மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

14.10.11

மறுபிறவி உண்டா, இல்லையா?

 மறுபிறவி உண்டா, இல்லையா?

பக்தி மலர் by KMRK, Our classroom Senior Student

உண்டென்றால் முற்பிறப்பில் நாம் என்னவாக இருந்தோம்?

இந்தக் கேள்விகள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் இயல்பாகத் தோன்றுவதே! பக்திமலருக்கு இது சரியான செய்திதானா?

சரியோ சரியில்லையோ எழுதத் துணிந்துவிட்டேன்.முன் வைத்த காலைப்பின்
வைக்கும் வழக்கம் எல்லாம் இல்லை. எனவே எழுதுகிறேன்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர்..."

(திருக்குறள்)

"பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க"

"பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் "

"அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று"

"மீண்டு வாராவழி அருள் புரிபவன்"

(திருவாசகம்=மாணிக்கவாசக சுவாமிகள்)

ஈசன் அவன்அல்லா தில்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான்.

(காரைக்கால் அம்மையார்)

வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே

(தொண்டரடிப்பொடி ஆழ்வார்)

இதுபோலப் பல மேற்கோள்களைக் காட்டிக் கொண்டே செல்லலாம்.

பன்னெடுங்காலமாக மறுபிறவி, முற்பிறவி பற்றிய கருத்துக்கள் நம் மரபில் உள்ளன. அவ்வாறு பெரியவர்கள் கூறியதை அப்படியே ஏற்றுக் கொள்வது எங்கள் தலைமுறையினர் வழக்கம்.

ஆனால் இத் தலைமுறையினருக்கு மேலும் சில விளக்கங்கள் அளிப்பது தேவையாகிறது.

கிரேக்கத்தில் கூட 2300 ஆண்டுகளுக்கு முன்னரே முற்பிறவிக் க‌ருத்துக்கள் உள்ளன.

ER      என்பவர் இறந்துவிடுகிறார்.அவருடைய உடலை எரிப்பதற்காக
மயானத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள்.(நன்றாகக் கவனியுங்கள். 2300
ஆண்டுகளுக்கு முன்னர் எரிக்கும் வழக்கம் கிரேகத்தில் இருந்துள்ளது.)

அவருடைய மார்பில் தீயை வைக்கும் சமயம் அவர் உடல் நெளிகிறது.அவர் கண் திறந்து பார்க்கிறார்.முதலில் பயந்து போனவர்கள், பின்னர் சுதாரித்து அவரை தூக்கி எழுப்புகிறார்கள்.அவர் தான் இறந்த அநுபவத்தைக் கூறுகிறார்.

இறப்புக்கான கடவுள் அவரைத் தவறாகக்கூட்டிச் சென்று விட்டதாம்.அதனால்
நரகம், சொர்க்கம் ஆகியவற்றிற்குச் செல்லும் இடைவழியில் தள்ளி நின்று
நடப்பவற்றைக் கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்.

நரகத்திலிருந்து வருபவர்களுக்கு ஒரு பெரிய பட்டியல்
காண்பிக்கப்பட்டது.அப்பட்டியலில் அவர்களுக்கு அடுத்த பிறவி எது வேண்டுமோ அதனை அவர் அவர்களே தேர்வு செய்யும் உரிமை அளிக்கப்பட்டது.நரகத்தில் இட‌ர் பட்டவர்கள் த‌ங்கள் மோசமான அநுபவத்தால் மிகவும் ஜாக்கிரதை உணர்வுடன் அடுத்த பிறவியைத் தேர்வு செய்தனர்.ஆனால் சொர்கத்தில் இருந்து திரும்பியவர்கள் அவசர‌ப்பட்டு சொகுசு வாழ்க்கையை தேர்ந்து எடுத்தனர். பட்டியலில் இருந்த பகட்டு வாழ்க்கையுடன் ஒரு 'செக்' வைக்கப்பட்டுள்ளதை சொர்கவாசிகள் கவனிக்காமல் தேர்ந்து எடுத்து  நரக வாழ்வுக்குத் தங்களை
ஆட்படுத்திக் கொண்டனர்.

இந்த இணைப்பைப் படியுங்கள்.    Plato's Republic

http://www.davidson.edu/academic/classics/neumann/CLA350/ErMyth.html

நமது புராணங்களில் ஜடபரதர் பற்றிய கதை மறுபிறவிக் கருத்துக்கு வலு
சேர்க்கும்.தன் கடமையெல்லாம் முடித்த பர‌த மன்னன்(இராமாயண பரதன்
அல்ல)வானப்பிரஸ்த ஆசிரமத்தை எடுத்துக் கொண்டு காட்டிற்குச் சென்று தவம் செய்தனன். அப்போது ஒரு நாள் கர்பமான மான் ஒன்று சிங்கத்தால்
துரத்தப்பட்டு,பரதர் அமர்ந்து இருந்த நீர்நிலைக்கு அருகில் வந்து அந்த
நீரைத் தாண்டிக் குதிக்கும் போது பிரசவித்துவிட்டது.தாய் மான் உயிரை
விட்டுவிட்டது. பிறந்த குட்டி மான் நீரில் விழுந்து தத்தளித்ததைப்
பார்த்த பரதர் அந்த மான் குட்டியிடம் பிரியம் வைத்து அதனைக்
காப்பற்றினார். வளர்க்கத் துவங்கினார்.பரதரின் அந்திம காலம் வந்த போதும்,
மானையே நினைத்துக்கொண்டு உயிரை விட்டார். அதனால் அவருக்கு மான் பிறவி ஏற்பட்டது.ஆனால் தன்னுடைய முற்பிறவி மானான‌ பரதனுக்கு நன்கு  தெரிந்து இருந்தது.மான் பிறவியை நன்கு கழித்து ,மீண்டும் மனிதப் பிறவியை அடைந்து ஜடபரத முனிவராக வளர்ந்து முக்தி அடைந்தார்.

புராணம் எல்லாம் புரட்டு என்பவர்களும் இதனைப் படிக்கக்கூடும் .எனவே அதனை இதோடு விட்டு விட்டு  வேறு ஆதாரங்களைத் தேடுவோம்.

குழந்தை மேதாவிகள் எவ்வாறு தோன்றுகின்றனர்?

ஏர் டெல் சூப்ப‌ர் சிங்க‌ரில் ஜூனியரில் ஸ்ரீகாந்த் என்ற வாண்டு சக்கை
போடு போட்டானே!எப்படி? ஸ்ரீகாந்த் ஆவது சினிமாப் பாடல்கள் தான்
பாடினான்.அவனுக்கு பாரம்பரிய இசையைப் பற்றிய ஞானம் எவ்வளவு என்பது
நமக்குக் காண்ப்க்கப்படவில்லை.

http://www.youtube.com/watch?v=4ZAQddoWeM0&feature=related

ஆனால் ஒரு பெண் குழந்தை,SRINIDHI,  2 வயது இருக்கலாம், கர்னாடக
சங்கீதத்தில் ராகம் கண்டு பிடிக்கிறாள். சுர வரிசை சொல்கிறாள்.பாம்பே
ஜெயஸ்ரீ போன்ற பிரபலத்தால் சோதிக்கப்பட்டு வெற்றி பெறுகிறாள்.பேச்சுக்
கூட சரியாக வராத குழந்தைக்கு வெறும் பயிற்சியால் அந்த ஞானம் வந்துவிடுமா? முற்பிறவி வாசனை என்றே சொல்லத் தோன்றுகிறது. http://www.youtube.com/watch?v=9Jen-1ofuU4&feature=results_main&playnext=1&list=PLA7264574DC19274Chttp://www.youtube.com/watch?NR=1&v=Y9kladiGQlk


http://www.youtube.com/watch?v=nJLTkO0lwWU&feature=related

http://www.youtube.com/watch?v=P2fBjXN66JE&feature=related

http://www.youtube.com/watch?v=nByWAVeYhhI&feature=related

இதைப் பாருங்கள்.பேபி வர்ஷா புவனேஸ்வரி செய்யும் வள்ளித் திருமணம் சங்கீத உபன்யாசத்தைக் கேளுங்கள்.

பயிற்சி எடுத்துக் கொண்டாலும் அந்த முக பாவம்,பாட்டு, தாளக்கட்டு,
ந‌டிப்பு, நகைச்சுவை டைமிங் எல்லாம் கற்றதனால் மட்டும்  வருமா?  முற்பிறவியில் இந்தக் கலையில் நல்ல பயிற்சியுள்ள ஏதோ ஒரு ஆன்மா
இந்தப்பெண் உள்ளே இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

http://www.youtube.com/watch?v=c2bT2fR8y3A&feature=related

இப்போது ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும்  பாரா சைகாலஜி ஆராய்ச்சி மிகவும் பிரபலம். ரஷ்யாவிலிருந்து 300 புத்தகங்கள் வெளி வந்துள்ளன.

Near death experience, Reincarnation

இவை பற்றி அதிகமான ஆராய்ச்சி நடைபெறுகிறது.இந்த ஆராய்ச்சிகளில் மிகவும் புகழ் பெற்ற ஆய்வாளர்      IAN STEVENSON.

அவரைப் பற்றி அறியவும், அவருடைய பேட்டியைப் படிக்கவும் , அவருடைய
ஆய்வுகளிலேயே மிகவும் முக்கியமான சுவர்ண‌லதா பற்றிப் படிக்கவும் இந்த
சுட்டியைப்பருங்கள்.
http://reluctant-messenger.com/reincarnation-proof.htm

மறு பிறவியைப்பற்றி நானுமே குழப்பத்தில்தான் உள்ளேன். திறந்த மனத்துடன் இந்த சுட்டிகளைப் படித்து ஆரோக்கியமான விமர்சனங்களைச் செய்ய அன்புடன் அழைக்கிறேன்.

வாழ்க வளமுடன்!

ஆக்கியோன்:கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
 =======================================================
வாழ்க வளமுடன்!

110 comments:

SP.VR. SUBBAIYA said...

இந்தப் பிறவியிலேயே தேவைக்கு மேலான பிரச்சினைகளை பையில், கையில் வைத்துக்கொண்டு மனிதன் அல்லாடுகிறான். இதில் முற்பிறவி மற்றும் அடுத்த பிறவி என்று அவனைப் பயமுறுத்த வேண்டாம் என்றுதான் நான் அதைப் பற்றி அதிகமாக எழுதுவதில்லை. என்னிடம் சில கட்டுரைகள் உள்ளன. முதலில் இந்தப் பிறவியை நாம் சமாளிப்போம். முடிந்தவரை நல்ல, தர்மமிகு செயல்களைச் செய்வோம். அடுத்த பிறவியை (அது இருந்தாலும் சரி அல்லது இல்லையென்றாலும் சரி) இறைவனிடம் விட்டுவிடுவோம். நடப்பது நடக்கட்டும்

“நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா”

என்ற கவிஞன் வாக்கு நம்மை வழி நடத்தட்டும்!
அன்புடன்
வாத்தியார்

தமிழ் விரும்பி said...

"நியாயத் தத்துவ ஞானிகள் மறுபிறவியைப் பற்றிய ஒரு வாதத்தை எப்போதும் சொல்லி வருகிறார்கள்; அதுவே முடிந்த முடிவாக எனக்கும் தோன்றுகிறது; 'நமது அனுபவங்களை ஒழிக்க முடியாது'.

நமது செயல்கள் (கர்மம்) மறைத்துவிட்டது போல் தோன்றினாலும் அவை நமக்கு புலனாகாமல் (அத்ருஷ்டம்) இருக்கவே செய்கின்றன. அவை திரும்பவும் மனப் போக்குகளாக, (பிரவ்ருத்திகளாக, Tendency)வெளிப்படுகின்றன.

பிறந்தக் குழந்தையிடம் கூட சில மனப் போக்குகளைக் காண்கிறோம். அப்படி இருக்கும் போது அவைகள் இந்தப் பிறவியில் பிறந்த உடனேயே பெற்றவைகளாக இருக்க முடியாது.

நமது மனப் போக்குகளுக்கு சில, மனிதனுக்கே உரிய சில உணர்வுப் பூர்வமான செயல்களின் பலனே என்பது நமக்கு நன்றாகத் தெரியும். இத்தகைய மனப்போக்குகளுடன் நாம் பிறந்திருப்பது உண்மையானால்,முன்பு எப்போதோ உணர்வுப்பூர்வமாகச் செய்த செயல்கள் தான் இவற்றிற்குக் காரணங்களாக இருக்க வேண்டும் என்பது உறுதி."

சுவாமி விவேகானந்தர்....

மேலும் மறுபிறவி குறித்து விவேகானந்தரின் சிந்தனைகளை எனது வலைப் பூவிலும் எழுதியுள்ளேன் விரும்புவோர் வந்துப் படிக்கலாம்.

http://tamizhvirumbi.blogspot.com/2011/08/blog-post_16.html

உண்மையில், கடவுள் மற்றும் மறுபிறவி தத்துவத்தை தெரிந்துக் கொள்வது நல்லதே.... (சொர்க்கம், நரகம் என்பதைப் பற்றிய நமது கருத்து வேறு பாடானது... அதோடு முடித்துக் கொள்கிறேன்)

நல்ல பதிவு...

தேடி எழுதிய திருவாளர் கே.எம்.ஆர்.கே அவர்களுக்கும்,
நமது வாத்தியார் அவர்களுக்கும் நன்றிகள் பல.

அன்புடன்,
ஆலாசியம் கோ.

Srinivasa Rajulu.M said...

வாத்தியாரின் 'மறுபிறவித்' தொடரும் நாற்பது வருடத்திற்கு முன்னமிருந்து சேகரிக்கப்பட்ட பிரமாணங்களுடன் இந்த வலைபதிவில் காணலாம். வாத்தியார் சொல்கிறபடி பிறவி பற்றிய கவலைகளை அவன் திருப்பாதத்தில் சேர்த்துவிட்டு, இப்பிறவியை தர்மச் செயல்களுடனும் எண்ணங்களுடனும் கடந்திடுவோமாக .

Thanjavooraan said...

ஆசிரியர் ஐயா! மறு பிறவி உண்டா என்ற கேள்வி பாரதத் திருநாட்டில் எழ வாய்ப்பில்லை. மேற்கத்தியர்களை மேற்கோள் காட்டி அதனை மறுக்கும் நம்மவ‌ர்களைப் பற்றி கவலை இல்லை. ஒரு குற்றம் செய்தால் அதற்குரிய தண்டனை உண்டு என்பது பொதுவிதி. அரசு சட்டத்தின் மூலம் அதனை செய்து வந்தாலும், மனிதன், தான் செய்யும் பாவ புண்ணியங்களுக்குச் சரியான ஊதியம் பெற வேண்டாமா? பாரதம் மட்டுமல்ல, ஏசு நாதரும் கூட பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறார். நம்மில் சிலர் மேதாவிகளாக, சாதாரண ஐந்தறிவு மானுடர்களாக, சிலர் அசடர்களாகப் பிறக்கக் காரணம், முற்பிறவியின் விட்ட குறை தொட்ட குறைதான். சிந்தித கர்மா என்றும், முற்பிறவி வினை என்றும் நம்மவர்கள் சொல்லிச் சென்றதால்தான் மனிதன் தவறு செய்யப் பயப்படுகிறான். இல்லையேல் புகுந்து விளையாடிவிட்டு இந்த நாட்டைச் சூறையாடிவிடுவான். ஏழு பிறவிகள், அது தொடராமல், இனி பிறவி இல்லாமல் இருக்க இறைவனை சரணாகதி அடைவதுதான் ஒரே வழி. இல்லையேல், பிரபஞ்சம் உள்ளவரை மீண்டும் மீண்டும் பிறந்து, பாவம் செய்து, பிறவி எடுத்து அல்லல்பட்டு அஸ்வத்தாமனைப் போல் துன்பத்தோடு சிரஞ்ஜீவியாக வாடவேண்டியதுதான். இறைவனை மறந்தவன், இழிவு செய்பவன், இல்லை என்பவன் இவர்கள் உணர வேண்டிய செய்தி இது. நினைவு படுத்திய நண்பர் கே.எம்.ஆர்., ஆசிரியர் ஐயா ஆகியோருக்கு நன்றி.

கோவி.கண்ணன் said...

//புராணம் எல்லாம் புரட்டு என்பவர்களும் இதனைப் படிக்கக்கூடும் .எனவே அதனை இதோடு விட்டு விட்டு வேறு ஆதாரங்களைத் தேடுவோம்.//

படிச்சோம்ல

:)

ஐயா......யா(அரட்டை அரங்கம் ஸ்டைலில் இழுத்துப் படிக்கவும்)

மறுபிறவி என்பது மதநம்பிக்கை, அது ஆன்மீகம் காது. :)

மறுபிறவி இருக்கு என்று கிறித்தவர்களிடம் இஸ்லாமியர்களிடம் நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எடுபடாது.

ஒரு மீன் கூட்டி பிறந்தவுடன் நீந்த, கன்றுக்குட்டி மடியைத் தேடிச் செல்ல எந்தவித அறிவு அல்லது முற்பிறவி அனுபவம் அதனிடம் இருந்தது ?


சிலர் பிறக்கும் போதே எதையும் கேட்டமாத்திரத்தில் செய்யும் அறிவு படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மை தான், ஆனால் அதை முற்பிறவியுடன் முடிச்சுப் போடுவது இந்துமத நம்பிக்கைகளுக்கு வலுசேர்க்க உதவுகிறது என்று வேண்டுமானால் சொல்லாம், அது உண்மை என்றால் ஏன் எல்லோருக்கு அந்த அனுபவம் ஏற்படுவதில்லை என்பதற்கு சரியான பதிலைச் சொல்லுங்கள்.

SP.VR. SUBBAIYA said...

Blogger தமிழ் விரும்பி said...
"நியாயத் தத்துவ ஞானிகள் மறுபிறவியைப் பற்றிய ஒரு வாதத்தை எப்போதும் சொல்லி வருகிறார்கள்; அதுவே முடிந்த முடிவாக எனக்கும் தோன்றுகிறது; 'நமது அனுபவங்களை ஒழிக்க முடியாது'.
நமது செயல்கள் (கர்மம்) மறைத்துவிட்டது போல் தோன்றினாலும் அவை நமக்கு புலனாகாமல் (அத்ருஷ்டம்) இருக்கவே செய்கின்றன. அவை திரும்பவும் மனப் போக்குகளாக, (பிரவ்ருத்திகளாக, Tendency)வெளிப்படுகின்றன.
பிறந்தக் குழந்தையிடம் கூட சில மனப் போக்குகளைக் காண்கிறோம். அப்படி இருக்கும் போது அவைகள் இந்தப் பிறவியில் பிறந்த உடனேயே பெற்றவைகளாக இருக்க முடியாது.
நமது மனப் போக்குகளுக்கு சில, மனிதனுக்கே உரிய சில உணர்வுப் பூர்வமான செயல்களின் பலனே என்பது நமக்கு நன்றாகத் தெரியும். இத்தகைய மனப்போக்குகளுடன் நாம் பிறந்திருப்பது உண்மையானால்,முன்பு எப்போதோ உணர்வுப்பூர்வமாகச் செய்த செயல்கள் தான் இவற்றிற்குக் காரணங்களாக இருக்க வேண்டும் என்பது உறுதி."
அன்புடன்,
ஆலாசியம் கோ.///////

நல்லது. உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Srinivasa Rajulu.M said...
வாத்தியாரின் 'மறுபிறவித்' தொடரும் நாற்பது வருடத்திற்கு முன்னமிருந்து சேகரிக்கப்பட்ட பிரமாணங்களுடன் இந்த வலைபதிவில் காணலாம். வாத்தியார் சொல்கிறபடி பிறவி பற்றிய கவலைகளை அவன் திருப்பாதத்தில் சேர்த்துவிட்டு, இப்பிறவியை தர்மச் செயல்களுடனும் எண்ணங்களுடனும் கடந்திடுவோமாக .//////

“எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!” என்றான் முண்டாசுக் கவிஞன்.இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் எத்தனையோ உள்ளன. முதலில் அவற்றை அனுபவிப்போம். அடுத்த பிறவியை ஆண்டவனிடம் விட்டு விடுவோம்

SP.VR. SUBBAIYA said...

Blogger Thanjavooraan said...
ஆசிரியர் ஐயா! மறு பிறவி உண்டா என்ற கேள்வி பாரதத் திருநாட்டில் எழ வாய்ப்பில்லை. மேற்கத்தியர்களை மேற்கோள் காட்டி அதனை மறுக்கும் நம்மவ‌ர்களைப் பற்றி கவலை இல்லை. ஒரு குற்றம் செய்தால் அதற்குரிய தண்டனை உண்டு என்பது பொதுவிதி. அரசு சட்டத்தின் மூலம் அதனை செய்து வந்தாலும், மனிதன், தான் செய்யும் பாவ புண்ணியங்களுக்குச் சரியான ஊதியம் பெற வேண்டாமா? பாரதம் மட்டுமல்ல, ஏசு நாதரும் கூட பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறார். நம்மில் சிலர் மேதாவிகளாக, சாதாரண ஐந்தறிவு மானுடர்களாக, சிலர் அசடர்களாகப் பிறக்கக் காரணம், முற்பிறவியின் விட்ட குறை தொட்ட குறைதான். சிந்தித கர்மா என்றும், முற்பிறவி வினை என்றும் நம்மவர்கள் சொல்லிச் சென்றதால்தான் மனிதன் தவறு செய்யப் பயப்படுகிறான். இல்லையேல் புகுந்து விளையாடிவிட்டு இந்த நாட்டைச் சூறையாடிவிடுவான். ஏழு பிறவிகள், அது தொடராமல், இனி பிறவி இல்லாமல் இருக்க இறைவனை சரணாகதி அடைவதுதான் ஒரே வழி. இல்லையேல், பிரபஞ்சம் உள்ளவரை மீண்டும் மீண்டும் பிறந்து, பாவம் செய்து, பிறவி எடுத்து அல்லல்பட்டு அஸ்வத்தாமனைப் போல் துன்பத்தோடு சிரஞ்ஜீவியாக வாடவேண்டியதுதான். இறைவனை மறந்தவன், இழிவு செய்பவன், இல்லை என்பவன் இவர்கள் உணர வேண்டிய செய்தி இது. நினைவு படுத்திய நண்பர் கே.எம்.ஆர்., ஆசிரியர் ஐயா ஆகியோருக்கு நன்றி.///////

நல்லது. உங்களது தெளிவான பின்னூட்டத்திற்கு நன்றி கோபாலன் சார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger கோவி.கண்ணன் said...
//புராணம் எல்லாம் புரட்டு என்பவர்களும் இதனைப் படிக்கக்கூடும் .எனவே அதனை இதோடு விட்டு விட்டு வேறு ஆதாரங்களைத் தேடுவோம்.//
படிச்சோம்ல :)
ஐயா......யா(அரட்டை அரங்கம் ஸ்டைலில் இழுத்துப் படிக்கவும்)
மறுபிறவி என்பது மதநம்பிக்கை, அது ஆன்மீகம் காது. :)
மறுபிறவி இருக்கு என்று கிறித்தவர்களிடம் இஸ்லாமியர்களிடம் நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எடுபடாது.
ஒரு மீன் குஞ்சு பிறந்தவுடன் நீந்த, கன்றுக்குட்டி மடியைத் தேடிச் செல்ல எந்தவித அறிவு அல்லது முற்பிறவி அனுபவம் அதனிடம் இருக்கிறது?
சிலர் பிறக்கும் போதே எதையும் கேட்டமாத்திரத்தில் செய்யும் அறிவு படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மை தான், ஆனால் அதை முற்பிறவியுடன் முடிச்சுப் போடுவது இந்துமத நம்பிக்கைகளுக்கு வலுசேர்க்க உதவுகிறது என்று வேண்டுமானால் சொல்லாம், அது உண்மை என்றால் ஏன் எல்லோருக்கு அந்த அனுபவம் ஏற்படுவதில்லை என்பதற்கு சரியான பதிலைச் சொல்லுங்கள்.///////

வாங்க கோவியாரே! தலைப் படித்தவுடன் வருவீர்கள் என்று நினைத்தேன். வந்து விட்டீர்கள்! உங்கள் வரவு நல்வரவாகுக!

லட்சத்தில் ஒருவருக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. எல்லோருக்கும் இருந்தால் தாங்குமா? போன ஜென்மத்தில் நீங்கள் இங்கிலாந்து அரச குடும்பத்தில் ஒருவராக இருந்தவர் (ஒரு பேச்சுக்குத்தான்) என்று சொல்லி அதற்கான சான்றையும் உங்களிடம் கொடுத்தால் சும்மா இருப்பீரா?
உடனே பக்கிங்ஹாம் பேலசிலும், இருக்கும் மற்ற கோடிக்கணக்கான சொத்துக்களிலும் பங்கு கேட்டு வழக்குத் தொடுக்க மாட்டீர் என்பது என்ன நிச்சயம்? இது போல ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எவ்வளவு பிரச்சினைகள், சோதனைகள் வரும்? அல்லது உங்களுக்குக் லட்சக்கணக்கில் கடன் கொடுத்து வசூலாகாமல் வீணாகப் போனவன் இப்போது கடன் வாங்கிய அந்த நபர் நீங்கள்தான் என்று தெரிந்தால் உங்களைத் தேடி வந்துவிட மாட்டானா?

ஒரு பத்திரிக்கை ஆசியரிடம் வாசகர் ஒருவர் கேட்டார். ”முற்பிறவி, பாவ புண்ணியம் என்பதெல்லாம் உண்மையா?”

அதற்கு அந்த ஆசிரியர் இப்படி பதில் சொன்னார்: “உண்மை போலத் தான் தோன்றுகிறது. இல்லையென்றால் பிறப்பில் ஏன் இத்தனை பேதமை. எல்லாக் குழந்தைகளும் அன்னையின் வயிற்றில் 280 நாட்கள்தான் இருக்கின்றன. ஆனால் ஒன்று ஏ.ஸி.முத்தையா வீட்டிலும், மற்றொன்று ஓ.சி முத்தையா வீட்டிலும் ஏன் பிறக்கிறது? ஒரு குழந்தை ஆயிரம் மாடுகள் இருக்கும் பண்ணை வீட்டில் பிறக்கிறது. ஒரு குழந்தை ஒரு குவளை பாலுக்குக்கூட வழியில்லாதவள் வீட்டில் பிறக்கிறது. ஒரு குழந்தையை அதன் அன்னை கண்ணை இமை காப்பதுபோல் சீராட்டி வளர்க்கிறாள். ஒரு குழந்தையை பிறந்த அன்றே அதன் அன்னை குப்பைத் தொட்டியில் வீசி விட்டுப் போய்விடுகிறாள்.

பிறப்பில் ஏன் இந்த வேறுபாடுகள்? இதற்குப் பதில் சொல்லுங்கள் கோவியாரே!

RAMADU Family said...

Gur vanakkam,

Present Sir!!! Nothing to add to your statment, But interesting to read the blog.

RAMADU.

Uma said...

எனக்கும் முற்பிறவி / மறுபிறவியில் நம்பிக்கை இருக்கிறது.

இல்லையேல், பிரபஞ்சம் உள்ளவரை மீண்டும் மீண்டும் பிறந்து, பாவம் செய்து, பிறவி எடுத்து அல்லல்பட்டு அஸ்வத்தாமனைப் போல் துன்பத்தோடு சிரஞ்ஜீவியாக வாடவேண்டியதுதான். //

கோபாலன் சார், இது என்ன? விளக்குவீர்களா?

SP.VR. SUBBAIYA said...

Blogger RAMADU Family said...
Gur vanakkam,
Present Sir!!!
Nothing to add to your statment, But interesting to read the blog.
RAMADU.////

சால தாங்ஸ்ஸண்டி ராகுடுகாரு!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Uma said...
எனக்கும் முற்பிறவி / மறுபிறவியில் நம்பிக்கை இருக்கிறது.
இல்லையேல், பிரபஞ்சம் உள்ளவரை மீண்டும் மீண்டும் பிறந்து, பாவம் செய்து, பிறவி எடுத்து அல்லல்பட்டு அஸ்வத்தாமனைப் போல் துன்பத்தோடு சிரஞ்ஜீவியாக வாடவேண்டியதுதான். //
கோபாலன் சார், இது என்ன? விளக்குவீர்களா?
//////

Krishna's curse on Ashwatthama
Lord Krishna then placed a curse on Ashwatthama that "he will carry the burden of all people's sins on his shoulders and will roam alone like a ghost without getting any love and courtesy till the end of Kaliyuga He will have neither any hospitality nor any accommodation; He will be in total isolation from mankind and society; His body will suffer from a host of incurable diseases forming sores and ulcers that would never heal". Ashwatthama had a gem which was similar to Shamantakamani on his forehead which used to protect the wearer from fear of any snakes , ghosts, demigods and demons. So, Ashwatthama was asked to surrender this gem. Lord Sri Krishna further states that "the wound caused by the removal of this gem on his forehead will never heal and will suffer from leprosy, till the end of Kaliyuga". Thus, Ashwatthama will be in search of death every moment, and yet he will never die. At he end of Kali Yuga, Ashwatthama is to meet Sri Kalki who will rid him of his curse and give liberation.

முழுப் புராணத்தையும் படிக்க இங்கே க்ளிக்கிப் பாருங்கள்: http://en.wikipedia.org/wiki/Ashwatthama

Jagannath said...

மறுபிறவி இருக்கு என்று கிறித்தவர்களிடம் இஸ்லாமியர்களிடம் நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எடுபடாது.//

கிருத்துவ, இஸ்லாம் மதங்களின் மூலமான யூத மதத்தில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு
வரை மறுபிறவி நம்பிக்கை இருந்திருக்கிறது. பின்னர் வந்த பாவ மன்னிப்பு சடங்கை அது கேள்விக்குரியதாக்குவதால்
மறுபிறவி நம்பிக்கை கைவிடப்பட்டது.

மேலும் அவர்கள் இறுதித் தீர்ப்பு நாளில் அனைவரும் அவரவரின் எஞ்சியுள்ள வினைகளுக்கேற்ப நிரந்தர
சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ அனுப்பப்படுவர் என்கிறார்கள்.

இதை ஒப்பிடும்போது நமது மறுபிறவி நம்பிக்கை சிறந்ததாகத் தோன்றுகிறது.

எனக்கு சொர்க்கம், நரகத்தில் நம்பிக்கை இல்லை. ஒருவனை தண்டிக்க வேண்டுமென்று இறைவன் நினைத்தால் அடுத்த பிறவியில் அவனை மோசமான சூழ்நிலையிலும், அதிக துன்பங்களுக்கு நடுவிலும் பிறக்க வைத்தாலே நோக்கம் நிறைவேறி விடுகிறது. இதற்காக நரகம், சொர்க்கம் போன்ற அமைப்புகள் இருக்கும் என்று தோன்றவில்லை.

Jagannath said...

ஒருமைக்கண்தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

திருவள்ளுவரும் ஒருவன் கற்கும் கல்வி ஏழு பிறவிகளுக்குப் பயன்படும் என்றே சொல்கிறார்.

iyer said...

///சால தாங்ஸ்ஸண்டி ///

மன்னிக்க...வேறு மொழியில் இதற்கு
மாறுபட்ட அர்த்தம்..

தெரிந்தவர்கள் தெரிந்து கொள்ளட்டும்
தெரியாதவர்களுக்கு தெரியாமலே ....(!!)

Thanjavooraan said...

உமா அவர்கள் அஸ்வத்தாமனின் சிரஞ்ஜீவித்தன்மை பற்றி விளக்கம் கேட்டிருந்தார். நான் விடையளிக்க நினைத்த அதே நேரம் ஆசிரியர் மிக அற்புதமான, ஆதாரபூர்வமான விளக்கத்தை அளித்து விட்டார். மகாபாரத யுத்தம் முடிந்துவிட்ட நிலையில், தன் தந்தை அநியாயமாகக் கொல்லப்பட்ட ஆத்திரத்தில் அஸ்வத்தாமன், நள்ளிரவில் பாண்டவர்களின் குழந்தைகளை அவர்கள் கூடாரத்துள் புகுந்து படுகொலை செய்த கோரச்செயலைக் கண்டு, அதுவரை கோபப்படாமல் புன்னைகை பூத்த முகத்தோடு இருந்த பகவான் கிருஷ்ணன் ஆத்திரமடைந்து அஸ்வத்தாமனுக்கிட்ட சாபம் இது. சிரஞ்ஜீவியாக மகிழ்ச்சியோடு வாழும் அனுக்கிரகம் பெற்ற அனுமன், விபீஷணன் ஒரு புறம், துன்பங்களையும், கோரங்களையும் மட்டுமே கண்டுகொண்டு கடைசிவரை வாழும் பயங்கர சாபம் அஸ்வத்தாமனுக்கு. ஆசிரியர் ஐயா, மிக அருமையாக விளக்கத்தைக் கொடுத்து எனக்கு வேலையில்லாமல் செய்துவிட்டார். விளக்கம் கேட்ட சகோதரிக்கும், அற்புதமான விடையளித்த ஆசிரியருக்கும் நன்றி.

iyer said...

மறு பிறவி குறித்து
மாற்றுக் கருத்து சொன்னால்

குழப்பம் தெளியுமா..?? !!
குழப்பம்தானேதெளிவைதரும்என்பதால்

அலை பாயும் மனத்திற்கு
சில சிந்தனைகளை தருகிறோம்

வாதமாக கொள்ளாமல் ஆரோக்கிய விவாதமாக கொள்வீர்கள் என நம்பியே..

...

மறுபிறவி உண்டு என்றால்
முற்பிறவி உண்டென்றே கொள்ளனும்

அப்படியானால் முதற் பிறவி என்ன என
முற்றுப் புள்ளி வைக்க முடியாததாகும்

"மூல கன்மம்" என்ற சிறப்பான சொல்
முடிவான முடிவை சொல்லுது

"சித்தாந்த சைவ சாத்திரம்;" நாம்
நித்தியமாய் படிப்பதில்லை என்றாலும்

குறிப்பான சில மதக் கருத்துக்களை
குறிப்பெடுத்து சொல்லலாம்.

குட்ஃபரைடேயில் மறைந்த திருமகனார்
குறிப்பிட்ட ஈஸ்டரில் வருவது என்பது??

"மாண்டார் வருவதில்லை மானிலத்தில்"
மாபெரும் தமிழ்கிழவி சொல்லிய பாடம்!

சமணரும் புத்தரும் சைவத்திற்கு
சற்றும் சமமில்லாதவர் அவர்களும்

வாழ்க்கையை துன்பமுடையதாகவே
வடித்து மறுபிறவி கருத்தை மாற்றியே

சொல்லி வைத்த இந்நிகழ்வுகள் இப்படி
சொல்ல வைத்ததோ.. பதிவருக்கு,,?

கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர் என்ற

கருத்தினையே அவர்கள்
வேறுவிதமாக பொருள் கொண்டபடி

உயிர்களுக்கு மறு பிறவி இல்லை என
உயிரற்ற நிலையில் சொல்வது சரியா !!

உயிருக்கு விளக்கம் சொல்ல முடிந்தால்
உண்மையிலேயே இக்கருத்திற்கு

விளக்கம் சொல்ல முடியும்
விரிவாகவே எளிதாகவே;ஆமாம்ஆமாம்

கிருத்துவம் சொல்லும் இக் கருத்து
வேறு நிலையில் அது சொல்லப்படுகிறது

தவறு செய்யக் கூடாது என்பதற்காக
தவறு வேறு தப்பு வேறு பிழை வேறு

பொருள் தெளிவானால்
பொருந்தாத குழப்பம் தேவையில்லை

குறை சொல்வது நோக்கமல்ல..
குத்திக் காட்டும் எண்ணமும் அல்ல


செவிடன் காதுகளில் ஊதும் சங்கு செவிகளுக்கு கேட்காது தான்

செவிடன் எனத் தெரிந்தும் நாம் சங்குகளை ஊதிக் கொண்டு தான்

இருக்க வேண்டும்.. இல்லையெனில்
இங்கே நாம் இருப்பது எப்படி..??

மறுபிறவி பற்றிய கேள்வியை
மறைக்காமல் மறுக்காமல்

உள்ளுக்குள் கேட்டால்
உடனே விடை கிடைக்கும்..

உடன் இருப்பவரிடம் கேட்டால்
உள்ளதை சொல்கிறேன் இதுவேசரியென

அவரவருக்கு தெரிந்ததை
அவர் அறிந்த நிலையில் சொல்லி
(உணர்ந்த நிலையில் அல்ல )

அறிவது வேறு;புரிவது வேறு;
தெரிவது வேறு; உணர்வது வேறு

என சொல்லி நீண்ட பின் ஊட்டம்
எழுத வைத்த பதிவருக்கு நன்றி

மாறுபட்டவர்களே
மனத் திறக்கட்டும் என இத்துடன்

நிறைவு செய்கிறோம்,
நிலையாக நிறைந்திருக்கும் அன்பு

வணக்கங்களுடனும் வாழ்த்துக்களுடனும்..
---

அய்யர் அவர்கள் திருவாளர் KMRKக்கு
அண்மையில் எழுதிய மின்னஞ்சலின்

கடைசி சில வரிகள் இப்படி எழுதவும்
கருத்துக்களை அறியவும் வைத்ததோ??


இவ் வகுப்பிற்கு வரும்
இனிய சிந்தனை இது

என்னுடைய குறைகளை அகற்றுவதே எனக்குப் பெரிய துன்பமாக இருக்கிறது.

இறைவன் பிறருக்குச் சரியான அறிவை இங்கே கொடுக்கவில்லை என்று நான்

வருந்துவதற்கு நேரமேது?
வாழ்த்தித்தான் செல்வோமே..!!

Uma said...

வாத்தியாருக்கு நன்றி! நீங்கள் கொடுத்த லிங்க் படித்தேன்.

iyer said...

முன்னர் சோதிட கேள்விகள் என
முழுமையாக 100 கேள்வி பதில் போல்

பாசந்தி பக்கோடா போன்ற
பல கலக்கலான தகவல் வந்தது போல்

வாத மேடையையும்
வகுப்புக்கு வந்ததோ என சிந்திக்க

வித்தியாசமான தலைப்பில்
விவரம் அறிய இன்றை பக்தி மலர்

ஆனால்
அன்று வந்து மகிழ்வித்த

மனம் கவரும் பாடல் வரவில்லையே
மறுந்து விட்டதா.. மறுபடியும் வருமா

ஆவலுடன்..
அன்புடன்..

காத்திருக்கின்றோம்..
கதவுகள் இல்லாத சன்னல் அருகே..

SP.VR. SUBBAIYA said...

////Blogger Jagannath said...
மறுபிறவி இருக்கு என்று கிறித்தவர்களிடம் இஸ்லாமியர்களிடம் நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எடுபடாது.//
கிருத்துவ, இஸ்லாம் மதங்களின் மூலமான யூத மதத்தில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு
வரை மறுபிறவி நம்பிக்கை இருந்திருக்கிறது. பின்னர் வந்த பாவ மன்னிப்பு சடங்கை அது கேள்விக்குரியதாக்குவதால்
மறுபிறவி நம்பிக்கை கைவிடப்பட்டது.
மேலும் அவர்கள் இறுதித் தீர்ப்பு நாளில் அனைவரும் அவரவரின் எஞ்சியுள்ள வினைகளுக்கேற்ப நிரந்தர
சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ அனுப்பப்படுவர் என்கிறார்கள்.
இதை ஒப்பிடும்போது நமது மறுபிறவி நம்பிக்கை சிறந்ததாகத் தோன்றுகிறது.
எனக்கு சொர்க்கம், நரகத்தில் நம்பிக்கை இல்லை. ஒருவனை தண்டிக்க வேண்டுமென்று இறைவன் நினைத்தால் அடுத்த பிறவியில் அவனை மோசமான சூழ்நிலையிலும், அதிக துன்பங்களுக்கு நடுவிலும் பிறக்க வைத்தாலே நோக்கம் நிறைவேறி விடுகிறது. இதற்காக நரகம், சொர்க்கம் போன்ற அமைப்புகள் இருக்கும் என்று தோன்றவில்லை.//////

சொர்க்கம் நரகம் என்னும் அமைப்பெல்லாம் கிடையாது. அதைப் பற்றி முன்பொருமுறை பதிவில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். நன்றி ஜகந்நாதன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Jagannath said...
ஒருமைக்கண்தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
திருவள்ளுவரும் ஒருவன் கற்கும் கல்வி ஏழு பிறவிகளுக்குப் பயன்படும் என்றே சொல்கிறார்.//////

தகவல் பகிர்விற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger iyer said...
///சால தாங்ஸ்ஸண்டி ///
மன்னிக்க...வேறு மொழியில் இதற்கு
மாறுபட்ட அர்த்தம்..
தெரிந்தவர்கள் தெரிந்து கொள்ளட்டும்
தெரியாதவர்களுக்கு தெரியாமலே ....(!!)///////

உங்களுக்கு தெலுங்கு தெரியுமா விசுவநாதன்? ராமுடு ஐயாவிற்கு (காருவிற்கு) ரெம்ப (சால) நன்றி (தாங்ஸ்ஸண்டி) என்று சொல்லியுள்ளேன். நீங்கள் புதிதாக ஏதாவது வெடியைக் கொளுத்திப் போடாதீர்கள்

SP.VR. SUBBAIYA said...

////Blogger Thanjavooraan said...
உமா அவர்கள் அஸ்வத்தாமனின் சிரஞ்ஜீவித்தன்மை பற்றி விளக்கம் கேட்டிருந்தார். நான் விடையளிக்க நினைத்த அதே நேரம் ஆசிரியர் மிக அற்புதமான, ஆதாரபூர்வமான விளக்கத்தை அளித்து விட்டார். மகாபாரத யுத்தம் முடிந்துவிட்ட நிலையில், தன் தந்தை அநியாயமாகக் கொல்லப்பட்ட ஆத்திரத்தில் அஸ்வத்தாமன், நள்ளிரவில் பாண்டவர்களின் குழந்தைகளை அவர்கள் கூடாரத்துள் புகுந்து படுகொலை செய்த கோரச்செயலைக் கண்டு, அதுவரை கோபப்படாமல் புன்னைகை பூத்த முகத்தோடு இருந்த பகவான் கிருஷ்ணன் ஆத்திரமடைந்து அஸ்வத்தாமனுக்கிட்ட சாபம் இது. சிரஞ்ஜீவியாக மகிழ்ச்சியோடு வாழும் அனுக்கிரகம் பெற்ற அனுமன், விபீஷணன் ஒரு புறம், துன்பங்களையும், கோரங்களையும் மட்டுமே கண்டுகொண்டு கடைசிவரை வாழும் பயங்கர சாபம் அஸ்வத்தாமனுக்கு. ஆசிரியர் ஐயா, மிக அருமையாக விளக்கத்தைக் கொடுத்து எனக்கு வேலையில்லாமல் செய்துவிட்டார். விளக்கம் கேட்ட சகோதரிக்கும், அற்புதமான விடையளித்த ஆசிரியருக்கும் நன்றி./////

எதைக்கேட்டாலும் நொடியில் தரும் கூகுள் ஆண்டவருக்குத்தான் அந்த நன்றி உரியதாகும் கோபாலன் சார்!

SP.VR. SUBBAIYA said...

Blogger iyer said...
மறு பிறவி குறித்து
மாற்றுக் கருத்து சொன்னால்
குழப்பம் தெளியுமா..?? !!
குழப்பம்தானேதெளிவைதரும்என்பதால்
அலை பாயும் மனத்திற்கு
சில சிந்தனைகளை தருகிறோம்
வாதமாக கொள்ளாமல் ஆரோக்கிய விவாதமாக கொள்வீர்கள் என நம்பியே.. ...
மறுபிறவி உண்டு என்றால்
முற்பிறவி உண்டென்றே கொள்ளனும்
அப்படியானால் முதற் பிறவி என்ன என
முற்றுப் புள்ளி வைக்க முடியாததாகும்
"மூல கன்மம்" என்ற சிறப்பான சொல்
முடிவான முடிவை சொல்லுது
"சித்தாந்த சைவ சாத்திரம்;" நாம்
நித்தியமாய் படிப்பதில்லை என்றாலும்
குறிப்பான சில மதக் கருத்துக்களை
குறிப்பெடுத்து சொல்லலாம்.
குட்ஃபரைடேயில் மறைந்த திருமகனார்
குறிப்பிட்ட ஈஸ்டரில் வருவது என்பது??
"மாண்டார் வருவதில்லை மானிலத்தில்"
மாபெரும் தமிழ்கிழவி சொல்லிய பாடம்!
சமணரும் புத்தரும் சைவத்திற்கு
சற்றும் சமமில்லாதவர் அவர்களும்
வாழ்க்கையை துன்பமுடையதாகவே
வடித்து மறுபிறவி கருத்தை மாற்றியே
சொல்லி வைத்த இந்நிகழ்வுகள் இப்படி
சொல்ல வைத்ததோ.. பதிவருக்கு,,?
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர் என்ற
கருத்தினையே அவர்கள்
வேறுவிதமாக பொருள் கொண்டபடி
உயிர்களுக்கு மறு பிறவி இல்லை என
உயிரற்ற நிலையில் சொல்வது சரியா !!
உயிருக்கு விளக்கம் சொல்ல முடிந்தால்
உண்மையிலேயே இக்கருத்திற்கு
விளக்கம் சொல்ல முடியும்
விரிவாகவே எளிதாகவே;ஆமாம்ஆமாம்
கிருத்துவம் சொல்லும் இக் கருத்து
வேறு நிலையில் அது சொல்லப்படுகிறது
தவறு செய்யக் கூடாது என்பதற்காக
தவறு வேறு தப்பு வேறு பிழை வேறு
பொருள் தெளிவானால்
பொருந்தாத குழப்பம் தேவையில்லை
குறை சொல்வது நோக்கமல்ல..
குத்திக் காட்டும் எண்ணமும் அல்ல
செவிடன் காதுகளில் ஊதும் சங்கு செவிகளுக்கு கேட்காது தான்
செவிடன் எனத் தெரிந்தும் நாம் சங்குகளை ஊதிக் கொண்டு தான்
இருக்க வேண்டும்.. இல்லையெனில்
இங்கே நாம் இருப்பது எப்படி..??
மறுபிறவி பற்றிய கேள்வியை
மறைக்காமல் மறுக்காமல்
உள்ளுக்குள் கேட்டால்
உடனே விடை கிடைக்கும்..
உடன் இருப்பவரிடம் கேட்டால்
உள்ளதை சொல்கிறேன் இதுவேசரியென
அவரவருக்கு தெரிந்ததை
அவர் அறிந்த நிலையில் சொல்லி
(உணர்ந்த நிலையில் அல்ல )
அறிவது வேறு;புரிவது வேறு;
தெரிவது வேறு; உணர்வது வேறு
என சொல்லி நீண்ட பின் ஊட்டம்
எழுத வைத்த பதிவருக்கு நன்றி
மாறுபட்டவர்களே
மனத் திறக்கட்டும் என இத்துடன்
நிறைவு செய்கிறோம்,
நிலையாக நிறைந்திருக்கும் அன்பு
வணக்கங்களுடனும் வாழ்த்துக்களுடனும்..
அய்யர் அவர்கள் திருவாளர் KMRKக்கு
அண்மையில் எழுதிய மின்னஞ்சலின்
கடைசி சில வரிகள் இப்படி எழுதவும்
கருத்துக்களை அறியவும் வைத்ததோ??
இவ் வகுப்பிற்கு வரும்
இனிய சிந்தனை இது
என்னுடைய குறைகளை அகற்றுவதே எனக்குப் பெரிய துன்பமாக இருக்கிறது.
இறைவன் பிறருக்குச் சரியான அறிவை இங்கே கொடுக்கவில்லை என்று நான்
வருந்துவதற்கு நேரமேது?
வாழ்த்தித்தான் செல்வோமே..!!////////

அறிவது, புரிவது, தெரிவது, உணர்வது என்று எல்லாவற்றையும் வைத்து நீங்கள் சொல்ல வருவது அடியேனின் சிற்றவிற்கு எட்டவில்லை விசுவநாதன். போய் ஃபில்டர் காஃப்பி சாப்பிட்டுவிட்டு வந்து உங்கள் பின்னூட்டத்தை மீண்டும் ஒருமுறை படிக்கிறேன்!

SP.VR. SUBBAIYA said...

Blogger Uma said...
வாத்தியாருக்கு நன்றி! நீங்கள் கொடுத்த லிங்க் படித்தேன்.////

நன்றி கூகுள் ஆண்டவருக்கு உரியதாகும்!

தமிழ் விரும்பி said...

/////என்னுடைய குறைகளை அகற்றுவதே எனக்குப் பெரிய துன்பமாக இருக்கிறது.

இறைவன் பிறருக்குச் சரியான அறிவை இங்கே கொடுக்கவில்லை என்று நான்

வருந்துவதற்கு நேரமேது?/////

இதுவும் சரிதான்...

kmr.krishnan said...

///ஒரு மீன் கூட்டி பிறந்தவுடன் நீந்த, கன்றுக்குட்டி மடியைத் தேடிச் செல்ல எந்தவித அறிவு அல்லது முற்பிறவி அனுபவம் அதனிடம் இருந்தது ?///

இது உயிர் வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டுமே.

survival instinct.

மனிதக் குழந்தை கூட யாரும் கற்றுத் தராமலேயே தாயிடம் அமுது உண்ணத் துவங்குகிறது. இதில் அதிசயம் ஒன்றுமில்லை.

ஆனால் பேச்சு சரியாக வருமுன்னரே சங்கீத இலக்கணம் ஒரு குழந்தைக்குத் தெரிவது, இப்பிறவியில் யாரும் சொல்லித் தராமலேயே, அப்படியே ஒரு வேளை பயிற்சி அளித்து இருந்தாலும், அப் பயிற்சியை உள்வாங்கும் மனம்
செழுமை அடையும் முன்னரே, தேர்ச்சி அடைகிறது என்றால் ,முற்பிறப்பு வாசனை அன்றி வேறு என்ன சொல்ல?

கிறிஸ்து 3 நட்களுக்குப் பின்னர் உயிர்த்து எழுந்தார் என்ற கோட்பாடு இதுவரை கிறிஸ்தவர்கள் கைவிடவில்லை.அதே உடலிலா அல்லது வேறு உடலிலா
என்பதெல்லாம் விளங்கவில்லை.

இஸ்லாத்திலும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மிராஜ் என்ற அக விழிப்புப் பயணம் மேற்கொண்டு அல்லாவைக் கண்டு மீள்கிறார்.சொர்க்கம் நரகம் எல்லாவற்றையும் கண்டு திரும்புகிறார்.

என் கட்டுரையில் கூறியுள்ளது போல் இன்று கிறிஸ்துவ நாடுகளில் தான்
இது பற்றிய ஆய்வு அதிகம்.

இன்று கர்மா, அவதார் எல்லாம் ஆங்கிலச் சொற்கள் போல அவர்கள் பயன் படுத்துகின்றனர்.

திருக்குறள்.
==========
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
- மு.வரதராசனார்

முற்பிறப்பில் செய்த நற்செயல் தீச்செயலுக்கேற்ப இப்போது வாழ்வு நடைபெறுகிறது என்பதை சொல்லியா தெரிந்து கொள்ள வேண்டும்?

ConverZ stupidity said...

// SP.VR. SUBBAIYA said...
At he end of Kali Yuga, Ashwatthama is to meet Sri Kalki who will rid him of his curse and give liberation.
//

After this kaliyuga aswaththaama will be the next vysar (vysar is a honarary name/post. for each chathur yuga a new vysar will incarnate. Source: Sri Vishnu Puranam)

ConverZ stupidity said...

ஒரு நடை போய் நாடி ஜோதிடம் பார்த்தா நாம ஏன் இந்த பிறவில இப்படி இருக்கோம், போன பிறவில பண்ணுன தில்லலங்கத்டிதனம், தகிடுதத்தம் எல்லாம் சொல்லுவாங்க.

ஆத்மா புண்ணியம் செஞ்சிருந்தா இறப்புக்கு பின்னாடி சொர்கத்துக்கு போகும்; மாறாக பாவம் செய்திருந்தால் நரக வாசம் கிட்டும். ரெண்டையும் சேர்த்து செய்திருந்தால் பூமியில் பிறப்போம். எப்போ ஐம்படை-ல(Balance Sheet) பாவம், புண்ணியம் ரெண்டு தீருதோ அப்போதான் மோக்ஷ (பிறப்பிறப்பு அற்ற) நிலை எய்துவோம்.

Jagannath said...

ஆனால் மறுபிறவி கொள்கையில் ஒரு குழப்பம் உண்டு. ஒருவன் புண்ணியம் மட்டுமே செய்திருந்தாலும்
அதன் பலனை அனுபவிக்க இன்னொரு பிறவி எடுக்க வேண்டியிருக்கும்.

அப்பொழுது பிறப்பற்ற
நிலையை எய்துவது யாருக்கு சாத்தியம்?

என்னுடைய புரிதலின்படி ஒருவன் தான் செய்யும் செயல்களைக்
கடமையாகக் கருதி செய்து அதன் விளைவுகளான பாவம், புண்ணியம் ஆகியவற்றை இறைவனுக்கே அர்ப்பணிக்கிறேன் என்று கர்ம யோகியாக, இறைவனை முழுதும்
சரணாகதி அடைந்தவனாக வாழ்ந்தால்தான் பிறவா நிலை சாத்தியப்படும். வைணவம் இந்த தத்துவத்தையே
வலியுறுத்தியுள்ளதாக நினைவு.

SP.VR. SUBBAIYA said...

//////Blogger தமிழ் விரும்பி said...
/////என்னுடைய குறைகளை அகற்றுவதே எனக்குப் பெரிய துன்பமாக இருக்கிறது.
இறைவன் பிறருக்குச் சரியான அறிவை இங்கே கொடுக்கவில்லை என்று நான்
வருந்துவதற்கு நேரமேது?/////
இதுவும் சரிதான்...//////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்

SP.VR. SUBBAIYA said...

//////Blogger kmr.krishnan said...
///ஒரு மீன் கூட்டி பிறந்தவுடன் நீந்த, கன்றுக்குட்டி மடியைத் தேடிச் செல்ல எந்தவித அறிவு அல்லது முற்பிறவி அனுபவம் அதனிடம் இருந்தது ?///
இது உயிர் வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டுமே.
survival instinct.
மனிதக் குழந்தை கூட யாரும் கற்றுத் தராமலேயே தாயிடம் அமுது உண்ணத் துவங்குகிறது. இதில் அதிசயம் ஒன்றுமில்லை.
ஆனால் பேச்சு சரியாக வருமுன்னரே சங்கீத இலக்கணம் ஒரு குழந்தைக்குத் தெரிவது, இப்பிறவியில் யாரும் சொல்லித் தராமலேயே, அப்படியே ஒரு வேளை பயிற்சி அளித்து இருந்தாலும், அப் பயிற்சியை உள்வாங்கும் மனம்
செழுமை அடையும் முன்னரே, தேர்ச்சி அடைகிறது என்றால் ,முற்பிறப்பு வாசனை அன்றி வேறு என்ன சொல்ல?
கிறிஸ்து 3 நட்களுக்குப் பின்னர் உயிர்த்து எழுந்தார் என்ற கோட்பாடு இதுவரை கிறிஸ்தவர்கள் கைவிடவில்லை.அதே உடலிலா அல்லது வேறு உடலிலா என்பதெல்லாம் விளங்கவில்லை.
இஸ்லாத்திலும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மிராஜ் என்ற அக விழிப்புப் பயணம் மேற்கொண்டு அல்லாவைக் கண்டு மீள்கிறார்.சொர்க்கம் நரகம் எல்லாவற்றையும் கண்டு திரும்புகிறார்.
என் கட்டுரையில் கூறியுள்ளது போல் இன்று கிறிஸ்துவ நாடுகளில் தான் இது பற்றிய ஆய்வு அதிகம்.
இன்று கர்மா, அவதார் எல்லாம் ஆங்கிலச் சொற்கள் போல அவர்கள் பயன் படுத்துகின்றனர்.
திருக்குறள்.
==========
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
- மு.வரதராசனார்
முற்பிறப்பில் செய்த நற்செயல் தீச்செயலுக்கேற்ப இப்போது வாழ்வு நடைபெறுகிறது என்பதை சொல்லியா தெரிந்து கொள்ள வேண்டும்?//////

உங்களின் நீண்ட விளக்கத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger ConverZ stupidity said...
// SP.VR. SUBBAIYA said...
At he end of Kali Yuga, Ashwatthama is to meet Sri Kalki who will rid him of his curse and give liberation.
// After this kaliyuga aswaththaama will be the next vysar (vysar is a honarary name/post. for each chathur yuga a new vysar will incarnate. Source: Sri Vishnu Puranam)////////

மேலதிகத்தகவலுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger ConverZ stupidity said...
ஒரு நடை போய் நாடி ஜோதிடம் பார்த்தா நாம ஏன் இந்த பிறவில இப்படி இருக்கோம், போன பிறவில பண்ணுன தில்லலங்கத்டிதனம், தகிடுதத்தம் எல்லாம் சொல்லுவாங்க.
ஆத்மா புண்ணியம் செஞ்சிருந்தா இறப்புக்கு பின்னாடி சொர்கத்துக்கு போகும்; மாறாக பாவம் செய்திருந்தால் நரக வாசம் கிட்டும். ரெண்டையும் சேர்த்து செய்திருந்தால் பூமியில் பிறப்போம். எப்போ ஐம்படை-ல(Balance Sheet) பாவம், புண்ணியம் ரெண்டு தீருதோ அப்போதான் மோக்ஷ (பிறப்பிறப்பு அற்ற) நிலை எய்துவோம்.///////

ஐம்படையல்ல - ஐந்தொகை!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Jagannath said...
ஆனால் மறுபிறவி கொள்கையில் ஒரு குழப்பம் உண்டு. ஒருவன் புண்ணியம் மட்டுமே செய்திருந்தாலும் அதன் பலனை அனுபவிக்க இன்னொரு பிறவி எடுக்க வேண்டியிருக்கும்.
அப்பொழுது பிறப்பற்ற நிலையை எய்துவது யாருக்கு சாத்தியம்?
என்னுடைய புரிதலின்படி ஒருவன் தான் செய்யும் செயல்களைக் கடமையாகக் கருதி செய்து அதன் விளைவுகளான பாவம், புண்ணியம் ஆகியவற்றை இறைவனுக்கே அர்ப்பணிக்கிறேன் என்று கர்ம யோகியாக, இறைவனை முழுதும் சரணாகதி அடைந்தவனாக வாழ்ந்தால்தான் பிறவா நிலை சாத்தியப்படும். வைணவம் இந்த தத்துவத்தையே வலியுறுத்தியுள்ளதாக நினைவு./////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

Ganesh said...

ஐயா , கடவுள் ஏன் இப்படி செய்கிறார் ?,
எனக்கு ஜோதிடம் பற்றி சற்று புரிந்து கொண்டுருக்கிறேன் .
ஒருவனின் நல்ல செயல், கெட்ட செயல் கிரகங்களை அமைப்பை கொண்டு அமைகிறது.
ஒருவனின் வாழ்க்கை சென்ற பிறவின் கர்ம பலன் கொண்டு இப்பிறவி அமைகிறது.
கடவுள் , ஒருவன் முதல் பிறவியில் கெட்ட செயல் செய்ய விடாமல் கிரகங்களை அமைப்பை கொண்டு படைத்தது இருந்தால் அவன் மறுபிறவி இல்லாமல் முக்தி அடைய செய்யலாமே. ஏன் செய்யவில்லை?
So,
ஒருவனின் வாழ்க்கையில் நல்ல செயல், கெட்ட செயல் செய்ய தூண்டுவது கடவுளே
இவரே BOMB வைய்ப்பார ! இவரே BOMB ஏடுப்பார !
ஏன்னாய்யா நாண்ணயம் ! ( Mudhavan Raguvaran Said )
கடவுள் ஏன் இப்படி செய்கிறார் ?

If better understand, please watch this video, God regularly doing this work. 
http://www.youtube.com/watch?v=ZqGlvplMW3o&feature=related
இவரே BOMB வைய்ப்பார ! இவரே BOMB ஏடுப்பார !
ஏன்னாய்யா நாண்ணயம் ! ( Mudhavan Raguvaran Said )

நன்றி

minorwall said...

எடுத்துக்கொண்ட தலைப்பு பற்றியவிமர்சனம் இது என்பதால் 'மறுபிறவி உண்டா இல்லையா?'
என்ற கேள்விக்கு உண்டு என்பதே பதில்..
நடந்த நிகழ்வுகளை ஆதாரப்பூர்வமாக விசாரித்து விளக்கியிருக்கும்
இயன் ஸ்டீவென்சன் அவர்களின் நிகழ்ச்சியை யூட்யுபிலே பார்த்தபின்பும் இல்லையென்று சொல்லுதல் நமது நம்பிக்கை சார்ந்த/ வறட்டுப்பிடிவாதம் சார்ந்த ஒரு நிலைப்பாடாகிவிடும்..
எனவே உண்டு..அது எல்லோருக்கும் உண்டா? என்ற கேள்விக்கு இன்றைய பின்னூட்டத்திலேயே சிலர் அங்காங்கே தகவல்கள் அளித்துள்ளார்கள்..
ஸ்டீவென்சன் கேஸ்களில் தெளிவான நினைவுகளுடன் முற்பிறவியை நினைவு கூர்ந்து பல விஷயங்கள் சிறுமி ஸ்வர்ணலதாவின் வாழ்க்கையில் நடந்தேறினாலும்
கடைசியில் பிறந்துவிட்ட பின் இருக்கும் இந்தப் பிறவியில் 'அவள் தாவரவியல் படித்து வாழ்வியலுக்கு ஒரு பட்டம் பெறுகிறாள்..பின்னர் திருமணமும் செய்துகொண்டு குடும்பம் நடத்துகிறாள்' என்று நடைமுறைக்கு வந்துவிடுகிறார்கள் என்பதைக்கவனிக்க வேண்டும்..
வாழும்போது இந்தப்பிறவியைப்பற்றிய நினைவுகளை முன்னிறுத்துவோம்..(நமகெல்லாம் முற்பிறவி ஞாபகம் இல்லாதப்போ இந்தவரி அவசியமில்லை என்றே நினைக்கிறேன்..)
இனிமையான அனுபவிக்கவேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டு நாமும் அனுபவித்து
'யாம் பெற்ற இன்பம்
பெருக இந்த வையம்' என்று நம்மால் முடிந்தளவு நமக்குத் தெரிந்தோரையும் அனுபவிக்கச் செய்வோம்..நன்றி..

Jagannath said...

ஒருவனின் வாழ்க்கை சென்ற பிறவின் கர்ம பலன் கொண்டு இப்பிறவி அமைகிறது.
கடவுள் , ஒருவன் முதல் பிறவியில் கெட்ட செயல் செய்ய விடாமல் கிரகங்களை அமைப்பை கொண்டு படைத்தது இருந்தால் அவன் மறுபிறவி இல்லாமல் முக்தி அடைய செய்யலாமே. ஏன் செய்யவில்லை?
So,
ஒருவனின் வாழ்க்கையில் நல்ல செயல், கெட்ட செயல் செய்ய தூண்டுவது கடவுளே
இவரே BOMB வைய்ப்பார ! இவரே BOMB ஏடுப்பார ! //

ஒருவனுக்குக் கிடைக்கும் பலன்கள்தான் விதிக்கப்பட்டது. செயல்கள் என்பது மனிதனின் இச்சை
சக்தியின் கட்டுப்பாட்டில் இருப்பது. அதாவது நீங்கள் செய்யும் செயல்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு.
ஆனால் அதற்கு கிடைக்கும் நல்ல பலன்களோ தீய பலன்களோ உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை.
இதைத்தான் கீதை கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்கிறது. கர்மவினை தத்துவத்தை
இப்படி புரிந்து கொள்வதுதான் குழப்பமில்லாமல் இருக்கும்.

வாழ்க்கையில் பிறக்கும் குடும்பம், கல்வி, அறிவு, வேலை, வாழ்க்கைத்துணை, குழந்தைகள், செல்வம், இறப்பு ஆகியவை விதிக்கப்பட்டது. ஆனால் உங்களுக்கு அமைந்ததை வைத்து நீங்கள் எப்படி வாழ்ந்து காட்டுகிறீர்கள் என்பது உங்கள் கையில்தான் உள்ளது. அதைப் பொறுத்துதான் உங்கள் அடுத்த பிறவியும் அமையும். நீங்கள் எவ்வளவு மோசமான சூழலில் இருந்தாலும் சிறந்த சூழலில் இருந்தாலும் சரியான முறையில் வாழ்கிறீர்களா என்பதையே கடவுள் பரிசீலிப்பதாகக் கருதுகிறேன்.

vprasanakumar said...

yes there is reincarnation

minorwall said...

மறுபிறவி உண்டு என்ற எனது பின்னூட்டத்தை சிறிது யோசித்துப்பார்த்தால் அதனிலே கண்டறியப்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு
ஸ்டீவென்சன் ஆய்வில் சொன்னதை வைத்துப் பார்த்தால் இப்படியாக மறுபிறப்பு அடைந்தவர்கள்
சென்ற பிறப்பிலே விட்டுச்சென்ற கடமைகளை நிறைவேற்ற அல்லது அடையாமல் ஏங்கித் தவித்ததை
அடைந்துவிட என்று ஒரு continuity உடனான பிறப்பாக மறுபிறப்பு இருக்கவில்லை..
இதுபற்றி யோசித்தபோது மனதின் நினைவுகள் பழைய பிறவியின் நினைவுகளைச் சுமந்துகொண்டு மறக்காமல் இருந்த வகையிலே
அது பழைய பிறவியில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்த விஷயமாகத்தான் இதனைப் பார்க்கமுடிகிறதே தவிர கர்மா, முன்வினைப்பயன், மோட்ஷம், முக்தி என்கிற கற்பித விஷயங்களுக்கு இட்டுச் செல்லவில்லை..இதுகுறித்தான விஷயங்கள் இந்த ஆராய்ச்சியில் சொல்லப்படவில்லை..
மறுபிறப்புக்கள் இந்த உலகில் நடந்திருக்கிறது என்பது மட்டுமே ஆதாரப்பூர்வமாக விளக்கப்பட்டிருக்கிறது..
மற்றதெல்லாம் அனுமானம்தான்..

கோவி.கண்ணன் said...

///ஒரு குழந்தையை அதன் அன்னை கண்ணை இமை காப்பதுபோல் சீராட்டி வளர்க்கிறாள். ஒரு குழந்தையை பிறந்த அன்றே அதன் அன்னை குப்பைத் தொட்டியில் வீசி விட்டுப் போய்விடுகிறாள்.

பிறப்பில் ஏன் இந்த வேறுபாடுகள்? இதற்குப் பதில் சொல்லுங்கள் கோவியாரே!//


ஐயா, நான் இங்கு மறுபிறவி இருக்கு என்றோ இல்லை என்றோ விவாதம் செய்ய வரவில்லை, பிறகு நான் ஏன் வந்தேன் என்று கேட்கிறீர்களா ? (பிறகு நான் ஏன் பாடினேன் என்று கேட்கிறீர்களா ? திருவிளையாடல் ஹேமநாத பாகவதர் ஸ்டைலில் படிக்கவும்) மறுபிறவி இருக்கு என்று சொல்பவர்களிடமும் விவாதிப்பேன் இல்லை என்று சொல்பவர்களிடமும் விவாதிப்பேன், கடவுள் குறித்த நம்பிக்கைகளிலும் அப்படியே :)

இப்ப சப்ஜெக்ட்டுக்கு வருவோம் சப்ஜெக்ட்டுக்கு, அப்படியே முற்பிறவி பலனோட ஏசி முத்தையாவீட்டில் வளருகிற குழந்தையை ஓசி முத்தையா கண்காணாத இடத்திற்கு கடத்திப் போய் ஏழ்மையிலே வளர்க்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்ப அந்தக் குழந்தைக்கு ஜாதகம் சரி இருந்திருக்காது என்று ஒரே வரியில் பதிலைச் சொல்லிடுவிங்க இல்லையா ? பிச்சைகாரன் வளர்க்கும் குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் அனைத்தும் அவர்களுக்கே பிறந்தது இல்லை, இப்படியான சூழலில் அந்தக் குழந்தைகளின் முற்பிறவி பலன் அதுக்கு கிடைச்சும் வீணாகிவிட்டது என்று சொல்லிவிட்டுவிடுவீர்களா ? அல்லது என்னிக்காவது அந்தக் குழந்தைகள் தமிழ்படம் போல் அப்பனை கண்டு பிடிச்சு எதிரிகளை பழிவாங்கும் என்று சொல்லுவீர்களா ? பிறப்பு சரியாகத்தான் நடந்துள்ளது என்றால் அவர்கள் வளரும் விதம் வேறுபடுவது ஏன்? பிறப்பா ? சூழலா வாழ்க்கையை தீர்மானிப்பது எது ?

பணக்கார வீட்டு நாய்குட்டிக்கு கூட, பூச்செடிகளுக்குக் கூட முற்பிறவி பலன் தான் அங்கு வளரும் சூழலை ஏற்படுத்துவிட்டது என்றும் சொல்லாமோ :)

கோவி.கண்ணன் said...

நீங்கள் சொல்லும் மறுபிறவி உண்மை என்றால் பிறவிகளை அறுக்க முடியும் என்கிற கூற்று பொய் ஆகிவிடும்,
ஏனென்றால் எந்தக் காரணத்திற்கு முதல்பிறப்பு அமைந்ததோ அதே காரணம் தான் பிறவி அறுத்த பிறகும் நிற்கும், பிறகு எப்படி பிறவிச் சுழல் இல்லாமல் இருக்கும் என்றும் முதலில் சொல்லுங்கள்.


உதாரணத்திற்கு இந்தக் கேள்வியை இப்படிக் கேட்கிறேன் மேகங்களுக்கு விருப்பங்கள் இருப்பதில்லை என்று வையுங்க, ஆனாலும் அடிக்கும் குளிர்காற்று அதனை மழையாக்கி கிழேவிழவைக்கிறது, அப்படி தண்ணீர் ஆன மேகம் நான் சாக்கடையில் விழுந்துவிட்டேன் இங்கே இருக்கப் பிடிக்கவில்லை, நான் மேகமாகவே இருந்துவிடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு நினைத்தபடியே ஆவி ஆகி மேகமாக மாறுகிறது அதனால் மேகமாகவே தொடர்ந்து இருக்க முடியுமா ?

:) இந்தக் கேள்விக்கு சரியான விடை வரவில்லை என்றால் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும் என்று வேதாளம் சொல்லிவிட்டு முருங்கை ஏறியது.

SP.VR. SUBBAIYA said...

Blogger Ganesh said...
ஐயா , கடவுள் ஏன் இப்படி செய்கிறார் ?,
எனக்கு ஜோதிடம் பற்றி சற்று புரிந்து கொண்டுருக்கிறேன் .
ஒருவனின் நல்ல செயல், கெட்ட செயல் கிரகங்களை அமைப்பை கொண்டு அமைகிறது.
ஒருவனின் வாழ்க்கை சென்ற பிறவின் கர்ம பலன் கொண்டு இப்பிறவி அமைகிறது.
கடவுள் , ஒருவன் முதல் பிறவியில் கெட்ட செயல் செய்ய விடாமல் கிரகங்களை அமைப்பை கொண்டு படைத்தது இருந்தால் அவன்

மறுபிறவி இல்லாமல் முக்தி அடைய செய்யலாமே. ஏன் செய்யவில்லை?/////

அதெல்லாம் கடவுளின் வேலையல்ல. கர்ம வினைப்படி பிறப்பு. பிறந்த வாழ்க்கையை ஒழுங்காக நடத்தாமல், தவறாக வாழ்பவனை யாரும் தடுத்து நிறுத்தமாட்டார்கள். அதற்குத்தான் பாவ புண்ணியக் கணக்கு. அன-தக் கணக்கு தானாகத்தன் வேலையைச் செய்யும். அப்படிச் செய்யும்படி கோடிங் எழுதி புரோக்கிராம் செய்யப்பட்டுள்ளது. அது இப்போது உங்களுக்குப் புரியாது. ‘கெட்டபின்னே ஞானி’ என்ற கவிஞனின் வாக்குப்படி காலம் அதை உங்களுக்கு உணர்த்தும்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger minorwall said...
எடுத்துக்கொண்ட தலைப்பு பற்றியவிமர்சனம் இது என்பதால் 'மறுபிறவி உண்டா இல்லையா?'
என்ற கேள்விக்கு உண்டு என்பதே பதில்..
நடந்த நிகழ்வுகளை ஆதாரப்பூர்வமாக விசாரித்து விளக்கியிருக்கும்
இயன் ஸ்டீவென்சன் அவர்களின் நிகழ்ச்சியை யூட்யுபிலே பார்த்தபின்பும் இல்லையென்று சொல்லுதல் நமது நம்பிக்கை சார்ந்த/

வறட்டுப்பிடிவாதம் சார்ந்த ஒரு நிலைப்பாடாகிவிடும்..
எனவே உண்டு..அது எல்லோருக்கும் உண்டா? என்ற கேள்விக்கு இன்றைய பின்னூட்டத்திலேயே சிலர் அங்காங்கே தகவல்கள்

அளித்துள்ளார்கள்..
ஸ்டீவென்சன் கேஸ்களில் தெளிவான நினைவுகளுடன் முற்பிறவியை நினைவு கூர்ந்து பல விஷயங்கள் சிறுமி ஸ்வர்ணலதாவின்
வாழ்க்கையில் நடந்தேறினாலும்
கடைசியில் பிறந்துவிட்ட பின் இருக்கும் இந்தப் பிறவியில் 'அவள் தாவரவியல் படித்து வாழ்வியலுக்கு ஒரு பட்டம் பெறுகிறாள்..பின்னர்

திருமணமும் செய்துகொண்டு குடும்பம் நடத்துகிறாள்' என்று நடைமுறைக்கு வந்துவிடுகிறார்கள் என்பதைக்கவனிக்க வேண்டும்..
வாழும்போது இந்தப்பிறவியைப்பற்றிய நினைவுகளை முன்னிறுத்துவோம்..(நமகெல்லாம் முற்பிறவி ஞாபகம் இல்லாதப்போ இந்தவரி

அவசியமில்லை என்றே நினைக்கிறேன்..)
இனிமையான அனுபவிக்கவேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டு நாமும் அனுபவித்து
'யாம் பெற்ற இன்பம்
பெருக இந்த வையம்' என்று நம்மால் முடிந்தளவு நமக்குத் தெரிந்தோரையும் அனுபவிக்கச் செய்வோம்..நன்றி../////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி மைனர். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! நான் தொடர்ந்து பதிவில் எழுதுவதன்
நோக்கமும் அதுதான்!

SP.VR. SUBBAIYA said...

Blogger Jagannath said...
ஒருவனின் வாழ்க்கை சென்ற பிறவின் கர்ம பலன் கொண்டு இப்பிறவி அமைகிறது.
கடவுள் , ஒருவன் முதல் பிறவியில் கெட்ட செயல் செய்ய விடாமல் கிரகங்களை அமைப்பை கொண்டு படைத்தது இருந்தால் அவன்
மறுபிறவி இல்லாமல் முக்தி அடைய செய்யலாமே. ஏன் செய்யவில்லை? So,
ஒருவனின் வாழ்க்கையில் நல்ல செயல், கெட்ட செயல் செய்ய தூண்டுவது கடவுளே
இவரே BOMB வைய்ப்பார ! இவரே BOMB ஏடுப்பார ! //
ஒருவனுக்குக் கிடைக்கும் பலன்கள்தான் விதிக்கப்பட்டது. செயல்கள் என்பது மனிதனின் இச்சை
சக்தியின் கட்டுப்பாட்டில் இருப்பது. அதாவது நீங்கள் செய்யும் செயல்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு.
ஆனால் அதற்கு கிடைக்கும் நல்ல பலன்களோ தீய பலன்களோ உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை.
இதைத்தான் கீதை கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்கிறது. கர்மவினை தத்துவத்தை
இப்படி புரிந்து கொள்வதுதான் குழப்பமில்லாமல் இருக்கும்.
வாழ்க்கையில் பிறக்கும் குடும்பம், கல்வி, அறிவு, வேலை, வாழ்க்கைத்துணை, குழந்தைகள், செல்வம், இறப்பு ஆகியவை விதிக்கப்பட்டது.
ஆனால் உங்களுக்கு அமைந்ததை வைத்து நீங்கள் எப்படி வாழ்ந்து காட்டுகிறீர்கள் என்பது உங்கள் கையில்தான் உள்ளது. அதைப்
பொறுத்துதான் உங்கள் அடுத்த பிறவியும் அமையும். நீங்கள் எவ்வளவு மோசமான சூழலில் இருந்தாலும் சிறந்த சூழலில் இருந்தாலும் சரியான
முறையில் வாழ்கிறீர்களா என்பதையே கடவுள் பரிசீலிப்பதாகக் கருதுகிறேன்.///////////

கரெக்ட். நல்ல முறையில் வாழ்ந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதில் கடவுளின் பங்களிப்பிற்கு வேலை இல்லை. நடந்து கொள்வது நம்
கையில்தான் உள்ளது. என்ன விதைக்கிறோமோ அதுதான் அறுவடையின்போது கிடைக்கும்!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger vprasanakumar said...
yes there is reincarnation///////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி பிரசன்ன குமார்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger minorwall said...
மறுபிறவி உண்டு என்ற எனது பின்னூட்டத்தை சிறிது யோசித்துப்பார்த்தால் அதனிலே கண்டறியப்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு
ஸ்டீவென்சன் ஆய்வில் சொன்னதை வைத்துப் பார்த்தால் இப்படியாக மறுபிறப்பு அடைந்தவர்கள்
சென்ற பிறப்பிலே விட்டுச்சென்ற கடமைகளை நிறைவேற்ற அல்லது அடையாமல் ஏங்கித் தவித்ததை
அடைந்துவிட என்று ஒரு continuity உடனான பிறப்பாக மறுபிறப்பு இருக்கவில்லை..
இதுபற்றி யோசித்தபோது மனதின் நினைவுகள் பழைய பிறவியின் நினைவுகளைச் சுமந்துகொண்டு மறக்காமல் இருந்த வகையிலே அது பழைய பிறவியில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்த விஷயமாகத்தான் இதனைப் பார்க்கமுடிகிறதே தவிர கர்மா,
முன்வினைப்பயன், மோட்ஷம், முக்தி என்கிற கற்பித விஷயங்களுக்கு இட்டுச் செல்லவில்லை..இதுகுறித்தான விஷயங்கள் இந்த ஆராய்ச்சியில்
சொல்லப்படவில்லை..
மறுபிறப்புக்கள் இந்த உலகில் நடந்திருக்கிறது என்பது மட்டுமே ஆதாரப்பூர்வமாக விளக்கப்பட்டிருக்கிறது..
மற்றதெல்லாம் அனுமானம்தான்../////

நல்லது. உங்களின் கருத்துப் பகிவிற்கு நன்றி மைனர்வாள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger கோவி.கண்ணன் said...
///ஒரு குழந்தையை அதன் அன்னை கண்ணை இமை காப்பதுபோல் சீராட்டி வளர்க்கிறாள். ஒரு குழந்தையை பிறந்த அன்றே அதன் அன்னை குப்பைத் தொட்டியில் வீசி விட்டுப் போய்விடுகிறாள்.
பிறப்பில் ஏன் இந்த வேறுபாடுகள்? இதற்குப் பதில் சொல்லுங்கள் கோவியாரே!//
ஐயா, நான் இங்கு மறுபிறவி இருக்கு என்றோ இல்லை என்றோ விவாதம் செய்ய வரவில்லை, பிறகு நான் ஏன் வந்தேன் என்று
கேட்கிறீர்களா ? (பிறகு நான் ஏன் பாடினேன் என்று கேட்கிறீர்களா ? திருவிளையாடல் ஹேமநாத பாகவதர் ஸ்டைலில் படிக்கவும்) மறுபிறவி இருக்கு என்று சொல்பவர்களிடமும் விவாதிப்பேன் இல்லை என்று சொல்பவர்களிடமும் விவாதிப்பேன், கடவுள் குறித்த நம்பிக்கைகளிலும் அப்படியே :)//////

பிள்ளையையும் கிள்ளிவிடுவீர்கள். பிறகு தொட்டிலையும் ஆட்டிவிடுவீர்கள். அப்படித்தானே? நல்லது.
--------------------------------------------------------------------------------------------
//////இப்ப சப்ஜெக்ட்டுக்கு வருவோம் சப்ஜெக்ட்டுக்கு, அப்படியே முற்பிறவி பலனோட ஏசி முத்தையாவீட்டில் வளருகிற குழந்தையை ஓசி முத்தையா கண்காணாத இடத்திற்கு கடத்திப் போய் ஏழ்மையிலே வளர்க்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்ப அந்தக் குழந்தைக்கு ஜாதகம் சரி இருந்திருக்காது என்று ஒரே வரியில் பதிலைச் சொல்லிடுவிங்க இல்லையா ? பிச்சைகாரன் வளர்க்கும் குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் அனைத்தும் அவர்களுக்கே பிறந்தது இல்லை, இப்படியான சூழலில் அந்தக் குழந்தைகளின் முற்பிறவி பலன் அதுக்கு கிடைச்சும் வீணாகிவிட்டது என்று சொல்லிவிட்டுவிடுவீர்களா ? அல்லது என்னிக்காவது அந்தக் குழந்தைகள் தமிழ்படம் போல் அப்பனை கண்டு பிடிச்சு எதிரிகளை பழிவாங்கும் என்று சொல்லுவீர்களா ? பிறப்பு சரியாகத்தான் நடந்துள்ளது என்றால் அவர்கள் வளரும் விதம்
வேறுபடுவது ஏன்? பிறப்பா ? சூழலா வாழ்க்கையை தீர்மானிப்பது எது ?////////

நீங்கள் சொல்லும் திரைப்படக் கணக்குகள் எல்லாம் நடைமுறையில் ஆயிரத்திற்கு ஒன்றுதான் இருக்கும். அதெல்லாம் விதிவிலக்குகள். அதை
உதாரணப் படுத்த முடியது. exemptions will not become examples!

Time, Space & God are all one and the same. You can not separate them. Everything is God. ‘எங்கும் இருக்கிறான் இறைவன். தூணிலும்
இருக்கிறான்.துரும்பிலும் இருக்கிறான் இறைவன்’ என்று கிராமத்துக்காரர்கள் சொல்வார்கள். மெத்தப் படித்தவன்தான் ஆதாரம் கேட்டு அலைவான். தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவான். பிறப்பு, வாழ்க்கை, சூழல், வறுமை, செழுமை, பெருமை, சிறுமை, இளமை, முதுமை, இறப்பு என்று எல்லாமே ஒன்றுக்குள் ஒன்று பிண்ணிப் பிணைந்தது. அவற்றை வேறு படுத்திப் பார்க்க முடியாது. அதை உணராதவர்கள் என்றுமே அதை உணரமுடியாது. அது அவர்களுக்கு விதிக்கப்பெற்றது. குழப்பம்தான் அவர்களுக்கு வாழ்க்கையாக அமையும்.
சூழலாக அமையும். மற்றவனெல்லாம் எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருப்பான். நிம்மதியாக இருப்பான்.
------------------------------------------------------------------------------------------
பணக்கார வீட்டு நாய்குட்டிக்கு கூட, பூச்செடிகளுக்குக் கூட முற்பிறவி பலன் தான் அங்கு வளரும் சூழலை ஏற்படுத்துவிட்டது என்றும்

சொல்லாமோ :)///////

ஆகா சொல்லலாம்:
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய்! அருள்வாய்! குகனே!
(கந்தர் அனுபூதி)
அருணரிகியார் எழுதிய பாடலை தினமும் ஒருமுறை படியுங்கள். பொருள் தெரிந்து படியுங்கள். மனம் தெளிவடையும்

SP.VR. SUBBAIYA said...

////Blogger கோவி.கண்ணன் said...
நீங்கள் சொல்லும் மறுபிறவி உண்மை என்றால் பிறவிகளை அறுக்க முடியும் என்கிற கூற்று பொய் ஆகிவிடும்,
ஏனென்றால் எந்தக் காரணத்திற்கு முதல்பிறப்பு அமைந்ததோ அதே காரணம் தான் பிறவி அறுத்த பிறகும் நிற்கும், பிறகு எப்படி பிறவிச்

சுழல் இல்லாமல் இருக்கும் என்றும் முதலில் சொல்லுங்கள்.//////

பாவ புண்ணியக் கணக்கில் நில் பாலன்ஸ் (Nil Balance) வரும்போது உங்களின் பிறவிச் சுழல் ‘கட்’ டாகிவிடும்
--------------------------------------------------------------------------------------
உதாரணத்திற்கு இந்தக் கேள்வியை இப்படிக் கேட்கிறேன் மேகங்களுக்கு விருப்பங்கள் இருப்பதில்லை என்று வையுங்க, ஆனாலும்

அடிக்கும் குளிர்காற்று அதனை மழையாக்கி கிழேவிழவைக்கிறது, அப்படி தண்ணீர் ஆன மேகம் நான் சாக்கடையில் விழுந்துவிட்டேன் இங்கே

இருக்கப் பிடிக்கவில்லை, நான் மேகமாகவே இருந்துவிடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு நினைத்தபடியே ஆவி ஆகி மேகமாக மாறுகிறது

அதனால் மேகமாகவே தொடர்ந்து இருக்க முடியுமா?
:) இந்தக் கேள்விக்கு சரியான விடை வரவில்லை என்றால் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும் என்று வேதாளம் சொல்லிவிட்டு முருங்கை

ஏறியது.///////

ஒரு செடியில் பூத்திருக்கும் மலர் மாலையாகி இறைவன் சந்நிதானத்திற்குப் போகலாம் அல்லது மங்கையின் கூந்தலுக்குப் போகலாம்
அல்லது மலர் வளையத்திற்குள் சென்று இறந்து கிடப்பவனின் பாதத்திற்குப் போகலாம் அல்லது அரைபட்டு வாசனைத்தரவியமாக மாறுவதற்கு ஒரு தொழிற்சாலைக்குப் போகலாம் அல்லது பறிக்கப்பாடாமலே செடியிலேயே காய்ந்து சருகாகலாம் அல்லது பறித்துக்கொண்டு போனவனால் விற்க முடியாமல் அழுகி சாக்கடைக்குப் போகலாம். அதற்குப் பூ ஒன்றும் செய்ய முடியாது. இங்கேதான் செல்வேன் என்று அடம் பிடிக்கமுடியாது. மனித வாழ்க்கையும் அப்படித்தான். வள்ளுவப் பெருந்தகை எழுதிய 38ஆவது அதிகாரத்தைப் பத்து முறை படியுங்கள் எல்லாம் பிடிபடும், முருங்கை மரத்தில் மீண்டும் மீண்டும் ஏறும் நிலை ஏற்படாது!:-))))))

sekar said...

அய்யா வணக்கம்

வாத்தியாரும் ஜோதிடத்தின் மறுபிறவி என்று தான் நான் நினைக்கின்றேன்

தமிழ் விரும்பி said...

////இதுபற்றி யோசித்தபோது மனதின் நினைவுகள் பழைய பிறவியின் நினைவுகளைச் சுமந்துகொண்டு மறக்காமல் இருந்த வகையிலே அது பழைய பிறவியில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்த விஷயமாகத்தான் இதனைப் பார்க்கமுடிகிறதே தவிர கர்மா,
முன்வினைப்பயன், மோட்ஷம், முக்தி என்கிற கற்பித விஷயங்களுக்கு இட்டுச் செல்லவில்லை..////

உடல் தான் அழிந்து விட்டதே பிறகு எது இந்த ஞாபகங்களை சுமந்துக் கொண்டு வந்தது?
அப்படி ஓன்று இருக்குமானால் அதன் அளவு, நிறம், குணம், அது எப்படி மறு படியும் ஒரு தாயின் கருவில் புகுந்தது? அதைப் புகுத்தியது யார்? இது மனிதனுக்கு மாத்திரமா? இல்லை உயிருள்ள அனைத்து ஜீவா ராசிகளுக்குமா?

என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தேட வேண்டும் அல்லவா! அப்படி இருக்க மோட்ஷம் = அதாவது எங்கிருந்து அந்த பொருள் (மீண்டும் மீண்டும் ஞாபகங்களை சுமந்து வந்ததோ அது) அங்கேயே சென்று சேர்வது என்று ரிஷிகள், மகான்கள் கூறுகிறார்கள் அவர்கள் ஞான ஒளி பெற்றவர்கள் என்பது உண்மை... அதெல்லாம் வேண்டாம் அறிவியல் நிரூபிக்கட்டும் என்றால்... அதுவும் நடக்கும் அதற்கு பல்லாயிரம் வருடங்கள் பிடிக்கலாம் பார்த்து இருந்து தெரிந்துக் கொள்ளலாம்... இல்லை ஒருவேளை அறிவியல் அது தொடர்பாக ஏதும் சொல்லி இருக்கிறது என்றுத் தெரிந்திருந்தால் தெரிந்தவர்கள் கூறலாம்... நானும் ஆவலாக இருக்கிறேன்.

விஞ்ஞானிகள் நாத்திக வாதிகள் அல்ல... அவர்களை நாத்திகக் கடவுள் என்று ஓன்று இருந்துக் கொண்டு அவைகள் உருவாக தனி வழிகளை ஏற்படுத்தவில்லை...

விஞ்ஞானம், மெஞ்ஞானம் இரண்டும் தான் இந்த பிரபஞ்சம்.... பிரபஞ்சம் கடவுளின் உடல் (எல்லாமும் தான் எதுவும் மிஞ்சாது.. அதனாலே தான் தூணிலும், துரும்பிலும் என்பது).... கடவுள் என்பவர் இந்தப் பிரபஞ்சத்தின் மனம்... அதில் இயக்கம் என்பது நாம் கூறும் சக்தி....

பௌதீகப்படி ஏற்றத் தாழ்வு இருந்தால் தான் அங்கே இயக்கம் இருக்கும்... காற்று, வெப்பம், நீர், ஆகாயம், என்று எதுவானாலும் சரி.. அப்படித்தான் வறுமை, ஏழ்மை, சந்தோசம், வருத்தம் என்று எல்லாமே இவைகளைப் புரிந்துக் கொள்ள இந்த பாசியைப் புரித்துக் கொள்ள தன அடிப்படை உயிர்ம மெய் எழுத்துக்கள், இலக்கணம் என்று இருப்பவைகளை கற்றுத் தேர்ந்தால் புரியும்... இல்லை என்றால் சிரமம் தான்...

இல்லை என்ற தர்க்க முடிவை கையில் வைத்துக் கொள்ளாமல் நண்பர் கோவி. கண்ணனார் அவர்களைப் போல ஆராய முயற்சிப்பதும் நன்றே அது சரியானப் பாதை... குதர்க்கமாக யோசித்தால் அல்லது விகண்டவாதம் பேசினால் அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்போடு சென்றாலும் சிரமம் தான்... மறு பிறவி எடுப்பது எது என்று நம்பும் அளவுக்கு வந்த பிறகு இனி அனைத்தும் சுலபமே.. என்பது எனது அபிப்ராயம்...

நன்றி,

ஆலாசியம் கோ.

தமிழ் விரும்பி said...

ஏற்றத் தாழ்வு இல்லை என்றால் உலகம் இயங்காது... பௌதீகமும் அதை தான் கூறுகிறது... அப்படி ஒரு நிலை வரும் போது (அது தர்மமோ அதர்மமோ ஓன்று மட்டும் இருக்கும் போது) இந்த உலகம் இயங்காது அதாவது அது அழிவு என்றும் கூறலாம்... மறு படியும் ஊழி... படைப்பின் சுழற்சி ஆரம்பம்...

இங்கே நாம் எப்பொதும் பேசுவது... கடவுள் நல்லவர் தானே அவரே நல்லதை மட்டும் செய்யட்டுமே என்பது தான் உலகம் இயங்க வேண்டுமா இல்லையா? சரி அப்படி என்றாலும் அந்த ஏற்றத்தாழ்வுகளையும் நாமே செய்தும் கொள்கிறோம்.. நடக்கு யாவற்றிற்கும் 99% நாமே காரணம்... நேராக யோசிப்போம் புரிபடும்.
நன்றி.

iyer said...

///நீங்கள் சொல்லும் மறுபிறவி உண்மை என்றால் பிறவிகளை அறுக்க முடியும் என்கிற கூற்று பொய் ஆகிவிடும்,
ஏனென்றால் எந்தக் காரணத்திற்கு முதல்பிறப்பு அமைந்ததோ அதே காரணம் தான் பிறவி அறுத்த பிறகும் நிற்கும், பிறகு எப்படி பிறவிச் சுழல் இல்லாமல் இருக்கும் என்றும் முதலில் சொல்லுங்கள்.///

வணக்கம் கோவியாரே...
வருகைக்கு நன்றி...

அய்யரும் தன் பின்ஊட்டத்தில்
அந்த கருத்தைத் தானே சொல்லிஉள்ளார்

மறுபிறவி உண்டு என்பர்
முற்பிறவியை பற்றி சிந்திக்காதது .ஏன்?

முதற்பிறவியை பற்றி யோசிக்காமல்
முன்வைத்த தலைப்பு என எழுதுவது

கிள்ளுவதற்கு பிள்ளையும் இல்லை
ஆட்டுவதற்கு தொட்டிலும் இல்லை

///பாவ புண்ணியக் கணக்கில் நில் பாலன்ஸ் (Nil Balance) வரும்போது உங்களின் பிறவிச் சுழல் ‘கட்’டாகிவிடும்///

கணக்கு பார்ப்தும் ஆடிட் செய்வதும்
கண்ணுக்கு தெரியாத உண்மை என

மறுத்தாலும் மறைத்தாலும்
மூல கன்மம் என சித்தாந்த சாத்திரம்

சொல்வதை படித்து விட்டு
சொல்லவருவதை சொன்னால்

வாதமின்றி போகும் இந்த தலைப்பும்
வாதிற்கு அழைக்கும் இந்த இழப்பும்..


///அப்படித்தான். வள்ளுவப் பெருந்தகை எழுதிய 38ஆவது அதிகாரத்தைப் பத்து முறை படியுங்கள் எல்லாம் பிடிபடும், முருங்கை மரத்தில் மீண்டும் மீண்டும் ஏறும் நிலை ஏற்படாது!:-))))))..///

நிலையாமையில் சொல்ல வந்ததென்ன
அறன் வலியுறுத்தி சொல்வததென்ன

வேதாளம் யாருடைய மறுபிறப்பு..
பாதளம் வரும் தேடினாலும் பதில் ஒன்று

மறுபிறப்பை கருப்புச் சட்டை காரரும்
மறுக்கின்றனர் ஆனால் ..

மறுபடியும் இதே பிறப்பு கிடைக்காதென
மறுபிறப்பில்லை என்பார்களோஅவர்கள்

மல்லுவேட்டிக்காரர் சொல்லும்
யாம் பெற்ற இன்பத்திற்கு

வரட்டும் இன்னொரு
வாதம் காத்திருக்கிறோம் ஆவலுடன்


இருக்கட்டும்...
இனிமையே பிறக்கட்டும்

minorwall said...

////////கோவியாரின் கேள்விகளும் வாத்தியாரின் பதில்களும்////////
என்ற தலைப்பிலே புத்தகமா போட்டாலுமே பேச்சு பேச்சாத்தான் இருக்குமே தவிர ஒரு முடிவுக்கு வராது..
விளக்கமுடியாத விஷயங்களை,தான் நம்பி ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்ற கொள்கைகளை
நீயும் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சிறுபிள்ளைக்கு பெரியோர் சொல்லிக் கொடுக்கும் ரீதியிலான விஷயங்கள்
கருத்துத் திணிப்பு ஆகிப் போவதால் விளக்கம் கிடைக்காத அச்சிறுவனுக்கு என்ன மனநிலையை ஏற்படுத்துமோ
அதுதான் இப்படிப்பட்டஉரையாடலின் முடிவாக இருக்கும்..
'ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு' என்ற கணக்குக்குள்மூலம் பவுதிக விஷயங்களை மட்டுமே உள்ளடக்கமுடிகிறதே
தவிர கண்ணுக்குத் தெரிந்த அனுபவிக்கிற மனித உயிர் மாதிரி ஆழ்ந்த சிக்கலான விஷயங்களுக்குக் கூட இந்தக் கணக்குப் பொருந்தி வருவதில்லை..
ப்ரொடக்டிவிட்டி என்ற கான்செப்டிலேயே
'ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு அல்ல..அதைவிடக் கூட'
என்றாகும்போது கண்ணுக்குத் தெரியாத கடவுள் போன்ற விஷயங்களில் நம்புபவர்களுக்கு மட்டுமே அந்தக் கற்பனாவுருவம்
காட்சியளிக்கிறது..பலப்பல அற்புதங்கள் செய்கிறது..'
'கடவுள் இல்லை இல்லவே இல்லை..கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி..கடவுளை வணகுபவன் முட்டாள்'
எனக் கொள்கை முழக்கமிட்டு செருப்பணிந்து, சிகரெட் பற்றவைத்தவண்ணம் தீமிதியல் செய்வோருக்கு(என் தாத்தாவெல்லாம் இந்த வகைதான்)கற்பனையிலாவது இருக்கும் இந்த வகை அற்புதங்களை அடையும் வாய்ப்பு அறவே இல்லாமல் போகிறது..
வாழும் காலத்தில் மனிதசக்தியால் இத்தகையோர் செய்துவிட்டுப் போன மனிதசமுதாயத்திற்கான விஷயங்கள் மட்டுமே
மனித சக்தியை மட்டுமே நம்பி வாழ்வை நடத்தமுடியும் என்ற தன்னம்பிக்கைக்குப் பாடமாகிறது..

kmr.krishnan said...

///அது பழைய பிறவியில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்த விஷயமாகத்தான் இதனைப் பார்க்கமுடிகிறதே தவிர கர்மா, முன்வினைப்பயன், மோட்ஷம், முக்தி என்கிற கற்பித விஷயங்களுக்கு இட்டுச் செல்லவில்லை..இதுகுறித்தான விஷயங்கள் இந்த ஆராய்ச்சியில் சொல்லப்படவில்லை..///

உண்மைதான். விஞ்ஞான ஆய்வு ஒரு வரையறைக்குள்தான் இருக்க முடியும்.
ஐயன் ஸ்டீவன்சன் ஆய்வு முற்பிறப்பின் நினைவு உண்டு என்பதை மட்டுமே சொல்கிறது.அதன்மூலம் முற்பிறப்பு, (அடுத்த பிறவி?) உண்டு என்பது தெளிவாகிறது.

பிளாட்டோவின் எர் புராணத்தைப் படியுங்க‌ள்.நமது நம்பிக்கை போலவே அவர் அவர் அடுத்த பிறவியை அவர் அவர் செயல்பாடே நிர்ணயிக்கும் என்ற நிலைப்பாடு தெரிகிறது. எனவே இப்பிறப்பில் செய்யும் செயல்களுக்கேற்ற அடுத்த பிறவி என்பது சரியானதாகத்தான் தோன்றுகிறது. அனுமானந்தான். ஸ்டீவென்சன்ஆய்வு செய்வதற்கு முன்ன‌ர் அடுத்த பிறவி என்பதுமே அனுமானம் தானே!ஆய்வு முடிவுகள் நம்மை ஒரு நிலையில் கொண்டு நிறுத்துகின்றன.

இந்த பிறவித் தளையில் இருந்து நீங்க‌ வேண்டும் என்பதே மெய்ஞானம் சொல்கிறது.அதுவே முக்தி என்று தோன்றுகிறது. பிறப்பினைக் கொடுக்கும் அந்த மூலத்தில் சென்று எப்படி ஒடுங்குவது என்ற கேள்வியே பல தத்துவங்களை உருவாக்குகிறது.

திரு கோவி கண்ணனுக்கு வாத்தியார் பதில் சொல்லி வருவதால். நான்
ஒன்றும் சொல்லவில்லை.

minorwall said...

வடதுருவமும் இருக்கிறது..தென்துருவமும் இருக்கிறது..வடதுருவத்துக்கு அருகில் இருப்போருக்கு வடதுருவம் மட்டும்தான் தெரியும் தென்துருவம் தெரியாது..அதனால் தென்துருவம் என்று ஒன்று இல்லையென்று சொல்லிவிடமுடியாது..ஜப்பான் இருக்கிறது..ஜப்பானுக்கு நேர் 180 டிகிரியிலே பிரேசில் இருக்கிறது..ஜப்பான் என்ற ஒரு விஷயத்தை பிரேசில்நம்பவில்லைஎன்றால் அதற்காக ஜப்பானே இல்லையென்றாகிவிடுமா?

ஜப்பானும் பிரேசிலும் அதனதன் மனிதர்கள்..அவர்களின் நம்பிக்கைகள்

இரண்டையும் விட்டு வெளியில் வந்து உலகத்தையே விட்டு வெளியில் வந்து சாடலைட்டில் இருந்து பார்க்கும்போது மட்டுமே இது புலனாகும்..இறைநம்பிக்கை போன்ற விஷயங்களில் இது போன்ற இரண்டு நிலைப்பாடுகள் இருக்கின்றன..இரண்டுமே மனிதனின் நம்பிக்கைகள் மட்டுமே....

பல்லாயிரம் காலம்தொட்டு தொடர்ந்துவரும் இந்த இருவேறுபட்ட நம்பிக்கைகள் எதிர்காலத்திலும் தொடரும்..2000 ஆண்டுகள் கடந்துவிட்ட இப்போது இந்தப்பேச்சு அடிபடுகிறதென்றால் மனிடாராய்ப் பிறப்பெடுத்த கடவுள் எனப்படும் இயேசுவுக்கும் அன்றைக்கே இந்தப் பிரச்சினைதான் அவரது உயிரையே மாய்த்தது..

"குழந்தைகளை இயேசு தொடவேண்டும் என்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். இதைக் கண்ட சீடர் அவர்களை அதட்டினர். ஆனால் இயேசு அவர்களைத் தம்மிடம் வரழைத்து, 'சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்று சீடர்களிடம் கூறினார்." - லூக்கா 18:15-17.(நன்றி:த.விக்கிபீடியா)

///////இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார்////என்ற வரிகளை அடிக்கோடிட்டுக் காண்பிக்க விரும்புகிறேன்..

அந்த இயேசு பிரானே காஷ்மீருக்கு வந்து இந்து ஆன்மிகச் சித்தர்களிடம் ஆன்மிகம் பயின்றதாக ஒரு செய்தி தமிழ்விரும்பி வாயிலாக சமீபத்தில் எனக்குப் படிக்க வாய்ப்புகிடைத்தது..உண்மை அறிய விரும்பிய எனது ஆர்வத்தின் பொருட்டு தனது 14 -29 வயதுவரை ௦அவர் கிட்டத்தட்ட 15வருடகாலம் இமயமலைச் சாரலில் உலாவியதாக ரஷ்ய ஆய்வாளர்களால் ஆய்வுநூல்கள் வெளியிடப்பட்டன

என்ற கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு வலைப்பதிவு ௦௦http://pirapanjakkudil.blogspot.com/2010/12/blog-post ஒன்று நமது KMRK மூலம் அறிமுகப்படுத்தப்பாட்டு படித்தேன்..இயேசுவும் நபிகளும் கிட்டத்தட்ட சமீபத்தியவர்கள்..இயேசு நம்மூருக்கு வந்து படித்தார் எனும்போது இங்கே படிப்பதற்குரிய விஷயங்களை நாம் புறக்கணிக்கிறோமோ என்றே எண்ணமிடத் தோன்றுகிறது..கிறிஸ்து பிறப்பதற்கு 1500 வருடங்களுக்கும் முன்னதாக அறியப்படுகிற ரிக் வேத காலத்திய பாடங்களை இடைச்செருகல்களுக்காக நாம் அவ்வளவு எளிதில் புறந்தள்ளலாமா? என்பதுதான் கேள்வி..

Uma said...

வள்ளுவப் பெருந்தகை எழுதிய 38ஆவது அதிகாரத்தைப் பத்து முறை படியுங்கள் எல்லாம் பிடிபடும், முருங்கை மரத்தில் மீண்டும் மீண்டும் ஏறும் நிலை ஏற்படாது!:-))))))//

ஹா ஹா

SP.VR. SUBBAIYA said...

/////Blogger sekar said...
அய்யா வணக்கம்
வாத்தியாரும் ஜோதிடத்தின் மறுபிறவி என்று தான் நான் நினைக்கின்றேன்/////

இல்லை. தவறு. என் போதாத நேரம் பதிவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். நேரம் சரியாகும்போது எழுதுவதை நிறுத்திவிடுவேன்

SP.VR. SUBBAIYA said...

////////Blogger தமிழ் விரும்பி said...
////இதுபற்றி யோசித்தபோது மனதின் நினைவுகள் பழைய பிறவியின் நினைவுகளைச் சுமந்துகொண்டு மறக்காமல் இருந்த வகையிலே அது பழைய பிறவியில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்த விஷயமாகத்தான் இதனைப் பார்க்கமுடிகிறதே தவிர கர்மா,
முன்வினைப்பயன், மோட்ஷம், முக்தி என்கிற கற்பித விஷயங்களுக்கு இட்டுச் செல்லவில்லை..////
உடல் தான் அழிந்து விட்டதே பிறகு எது இந்த ஞாபகங்களை சுமந்துக் கொண்டு வந்தது?
அப்படி ஓன்று இருக்குமானால் அதன் அளவு, நிறம், குணம், அது எப்படி மறு படியும் ஒரு தாயின் கருவில் புகுந்தது? அதைப் புகுத்தியது யார்? இது மனிதனுக்கு மாத்திரமா? இல்லை உயிருள்ள அனைத்து ஜீவா ராசிகளுக்குமா?
என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தேட வேண்டும் அல்லவா! அப்படி இருக்க மோட்ஷம் = அதாவது எங்கிருந்து அந்த பொருள் (மீண்டும் மீண்டும் ஞாபகங்களை சுமந்து வந்ததோ அது) அங்கேயே சென்று சேர்வது என்று ரிஷிகள், மகான்கள் கூறுகிறார்கள் அவர்கள் ஞான ஒளி பெற்றவர்கள் என்பது உண்மை... அதெல்லாம் வேண்டாம் அறிவியல் நிரூபிக்கட்டும் என்றால்... அதுவும் நடக்கும் அதற்கு பல்லாயிரம் வருடங்கள் பிடிக்கலாம் பார்த்து இருந்து தெரிந்துக் கொள்ளலாம்... இல்லை ஒருவேளை அறிவியல் அது தொடர்பாக ஏதும் சொல்லி இருக்கிறது என்றுத் தெரிந்திருந்தால் தெரிந்தவர்கள் கூறலாம்... நானும் ஆவலாக இருக்கிறேன்.
விஞ்ஞானிகள் நாத்திக வாதிகள் அல்ல... அவர்களை நாத்திகக் கடவுள் என்று ஓன்று இருந்துக் கொண்டு அவைகள் உருவாக தனி வழிகளை ஏற்படுத்தவில்லை...
விஞ்ஞானம், மெஞ்ஞானம் இரண்டும் தான் இந்த பிரபஞ்சம்.... பிரபஞ்சம் கடவுளின் உடல் (எல்லாமும் தான் எதுவும் மிஞ்சாது.. அதனாலே தான் தூணிலும், துரும்பிலும் என்பது).... கடவுள் என்பவர் இந்தப் பிரபஞ்சத்தின் மனம்... அதில் இயக்கம் என்பது நாம் கூறும் சக்தி....
பௌதீகப்படி ஏற்றத் தாழ்வு இருந்தால் தான் அங்கே இயக்கம் இருக்கும்... காற்று, வெப்பம், நீர், ஆகாயம், என்று எதுவானாலும் சரி.. அப்படித்தான் வறுமை, ஏழ்மை, சந்தோசம், வருத்தம் என்று எல்லாமே இவைகளைப் புரிந்துக் கொள்ள இந்த பாசியைப் புரித்துக் கொள்ள தன அடிப்படை உயிர்ம மெய் எழுத்துக்கள், இலக்கணம் என்று இருப்பவைகளை கற்றுத் தேர்ந்தால் புரியும்... இல்லை என்றால் சிரமம் தான்...
இல்லை என்ற தர்க்க முடிவை கையில் வைத்துக் கொள்ளாமல் நண்பர் கோவி. கண்ணனார் அவர்களைப் போல ஆராய முயற்சிப்பதும் நன்றே அது சரியானப் பாதை... குதர்க்கமாக யோசித்தால் அல்லது விகண்டவாதம் பேசினால் அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்போடு சென்றாலும் சிரமம் தான்... மறு பிறவி எடுப்பது எது என்று நம்பும் அளவுக்கு வந்த பிறகு இனி அனைத்தும் சுலபமே.. என்பது எனது அபிப்ராயம்...
நன்றி,
ஆலாசியம் கோ.//////

ஆராய்ந்து அவர் சீக்கிரம் தெளியட்டும். நாகை நீலாம்பிகையைப் பிரார்த்தனை செய்வோம்!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger தமிழ் விரும்பி said...
ஏற்றத் தாழ்வு இல்லை என்றால் உலகம் இயங்காது... பௌதீகமும் அதை தான் கூறுகிறது... அப்படி ஒரு நிலை வரும் போது (அது தர்மமோ அதர்மமோ ஓன்று மட்டும் இருக்கும் போது) இந்த உலகம் இயங்காது அதாவது அது அழிவு என்றும் கூறலாம்... மறு படியும் ஊழி... படைப்பின் சுழற்சி ஆரம்பம்...
இங்கே நாம் எப்பொதும் பேசுவது... கடவுள் நல்லவர்தானே அவரே நல்லதை மட்டும் செய்யட்டுமே என்பது தான் உலகம் இயங்க வேண்டுமா இல்லையா? சரி அப்படி என்றாலும் அந்த ஏற்றத்தாழ்வுகளையும் நாமே செய்தும் கொள்கிறோம்.. நடக்கும் யாவற்றிற்கும் 99% நாமே காரணம்... நேராக யோசிப்போம் புரிபடும்.
நன்றி.///////

“அனுபவம் என்பது சீப்பு; தலை வழுக்கையான பிறகுதான் அது கிடைக்கும்” என்றார் கவியரசர். உலக ஞானமும் அப்படித்தான்!
இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? “பட்டினிக்குத் தீனி; கெட்டபின்னே ஞானி!” தான் செய்வது எல்லாம் ஊற்றிக் கொள்கிற நிலை வரும்போதுதான் மனிதன் யோசிக்க ஆரம்பிப்பான். அப்போதுதான் நம்மையும் மீறி இரு சக்தி இருக்கிறது என்பதை அவன் உணர்வான்!
அதுவரை நோ சான்ஸ்! டாலர் இருக்கிறது. சிட்டி பாங்க் கார்டு இருக்கிறது. சீவாஸ் ரீகல் இருக்கிறது. தந்தூரி சிக்கன் இருக்கிறது. வேறு என்ன வேண்டும்? (சக மனிதனுக்கு)

SP.VR. SUBBAIYA said...

//////Blogger iyer said...
///நீங்கள் சொல்லும் மறுபிறவி உண்மை என்றால் பிறவிகளை அறுக்க முடியும் என்கிற கூற்று பொய் ஆகிவிடும்,
ஏனென்றால் எந்தக் காரணத்திற்கு முதல்பிறப்பு அமைந்ததோ அதே காரணம் தான் பிறவி அறுத்த பிறகும் நிற்கும், பிறகு எப்படி பிறவிச் சுழல் இல்லாமல் இருக்கும் என்றும் முதலில் சொல்லுங்கள்.///
வணக்கம் கோவியாரே...
வருகைக்கு நன்றி...
அய்யரும் தன் பின்ஊட்டத்தில்
அந்த கருத்தைத் தானே சொல்லிஉள்ளார்
மறுபிறவி உண்டு என்பர்
முற்பிறவியை பற்றி சிந்திக்காதது .ஏன்?//////

சிந்திக்காமல் இருப்போமா?

“ஏழ்பிறப்பும் இனைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா!” என்ற கவிஞனின் வாக்கைக் கேட்டவுடனே எல்லாப் பிறப்பையுமே சிந்திக்கத் துவங்கினோம். ஒன்றும் பிடிபடவில்லை விசுவநாதன். வாங்கி வந்த வரம் கடுகளவு. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது? நீங்கள் யோசித்து ஏதாவது தெரிகிறதா என்று சொல்லுங்கள் சுவாமி!
---------------------------------------------------------------------------
///பாவ புண்ணியக் கணக்கில் நில் பாலன்ஸ் (Nil Balance) வரும்போது உங்களின் பிறவிச் சுழல் ‘கட்’டாகிவிடும்///
கணக்கு பார்ப்தும் ஆடிட் செய்வதும்
கண்ணுக்கு தெரியாத உண்மை என
மறுத்தாலும் மறைத்தாலும்
மூல கன்மம் என சித்தாந்த சாத்திரம்
சொல்வதை படித்து விட்டு
சொல்லவருவதை சொன்னால்
வாதமின்றி போகும் இந்த தலைப்பும்
வாதிற்கு அழைக்கும் இந்த இழப்பும்..///////

யாரப்பா அங்கே? சித்தாந்த சாத்திரம் ஏடு கிடைத்தால் எடுத்துக்கொண்டு வா
------------------------------------------------------------------------------------------------------------
///அப்படித்தான். வள்ளுவப் பெருந்தகை எழுதிய 38ஆவது அதிகாரத்தைப் பத்து முறை படியுங்கள் எல்லாம் பிடிபடும், முருங்கை மரத்தில் மீண்டும் மீண்டும் ஏறும் நிலை ஏற்படாது!:-))))))..///
நிலையாமையில் சொல்ல வந்ததென்ன
அறன் வலியுறுத்தி சொல்வததென்ன
வேதாளம் யாருடைய மறுபிறப்பு..
பாதளம் வரும் தேடினாலும் பதில் ஒன்று
மறுபிறப்பை கருப்புச் சட்டை காரரும்
மறுக்கின்றனர் ஆனால்
மறுபடியும் இதே பிறப்பு கிடைக்காதென
மறுபிறப்பில்லை என்பார்களோஅவர்கள்
மல்லுவேட்டிக்காரர் சொல்லும்
யாம் பெற்ற இன்பத்திற்கு
வரட்டும் இன்னொரு
வாதம் காத்திருக்கிறோம் ஆவலுடன்
இருக்கட்டும்...
இனிமையே பிறக்கட்டும்//////

நல்லது .வருகின்ற வாதம் பிடிவாதம் அல்லது பக்கவாதமாக இல்லாமல் இருந்தால் நல்லது. உயிர்கள் வணங்கும்!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger minorwall said...
////////கோவியாரின் கேள்விகளும் வாத்தியாரின் பதில்களும்////////
என்ற தலைப்பிலே புத்தகமா போட்டாலுமே பேச்சு பேச்சாத்தான் இருக்குமே தவிர ஒரு முடிவுக்கு வராது..
விளக்கமுடியாத விஷயங்களை,தான் நம்பி ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்ற கொள்கைகளை
நீயும் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சிறுபிள்ளைக்கு பெரியோர் சொல்லிக் கொடுக்கும் ரீதியிலான விஷயங்கள்
கருத்துத் திணிப்பு ஆகிப் போவதால் விளக்கம் கிடைக்காத அச்சிறுவனுக்கு என்ன மனநிலையை ஏற்படுத்துமோ
அதுதான் இப்படிப்பட்டஉரையாடலின் முடிவாக இருக்கும்..
'ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு' என்ற கணக்குக்குள்மூலம் பவுதிக விஷயங்களை மட்டுமே உள்ளடக்கமுடிகிறதே
தவிர கண்ணுக்குத் தெரிந்த அனுபவிக்கிற மனித உயிர் மாதிரி ஆழ்ந்த சிக்கலான விஷயங்களுக்குக் கூட இந்தக் கணக்குப் பொருந்தி வருவதில்லை..
ப்ரொடக்டிவிட்டி என்ற கான்செப்டிலேயே
'ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு அல்ல..அதைவிடக் கூட'
என்றாகும்போது கண்ணுக்குத் தெரியாத கடவுள் போன்ற விஷயங்களில் நம்புபவர்களுக்கு மட்டுமே அந்தக் கற்பனாவுருவம்
காட்சியளிக்கிறது..பலப்பல அற்புதங்கள் செய்கிறது..'
'கடவுள் இல்லை இல்லவே இல்லை..கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி..கடவுளை வணகுபவன் முட்டாள்'
எனக் கொள்கை முழக்கமிட்டு செருப்பணிந்து, சிகரெட் பற்றவைத்தவண்ணம் தீமிதியல் செய்வோருக்கு(என் தாத்தாவெல்லாம் இந்த வகைதான்)கற்பனையிலாவது இருக்கும் இந்த வகை அற்புதங்களை அடையும் வாய்ப்பு அறவே இல்லாமல் போகிறது..
வாழும் காலத்தில் மனிதசக்தியால் இத்தகையோர் செய்துவிட்டுப் போன மனிதசமுதாயத்திற்கான விஷயங்கள் மட்டுமே
மனித சக்தியை மட்டுமே நம்பி வாழ்வை நடத்தமுடியும் என்ற தன்னம்பிக்கைக்குப் பாடமாகிறது..///////

நமது நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும்போது என்ன செய்வது? அதைப் பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே மைனர்?
மறு கன்னத்தையும் காட்டலாமா?

SP.VR. SUBBAIYA said...

Blogger kmr.krishnan said...
///அது பழைய பிறவியில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்த விஷயமாகத்தான் இதனைப் பார்க்கமுடிகிறதே தவிர கர்மா, முன்வினைப்பயன், மோட்ஷம், முக்தி என்கிற கற்பித விஷயங்களுக்கு இட்டுச் செல்லவில்லை..இதுகுறித்தான விஷயங்கள் இந்த ஆராய்ச்சியில் சொல்லப்படவில்லை..///
உண்மைதான். விஞ்ஞான ஆய்வு ஒரு வரையறைக்குள்தான் இருக்க முடியும்.
ஐயன் ஸ்டீவன்சன் ஆய்வு முற்பிறப்பின் நினைவு உண்டு என்பதை மட்டுமே சொல்கிறது.அதன்மூலம் முற்பிறப்பு, (அடுத்த பிறவி?) உண்டு என்பது தெளிவாகிறது.
பிளாட்டோவின் எர் புராணத்தைப் படியுங்க‌ள்.நமது நம்பிக்கை போலவே அவர் அவர் அடுத்த பிறவியை அவர் அவர் செயல்பாடே நிர்ணயிக்கும் என்ற நிலைப்பாடு தெரிகிறது. எனவே இப்பிறப்பில் செய்யும் செயல்களுக்கேற்ற அடுத்த பிறவி என்பது சரியானதாகத்தான் தோன்றுகிறது. அனுமானந்தான். ஸ்டீவென்சன்ஆய்வு செய்வதற்கு முன்ன‌ர் அடுத்த பிறவி என்பதுமே அனுமானம் தானே!ஆய்வு முடிவுகள் நம்மை ஒரு நிலையில் கொண்டு நிறுத்துகின்றன.
இந்த பிறவித் தளையில் இருந்து நீங்க‌ வேண்டும் என்பதே மெய்ஞானம் சொல்கிறது.அதுவே முக்தி என்று தோன்றுகிறது. பிறப்பினைக் கொடுக்கும் அந்த மூலத்தில் சென்று எப்படி ஒடுங்குவது என்ற கேள்வியே பல தத்துவங்களை உருவாக்குகிறது.
திரு கோவி கண்ணனுக்கு வாத்தியார் பதில் சொல்லி வருவதால். நான்
ஒன்றும் சொல்லவில்லை.//////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

Blogger minorwall said...
வடதுருவமும் இருக்கிறது..தென்துருவமும் இருக்கிறது..வடதுருவத்துக்கு அருகில் இருப்போருக்கு வடதுருவம் மட்டும்தான் தெரியும் தென்துருவம் தெரியாது..அதனால் தென்துருவம் என்று ஒன்று இல்லையென்று சொல்லிவிடமுடியாது..ஜப்பான் இருக்கிறது..ஜப்பானுக்கு நேர் 180 டிகிரியிலே பிரேசில் இருக்கிறது..ஜப்பான் என்ற ஒரு விஷயத்தை பிரேசில்நம்பவில்லைஎன்றால் அதற்காக ஜப்பானே இல்லையென்றாகிவிடுமா?
ஜப்பானும் பிரேசிலும் அதனதன் மனிதர்கள்..அவர்களின் நம்பிக்கைகள்
இரண்டையும் விட்டு வெளியில் வந்து உலகத்தையே விட்டு வெளியில் வந்து சாடலைட்டில் இருந்து பார்க்கும்போது மட்டுமே இது புலனாகும்..இறைநம்பிக்கை போன்ற விஷயங்களில் இது போன்ற இரண்டு நிலைப்பாடுகள் இருக்கின்றன..இரண்டுமே மனிதனின் நம்பிக்கைகள் மட்டுமே....
பல்லாயிரம் காலம்தொட்டு தொடர்ந்துவரும் இந்த இருவேறுபட்ட நம்பிக்கைகள் எதிர்காலத்திலும் தொடரும்..2000 ஆண்டுகள் கடந்துவிட்ட இப்போது இந்தப்பேச்சு அடிபடுகிறதென்றால் மனிடாராய்ப் பிறப்பெடுத்த கடவுள் எனப்படும் இயேசுவுக்கும் அன்றைக்கே இந்தப் பிரச்சினைதான் அவரது உயிரையே மாய்த்தது..
"குழந்தைகளை இயேசு தொடவேண்டும் என்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். இதைக் கண்ட சீடர் அவர்களை அதட்டினர். ஆனால் இயேசு அவர்களைத் தம்மிடம் வரழைத்து, 'சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்று சீடர்களிடம் கூறினார்." - லூக்கா 18:15-17.(நன்றி:த.விக்கிபீடியா)
///////இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார்////என்ற வரிகளை அடிக்கோடிட்டுக் காண்பிக்க விரும்புகிறேன்..
அந்த இயேசு பிரானே காஷ்மீருக்கு வந்து இந்து ஆன்மிகச் சித்தர்களிடம் ஆன்மிகம் பயின்றதாக ஒரு செய்தி தமிழ்விரும்பி வாயிலாக சமீபத்தில் எனக்குப் படிக்க வாய்ப்புகிடைத்தது..உண்மை அறிய விரும்பிய எனது ஆர்வத்தின் பொருட்டு தனது 14 -29 வயதுவரை ௦அவர் கிட்டத்தட்ட 15வருடகாலம் இமயமலைச் சாரலில் உலாவியதாக ரஷ்ய ஆய்வாளர்களால் ஆய்வுநூல்கள் வெளியிடப்பட்டன
என்ற கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு வலைப்பதிவு ௦௦http://pirapanjakkudil.blogspot.com/2010/12/blog-post ஒன்று நமது KMRK மூலம் அறிமுகப்படுத்தப்பாட்டு படித்தேன்..இயேசுவும் நபிகளும் கிட்டத்தட்ட சமீபத்தியவர்கள்..இயேசு நம்மூருக்கு வந்து படித்தார் எனும்போது இங்கே படிப்பதற்குரிய விஷயங்களை நாம் புறக்கணிக்கிறோமோ என்றே எண்ணமிடத் தோன்றுகிறது..கிறிஸ்து பிறப்பதற்கு 1500 வருடங்களுக்கும் முன்னதாக அறியப்படுகிற ரிக் வேத காலத்திய பாடங்களை இடைச்செருகல்களுக்காக நாம் அவ்வளவு எளிதில் புறந்தள்ளலாமா? என்பதுதான் கேள்வி../////

உள்ளமார்ந்த பின்னூட்டத்திற்கு நன்றி மைனர்!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger Uma said...
வள்ளுவப் பெருந்தகை எழுதிய 38ஆவது அதிகாரத்தைப் பத்து முறை படியுங்கள் எல்லாம் பிடிபடும், முருங்கை மரத்தில் மீண்டும் மீண்டும் ஏறும் நிலை ஏற்படாது!:-))))))//////
ஹா ஹா//////

நீங்கள் படித்திருக்கிறீர்களா உமாஜி?

தேமொழி said...

மறுபிறவி உண்டா, இல்லையா?
உண்டென்றால் முற்பிறப்பில் நாம் என்னவாக இருந்தோம்?
________________________
ஆளுக்கொரு நேரமுண்டு அவுகவுக காலமுண்டு
ஆயிரம்தான் செஞ்சாக்கூட ஆகும்போது ஆகுமண்ணே
மூடனுக்கும் யோகம் வந்தா மூணுலகம் வணக்கம் போடும்
நம்பிக்கையை மனசுல வச்சு பின்னால பார்க்காத முன்னேறு... முன்னேறு...
(நாட்டுக்குள்ள)
பாடல்: கண்ணதாசன்
படம் : பில்லா

minorwall said...

////iyer said... மல்லுவேட்டிக்காரர் சொல்லும்
யாம் பெற்ற இன்பத்திற்கு

வரட்டும் இன்னொரு
வாதம் காத்திருக்கிறோம் ஆவலுடன்///////

ஜப்பானீஸ் சுமோ பார்த்துருக்கீங்களா?அது போகட்டும்..

'மூலகன்மம்' இன்னாது அது?

நிறைய படிக்குற ஆட்கள் கொஞ்சம் வெளியிலே சொன்னாத்தானே தெரியும்?

அப்புடி ரகசியமா இருந்தா சொல்லவேணாம்.

ConverZ stupidity said...

//SP.VR. SUBBAIYA said...

ஐம்படையல்ல - ஐந்தொகை!//

தவறை சுட்டி காட்டி திருத்தியமைக்கு நன்றி வாத்தியாரய்யா

iyer said...

//“ஏழ்பிறப்பும் இனைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா!” என்ற கவிஞனின் வாக்கைக் கேட்டவுடனே///

ஏழ்பிறப்பு என்பது
ஏழு பிறப்பா?

கூட்டி வரும் 14 பிறப்பா
பெருக்கி வரும் 49 பிறப்பா

வர்கம் தரும் 823543 பிறப்பா
வள்ளுவமும் இந்த

எழு பிறப்பு பற்றி சொல்லி சிந்தனையை
எழ வைத்துள்ளது.

///எல்லாப் பிறப்பையுமே சிந்திக்கத் துவங்கினோம். ஒன்றும் பிடிபடவில்லை விசுவநாதன். வாங்கி வந்த வரம் கடுகளவு. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது? நீங்கள் யோசித்து ஏதாவது தெரிகிறதா என்று சொல்லுங்கள் சுவாமி!///

தெளிவாக இருப்பதற்கு யோசித்து
தெளிய என்ன உள்ளது..

மற்றவர்களின் கேள்விபின்ஊட்டத்திற்கு
மறக்கலாமா பதில் சொல்ல


இதோ புறப்பட்டு விட்டோம்

iyer said...

///எனக்கும் முற்பிறவி / மறுபிறவியில் நம்பிக்கை இருக்கிறது. ..///

மறு பிறவி என்பது
மற்றவர்களைப் போல நம்பும் விஷயமல்ல

சுவையாக உள்ளது ஆப்பிள் என்றால்
சுவைத்து பார்த்தாலே போதுமே

விளக்கமும் வேண்டுமோ..
விவரமாக சொல்ல மற்ற

பின் ஊட்டத்திற்கு திருவாளர் KMRKயின்
பணியினை எடுத்துக் கொள்கிறேன்

படித்து பின் கேளுங்கள்
பதில் தர முடியுதான்னு பார்ப்போம்

Ganesh said...

I am strongly believed and respect GOD, Astrology and our culture. Everything True true true.

http://www.youtube.com/watch?v=ZGe4HEgtscQ&feature=related
Watch this video first 3 min,
In this video,

The boy FIX characters each toys, and played. Here that boy decided good and bad characters for each toy and assigned. actually all toys are good in that film.

That is as like our real world.
Assume that boy is god.
All toys are human. God play with human life or all living thing.

It is GOD GAME.
It also called as ‘திருவிளையாடல்கள்’
கடவுள் ஏன் இப்படி செய்கிறார் ?

//****//
Jagannath said...
உங்களுக்கு அமைந்ததை வைத்து நீங்கள் எப்படி வாழ்ந்து காட்டுகிறீர்கள் என்பது உங்கள் கையில்தான் உள்ளது. அதைப்
பொறுத்துதான் உங்கள் அடுத்த பிறவியும் அமையும். நீங்கள் எவ்வளவு மோசமான சூழலில் இருந்தாலும் சிறந்த சூழலில் இருந்தாலும் சரியான
முறையில் வாழ்கிறீர்
//****//
Which is correct life ?
This world is maya.

Today problem cannot have tomorrow. Yesterday problem was today not having. Another way today right activity is tomorrow wrong activity.

For example: 70 years before no Kashmir problem, today it is big problem. It may solve after 50 years.

Ancient Indian culture man may legally marry many girls that time that environment which is good. Now today it is bad.

War is important for Ancient king properties. Now today is wrong.
How you determine correct life? Right or wrong only determine society. And that also is not permanent.

ஒருவனுக்குக் கிடைக்கும் பலன்கள்தான் விதிக்கப்பட்டது. செயல்கள் என்பது மனிதனின் இச்சை சக்தியின் கட்டுப்பாட்டில் இருப்பது. அதாவது நீங்கள் செய்யும் செயல்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு.ஆனால் அதற்கு கிடைக்கும் நல்ல பலன்களோ தீய பலன்களோ உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இதைத்தான் கீதை கடமையைச் செய் பலனை எதிர்பாராதே

Ok. It is universal true.

செயல்கள் என்பது மனிதனின் இச்சை சக்தியின் கட்டுப்பாட்டில் இருப்பது.

So, why some birth occur sun+ketu , moon+ketu, venus +ragu in bad place? Why? that guy never follow good activity.

No control with human hand. Every control in god.

Don’t forgot : விதியின் வழி மதி
I think,
God like all good and bad activity.
Because, he is director.

//****//
SP.VR. SUBBAIYA said...
ஒரு செடியில் பூத்திருக்கும் மலர் மாலையாகி இறைவன் சந்நிதானத்திற்குப் போகலாம் அல்லது மங்கையின் கூந்தலுக்குப் போகலாம்
அல்லது மலர் வளையத்திற்குள் சென்று இறந்து கிடப்பவனின் பாதத்திற்குப் போகலாம் அல்லது அரைபட்டு வாசனைத்தரவியமாக மாறுவதற்கு ஒரு தொழிற்சாலைக்குப் போகலாம் அல்லது பறிக்கப்பாடாமலே செடியிலேயே காய்ந்து சருகாகலாம் அல்லது பறித்துக்கொண்டு போனவனால் விற்க முடியாமல் அழுகி சாக்கடைக்குப் போகலாம். அதற்குப் பூ ஒன்றும் செய்ய முடியாது. இங்கேதான் செல்வேன் என்று அடம் பிடிக்கமுடியாது. மனித வாழ்க்கையும் அப்படித்தான்.
//****//

Yes, that is 200% right Sir. That thing I also saying.
God Decided,
This flower will come to myself. and
This flower will goes to lady. And
This flower will goes to funeral. and
Ya, this one will becomes a perfume, that one stay with plant and destroyed.
Here,
Perfume flower cant goes to funeral area and Funeral flower cant goes to the Perfume manufacturing factory.

Why god decided that flower must be goes to Funeral Area? (CONSIDER THAT FLOWER IS FIRST BIRTH)

So,
Good activity man only do good things and he cant do bad activity. Automatically he/she goes heaven or get good next birth.


Everything decided by god.
Pre planned by god.
Pre programmed by god.

Please focus on only FIRST BIRTH
Again I asking,
கடவுள் , ஒருவன் முதல் பிறவியில் கெட்ட செயல் செய்ய விடாமல் கிரகங்களை அமைப்பை கொண்டு படைத்தது இருந்தால் அவன் மறுபிறவி இல்லாமல் முக்தி அடைய செய்யலாமே. ஏன் செய்யவில்லை?

God created universe, human and creature including Brahma and finally everything return with him. And again created and return so on.

Why this process doing? What is god objective? What god looking?
I am not atheist, in my point of view,
To approaching atheist way, to get or understand god very fast.

If anything wrongly is say, please correct me. I am simple analyst.

iyer said...

///உடல் தான் அழிந்து விட்டதே பிறகு எது இந்த ஞாபகங்களை சுமந்துக் கொண்டு வந்தது?
அப்படி ஓன்று இருக்குமானால் அதன் அளவு, நிறம், குணம், அது எப்படி மறு படியும் ஒரு தாயின் கருவில் புகுந்தது? அதைப் புகுத்தியது யார்? இது மனிதனுக்கு மாத்திரமா? இல்லை உயிருள்ள அனைத்து ஜீவா ராசிகளுக்குமா?///

முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது
உடல் வேறு உயிர் வேறு
உடல் சடப் பொருள்
உயில் அறிவுள்ள பொருள்

சடப்பொருள் தானாக இயங்காது
அறிவுள்ள பொருள்களுக்கு அறிவித்தால் போதும் அது அறிந்து கொள்ளும்

அப்படி அறிவு விளக்கம் பெற்ற உயிரே
ஆன்மா என்று அழைக்கப்படும்

உங்களுடைய மற்ற கேள்விகளான பதிலை சுருக்கமாக தருகிறோம்.

///அப்படி ஓன்று இருக்குமானால்
அதன் அளவு,நிறம், குணம், ///
அளவு நிறம் அற்றது. ஆனால் இந்த உயிருக்கு குணம் உண்டு அது பற்றி தனியாக சொல்கிறோம்

அது எப்படி மறு படியும் ஒரு தாயின் கருவில் புகுந்தது?
போற்றிப் பஃறொடை என்ற மெய்கண்ட சாத்திரமான சித்தாந்த்த வரிகளே இதற்கு பதிலாக அமையட்டும்
...காயக் கருக்குழியில் காத்திருந்தும் காமியத்துக் ஏயக் கை கால் முதலாம் எவ்உறுப்ழும் ஆசு அறவே செய்து....
(விளக்கம் தேவையில்லாத எளிமையான பாடல்)

//அதைப் புகுத்தியது யார்? ///

சின்னக் கவுண்டர் படத்தினை நினைவில் கொள்ளுங்கள்.. அதில் வரும் ஒரு காட்சி
செந்தில் கவுண்டமணியிடம் கேட்பார்

ஆத்துல ஏதுன்னே இவ்ளோ தண்ணி
மழை பெய்துள்ள

ஆறு எங்கன்னே போகுது..
கடலுக்கு போகுது

இந்தாங்க இதெ குடிங்க
இனிப்பா இருக்குள்ள

இந்த தண்ணி தானே
கடலுக்கு போகுது

அப்ப கடல் தண்ணி ஏன்னே
உப்பா இருக்கு

இது நகைச் சுவை மட்டுமல்ல
சிந்தித்தால் புரியும் உண்மை

இதுவே உங்கள் கேள்விக்கு பதில்..

கடல் விரிந்து உள்ளது .. கடல் ஆகாயத்தில் உள்ளது கடல் நீரில் உள்ள உப்பு ஆகாயத்தில் இருந்து பொழியும் மழையில் இல்லை

இந்த உவமை (இதனை தமிழாசிரியர்க ஒருபுடை உவமை என சொல்லுவார்கள்)

///இது மனிதனுக்கு மாத்திரமா?
இல்லை உயிருள்ள அனைத்து ஜீவா ராசிகளுக்குமா?///

எல்லா உயிர்களக்கும் பொருந்தும்
உயிர் என்பதற்கு விளக்கம் தனியாக எழுதுகிறோம். (பின் ஊட்டத்தின் நீளம் கருதி..

iyer said...

///மோட்ஷம் =
..... இல்லை ஒருவேளை அறிவியல் அது தொடர்பாக ஏதும் சொல்லி இருக்கிறது என்றுத் தெரிந்திருந்தால் தெரிந்தவர்கள் கூறலாம்... நானும் ஆவலாக இருக்கிறேன்....///

சொர்ககம் வேறு
மோட்சம் வேறு
முத்தி வேறு...

கடவுள் வேறு
தெய்வம் வேறு
இறைவன் வேறு
என்பது போலவே

தனித்தனியாக விளக்கம் சொன்னால்
பின்ஊட்டமாக இருக்காது
சொற்களின் கூட்டமாக இருக்கும்..
கேள்வி பதிலாக கேட்டால் தெளிவாக பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்

///விஞ்ஞானிகள் நாத்திக வாதிகள் அல்ல... அவர்களை நாத்திகக் கடவுள் என்று ஓன்று இருந்துக் கொண்டு அவைகள் உருவாக தனி வழிகளை ஏற்படுத்தவில்லை...///

நாத்திகவாதிகள் என்று எவருமே இல்லை என்பது தான் உண்மையான உண்மை

உண்மையான நாத்திகனும் பூரண ஆத்திகனும் ஒன்று என சொன்னால் மற்றவர்கள் வருத்தப்பட்டு அய்யரை குறை சொல்லலாம்..

ஆத்திகத்தில் இருக்கும் நம்மில் பலரும்
நாத்திகத்தில் இருக்கும் நம்மில் சிலரும்

முழுமையாக இல்லாமல் இருப்பதால் தான் அதிலும் பாதி இதிலும் பாதி என

குழப்பிக் கொண்டு குழம்பிக் கொண்டு இருக்கிறோம்.///கடவுள் என்பவர் இந்தப் பிரபஞ்சத்தின் மனம்... ///
உங்களின் இந்த கருத்து தவறு நண்பர் ஆலாசியம் அவர்களே...

///பௌதீகப்படி ஏற்றத் தாழ்வு இருந்தால் தான் அங்கே இயக்கம் இருக்கும்... காற்று, வெப்பம், நீர், ஆகாயம், என்று எதுவானாலும் சரி.. அப்படித்தான் வறுமை, ஏழ்மை, சந்தோசம், வருத்தம் என்று எல்லாமே இவைகளைப் புரிந்துக் கொள்ள இந்த பாசியைப் புரித்துக் கொள்ள தன அடிப்படை உயிர்ம மெய் எழுத்துக்கள், இலக்கணம் என்று இருப்பவைகளை கற்றுத் தேர்ந்தால் புரியும்... இல்லை என்றால் சிரமம் தான்.....///

ஏன் அப்படி ஒரு முடிவுக்கு வந்து விட்டீர் நண்பரே.. சிரமம் ஒன்றுமில்லை எளிமையானது.. கேள்வி பதிலாக கேட்டால் விளக்கம் சொல்ல தயாராக உள்ளோம்... அதற்கு வகுப்பறையும் அனுமதிக்கனுமே...


///இல்லை என்ற தர்க்க முடிவை கையில் வைத்துக் கொள்ளாமல் நண்பர் கோவி. கண்ணனார் அவர்களைப் போல ஆராய முயற்சிப்பதும் நன்றே அது சரியானப் பாதை... குதர்க்கமாக யோசித்தால் அல்லது விகண்டவாதம் பேசினால் அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்போடு சென்றாலும் சிரமம் தான்..///
ஆராய வேண்டிய தேவையில்லை..
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்கு சோதிக்க வேண்டா என்ற திருஞான சம்பந்தப் பெருமானின் திருவாக்கை நினைவில் கொண்டு

"அறிவினால் அறிந்த யாவும் அசத்து "
என்ற சித்ததாந்த சாத்திரம் சிவஞான சித்தியார் சொல்லும் வாக்கினையும் நினைவில் கொள்வோம்

///மறு பிறவி எடுப்பது எது என்று நம்பும் அளவுக்கு வந்த பிறகு இனி அனைத்தும் சுலபமே.. என்பது எனது அபிப்ராயம்.///

உங்கள் அபிப்ராயமாக இருக்கலாம்
நீங்கள் மாறும் வரை காத்திருக்கிறோம்

iyer said...

minorwall said...
////////கோவியாரின் கேள்விகளும் வாத்தியாரின் பதில்களும்////////
என்ற தலைப்பிலே புத்தகமா போட்டாலுமே பேச்சு பேச்சாத்தான் இருக்குமே தவிர ஒரு முடிவுக்கு வராது..

அந்த முடிவுக்கு
அவசரப்பட்டு வந்துவிட வேண்டாம்..

குட்டி பத்மினி என்ற சிறுமி
திருவருட்செல்வர் படத்தில் சொல்வது போல் இது பெரிய பிரச்சனை அல்ல
சிறிய பிரச்சனை தான்

///விளக்கமுடியாத விஷயங்களை,தான் நம்பி ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்ற கொள்கைகளை
நீயும் நம்பித்தான் ஆகவேண்டும் என்று.///

இப்படி விளக்கம் சொல்கிறோம் சரியாக உள்ளதா பாருங்கள்...

பொருள் உண்மையை நிருபணம் செய்ய
அளக்கும் கருவி ஒன்று வேண்டும் அதனை தமிழில் அளவை என்று சொல்வர் அப்படி நம் தமிழிடம் பல அளவைகள் உள்ளன அவற்றுள் சில...
காட்சி அளவை கருத்தல் அளவை உரை அளவை இன்மை அளவை உண்மை அளவை உவமை அளவை ஒழிவி அளவை வழக்கு அளவை இயல்வி அளவை பொருள் அளவை என சில..

இவைகளை வைத்து தான் தர்க்க அடிப்படையில் (logic) விளக்கம் சொல்ல முடியும்

தமிழும்
கடவுள் உண்டு
மறுபிறப்பு உண்டு
முற்பிறப்பும் உள்ளதே
சுவர்க்கம் உண்டு
நரகம் உண்டு
என மேற்கண்ட அளவை முறையில் எடுத்துச் சொல்ல முடியும்

Jagannath said...

குருவே. ஜாதகத்தில் ஒருவர் முற்பிறவியில் என்ன தொழில் செய்தார். என்ன நோக்கத்திற்காக திரும்ப பிறந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வழியுண்டா? ஒரு ஜோதிடர் என் ஜாதகத்தைப் பார்த்து விட்டு
நீங்கள் போன பிறவியில் ஒரு ஆசிரியராகவோ வேத விற்பன்னராகவோ இருந்திருக்க வாய்ப்புண்டு. குறைந்த
ஆயுளில் இயற்கை எய்தியதால் விட்டுப் போன கடமைகள், கர்ம வினைகளைக் கழிக்க பிறப்பெடுத்துள்ளீர்கள் என்றார்.

iyer said...

'
///ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு' என்ற கணக்குக்குள்மூலம் பவுதிக விஷயங்களை மட்டுமே உள்ளடக்கமுடிகிறதே ///

இரண்டை ஏன் இரண்டு என சொல்கிறோம் என எப்போதாவது நாம் பள்ளியில் படிக்கும் போது கேட்டிருக்கிறோமா.. ? நம் பிள்ளைகள் தான் கேட்டு இருக்கிறார்களா..?

இதற்கும் விளக்கம் உண்டு நண்பரே..
எடுத்துச் சொல்லத்தான் நேரமும் இல்லை ஊட்டத்தில் பதிலாக சொல்ல இடமும் இல்லை

//தவிர கண்ணுக்குத் தெரிந்த அனுபவிக்கிற மனித உயிர் மாதிரி ஆழ்ந்த சிக்கலான விஷயங்களுக்குக் கூட ///

இதில் சிக்கலே இல்லை நண்பரே
உயிருக்கு விளக்கம் சொல்கிறோம் கேளுங்கள்...

இந்த மூன்றும் எந்த பொருளுக்கு இருக்கிறதோ அதுவே உயிர்...

1) அறிவு
2) இச்சை அதாவது ஆசை
3) செயல் அதாவது action

பின் ஊட்டத்தின் நீளம் கருதி விளக்கம் போதுமென கருதுகிறோம்

///'கடவுள் இல்லை இல்லவே இல்லை..கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி..கடவுளை வணகுபவன் முட்டாள்'///

இந்த கருத்தில் என்ன தவறு என நினைக்கின்றீர்கள்.. அவர்களும் நாம் சொல்வதைத்தான் சொல்கிறார்கள்...
என்ன அப்படி பார்க்கிறீர்கள் இப்படி பொருள் கொண்டு பாருங்கள் மைனர்வாள்

///கடவுள் இல்லை இல்லவே இல்லை..///

கடவுள் வெளியே இல்லை.. நமக்குள்ளே இருக்கிறார்.. புத்தரும் when you see Buddha outside shoot him என்று ஒர்இடத்தில் சொல்லி இருப்பதனை படித்திருப்பீர்கள் தானே..


///கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி..///

கடவுளை கண்டு பிடிக்க முடியாதே
"இன்னதன்மை யென்று அறிவொன்னா எம்மானை"
என்ற தேவார பாடல் ஒன்று போதுமே இதனை விளக்க...

///கடவுளை வணகுபவன் முட்டாள்'///

அகம் பிரம்மாஸ்மி என்ற தத்துவ கோட்பாடு பற்றி வகுப்பின் மூத்த தோழர்கள் சொல்வார்கள் அய்யருக்கு இதில் மாறுபட்ட கருத்து என்பதினால் இதனை அவர்களிடம் விட்டுவிடுகிறோம்..

iyer said...

///உண்மைதான். விஞ்ஞான ஆய்வு ஒரு வரையறைக்குள்தான் இருக்க முடியும்.///


ஐயன் ஸ்டீவன்சனையும், பிளாட்டோவையும் எடுத்துப் பேசும் நாம்

மெய் கண்ட சாத்திரத்தினை
(மெய்-உண்மையை கண்ட-சொல்லும் சாத்திரத்தினை) எடுத்துக் கொள்ளாதது வருத்தமே என்றாலும்
திருவாளர் KMRK அவர்களின்

அனுமதியோடு சில பின் ஊட்டங்களுக்கு அய்யர் பதில் எழுதி இருக்கிறார்..

அவரும் ஏற்றுக் கொள்வாராக..
பதில் மாறுபட்டு இருந்தால் எண்ணப் பகிர்வு என்பதாலேயும் மற்றவர்கள் வேறு நிலையில் இருந்து சிந்திப்பதாலும்..

///எனவே இப்பிறப்பில் செய்யும் செயல்களுக்கேற்ற அடுத்த பிறவி என்பது சரியானதாகத்தான் தோன்றுகிறது. ///

இதற்கு பதிலாக சிவஞான சித்தியார் சொல்லும் இந்த பாடலை தருகிறோம்
விளக்கம் தேவையில்லாத எளிமையான பாடல்

பேறு இழவு இன்பமோடு
பிணி மூப்பி சாக்காடு என்னும்

ஆறும் முன் கருவுட்பட்டது அவ்விதி
அனுபவத்தால்

ஏறிடும் முன்பு செய்த கன்மம் இங்கு
இவற்றிக்கு ஏது

தேறு நீ இனிச் செய் கன்மம்
மேல் உடல் சேரும் என்றே

iyer said...

///minorwall said...
இறைநம்பிக்கை போன்ற விஷயங்களில் இது போன்ற இரண்டு நிலைப்பாடுகள் இருக்கின்றன..இரண்டுமே மனிதனின் நம்பிக்கைகள் மட்டுமே....///

கிட்ட வந்துட்டீங்க...
இன்னமும் கொஞ்ச தொலைவு தான் வாங்க..


///அடிபடுகிறதென்றால் மனிடாராய்ப் பிறப்பெடுத்த கடவுள் எனப்படும் ///

கடவுள் வேறு
தெய்வம் வேறு
இறைவன் வேறு
என ஒரு பின்ஊட்டத்தில் சொல்லியதை ஒரு முறை படித்துப் பாருங்கள்...

iyer said...

///Uma said...
வள்ளுவப் பெருந்தகை எழுதிய 38ஆவது அதிகாரத்தைப் பத்து முறை படியுங்கள் எல்லாம் பிடிபடும், முருங்கை மரத்தில் மீண்டும் மீண்டும் ஏறும் நிலை ஏற்படாது!:-))))))//

ஹா ஹா///

வாத்தியார் சிரிக்க சொல்லவில்லை
படிக்க சொல்கிறார் உமா ஜி

iyer said...

///“அனுபவம் என்பது சீப்பு; தலை வழுக்கையான பிறகுதான் அது கிடைக்கும்” என்றார் கவியரசர். உலக ஞானமும் அப்படித்தான்!///


மன்னிக்க
அய்யர் வேறு நிலையில் சிந்திக்கிறார்
பல்லில்லா சீப்பினைத் தான் பலர் வைத்துக் கொண்டு இருக்கிறார் என கருதுகிறோம்..

சீப்பில் பல் உள்ளதா என்பதனை பார்த்துக் கொண்டால் நன்று என எண்ணுகிறோம்..


//இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? “பட்டினிக்குத் தீனி; கெட்டபின்னே ஞானி!” ///

மன்னிக்க
கவிஞர் இப்படி சொல்லி இருப்பதாகவே
அய்யர் தமது ஆய்வு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்...

கெட்ட பின்னே ஞானி என்பதற்கு பொருள் ஆணவமலம் கெட்ட பின்பே அவர் ஞானியாக முடியும் என்றே பொருள்
technicalஆக சொல்ல வேண்டுமானால்
ஆணவமலம் கெட்டுவிட்டால் இருவினை ஒப்பு வந்து விடும்
இருவினை ஒப்பு வந்து விட்டால்
தற்போதம் ஓழிந்து விடும்
தற்போதம் ஒழிந்து விட்டால்
சத்தினிபாதம் பதிந்து விடும்
அப்போ அவர் ஞானி தானே
அதைத்தான் கவிஞர் அப்படி சுருக்கிச் சொல்லி உள்ளார்


...///அதுவரை நோ சான்ஸ்! டாலர் இருக்கிறது. சிட்டி பாங்க் கார்டு இருக்கிறது. சீவாஸ் ரீகல் இருக்கிறது. தந்தூரி சிக்கன் இருக்கிறது. வேறு என்ன வேண்டும்? (சக மனிதனுக்கு)///

இதை மட்டும் பட்டியல் போட்டா எப்படி வாத்தியார் அய்யா... அதனால் வரும் நோய்களையும் கேடுகளையும் பட்டியலிட்டு காட்டுங்களேன்...

iyer said...

///SP.VR. SUBBAIYA said...
சிந்திக்காமல் இருப்போமா?
“ஏழ்பிறப்பும் இனைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா!” என்ற கவிஞனின் வாக்கைக் கேட்டவுடனே எல்லாப் பிறப்பையுமே சிந்திக்கத் துவங்கினோம்///

ஏழ்பிறப்பும் என்பதற்கு ஏழு பிறப்பு என்று எண்ணுவதற்கு பதில் இப்படி படித்து பார்த்தோம்...
பிறப்பு என்பதே ஏழ்மையானது
இணைந்திருக்கும் சொந்தம் என்பது ஆணவமலத்துடன் சார்ந்து இருப்பது
இப்படித்தான் கவிஞர் பாடல்கள் சில வற்றைக் கொண்டு ஒரு ஆய்வு கட்டுரை பதிப்பித்துள்ளோம்.. இதனை சொல்ல வரும் இந்த சிவஞான சித்தியார் பாடலை தருகிறோம்...
விளக்கம் தேவையில்லாத அருமையான பாடல்...

வாழ்வு எனும் மையல் விட்டு
வறுமையாம் சிறுமை தப்பித்

தாழ்வு எனும் தன்மையோடும்
சைவமாம் சமயம் சாரும்

ஊழ் பெறல் அரிது: சால
உயர் சில ஞானத்தாலே

போழ் இளமதியினானைப்
போற்றுவார் அருள் பெற்றாரே

///நீங்கள் யோசித்து ஏதாவது தெரிகிறதா என்று சொல்லுங்கள் சுவாமி!///

சொல்லி இருக்கிறோம்
தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம்..

Uma said...

நீங்கள் படித்திருக்கிறீர்களா உமாஜி?//

அது.............வந்து............. சார், நிறைய குறள்கள் படித்திருந்தாலும் எந்த அதிகாரம் என்றெல்லாம் தெரியாது. நீங்கள்
அளித்திருந்த பதில் சுவாரசியமாக சட்டென்று சிரிப்பை வரவழைத்ததால் அப்படி எழுதினேன்.

iyer said...

///தேமொழி said...
மறுபிறவி உண்டா, இல்லையா?
உண்டென்றால் முற்பிறப்பில் நாம் என்னவாக இருந்தோம்?///

அப்படியானால் இல்லை என்ற கட்சிக்கு வாதட வந்து விட்டீர்களா சகோதரி...

முற்பிறவியில் என்னவாக இருந்தோம் என்பது பற்றி நமக்கு தெரியாது

மறுபிறவியில் என்னவாக இருக்கப் போகிறோம் என்பதும் புரியாது..

இருக்கும் இப்பிறவியில் வாழ்ந்து விட்டு போவோமே என ஜாலியான வகையை சேர்ந்தவர்களா நாம்...

வேடிக்கை மனிதர் போல வீழ்வேன் என நினைத்தாயா என்ற பாரதியின் வரிகளை எண்ணிக்கொண்டே...
அமைதி கொள்கிறோம்

iyer said...

///minorwall said...
////iyer said... மல்லுவேட்டிக்காரர் சொல்லும்
யாம் பெற்ற இன்பத்திற்கு

வரட்டும் இன்னொரு
வாதம் காத்திருக்கிறோம் ஆவலுடன்///////

'மூலகன்மம்' இன்னாது அது?
நிறைய படிக்குற ஆட்கள் கொஞ்சம் வெளியிலே சொன்னாத்தானே தெரியும்?
அப்புடி ரகசியமா இருந்தா சொல்லவேணாம்.///

ரகசியமெல்லாம் ஒன்ணுமில்லே மைனர் வாள்.. கொஞ்சம் பழைய தமிழில் இருக்கும் பொறுமையா படிச்ச புரிஞ்சுக்கலாம்..

எளிமையான பாடல்களை மட்டும் இங்கே தந்து இருக்கிறோம்.. இந்த பாடலையும் தருகிறோம்..

போற்றி பஃறொடையில் இருந்து
"...முட்டாமல் செய்வினைக்கம் முன் செய் வினைக்கும் செலவு பட்டோலை தீட்டும் படி போற்றி..."
திருவருட்பயனில் இருந்து..
இருள் இன்றேல் துன்பு ஏன் உயிர் இயல்பேல் போக்கம் பொருள் உண்டேல் ஒன்றாகப் போம்"

சிவப் பிரகாசத்தில் இருந்து

"அறிவினால் அறிந்த யாவும்
அசத்து ஆதல் அறிதி என்னும்

அறிவினால் அறிய ஒணாதேல்
ஆவது ஒன்று இன்மை தொன்மை

அறிவுதான் ஒன்றை முந்தி
அது அது ஆகக் காணும்

அறிவு காண் அசத்தும் மற்று அது அறிவினுக்கு அறிய ஒணாதே"

விளக்கம் தேவையில்லாத எளிமையான
பாடல்கள் மெய்கண்ட சித்தாந்த சாத்திரத்தில் இருந்து...


முதலில் கன்மத்தை பற்றியும்
பிறகு உயிர்களைப் பற்றியும் பிறகு
இறைவனைப் பற்றியும் தெரிந்து கொண்டால் (technical ஆக சொல்ல வேண்டுமானால்
1) பாச இயல்பு
2) பசு இயல்பு
3) பதி இயல்பு
... இவற்றின் ஒன்வொன்றிலும்
பொது இயல்பு சிறப்பு இயல்பு
.. இவற்றிக் குணம்
என ஒரு பெரிய பட்டியல் நீளும்..

இவைகளை தெரிந்து கொண்டால்
மூல கண்மம் என்பது தானாக விளங்கும்

கல்ஊரியில் படித்து வாங்கும் பட்டம் போல் அல்ல இது வேறுமாதிரியானது


கல் ஊரியில் தரும் பட்டம் நாம் படித்ததால் தரப்படுவது..

மெய்கண்ட சாத்திரம் தரும் பட்டம்
நம்மை படிப்பதால் தரப்படுவது..

தலை சுற்றாமல் இருக்கு சூடா ஒரு டீ தரச் சொல்லட்டுமா...

iyer said...

திருவாளர் KMRK அவர்களின் பதிவுக்கு
அய்யர் பின் ஊட்டமிடுவது சரியா என

யோசித்தோம்...கருத்துக்களை
யாசிக்கும் போது பகிர்ந்து கொள்வதில்

திருவாளர் KMRK அவர்களும்
திரும்பவும் ஊக்கமூட்டியமையால்

சில கருத்துக்களை எண்ணப் பகிர்வாக
சிந்தனைக்கு தெளித்து வைத்தோம்..

வாத்தியார் அவர்களும் அன்புடன் வகுப்பில் அனுமதிப்பார் என்றே

அநேகமாக பல மாறுபட்ட கருத்துக்களை அப்படியே பின் ஊட்டபதிலாக

எடுத்துக் கொண்டு அவர் பணியினை தொடுத்த கருத்துக்களுடன் பகிர்ந்து

நட்பு பாராட்டிக் கொண்டோம்..
நலமுடன் வளம் பெறவே..

சுட்டிக்காட்டும் பிழை இருக்குமானால் சுட்டுங்கள் அன்புடனே

எடுத்துச் சொன்னால்
எழுதிக்கொள்கிறோம் திருத்தத்திற்காக

ஆரோக்கியமான வாதத்திற்கு வந்தால்
ஆவலுடன் எதிர்கொள்கிறோம்

விதண்டாவதத்திற்கு வந்தாலும்
விடுவதாக இல்லை..என்ற

அன்பு வார்த்தைகளை சொல்லி
அன்பு வணக்கங்களுடன்

விடைபெறுகிறார் உங்கள்
விசு அய்யர்

minorwall said...

ஆஹா...
அய்யர் இன்னிக்கு வூடு கட்டி இறங்கிட்டரே..களத்தில்..
ஆனா செய்யுளா போட்டுத் தாக்கினா புரியணுமில்லே?
கொஞ்சம் புரிஞ்சு கொஞ்சம் புரியாமன்னு ஒரே சொதப்பலா இருக்கு போங்க..
முதலில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி பதில்சொல்ல/ விளக்கமளிக்க விழைந்திருக்கும் தங்கள் வரவு நல்வரவாகட்டும்..
எல்லோரும் தமிழிலே அளவளாவ இயலுமென்பதால் நேரமிருந்தால் வகுப்பறையில் ஆசிரியரின் அனுமதியுடன் guest lecture அடிக்கலாமே?
ரொம்ப ஆழமான டாபிக் லே ஏதேதோ சொல்கிறீர்..
////////கடவுள் வேறு
தெய்வம் வேறு
இறைவன் வேறு
என ஒரு பின்ஊட்டத்தில் சொல்லியதை ஒரு முறை படித்துப் பாருங்கள்...////
கடவுளே இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருந்தவர்களின் பிரதிநிதி..இன்னும் எந்த முடிவுக்கும் வராமல் எந்தக்கட்சிக்கும் சாயாமல்
இருக்கும் ஒரு ஆளை இப்படிக் காய்ச்சினால் என்னன்னு சொல்ல?எல்லாமே ஒண்ணுன்னுதான் இதுவரைக்கும் நினைசுக்கிட்டிருந்தோம்..
ஒண்ணுமே புரியலே..

minorwall said...

///minorwall said...
இறைநம்பிக்கை போன்ற விஷயங்களில் இது போன்ற இரண்டு நிலைப்பாடுகள் இருக்கின்றன..இரண்டுமே மனிதனின் நம்பிக்கைகள் மட்டுமே....///
கிட்ட வந்துட்டீங்க...
இன்னமும் கொஞ்ச தொலைவு தான் வாங்க..///////


நான் இங்கேதான் இருக்கேன்..எங்க கூப்புறீங்க..சொர்க்கத்துக்கா?நரகத்துக்கா?இல்லே மோட்சமா?முக்தியா?


இதெல்லாம் என்னன்னே நீங்க விளக்கி சொன்னாத்தான் தெரியும்..சொர்க்கம் நரகம் எதிரெதிர் இடங்கள்ன்னு தெரியும்..


மோட்ஷம்,முக்திஎல்லாம் வெவ்வேறன்னு சொல்ல்றீங்கோ..அது என்னாது?

தமிழ் விரும்பி said...

அருமை அத்தனையும் அருமை..
தாங்கள் சொன்னவைகள் யாவையும் சமீப காலமாக படித்து தெரிந்துக் கொண்டேன் இன்னும் அதைப் பற்றிப் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன் (நூலறிவு தான்) ஒருவேளை எத்தனை ஜென்மம் தொடருமோ.. சரி அதை விடுங்கள்...

.///கடவுள் என்பவர் இந்தப் பிரபஞ்சத்தின் மனம்... ///
உங்களின் இந்த கருத்து தவறு நண்பர் ஆலாசியம் அவர்களே...////

தவறு என்றால் சரி எது என்று தனிப்பதிவாக எழுதி வகுப்பறைக்கு அனுப்பி வையுங்களேன்..

////மறு பிறவி எடுப்பது எது என்று நம்பும் அளவுக்கு வந்த பிறகு இனி அனைத்தும் சுலபமே.. என்பது எனது அபிப்ராயம்.///

உங்கள் அபிப்ராயமாக இருக்கலாம்
நீங்கள் மாறும் வரை காத்திருக்கிறோம்//////

இதை நம்பினால் தான் நீங்கள் சொல்வதை பற்றி யோசிக்கவாது முடியும் என்பதற்காக சொல்லியது ஐயர் அவர்களே..

////புரித்துக் கொள்ள தான் அடிப்படை உயிர்ம மெய் எழுத்துக்கள், இலக்கணம் என்று இருப்பவைகளை கற்றுத் தேர்ந்தால் புரியும்... இல்லை என்றால் சிரமம் தான்.....//////

நீங்க சொன்ன யாவும் வாத்தியார் பாணியிலே சொன்னால் உயர்நிலைப் பாடம் அவைகளைப் புரிந்துக் கொள்ள இது தொடர்பான அடிப்படை விசயங்களை தெரிந்து அதை நம்பினால் தான் நீங்கள் கூறியது யாவும் புரியும்...அதற்கு தான் இதை எழுதி இருந்தேன் ஐயர் அவர்களே!

ஒவ்வொரு பின்னூட்டப் பதிலுக்கும் பல பக்க விளக்கிச் சொல்ல வேண்டியதிருக்கும் எனத் தோன்றுகிறது ஆக, அவைகளை முழுமையாக ஆரம்பியுங்கள் அனைவருக்கும் தெளிவு பிறக்கும் செய்யுங்கள் ஐயர் அவர்களே!

இவ்வளவு சிரத்தை எடுத்து எழுதியது எனக்கு பிரமிப்பைத் தருகிறது... மகிழ்ச்சி...தொடருங்கள் வாத்தியாரின் அனுமதியோடு...

நன்றி, வணக்கம்,
அன்புடன்,
ஆலாசியம்.கோ.

தேமொழி said...

////அப்படியானால் இல்லை என்ற கட்சிக்கு வாதட வந்து விட்டீர்களா சகோதரி...

முற்பிறவியில் என்னவாக இருந்தோம் என்பது பற்றி நமக்கு தெரியாது

மறுபிறவியில் என்னவாக இருக்கப் போகிறோம் என்பதும் புரியாது..

இருக்கும் இப்பிறவியில் வாழ்ந்து விட்டு போவோமே என ஜாலியான வகையை சேர்ந்தவர்களா நாம்...////


ஆமாம், மதிப்பிற்குரிய iyer ஐயா அவர்களே,
குறிப்பிட்ட அந்த இரு வரிகள்தான் பதிவின் தலைப்பும் பதிவின் முதல் வரியும்.
நீங்கள் பொறுமையுடன் பல விளக்கினாலும், முற்பிறவி/மறுபிறவி இவைகளை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் எந்த கருத்தினையும் உறுதியாக நம்ப முடியாத அறியாமை எனக்கு.

அதனால் நடக்கும் வாழ்வை சிறப்பாக நடத்த நினைத்து (அது ஒன்றுதானே ஆதாரத்துடன் உறுதியாக தெரிகிறது) "சுயேட்சையாக" நான் அறிந்த பாடலை குறிப்பிட்டு நடையை கட்டி விட்டேன். அவ்வளவே.

என்னுடைய முன்பிறவி, மறுபிறவி ஆர்வமெல்லாம் அவற்றைபற்றி திரைப்படங்கள் பார்த்து ரசிப்பதுடன் சரி. என் சிற்றறிவிற்கு எட்டாத பல இந்த உலகில் உள்ளது என்பது மட்டுமே உறுதியாக தெரியும்.

kmr.krishnan said...

சைவ சித்தாந்தம்,திருக்குரான், பைபிள் ஆகியவற்றில் நல்ல பயிற்சியுள்ளவர் ஐயர் என்று தோன்றுகிறது.

ஆய்வு கட்டுரை எல்லாம் எழுதியிருப்பார்போல.
என்ன ஏது எங்கே என்று சொன்னால்தானே தெரியும்.

பலமுறை நானும், மைனரும் ஆலாசியமும் விடுத்த கோரிக்கையை வைத்துவிட்டேன்.

பின்னூட்டத்திலேயே இருக்கிறார். முன்னூட்டததைத் தவிர்க்கிறார்.

ஒருமுறை சிவயசிவ ஜானகிராமன் சைவ சித்தாந்தக் கருத்தில் ஏதோ தவறாகச் சொன்னதாக பெரிய பெரிய மின்னஞ்சல் எல்லாம் அனுப்பிக் கலக்கினார்.

ஐயரைப் பற்றி தஞ்சாவூர் பெரியவரிடம் பேசிக் கொண்டு இருந்தபோது,"நிறையப் படித்து இருக்கிறார்.குறிப்பாக சைவ சித்தாந்தம்."என்றார்.

மீண்டும் ஐயரைக் கேட்டுக் கொள்கிறேன்.

புதுக் கவிதை பாணியைத் தவிர்த்து,எல்லோரும் படிக்கும் வண்ணம் எளிய தமிழில் உங்களுக்குத் தெரிந்தவற்றைத் தாருங்கள்.

வகுப்பறை வந்ததெல்லாம் கொள்ளும் மகராஜன் கப்பல்.

கோவி.கண்ணன் said...

//நீங்கள் சொல்லும் திரைப்படக் கணக்குகள் எல்லாம் நடைமுறையில் ஆயிரத்திற்கு ஒன்றுதான் இருக்கும். அதெல்லாம் விதிவிலக்குகள். அதை
உதாரணப் படுத்த முடியது. exemptions will not become examples! //

இதை நான் வன்மையாக மறுக்கிறேன், எக்ஸப்சன்கள் தான் உதாரணமாக வரும், 999 பேர் நல்லவனாக இருக்கும் தெருவுக்கு ஒருத்தன் கெட்டவன் ஆனாலும் காவல் நிலையம் தேவை என்பார்கள், 1000 பேர் பாட்டு எழுதினாலும் கவிஞர் கண்ணதாசன் எழுதுவது போல் ஆகுமா என்பீர்கள் இல்லையா ? பிரச்சனைகள் அனைத்துமே எக்சப்சன்களை முன்வைத்து தான் பேசப்படுகிறது, நீங்களே கூறுகிறீர்கள் லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் முற்பிறவி பற்றிய அனுபவ அறிவு கிட்டுகிறது, அதை வைத்து தன் கட்டுரையே எழுதப்பட்டுள்ளது.

நான் மற்றவர்களின் மறுமொழிகளைப் படிக்கவில்லை, தெரியாதவர்களிடம் நான் உரையாடுவதில்லை.

//‘எங்கும் இருக்கிறான் இறைவன். தூணிலும்
இருக்கிறான்.துரும்பிலும் இருக்கிறான் இறைவன்’ என்று கிராமத்துக்காரர்கள் சொல்வார்கள். //

கிராமத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் 'எங்கும் இருக்கிறான் இறைவன்' என்கிற நம்பிக்கை கிடையாது, அவர்களுக்கு முனியோ, சுடலைமாடனோ, பெரியாச்சியோ தெய்வம் என்பதில் மிகத் தெளிவாகத்தான் இருப்பார்கள், எல்லோரையும் குழப்பி அடிக்கும் அத்வைதிகள் தான் உணர்ந்தவர்களைப் போல் எங்கும் இருக்கிறான் இறைவன் என்று சொல்லுவார்கள், ஆனால் நடைமுறையில் மனிதருக்குள்ளேயே பேதம் பார்ப்பார்கள்.

//அருணரிகியார் எழுதிய பாடலை தினமும் ஒருமுறை படியுங்கள். பொருள் தெரிந்து படியுங்கள். மனம் தெளிவடையும்//

புல்லாகி பூண்டாகி என்று கூட ஒரு பாட்டு உண்டு, எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்று கூடச் சொல்லுவார்கள், ஒருவர் இன்னிக்கு குப்பைகளை கொட்டினால், 100 ஆண்டு சென்று அது சத்துள்ள எரு என்று எடுத்து வைத்து ஒரு சமூகம் கொண்டாடும், ஆக ஒருவர் சொல்லும் கருத்துகள் காலம் தாண்டி எடுத்துச் செல்லப்படும் போது புனித போர்வை சேர்ந்துள்ளது என்பதால் அந்தக் கருத்துகளில் நான் பெரிதாக ஈடுபாடு காட்டுவதில்லை, பழையன் கழிதல் என்பதில் ஆர்வமாகவே உள்ளேன். நான் கேட்பது நாய்கள் மறுபிறவி பற்றி தெரிந்தே நல்லது செய்து பணக்காரன் வீட்டில் நாயாகப் பிறக்கிறதா என்று தான் நான் கேட்டேன். அதுக்கு ஏதேனும் ஆதாரம் இருந்தால் கொடுங்கள். :)

//பாவ புண்ணியக் கணக்கில் நில் பாலன்ஸ் (Nil Balance) வரும்போது உங்களின் பிறவிச் சுழல் ‘கட்’ டாகிவிடும்//

இப்பவும் நான் நில் பேலன்ஸ் பற்றி கேட்கவே இல்லை, அது கர்மா தியரி, அது பற்றி எனக்கு கருத்து இல்லை, நான் கேட்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள், எனக்கு பல பிறவிகள் வாய்க்கப் பெற்று இருக்கிறது என்று நம்பும் போது, முதன் முதலில் நான் முதல் பிறவி எடுக்க எனக்கு எந்த கர்மா தூண்டுதலாக இருந்தது என்று தான் கேட்கிறேன், அதற்கு உங்களிடம் சரியான பதிலே இல்லை. எந்த ஒரு முற்பிறவி கர்ம பலனுமே இல்லாத நிலையில் நான் முதல் பிறவி எடுக்க கடவுள் சித்தம் தான் காரணம் என்று கூறுவீர்களென்றால் பிறவி அறுத்தவர்களுக்கு கடவுள் இனி பிறக்காதிருக்க ஏதெனும் உத்திரவாதம் கொடுத்து இருக்கிறாரா ?

பிறவி அறுத்தல் பற்றி எந்த ஒரு முயற்சியும் எடுக்காதவர்கள் கூட அது பற்றி புகழ்ந்து பேசுவது ஏன், அவை வாழ்க்கையின் குறிக்கோள் என்றால் அதை நோக்கி செல்வதை அவர்களுக்கு தடுப்பது எது ? இல்லை எனக்கும் எல்லாம் தெரியும் என்பதற்கு இப்படி புகழ்ச்சியாகப் பேசுகிறார்களா ?

அண்டார்டிக்காவில் அழகிய நீரூற்று உண்டு, அதில் குளித்த உடனே இளமை திரும்பும் என்று எவரோ சொல்லி வைக்க, எல்லோரும் அவை உண்மையாக இருக்குமோ என்று ஆராய எந்த முயற்சியும் எடுக்காமல், அது உண்மை போல் பரப்புகின்றனர் என்கிற ஒரு கருத்து இருந்தால், அவை தான் முற்பிறவி, மறுபிறப்பும் பிறவி அறுத்தல் ஆகியவற்றிற்கு பொருந்தும். :)

கோவி.கண்ணன் said...

//என்ற தலைப்பிலே புத்தகமா போட்டாலுமே பேச்சு பேச்சாத்தான் இருக்குமே தவிர ஒரு முடிவுக்கு வராது..//

அதுக்கு என்ன செய்வது கேள்விகளுக்கு ஏற்கத்தக்க பதில்கள் கொடுக்க முடியாதது தான் காரணம் :)

விடுங்க, இப்பத் தெளிவாகக் கேட்கிறேன், பிறவிப் பெருங்கடல் நீந்துவோர் நீந்தாரெல்லாம், எப்படி அந்தக் கடலுக்குள் விழுந்தார்கள், யார் தள்ளிவிட்டது ? அப்படியே நீந்து கரை சேர்ந்தாலும் பிறகு மீண்டும் கடலுக்குள்ளேயே தள்ளிவிடப் படமாட்டார்கள் என்பது என்ன உத்திரவாதம் ? என்பது தான் என் கேள்வி.

iyer said...

///நான் கேட்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள், எனக்கு பல பிறவிகள் வாய்க்கப் பெற்று இருக்கிறது என்று நம்பும் போது, முதன் முதலில் நான் முதல் பிறவி எடுக்க எனக்கு எந்த கர்மா தூண்டுதலாக இருந்தது என்று தான் கேட்கிறேன், அதற்கு உங்களிடம் சரியான பதிலே இல்லை. ///

அன்புள்ள கோவியாரே...
பதில் தெரிந்து கொள்வது தான் உங்கள் நோக்கம் என்றால் இதனை படியுங்கள்

அய்யர் சொல்லும் விளக்கம் உங்களக்கு ஏற்புடையதாக உள்ளதென்றால் ஒரு வரி எழுதி செல்லுங்கள்...

முதல் பிறவி பற்றி சொல்லும் முன்
முதலில் இதனை புரிந்து கொள்வோம்...

ஆனால் கிருத்துவ இஸ்லாமிய மதங்கள் உயிர்களை இறைவன் படைத்ததாக சொல்லுது போல் உயிர்களை இறைவன் படைப்பதில்லை..

இது தான் உண்மை..

உயிர்கள் என்றுமே உள்ளன,
உயிர்கள் மட்டுமல்ல
இறைவனும் என்றுமே உள்ளவன்
இறைவன் மட்டுமல்ல
ஆணவமலமும் என்றும் உள்ளது

உயிர்களை இறைவன் படைத்ததாக சொன்னால் ஏன் படைக்க வேண்டும்
என்றும் கேட்கத் தோன்றும் தானே..

எப்போதும் உள்ள இந்த மூன்று பொருள்கள்..

எப்போதும் உள்ள இவைகளின் இயல்புகளை தெரிந்து கொண்டால்
யார் யாரை தள்ளி விட்டனர் என்பது தெளிவாக புரியும்..

பதிவின் நீளம் கருதி சுருக்கமாக சொல்லிகிறோம் கேள்வி பதிலாக கேட்டால் விளக்கமாக சொல்ல தயாராக இருக்கிறோம்

இறைவனுக்கு எட்டு குணங்கள்
அவன் உயிர்களுக்குள் பேதம் பார்ப்பதில்லை (unbiased)

வகுப்பில் படிக்கும் 40 மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஒரு ஆசிரியர்(யை) எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரித்தான் பாடம் சொல்லித்தருகிறார் ஆனால் முதல் வகுப்பில் எடுப்பவர் 40பேரும் அல்லவே...

உயிர்களுக்கு மூன்று குணங்கள்
அவைகள் தானாக எதுவும் அறியாது
ஆனால்
எல்லாவற்றையும் தெரிந்து இருக்கும்
தெரிந்தவற்றை அறியும் போது அது புரியும்
புரிந்து விட்டால் அது தெளியும் அதையே அது உணரும் ,,

பொறுமையாக இன்னொரு முறை படியுங்கள் தெளிவு கிடைக்கும்..

"ஆட்பாலவருக்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான் புகில் அளவு இல்லை"
என்ற திருஞானசம்பந்தரின் பாடல் வரிகளை நினைவு கூர்கிறோம்..

மலங்கள்
இவைகள் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள ஆணவம் கன்மம் மாயை என மூன்றாக திரியும்
இதில் ஆணவத்திற்கு எட்டு குணம்
மாயைக்கு ஏழு குணம்
கன்மத்திற்கு குணம் ஆறு

இந்த technical வார்த்தைகள் குழுப்பத்திற்காக அல்ல.. நாம் புரிந்து கொள்வதற்காகவே..

T என்ற ஆங்கில எழுத்தை ஒரு படுக்கை கோடு ஒரு நிற்கும் கோடு என எழுதுகிறோம்..
ஆங்கிலம் தெரியாதவர் இதனை இரண்டு கோடு மேலும் கீழும் என்பர் ஆங்கிலம் தெரிந்தவர் இதனை "T" என்பர் அது போலத் தான் இதுவும்

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை எமக்கு தெரிந்த மொழியில் சொல்ல முயற்சி செய்துள்ளோம்

முதல் முதலில் என்பதற்கு பதில் அடுத்து எழுதி உள்ளோம் படித்து கருத்து சொல்லுங்களேன்...

iyer said...

முதன் முதலில்
பிறவிக்கு வரும் முன்னர்
எல்லா உயிர்களுக்கும் இறைவன் ஒரே மாதிரித்தான் உணர்த்துகின்றார்
உணர்த்தியதை உணர்த்தியபோது உணர்த்தியவாறே உணர்ந்து கெள்ளும் அறிவு உயிர்களுக்கே இயல்பாக கிடையாது என்பது மட்டுமல்ல,,

இறைவன் மற்றவர்களில் விருப்பங்களுக்கு தடையாக இருப்பதில்லை..

He will not interfere into the free wills
அந்த உயிர்களின் விருப்பமே பிறப்பு..
பிறப்பதால் ஏற்ப்பட்ட விருப்பம்

பொருள் மீது நினைப்பு கொள்ள வைக்கிறது

பொருள் நினைப்பால் பற்று வருகிறது பற்று ஆசை ஆகிறது
ஆசை சினமாகிறது
சினத்தால் மனக்குழப்பம் வருகிறது
குழப்பத்தால் நினைவின்மை வருகிறது
நினைவின்மையால் புத்தி நாசமாகிறது
அதனால் அவன் அழிவை நோக்கி
பயணப்படுகிறான் யாரும்
தள்ளி விடுவதில்லை.. அவனே
தவறி விழுகிறான்..

வெள்ளப்பாகில் ஒட்டிக்கொண்ட ஈசலைப்போல வெளியே வரமுடியாமல்
புலியின் வாலை பிடித்தவர் எப்படி மீண்டு வர முயல்வாரோ அது போல..
முடிவு எடுத்த பின் முழிக்கின்றனர்..

கடவுள் தடுக்கக் கூடாதா என்ற கேள்விக்கு இடமில்லை.. பதில் ஏற்கனவே சொல்லி உள்ளது..

அடுத்தவர் விருப்பத்தில் கடவுள் தலையிடுவதில்லை...

எனவே
///முதல் பிறவி எடுக்க கடவுள் சித்தம் தான் காரணம் என்று கூறுவீர்களென்றால்///
என்று நாங்கள் சொல்ல வரவில்லை..
அப்படி சொல்லாத கருத்திற்கு எப்படி பதில் சொல்ல முடியும்..நண்பர் கோவியாரே...


///பிறவி அறுத்தவர்களுக்கு கடவுள் இனி பிறக்காதிருக்க ஏதெனும் உத்திரவாதம் கொடுத்து இருக்கிறாரா ? ///

மீண்டும் சொல்கிறோம் ...
உத்திரவாதம் யாரும் தருவதில்லை..
விருப்பம் உயிர்களுடையதே


ஒரு சிறு கதையை சொல்கிறோம் கேட்டுப்பாருங்கள்..

minorwall said...

கோவி.கண்ணன் said...
//என்ற தலைப்பிலே புத்தகமா போட்டாலுமே பேச்சு பேச்சாத்தான் இருக்குமே தவிர ஒரு முடிவுக்கு வராது..//

அதுக்கு என்ன செய்வது கேள்விகளுக்கு ஏற்கத்தக்க பதில்கள் கொடுக்க முடியாதது தான் காரணம் :)

விடுங்க, இப்பத் தெளிவாகக் கேட்கிறேன், பிறவிப் பெருங்கடல் நீந்துவோர் நீந்தாரெல்லாம், எப்படி அந்தக் கடலுக்குள் விழுந்தார்கள், யார் தள்ளிவிட்டது ? அப்படியே நீந்து கரை சேர்ந்தாலும் பிறகு மீண்டும் கடலுக்குள்ளேயே தள்ளிவிடப் படமாட்டார்கள் என்பது என்ன உத்திரவாதம் ? என்பது தான் என் கேள்வி.//////

உங்கள் கேள்விக்குப் பதிலாக கோர்வையான புராணக்கதைகள் பல இருக்கின்றன..

மேலுலகத்திலும் வாழ்க்கைமுறை code of ethics என்று இருந்து அதிலே ஒரு சம்பவமாக ரிஷிகளின் மனைவியின் மாராப்புச் சேலை விலகியதை லூக்வுட்டபாவத்துக்காக என்று

பிறவிப் பெருங்கடலுக்குள் மீண்டும் தள்ளப்பட்ட கதைகள் படித்திருக்கிறேன்..

அதனால் உத்திரவாதம் என்பது அங்கும் நடத்தை மற்றும் ஆதிக்க சக்திகள் அடிப்படையில்தான்..

எனவே இப்படி உண்மையில் மேலுலகம் என்று இருந்தால் அங்கும் discrimination உண்டு..மரபுமீரல்கள் உண்டு..கடவுளர்கள் மட்டும் தோன்றிய வகையிலே புகுந்து விளையாடலாம் என்றெல்லாம் 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்ற ரீதியிலான அமைப்புக்கள் அங்கும் உண்டு..இதையெல்லாம் உண்மையா என்ற கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியாது..நம்புபவர்கள் உண்மை என்கிறார்கள்..பொய் என்போர் பொய் என்கிறார்கள்..இப்படியே..காலம் கடக்கிறது..அவ்வளவுதான்..

minorwall said...

/////////கோவி.கண்ணன் said...
நான் மற்றவர்களின் மறுமொழிகளைப் படிக்கவில்லை, தெரியாதவர்களிடம் நான் உரையாடுவதில்லை.///////

நல்ல விஷயம்..எனக்கும் பிடித்த விஷயம்..இதனால்தான் இந்தவலைப்பூ தவிர அடுத்தவர் பக்கங்களில் அதிகம் தலையிடுவதில்லை..

நல்லாத் தெரிந்த ஆட்கள் கூட சமயத்தில் எகடுதகடாக வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்டு விடுகிறார்கள்..தெரியாதவர்களிடம் உரையாடும் அவசியம் இல்லைதான்..நேற்றுகூட தெரிந்த சக வாசகர் ஒருவர் இதே பதிவில் உரையாடலில் வந்துவிழும் வசனங்களூடே ஏதோ கருத்து யாசகம் கேட்கப்பட்டதற்காகப் பதில் சொன்னேன் என்கிற பதிலைச் சொல்லியிருந்தார்..

மனிதர்களில் சிறுமை அங்காங்கே இருக்கிறது..இதை அவரே ஆணவமலம் என்றும் சொல்லியிருக்கிறார்..

அதனிலிருந்து விடுபடமுடியாமல்தான் பிறவியிலே நீந்திக்கொண்டிருக்கிறார்.

சகமனிதர்களின் நிலை இதுதான்..

'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்ற முதுமொழியினைக் கருத்தில் கொண்டு இந்தவிஷயத்தை

இத்துடன் முடிக்கிறேன்..

iyer said...

கஷ்டப்பட்டு வண்டி இழுத்து சம்பாதிக்கும் ஒருவன் மாலையில் குடிக்கும் போது (அந்த கடைக்கு) இனிமேல் குடிக்க கூடாது வீட்டில் மனைவி மக்கள் இருப்பார்கள் என அறிந்த அவன் மறுநாள் அந்த கடைப்பக்கம் போகாமலிருப்பானா...?

இப்படித்தான் உயிர்களின் இயல்பும்..
பிறவி அறுக்க வேண்டுமென நினைக்கும் அவன் அதற்கு மாறான செயல்களையே செய்வான்
இது தான் இன்றைய மனவியல் அறிவியல் சொல்லும் உண்மை..

எளிமையாக சொல்ல நம்
இடப்பக்க செயல்பாடுகள்
வலப்பக்க மூளையிலும்
வலப்பக்க செய்லபாடுகள்
இடப்பக்க மூளையிலும்
என்பது மனவியல் அறிவியல் சொல்லும் உண்மை தானே..கோவியாரே..///பிறவி அறுத்தல் பற்றி எந்த ஒரு முயற்சியும் எடுக்காதவர்கள் கூட அது பற்றி புகழ்ந்து பேசுவது ஏன், ///

இக்கரைக்கு அக்கரை பச்சசை கதை தான் வேறு என்னத்தை சொல்ல

///அவை வாழ்க்கையின் குறிக்கோள் என்றால் அதை நோக்கி செல்வதை அவர்களுக்கு தடுப்பது எது ?///

அவர்களிடம் உள்ள ஆணவ மலம் தான் வேறு என்ன.. இது மனிதர்களிடமட்டுமல்ல எல்லா உயிர்களிடமும் உள்ளது (விலங்கு மற்றும் தாவரங்களிடமும் உள்ளது)

///இல்லை எனக்கும் எல்லாம் தெரியும் என்பதற்கு இப்படி புகழ்ச்சியாகப் பேசுகிறார்களா ?///

இதுவும் ஆணவ மல வெளிப்பாடு தான்
ஆணவமலத்தின் குணங்களை அடுத்த ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துகிறோம்
அதிலிருந்தே நமக்கு தெரியும் நமக்கு எத்தனை சதவீதம் ஆணவம் இருக்கிறது என்று..
(அன்றாட வாழ்க்கையில் பேசும் ஆணவம் போல இருக்கும் இந்த ஆணவம் அது மட்டுமே அல்ல)


///அண்டார்டிக்காவில் அழகிய நீரூற்று உண்டு, அதில் குளித்த உடனே இளமை திரும்பும் என்று எவரோ சொல்லி வைக்க, எல்லோரும் அவை உண்மையாக இருக்குமோ என்று ஆராய எந்த முயற்சியும் எடுக்காமல், அது உண்மை போல் பரப்புகின்றனர் என்கிற ஒரு கருத்து இருந்தால், அவை தான் முற்பிறவி, மறுபிறப்பும் பிறவி அறுத்தல் ஆகியவற்றிற்கு பொருந்தும். :)////

உங்கள் கருத்து தவறு நண்பர் கோவியாரே..

இருப்பது என்பதை இல்லாத நிலைக்கு யாரும் மாற்ற முடியாது
இல்லாத ஒன்றை இருப்பின் நிலைக்கு கொண்டுவர முடியாது

Energy can neither be created nor be destroyed
Energy Change ஆகிக்கொண்டே இருக்கும்
ஆனால் அழியாது


இப்படி சொல்கிறோம் சரியாக இருக்கிறதா பாருங்கள்

மணம் நிச்சயமானது
மரணம் நிச்சயமானது தீர்ப்பு நாள் என்று ஒன்று வரும் அதற்குள் உங்களை சரி செய்து கொள்ளுங்கள் காரணம் மரணம் வெல்ல முடியாதது

மரணம் என்பதே கற்பனை
பஞ்ச பூதம் சேர்க்கைதானே உடல்
80 சதவீதம் தண்ணீர் தான் இருக்கு
அக்னி இருக்கு அது தான் பசிக்கு காரணம்98.4 இருக்குன்னு தெரியுமே
காற்கு இருக்கு
மண் இருக்கு (நம் மண்டையில் உள்ளதை வைத்து proof பண்ண வேண்டாமே )
வெளி இருக்கு (இரண்டு காதுக்குள்ளே இருக்கு நாசிக்குள்ளே இருக்கு.. இன்னமும்)
இறந்து விட்டால் என்ன ஆகிறது
நெருப்பு நெருப்புடன்
காற்று காற்றுடன்
ஆகாயம் ஆகாயத்துடன்
தண்ணி தண்ணீருடன் என

5 பூதங்களில் இருந்து வந்த உடல்
5 பூதங்களின்ல் வளர்க்கப்பட்டு
மீண்டும் 5 பூதங்களில் கலந்து விடுகிறது

இதைத்தானே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்; பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் என சொல்கின்றனர்

உரு மாற்றம் அடையும் உடலே மறு பிறவி உயிர் அப்படியே இருக்கும் பிறவிதோறும் ஏற்பட்ட அனுபவத்தால் அது அறிவு விளக்கம் பெறும்
அறிவு விளக்கம் பெற்ற உடன் அது உடல் எடுப்பதை தாமே நிறுத்திவிடும்
அது வே மறுபிறவி அற்ற நிலை..
(படிக்கும் மாணவர்கள் மேலும் படித்து படிப்பை தொடர்வது போல...

நமக்கு சொந்தமில்லாத ரிசர்வங்கியின் பணத்தை நாம் உழைப்பால் அல்லது வேறு முயற்சியால் வைத்துக் கொண்டிருப்பதைப்போல
என சில உதாரணங்களை கொண்டு சிந்தித்துப் பாருங்கள்)


இது புரியவில்லை அல்லது மாற்றுக் கருத்து இருந்தால் சொல்லுங்கள் விளக்கம் சொல்ல தயாராக இருக்கிறோம்..

iyer said...

///பிறவிப் பெருங்கடல் நீந்துவோர் நீந்தாரெல்லாம், எப்படி அந்தக் கடலுக்குள் விழுந்தார்கள், யார் தள்ளிவிட்டது ? ///

தாமே விரும்பி விழுந்தவர்கள்தாம் அவர்கள்
யாரும் யாரையும் தள்ளி விடவில்லை என்பதே உண்மை

///அப்படியே நீந்து கரை சேர்ந்தாலும் பிறகு மீண்டும் கடலுக்குள்ளேயே தள்ளிவிடப் படமாட்டார்கள் என்பது என்ன உத்திரவாதம் ? ///

விழுந்த எழுந்தவன் அனுபவம் மீண்டும் விழ விரும்பமாட்டான் என்பதே உண்மை மீண்டும் அவர் விரும்பினால் அவரும் வரக்கூடும் ஞானியாக சித்தராக இன்னமும் உங்கள் பாணியில் அவராக...


///என்பது தான் என் கேள்வி.///
கேள்விக்கு பதில் கிடைத்ததா? அறிவுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா..

iyer said...

./// kmr.krishnan said...
சைவ சித்தாந்தம்,திருக்குரான், பைபிள் ஆகியவற்றில் நல்ல பயிற்சியுள்ளவர் ஐயர் என்று தோன்றுகிறது.

ஆய்வு கட்டுரை எல்லாம் எழுதியிருப்பார்போல.
என்ன ஏது எங்கே என்று சொன்னால்தானே தெரியும்.

பலமுறை நானும், மைனரும் ஆலாசியமும் விடுத்த கோரிக்கையை வைத்துவிட்டேன்.

பின்னூட்டத்திலேயே இருக்கிறார். முன்னூட்டததைத் தவிர்க்கிறார்.///

தவறாமால் வரும்
தங்களின் பாராட்டிற்கு நன்றிகள்..

உயிரை பறிக்கும் நெஞ்சுவலிக்கு
உள்ளங்கையில் வைக்கும்

ஒரு அங்குல மாத்திரை போதுமே
ஒடல் ஆரோக்கியத்திற்கு என

ஒரு சொல் சொல்லுவோமே..
ஒரு அண்டா சோறு வேணாம் தானே

உண்டு மகிழ்ந்தவரை
ஊட்டி மகிழ்விப்போம்///புதுக் கவிதை பாணியைத் தவிர்த்து,எல்லோரும் படிக்கும் வண்ணம் எளிய தமிழில் உங்களுக்குத் தெரிந்தவற்றைத் தாருங்கள்.///

கடமையாற்ற தரும்
கருத்திற்கு நன்றிகள்..

கல்லில் வேண்டாத பகுதி நீங்கினால்
கண்கவரும் சிற்பம் வரும் அது போல்

சொல்லில் தேவையில்லாததை நீக்கி
சொல்லாத கவிதை வரும் என

உரைநடையை எடுத்து அதற்கு
உருப்பேற்றி வடிக்கிறோம்..


"பசி எடுத்தபோதெல்லாம் புதுக்கவிதை புட்டிப்பால் குடிக்கும் குழந்தை நான்" என

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒரு கவியரங்கில்
முன்பு சொன்னதை நினைவு கூர்ந்து

இந்த இடைக்காட்டு சித்தர் பாடலினை
இங்கு பாரட்டியமைக்கு

பரிசாக தருகிறோம்

முத்திக்கு வித்தானோன் பசுவே ‘
மூலப் பொருளானோன்
சத்திக்கு உறவானோன் பசுவே
தன்னைத் துதிப்பாயே

ஐயன் திருபாதம் பசுவே
அன்புற்று நீ அணிந்தால்
வெய்ய வினைகள் எல்லாம் பசுவே
விட்டு ஓடும் கண்டாயே

iyer said...

///தமிழ் விரும்பி said...
அருமை அத்தனையும் அருமை..///

/// minorwall said...
ஆஹா...
அய்யர் இன்னிக்கு வூடு கட்டி இறங்கிட்டரே..
வகுப்பறையில் ஆசிரியரின் அனுமதியுடன் guest lecture அடிக்கலாமே?///

///தேமொழி said...
ஆமாம்,
நீங்கள் பொறுமையுடன் பல விளக்கினாலும், முற்பிறவி/மறுபிறவி இவைகளை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் எந்த கருத்தினையும் உறுதியாக நம்ப முடியாத அறியாமை எனக்கு. ///

உங்கள் கருத்து மற்றும் பாராட்டுக்களுக்கு நன்றி..

அதனை அந்த லால்குடியாருக்கு சமர்ப்பிக்கின்றோம்..

இப்படி எழுத வைத்தவர் அவர் தானே
இருப்பினும் உங்களுக்கு அன்பு பரிசாக

இந்த பாடலினை சுழல விடுகிறோம்

"ஏசுநாதர் பேசினார் அவர் என்ன பேசுவார் "

எனத் தொடங்கும் அந்த பாடல் வரிகளில் இருந்து..

ஒரு வழியை மறு வழியால் மறைப்பது விதியாகும்

அதை உணர்த்துவதே நான் இருக்கும் சிலுவையின் அடையாளம்

சிலுவையிலே மனது வைத்தால்
சிந்தை தெளிவாகும்

சிந்தை யிலே அமைதி வந்தால்
வந்தது சுகமாகும்

iyer said...

///minorwall said...
கோவி.கண்ணன் said... மாராப்புச் சேலை விலகியதை லூக்வுட்டபாவத்துக்காக என்று
பிறவிப் பெருங்கடலுக்குள் மீண்டும் தள்ளப்பட்ட கதைகள் படித்திருக்கிறேன்.. ///

கதைகள் எல்லாம் உண்மையல்ல..
ஒரு முறை ரயில் விபத்து என்றால் ரயில் பயணத்தையே நாம் தவிர்ப்பதில்லை..

படிக்கும் பல கதைகள் உண்மையல்லவே..
கரு வேண்டுமானால் உண்மையாகலாம்
உரு வேறுதானே...

iyer said...

/// minorwall said...
நல்லாத் தெரிந்த ஆட்கள் கூட சமயத்தில் எகடுதகடாக வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்டு விடுகிறார்கள்..///

இந்த குறளினை தங்களுக்கு பதிலாக தருகிறோம்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு.


///பதிவில் உரையாடலில் வந்துவிழும் வசனங்களூடே ஏதோ கருத்து யாசகம் கேட்கப்பட்டதற்காகப் பதில் சொன்னேன் என்கிற பதிலைச் சொல்லியிருந்தார்..///

தெரிந்தோ தெரியாமலோ நாம் யாசித்துக் கொண்டுதான் சுவாசிக்கிறோம் என்பதே உண்மை.
சில சமயங்களில் உண்மை கசக்கும்..
அது மனத்திலிருந்து கசியும் போது

minorwall said...

////iyer said...
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு.////

கண்டவர் விளக்கம் கண்டவர் விளக்கமாகத்தாநிருக்கும்..
விண்டவர் வள்ளுவர் வாய்மொழி திறந்தாலொழிய..

minorwall said...

///iyer said...
தெரிந்தோ தெரியாமலோ நாம் யாசித்துக் கொண்டுதான் சுவாசிக்கிறோம் என்பதே உண்மை.
சில சமயங்களில் உண்மை கசக்கும்..
அது மனத்திலிருந்து கசியும் போது///

உரிமைக்கும் யாசகத்துக்கும் வித்தியாசம் உண்டு..யாசிப்பதாக நினைப்பவர் யாசிக்கிறார்..

எடுத்துக் கொள்ளவதாக நினைப்பவர் எடுத்துக் கொள்கிறார்..நான் எடுத்துக்கொள்கிற வகை..

தமிழ் விரும்பி said...

/// minorwall said...
////iyer said...
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு.////

கண்டவர் விளக்கம் கண்டவர் விளக்கமாகத்தாநிருக்கும்..
விண்டவர் வள்ளுவர் வாய்மொழி திறந்தாலொழிய..////அதுசரி நீங்களுமா மைனர்வாள்.... ஜப்பான் நீரும் நிரமாறிப் போச்சே!

கோவி.கண்ணன் said...

///என்பது தான் என் கேள்வி.///
கேள்விக்கு பதில் கிடைத்ததா? அறிவுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா..//

நீர் யாரோ எவரோ தக்க சமயத்தில் வந்து எம்மைக் காப்பாற்றீனீர்கள், டி ஆர் மகாலிங்கம் சொல்ல என்ன நல்லாப் பாருங்க என்ன நல்லாப் பாருங்க என்று சிவாஜி கருவரைக்குச் சென்று மறைந்துவிடுவார் - திருவிளையாடல் படத்தில் :)

//
விழுந்த எழுந்தவன் அனுபவம் மீண்டும் விழ விரும்பமாட்டான் என்பதே உண்மை மீண்டும் அவர் விரும்பினால் அவரும் வரக்கூடும் ஞானியாக சித்தராக இன்னமும் உங்கள் பாணியில் அவராக...
தாமே விரும்பி விழுந்தவர்கள்தாம் அவர்கள்
யாரும் யாரையும் தள்ளி விடவில்லை என்பதே உண்மை
//

ஐயரே,

உண்மை என்பதும் நம்பிக்கை என்பதும் வேறு வேறானவை, நம்பிக்கைகளில் உண்மைகளும் இருக்கலாம் ஆனால் நம்பிக்கைகள் அனைத்தும் உண்மை என்று சொல்வதற்கில்லை. வாத்தியார் நம்பிக்கைகள் என்று அழகாகச் சொல்லிவிட்டார், விவாதப் பொருள்கள் நம்பிக்கைச் சார்ந்தவை என்னும் போது நானும் அங்குவிவாதிப்பதே இல்லை. இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கலாம், கலாம் கலாம் என்று பேசலாமேயன்றி, இதுவே உண்மை என்று அறுதியிட்டுக் கூற ஆவணங்கள் தேவைப்படுகிறது, உங்களிடம் ஆவணங்கள் இருந்தால் உங்கள் நம்பிக்கைகள் உண்மையோ இல்லையோ அது அறிவியல் என்று எடுத்துக் கொள்ளுவார்கள்

iyer said...

///கோவி.கண்ணன் .//

///உண்மை என்பதும் நம்பிக்கை என்பதும் வேறு வேறானவை, நம்பிக்கைகளில் உண்மைகளும் இருக்கலாம் ஆனால் நம்பிக்கைகள் அனைத்தும் உண்மை என்று சொல்வதற்கில்லை.///

1) தன் பிள்ளையிடம் இவர் தான் உன் தந்தை என அறிமுகப்படுத்துவது உண்மையா நம்பிக்கையா
2) இந்த பாடம் படித்து பட்டம் பெற்றால் அந்த வேலை கிடைக்கும் என சொல்வது உண்மையா நம்பிக்கையா
3) இத்தனை மணிக்கு இங்கிருந்து கிளம்பும் இந்த தொடர் வண்டி நாளை இத்தனை மணிக்கு இந்த ரயில் நிலையத்தில் சென்றடையும் என்பது உண்மையா நம்பிக்கையா
4) இங்கு அருந்தும் உணவுகளில் விஷம் கலக்கப்படவில்லை என்று எடுத்துக்கொள்வது உண்மையா நம்பிக்கையா
5) இந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த நிலை மாறும் என்று சொல்வது உண்மையா நம்பிக்கையா

இன்னமும் சொல்லலாம் நண்பரே...
அமைதியாக பேசுவோம்...
விளக்கமாகவே.. விரிவாகவே..

minorwall said...

/////தமிழ் விரும்பி said...
அதுசரி நீங்களுமா மைனர்வாள்.... ஜப்பான் நீரும் நிரமாறிப் போச்சே!///


ஜப்பான் நீர் செஸியம் ஐயோடின் ன்னு கொஞ்சம் அதிக காரமாவே ஆயிடுச்சு..அணு உலையே வெடிச்சுருக்குன்னா அதன் தாக்கம் எப்புடி இருக்கும்?


ஜப்பானில் குளிர்காலம் கொஞ்சம்கொஞ்சமாய்த் தொடங்கிவிட்டது..அதுனாலே கொஞ்சம் தணப்பு இருந்தால் இதமா இருக்கும்ன்னு நினைச்சேன்..அது ஆரம்பிச்சுட்டுது..இந்த campfire லே சேர்ந்து இருந்து அந்த கணங்களை என்ஜாய் பண்ண காரணமாயிருந்த எல்லோருக்கும் ஒரு 'ஒ'...

கோவி.கண்ணன் said...

//1) தன் பிள்ளையிடம் இவர் தான் உன் தந்தை என அறிமுகப்படுத்துவது உண்மையா நம்பிக்கையா//

இது போன்ற பொருளற்ற வாதங்கள் நிறைய சந்தித்தது உண்டு, இன்றைய தேதிக்கு பிள்ளைக்கு அப்பன் இவன் என்று சொல்வது நம்பி சார்ந்த ஒன்று என்பதைத் தாண்டி மரபணு சோதனை மூலம் உண்மை என்று நிருபனம் செய்யமுடியும், உங்க முன்னாடி வேலும் மய்லும் இன்று மப்டியில் முருகன் வந்து நின்றால் உங்கள் நம்பிக்கையால் வந்திருப்பது உண்மையான முருகன் என்று உங்களால் விளங்கிக் கொள்ள முடியுமா ? முடியாது ஏனென்றால் அப்படி ஒரு காட்சியின் அனுபவம் ஒப்பிட்டுப் பார்க்க உங்களுக்கு முன்பு எப்போதும் கிடைத்திருக்காது.

2) இந்த பாடம் படித்து பட்டம் பெற்றால் அந்த வேலை கிடைக்கும் என சொல்வது உண்மையா நம்பிக்கையா

நான் கூட படிச்சத்து ஒன்றும் தற்போது வேலை செய்வது ஒன்றுமாக இருக்கிறது, என் கைரேகையைப் பார்த்த சோதிடக்காரன் உனக்கு மேற்படிப்பு வாய்ப்பே இல்லை என்றான், அதன் பிறகு 5 ஆண்டுகளில் காலேஜ் ஆப் என்ஜினியரிங்க், கிண்டியில் பட்டம் படித்து முடித்தேன்.

3) இத்தனை மணிக்கு இங்கிருந்து கிளம்பும் இந்த தொடர் வண்டி நாளை இத்தனை மணிக்கு இந்த ரயில் நிலையத்தில் சென்றடையும் என்பது உண்மையா நம்பிக்கையா

தொடர் நிகழ்வில் தடைகள் இல்லாமல் இருந்தால் அது சரியாக நடக்கும், இதில் நம்பிக்கை உண்மை என்று எதுவும் இல்லை. பெங்களூர் போக ஏறியவன் அரக்கோணத்தில் விபத்து வந்து சாவோம் என்று முன்கூட்டியே நினைத்தால் அது நம்பிக்கையா ? உண்மையா ? அபத்தமா ?

//4) இங்கு அருந்தும் உணவுகளில் விஷம் கலக்கப்படவில்லை என்று எடுத்துக்கொள்வது உண்மையா நம்பிக்கையா//

போகிற வழியில் வயித்தைக் கலக்கும், மோசமான கழிவரையைப் பார்த்த பிறகு வாந்தியே வரும் என்பது நம்பிக்கையா உண்மையா ?

//5) இந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த நிலை மாறும் என்று சொல்வது உண்மையா நம்பிக்கையா //

இந்த ஆட்சியே நிலைக்குமா என்பது நம்பிக்கையா ? உண்மையா ?

//இன்னமும் சொல்லலாம் நண்பரே...
அமைதியாக பேசுவோம்...
விளக்கமாகவே.. விரிவாகவே..//

:)))))) இதுக்குமேலேயும் வர ஏதேனும் இருக்கா