மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

21.10.11

Astrology: புத்திரபாக்கியம் இல்லையா?

 -----------------------------------------------------------------------------
Astrology: புத்திரபாக்கியம் இல்லையா?
ஜோதிடம் cum ஆன்மீகக் கட்டுரை
--------------------------------------------------
புத்திரபாக்கியம் இல்லையா? கவலைகளை எல்லாம் மூட்டை கட்டி வையுங்கள். இந்தப் பதிவைப் படியுங்கள். உங்களுக்காக எழுதப்பெற்றது.

“சார், பார்க்காத ஜோதிடர்கள் இல்லை. போகாத நவக்கிரக ஸ்தலங்கள் பாக்கியில்லை. எங்களுக்கு எப்போது குழுந்தை பிறக்கும் என்று  உங்கள்  அஷ்டகவர்க்கம் மூலம் பார்த்துச் சொல்லுங்கள்” என்று எனக்குச் சிலர் கடிதம் எழுதுகிறார்கள்.

ஐந்தாம் வீடு, அதன் அதிபதி, காரகன் குருபகவான் ஆகிய மூவரும் அமர்ந்திருக்கும் வீடுகளின் பரல்கள் 28ற்கும் குறைவாக இருந்தால்,
(கணவன் அல்லது மனைவியின் ஜாதகத்தில்) குழந்தை பிறப்பது
தாமதமாகும். அதுவே பரல்கள் அவர்கள் இருவரின் ஜாதகத்திலும் 25 ற்கும்  குறைவாக (அம் மூன்று இடங்களிலும்) இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லை என்பது பொது விதி.

ஆனால் அதை எல்லாம் மீறி சிலருக்குக் குழந்தை பிறக்கும். அதுதான் இறையருள். தொடர் பிரார்த்தனையின் பலன். மனம் உருகிய உண்மையான பக்திக்குக் கிடைக்கும் பரிசு. எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

எது எப்படியிருந்தாலும், ஜாதகத்தை எல்லாம் மூட்டைகட்டிப் பரண்மேல் போடுங்கள். இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.

இறையருளுக்குள் எல்லாம் அடக்கம். அதை நம்புங்கள். ஜோதிடம் எல்லாம் அதற்குக் கீழேதான்!

குழந்தைபேறுக்கான ஸ்தலத்தைப் பற்றிய விபரத்தைக் கீழே
கொடுத் துள்ளேன்!   ஒருமுறை சென்று வாருங்கள். நம்பிக்கையோடு வழிபட்டுவாருங்கள். நடப்பதைப் பாருங்கள்.

நடந்த பிறகு ஒருவரி எழுதுங்கள்.
-----------------------------------------------------------------------------------
     “வாத்தி (யார்) ஒரு சின்ன குழப்பம்!”

     “என்ன ராசா?”

      “ஜோதிடப் பாடம் நடத்தும் நீங்கள், ஜாதகத்தைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டுக் கோவிலுக்குப் போ என்கிறீர்களே? கோவிலுக்குப்  போவதால் மட்டும் எப்படிக் குழந்தை பிறக்கும்? ஜாதகம் பொய்யாகிவிடாதா?”

        “ராசா, அதே ஐந்தாம் வீடுதான் பூர்வபுண்ணிய வீடு. பூர்வ புண்ணியத்தைக் கணித்துச் சொல்ல யாருக்கும் பவர் (சக்தி) கிடையாது.  இறைவழிபாட்டால், பூர்வபுண்ணிய தர்மம் மேன்மைப் பட்டு குழந்தை பிறக்கும். புரிகிறதா? சில விஷயங்கள் ஜாதகத்தையும் மீறி நடப்பதற்கு  அதுதான் காரணம்.”
------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------

நவநீதகிருஷ்ணன் கோவில், Dodda mallur, Near Chennapatna, Karnataka

பெங்களூர் மைசூர் நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து அறுபத்தி யிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இப்புண்ணிய ஸ்தலம்.
நெடுஞ்சாலையில் செல்கையில் 60ஆவது கிலோமீட்டரில், இடது பக்கம் (சென்னபட்னா நகரைத் தாண்டிய பிறகு) மிகப் பெரிய அலங்கார வளைவு  (Arch) உங்களை வரவேற்கும். அதுதான் அக்கோவிலின் நுழைவாயில். சென்னபட்னா நகரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுதான். ஆட்டோ ரிக்‌ஷா வசதி உண்டு.

அக்கோவில் கி.பி.1,117ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் என்னும் மன்னனால் கட்டபெற்ற புராதனக் கோவில் ஆகும். அங்கே உறையும் நவநீதகிருஷ்ணர் பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியவர். புத்திர தோஷம் உடையவர்களும், சயன தோஷம் உடையவர்களும், இக்கோவிலுக்குச் சென்று மனம் உருகி வழிபட அக்குறைகள் நிவர்த்தியாகும் என்பது வழிவழியான நம்பிக்கை.

அதற்கு ஆதாரம் கேட்டு யாரும் பிறாண்ட வேண்டாம். பின்னூட்டம் இட வேண்டாம். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை தேடி அலையும்போது தூக்கிக் கொண்டு செல்லும் உங்கள் பல்கலைக் கழகச் சான்றிதழ்களுக் கெல்லாம் அப்பாற்பட்ட விஷயங்கள் எத்தனையோஉள்ளன, அதில் இதுவும் ஒன்று!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------------------
How to reach Dodda Mallur
From Bangalore 62 kms
From DHQ Ramanagara 12 kms
Route :
1.Bangalore-Ramanagara-Channapatna-Dodda Mallur.(SH 17)
2.Mysore-Srirangapatna-Mandya-Maddur-Dodda Mallur(SH 17)
Road :
Travelling on State Highway 17 which connects Bangalore - Mysore, you need to take a diversion just after two kms after Channapatna heading towards Maddur. You can find the temple Gopura visible to the main highway.
Rail :
Nearest Railway station is Channapatna and from there on, you can head by road either in Auto or in a taxi.
Airport :
The nearest Airport being Bangalore International Airport, heading either by Road or Rail from there on.
------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

29 comments:

csekar2930 said...

This is 100% True. This was happened after went this temple.Stayed their for 3 days with puja. They gave butter three times of the day as a prasatham. Believed causes the result.
I witnessed. After 10 years. child was born for my friend with Guru on lagnam/Dhanur rasi.

Regards
Chandrasekaran Suryanarayana

SP.VR. SUBBAIYA said...

/////Blogger csekar2930 said...
This is 100% True. This was happened after went this temple.Stayed their for 3 days with puja. They gave butter three times of the day as a prasatham. Believed causes the result.
I witnessed. After 10 years. child was born for my friend with Guru on lagnam/Dhanur rasi.
Regards
Chandrasekaran Suryanarayana////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

Karthikeyan said...

மிகவும் பயனுள்ள தகவல், மிக்க நன்றி.

/*இறையருளுக்குள் எல்லாம் அடக்கம். அதை நம்புங்கள். ஜோதிடம் எல்லாம் அதற்குக் கீழேதான்! */
ஆம், இதை என் வாழ்விலும் என் குடும்பத்திலுள்ளோர் வாழ்விலும் நடந்த பல சம்பவங்கள் மூலம் அனுபவ பூர்வமாக உணர்ந்துள்ளோம்.

RMURUGARAJAN said...

வணக்கம் ஐயா,

தங்கள் கூறியதுபோல் இறைவனை மீறியசக்தி ஏதும் இல்லை,

தொட்டமாளூர் நவநீதகிருஷ்ணன் கோவில் சென்று வழிபட்டு பலர் பயனடைந்துள்ளனர்,

ஆக்கம் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி, இதன் மூலம் பலர் பயனடையவேண்டும்,

ஹரே கிருஷ்ணா!

நன்றி,
முருகராஜன்.

RAMADU Family said...

Guru vanakkam,

Might be repetetive, but 100% true.
In my case, both mywife and myself had malfics in 5th house, ketu for me and mars for my wife in meenam. We got our child after 4 years. this was possible only thru our prayers and pariharm to respective navagrahs.

Thanks
RAMADU

Govindasamy said...

//இறையருளுக்குள் எல்லாம் அடக்கம். அதை நம்புங்கள். ஜோதிடம் எல்லாம் அதற்குக் கீழேதான்!//

இதுதான் நித்திய சத்தியம்.

நீங்கள் உங்கள் மாணவர்கள் அனைவரையும் சரியான பாதையில் அழைத்துச் செல்கிறீர்கள்.

பழனியப்பன் உங்களுக்கு எல்லா ஆசிகளையும் வழங்குவாராக.

நன்றிகள்.

Ravichandran said...

Ayya,

Offering best prayers to God will give Standing power atleast...I believe your words..Thats true as well...

Sincere Student,
Ravi

SP.VR. SUBBAIYA said...

////Blogger Karthikeyan said...
மிகவும் பயனுள்ள தகவல், மிக்க நன்றி.
/*இறையருளுக்குள் எல்லாம் அடக்கம். அதை நம்புங்கள். ஜோதிடம் எல்லாம் அதற்குக் கீழேதான்! */
ஆம், இதை என் வாழ்விலும் என் குடும்பத்திலுள்ளோர் வாழ்விலும் நடந்த பல சம்பவங்கள் மூலம் அனுபவ பூர்வமாக உணர்ந்துள்ளோம்.////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger RMURUGARAJAN said...
வணக்கம் ஐயா,
தங்கள் கூறியதுபோல் இறைவனை மீறியசக்தி ஏதும் இல்லை,
தொட்டமாளூர் நவநீதகிருஷ்ணன் கோவில் சென்று வழிபட்டு பலர் பயனடைந்துள்ளனர்,
ஆக்கம் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி, இதன் மூலம் பலர் பயனடையவேண்டும்,
ஹரே கிருஷ்ணா!
நன்றி,
முருகராஜன்.//////

பயனடையவேண்டும். அதற்காகத்தான் இதை எழுதி இன்று வெள்ளிக்கிழமை வலை ஏற்றியுள்ளேன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger RAMADU Family said...
Guru vanakkam,
Might be repetetive, but 100% true.
In my case, both mywife and myself had malfics in 5th house, ketu for me and mars for my wife in meenam. We got our child after 4 years. this was possible only thru our prayers and pariharm to respective navagrahs.
Thanks
RAMADU/////

உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Govindasamy said...
//இறையருளுக்குள் எல்லாம் அடக்கம். அதை நம்புங்கள். ஜோதிடம் எல்லாம் அதற்குக் கீழேதான்!//
இதுதான் நித்திய சத்தியம்.
நீங்கள் உங்கள் மாணவர்கள் அனைவரையும் சரியான பாதையில் அழைத்துச் செல்கிறீர்கள்.
பழனியப்பன் உங்களுக்கு எல்லா ஆசிகளையும் வழங்குவாராக.
நன்றிகள்.//////

அது வாத்தியாரின் கடமை! நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Ravichandran said...
Ayya,
Offering best prayers to God will give Standing power atleast...I believe your words..Thats true as well...
Sincere Student,
Ravi////

நல்லது. பின்னூட்டத்திற்கு நன்றி ரவிச்சந்திரன்!

Jagannath said...

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் உள்ள பூவராக பெருமாள் கோயிலில் குழந்தையில்லா தம்பதிகள் சந்தான கிருஷ்ணனை மடியில் கிடத்தி செய்யும் பிரார்த்தனை பிரசித்தி பெற்றது. நிறைய பேருக்கு இந்த பிரார்த்தனை பலனளித்திருக்கிறது.

Thanjavooraan said...

மைசூரிலிருந்து பெங்களூர் வரும் வழியில் சென்னப்பட்டணம் தாண்டி இந்த ஊர் இருக்கிறது. இவ்வூரிலுள்ள ஆலயத்தில் பட்டாச்சாரியாராக இருப்பவர் கும்பகோணத்துக்காரர். நான் அந்த ஆலயத்துக்குப் போனபோது அவர் மிகவும் விளக்கமாக அந்தத் தலத்தைப் பற்றிக் கூறினார். "அப்ரமேயர்" எனும் தவழும் கிருஷ்ணனின் சின்ன விக்கிரகத்தைக் கையில் கொடுத்து மடியில் வைத்துக் கொள்ள செய்தார். அது போன்ற பாலகிருஷ்ணனின் சிலாவடிவம், நமது மன்னார்குடி, திருமுட்டம் ஆகிய ஊர்களிலும் உண்டு. எனக்கு கார் ஓட்டிவந்த கிருஷ்ணமூர்த்தி கவுடா என்பவர், அந்த ஊர் வந்ததும், இதுதான் எங்கள் ஊர் இங்கு ஒரு கோயில் இருக்கிறது, வாருங்கள் என்று என்னுடைய குடும்பத்தார் அனைவரையும் அங்கு அழைத்துச் சென்றார். எதனால் என்று எனக்குத் தெரியாது; என் மகளுக்குத் திருமணம் ஆனபிறகு 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது.

Arul Murugan. S said...

/// அங்கே உறையும் நவநீதகிருஷ்ணர் பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியவர் ///

இறைவனை குழந்தை வடிவில் ஆலயங்களில் தரிசிப்பதில், மழலைப் பருவ லீலைகளை பாடுவதிலும் / பாராயணம் செய்வதிலும் ஒரு வகை இன்பம் இருக்கிறது. கோகுலாஷ்டமியன்று கண்ணனை பல விஷ்ணு ஆலயங்களில் தொட்டிலில் இடுவார்கள்.

இவ்வகை வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தும், பிள்ளைத்தமிழ் பாடிய குமரகுருபரருக்கு அம்பிகை சிறுமி வடிவில் வந்து முத்துமாலை அணிவித்து சந்நிதிக்குள் ஓடி மறைந்த கலியுக அதிசயத்தை நினைவுகூறும் வகையிலும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி 3 ம் நாள் விழாவில் அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Jagannath said...
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் உள்ள பூவராக பெருமாள் கோயிலில் குழந்தையில்லா தம்பதிகள் சந்தான கிருஷ்ணனை மடியில் கிடத்தி செய்யும் பிரார்த்தனை பிரசித்தி பெற்றது. நிறைய பேருக்கு இந்த பிரார்த்தனை பலனளித்திருக்கிறது./////

மேலதிகத் தகவலுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Thanjavooraan said...
மைசூரிலிருந்து பெங்களூர் வரும் வழியில் சென்னப்பட்டணம் தாண்டி இந்த ஊர் இருக்கிறது. இவ்வூரிலுள்ள ஆலயத்தில் பட்டாச்சாரியாராக இருப்பவர் கும்பகோணத்துக்காரர். நான் அந்த ஆலயத்துக்குப் போனபோது அவர் மிகவும் விளக்கமாக அந்தத் தலத்தைப் பற்றிக் கூறினார். "அப்ரமேயர்" எனும் தவழும் கிருஷ்ணனின் சின்ன விக்கிரகத்தைக் கையில் கொடுத்து மடியில் வைத்துக் கொள்ள செய்தார். அது போன்ற பாலகிருஷ்ணனின் சிலாவடிவம், நமது மன்னார்குடி, திருமுட்டம் ஆகிய ஊர்களிலும் உண்டு. எனக்கு கார் ஓட்டிவந்த கிருஷ்ணமூர்த்தி கவுடா என்பவர், அந்த ஊர் வந்ததும், இதுதான் எங்கள் ஊர் இங்கு ஒரு கோயில் இருக்கிறது, வாருங்கள் என்று என்னுடைய குடும்பத்தார் அனைவரையும் அங்கு அழைத்துச் சென்றார். எதனால் என்று எனக்குத் தெரியாது; என் மகளுக்குத் திருமணம் ஆனபிறகு 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது./////

கோவிலின் மேன்மைக்கு உங்கள் பின்னூட்டம் மேலும் ஒரு சிறப்பைச் சேர்க்கிறது. நன்றி கோபாலன் சார்!

SP.VR. SUBBAIYA said...

Blogger Arul Murugan. S said...
/// அங்கே உறையும் நவநீதகிருஷ்ணர் பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியவர் ///
இறைவனை குழந்தை வடிவில் ஆலயங்களில் தரிசிப்பதில், மழலைப் பருவ லீலைகளை பாடுவதிலும் / பாராயணம் செய்வதிலும் ஒரு வகை இன்பம் இருக்கிறது. கோகுலாஷ்டமியன்று கண்ணனை பல விஷ்ணு ஆலயங்களில் தொட்டிலில் இடுவார்கள்.
இவ்வகை வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தும், பிள்ளைத்தமிழ் பாடிய குமரகுருபரருக்கு அம்பிகை சிறுமி வடிவில் வந்து முத்துமாலை அணிவித்து சந்நிதிக்குள் ஓடி மறைந்த கலியுக அதிசயத்தை நினைவுகூறும் வகையிலும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி 3 ம் நாள் விழாவில் அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.////////

அதுமட்டுமல்ல, காசிக்குச் சென்ற குமரகுருபரர், அச்சமயம் காசியை ஆண்டுகொண்டிருந்த சுல்தானைச் சந்தித்து, விசுவநாதர் ஆலயத்தைத் திறக்கவைத்த அதிசய சம்பவமும் ஒன்று உண்டு! அதுவும் கலியுக அதிசயம்தான்!

Rajaram said...

ஐயா வணக்கம் பதிவு அருமையிலும் அருமை.உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.குழந்தை பாக்கியம் வேண்டுவோர் கேரளாவிலுள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று வந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.குறிப்பாக அங்கு எம்பெருமான் குழந்தைக் கிருஷ்ணனாக சேவை சாதிப்பதைக் கண்டுவந்தால் மேலும் சிறப்பு.

தமிழ்மணி said...

பதிவிற்கு நன்றி ஐயா,

பித்ரு தோஷம் என்பது குறித்து விளக்கமுடியுமா ஐயா...?

தமிழ் விரும்பி said...

ஆசிரியருக்கு வணக்கம்,
நவநீத கிருஷ்ணனை அடுத்தமுறை வரும் பொது சென்றுக் காண வேண்டும்...
ஆறு வருடங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து மைசூர் சென்று சாமுண்டீஸ்வரியை தர்சிக்க சென்றோம்... இதன் வழியாகத் தான் சென்றிருப்போம் போலும் அப்போது அறிந்திருக்கவில்லை..

ஆனால், அப்போது உடுப்பிக்கு சென்று வந்தோம்.. அங்கே கிருஷ்ணன் தனது பக்தனுக்கு (கன்னட நந்தனாருக்கு) அருள் பாலிக்க மேற்கே நோக்கி திரும்பினாராம்.. அதை இன்றளவும் அப்படியேக் காணலாம்..

மேலும் கண்ணனைப் பற்றிய விசேசமானப் பதிவுகளையும், பாடல்களையும் இந்த http://kannansongs.blogspot.com/ முகவரியில் சென்றுக் காணலாம்.

இன்றையப் பதிவு பாடத்தோடு இயைந்து நிற்கிறது.
நன்றிகள் ஆசிரியரே!

அன்புடன்,
ஆலாசியம் கோ.

SP.VR. SUBBAIYA said...

Blogger Rajaram said...
ஐயா வணக்கம் பதிவு அருமையிலும் அருமை.உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.குழந்தை பாக்கியம் வேண்டுவோர் கேரளாவிலுள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று வந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. குறிப்பாக அங்கு எம்பெருமான் குழந்தைக் கிருஷ்ணனாக சேவை சாதிப்பதைக் கண்டுவந்தால் மேலும் சிறப்பு.//////

எல்லோருக்கும் பரல்கள் 337தான். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உள்ளது. உங்களுக்கும் ஒரு திறமை இருக்கும். யாருக்கும் யாரும் மேலானாவர்கள் கிடையாது. சில ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக் கிறேன். என் எழுத்துக்கள் பிடித்துப்போய் பலர் இங்கே வந்துபோய்க்கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். நான் எளியவன். பழநிஅப்பன் அருளால் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னைப் பற்றி நான் என்றுமே உயர்வாக நினைத்ததில்லை. என்னைவிடச் சிறப்பாக எழுதும் பலர் இருக்கி றார்கள். அதை மனதில் கொள்ளுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger தமிழ்மணி said...
பதிவிற்கு நன்றி ஐயா,
பித்ரு தோஷம் என்பது குறித்து விளக்கமுடியுமா ஐயா...?////

பித்ரு/பிருக்கள் என்றால் தந்தை, தந்தைவழி முன்னோர்களைக் குறிக்கும். ஒன்பதாம் வீடு, அதன் அதிபதி, சூரியன் ஆகியவை தீயகிரகங்களால் சூழப்பட்டிருக்கும் ஜாதகம் பித்ரு தோஷ ஜாதகம் எனப்படும். அதற்குப் பரிகாரம் உண்டு. விவரமாக எழுத வேண்டும். பின்னொரு சமயம் அதை எழுதுகிறேன். பொறுத்திருங்கள்!

SP.VR. SUBBAIYA said...

Blogger தமிழ் விரும்பி said...
ஆசிரியருக்கு வணக்கம்,
நவநீத கிருஷ்ணனை அடுத்தமுறை வரும் பொது சென்றுக் காண வேண்டும்...
ஆறு வருடங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து மைசூர் சென்று சாமுண்டீஸ்வரியை தர்சிக்க சென்றோம்... இதன் வழியாகத் தான் சென்றிருப்போம் போலும் அப்போது அறிந்திருக்கவில்லை..
ஆனால், அப்போது உடுப்பிக்கு சென்று வந்தோம்.. அங்கே கிருஷ்ணன் தனது பக்தனுக்கு (கன்னட நந்தனாருக்கு) அருள் பாலிக்க மேற்கே நோக்கி திரும்பினாராம்.. அதை இன்றளவும் அப்படியேக் காணலாம்..
மேலும் கண்ணனைப் பற்றிய விசேசமானப் பதிவுகளையும், பாடல்களையும் இந்த http://kannansongs.blogspot.com/ முகவரியில் சென்றுக் காணலாம்.
இன்றையப் பதிவு பாடத்தோடு இயைந்து நிற்கிறது.
நன்றிகள் ஆசிரியரே!
அன்புடன்,
ஆலாசியம் கோ./////

பதிவு பாடத்தோடு இயைந்து இருப்பதைக் கவனித்துச் சொன்ன மேன்மைக்கு நன்றி ஆலாசியம்!

thanusu said...

இறைவனிடம் கை ஏந்துங்கள்
அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை.
பொறுமையுடன் கேட்டு பாருங்கள்
அவன்
பொக்கிசத்தை மூடுவதில்லை .
இறை வணக்கம் புரிபவருக்கு
எல்லாம் எளிதில் நடக்கும்.

நன்றி நாகூர் ஹனிபா -பாடல்

SP.VR. SUBBAIYA said...

////Blogger thanusu said...
இறைவனிடம் கை ஏந்துங்கள் - அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை.
பொறுமையுடன் கேட்டு பாருங்கள் - அவன்
பொக்கிசத்தை மூடுவதில்லை
இறை வணக்கம் புரிபவருக்கு
எல்லாம் எளிதில் நடக்கும்.
நன்றி நாகூர் ஹனிபா -பாடல்//////

கேளுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் - ஏசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்

BalHanuman said...

மிகவும் பயனுள்ள பதிவு. உங்கள் சேவை தொடரட்டும். நான் தொட்டமளூர் கிருஷ்ணன் பற்றி அறிந்தது குமுதம் ஜோதிடம் ஆசிரியர் திரு. ஏ.எம்.ஆர் மூலமாக...

Arul Murugan. S said...

/// நான் தொட்டமளூர் கிருஷ்ணன் பற்றி அறிந்தது குமுதம் ஜோதிடம் ஆசிரியர் திரு. ஏ.எம்.ஆர் மூலமாக... ///

அவருடைய எழுத்துக்களை பள்ளிப் பருவத்திலிருந்தே படிக்கத் துவங்கினேன். அப்பொழுது தினமணி கதிரில் கேள்வி பதில் பகுதியில் எழுதிக் கொண்டிருந்தார். அதுவே பின்னாட்களில் ஆழ்ந்த சாஸ்திர ஈடுபாட்டிற்கான விதைகளை தூவியது. அப்பொழுது எனக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த 12 ல் உச்சம் பெற்று அமர்ந்த கேதுவின் புக்தியும் காரணம்.

கனவு பையன் said...

ஐயா ,
உங்கள் பதிவை படித்தேன் மிக்க நன்றி வழி கட்டியதற்கு ,
என்றும் நன்றியுடன்
உங்கள் மாணவன்