மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

11.10.11

நகைச்சுவை: அடடா, இதல்லவா உண்மையான ஆப்பிள் குடும்பம்!

-------------------------------------------------------------------------
நகைச்சுவை: அடடா, இதல்லவா உண்மையான ஆப்பிள் குடும்பம்!
எப்படி உள்ளது படம்?
இறக்குமதிச் சரக்கு; மின்னஞ்சலில் வந்தது.

நேற்றையப் பாடத்தைப்பற்றி, “பெரிய பாடமாக உள்ளது. அத்துடன் பின்னூட்டங்களும் செமையாக உள்ளது. படித்துப் புரிந்து கொள்வதற்கு
டயம் வேண்டும்” என்று ஒரு அன்பர் எழுதியுள்ளார். அவர் வேண்டுகோள் ஏற்கப்பட்டு. இன்று பாடம் எதையும் வலையேற்றவில்லை!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

42 comments:

தேமொழி said...

ஹி...ஹி....ஹீ....

ananth said...

பார்த்தவுடனேயே சிரிக்க வைத்து விட்டது.

குறிப்பிட்ட மாணவர் விளங்கிக் கொள்ள அவகாசம் தேவைப்படுவதோடு வாத்தியாருக்கும் சிறிது ஓய்வு தேவைப் படும். சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். நானும் வகுப்பிற்கு கட் அடித்து விட்டு சினிமாவிற்கு போக முடியாது. வேலைக்குப் போக வேண்டும்.

Nila said...

இன்று பாடம் இல்லை.ஏமாற்றம் ஆக உள்ளது அய்யா. கொஞ்சம் பில்டர் காஃபியாவது கொடுத்து இருக்கலாம்...

kmr.krishnan said...

முதல் முதலாக ipad நான் சென்றசமயம் தான் லண்டனில்
என் மகள் வீட்டில் அறிமுகம். ஒரு டெஸ்க் டாப், இரண்டு லேப் டாப்,ஒரு ஐ பேட் என்று ஆளுக்கு ஒன்றாக வைத்துக் கொண்டு அதையே பார்த்துக்கொண்டு இருப்போம்.4 வயது பேத்தி உட்பட.

ஐ பேட் என்னைப் போன்ற‌வர்களுக்கு வசதியாக சோஃபாவில் அமர்ந்து பார்க்க மிகவும் செள‌கர்யம்.

இது போன்ற சாதனங்களுக்கு நாம் இப்போது செலவழிக்கும் தொகையும் , நேரமும் சரிதானா என்று பலமுறை நான் சிந்திப்பதுண்டு.அந்த கார்டூனில் உள்ள அப்பாவின் பாவத்தில் நானும் பலமுறை கருவிக் கொண்டு உட்காருவது உண்டு.
நல்ல நகைச்சுவைதான்!

தமிழ் விரும்பி said...

ஹி...ஹி..ஹி...

பார்த்த உடனேயே சிரிப்பு வந்துவிட்டது....
ஹி...ஹி..ஹி...

நன்றி.
ஆலாசியம் கோ.

iyer said...

ஆப்பிளை பற்றி இன்றும் தொடரும்
ஆகா எத்தனை ஊட்டங்கள்..

ஆப்பிள் logoவில் கூட யாரோ அதை
அந்தப்பக்கம் கடித்து வைத்தது போல

அதைப்பற்றி யாராவதுசொல்வார்களென
அவர்களைப் போலவே காத்திருந்தோம்

அவரைப் போல தாடி வைத்தவர்கள்
அனேகமாக புத்திசாலியாகவே உள்ளனர்

தாடிக்குள் இருப்பது சோகமல்ல
தடைதாண்டி நிற்கும் வெற்றிகள் ..

இதுவென்ன தாடி சோதிடமா என
இப்படி யாரும் கேட்கவேண்டாம்..

இன்றைய வகுப்பில் வரும்
இந்த அரிய சிந்தனையுடன்..

when the God leaving us at cliff;
TRUST and BELIEVE
one of two things will happen;
either He will teach when you fall
or TEACH how to fly..
- பைபிளில் இருந்து,,,

SP.VR. SUBBAIYA said...

/////Blogger தேமொழி said...
ஹி...ஹி....ஹீ....////

நன்றி அம்மணி! (அம்மணி என்றால் சகோதரி)

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Nila said...
இன்று பாடம் இல்லை.ஏமாற்றம் ஆக உள்ளது அய்யா. கொஞ்சம் பில்டர் காஃபியாவது கொடுத்து இருக்கலாம்.../////

வெறும் காஃபியைக் கொடுத்தால் நன்றாக இருக்காதே அம்மணி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger kmr.krishnan said...
முதல் முதலாக ipad நான் சென்றசமயம் தான் லண்டனில்
என் மகள் வீட்டில் அறிமுகம். ஒரு டெஸ்க் டாப், இரண்டு லேப் டாப்,ஒரு ஐ பேட் என்று ஆளுக்கு ஒன்றாக வைத்துக் கொண்டு அதையே பார்த்துக்கொண்டு இருப்போம்.4 வயது பேத்தி உட்பட.
ஐ பேட் என்னைப் போன்ற‌வர்களுக்கு வசதியாக சோஃபாவில் அமர்ந்து பார்க்க மிகவும் செள‌கர்யம்.
இது போன்ற சாதனங்களுக்கு நாம் இப்போது செலவழிக்கும் தொகையும், நேரமும் சரிதானா என்று பலமுறை நான் சிந்திப்பதுண்டு.அந்த கார்டூனில் உள்ள அப்பாவின் பாவத்தில் நானும் பலமுறை கருவிக் கொண்டு உட்காருவது உண்டு.
நல்ல நகைச்சுவைதான்!//////

அதிக நேரத்தை செல்வழிப்பதுதான் வருந்தக்கூடியது. அதனால் புத்தகங்களைப் படிக்கும் பழக்கமெல்லாம், பாழாகிக்கொண்டு வருகிறது!
நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

Blogger தமிழ் விரும்பி said...
ஹி...ஹி..ஹி...
பார்த்த உடனேயே சிரிப்பு வந்துவிட்டது....
ஹி...ஹி..ஹி...
நன்றி.
ஆலாசியம் கோ.////////

தினமும் ஜோதிடப் பாடத்தைப்போட்டு உங்கள் அனைவரையும் டென்சனாக்குவதற்குப் பதில் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு பதிவுகள் இப்படிப்போட்டால்தான் மனம் சற்று மகிழ்வடையும் ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

Blogger iyer said...
ஆப்பிளை பற்றி இன்றும் தொடரும்
ஆகா எத்தனை ஊட்டங்கள்..
ஆப்பிள் logoவில் கூட யாரோ அதை
அந்தப்பக்கம் கடித்து வைத்தது போல
அதைப்பற்றி யாராவதுசொல்வார்களென
அவர்களைப் போலவே காத்திருந்தோம்
அவரைப் போல தாடி வைத்தவர்கள்
அனேகமாக புத்திசாலியாகவே உள்ளனர்
தாடிக்குள் இருப்பது சோகமல்ல
தடைதாண்டி நிற்கும் வெற்றிகள் ..
இதுவென்ன தாடி சோதிடமா என
இப்படி யாரும் கேட்கவேண்டாம்..//////

நீங்கள் தாடி வைத்திருக்கிறீர்களா? உங்கள் படத்தை ஏன் ஃப்ரொஃபைலில் போடவில்லை விசுவநாதன்?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ananth said...
பார்த்தவுடனேயே சிரிக்க வைத்து விட்டது.
குறிப்பிட்ட மாணவர் விளங்கிக் கொள்ள அவகாசம் தேவைப்படுவதோடு வாத்தியாருக்கும் சிறிது ஓய்வு தேவைப் படும். சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். நானும் வகுப்பிற்கு கட் அடித்து விட்டு சினிமாவிற்கு போக முடியாது. வேலைக்குப் போக வேண்டும்./////

படிக்கிற காலத்தில் போயிருக்கிறீர்கள் அல்லவா? நான் போயிருக்கிறேன்!

Yoga.s.FR said...

நல்ல காத்திரமான நகைச்சுவையுடன் கூடிய,பெற்றவர்களுக்கு ஆனந்தம்? தரக் கூடிய பதிவு!

sriganeshh said...

Some of my doubts arising on breaking my little brain…

1. Lagna is 149.3 degrees …then why we should not see effects taking virgo as lagna ? If we see from there, Mercury being lagna & 10th lord in 5th (friendly Saturn house) in the nakshatra of moon (lord of 11th house)…can we say justifies his billionaire status acquired through knowledge business.

2. Lagna lord is in nakshatra of Rahu ….is it sort of eclipse???? Further if we consider point no.1, then lagna lord is in 8th … net effect lagna lord is weak. Is it so….???
3. Your point no.5 requires further study for me as I feel even though 10th house has high astakavarga points and Saturn is uchha but the dispositor is venus only. Venus will give only creativity which he did. But earning potential has to be from employment or business …here Saturn means employment which he never excelled…so something I am missing here….
4. considering point no.1 here, then 10 th lord Mercury may give knowledge business which supported by venus creativity ensures money flow….may be am trying to justify too..?

or alternatively I may be looking his chart wrongly..will stop here and will take this for further study at a later time… with inputs from you.
Thanks once again for your beautiful analysis...when i go through the same, i am getting lot of insights.

bhuvanar said...

வழக்கம் போல் பதிவு அருமை...எனது எக்ஸ்பீரியன்ஸ்லூம் ipad போன்ற முன்றாம் ஜேநேரேடன் சாதனங்களை உபோயோகிப்பதால் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைகிறது என்பதே உண்மை...உண்மை...உண்மை...

நன்றி

பாண்டியன்

SP.VR. SUBBAIYA said...

////Blogger Yoga.s.FR said...
நல்ல காத்திரமான நகைச்சுவையுடன் கூடிய,பெற்றவர்களுக்கு ஆனந்தம்? தரக் கூடிய பதிவு!//////

உண்மைதான் நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger sriganeshh said...
Some of my doubts arising on breaking my little brain
1. Lagna is 149.3 degrees …then why we should not see effects taking virgo as lagna ? If we see from there, Mercury being lagna & 10th lord in 5th (friendly Saturn house) in the nakshatra of moon (lord of 11th house)…can we say justifies his billionaire status acquired through knowledge business.
2. Lagna lord is in nakshatra of Rahu ….is it sort of eclipse???? Further if we consider point no.1, then lagna lord is in 8th … net effect lagna lord is weak. Is it so….???
3. Your point no.5 requires further study for me as I feel even though 10th house has high astakavarga points and Saturn is uchha but the dispositor is venus only. Venus will give only creativity which he did. But earning potential has to be from employment or business …here Saturn means employment which he never excelled…so something I am missing here….
4. considering point no.1 here, then 10 th lord Mercury may give knowledge business which supported by venus creativity ensures money flow….may be am trying to justify too..?
or alternatively I may be looking his chart wrongly..will stop here and will take this for further study at a later time… with inputs from you. Thanks once again for your beautiful analysis...when i go through the same, i am getting lot of insights.///////

ஒரு பதிவுக்குள்ள கேள்வியை அந்தப் பதிவில் கேட்பதுதானே முறை! இங்கே வந்து கேட்டால் எப்படி? பின்னூட்டங்களைப் படிப்பவர்கள் என்ன செய்வார்கள். ரிவர்ஸில் போய் அந்தப் பதிவைப் பார்க்க வேண்டுமல்லவா? ஆகவே உங்கள் கேள்விகளை அந்தப் பதிவிலேயே கேளுங்கள்! பதில் சொல்கிறேன்! இது அனைவருக்கும் பொதுவான செய்தியாகும்

SP.VR. SUBBAIYA said...

/////Blogger bhuvanar said...
வழக்கம் போல் பதிவு அருமை...எனது எக்ஸ்பீரியன்ஸ்லூம் ipad போன்ற முன்றாம் ஜேநேரேடன் சாதனங்களை உபோயோகிப்பதால் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைகிறது என்பதே உண்மை...உண்மை...உண்மை...
நன்றி
பாண்டியன்//////

இது போன்ற ஆடம்பர சாதனங்களை, அவர்கள் அடுதத்டுத்து வெளியிடும் மேம்படுத்தப்பெற்ற புது சாதனங்களை (New Version) வாங்குவதற்கு பணம் செல்வழிக்க வேண்டியதாக உள்ளது. காந்தி சொன்ன எளிய வாழ்க்கை எல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. அதை எங்கேபோய்ச் சொல்வது?

Rajaram said...

ஹையா ஜாலி இன்றைக்கு வகுப்பறையில் பாடம் ஒன்றும் இல்லை.நல்ல நகைச்சுவையான கார்ட்டூன் வெளியிட்டு அசத்திவிட்டீர்கள்.என்னதான் Apple,Ipad என்று போனாலும் முட்டையிடும் கோழிக்குத்தானே வலி தெரியும்.

R.Srishobana said...

வ‌ணக்கம் அய்யா,
இன்று மிகவும் நல்ல பாடம்.ஆம் வாழ்க்கை பாடம் சிரித்து கொண்டே இருக்க வேண்டும்."வைதேகி காத்திருந்தாள்",பெட்டமார்ஸ் லைட் காமெடி வகுப்பரையில் பார்த்ததைப் போன்று இருந்தது.இன்று வகுப்பரை கலகலவென‌ "சூப்பர்".

RAMADU Family said...

Good one and Timely.

Ramadu.

RAMADU Family said...

Good one and timely too

minorwall said...

புத்தகம் படிப்பது குறைந்திருக்கிறது என்பது உண்மை..இன்போர்மஷன் டெக்னோ வளர்ந்து கூகிள் தயவுடன் எதைப்பற்றியும் தெரிந்துகொள்ள இந்த இந்த வசதிகள் பெரிதும் உபயோகமாயிருக்கின்றன..என்பதை நான் மாற்றுக்கருத்தாகப் பார்க்கிறேன்..
புத்தகங்களே இ-புக் வடிவிலே நிறைய வந்திருப்பதால் பெரிய லைப்ரரி என்று அலையாமல் இருந்த இடத்திலேயே பல புத்தகங்களைத் தேடிப்படிக்க
இந்தவகை சாதனங்கள் மூலம் எனக்கென்னவோ வசதி அதிகரித்திருக்கிறது என்றே நினைக்கிறன்..
2TB ஹார்ட்டிஸ்க்கிலே ஒரு கன்னிமராவையே அடக்கி எடுத்துக்கொள்ளலாம் என்றெல்லாம் பெரும் மாற்றங்கள் இருப்பதால் எப்போதும் 'எதைப் பார்க்கவேண்டும்..எதைப்படிக்கவேண்டும்' என்பது நமது mood ஐப் பொறுத்தே...எதுவும்..

Srinivasa Rajulu.M said...

ஐ (i) நல்ல குடும்பம் :-)
ஐ-யோ பாவம் பெரியவர்!
நன்றி சார்!

minorwall said...

/////Srinivasa Rajulu.M said...
ஐ (i) நல்ல குடும்பம் :-)
ஐ-யோ பாவம் பெரியவர்!
நன்றி சார்!/////

நல்ல கமென்ட்..

bhuvanar said...

நீங்கள் இ-மெயிலில் உள்ள டெக்னோவை பார்கிறீர்கள்...நாங்கள் கடிதத்தில் உள்ள உணர்வுகளை பார்க்கின்றோம்...
iPod ல் விரும்பிய பாட்டை ஸ்டோர் செய்து நினைத்த நேரத்தில் கேட்பதை விட எதிர் பார்க்காத நேரத்தில் வானொலியில் நமக்கு விரும்பிய பாடல் ஒலிக்கும்போது உள்ள பூரிப்பே மேலானது என்பதே எனது கருத்து...
இன்று பெரும்பாலான சிறுவர்களுக்கு நமது பாரம்பரிய விளையாட்டுக்கள் தெரியாமலே பொய் விட்டதன் காரணம் டெக்னோ வளர்ச்சியே...
சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்...

bhuvanar said...

அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியால் பல சாதனைகள் நடப்பது உண்மைதான்...ஆனால் தொலைநோற்கு பார்வையோடு பார்த்தல் பாதங்களே அதிகமாக தெரிகிறது...
குடும்ப கட்டுமானம் இன்றைய தேதயில் சிதைந்து காணபடுவதுற்கு தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு மிக பெரிய காரணமாகவே தெரிகிறது...
நன்றி
பாண்டியன்

iyer said...

///நீங்கள் தாடி வைத்திருக்கிறீர்களா? உங்கள் படத்தை ஏன் ஃப்ரொஃபைலில் போடவில்லை////

இருபத்து நான்கு வருடத்திற்கு மேல்
இப்படியே எடுக்காமலிருக்கும் தாடியை

தடவிக்கொண்டே சொல்கிறோம்
தாடியை விடுங்கள்..

அவர் யோகத்துடன் ஒப்பிட்டபோது
அதிலிருந்து சில யோகம் அய்யருக்கும்

... அமலா யோகம்
... புத ஆதித்ய யோகம்

இது சின்ன கவுண்டர் படத்தில்
செந்தில் என்ற நகைச்சுவை நடிகர்
தம் கை நகத்தில் வெள்ளையாக இருக்கு தமக்கும் புது உடை கிடைக்கும் என அப்பாவித் தனமாக சொல்வது போல் இருக்குன்னு யாராவது சொல்லப் போறாங்க.. (சும்மா ஒரு "இது"க்கு தான்)

SP.VR. SUBBAIYA said...

////Blogger Rajaram said...
ஹையா ஜாலி இன்றைக்கு வகுப்பறையில் பாடம் ஒன்றும் இல்லை.நல்ல நகைச்சுவையான கார்ட்டூன் வெளியிட்டு அசத்திவிட்டீர்கள்.என்னதான் Apple,Ipad என்று போனாலும் முட்டையிடும் கோழிக்குத்தானே வலி தெரியும்./////

கோழிக்குத்தான் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிரதே! எப்படி வலி தெரியும்?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger R.Srishobana said...
வ‌ணக்கம் அய்யா,
இன்று மிகவும் நல்ல பாடம். ஆம் வாழ்க்கை பாடம் சிரித்து கொண்டே இருக்க வேண்டும்."வைதேகி காத்திருந்தாள்",பெட்ரமாக்ஸ் லைட் காமெடி வகுப்பறையில் பார்த்ததைப் போன்று இருந்தது. இன்று வகுப்பரை கலகலவென‌ "சூப்பர்".///////

டேய் மண்டையா, அம்மணி வூட்டுக்கு பெட்ரமாக்ஸ் ஒன்னு அனுப்பி வைடா!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger RAMADU Family said...
Good one and timely too////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger minorwall said...
புத்தகம் படிப்பது குறைந்திருக்கிறது என்பது உண்மை..இன்போர்மஷன் டெக்னோ வளர்ந்து கூகிள் தயவுடன் எதைப்பற்றியும் தெரிந்துகொள்ள இந்த இந்த வசதிகள் பெரிதும் உபயோகமாயிருக்கின்றன..என்பதை நான் மாற்றுக்கருத்தாகப் பார்க்கிறேன்..
புத்தகங்களே இ-புக் வடிவிலே நிறைய வந்திருப்பதால் பெரிய லைப்ரரி என்று அலையாமல் இருந்த இடத்திலேயே பல புத்தகங்களைத் தேடிப்படிக்க இந்தவகை சாதனங்கள் மூலம் எனக்கென்னவோ வசதி அதிகரித்திருக்கிறது என்றே நினைக்கிறன்..
2TB ஹார்ட்டிஸ்க்கிலே ஒரு கன்னிமராவையே அடக்கி எடுத்துக்கொள்ளலாம் என்றெல்லாம் பெரும் மாற்றங்கள் இருப்பதால் எப்போதும் 'எதைப் பார்க்கவேண்டும்..எதைப்படிக்கவேண்டும்' என்பது நமது mood ஐப் பொறுத்தே...எதுவும்../////////

நல்லது மைனர். அப்படியாவது இளம் மக்கள் படிக்கட்டும். (படங்களைப் பார்க்காமல்)

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Srinivasa Rajulu.M said...
ஐ (i) நல்ல குடும்பம் :-)
ஐ-யோ பாவம் பெரியவர்!
நன்றி சார்!/////

உண்மைதான். அதுபோன்ற பாவப்பட்ட ஜென்மம் குடும்பத்திற்கு ஒன்று தேறும்!

SP.VR. SUBBAIYA said...

Blogger bhuvanar said...
நீங்கள் இ-மெயிலில் உள்ள டெக்னோவை பார்கிறீர்கள்...நாங்கள் கடிதத்தில் உள்ள உணர்வுகளை பார்க்கின்றோம்...
iPod ல் விரும்பிய பாட்டை ஸ்டோர் செய்து நினைத்த நேரத்தில் கேட்பதை விட எதிர் பார்க்காத நேரத்தில் வானொலியில் நமக்கு விரும்பிய பாடல் ஒலிக்கும்போது உள்ள பூரிப்பே மேலானது என்பதே எனது கருத்து... இன்று பெரும்பாலான சிறுவர்களுக்கு நமது பாரம்பரிய விளையாட்டுக்கள் தெரியாமலே பொய் விட்டதன் காரணம் டெக்னோ வளர்ச்சியே... சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்...//////

கிள்ளியும் விடுகிறீர்கள். தொட்டிலை ஆட்டியும் விடுகிறீர்கள்!

SP.VR. SUBBAIYA said...

////////Blogger bhuvanar said...
அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியால் பல சாதனைகள் நடப்பது உண்மைதான்...ஆனால் தொலைநோக்குப் பார்வையோடு பார்த்தல் பாதகங்களே அதிகமாக தெரிகிறது... குடும்ப கட்டுமானம் இன்றைய தேதியில் சிதைந்து காணபடுவதுற்கு தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு மிக பெரிய காரணமாகவே தெரிகிறது...
நன்றி
பாண்டியன்///////

சாட்டிலைட் டி.வி. தினமும் 15 சீரியல்கள். வாரம் 20 திரைப்படங்கள். மக்களை எல்லாம் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள்.

SP.VR. SUBBAIYA said...

///////Blogger iyer said...
///நீங்கள் தாடி வைத்திருக்கிறீர்களா? உங்கள் படத்தை ஏன் ஃப்ரொஃபைலில் போடவில்லை////
இருபத்து நான்கு வருடத்திற்கு மேல்
இப்படியே எடுக்காமலிருக்கும் தாடியை
தடவிக்கொண்டே சொல்கிறோம்
தாடியை விடுங்கள்..
அவர் யோகத்துடன் ஒப்பிட்டபோது
அதிலிருந்து சில யோகம் அய்யருக்கும்
... அமலா யோகம்
... புத ஆதித்ய யோகம்
இது சின்ன கவுண்டர் படத்தில்
செந்தில் என்ற நகைச்சுவை நடிகர்
தம் கை நகத்தில் வெள்ளையாக இருக்கு தமக்கும் புது உடை கிடைக்கும் என அப்பாவித் தனமாக சொல்வது போல் இருக்குன்னு யாராவது சொல்லப் போறாங்க.. (சும்மா ஒரு "இது"க்கு தான்)////////

24 வருட தாடியா? அய்யா சாமி, பயமா இருக்குதே!

Rajaram said...

ஐயா,நான் சொன்னது அந்தக்கோழியில்லை(Apple)பக்கத்தில் ஒரு குடும்பத்தலைவர் தலையில் கைவைத்து(ipaid)உட்கார்ந்திருக்கிறாரே!பாவம் அவரைச்(கோழி என்று) சொன்னேன்.

தேமொழி said...

"பண்ணையெல்லாம் பொன் கொழிக்க செய்திடுவோம் அதில் பன்மடங்கு உற்பத்தியை பெருக்கிடுவோம், கண்மணி போல் நெல்மணியை வளர்த்திடவே நாளும் கருத்துரைக்கும் ஒலிபரப்பை கேட்டிடுவோம், பட்டி தொட்டி குப்பம் எல்லாம் பாடுபட்டே நம் பாரத சமுதாயத்தை உயர்த்திடுவோம்" என்று பாடிக்கொண்டே எனக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு நிகழ்ச்சியை ஆனால் எனக்கு கேட்க வசதிப்படும் நேரத்தில் ஒலிபரப்பப் படுவதால் கேட்பது எனக்கு உசிதமல்ல. இதுவே பத்திரிக்கைகள், செய்தித்தாள்களுக்கும் பொருந்தும்.

எனக்கு கிடைக்கும் நேரத்தில் எனக்கு பிடித்த ஐயாவின் வகுப்பறை பாடங்களையும், செய்திகளையும், பிடித்த பாடல்களை 'யு டியுப்' காணொளிகளாக பார்க்கும் ஆற்றலை கொடுக்கும் தொழில் நுட்பத்திற்கு என் நன்றிகள். நம்மக்கு தகவல் தொழில் நுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அறிவுச் சுதந்திரம் வழங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்கள் மனித குலத்தால் போற்றப் பட வேண்டியவர்கள்.

கிடைத்த சுதந்திரத்தை ஒழுங்காக பயன் படுத்துவது நம் கையில். இணைய தளங்களில் படிப்பதை வைத்து அறிவையும் வளர்த்துக் கொள்ளலாம், வெடி குண்டுகளும் தயாரிக்கலாம். தீ, மின்சாரம் போன்றவைகள் போல தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும்... ஆக்கத்திற்கும், அழிவிற்கும் உபயோகடுத்து முறைகேற்ப பலன் வழங்கும்

bhuvanar said...

தேமொழி said...
"பண்ணையெல்லாம் பொன் கொழிக்க செய்திடுவோம் அதில் பன்மடங்கு உற்பத்தியை பெருக்கிடுவோம், கண்மணி போல் நெல்மணியை வளர்த்திடவே நாளும் கருத்துரைக்கும் ஒலிபரப்பை கேட்டிடுவோம், பட்டி தொட்டி குப்பம் எல்லாம் பாடுபட்டே நம் பாரத சமுதாயத்தை உயர்த்திடுவோம்" என்று பாடிக்கொண்டே எனக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு நிகழ்ச்சியை ஆனால் எனக்கு கேட்க வசதிப்படும் நேரத்தில் ஒலிபரப்பப் படுவதால் கேட்பது எனக்கு உசிதமல்ல. இதுவே பத்திரிக்கைகள், செய்தித்தாள்களுக்கும் பொருந்தும்.

எனக்கு கிடைக்கும் நேரத்தில் எனக்கு பிடித்த ஐயாவின் வகுப்பறை பாடங்களையும், செய்திகளையும், பிடித்த பாடல்களை 'யு டியுப்' காணொளிகளாக பார்க்கும் ஆற்றலை கொடுக்கும் தொழில் நுட்பத்திற்கு என் நன்றிகள். நம்மக்கு தகவல் தொழில் நுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அறிவுச் சுதந்திரம் வழங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்கள் மனித குலத்தால் போற்றப் பட வேண்டியவர்கள்.

கிடைத்த சுதந்திரத்தை ஒழுங்காக பயன் படுத்துவது நம் கையில். இணைய தளங்களில் படிப்பதை வைத்து அறிவையும் வளர்த்துக் கொள்ளலாம், வெடி குண்டுகளும் தயாரிக்கலாம். தீ, மின்சாரம் போன்றவைகள் போல தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும்... ஆக்கத்திற்கும், அழிவிற்கும் உபயோகடுத்து முறைகேற்ப பலன் வழங்கும்//////

உங்கள் கருத்து பகிர்வுக்கும் கவுன்ட்டர் கமேன்ட்ஸ்க்கும் நன்றிகள் பல...

நன்றி

பாண்டியன்

bhuvanar said...

தேமொழி said...
எனக்கு கிடைக்கும் நேரத்தில் எனக்கு பிடித்த ஐயாவின் வகுப்பறை பாடங்களையும், செய்திகளையும், பிடித்த பாடல்களை 'யு டியுப்' காணொளிகளாக பார்க்கும் ஆற்றலை கொடுக்கும் தொழில் நுட்பத்திற்கு என் நன்றிகள்.///

நானும் அப்படித்தான்...

நம்மக்கு தகவல் தொழில் நுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அறிவுச் சுதந்திரம் வழங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்கள் மனித குலத்தால் போற்றப் பட வேண்டியவர்கள்/////

நிச்சயமாக...

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Rajaram said...
ஐயா,நான் சொன்னது அந்தக்கோழியில்லை(Apple)பக்கத்தில் ஒரு குடும்பத்தலைவர் தலையில் கைவைத்து(ipaid)உட்கார்ந்திருக்கிறாரே!பாவம் அவரைச்(கோழி என்று) சொன்னேன்./////

கஜானாவா - அப்போதே சொல்லியிருக்கலாமில்ல! - விளம்பரம்தான் நினைவுக்கு வருகிறது ராஜாராம்!

SP.VR. SUBBAIYA said...

Blogger தேமொழி said...
"பண்ணையெல்லாம் பொன் கொழிக்க செய்திடுவோம் அதில் பன்மடங்கு உற்பத்தியை பெருக்கிடுவோம், கண்மணி போல் நெல்மணியை வளர்த்திடவே நாளும் கருத்துரைக்கும் ஒலிபரப்பை கேட்டிடுவோம், பட்டி தொட்டி குப்பம் எல்லாம் பாடுபட்டே நம் பாரத சமுதாயத்தை உயர்த்திடுவோம்" என்று பாடிக்கொண்டே எனக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு நிகழ்ச்சியை ஆனால் எனக்கு கேட்க வசதிப்படும் நேரத்தில் ஒலிபரப்பப் படுவதால் கேட்பது எனக்கு உசிதமல்ல. இதுவே பத்திரிக்கைகள், செய்தித்தாள்களுக்கும் பொருந்தும்.
எனக்கு கிடைக்கும் நேரத்தில் எனக்கு பிடித்த ஐயாவின் வகுப்பறை பாடங்களையும், செய்திகளையும், பிடித்த பாடல்களை 'யு டியுப்' காணொளிகளாக பார்க்கும் ஆற்றலை கொடுக்கும் தொழில் நுட்பத்திற்கு என் நன்றிகள். நம்மக்கு தகவல் தொழில் நுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அறிவுச் சுதந்திரம் வழங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்கள் மனித குலத்தால் போற்றப் பட வேண்டியவர்கள்.

கிடைத்த சுதந்திரத்தை ஒழுங்காக பயன் படுத்துவது நம் கையில். இணைய தளங்களில் படிப்பதை வைத்து அறிவையும் வளர்த்துக் கொள்ளலாம், வெடி குண்டுகளும் தயாரிக்கலாம். தீ, மின்சாரம் போன்றவைகள் போல தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும்... ஆக்கத்திற்கும், அழிவிற்கும் உபயோகப்படுத்தும் முறைகேற்ப பலன் வழங்கும்///////

ஆமாம் உண்மைதான்! நன்றி சகோதரி!