மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

26.10.11

செட்டிநாட்டு விருந்தோம்பலின் சிறப்பு!

--------------------------------------------------------------------------------------------
செட்டிநாட்டு விருந்தோம்பலின் சிறப்பு!

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கவிஞர் திரு. அரு.நாகப்பன் அவர்கள் கவியரங்கம் ஒன்றில் வாசித்த கவிதை. அதை உங்களுக்காக இன்று வலை ஏற்றியுள்ளேன். மக்கள் கவிஞர் திரு.அரு.நாகப்பன் அவர்களைக் காரைக்குடி வட்டத்தில் அனைவருக்கும் தெரியும். சிறந்த கவிஞர். கவியரசர் கண்ணதாசன் இருந்த காலத்தில் அவருடைய முதன்மைச் சீடர். கவியரசர் காரைக்குடிக்கு வந்தால், அவருடன் திரு. அரு.நாகப்பன் அவர்களும் எல்லா இடங்களுக்கும் செல்வார். கவியரசரும் தான் பேசும் மேடைகள் தோறும் திரு,நாகப்பனையும் பேசச் சொல்வார்

இவருக்கு சொந்த ஊர் காரைக்குடியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் உ.சிறுவயல் என்னும் கிராமம். ஆனால் காரை நகரில் ஒரு பள்ளியில் தமிழாசிரியராகப் பணி செய்தார். 15.6.1944 ஆம் ஆண்டு பிறந்தவர்

தன்னைப் பற்றிச் சொல்லும்போது இப்படிச் சொல்வார்:

”ஊனாச் சிறுவயலில் உரம்போட்டு வளர்க்காமல்
தானாக வளர்ந்த தமிழ்சொரியும் வாழைமரம்

கம்பன் அடிப்பொடியின் கவிசமைக்கும் அடுப்படியில்
அம்பிப் பயலாகி ஆளாகி வந்தகவி”


கம்பன் அடிப்பொடி திரு.சா.கணேசன் அவர்களுக்கும் இவர் சீடராக விளங்கியவர்.

எதையும் நச்’சென்று சொல்வார். புரட்சித்தலைவருக்கும் மிகவும் பிடித்த கவிஞர். அவருடன் பல இலக்கிய மேடைகளில் பேசியிருக்கிறார். மரபுக் கவிஞர். எதுகை, மோனை, சீர் என்று அவருடைய கவிதைகள் எல்லாம் அசத்தலாக இருக்கும்.

கவிதையின் நீளம் கருதியும், உங்களின் பொறுமையையும் கருதியும் கவிதையின் துவக்க வரிகள் 26ஐ வெட்டியுள்ளேன். மன்னிக்கவும்.

கவிஞர் எனக்கு நன்கு பரீட்சயமானவர். என் சிறுகதைகளின் இரசிகர். இரண்டு மூன்று மேடைகளில் என்னுடைய சிறுகதைகளைப் பற்றி சிலாகித்துப் பேசி அனைவரையும் அவற்றைப் படிக்கும்படி கேட்டுக்கொண்டவர்.

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

18 comments:

iyer said...

கவி உண்ணச் சோறு வேண்டா இந்த
புவிதன்னிலே என்று பல சொல்ல வந்த

அய்யர் "வருகை பதிவு" மட்டும் தந்து
பையவே அமைதி கொள்கிறார்

kannan said...

வாத்தியார் ஐயா வணக்கம்.

அனைவருக்கும் அன்புள்ள கண்ணனின் கனிவான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

RAMADU Family said...

Guru Vanakkam,

Thanks for the Deepavali - Bonus.

Good one.

Thanks
sri

kmr.krishnan said...

'தானாக வளர்ந்த தமிழ் சொரியும் வாழைமரம்'என்ற கவிஞரின் அறிமுகமே ஆயிரம் சொல்லி விட்டதே!

'வாழையடி வாழை என வந்த திருக்கூட்டம்'என்று நகரத்தார் அனைவரும்
முன்ன‌ரே தமிழ் வளர்த்த‌வர்க்ள்;அவர்களின் அடிவொற்றி வளர்ந்தவன் நான்
என்று கூறிய நயம் அருமை.

நகரத்தாரை சிகரத்தார் என்று சந்தத்தால் உயர்த்திய நேர்த்தி! அடடா!

'இனிமே கார்புடிச்சு எப்படித்தான் போவியளாம்?'

ஆச்சியின் கரிசனம் அப்படியே தொனிக்கிறதே!

அமெரிக்க நடேசன்(அமெரிகன் ரிடர்ன்டு?);அரிமளம் பொன்னையா
நெடுங்குடிச் சின்னையா;சிறுவயச் சுப்பையா;மீசைக் கருப்பையா;
மேலவட்டை முத்தையா===இவர்கள் தான் நீங்கள் முன்னர் அடிக்கடி சிலாகிக்கும் செட்டிநாட்டு சமையல் மேஸ்திரிகளோ?

உக்கிராண வள்ளியக்கா பற்றிய 4 வரிகள் எம் பி ஏ பாடத் திட்டத்தில் சேர்க்கலாம்.

பந்தி விசாரணை பகனேரி பானாழான கேடெரிங் பேராசிரியராகலாம்!

கருணைக்கிழங்கு காரக்குழம்பு பற்றியும்,வெள்ளையப்பமும் வகுப்பறையில் பேசி நீண்ட நாட்களாகின்றனவே என்று நினைத்தேன்.

டெலிபதிபோல் அறிந்து இப்படி ஒரு பதிவினைப் போட்டு அசத்திவிட்டீர்கள் ஐயா!

நன்றி!

தேமொழி said...

பச்சைக் குழந்தைகளும் பதுங்கி ஒளியாமல்
அச்சமின்றி "வாங்க" என அன்பாய் வரவேற்பார் ....

அங்குதான் ஆரம்பிக்கிறது இந்தப் பண்பாடு. வரவேற்பது என்ற கலை சிறுவயது முதலே ஊட்டி வளர்க்கப் பட்டிருப்பதும், இயல்பாக கொண்டுவரப் பட்டிருப்பதும் தெரிகிறது. ஊறுகாய் போடும் பொறுப்பில் உள்ள உமையக்கா மட்டும் ஏன் அடிக்கடி கற்பனை உலகில் சஞ்சரித்தார்கள்? என்ன காரணமாயிருக்கும்?
நல்ல விருந்திற்கு நன்றி ஐயா.

CJeevanantham said...

நன்றி

R.Srishobana said...

வணக்கம் அய்யா,
கவிதை தொகுப்பு மிக மிக அருமை.என் போன்றோருக்கு சற்று எளிய நடையிலான கவிதைகள் தான் தலையில் ஏறும்.ஒரு இனத்து நாகரிக பண்பாட்டை இக்காலத்தில் உள்ளவர்களும் அறியும் பொருட்டு மிக அழகாக எழுதிய கவிஞரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
அய்யா,எனக்கு படிப்பது மிகவும் பிடிக்கும், ஆனால் கவிதைகள் என்றால் புரியாத புதிர் தான் எனக்கு,காரணம் எனக்கு சரியாக புரியாது.இன்று தான் நான் உரைநடை போன்ற கவிதையை படித்தேன்.மிக மிக அருமை.
இன்று இதற்கு நேர்மறையான பண்பாட்டை தான் பார்க்கின்றோம்.எங்கள் நெருங்கிய‌ உறவினர் ஒருவர் இக்கவிதைக்கு நேர்மானவர்.அவர் போன்றவர்கள் நிச்சயம் இதை படித்து மனம் திருந்த வேண்டும் என்பதே என் விருப்பம்.

minorwall said...

கல்லூரி மூன்றாமாண்டு கல்லூரியில் எங்கள் குழுவால் நடத்தப் பட்டுவந்த ஒரு பத்திரிக்கைக்கான பேட்டிக்காக அரு.நாகப்பன் அவர்களை
எனது நெருங்கிய நண்பர் கோட்டையூர் ரவி மற்றும் இரண்டு தோழர்கள் சென்று சந்தித்துப் பெட்டி எடுத்துத் திரும்பினார்கள்..
அப்போதும் சரி..இதுவரையிலும் சரி..எனக்கு அவரைப் பற்றி இன்று அறிந்த அளவுக்குக் கூடத் தெரியாது..தகவல்களுடன் விருந்தும் அளித்த ஆசிரியருக்கு நன்றி..

minorwall said...

வாத்தியார் கொடுத்திருந்த கவிஞர் அரு.நாகப்பனின் பிறப்பு தேதி விவரம்கொண்டு ஜாதகம் கணித்துப் பார்த்தால் இவர் காலசர்ப்ப யோகத்தில் சிக்கியிருப்பதும்
ரிஷபத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் புதனும் சேர்ந்து நிபுணத்துவ யோகமும் பெற்றிருக்கிறாரென்று தெரிகிறது.. குரு உச்சம்..நீசமான செவ்வாயுடன் சேர்ந்து நீசபங்க ராஜ யோகத்தில் என்று பல விஷயங்கள் புரிகிறது..குருவும் சந்திரனும் பரிவர்த்தனையில்..குரு பார்வை பெற்ற சந்திரன்.. இன்னும் பிறந்த நேரம் தெரியாததால் பிற விஷயங்கள் புரிபடவில்லை..
புரிபட்டதில் பிடிபட்டவையே இந்தப் போடு போடுகின்றன..மீதியும் தெரிந்தால் ஒரு அலசு அலசலாம்..
காலசர்ப்ப யோகத்து ஜாதகக் காரர்கள் குறிப்பா செம்மொழியிலே கலக்கணும்ன்னு ஆசை உள்ளவுங்க
முக்கியமா பார்க்க வேண்டிய ஜாதகம்..
என்ன?ஒண்ணுமே புரியலேயா?

தேமொழி said...

சரியாப் போச்சு மைனர்வாள்... சின்ன வயசில இந்த மாதிரி ஜாதகம் ஜோசியம் எல்லாம் யார் பார்த்தாங்க. கால சர்ப்ப தோஷம் ஜாதகத்தில் லக்கினத்தில் 30 பரல், அது முடிவதற்கு முன்னே ஏழரை சனி ஆரம்பம் (இது இரண்டாவது ஏழரை, பிறந்த சமயமே ராசிக்கு 12 ஆம் வீட்டில் சனி எழுந்தருளி ஆசி வழங்கினார்). இதோ அதோன்னு அந்த ஏழரை சனி முடிவதற்கு முன்னே சனி மகா திசையும் ஆரம்பம். போதாகுறைக்கு இதுவரை அஷ்டமத்தில் சனியும் மூன்றில் குருவும் சேர்ந்து கலாய்க்கிறார்கள். அடுத்துசனி மனமிரங்கி ஒன்பதுக்கு போனாலும், குரு நாலாம் வீட்டில் குடி புகுவார். அவரும் இடத்தை காலி பண்ண வேண்டும் சனிதசையும் முடிய வேண்டும். அதுக்கப்பறம் செய்த முயற்சிகளுக்கு பலன்... செய்யும் வேலைக்கேத்த கூலி... இது போன்ற உழைப்பிற்கு பலன் என்ற மிக நியாயமான ஆசைகள் நிறைவேறலாம். "ஆனால் காலா காலத்தில் கிடைக்காமல் கிழவியாய் ஆனபின் கிடைத்து என்ன, இல்லை கிடைக்காவிடால்தான் என்ன?"
வேண்டுமானால் ....

"என்னுடைய ஜாதகத்தில் உய்யலாலா
என்னுடைய வாழ்விலென்றும் ஜிங்கலாலா
என்னையும் நீ காப்பாத்து நந்தலாலா"
என்று வேண்டுமானால் கவிதை எழுதிக்கொண்டிருக்கலாம்.

தேமொழி said...

போதாகுறைக்கு "சனி திசையில் ராகு புத்தி", இதுவரை "அஷ்டமத்தில் சனியும்" "மூன்றில் குருவும்" சேர்ந்து கலாய்க்கிறார்கள் என்று படியுங்கள்..இன்னும் குஜாலா இருக்கும்.

தேமொழி said...

minorwall said...
///வாத்தியார் கொடுத்திருந்த கவிஞர் அரு.நாகப்பனின் பிறப்பு தேதி விவரம்கொண்டு ஜாதகம் கணித்துப் பார்த்தால் இவர் காலசர்ப்ப யோகத்தில் சிக்கியிருப்பதும் ரிஷபத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் புதனும் சேர்ந்து நிபுணத்துவ யோகமும் பெற்றிருக்கிறாரென்று தெரிகிறது.///

கவிஞர் திரு. அரு.நாகப்பன் அவர்கள் அதிகாலையில் பிறந்திருந்தால் அவருக்கு காலசர்ப்ப தோஷம் இருக்க வாய்ப்புள்ளக்து. ஆனால், காலை 10:14 AM க்கு பிறகு பிறந்திருந்தால், சிம்ம லக்கினக்காரராக இருந்திருப்பார். அப்பொழுது ராகு கேதுக்குள் அனைத்துக் கிரகங்கள் இருந்தாலும் லக்கினம் வெளியே தனியே இருக்கிறது. நீங்கள் குறிப்பிடுவது போல் நேரம் தெரிந்திருக்க வேண்டும்.

RAMADU Family said...

Guru vanakkam,

Continuing on Minor and Themozhi's analysis, I feel he must be Mesha lagnam

minorwall said...

///////தேமொழி said...
அதுக்கப்பறம் செய்த முயற்சிகளுக்கு பலன்... செய்யும் வேலைக்கேத்த கூலி... இது போன்ற உழைப்பிற்கு பலன் என்ற மிக நியாயமான ஆசைகள் நிறைவேறலாம். "ஆனால் காலா காலத்தில் கிடைக்காமல் கிழவியாய் ஆனபின் கிடைத்து என்ன, இல்லை கிடைக்காவிடால்தான் என்ன?"////

நம்பிக்கை வைத்து எதிர்பார்த்துக் காத்திருங்கள்..
ஆசைப்பட்டது நிச்சயம் நடக்கும்..

minorwall said...

///////iyer said...
கவி உண்ணச் சோறு வேண்டா இந்த
புவிதன்னிலே என்று பல சொல்ல வந்த

அய்யர் "வருகை பதிவு" மட்டும் தந்து
பையவே அமைதி கொள்கிறார்////

அமைதியாவே கொல்றீங்களே?

minorwall said...

RAMADU Family said...
Guru vanakkam,

Continuing on Minor and Themozhi's analysis, I feel he must be Mesha lagnam

could u pls. brief on what basis you came to this conclusion?

RAMADU Family said...

If he is mesha lagana, then he has a sound "vakku sthanam" where he has two benefics, Venus and Mercury

The below is purely my perception based on lotof horoscope, I have seen.
Also, Mars in 4th house, chevvai dosham, will give some kind of hair loss

ramadu

minorwall said...

////// based on lotof horoscope, I have seen.
Mars in 4th house, chevvai dosham, will give some kind of hair loss

பொதுவா மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்தான் முடிச்சுப் போட ட்ரை பண்ணுவாங்க ..
நீங்க வழுக்கைத்தலைக்கும் லக்னத்துக்கும் முடிச்சுப் போட்ருக்கீங்கோ..

இண்டரெஸ்டிங்..