மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.10.11

பாஸந்தி, பக்கோடா மற்றும் ஃபில்டர் காஃப்பி

பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி
வயதானவர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி

இளைஞர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி & வில்ஸ் ஃபில்டர் (வில்ஸ் ஃபில்டர் பதிவின் கடைசியில் உள்ளது. எடுத்துப் புகைத்தாலும் சரி அல்லது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு போனாலும் சரி, வாத்தியார் கண்டு கொள்ள மாட்டார்!)
-----------------------------------------------------------------------------------
over to table

பாஸந்தி கிண்ணம் ஒன்று

 
கல்லூரி இட்லி!யும், கவியரசர் கண்ணதாசனும்!

கவியரசர் கண்ணதாசன் ஒருமுறை லயோலா கல்லூரியின் தமிழ் மன்றத்தில் உரையாற்றச் சென்றிருந்தார். விழா துவங்குமுன்பாக, மாணவர்கள், கவியரசருக்கு தங்கள் கல்லூரி உணவு விடுதியில் சிறுண்டி வழங்கினார்கள்.

சூடாக இருந்த இட்லியைக் கவியரசர் விரும்பிச் சுவைத்தார்.

மாணவர்களில் ஒருவர்,”ஐயா நீங்கள் எதைப் பற்றியும் கவிதை எழுதுவீர்கள் இல்லையா?”
என்று கேட்கவும், கவியரசர், “ஆமாம்’” என்று பதில் சொன்னார்.

உட்னே, அந்த மாணவர், ”எங்கள் விடுதி இட்லியைப் பற்றி இரண்டு வரிகளில் சொல்லுங்கள் ஐயா!” என்றார்.

சட்டென்று அடுத்த நொடியே கவியரசர் இப்படிச் சொன்னார்:

“இட்டிலியே ஏன் இளைத்துவிட்டாய்? - எவனை
இங்கே நீ காதலித்தாய்?”


அதுதான் கவியரசர்!
---------------------------------------------------------------------
 பாஸந்தி கிண்ணம் இரண்டு




                            உன்பாடல் பாதி; என்பாடல் பாதி
                                   ஒன்றாகும்போது கீதம் - இனி
                            தன்பாதை மாறி உன்பாதை தேடி
                                   வந்தாடும் எந்தன் பாதம்!

                                                      - கவிஞர் மு.மேத்தா
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பக்கோடா
1

இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிய சைக்கிள், ஒரு ரூபாய்க் காற்று இல்லையெனில் பயன்படாது.

முன்னூறு ரூபாய்க்கு வாங்கிய செருப்பைக் காலில்தான் அணிகிறோம். முப்பது பைசா குங்குமம் நெற்றிக்குப் போகிறது.

அதுதான் வாழ்க்கை
-----------------------------------

பக்கோடா
2


பாசம், மென்மை, விவேகம், மெல்லிய உணர்வுகள், ரசனை கொண்டவளே முழுமையான பெண்

பக்கோடா
3







இந்தப் பதிவு எண்ணைப் பெறுவதற்கு வாகனத்தின் உரிமையாளர் மூன்று லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய் செலவழித்திருக்கிறார். ஆமாம் ஏலத்தில் எடுத்திருக்கிறார். ஏலம் நடந்த இடம் சண்டிகரில் உள்ள வாகனப் பதிவு அலுவலகம். உண்மையான எண் 'CH01-AK-0047'. அதைச் சுருக்கி இப்படி வைத்துள்ளார். இந்தியா முன்னேறவில்லை என்று யார் சொன்னது?


---------------------------------------------------------------------------------
ஃபில்டர் காஃப்பி!



நானும்  கிருஷ்ணமூர்த்தியும் திரு ராமநாதனைச் சந்தித்து ஒரு நடிகையின் அவசரத் தேவையைச் சொன்னோம்.

செல்வி தர்மா என்று அவரோடு ரேடியோ நாடகத்தில் நடிப்பதற்காக ஒருவர் வந்திருக்கும் விஷயத்தைத் தெரிந்து கொண்டு என் நாடகத்தில் அவரை நடிக்க ஏற்பாடு செய்து தரமுடியுமா என்று ராமநாதனைக் கேட்டேன். ரேடியோ நாடகம் இரவு ஒன்பது மணியளவில் முடிந்துவிட்டபின், அந்த நடிகையை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பாடங்களைக் கொடுத்து, நாளை நடக்கவிருக்கின்ற என் நாடகத்தைச் சிறப்பாக நடத்திவிடலாம் என்று எனக்கொரு நப்பாசை!

ராமநாதன் சொன்னார்:

“நாங்கள் எல்லோரும் இன்று இரவே சென்னை திரும்பி விடுவோம். செல்வி தர்மா உங்கள் நாடகத்தில் நடிக்க சம்மதித்தாலும் அவரைத் தனியாக விட்டு விட்டு, நாங்கள் சென்னை திரும்புவது சரியாக இருக்காதே.”

அந்தப் பெண்ணிடம் பேசிப்பார்க்கும்படி நான் ராமநாதனை வேண்டினேன். நாளை நாடகம் முடிந்து பத்திரமாக Ladies Compartmentஇல் சென்னைக்கு அனுப்பி வைப்பதாக உத்திரவாதமும் தந்தேன்.

செல்வி தர்மாவிடம் ராமநாதன் என் பொருட்டு பேசினார். எனக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டத்தையும் எடுத்துச் சொன்னார்.

என்னுடைய அவஸ்தையைக் கண்டு அந்தப் பெண்ணின் உள்ளம் இளகியது. இருப்பினும் தனியாக ஸ்ரீரங்கத்தில் தங்கி நாடகத்தில் நடித்துக் கொடுத்துதவித் தனியாக சென்னை திரும்ப வேண்டியது குறித்து சற்று யோசித்தார்,

பிறகு தங்களது குழுவில் சென்னையிலிருந்து வந்திருந்த நடன ஆசிரியர் திரு. நடராஜன் என்பவரைத் தனக்குத் துணையாக இருக்கும்படி தர்மாவே வேண்டிக் கேட்டுக்கொள்ள, என்னுடைய நல்லகாலம் நடராஜனும் அதற்குச் சம்மதித்தார். நான் நீண்ட பெருமூச்சைவிட்டு சுயநிலைக்கு வந்தேன்.

செல்வி தர்மா ஸ்ரீரங்கம் வந்து தங்கி, இரவெல்லாம் கண்விழித்துப் பாடம் செய்து, நாடகத்தில் சிறப்பாக நடித்து, நான் கொடுத்த சிறு ஊதியத்தையும் முகம் சுளிக்காமல் பெற்றுக்கொண்டு சென்னை திரும்பினார்.

ஸ்ரீரங்கம் ரெயில்வே ஸ்டேசனில் நான் வழியனுப்பி வைத்தேன். அப்போது ஆண்டவனிடம் அந்தப் பெண்ணுக்குக்காக வேண்டிக்கொண்டேன். இறைவா! இன்று என் மானம் காத்த இந்தப் பெண்ணுக்கு மகோன்னதமான வாழ்வை நீ அருள வேண்டும்!

மகோன்னதமான வாழ்வை நான் வேண்டிக்கொண்டபடி ஆண்டவன் அந்தப் பெண்ணுக்கு அட்டியின்றி வழங்கினார்.

செல்வி தர்மா என்று அன்று அழைக்கப்பட்ட திருமதி தர்மாம்பாள் தமிழினத்தலைவரின் இருமுறை நாடாண்ட முதல்வரின் வாழ்க்கைத் துணைவியானார்கள்.

தன் மகள் திருமணத்திற்கு கொட்டும் மழையில் என் வீட்டிற்கு வந்து கல்யாணப் பத்திரிக்கை கொடுத்துவிட்டுப் போனார். காலத்தால் ஒரு தமிழ்க் கவிஞனுக்கு ஆற்றிய உதவியைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அந்த அம்மையாரை வாழ்வின் உச்சத்திற்கு உயர்த்தினான் ஆண்டவன்.

உள்ளத்தைப் பொறுத்தே உயர்வு என்கிறார் வள்ளுவர்

“வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய உயர்வு”


இது குறள்; திருமதி தர்மாம்பாள் இதன் பொருள்

- கவிஞர் வாலி (தனது ‘நானும் இந்த நூற்றாண்டும்” என்னும் நூலில்)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஓமப்பொடி


கலக்கலான் காணொளி. ஓமப்பொடிக்காரர்கள் நிச்சயம் இரசிப்பார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
புதிர்

பகலில் எந்த வேலையும் செய்யாமல் சம்பாதிப்பது யார்?
------------------------------------------------------------------------------------

கனவுக் கன்னி படம்?
அது இல்லாமலா?
வழக்கம்போல கீழே உள்ளது!
V
V
V
V
V
V


நடிகை S.D. சுப்புலெட்சுமி அவர்கள் (1938)
முகத்தைச் சுழிக்காதீர்கள். மூத்த குடிமகன்களுக்காக இதைப் போட்டுள்ளேன்.
இளவட்டங்களுக்கான படம் அடுத்து உள்ளது!
V
V
V
V
V
V
அனுஷ்கா சர்மா
--------------------------------------------------------------------------------------------
நட்புடன்
வாத்தி (யார்)

வாழ்க வளமுடன்!

59 comments:

  1. எம்ஜிஆர்ருக்கு முன்னால் இருந்த ராமச்சந்திரன்,சார்ங்கபாணி நல்ல ஜோக் போங்கள்.

    உவேசா ஒரு முறை ஒலைச்சுவடிகள் சேகரிக்கச் சென்ற சமயத்தில், ஒரு கிராமத்தில் ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்குகிறார். அவரைத் தூங்க விடாமல் கூத்து நடக்கும் ஒலி கேட்கிறது.ஒரே சொல் திரும்பத் திரும்ப விடியும்வரை பாடப்படுகிறது.அந்தசொல் 'டிங்கினானே' விடாமல் டிங்கினானே,டிங்கினானே என்று விடிய விடியப் பாட்டு சத்தம்.
    என்னது என்று ஐய‌ருக்குப் பொருள் விளங்கவில்லை. விடியற்காலையில் முடிக்கும்போது சொன்னார் பாட்டுக்க்காரர்:" பீமசேன மஹாராஜா மரத்தைப் பிடிங்கினானே"

    ReplyDelete
  2. ஹைக்கூ கவிதைக்கும் கவிஞர்தான் முன்னோடி என்று தெரிகிறது (இளைத்த இட்டிலி )

    'இருப்புப் பாதை' வியாசம் ரொம்ப நல்ல தமாஷ் ஓமப்பொடி.

    ReplyDelete
  3. Sir vanakam,

    Pasanthi , pakoda, filter copy anaithum arumai.
    Good morning have a nice day.god bless.

    ReplyDelete
  4. புதிர்: பகலில் எந்த வேலையும் செய்யாமல் சம்பாதிப்பது யார்?
    பதில்: "இரவு காவல்காரர்" என கூகிள் சொன்னது
    (நான் நினைத்தது தன் முயற்சியின்றி வளரும் "நிழல்")
    விருந்து அருமை ...நன்றி.
    காணொளி சபாபதி என்னும் படம் என நினைக்கிறேன்

    பி. கு. ஐயா உங்கள் கவனத்திற்கு ...காணொளி சுட்டி என் Mozilla Firefox ல் வேலை செய்யவில்லை ஆனால் மற்றவைகளில் வேலை செய்தது (Safari, Internet explorer, Google Chrome). குறை என் கணினியிலும் இருக்கக் கூடும்.

    ReplyDelete
  5. ////////Blogger kmr.krishnan said...
    எம்ஜிஆர்ருக்கு முன்னால் இருந்த ராமச்சந்திரன்,சாரங்கபாணி நல்ல ஜோக் போங்கள்.
    உவேசா ஒரு முறை ஒலைச்சுவடிகள் சேகரிக்கச் சென்ற சமயத்தில், ஒரு கிராமத்தில் ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்குகிறார். அவரைத் தூங்க விடாமல் கூத்து நடக்கும் ஒலி கேட்கிறது.ஒரே சொல் திரும்பத் திரும்ப விடியும்வரை பாடப்படுகிறது.அந்தசொல் 'டிங்கினானே' விடாமல் டிங்கினானே,டிங்கினானே என்று விடிய விடியப் பாட்டு சத்தம்.
    என்னது என்று ஐய‌ருக்குப் பொருள் விளங்கவில்லை. விடியற்காலையில் முடிக்கும்போது சொன்னார் பாட்டுக்க்காரர்:" பீமசேன மஹாராஜா மரத்தைப் பிடிங்கினானே"///////

    இந்த சாரங்கபாணி கும்பகோணத்துக்காரர். என் சிறிய பாட்டனார் வீட்டில் சாரங்கபாணியின் தந்தையார் அமுது படைக்கும் வேலையில் இருந்திருக்கிறார். அந்தக் காலத்தில் சாரங்கபாணி என் தந்தையாருக்கு நண்பர். பிரபலமாக இருந்த காலத்தில் எங்கள் வீட்டிற்கு இருமுறை வந்திருக்கிறாராம். எனக்கு நினைவில் இல்லை. ஆனால் அதுசமயம் எடுத்த புகைப்படங்கள் என் வசம் உள்ளன. நேரம் கிடைக்கும்போது அவற்றை வலை ஏற்றுகிறேன்! நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. ////////Blogger Srinivasarajulu.M said...
    ஹைக்கூ கவிதைக்கும் கவிஞர்தான் முன்னோடி என்று தெரிகிறது (இளைத்த இட்டிலி )
    'இருப்புப் பாதை' வியாசம் ரொம்ப நல்ல தமாஷ் ஓமப்பொடி.//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. /////Blogger Nareshkumar said...
    Sir vanakam,
    Pasanthi , pakoda, filter copy anaithum arumai.
    Good morning have a nice day.god bless.///////

    படிக்கும் மாணவர் என்று தெரிகிறது. இணையத்தைச் சுற்றாமல் நன்றாகப் படியுங்கள். கடவுள் உங்களையும் ஆசீர்வதிக்கட்டும்!

    ReplyDelete
  8. Ayya,

    Pasanthi, Pakoda, Filer Coffee super today...I felt Valluvar kural is true in my life as well.

    Sincere Student,
    Trichy Ravi

    ReplyDelete
  9. பாஸந்தி...
    கவிஞர் பேசினால் கவிதையாகும்!
    பேசாமல் இருந்தால் அது காவியமாகும்...

    பக்கோடா ஒன்றும் இரண்டும் நன்று.

    பக்கோடா மூன்று தான்.
    (AK47)
    "A " rivu. "K "etta 47.
    சொந்த உழைப்பில் வந்திருக்காது..
    ஒன்று அப்பாவிகளின் உழைப்பு இல்லை என்றால்
    அப்பாவின் உழைப்பாக இருக்கும்.
    தவறென்று சொல்லலாகாது.... இன்னும் சரியான ஒன்றுக்கு செய்திருக்கலாமே அது தான்...
    (மூதறிஞர் ராஜாஜியை ஒரு பேட்டியில் கேட்டார்களாம் நீங்கள் இவ்வளவு சாதாரணமாக இருக்கிறீர்களே உங்கள் மகன் கொட்டு சூட்டோடு இருக்கிறாரே என்று அதற்கு அவரின் பதில்.. நான் ஒரு ஏழை பிராமனின் மகன், அவர் ஒரு முதலமைச்சரின் மகன் என்றாராம்.)

    பில்டர் காபி...
    நன்றி சம்பந்தப் பட்டது இதுவும் நன்றே! அந்த உணர்வு தான் அன்பின் ஊற்றுக் கண்.... நன்றி காட்டுவதும் அதை பாராட்டுவதும் வாழ்வின் அழகு....

    ஓமப்பொடி....
    அருமை தான்.. தமிழைப் படித்தால் அது இப்படியும் ஆபத்திற்கு உதவுகிறது என்பது விளங்குகிறது...
    மாணவனை சரியாகப் புரிந்துக் கொண்ட ஆசிரியர்..
    செக்குமாடு என்று தெரியாமல் வண்டியில் பூட்டும் தோப்பனார்!!!
    இன்று பலரும் செய்வது இதைத்தான்...

    புதிர்... புதிருக்கு விடை.

    கூர்க்கா!!!

    பதிவு அருமை...
    நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  10. பாசந்தியும் பக்கோடாவும் நன்றாக இருந்தன.

    ReplyDelete
  11. வணக்கம் அய்யா,
    இன்று நான் மிகவும் "ர(ரு)சித்து" சாப்பிட்டது 3 பக்கோடாவையும் தான்.ஃபில்டெர் காபி பக்கோடாவுடன் மிகவும் ருசியாக இருந்தது.இன்று இவ்வாறான பணத்தை எண்ணாத மனிதர்களை காண்பது என்பதே அரிது.அவர்களை இலக்கியங்களிலும் வரலாற்று புத்தகங்களிலும் மட்டும் தான் படித்து,இப்படியும் மனிதர்கள் இருப்பார்களோ? என்று எண்ணி வியக்கும் காலம் அருகில் தான் உள்ளது என்பது மிகவும் வேதனை.க‌லி யுக‌ம் முற்றிக் கொன்டே போகின்ற‌தே,என்ன‌ செய்ய‌ முடியும்?
    புதிர் 1க்கான‌ ப‌தில்:

    சோம்பேரிகள் மற்றும் பிச்சைக்காரர்கள்

    ReplyDelete
  12. அனுஷ்கா வை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் மூன்று பேரும் படத்தில் இருக்கிறார்கள்..
    அவர்கள் அப்படி என்னதான் பார்க்கிறார்கள் என்று எனக்கும் தெரிந்துகொள்ள ஆசை..
    அந்த ஸ்நாப் இல்லியா சார்..?

    (பி.கு)
    மத்ததெல்லாம் - இளைத்த இட்லி, வாலி அனுபவப்பகிர்வு..நன்றாக இருந்தாலும் என்னமோ இந்தப் படத்தை (க.க.) போட்டுத்தாக்கியதில்
    வேறெங்கும் கண் போகவில்லை..

    ReplyDelete
  13. பாசம், மென்மை, விவேகம், மெல்லிய உணர்வுகள், ரசனை கொண்டவளே முழுமையான பெண்///

    மேலும் பெண்களை போல திடமான முடிவு செய்வது, செய்த முடிவை சிறப்பாக செயல்படுத்துவது, எந்த ஆண்மகனாலும் முடியாது என்பதே எனது அனுபவ உண்மை...

    மேலும் உணர்வுகளை வெளிக்காட்டி கொள்ளமிருப்பதிலும் பெண்களே சிறந்தவர்கள்...

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  14. ///(மூதறிஞர் ராஜாஜியை ஒரு பேட்டியில் கேட்டார்களாம் நீங்கள் இவ்வளவு சாதாரணமாக இருக்கிறீர்களே உங்கள் மகன் கொட்டு சூட்டோடு இருக்கிறாரே என்று அதற்கு அவரின் பதில்.. நான் ஒரு ஏழை பிராமனின் மகன், அவர் ஒரு முதலமைச்சரின் மகன் என்றாராம்.///

    இராஜாஜிக்கு 3 மகன்க‌ள்.கிருஷ்ணசாமி,ராமசாமி, நரசிம்ஹன்.இரண்டு மகள்கள்.நாமகிரி, லக்ஷ்மி.

    இராஜாஜியின் மனைவியார் இந்த 5 குழந்தைகளையும் தவிக்கவிட்டு மிகச் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். இராஜாஜி மறுமணம் புரியவில்லை.

    தாயில்லாமல், தந்தையும் பொதுப்பணிக்காக, அரசியலுக்காக, காந்திஜியின் சொல்கேட்டு தன் வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டார். எனவே வீட்டில் பணத்தேவை, தட்டுப்பாடு இருந்துள்ளது.அந்த நிலையில் வளர்ந்த குழந்தைகள்.

    மூத்தவர் கிருஷ்ணசாமி தன் ஆங்கில மொழித் திறமையால் பிரபல ஆங்கில நாளிதழில் ஆசிரியராகத் தன் சுய முயற்சியில் பணியில் சேர்ந்து விட்டார். காந்திஜியின் மூத்த‌ மகன் போலவே, கிருஷ்ணசாமிக்கும் தன் தந்தை தங்களை சரியாகக் கவனிக்கவில்லை என்ற மனத்தாங்கல் இருந்திருக்கக்கூடும்.ஆனால் காந்திஜியின் மூத்த மகனைப் போல தந்தையை வெளிப்படையாகத் தாக்கிப் பேசவோ முரண்பாட்டை வெளியில் சொல்லியதாகவோ நான் அறிந்த வரையில் செய்தி இல்லை.தன் பணி நிமித்தமாகவோ, அல்லது தன் விருப்பப்படியோ அவர் கோட்டு சூட்டு அணிந்து இருக்க‌லாம்(தன் சொந்த சம்பாத்தியத்தில்). ராஜாஜியின் உதவியைப் பெறாமலேயே அவர் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.ராஜாஜியை விட்டு மிகவும் விலகியே வாழ்ந்தார்.

    முதலமைச்சரின் மகன் என்றதால் கிடைத்த சலுகைகளை வைத்து அவர் நாகரீக ஆடை அணிந்தது போல உங்கள் செய்தி ஒலிக்கிறது. அது அப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை என்று பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

    இரண்டாவது மகன் ராமசாமி வக்கீலாக சேலத்தில் இருந்தார். நிறைய மழலைச் செல்வங்களை விட்டு விட்டு மிகச் சிறுவயதில் காலமானார்.ராஜாஜியின் இறுதிக் காலத்தில் அக் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு ராஜாஜிக்கு வந்தது. அவருக்குக் கிடைத்த ஓய்வூதியம் ரூ1000/‍‍= அக் குழந்தைகளின் பராமரிப்புக்குக் கொடுத்து வந்தார். எனவே ராமசாமியும் முதலமைச்சர் மகன் என்ற வகையில் எதுவும் செய்ய வாய்ப்புக் குறைவு.
    சொல்லப் போனல் ராஜாஜி முதலமைச்சர் ஆனதைப் பார்க்காமலே அவர் மறைந்திருக்கக்கூடும்.ராமசாமியின் குழந்தைகள் இப்போது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

    மூன்றவது மகன் நரசிம்ஹன் திருமணமே செய்யவில்லை.அவர் நேரு இருந்த போது காங்கிரஸ் நாடளுமன்ற உறுப்பினர்.ராஜாஜி நேருவை எதிர்த்து அரசியல் நடத்தியபோதும் நரசிம்ஹன் காங்கிரஸிலேயே இருந்தார்.1967ல் ராஜாஜி அண்ணாவுடன் கூட்டணி அமைத்து சுதந்திராக் கட்சியை நடத்திய போதும், தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க பிரச்சாரம் செய்த போதும் நரசிம்ஹன் ஹொசூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளாராக நின்றார்.அப்பாவும் பிள்ளையும் எதிர் எதிர் அணி.அப்போது திமுக வேட்பாளர் ராஜாராம் 'கூட்டணி தர்மப்படி ஆதரவு எனக்கா, அல்லது உங்க‌ளுடைய மகனுக்கா' என்று கேட்டபோது ராஜாஜி,"அரசியலில் அப்பனென்றும் மகன் என்றும் கிடையாது" என்று பதில் எழுதிக் கொடுத்தார். ராஜாஜியின் மகன், காங்கிரஸ் வேட்பாளர், தன் சொந்தத் தொகுதியில் திமுக வேட்பாளரிடம் தோற்றார்.

    ஆக மூன்று மகன்களும் முதலமைச்சரின் மகன்களாக வாழவில்லை.தங்கள் சொந்தக்காலில் நின்று பிழைத்தார்கள்.

    நாமகிரி இளம் விதவை.குழந்தைகள் கிடையாது. அவருக்குக் கிடைத்த கணவனின் சொத்தில் சென்னையில் 800 சதுர‌டி உள்ள வீட்டை கீழ்ப்பாக்கத்தில் வாங்கினார்.அந்த வீட்டில்தான், ராஜாஜி அந்த மகளுடந்தான் இறுதிவரை தன் காலத்தைக் கழித்தார்.ராஜாஜிக்கு என்று சொந்த வீடு கிடையாது. கவர்னர் ஜென்றலுக்கான சலுகையான வீட்டினை அவர் கேட்டுப் பெறவில்லை. அப்போதைய அரசும் கொடுக்கவில்லை.

    ல‌ட்சுமி என்ற 2வது மகள்தான் மஹாத்மாஜியின் மருமகள்.அவருக்கு 2 மகன்கள்.ராஜ்மோகன் காந்தி, கோபால்கிருஷ்ண‌தாஸ் காந்தி. இரண்டாமவர் வங்கத்தில் ஆளுனராக இருந்தார். ஒரு சிவில் செர்வன்ட் ஆக இருந்து கவர்னர் வரை சுய முயற்சியில் வந்தார்.அவர் கவர்னர் ஆனதெல்லாம் பார்க்காமலே ராஜாஜி மறைந்துவிட்டார்.மூத்தவர் ராஜ்மோகன் காந்தி ஒரு பத்திரிகை ஆசிரியர்.ஹிம்மத் என்ற பத்திரிகை. லட்மிக்கு மீரா என்ற பெண் உண்டு.திருமணமாகி அக்காலத்திலேயே வெளிநாடு போய்விட்டார். இப்போது 70வயதாவது இருக்கும். எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.

    குலக்கல்வியை கொண்டுவந்தார் என்று அவதூறு செய்யப்பட்ட ராஜாஜியின் சிறிய வரலாறு இது.

    'அரசியலில் அப்பன் என்றும் மகன் என்றும் கிடையாது' என்றார் அவர்.

    'என் பிள்ளைகள் என்பதால் அரசியலில் ஈடுபடக் கூடாதா?அவர்களை நான் என்ன செய்யட்டும்? கொன்றுவிடவா?' என்று கேள்வி கேட்ட நிருபரை கடுப்படித்தார் தற்காலத் தலைவர்.

    ReplyDelete
  15. cotinued....
    வர்ணாஸ்ரமதர்மப்படி குலத் தொழில், அதாவது அப்பன் தொழிலை மகன் செய்ய வேண்டுமாம். அதனைத்தான் வருந்தி வருந்தி எல்லோரும் எதிர்க்கிறார்களாம். ஆனால் அரசியல்வாதியின் மகன் மட்டும் தன் அப்பன் தொழிலையே செய்ய‌லாமாம். அது வர்ணாஸ்ரமம் கிடையாதாம். நல்ல லாஜிக்தான்!

    ReplyDelete
  16. அதே பாசந்தி பக்கோடா வேண்டாமேஎன
    அந்தபடமில்லாமல் இன்றையவிருந்தா?

    ஆண்டுகள் சிலவற்றிக்கு முன் நம்
    அய்யர் மகளிர் தின கவியரங்கில்

    மேத்தா தலைமையில் வாசித்தது
    சேர்த்து வைத்த நினைவில் இருந்தது..

    அது சரி...தப்பாக நினைக்க மாட்டார்களே
    அப்படிகேட்டால்...

    அது ஏன் அந்த பிராண்டு ஃபில்டரை
    அப்படி அழுத்தி சொல்கிறீர்கள்

    எத்தனையோ SKC இருக்க இது சரி..
    எதற்கு புகை? ..நகைக்கா.. மிகைக்கா...

    வகுப்பிற்கு வரும் அறிஞரை
    வாசித்து பார்ப்போமா..

    "ஒரு நல்ல படிப்பாளி...

    கொஞ்சம் விஷயங்களைப் பற்றியாவது முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும்.

    பல விஷயங்களைப் பற்றி
    கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும்" - மார்க்ஸ் அரேலியஸ்

    ReplyDelete
  17. அதே பாசந்தி பக்கோடா வேண்டாமேஎன
    அந்தபடமில்லாமல் இன்றையவிருந்தா?

    ஆண்டுகள் சிலவற்றிக்கு முன் நம்
    அய்யர் மகளிர் தின கவியரங்கில்

    மேத்தா தலைமையில் வாசித்தது
    சேர்த்து வைத்த நினைவில் இருந்தது..

    அது சரி...தப்பாக நினைக்க மாட்டார்களே
    அப்படிகேட்டால்...

    அது ஏன் அந்த பிராண்டு ஃபில்டரை
    அப்படி அழுத்தி சொல்கிறீர்கள்

    எத்தனையோ SKC இருக்க இது சரி..
    எதற்கு புகை? ..நகைக்கா.. மிகைக்கா...

    வகுப்பிற்கு வரும் அறிஞரை
    வாசித்து பார்ப்போமா..

    "ஒரு நல்ல படிப்பாளி...

    கொஞ்சம் விஷயங்களைப் பற்றியாவது முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும்.

    பல விஷயங்களைப் பற்றி
    கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும்" - மார்க்ஸ் அரேலியஸ்

    ReplyDelete
  18. பணத்தை பற்றி சொல்ல
    பதட்டமின்றி இன்னொரு பின் ஊட்டம்..

    பணமும் செருப்பும் ஒன்று..
    பயப்படாதீர்கள் இப்படி சொல்வதற்கு..

    பணம் தேவைக்கதிகமானால் வாழ்க்கை
    பாதையை மாற்றுகிறது

    செருப்பு அளவுக்கதிகமானால் வழியில்
    சறுக்கி விழ வைக்கிறது

    பணம் தேவைக்குக்குறைவானால்
    பையை கடிக்கிறது

    செருப்பு கால் அளவிற்கு சிறியதானால்
    காலைக் கடிக்கிறது..

    கடவுளை வணங்கும் முன்
    காலணிகளை கழற்றி வைக்கிறோம்

    காசு பணம் என்ற செருக்கை கழற்றியே
    கடவுளை வணங்க வேண்டும்..

    ReplyDelete
  19. பணத்தை பற்றி சொல்ல
    பதட்டமின்றி இன்னொரு பின் ஊட்டம்..

    பணமும் செருப்பும் ஒன்று..
    பயப்படாதீர்கள் இப்படி சொல்வதற்கு..

    பணம் தேவைக்கதிகமானால் வாழ்க்கை
    பாதையை மாற்றுகிறது

    செருப்பு அளவுக்கதிகமானால் வழியில்
    சறுக்கி விழ வைக்கிறது

    பணம் தேவைக்குக்குறைவானால்
    பையை கடிக்கிறது

    செருப்பு கால் அளவிற்கு சிறியதானால்
    காலைக் கடிக்கிறது..

    கடவுளை வணங்கும் முன்
    காலணிகளை கழற்றி வைக்கிறோம்

    காசு பணம் என்ற செருக்கை கழற்றியே
    கடவுளை வணங்க வேண்டும்..

    இப்போ சொல்லுங்கள்
    இந்த பணமும் செருக்கும் ஒன்று தானே..

    ReplyDelete
  20. ///அரசியல்வாதியின் மகன் மட்டும் தன் அப்பன் தொழிலையே செய்ய‌லாமாம். .///

    மன்னிக்க...

    அரசியல் என்பது தொழில் அல்ல..
    அதனை தொழில் ஆக்கி பேசும் நிலை

    வருத்தத்திற்குரியது..
    வகுப்பறைக்கும் வேண்டுமா அரசியல்

    அமைதிகொள்கிறோம்
    ஆரவாரமின்றியே..

    ReplyDelete
  21. ////Blogger Ravichandran said...
    Ayya,
    Pasanthi, Pakoda, Filer Coffee super today...I felt Valluvar kural is true in my life as well.
    Sincere Student,
    Trichy Ravi/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. //////Blogger தமிழ் விரும்பி said...
    பாஸந்தி...
    கவிஞர் பேசினால் கவிதையாகும்!
    பேசாமல் இருந்தால் அது காவியமாகும்...
    பக்கோடா ஒன்றும் இரண்டும் நன்று.
    பக்கோடா மூன்று தான்.
    (AK47)
    "A " rivu. "K "etta 47.
    சொந்த உழைப்பில் வந்திருக்காது..
    ஒன்று அப்பாவிகளின் உழைப்பு இல்லை என்றால் அப்பாவின் உழைப்பாக இருக்கும்.
    தவறென்று சொல்லலாகாது.... இன்னும் சரியான ஒன்றுக்கு செய்திருக்கலாமே அது தான்...
    (மூதறிஞர் ராஜாஜியை ஒரு பேட்டியில் கேட்டார்களாம் நீங்கள் இவ்வளவு சாதாரணமாக இருக்கிறீர்களே உங்கள் மகன் கொட்டு சூட்டோடு இருக்கிறாரே என்று அதற்கு அவரின் பதில்.. நான் ஒரு ஏழை பிராமனின் மகன், அவர் ஒரு முதலமைச்சரின் மகன் என்றாராம்.)
    பில்டர் காபி...
    நன்றி சம்பந்தப் பட்டது இதுவும் நன்றே! அந்த உணர்வு தான் அன்பின் ஊற்றுக் கண்.... நன்றி காட்டுவதும் அதை பாராட்டுவதும் வாழ்வின் அழகு....
    ஓமப்பொடி....
    அருமை தான்.. தமிழைப் படித்தால் அது இப்படியும் ஆபத்திற்கு உதவுகிறது என்பது விளங்குகிறது...
    மாணவனை சரியாகப் புரிந்துக் கொண்ட ஆசிரியர்..
    செக்குமாடு என்று தெரியாமல் வண்டியில் பூட்டும் தோப்பனார்!!!
    இன்று பலரும் செய்வது இதைத்தான்...
    புதிர்... புதிருக்கு விடை.
    கூர்க்கா!!!
    பதிவு அருமை...
    நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.//////

    உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  23. /////Blogger Uma said...
    பாசந்தியும் பக்கோடாவும் நன்றாக இருந்தன./////

    நல்லது சகோதரி! தில்லியில் பாசந்தி கிடைக்குமா?

    ReplyDelete
  24. /////Blogger R.Srishobana said...
    வணக்கம் அய்யா,
    இன்று நான் மிகவும் "ர(ரு)சித்து" சாப்பிட்டது 3 பக்கோடாவையும் தான்.ஃபில்டெர் காபி பக்கோடாவுடன் மிகவும் ருசியாக இருந்தது.இன்று இவ்வாறான பணத்தை எண்ணாத மனிதர்களை காண்பது என்பதே அரிது.அவர்களை இலக்கியங்களிலும் வரலாற்று புத்தகங்களிலும் மட்டும் தான் படித்து,இப்படியும் மனிதர்கள் இருப்பார்களோ? என்று எண்ணி வியக்கும் காலம் அருகில் தான் உள்ளது என்பது மிகவும் வேதனை.க‌லி யுக‌ம் முற்றிக் கொன்டே போகின்ற‌தே,என்ன‌ செய்ய‌ முடியும்?
    புதிர் 1க்கான‌ ப‌தில்:
    சோம்பேரிகள் மற்றும் பிச்சைக்காரர்கள்/////

    புதிருக்கான விடை: இரவு காவற்காரர் (Night watchman)

    ReplyDelete
  25. //////Blogger minorwall said...
    அனுஷ்காவை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் மூன்று பேரும் படத்தில் இருக்கிறார்கள்..
    அவர்கள் அப்படி என்னதான் பார்க்கிறார்கள் என்று எனக்கும் தெரிந்துகொள்ள ஆசை..
    அந்த ஸ்நாப் இல்லியா சார்..?
    (பி.கு)
    மத்ததெல்லாம் - இளைத்த இட்லி, வாலி அனுபவப்பகிர்வு..நன்றாக இருந்தாலும் என்னமோ இந்தப் படத்தை (க.க.) போட்டுத்தாக்கியதில்
    வேறெங்கும் கண் போகவில்லை..///////

    வைத்தகண் வைத்தபடி பார்க்காமல் இருந்தால்தான் தப்பு. பார்த்ததற்கும் கேள்வி கேட்டால் எப்படி மைனர்?

    ReplyDelete
  26. /////Blogger bhuvanar said...
    பாசம், மென்மை, விவேகம், மெல்லிய உணர்வுகள், ரசனை கொண்டவளே முழுமையான பெண்///
    மேலும் பெண்களை போல திடமான முடிவு செய்வது, செய்த முடிவை சிறப்பாக செயல்படுத்துவது, எந்த ஆண்மகனாலும் முடியாது என்பதே எனது அனுபவ உண்மை...மேலும் உணர்வுகளை வெளிக்காட்டி கொள்ளமிருப்பதிலும் பெண்களே சிறந்தவர்கள்...
    நன்றி
    பாண்டியன்/////

    நீங்கள் சொல்வது முப்பது வயது கடந்துவிட்ட பெண்களைப் பற்றித்தானே பாண்டியன்?

    ReplyDelete
  27. /////Blogger kmr.krishnan said...
    ///(மூதறிஞர் ராஜாஜியை ஒரு பேட்டியில் கேட்டார்களாம் நீங்கள் இவ்வளவு சாதாரணமாக இருக்கிறீர்களே உங்கள் மகன் கொட்டு சூட்டோடு இருக்கிறாரே என்று அதற்கு அவரின் பதில்.. நான் ஒரு ஏழை பிராமனின் மகன், அவர் ஒரு முதலமைச்சரின் மகன் என்றாராம்.///
    இராஜாஜிக்கு 3 மகன்க‌ள்.கிருஷ்ணசாமி,ராமசாமி, நரசிம்ஹன்.இரண்டு மகள்கள்.நாமகிரி, லக்ஷ்மி.
    இராஜாஜியின் மனைவியார் இந்த 5 குழந்தைகளையும் தவிக்கவிட்டு மிகச் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். இராஜாஜி மறுமணம் புரியவில்லை.
    தாயில்லாமல், தந்தையும் பொதுப்பணிக்காக, அரசியலுக்காக, காந்திஜியின் சொல்கேட்டு தன் வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டார். எனவே வீட்டில் பணத்தேவை, தட்டுப்பாடு இருந்துள்ளது.அந்த நிலையில் வளர்ந்த குழந்தைகள்.

    இரண்டாவது மகன் ராமசாமி வக்கீலாக சேலத்தில் இருந்தார். நிறைய மழலைச் செல்வங்களை விட்டு விட்டு மிகச் சிறுவயதில் காலமானார்.ராஜாஜியின் இறுதிக் காலத்தில் அக் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு ராஜாஜிக்கு வந்தது. அவருக்குக் கிடைத்த ஓய்வூதியம் ரூ1000/‍‍= அக் குழந்தைகளின் பராமரிப்புக்குக் கொடுத்து வந்தார். எனவே ராமசாமியும் முதலமைச்சர் மகன் என்ற வகையில் எதுவும் செய்ய வாய்ப்புக் குறைவு. சொல்லப் போனல் ராஜாஜி முதலமைச்சர் ஆனதைப் பார்க்காமலே அவர் மறைந்திருக்கக்கூடும்.ராமசாமியின் குழந்தைகள் இப்போது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
    மூன்றவது மகன் நரசிம்ஹன் திருமணமே செய்யவில்லை.அவர் நேரு இருந்த போது காங்கிரஸ் நாடளுமன்ற உறுப்பினர்.ராஜாஜி நேருவை எதிர்த்து அரசியல் நடத்தியபோதும் நரசிம்ஹன் காங்கிரஸிலேயே இருந்தார்.1967ல் ராஜாஜி அண்ணாவுடன் கூட்டணி அமைத்து சுதந்திராக் கட்சியை நடத்திய போதும், தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க பிரச்சாரம் செய்த போதும் நரசிம்ஹன் ஹொசூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளாராக நின்றார்.அப்பாவும் பிள்ளையும் எதிர் எதிர் அணி.அப்போது திமுக வேட்பாளர் ராஜாராம் 'கூட்டணி தர்மப்படி ஆதரவு எனக்கா, அல்லது உங்க‌ளுடைய மகனுக்கா' என்று கேட்டபோது ராஜாஜி,"அரசியலில் அப்பனென்றும் மகன் என்றும் கிடையாது" என்று பதில் எழுதிக் கொடுத்தார். ராஜாஜியின் மகன், காங்கிரஸ் வேட்பாளர், தன் சொந்தத் தொகுதியில் திமுக வேட்பாளரிடம் தோற்றார்.
    ஆக மூன்று மகன்களும் முதலமைச்சரின் மகன்களாக வாழவில்லை.தங்கள் சொந்தக்காலில் நின்று பிழைத்தார்கள்.
    நாமகிரி இளம் விதவை.குழந்தைகள் கிடையாது. அவருக்குக் கிடைத்த கணவனின் சொத்தில் சென்னையில் 800 சதுர‌டி உள்ள வீட்டை கீழ்ப்பாக்கத்தில் வாங்கினார்.அந்த வீட்டில்தான், ராஜாஜி அந்த மகளுடந்தான் இறுதிவரை தன் காலத்தைக் கழித்தார்.ராஜாஜிக்கு என்று சொந்த வீடு கிடையாது. கவர்னர் ஜென்றலுக்கான சலுகையான வீட்டினை அவர் கேட்டுப் பெறவில்லை. அப்போதைய அரசும் கொடுக்கவில்லை.
    ல‌ட்சுமி என்ற 2வது மகள்தான் மஹாத்மாஜியின் மருமகள்.அவருக்கு 2 மகன்கள்.ராஜ்மோகன் காந்தி, கோபால்கிருஷ்ண‌தாஸ் காந்தி. இரண்டாமவர் வங்கத்தில் ஆளுனராக இருந்தார். ஒரு சிவில் செர்வன்ட் ஆக இருந்து கவர்னர் வரை சுய முயற்சியில் வந்தார்.அவர் கவர்னர் ஆனதெல்லாம் பார்க்காமலே ராஜாஜி மறைந்துவிட்டார்.மூத்தவர் ராஜ்மோகன் காந்தி ஒரு பத்திரிகை ஆசிரியர்.ஹிம்மத் என்ற பத்திரிகை. லட்மிக்கு மீரா என்ற பெண் உண்டு.திருமணமாகி அக்காலத்திலேயே வெளிநாடு போய்விட்டார். இப்போது 70வயதாவது இருக்கும். எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.
    குலக்கல்வியை கொண்டுவந்தார் என்று அவதூறு செய்யப்பட்ட ராஜாஜியின் சிறிய வரலாறு இது.
    'அரசியலில் அப்பன் என்றும் மகன் என்றும் கிடையாது' என்றார் அவர்.
    'என் பிள்ளைகள் என்பதால் அரசியலில் ஈடுபடக் கூடாதா?அவர்களை நான் என்ன செய்யட்டும்? கொன்றுவிடவா?' என்று கேள்வி கேட்ட நிருபரை கடுப்படித்தார் தற்காலத் தலைவர்./////

    அடடா ரெம்ப சூடாகி விட்டீர்களே கிருஷ்ணன் சார்! யாரப்பா அங்கே...சாருக்கு ஜில்லுன்னு நன்னாரி சர்பத் இரண்டு டம்ளர் கொண்டு வந்து கொடு!

    ReplyDelete
  28. //////Blogger kmr.krishnan said...
    cotinued....
    வர்ணாஸ்ரமதர்மப்படி குலத் தொழில், அதாவது அப்பன் தொழிலை மகன் செய்ய வேண்டுமாம். அதனைத்தான் வருந்தி வருந்தி எல்லோரும் எதிர்க்கிறார்களாம். ஆனால் அரசியல்வாதியின் மகன் மட்டும் தன் அப்பன் தொழிலையே செய்ய‌லாமாம். அது வர்ணாஸ்ரமம் கிடையாதாம். நல்ல லாஜிக்தான்!//////

    அரசியலில்தான் முதலீடு இல்லாமல் கோடிக்கணக்கில் காசு பார்க்கலாம். காசு கிடைக்கும் மேட்டர்களுக்கெல்லாம் லாஜிக் பார்க்கலாமா சார்? எந்த நாட்டில் இருக்கிறீர்கள்?

    ReplyDelete
  29. Blogger iyer said...
    அதே பாசந்தி பக்கோடா வேண்டாமேஎன
    அந்தபடமில்லாமல் இன்றையவிருந்தா?
    ஆண்டுகள் சிலவற்றிக்கு முன் நம்
    அய்யர் மகளிர் தின கவியரங்கில்
    மேத்தா தலைமையில் வாசித்தது
    சேர்த்து வைத்த நினைவில் இருந்தது..
    அது சரி...தப்பாக நினைக்க மாட்டார்களே
    அப்படிகேட்டால்...
    அது ஏன் அந்த பிராண்டு ஃபில்டரை
    அப்படி அழுத்தி சொல்கிறீர்கள்
    எத்தனையோ SKC இருக்க இது சரி..
    எதற்கு புகை? ..நகைக்கா.. மிகைக்கா...
    வகுப்பிற்கு வரும் அறிஞரை
    வாசித்து பார்ப்போமா..
    "ஒரு நல்ல படிப்பாளி...
    கொஞ்சம் விஷயங்களைப் பற்றியாவது முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும்.
    பல விஷயங்களைப் பற்றி
    கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும்" - மார்க்ஸ் அரேலியஸ்//////

    நகைக்குமில்லை, புகைக்குமில்லை. அப்படி எழுதிப் பழ்கிவிட்டது...ஹி.ஹி!

    ReplyDelete
  30. ///Blogger iyer said...
    பணத்தை பற்றி சொல்ல
    பதட்டமின்றி இன்னொரு பின் ஊட்டம்..
    பணமும் செருப்பும் ஒன்று..
    பயப்படாதீர்கள் இப்படி சொல்வதற்கு..
    பணம் தேவைக்கதிகமானால் வாழ்க்கை
    பாதையை மாற்றுகிறது
    செருப்பு அளவுக்கதிகமானால் வழியில்
    சறுக்கி விழ வைக்கிறது
    பணம் தேவைக்குக்குறைவானால்
    பையை கடிக்கிறது
    செருப்பு கால் அளவிற்கு சிறியதானால்
    காலைக் கடிக்கிறது..
    கடவுளை வணங்கும் முன்
    காலணிகளை கழற்றி வைக்கிறோம்
    காசு பணம் என்ற செருக்கை கழற்றியே
    கடவுளை வணங்க வேண்டும்../////

    அடடா, டச் பண்ணீட்டிங்க விசுவநாதன். காசு, பணம் உள்ளவனுக்கு கடவுளை வணங்கக்கூட நேரமில்லை!

    ReplyDelete
  31. //////Blogger iyer said...
    பணத்தை பற்றி சொல்ல
    பதட்டமின்றி இன்னொரு பின் ஊட்டம்..
    பணமும் செருப்பும் ஒன்று..
    பயப்படாதீர்கள் இப்படி சொல்வதற்கு..
    பணம் தேவைக்கதிகமானால் வாழ்க்கை
    பாதையை மாற்றுகிறது
    செருப்பு அளவுக்கதிகமானால் வழியில்
    சறுக்கி விழ வைக்கிறது
    பணம் தேவைக்குக்குறைவானால்
    பையை கடிக்கிறது
    செருப்பு கால் அளவிற்கு சிறியதானால்
    காலைக் கடிக்கிறது..
    கடவுளை வணங்கும் முன்
    காலணிகளை கழற்றி வைக்கிறோம்
    காசு பணம் என்ற செருக்கை கழற்றியே
    கடவுளை வணங்க வேண்டும்..
    இப்போ சொல்லுங்கள்
    இந்த பணமும் செருக்கும் ஒன்று தானே..

    சனீஷ்வரன் இறுதிச்சீட்டைக்கொடுக்கும்போது அந்த இரண்டுமே பயன்படாமல் போய்விடும்!

    ReplyDelete
  32. ராஜாஜி பற்றிய KMRK அவர்களின் தன்னலமற்ற தலைவர் என்பதற்குரிய தகவல்கள் படிக்கப் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன..கடைசியிலான தற்காலத் தலைவரை இழுக்காமல் விட்டிருந்தால் அது ராஜாஜியைப் பற்றிமட்டுமே போற்றிப் பாடியதாக இருந்திருக்கும்..

    பல விஷயங்கள் புதிது புதிதாகக் காணக்கிடைக்கின்றன..

    அன்பர் ஏதோ கேள்விப்பட்ட செய்தியாக வெளியிட்ட செய்திக்குப் பதிலாக KMRK தகவல் தந்திருப்பது சிறப்பு..

    ஏதோ விளையாட்டாய் கமென்ட் அடித்துக்கொண்டு வலம் வந்தாலும் ஆங்காங்கே சிந்தனையைத் தூண்டும் வரலாறுகள் தெரிந்த KMRK போன்றோர் செய்திகளைத் தக்க சமயத்தில் தந்தது மிகச் சிறப்பு..மிக்க நன்றி..

    ReplyDelete
  33. //சனீஷ்வரன் இறுதிச்சீட்டைக்கொடுக்கும்போது அந்த இரண்டுமே பயன்படாமல் போய்விடும்!///

    இந்தியாவை விட்டுச் செல்லும்போதுதான்
    இந்திய ரூபாயும் செருப்பும்

    ஷூ வும்
    சூட்டுக்குள் வைக்கும் டாலர்/கார்டும்

    இவைகளை செல்லாதாக்கும் போது
    இறைவன் எழுதி தரும் சீட்டிற்கு

    வேறு பாத அணியும்
    வேறு பாதையை காட்டும் அணியும்

    அவரவர் நற்செயலுக்கேற்ப என
    அதனைச் சொல்லவும் வேண்டுமோ?

    ReplyDelete
  34. ////முதலமைச்சரின் மகன் என்றதால் கிடைத்த சலுகைகளை வைத்து அவர் நாகரீக ஆடை அணிந்தது போல உங்கள் செய்தி ஒலிக்கிறது. அது அப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை என்று பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்////
    சிறுவயதிலே என் தந்தையார் கூறியது ஞாபகத்தில் இருந்தது... இப்போது எனது தந்தையாரிடம் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.. முதலமைச்சர் அல்ல "கவர்னர் ஜென்ட்ரல்"

    அவரப்படாதீங்க சார்... எழுதும் போது கையில ஏதாவது கூறா குத்திருச்சா.... ஏன்? உணர்ச்சி வசப்படுறீங்க! நான் கூறிய இடம் சற்று வேறானாலும்... விதமும், அர்த்தமும் வேறு...நான் ஆரம்பித்ததிற்கும், நீங்கள் ஆரம்பித்ததிற்கும் வித்தியாசம் இருக்கிறது வார்த்தைகளை கூர்ந்துக் கவனித்தால் அது தெளிவாகப் புரியும்... மூதறிஞர் என்று தான் ஆரம்பித்துள்ளேன் அதன் அர்த்தம் நான் விளக்க வேண்டியதில்லை... அந்தப் பேட்டியில் நிருபர் கேட்ட இடக்கானக் கேள்விக்கு கொஞ்சம் சுவாரஷ்யமான எதார்த்தமான அதுவும் உண்மையான பதிலைத்தான் கூறியுள்ளார். நான் என் அப்பாவைப் போல் உடுத்துவதில்லை.. என் பிள்ளை என்னைப் போல உடுத்தப் போவதும் இல்லை என்பது தான் உண்மை... நீ கதர் என்கிறாயே.. உன் மகன்? என்னும் எடக்கானக் கேள்விக்குத் தான் அவரின் பதில்... அரண்டவருக்கு இருண்டதெல்லாம்.... என்பார்கள். அதைப் போல..நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள்...

    இன்னொன்று... நான் தி.மு.க. காரனும் அல்ல... அவர்களின் கொள்கைகளை விசுவாசிப்பவனும் அல்ல... இதற்கு முன்பு இதைக் கவனித்து இருக்கிறேன் தினமலரைப் பற்றி எழுதும் போது தினகரனுக்குப் போனீர்கள்.... அப்போது என்ன சொன்னேன் அவர்கள் செய்தால் பேச்சிற்கே இடமில்லை என்று.. நீங்கள் எதை வைத்து இப்படி எழுதுகிறீர்கள் என்றுத் தெரியவில்லை... தி.மு.க. பற்றிய உங்களின் கருத்தை நான் மறுப்பேன் என்று நினைத்தீர்களா! தெரியவில்லை...

    சரி, நீங்களாகவே மூதறிஞரைப் பற்றி பேசும் போது ஏன் முன்னாள் முதல்வரைப் பற்றி ஒப்பீடு செய்கிறீர்கள் என்றுத் தெரியவில்லை.. அது என்னைப் பற்றிய தவறானப் உங்களின் புரிந்துணர்வு...

    அதே போல் வர்ணாஸ்ரமம் பற்றிய உங்கள் ஆதங்கம் புரிகிறது என்ன செய்வது... அது எங்கள் மகாகவியே வேண்டாம் என்று எங்களுக்கு கூறிச் சென்றுவிட்டான்..

    கடமை புரிவா ரின்புறுவார்
    என்னும் பண்டைக் கதை பேணோம்;
    கடமை யறிவோம் தொழிலறியோம்;
    கட்டென் பதனை வெட்டென் போம்;
    மடமை,சிறுமை,துன்பம்,பொய்,
    வருத்தம்,நோவு,மற்றிவை போல்
    கடமை நினைவுந் தொலைத் திங்கு
    களியுற் றென்றும் வாழ்குவமே.

    உடனே சோதிடந்தனை இகழ் என்பதற்கு போவீர்கள் அதைப் பற்றியக் குறிப்பை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.. பின்னொரு நாளில் தருகிறேன்.

    எப்படியோ உங்களின் உணர்ச்சி வசத்தால் மூதறிஞரின் குடும்ப வரலாற்றுச் சுருக்கம் தெரிய வந்தது... நன்றி.

    எனக்கும் மூதறிஞரைப் பிடிக்கும்... நல்ல மனிதர், இலக்கியவாதி, அறிஞர் என்பதற்காக... அது எதார்த்தம் தானே!
    நன்றி,
    வணக்கம்,
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  35. பணத்தை பற்றி பேசத் தொடங்கினால்
    பக்கம் பக்கமாக எழுத தோன்றுகிறதே

    பணத்தைப் பற்றி இப்படி ஒரு சிந்தனை...
    படித்துத்தான் பாருங்களேன்..

    வாழ்க்கைக்கு பணம் தேவை ஆனால்
    வாழ்க்கையே பணமில்லை..

    கடல் பயணத்திற்கு
    கப்பலில் செல்ல நீர் தேவை அதனால்

    கப்பல் முழுவதற்கும் நீர் வந்தால்
    கடல் பயணமே காணாமல் போயிடுமே..

    வாழ்க்கை பயணமும்
    கடல் பயணம் போல் தான்

    பணமாகிவிட்ட வாழ்க்கை
    பாழாகிவிடும் என்பதே உண்மை

    கடல் இன்றி கடல் பயணமில்லை
    காசு இன்றி வாழ்க்கை பயணமுமில்லை

    கடல் பயணம் மகிழ்ச்சியாக அமைய
    கடல் நீரின் மேல் செல்ல வேண்டும்

    வாழ்க்கை பயணம் அமைதியாக செல்ல
    வாழ தெரியனும் பணத்திற்கு வெளியே

    கூடுதல் பின் ஊட்டத்திற்கு
    கூடவே வைக்காதீர்கள் ஒரு குட்டு

    சிந்தனையை மேலும் தொடர
    சிரித்தபடி இதனை அசைபோடுங்களேன்..

    பணமிருந்தால் புத்தகம் வாங்கலாம்
    அறிவை அல்ல
    பணமிருந்தால் சோறு வாங்கலாம்
    பசியை அல்ல
    பணமிருந்தால் மருந்து வாங்கலாம்
    ஆரோக்கியத்தை அல்ல
    பணமிருந்தால் மெத்தை வாங்கலாம்
    உறக்கத்தை அல்ல
    பணமிருந்தால் மனிதனை வாங்கலாம்
    கடவுளை அல்ல..

    ReplyDelete
  36. ஆசிரியர் ஐயா அவர்களே, இன்று காலையில் கட்டுரையைப் பார்த்தேன். பின்னூட்டம் எழுத ஆசை கொண்டேன். ஆனால் அதில் 'வாலி'யின் திருவாய்மொழியைப் பார்த்து விலகிவிட்டேன். இதை அவர் 'பொதிகை' தொலைக்காட்சியிலும் சொன்னார். எதைச்சொன்னால் ஆதாயம், யாரைக் கொண்டாடினால் பலன் கிட்டும் எனும் சாமர்த்தியமெல்லாம் திருவரங்கத்தாருக்குத் தெரியாதா என்ன? அமெரிக்காவில் சூதாட்ட மையங்களில் கைப்பிடியை இழுத்து அடித்தால் காசு கொட்டும். அதிலும் ஒரு சூட்சுமம் இருக்கும் போலிருக்கிறது. நம் ஊரில் துப்பாக்கியால் பலூனைச் சுட்டால் ஒரு பவுடர் டப்பா இலவசம் என்பது போல. போகட்டும் நமக்கு ஏன் பெரிய இடத்துப் பொல்லாப்பு. நான் சொல்ல வந்த விஷயம் மறந்துவிட்டேனே. கட்டுரையின் இனிப்பு, காரம், சுவை இவை எல்லாவற்றையும் விட பின்னூட்டம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. சார்! தமிழ் விரும்பி ஏதோ ஒரு பேச்சுக்காக ராஜாஜி பற்றி எழுதியதை நம்ம கே.எம்.ஆர். ரொம்ப சீரியசாக எடுத்துக் கொண்டு விளாசித் தள்ளிவிட்டாரே. அவர் ஒரு ராஜாஜி பக்தர். ராஜாஜியும் பக்தன் வழிபடுமளவிற்கு அரசியலிலும், தனி வாழ்விலும் நேர்மையாக வாழ்ந்தவர். இன்றைய தில்லுமுல்லு, பித்தலாட்டம் இவைகள் எல்லாம் அவர்கள் கனவில்கூட நினைக்காதது. என் பங்குக்கு நான் ஒரு நிகழ்ச்சி சொல்லட்டுமா? திகட்டிவிடுமா தெரியவில்லை. சரி. சொல்லித்தான் வைக்கிறேனே. ஒரு நாள் காலை காரில் கடற்கரைக்கு நடைபயில புறப்பட்ட போது ராஜாஜி அப்போதைய முதலமைச்சர் வீட்டுக்கு விடச்சொன்னாராம். அது நம்ம மு.க.வீடு. அவரிடம் போய், ஐயா, தயவு செய்து இரண்டு தலைமுறை மறந்திருந்த சோமபானக் கடைகளைத் திறந்து ஏழைகளைப் பாழடித்து விடாதீர்கள் என்று கையைப்பிடித்துக் கொண்டு வேண்டிக்கொண்டு வந்தார். பொழுது விடிந்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு முதலமைச்சர் பதில் சொன்னாராம், அவருடைய மகன் நரசிம்மனுக்குத் தேர்தலில் சீட் கேட்டுவிட்டுப் போனார் என்று. எப்படி இருக்கு?

    ReplyDelete
  37. /////முதலமைச்சரின் மகன் என்றதால் கிடைத்த சலுகைகளை வைத்து அவர் நாகரீக ஆடை அணிந்தது போல உங்கள் செய்தி ஒலிக்கிறது. அது அப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை என்று பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்////

    இல்லை சார் நீங்கள் தான் தவறுதலாகப் புரிந்துக் கொண்டு விட்டீர்கள்..
    நான் மூதறிஞர் என்று எழுதும் போதே தெரியவில்லையா!
    அது நிருபரின் இடக்கானக் கேள்வி அதற்கு பெரியவரின்
    சுவாரஷ்யமான, உண்மையான, எதார்த்தமானப் பதிலும் கூட.

    அது நண்பர் மைனர் சொன்னது போல் தகவல் பரிமாற்றத்திற்காக சொன்னது தான்...
    அதோடு என் கருத்து விசயத்தில் எப்போதும், தினகரனையும் (முன்பொருமுறை), தி.மு.க. வையும் முன்னுக்கு கொண்டு வருகிறீர்கள் என்றுத் தெரியவில்லை... இல்லைப் பொதுவாகத்தான் கூறுகிறீர்களா தெரியவில்லை... இருந்தும் அந்நாளைய முதல்வர்கள் வேறு அவர்களை இந்நாளில் ஒப்பிடுவது பொருத்தமாகாது...

    இருந்தும் தங்களின் தகவல்கள் யாவும் நன்று.
    நன்றி.

    ReplyDelete
  38. ஹா....AK-47 எனக் குறிப்பிட்டாலே அதன் விளைவு கொடுமை எனத் தெரிந்து கொண்டேன் ...அய்யகோ ...அறச் சொல்லோ இது

    ReplyDelete
  39. ///ஒரு நாள் காலை காரில் கடற்கரைக்கு நடைபயில புறப்பட்ட போது ராஜாஜி அப்போதைய முதலமைச்சர் வீட்டுக்கு விடச்சொன்னாராம். அது நம்ம மு.க.வீடு. அவரிடம் போய், ஐயா, தயவு செய்து இரண்டு தலைமுறை மறந்திருந்த சோமபானக் கடைகளைத் திறந்து ஏழைகளைப் பாழடித்து விடாதீர்கள் என்று கையைப்பிடித்துக் கொண்டு வேண்டிக்கொண்டு வந்தார். பொழுது விடிந்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு முதலமைச்சர் பதில் சொன்னாராம், அவருடைய மகன் நரசிம்மனுக்குத் தேர்தலில் சீட் கேட்டுவிட்டுப் போனார் என்று. எப்படி இருக்கு?///

    த‌ள்ளாத வயதில், கொட்டும் மழையில் குடையைப் பிடித்துக் கொண்டு இராஜாஜி கலைஞரின் வீட்டுக் கதவைத் தட்டினார். நாட்டு நலன் கருதிப் போனவருக்கு கிடைத்த பரிசு அது.

    அதுபோலவே பெரியார் மணியம்மைத் திருமணம் ராஜாஜியின் தந்திரத்தால்தான் நடந்தது என்று பலரும் இன்றுவரை சொல்லி வருகின்றனர். திகவில் இருந்து திமுக1949ல் பிறந்ததற்கு பெரியார் செய்த பொருந்தாத் திருமணம்தான் காரணம்.இராஜாஜியின் அறிவுரைப்படிதான் பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்தார் என்ற பழிச் சொல்லை இராஜாஜி சுமந்தார். உண்மையில் அத் திருமணம் வேண்டாம் என்றே கடிதம் எழுதியுள்ளார் இராஜாஜி.அக்கடிதத்தை 15,20 ஆண்டுகளுக்கு முன்னர் வீரமணி வெளியிட்டு விட்டார்.

    உணர்ச்சி வயப்படாமல், தகவல் விருப்பம் உள்ளவர்களுக்குப் போய்ச் சேரட்டும் என்றே எழுதினேன்.

    படித்துப் பின்னூட்டம் இட்டமைக்கு அனைவருக்கும் நன்றி.
    பக்கடா காரம் கொஞ்சம் தூக்கல் போல உள்ளது.

    ReplyDelete
  40. தில்லியில் பாசந்தி கிடைக்குமா?//

    சார் முதலில் பாசந்தி என்ற பெயரில் நான் எந்த இனிப்பும் சாப்பிட்டதாக நினைவில்லை (ஹி ஹி நிஜமாதான் சார்). நானே உங்களிடம் கேட்கலாம் என்றிருந்தேன். நானாகவே 'ரஸ்மலாய்' (பெங்காலி இனிப்பு வகைகளில் ஒன்று) போல் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் விளக்கினால் தில்லியில் கிடைக்கிறதா என்று தெரியவரும்.

    ReplyDelete
  41. பொழுது விடிந்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு முதலமைச்சர் பதில் சொன்னாராம், அவருடைய மகன் நரசிம்மனுக்குத் தேர்தலில் சீட் கேட்டுவிட்டுப் போனார் என்று//

    என்ன ஒரு கேவலமான பதில்.

    ReplyDelete
  42. கடல் பயணம் மகிழ்ச்சியாக அமைய
    கடல் நீரின் மேல் செல்ல வேண்டும்
    வாழ்க்கை பயணம் அமைதியாக செல்ல
    வாழ தெரியனும் பணத்திற்கு வெளியே //

    ரசித்தேன்!

    ReplyDelete
  43. தஞ்சாவூரின் தொடர்பு இருந்தும் 'பாஸந்தி' சாப்பிட்டதில்லையென்றால் ஆச்சரியமாக இருக்கிறது. தஞ்சாவூர், எல்லையம்மன் கோயில் வீதியிலுள்ள 'சரவண பவன்' (இப்போது காஃபி பேலஸ்) ஓட்டலில் அந்த நாட்களில் பாஸந்தி ஸ்வீட்தான் சிறப்பு. பாதாம்பருப்பில் பால் சேர்த்துச் செய்யப்பட்டு 'செமி சாலிட்' வடிவில் ஒரு சிறிய தட்டில் ஒரு ஸ்பூன் போட்டு கொண்டு வைப்பார்கள். அடடா! ஐம்பது அறுபதுகளில் சரவண பவனில் சாப்பிட்ட பாஸந்தியின் நினைவு நாக்கில் நீர் ஊறுகின்றது. நினைவு படுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
  44. ///Thanjavooraan said...
    தஞ்சாவூரின் தொடர்பு இருந்தும் 'பாஸந்தி' சாப்பிட்டதில்லையென்றால் ஆச்சரியமாக இருக்கிறது. தஞ்சாவூர், எல்லையம்மன் கோயில் வீதியிலுள்ள 'சரவண பவன்' (இப்போது காஃபி பேலஸ்) ஓட்டலில் அந்த நாட்களில் பாஸந்தி ஸ்வீட்தான் சிறப்பு. பாதாம்பருப்பில் பால் சேர்த்துச் செய்யப்பட்டு 'செமி சாலிட்' வடிவில் ஒரு சிறிய தட்டில் ஒரு ஸ்பூன் போட்டு கொண்டு வைப்பார்கள். அடடா! ஐம்பது அறுபதுகளில் சரவண பவனில் சாப்பிட்ட பாஸந்தியின் நினைவு நாக்கில் நீர் ஊறுகின்றது. நினைவு படுத்தியமைக்கு நன்றி.///

    ///////// Thanjavooraan said...
    தஞ்சாவூரின் தொடர்பு இருந்தும் 'பாஸந்தி' சாப்பிட்டதில்லையென்றால் ஆச்சரியமாக இருக்கிறது. தஞ்சாவூர், எல்லையம்மன் கோயில் வீதியிலுள்ள 'சரவண பவன்' (இப்போது காஃபி பேலஸ்) ஓட்டலில் அந்த நாட்களில் பாஸந்தி ஸ்வீட்தான் சிறப்பு. பாதாம்பருப்பில் பால் சேர்த்துச் செய்யப்பட்டு 'செமி சாலிட்' வடிவில் ஒரு சிறிய தட்டில் ஒரு ஸ்பூன் போட்டு கொண்டு வைப்பார்கள். அடடா! ஐம்பது அறுபதுகளில் சரவண பவனில் சாப்பிட்ட பாஸந்தியின் நினைவு நாக்கில் நீர் ஊறுகின்றது. நினைவு படுத்தியமைக்கு நன்றி.///////

    அதானே..டெல்லியிலே செட்டில் ஆயிட்டோங்குறதுக்காக 'தஞ்சாவூரா..அது எந்த கன்ட்ரி?' அப்பிடின்னு அண்ணாந்தாப்புல கேள்வியெல்லாம் கேட்கப்புடாது..சொல்லிப்புட்டேன்..

    தஞ்சாவூராருக்கு : உங்க ஊரு அசோகா பத்தி சொல்ல மறந்துட்டேன்..'திருவையாறு அசோகா' தான் என்னோட ஃபாவரைட்.

    ReplyDelete
  45. ////Uma said...
    பொழுது விடிந்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு முதலமைச்சர் பதில் சொன்னாராம், அவருடைய மகன் நரசிம்மனுக்குத் தேர்தலில் சீட் கேட்டுவிட்டுப் போனார் என்று//

    என்ன ஒரு கேவலமான பதில்.\\\\\


    அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா..

    ReplyDelete
  46. எல்லையம்மன் கோயில் வீதியிலுள்ள 'சரவண பவன்' (இப்போது காஃபி பேலஸ்) ஓட்டலில் //

    இந்த முறை தஞ்சாவூர் வரும்போது முதலில் இதை சாப்பிட்டுவிட்டுத்தான் மீதி வேலையெல்லாம்.

    ReplyDelete
  47. அதானே..டெல்லியிலே செட்டில் ஆயிட்டோங்குறதுக்காக 'தஞ்சாவூரா..அது எந்த கன்ட்ரி?' //

    டெல்லியில் தற்காலிகமாகத்தான் செட்டில் ஆகியிருக்கிறோம், நிரந்தரமா செட்டில் ஆவது நம்ப ஊரில்தான். அது எப்போது என்பதுதான் புரியவில்லை. அசோகா எனக்கும் பிடித்த இனிப்பு. நீங்க வேற நினைவுபடுத்திட்டீங்க, தீபாவளிக்கு செஞ்சுட வேண்டியதுதான். (ஜப்பானுக்கும் பார்ஸல் அனுப்பவும் / அப்பதானே ஆத்துக்காரர் வாயைத்திறக்க முடியாது என்பது போன்ற கமெண்ட்ஸ்களுக்கு தடை விதிக்கப்படுகிறது)

    ReplyDelete
  48. அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா..//

    என்னே ஒரு தொலைநோக்குப்பார்வை 'மாண்புமிகு' மைனர் அவர்களே! நாளைக்கே தப்பித்தவறி ஒருவேளை நீங்கள் அரசியல்வாதியாக ஆகிவிட்டால் (நம்ம தமிழ்நாட்டு மக்களை நம்ப முடியாதுப்பா), எதற்கும் இருக்கட்டும் என்று முன்னெச்சரிக்கையாக சொல்லிவைப்பது போல் இருக்கிறது. (அப்ப நம்ம ரஜினிகாந்த் என்ன சொல்வாருன்னா 'தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்' என்று).

    ReplyDelete
  49. ////Uma said...
    அசோகா எனக்கும் பிடித்த இனிப்பு. நீங்க வேற நினைவுபடுத்திட்டீங்க, தீபாவளிக்கு செஞ்சுட வேண்டியதுதான்.///

    அபிடியே கமென்ட் அடிக்குற வாயை எல்லாம் அடைக்க உங்கள் அசோகாவை அள்ளிவுடலாமுனு என்னா ஒரு ஐடியா?

    "'நாம்' எனும் சொல்லை உச்சரிக்கும்போதுதான் உதடுகள் கூட ஒட்டும்'" என்று ஒரு வசனம் உண்டு..
    உங்கள் அசோகாவை வாயில் போட்டால் ஒட்டிய உதடுகளைப் பிரிக்க முடியுமா?
    இந்த வகையில் வாயடைப்பு செய்ய அசோகா ஆயுதம் எடுத்திருக்கும் உங்களுக்கு எனது அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  50. ////// Uma said...

    அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா../////

    என்னே ஒரு தொலைநோக்குப்பார்வை 'மாண்புமிகு' மைனர் அவர்களே! நாளைக்கே தப்பித்தவறி ஒருவேளை நீங்கள் அரசியல்வாதியாக ஆகிவிட்டால் (நம்ம தமிழ்நாட்டு மக்களை நம்ப முடியாதுப்பா), எதற்கும் இருக்கட்டும் என்று முன்னெச்சரிக்கையாக சொல்லிவைப்பது போல் இருக்கிறது. (அப்ப நம்ம ரஜினிகாந்த் என்ன சொல்வாருன்னா 'தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்' என்று).

    உங்களைப் போன்ற பெரியமனசு கொண்ட தாய்க்குலங்களின் ஆதரவு இதே ரீதியில் தொடர்ந்தால் மைனர் 'மாண்புமிகு மைனர்' ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது..
    ரஜினிசார் கம்ப்ளீட் ரெஸ்ட்..அவரைத் தொந்தரவு செய்யக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு..அதுனால அவரு பன்ச் டைலாக் வுடமாட்டாரு..அதுவும் இந்த டைலாக்கை அவர் மறந்து ரொம்ப வருஷமாச்சு....

    ReplyDelete
  51. உங்கள் அசோகாவை வாயில் போட்டால் ஒட்டிய உதடுகளைப் பிரிக்க முடியுமா?//

    ஹல்லோ, சாப்பிட்டுப் பார்க்காமலேயே கமெண்ட் அடிக்கப்டாது, புரியறதா?

    ReplyDelete
  52. மைனர் 'மாண்புமிகு மைனர்' ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது..//

    சரி சரி பகல்ல எத்தனை நேரம் தூங்குவீங்க? எந்திரிச்சி சமையல் வேலையைக் கவனிங்க.

    ReplyDelete
  53. ////Blogger iyer said...
    //சனீஷ்வரன் இறுதிச்சீட்டைக்கொடுக்கும்போது அந்த இரண்டுமே பயன்படாமல் போய்விடும்!///
    இந்தியாவை விட்டுச் செல்லும்போதுதான்
    இந்திய ரூபாயும் செருப்பும்
    ஷூ வும் சூட்டுக்குள் வைக்கும் டாலர்/கார்டும்
    இவைகளை செல்லாதாக்கும் போது
    இறைவன் எழுதி தரும் சீட்டிற்கு
    வேறு பாத அணியும்
    வேறு பாதையை காட்டும் அணியும்
    அவரவர் நற்செயலுக்கேற்ப என
    அதனைச் சொல்லவும் வேண்டுமோ?/////

    வெறும் காலோடு போகாமல் ஏதாவது கிடைத்தால் சரிதான் விசுவநாதன்!

    ReplyDelete
  54. Blogger Uma said...
    தில்லியில் பாசந்தி கிடைக்குமா?//
    சார் முதலில் பாசந்தி என்ற பெயரில் நான் எந்த இனிப்பும் சாப்பிட்டதாக நினைவில்லை (ஹி ஹி நிஜமாதான் சார்). நானே உங்களிடம் கேட்கலாம் என்றிருந்தேன். நானாகவே 'ரஸ்மலாய்' (பெங்காலி இனிப்பு வகைகளில் ஒன்று) போல் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் விளக்கினால் தில்லியில் கிடைக்கிறதா என்று தெரியவரும்.////

    பாலைக் குறுக்கும் பொழுது அதன் சுவை பெருகி, அதி அற்புதமாகி நம் சுவை நாளங்களுக்கு ஆனந்த விருந்து அளிக்கிறது என்றால் மிகையில்லை.இம்முறை `புல் கிரீம்’ பாலைக் காய்ச்சிக் குறுக்கி, அதனுடன் குங்குமப் பூ, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு, நெய்யில் வறுத்த உலர் பருப்புகள் தூவி இனிப்பான பாஸந்தி செய்ய கற்றுக்கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்
    புல் கிரீம் பால் – 2 லிட்டர்
    குங்குமப்பூ – சிறிதளவு
    சர்க்கரை – 1/2 கப்
    அலங்கரிக்க
    நெய் – 1 டீஸ்பூன்
    பாதாம், முந்திரி, பிஸ்தா – 2 டேபிள் ஸ்பூன்
    செய்முறை
    * அடிகனமான வாணலியில் பாலை ஊற்றி மெல்லிய தீயில் அடுப்பை வைத்து பால் காய்ந்ததும் சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கலந்து அதன் மேலே படியும் ஏடை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்ட வண்ணம் இருக்கவும்.
    * நடுநடுவே கலந்து, கலந்து பாலின் மேல் படியும் ஏடை, பாலின் அளவு 1/4 லிட்டர் அளவுக்கு குன்றும் வரை எடுத்து பாத்திரத்தில் போட்ட வண்ணம் இருக்கவும்.
    * பிறகு பாத்திரத்தில் சேகரித்த ஏடு, சர்க்கரை சேர்த்து சிறு தீயில் நன்கு கிளறவும்.
    * நெய்யில் தோலுரித்த பாதாம், முந்திரி, பிஸ்தா வறுத்து பாஸந்தியின் மேல்போட்டு அலங்கரித்து பரிமாறவும்.
    குறிப்பு
    * குளிர்காலத்தில் பாஸந்தியை சூடாகவும், வெயில் காலத்தில் பாஸந்தியை குளிர் சாதனப் பெட்டியில் வைத்தெடுத்து சில்லென்றும் பரிமாறலாம்.
    கீதா பாலகிருஷ்ணன்
    (இணையத்தில் இருந்து எடுத்துக்கொடுத்துள்ளேன் உங்களுக்காக)

    ReplyDelete
  55. Blogger Thanjavooraan said...
    தஞ்சாவூரின் தொடர்பு இருந்தும் 'பாஸந்தி' சாப்பிட்டதில்லையென்றால் ஆச்சரியமாக இருக்கிறது. தஞ்சாவூர், எல்லையம்மன் கோயில் வீதியிலுள்ள 'சரவண பவன்' (இப்போது காஃபி பேலஸ்) ஓட்டலில் அந்த நாட்களில் பாஸந்தி ஸ்வீட்தான் சிறப்பு. பாதாம்பருப்பில் பால் சேர்த்துச் செய்யப்பட்டு 'செமி சாலிட்' வடிவில் ஒரு சிறிய தட்டில் ஒரு ஸ்பூன் போட்டு கொண்டு வைப்பார்கள். அடடா! ஐம்பது அறுபதுகளில் சரவண பவனில் சாப்பிட்ட பாஸந்தியின் நினைவு நாக்கில் நீர் ஊறுகின்றது. நினைவு படுத்தியமைக்கு நன்றி.///////

    சேலத்தில் படிக்கின்ற காலத்தில் மலபார் ஹோட்டலில் அடிக்கடி பாஸந்தியை ரசித்துச் சாப்பிட்ட அனுபவம் உண்டு. நன்றி சார்!

    ReplyDelete
  56. /////Blogger Uma said...
    மைனர் 'மாண்புமிகு மைனர்' ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது..//
    சரி சரி பகல்ல எத்தனை நேரம் தூங்குவீங்க? எந்திரிச்சி சமையல் வேலையைக் கவனிங்க.////

    தவறு. அங்கே சமையல் செய்வது அம்மையார். டிஷ் வாஷிங் மட்டுமே அய்யாவின் வேலை!:-))))

    ReplyDelete
  57. பாசந்தி ரெசிபிக்கு நன்றி சார்! சரி அதையும் செய்து பார்த்துவிடலாம் என்றாலும் ஒருமுறை சாப்பிட்டபின்
    செய்தால்தான் அதே சுவையில் இருக்கிறதா என்பது தெரியும். கூடிய சீக்கிரம் சாப்பிட்டு பார்த்துவிட்டு செய்கிறேன்.

    ReplyDelete
  58. டிஷ் வாஷிங் மட்டுமே அய்யாவின் வேலை!:-))))//

    ம்ம்

    ReplyDelete
  59. SP.VR. SUBBAIYA said...
    /////Blogger Uma said...
    மைனர் 'மாண்புமிகு மைனர்' ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது..//
    சரி சரி பகல்ல எத்தனை நேரம் தூங்குவீங்க? எந்திரிச்சி சமையல் வேலையைக் கவனிங்க.////

    தவறு. அங்கே சமையல் செய்வது அம்மையார். டிஷ் வாஷிங் மட்டுமே அய்யாவின் வேலை!:-))))

    அதுகூட நாம பண்றதில்லே..சார்..வருஷத்துலே எண்ணினா நாள் கணக்கில்தான்..இந்த வேலை..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com