மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

31.10.11

உன் கேள்விக்கு இதுதான்(டா) பதில்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உன் கேள்விக்கு இதுதான்(டா) பதில்!

மத்திய பொதுத்துறைத் தேர்வாணயம் கேட்ட கேள்விகளுக்கு, கிடைத்த அசத்தலான பதில்கள் சிலவற்றைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்:

முதலில் கேள்விகள்:

1. How can you drop a raw egg onto a concrete floor without cracking it?
2. If it took eight men ten hours to build a wall,how long would it take four men to build it?
3. If you had 3 apples and 4 oranges in one hand and four apples and three oranges in the other hand, what would you have?
4. How can you lift an elephant with one hand?
5. How can a man go eight days without sleep?
6. If you throw a red stone into the blue sea what it will become?
7. What looks like half apple?
8.  Bay of Bengal is in which state?

இவற்றிற்கு உங்கள் பதில் என்ன? ஒரு காகிதத்தில் குறித்துக்கொள்ளுங்கள். சரியான (சிறந்த விடை) கீழே உள்ளது.  சரிபார்த்த்துக்கொள்ளுங்கள்
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

1
Q.How can you drop a raw egg onto a concrete floor without cracking it?
A.Concrete floors are very hard to crack! (UPSC Topper)
2
Q.If it took eight men ten hours to build a wall,how long would it take four men to build it?
A. No time at all it is already built. (UPSC 23 Rank Opted for IFS)
3
Q.If you had 3 apples and 4 oranges in one hand and four apples and three oranges in the other hand, what would you have?
A. Very large hands.(Good one) (UPSC 11 Rank Opted for IPS)
4
Q. How can you lift an elephant with one hand?
A It is not a problem, since you will never find an
elephant with one hand. (UPSC Rank 14 Opted for IES)
5
Q. How can a man go eight days without sleep?
A. No Problem , He sleeps at night. (UPSC IAS Rank 98)
6.
Q. If you throw a red stone into the blue sea what it will become?
A. It will Wet or Sink as simple as that. (UPSC IAS Rank 2)
7.
Q. What looks like half apple ?
A : The other half. (UPSC - IAS Topper )
8
Q. Bay of Bengal is in which state?
A : Liquid (UPSC 33Rank )
----------------------------------------
சொந்த சரக்கல்ல. முன்பு மின்னஞ்சலில் வந்தது.
எத்தனை கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதிலைச் சொன்னீர்கள்?
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

18 comments:

kmr.krishnan said...

'எல்லாம் மாத்தி யோசி மாமூ' தான்

"உன் மனைவி தாலி இழந்தால் எங்கே சாப்பிடுவே?"என் தத்தாவின் க்ரூயெல் கேள்வி!

நல்ல கேள்விகள் , சாமர்த்தியமான பதில்கள்.இதைத்தான் நிர்வாக இயலில் எதிர்பார்க்கிறார்கள்.

காலையில் ஜாடையில் சல்யூட் செய்த அண்ணன் மகளை 'வாயைத்திறந்து குட் மார்னிங் சொல் என்றேன்.வாயை 'ஆ'வென்று திறந்து கொண்டு சல்யூட் செய்தாள்.தப்பென்ன

RAMADU Family said...

Guru vanakkam,

I got 9 correct, except the question on elephant.

தங்கம்பழனி said...

ம்..ம்.. நடத்துங்க..!

iyer said...

attenDANCF marked

Thanjavooraan said...

இப்படியே போச்சுன்னா 'வக்கிரம்'தான் அறிவின் விளக்கம் என்று ஆகிவிடும். இவர்களெல்லாம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக ஆகிவிட்டால் என்ன செய்யப் போகிறார்கள். பொதுமக்கள் ஒன்றுகூடி வந்து நின்று, குடிநீர் வேண்டும் என்று கேட்டால் என்ன சொல்வார்கள்? சாலைகள் சரியில்லை என்றாலோ, இந்த ஆண்டு விளைச்சல் இல்லை வரிவஜா செய்யவேண்டுமென்றாலோ, இதே பாணியில் பதில் அளிப்பார்களா? அப்படி பதில் சொல்வதைத்தான் அரசாங்கம் விரும்புகிறதா? இதைத்தான் புத்திசாலித்தனம் என்கிறார்களா? புதிய சிந்தனையாளர்கள் இவற்றைத்தான் புத்திசாலித்தனம் என்கிறார்கள் என்றால், அவர்களை ஒரு நல்ல மனோதத்துவ மருத்துவரிடம் அனுப்புவது நலம்.

rajakala said...

அன்புள்ள ஆசிரியருக்கு நானும் தஞ்சாவூர் அய்யாவின் கருத்தைத்தான் யோசித்துக்கொண்டு இருந்தேன் irresponsible அல்லது இடக்கு மொடக்கான பதில்கள்தான் இப்போது கை கொடுக்குமா?

R.Srishobana said...

வணக்கம் அய்யா,
இப்படி இரண்டொரு கேள்விகள் இருந்தால் தேர்வு எழுதுபவர்களுக்கு கொஞ்சம் "போர்" அடிக்காது.ஆனால் தாள் முழுவதும் இப்படியான கேள்விகளே இருந்தால் நாடு முன்னேறாது.
எனக்கு 4 மட்டும் தான் தேறியது.அந்த தரத்திற்க்கு தேற முடியவில்லை.

minorwall said...

I ve never tried these exams..
So no need to answer these silly trivial things..

RAMADU Family said...

//இப்படியே போச்சுன்னா 'வக்கிரம்'தான் அறிவின் விளக்கம் என்று ஆகிவிடும். இவர்களெல்லாம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக ஆகிவிட்டால் என்ன செய்யப் போகிறார்கள். பொதுமக்கள் ஒன்றுகூடி வந்து நின்று, குடிநீர் வேண்டும் என்று கேட்டால் என்ன சொல்வார்கள்? சாலைகள் சரியில்லை என்றாலோ, இந்த ஆண்டு விளைச்சல் இல்லை வரிவஜா செய்யவேண்டுமென்றாலோ, இதே பாணியில் பதில் அளிப்பார்களா? அப்படி பதில் சொல்வதைத்தான் அரசாங்கம் விரும்புகிறதா? இதைத்தான் புத்திசாலித்தனம் என்கிறார்களா? புதிய சிந்தனையாளர்கள் இவற்றைத்தான் புத்திசாலித்தனம் என்கிறார்கள் என்றால், அவர்களை ஒரு நல்ல மனோதத்துவ மருத்துவரிடம் அனுப்புவது நலம்.//

I don't think the blame should be on the candidates who responded to these questions, They only answered to these type of Childish quesitons set by the authorities.

kmr.krishnan said...

பனைமரத்தைப் பற்றிய கட்டுரையை மனப்பாடம் செய்து கொண்டு பையன் போனான்.பசுமாடு பற்றி எழுதச் சொல்லி வினாத்தாளில் வந்தது.பையன் தான் படித்துக்கொண்டு போன பனைமரத்தைப் பற்றி விலாவாரியாக எழுதிவிட்டு, 'இந்தப் பனைமரத்தில் உங்கள் பசு மாட்டைக் கட்டலாம்' என்று எழுதினானே அந்த் சாமர்த்தியம் தான் இந்த பதில்கள்.

யமனின் வாசலில் போய் அமர்ந்த நசிகேதனிடம் மூன்று வரம் பெற்றுக் கொண்டு இறப்பு ரகசியத்தைக் கேட்காமல் இரு என்று சொன்ன யமனிடம் 'நான் திரும்பிச் செல்லும் போது, என் தகப்பனார் பாவம் நீங்கி, அவருடைய இள‌மை திரும்பி,அதிகச் செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று... என்று ஒரே வரத்தில் பல பயன்களைப் பெற்றானே அந்த சாமர்த்தியம்தான் இது.

எனக்கு சந்தான பாக்கியம் கொடு என்று யமனிடம் கேட்டுக் கணவனின் உயிரை மீட்டாளே சாவித்ரி அந்த சாமர்த்தியம்தான் இது.

தாய் தந்தையைச் சுற்றினால் உலகத்தை சுற்றிய‌து ஆகாதா என்ற விநாயகரின் சாமர்த்தியம் தான் இது.

குழந்தையைக் கூறுபோட்டு பாதிப் பாதி தருகிறேன் என்று கூறி உண்மைத் தாயைக் கண்டு பிடித்தானே அந்த அரசனின் சாமர்த்தியம்தான் இது.

வேதாளத்தின் குயுக்திக்கெல்லாம் ஈடு கொடுத்துப் பதில் சொன்ன விக்ரமனின் சாமர்த்தியம்தான் இது.

'என் மகளின் தாய்' என்று சட்ட சபையில் கேள்விக்குப் பதில் அளித்து இருதார தடைச் சட்டத்தில் சிக்காமல் தப்பிய சாமர்த்தியம்தான் இது.

'அஸ்வதாம அத குஞ்சரஹ' என்று சொன்ன சாமர்த்தியம் தான் இது.

லேட‌ரல் திங்கிங், லாஜிக், க்விக் விட்டெட்னெஸ், ஆகியவைகளைச் சோதனை செய்ய இது போன்ற கேள்விகளும் பதில்களும் உதவுகின்றன.


லாஜிகல் ரீஸ‌னிங் தேர்வுகள் சொற்கள் இல்லாமல் உருவங்களும் குறியீடுகளாகவுமே இருக்கும்.

அதேபோல மனோத‌த்துவ பரிசோதனையில், ஐ க்யூ தேர்வு சிறிதுகூட நடைமுறயில் இல்லாத டெஸ்ட் ஆக இருக்கும்.

சதுரங்க விளையாட்டில் திடீரெனத் தோன்றும் ஒரு மூவ் வெற்றியைக் கொடுக்கும்.இப்போது சுடுக்கு.

இது போல் வித்தியாசமாக விடை அளிப்பவர்கள்மூளையை அதிகம் பயன்படுத்தும் திறன் உள்ளவர்களாக இருப்பார்கள்.

தேர்வான பின் ஆட்சியாளருக்கான பயிற்சியில்தான் அவர்களுக்கு குழு மன நிலை, பிரச்சனைகளை கையாளுதல்,எதிர்கொள்ளுதல்,மனித‌ நிர்வாகம்,சட்டம், திட்டமிடுதல், திட்டத்தைச் செயல் படுத்துதல், தகவல் பறிமாற்றம் இன்னும் பல பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

Thanjavooraan said...

KMR's response is a fantastic nonsense.

Thanjavooraan said...

இந்த விவாதத்தைத் தொடர எனக்கு இஷ்டமில்லை. இருந்தாலும் அன்றைக்கிருந்த பெரியோர்கள் சர்.சி.வி.ராமன், ஜெகதீச சந்திரவசு, தமிழகத்தில் புகழ்பெற்று விளங்கிய பல மாவட்ட கலெக்டர்கள் இவர்கள் எல்லோரும் இப்படிப்பட்ட கிறுக்குத்தனமான பதில்களைச் சொல்லித்தான் தங்கள் புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டினார்களா? வாதம் செய்வதற்காக எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்த முடியும். இதுகுறித்த என் மறுமொழி இதோடு நிறுத்தப்படுகிறது.

kmr.krishnan said...

///KMR's response is a fantastic nonsense.///

ஹாஹ்.. ஹாஹ்.. ஹா

பெரியவர் பண்டித நேருவின் admirer.

நேருவின் வாசகங்களை நேரம் அறிந்து உபயோகப்படுத்துகிறார்.

நானும் 'நான்சென்சு போராட்டம்' எல்லாம் நடத்தாமல் இருந்து கொள்கிறேன்.

'அதென்ன போராட்டம்?' என்று மைனர்வாள் கேட்டால் தஞ்சாவூராரே பதில் சொல்ல வேண்டுகிறேன்.

அந்தக் காலத்தில் குறைவான நபர்களே போட்டித் தேர்வு எழுதுவார்கள்.பொது அறிவு போன்ற சாதாரணத் தேர்வுகளே போதுமானதாக இருந்தன‌. மனப்பாடத்திறமை இருக்கும் யாரும் அந்தத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறமுடிந்தது.

1960க்குப் பின்னர் பொதுத்தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வரத் தேவை ஏற்படது.வெறும் எழுதப் படிக்கத் தெரியும் என்பதிலிருந்து, சுயமாகச் சிந்திக்கக் கூடிய திறமையைக் க்ண்டு அடையும் வகையாக மாற்றப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது.அப்போது கல்வியியல் நிபுணர்கள் அறிமுகப்படுத்திய் முறைதான்
லாஜிகல் ரீசனிங் முதலியவை.

விடுகதை மாதிரியான கேள்விகள் இவை. விடுகதைக் குண்டான யோசிக்க வைக்கும் பின்புலத்துடன் அமைக்கப்பட்ட கேள்விகள்.அதற்குரிய பதில்கள் அவை.

சிலேடை என்பதை ஒருவகை நகைச்சுவை(இலக்கியம்?) என்று எடுத்துக் கொண்டால், அந்த நகைச்சுவை இந்தப் பதில்கள்.

கிவாஜ‌ போன்றவர்கள் வெற்றிகரமாகக் கையாண்டது சிலேடை நயம்.

இதையெல்லாம் நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா?நீங்களே எப்படிப்ப‌ட்ட‌
சிலேடைப் பேச்சுக்காரார் என்று எனக்குத் தெரியாதா?

எங்கே சிரிப்பு வருது, சிரிப்பு வருது, சிரிப்பு வருது, வருது, வருது, வருது..........

ஹி ஹி ஹி ஹிஹ் ஹீஈஈஈஈஈஈ!

தேமொழி said...

நான் சாமர்த்தியசாலி இல்லை என்று தெரிந்து கொண்டேன். இல்லாவிட்டால் யானையைத் தராசு போன்ற பெரிய இரும்பு கூண்டுக்குள் விட்டு, இரும்பு நெம்புகோலை ஒரு பெரிய பாரங்கல்லின் மேல் வைத்து, நெம்பினால் முடியுமா என்று யோசிப்பேனா? ஹூம்... நானெல்லாம் தேருவேங்கறீங்க?

தமிழ் விரும்பி said...

கேள்விகள் ஐந்துக்கும் ஆறிற்கும் பதிலை சரியாக யூகித்திருந்தேன்...
இருந்தும் இவ்வளவு வக்கிரமாக பதில் கூறுவது தான் இது போன்ற உயர்பதவிக்கு தகுதி என்பதை பார்க்கும் பொது இவைகள் தலை அகராதிக்ளுக்குத் தான் சரி வரும் என நினைக்கிறேன்... என் தலையகராதியாக இல்லை என்றே தோன்றுகிறது.... தலையகராதி= தலை+அகராதி...
நன்றி,
ஆலாசியம் கோ.

kmr.krishnan said...

// இவ்வளவு வக்கிரமாக பதில் கூறுவது தான் இது போன்ற உயர்பதவிக்கு தகுதி என்பதை பார்க்கும் பொது இவைகள் தலை அகராதிக்ளுக்குத் தான் சரி வரும் என நினைக்கிறேன்... //

இவை மட்டுமே தேர்வுக்கான கேள்விகள் அல்ல. இவையும் வேறு பலவும் உண்டு.இப்போதெல்லாம் முதற்கட்டம், இர‌ண்டாம் கட்டம்,நேர்முகம் என்று
தேர்வுகள் உள்ளன.

தமிழ்நாட்டில் இருந்து IAS, IPS Iஃப்ஸ் தேர்வுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.எல்லோருமே சாஃப்ட்வேர் என்று ஓடிக் கொண்டு உள்ளார்கள். நமது மரபு பற்றி அறியாத வெளிமாநில அதிகாரிகள் வசம் நமது நிர்வாகம் செல்லக் கூடிய சூழல் விரைவில் வரப்போகிறது.

kmr.krishnan said...

///இல்லாவிட்டால் யானையைத் தராசு போன்ற பெரிய இரும்பு கூண்டுக்குள் விட்டு, இரும்பு நெம்புகோலை ஒரு பெரிய பாரங்கல்லின் மேல் வைத்து, நெம்பினால் முடியுமா என்று யோசிப்பேனா? ஹூம்... நானெல்லாம் தேருவேங்கறீங்க?///

நீங்கள் யோசித்ததிலும் தவறில்லை. அது பெரும்பான்மையோர் யோசிக்கும்
வழக்கமான கன்வென்ஷ‌னல் சிந்தனை.இந்தக் கேள்விகள் வித்தியாசமான அணுகுமுறையில் யூகிக்க‌பட வேண்டும் என்ற புரிதலை உங்க‌ளுக்கும் முன்கூட்டியே அளித்து இருந்தால் நீங்களும் பதிவில் கொடுத்துள்ளதை விட சூப்பர் பதிலைக் கொடுத்து இருப்பீர்கள்.

iyer said...

அய்யரின் அன்றைய நினைவுகளை
அப்படியே பகிர்நது கொள்கிறோம்..

அது டெல்லியில் நிகழ்ந்தது..
அந்நாளின் பள்ளி படிப்பை முடித்ததும்

மத்திய அரசு வேலை நேர்முக தேர்வு
மனம் தளராமல் துணிவாக சந்தித்தது

தேர்வாளர் கேட்டார்
தேர்ந்து எடுக்கப்பட்டால் பணியிடம்

உத்தரா...? தஷ்ஷினா..?

அன்றைய மொழி அறிவு மற்றும்
அறிவு முதிர்ச்சி நேர்முகமகமாக

இப்படி சிந்திக்க வைத்தது
இதன் பொருள் மாறாமலே..

உத்தர் என்றால் வடக்கு
தஷ்ஷின் என்றால் தெற்கு

தென்னிந்திய மாணவனுக்கு
தேன்போன்ற மத்தியரசு வேலை என

வடக்கிலேயே வேலை வாங்கிடுவோம்
வாங்கியபின் பெற்றிடுவோம் மாற்றல்

என்ற கனவிலேயே
எந்த சிந்தனையும் இல்லாது

"உத்தர்" என்றே பதில் சொன்னது
உள்ளபடியே பார்த்தால் அதற்கு

உத்தர் என்றால் இறங்கிச் செல்
தஷ்ஷின் என்றால் தட்சனை கொடு

என்பதன் code வார்த்தைகள்
என பிறகு தான் தெரிந்தது..

உத்தருக்கும்
தஷ்ஷினுக்கும் இப்படியும் பொருள்

இது சரியா தவறா என்பதற்காகஅல்ல
இது .. எண்ணத்தில் வந்தது பகிர்ந்தது..

வணக்கமும்
வாழ்த்துக்களும்