்திர காரகன் குரு பார்வையை அவ்விடம் பெற்று இருப்பதால் சற்று தாமதத்திற்குப் பின் குழந்தை பிறந்திருக்கலாம்.//////

    இல்லை. தவறு!
    ++++++++++++++++++++++++++
    நான்காம் அதிபதி சந்திரன் லக்னத்தில் அமர்ந்ததால் நல்ல தாய், கல்வி, வாகன யோகம் அமையப் பெற்றிருக்கும்.
    தந்தை காரகன் சூரியன் ஆறில் மறைந்தாலும் ஒன்பதாம் அதிபதி குரு நல்ல இடத்தில் இருப்பதால் தந்தை உறவு சீராக இருந்திருக்கும். ஆனால் சூரியன், கேது சேர்க்கை தந்தை உறவைப் பாதித்திருக்கவும் வாய்ப்புண்டு.
    பதினொன்றாம் இடம் நன்றாக இருப்பதாலும் லக்னாதிபதி செவ்வாய் ஆட்சியில் இருப்பதாலும் நிறைய சகோதர சகோதரிகள், நில புலன்கள் சேர்க்கை இருக்க வாய்ப்புண்டு.
    சனி கேது சேர்க்கை இருப்பதால் செயல்திறன் மிக்கவராக இருக்க வாய்ப்புண்டு.
    ஆகமொத்தம் இந்த ஜாதகம் சொல்வது குரு பார்வை கோடி நன்மை.//////

    நல்லது. நன்றி நண்பரே! தொலைத் தொடர்புத் துறையில் பொறியாளராக இருந்து கொண்டு, இதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் ஏது நண்பரே?

    ReplyDelete
  71. /////Blogger bhuvanar said...
    அய்யா என்னோட மார்க்.,
    1st Place - 34
    9th Place - 29
    10th Place - 36
    11th Place - 29
    But Lagnapathi Sevvai (Vrichiga Lagnam) in 12th Place with 3 suya varga paral along with Ucha Sani 2 suya vargam.
    But 10th Place 36 helped me a lot.
    நன்றி
    பாண்டியன்//////

    யாரப்பா அங்கே? பாண்டியருக்கு ஒரு மகுடத்தைப் பரிசாகக் கொடுத்து அனுப்புங்கள்!

    ReplyDelete
  72. Blogger bhuvanar said...
    Also 6, 8 and 12, 25 Paral for all.
    நன்றி
    பாண்டியன்/////

    யாரப்பா அங்கே? இதற்குத் தனியாக பாண்டியருக்கு ஒரு பூச்செண்டைப் பரிசாகக் கொடுத்து அனுப்புங்கள்!

    ReplyDelete
  73. //////Blogger minorwall said...
    ////////////Jagannath said...
    abcdefghijklmnopqrstuvwxyz //////////
    ஜோதிட சிரோன்மணி பட்டத்தைக் குறிவெச்சுருக்கார் போலேருக்கே டெலிகாம் என்ஜினியர்?/////

    அவருடைய ஆர்வத்தைப் பாராட்ட வேண்டும். கூடிய சீக்கிரம் பட்டத்தைப் பெற்றுவிடுவார்!

    ReplyDelete
  74. ///----SP.VR. SUBBAIYA said...
    Blogger minorwall said...
    பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை பக்கத்தில் 'கைகாட்டி' என்று ஒரு ஊர் உள்ளது..
    எர்ணாகுளத்துக்காரர் ஏன் இந்தப் பெயர் வைத்தார் என்று புரியவில்லை?
    ப்ரோஃபைல் பிக்சர் செமை மிரட்டலாக இருக்கிறது..வெல் டன்.. கீப் இட் அப்..///////

    அண்ணாச்சியின் மீசையைப் பார்த்தால் எனக்கும் பயமாகத்தான் இருக்கிறது மைனர்!:-)))
    ---//

    நான் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். (தற்போது எர்ணாகுளத்தில் பணியில் உள்ளேன்.) எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பின் பெயர் கைகாட்டி. அதையே எனக்கும் புனைபெயராக்கிக் கொண்டேன்.
    மீசை??? !!! பயம் வேண்டாம், நான் குழந்தை மனசுக்காரன்...

    ReplyDelete
  75. minorwall said...
    /////////bhuvanar said...

    அய்யா

    என்னோட மார்க்.,

    1st Place - 34
    9th Place - 29
    10th Place - 36
    11th Place - 29 \\\\\\\

    என்ன பாண்டியன் பாஸ் ஆகிட்டீங்க போலேருக்கே? கன்க்ராட்ஸ்..
    இந்த செவ்வாய் சனி சேர்க்கை பத்தி எங்கேயோ ஏதோ படிச்சமாதிரி ஞாபகம்..உங்களுக்கு அது ஞாபகம் இருக்கா?///////

    அந்த கேள்வி பதில் செசன் பத்தி தான கேக்குறீங்க.,
    மறக்க முடியுமா மாம்ஸ்...
    நமக்கு சாதனை செய்யுருது புதுசு இல்லையே...

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  76. கைகாட்டி said...

    \\\\\\\\\\\\\\\\\\\\\\


    ///----SP.VR. SUBBAIYA said...
    Blogger minorwall said...
    பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை பக்கத்தில் 'கைகாட்டி' என்று ஒரு ஊர் உள்ளது..
    எர்ணாகுளத்துக்காரர் ஏன் இந்தப் பெயர் வைத்தார் என்று புரியவில்லை?
    ப்ரோஃபைல் பிக்சர் செமை மிரட்டலாக இருக்கிறது..வெல் டன்.. கீப் இட் அப்..///////

    அண்ணாச்சியின் மீசையைப் பார்த்தால் எனக்கும் பயமாகத்தான் இருக்கிறது மைனர்!:-)))
    ---//

    நான் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். (தற்போது எர்ணாகுளத்தில் பணியில் உள்ளேன்.) எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பின் பெயர் கைகாட்டி. அதையே எனக்கும் புனைபெயராக்கிக் கொண்டேன்.
    மீசை??? !!! பயம் வேண்டாம், நான் குழந்தை மனசுக்காரன்.../////////////


    எனக்கும் மீசை வைப்பதில் விருப்பம் அதிகமுண்டு..இங்கே ஜப்பானில் ஆரம்பத்தில் என்னுடன் வந்திருந்த பல தமிழர்களும் ஜப்பானியர் போலே மீசையை மழித்து விடவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு அதன்படியே செய்துவிட்டார்கள்..நான் கடைசிவரை செய்யவில்லை..இங்கே மொத்தத்தில் பார்க்கப்போனால் அதிகபட்சமாக விரல்விட்டு எண்ணக்கூடிய பெர்செண்டஜிலேயே மீசை வைத்த ஆட்கள் நடமாட்டம் உள்ளது..


    நானும் மீசை இப்படியெல்லாம் வைத்திருந்ததுண்டு..உங்களை இதுகுறித்து சொன்னபோது 'வெல் டன்.. கீப் இட் அப்..' என்று சொல்லியிருந்தேன்..மீசை சைனீஸ் மீசை ஸ்டைலில் தொங்கு மீசையாக இருந்ததால் முறுக்கு மீசையாக்கி மேலேற்றி வைக்கும் விதத்திலும் இருபொருள் படும் படியாக 'கீப் இட் அப்' என்று சொன்னேன்.. அதுவும் கூட பொருந்தி வரும் என்றே நினைக்கிறேன்..


    நானும் கொஞ்சம் ப்ரோபைல் பிக்சரை மாற்றி வைத்திருக்கிறேன்..

    ReplyDelete
  77. ////////////SP.VR. SUBBAIYA said...

    தியாகராஜன் கொடுத்துள்ளது நன்றாக இருக்கும். அதிலேயே preference மெனுவில் பாருங்கள். அயனாம்சத்தைத் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது. அதையே பயன் படுத்துங்கள். கண்ட சரக்கை எல்லாம் அடித்து உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள் மைனர்!//////////


    Scotch whiskey தவிர வேறு என்றால் அது Moet & Chandon Champagne என்றாகி கடைசியில் அதுவும் இல்லை என்றாகி ரெண்டு வருடம் ஆகப்போகிறது..இராமச்சந்திரா ஹாஸ்பிடல் கார்டியோலோஜிஸ்ட் Dr. தணிகாச்சலம் அவர்களை சந்தித்து சுயவிருப்பத்தின் பேரில் tread mill டெஸ்ட் எல்லாம் எடுத்து 'ஒன்றும் பிரச்சினையில்லை..எனினும் இனிமேல் லிக்கர் நிறுத்திவிடுவது நல்லது' என்ற ஆலோசனையுடன் நிறுத்தி வருடம் ரெண்டாகப் போகிறது..சிகரெட்டும் அப்போதுடன் ஓவர்.. எனவே அந்தக் கவலை எல்லாம் வேண்டாம்...நன்றி..


    JH பொறுத்தவரை நிறைய options இருக்கும்..உதாரணத்துக்கு dasa சர்ச், astavarga chart , divisional chart , divisional longitude , ayanaamsa change என்று எனக்குத் தெரிந்த குறைந்தஅளவு விஷயங்களை ஆராய அதிகப்படியான option கள் உள்ளது என்பதால் அலசுவதற்கு வசதி..நன்றி..

    ReplyDelete
  78. /////////-SP.VR. SUBBAIYA said...
    அண்ணாச்சியின் மீசையைப் பார்த்தால் எனக்கும் பயமாகத்தான் இருக்கிறது மைனர்!:-)))////////

    'அண்ணாச்சி' என்ற வார்த்தையை வாத்தியார் உபயோகிக்கும்போதே இது தெளிவாகிறது..

    ReplyDelete
  79. minorwall said...
    எனினும் இனிமேல் லிக்கர் நிறுத்திவிடுவது நல்லது' என்ற ஆலோசனையுடன் நிறுத்தி வருடம் ரெண்டாகப் போகிறது..சிகரெட்டும் அப்போதுடன் ஓவர்.. ///////

    எப்படி இந்த மாதிரி சாதனை எல்லாம் அசால்ட செய்யுறீங்க...ப்ளீஸ் கொஞ்சம் சொல்லிக்குடுங்க பாஸ்...

    ReplyDelete
  80. நல்லது. நன்றி நண்பரே! தொலைத் தொடர்புத் துறையில் பொறியாளராக இருந்து கொண்டு, இதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் ஏது நண்பரே?//

    மூன்று மாதங்களாக உங்கள் வலைமனையையும், சில புத்தகங்களையும் படித்து ஜோதிடம் கற்று வருகிறேன். விடுமுறையில் இருக்கும் நாட்களில் இது போன்ற ஜாதக அலசல் பயிற்சிகளில் ஈடுபடுகிறேன். உங்கள் வலைமனை ஜோதிடத்தோடு வாழ்க்கையைப் பற்றிய புரிதலையும், பிரபஞ்ச அமைப்புகளைப்
    ஆய்வுகளையும் மேற்கொள்கிறது. மற்ற ஜோதிடர்கள் கவனம் செலுத்தாத அஷ்டகவர்க்கம் மூலம் இறைவன் அனைவரையும் சமமாக நடத்துகிறான் என்பதை நீங்கள் புரிய வைப்பது சிறந்த ஆன்மீக சேவை குருவே.

    ReplyDelete
  81. வணக்கம் ஐயா, தங்களின் “வகுப்பறை” பற்றிய அறுமுகத்தை வலைச்சரத்தில் (http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_17.html)கொடுத்திருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com