மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

18.10.11

Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)

------------------------------------------------------------------------------------
Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)

கல்வி, வைத்தியம், ஜோதிடம் ஆகிய மூன்றும் தர்மப் பணிகள். அதெல்லாம் முற்காலத்தில். அத்தொழிலைச் செய்பவர்களுக்கெல்லாம் மன்னர் மானியம் தருவார். அதனால் அன்றைய காலகட்டத்தில் அது சாத்தியப்பட்டது.

இப்போது மன்னர்களையும் ஒழித்துவிட்டார்கள். அதோடு அவர்களுக்குக் கொடுத்துவந்த மானியத்தையும் ஒழித்துவிட்டார்கள். எல்லாம் கலியுகம். கலி முற்றிக்கொண்டு வருகிறது.

இப்போது அவை மூன்றும்தான் காசு கொழிக்கும் தொழில்!

சரி, போகட்டும் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். வகுப்பறைக்கு வருபவர்களில் சிலர் (தனி மின்னஞ்சல் மூலமாக) கேட்கும் முக்கியமான கேள்விகள் இரண்டு உண்டு!

1. சார், எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)
2. சார், நான் ஜோதிடராகப் பணி புரிய ஆசைப் படுகிறேன். அதற்கான வாய்ப்பு (என் ஜாதகப்படி) எனக்கு உண்டா?

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! அத்துடன் கற்றுக் கொண்டவை அவ்வப்போது மறந்து போகாமல் இருப்பதற்கு, நினைவாற்றல் முக்கியம். முக்கியமான விதிகளைத் திரும்பத் திரும்பவும் படிக்க வேண்டும்.

புரிதலுக்கும், நினைவாற்றலுக்கும், ஜாதகப்படி (அதைச் சொல்லாவிட்டால் கடைசி பெஞ்ச் கண்மணி விடமாட்டாரே) புதன் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும். வலு என்றால் என்ன என்பதைப் பலமுறை சொல்லித் தந்திருக் கிறேன். புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கேந்திரங்கள் அல்லது திரிகோணங்களில் இருந்தால் நல்லது.

விளக்கம் போதுமா?

போதாது!

இரண்டாவது கேள்வி பாக்கியுள்ளது.

நீங்கள் ஜோதிடத்தைக் கற்றுக்கொள்வதுடன், பலரது ஜாதகத்தைப் பார்த்து, அலசி, பலன் சொல்லி, அவர்கள் அதைக்கேட்டு முகம் மலர்ந்த அனுபவம் வேண்டும். ஜோதிடத் தொழில் முதலில் டல்’ லடிக்கும். நீங்கள் பிரபலமான பிறகு, உங்களிடம் வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவார்கள். பலரையும் கூட்டிக் கொண்டு வருவார்கள். அல்லது பலரையும் அனுப்பி வைப்பார்கள். அப்போதுதான் நீங்கள் சம்பாதிக்க முடியும்!

“அந்தக் கதை எல்லாம் வேண்டாம். ஜாதகப்படி என்ன அமைப்பு வேண்டும்? அதைச் சொல்லுங்கள்”

புதன் (Planet for Astrology) வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும்.

ஐந்தாம் அதிபதியும், பத்தாம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் பார்வையில் இருக்க வேண்டும்.

அதைவிட முக்கியமாக நீங்கள் அட்டை (Board) மாட்டி ஜோதிடம் சொல்லத் துவங்குவதற்கு உங்களுக்கு நல்ல தசா புத்தி நடைபெறவேண்டும்

அதெல்லாம் எதற்கு?

எதையும் கற்று அறிவதில் தவறில்லை. ஆகவே இந்தக் கட்டுரையின் ஏழாம் பத்தியை மீண்டும் ஒருமுறை தருகிறேன். அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! இறையருளால் நமக்கு வேறு தொழில் இருக்கிறது. ஆகவே கற்றுக்கொள்வதுடன், அதைவைத்து நமது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உதவி செய்வதுடன் நிறுத்திக் கொள்வோம்.

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இடைச் சேர்க்கை:

1  நம் மதிப்பிற்குரிய பெரியவரின் கடிதம் உங்கள் பார்வைக்கு:

2
வகுப்பறைக் கண்மணியின் கடிதம் உங்கள் பார்வைக்கு:

இவை இரண்டிற்கும் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்
நட்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

33 comments:

தேமொழி said...

ஐயா,
என் தகுதி நிலை அறிக்கையை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்....

ஜோதிடக் கலை அறியும் தகுதி நிலை அறிக்கை:
ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும் = உண்டு
புதன் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும் = புதன் இருப்பது திரிகோணம்/ஐந்தாம் வீடு ரிஷபத்தில்
புதன் வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும் = :-(
ஐந்தாம் அதிபதியும், பத்தாம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் பார்வையில் இருக்க வேண்டும் = ஐந்தின் அதிபதியும் பத்தின் அதிபதியும் சுக்கிரனே, அவர் ஏழாம் வீட்டில் இருந்து பத்தாம் வீட்டு காரகன்/லக்கினத்தில் இருக்கும் சனியை ஏழாம் பார்வை
அத்துடன்; கேது மகரத்தில், ராகு கடகத்தில் தானே தேடிப்பிடித்து பயிலும் ஆர்வம் (சின்னவாத்தியார் சொல்லித் தந்தார்) = தானே தேடி வந்து வகுப்பறையில் பதிவு செய்து கொண்டது.
நன்றி ஆசிரியரே

Srinivasa Rajulu.M said...

//அதைவிட முக்கியமாக நீங்கள் அட்டை (Board) மாட்டி ஜோதிடம் சொல்லத் துவங்குவதற்கு உங்களுக்கு நல்ல தசா புத்தி நடைபெறவேண்டும்//

நூறு சதவீதம் சரி அய்யா. இது ஜோதிடத்தைப் போலவே எல்லா துறைகளுக்கும் கூட பொருந்துகிறது.

Although many horoscopes may look similar, a few of them become famous and some of them secure a place in history. The saying, 'Right thing at right time' comes to my mind. (Meanwhile, I quickly checked the horoscope of Late Sri. B.V.Raman and found that Mercury is in vargottamam and has 5 suya-parals)

நன்றி அய்யா.

kmr.krishnan said...

கடைசியில் கூறியது நல்ல அறிவுரை ஐயா!.சோதிடத்தில் வந்த பணம் நிலைக்காது என்பார்கள். ஒரு சுவடி படிப்பவர் எங்கள் பகுதியில் கொடிகட்டிப்
பறந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு நாளைக்கு 3000 வருமானம்.

எல்லாம் போய் வீதிக்கு வந்ததையும் கண்ணால் கண்டேன்.

புதன் 2ல் வாக்கு ஸ்தானத்தில் இருந்தாலும் சொன்னது பலிக்கும் என்பார்கள்.
எனக்கு புத‌ன், சூரியன், சனி 2ல் சிம்மத்தில்.கெட்டது சொன்னால் பலித்து விடுகிறது. எனவே மிகவும் சிரமப்பட்டு நல்லதாகவே சொல்ல முயற்சி செய்கிறேன்.அப்படி சொல்லும் போது சொற்களுக்கு மிகவும் திண்டாடுவேன்.

SP.VR. SUBBAIYA said...

பதிவு அதிகாலை 6:10 AM வலையேற்றப்பட்டது. அதற்குப் பிறகு இடைச்சேர்க்கை 8:45 AM ற்கு அதில் ஏற்றப்பட்டுள்ளது. ஆகவே முன்னதாக வந்தவர்கள் அனைவரும் இடைச்சேர்க்கையைப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Srinivasa Rajulu.M said...

இடைச் செருகலுக்கு:

வகுப்பறை மாணவர்களின் மனவோட்டம் தெரிந்தவர் வாத்தியார் அவர்கள். எனவே, வகுப்பறைக்குத் தகுந்தாற்போல் இடுகைகளையும் பின்னூட்டங்களையும் திருத்தி வெளியிடலாம். கருத்துக்களை அனுப்புபவர்கள் இதைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

நன்றி

Srinivasa Rajulu.M said...

இடைச் செருகலுக்கு (மேலும் ஒன்று) :

திருத்தம் மட்டுமல்ல. சில கருத்துக்களை வெளியிடாமல் இருக்கவும் வாத்தியாருக்கு உரிமை உண்டு. இங்கு எல்லோரும் நண்பர்கள். எனவே, தவறாக நினைக்க மாட்டார்கள்.

நன்றி

RAMADU Family said...

Guru Vanakkam,

budhan in 9th house, More important ketu in 5th house. Hope I will get (with the help of Ketu) the knowledge thru him.

இடைச்சேர்க்கை :
Good if we are within our boundry. But I don't feel anything alarming.
"idhuvum kadandhu pogum"

Ramadu.

தமிழ் விரும்பி said...

உண்மை தான் திரு.வெ.கோ ஐயா அவர்கள் கூறியதையே நானும் கூற ஆசைப் பட்டேன்... ஆனால், அது அதிகப் பிரசங்கித் தனமாக போகுமோ என்றும் அஞ்சி அமைதி காத்தேன். இப்போது அப்படி இருக்க வேண்டாம் என்று ஐயா அவர்களின் பின்னூட்டம் கண்டு மீண்டும் ஐயா அவர்கள் கூறியதையே நானும் வழிமொழிகிறேன்.

அவரவர், அபிப்ராயங்கள் தானே... இப்படி ஒதுங்க வேண்டாம் என்று நானும் கேட்டுக் கொள்கிறேன். விசு ஐயர்! எனது வேண்டுகோளை செவிமடுக்க வேண்டுகிறேன்.
நன்றி, வணக்கம்,

அன்புடன்,
ஆலாசியம் கோ.

thanusu said...

கரெக்ட். Mr.ராஜ் சொன்னது சரி . இதே எண்ணம் எனக்கும் வந்தது .கருத்து மோதலை விட கருத்து விளக்க மோதல் மேலானது. பொது இடத்தில மோதல் வரும்போது அதை பார்பவருகும் படிபவருக்கும் அந்த கருத்துகளை ஆராயவே எண்ணம் வரவேண்டுமே தவிர , ஹய்....யா.... சொந்தகதை தொடங்கி விட்டதே என்ற அலுப்பு வரகூடாது ஆனால் வந்து விட்டது , அது இனி வராமல் பார்த்துகொள்வது நம் பொறுப்பே.

Mr KMR and Mr ayyar இருவரும் மீண்டும் வகுப்பறையில் இணைவார்கள்.

தமிழ் விரும்பி said...

திருவாளர் அந்தோணி ராஜ் அவர்கள் கூறியதையும் மறுப்பதற்கு இல்லை...
"அளவுக்கு மீறும் போது அமுதமும் நஞ்சாகிறது"
இது வகுப்பறை என்பதாலோ? பள்ளி நாட்களில் (கல்லூரி அல்ல) குழுமியது போலவே இருக்கவும் செய்கிறது.
உங்கள் அபிப்ராயத்தையும் என் போன்றவர்கள் கணக்கில் கொள்வதும் மிகவும் அவசியமே....
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.... சில / பல நேரங்களில் எரிச்சல் அடையச் செய்திருந்தால்
வருந்துகிறேன்.. திருத்தியும் கொள்கிறேன். வகுப்பறை நல்ல இதயங்களை இணைக்கும் தளமாக இருக்கிறது.. இங்கு வந்தபின்பு நான் பெரிய மனிதர்களின் அறிமுகமும், தொடர்பும் பெற்றேன் அது தொடர வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கவும் விரும்புகிறேன்.

நன்றி வணக்கம்,
அன்புடன்,
ஆலாசியம் கோ.

Govindasamy said...

அய்யா..

வகுப்பறை கலகலப்பாய் இருக்க வேண்டுமே தவிர கலகலத்துப் போகக் கூடாது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.

உங்களது வகுப்பறைக்கு மதங்களையும், நம்பிக்கைகளையும் மீறி மாணவர்கள் வருகிறார்கள் என நினைக்கிறேன். இது ஒரு virtual classroom என்பதனால் இது சாத்தியப் படுகிறது.

பலர் சோதிடத்தையும் மீறி தங்களது எழுத்து நடைக்காகவே வருகின்றனர். இது உங்களது அனுசரனையன எழுத்துக்களிலும் யாரையும் புண்படச் செய்யா நோக்கில் தாங்கள் சொல்லும் விதத்திலும் வெளிப்படுவதைக் கண்டிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலே உங்களது மனிதாபிமானம் மற்றும் மென்மையான குணம் பாரட்டற்குரியது.

எத்துனையோ முறை வகுப்பறை மாணவர் திரு கண்ணனுக்கு " எல்லாவற்றையும் தூக்கி யெறிந்துவிட்டு அனுஷ்கா மாதிரி ஒரு பெண்ணை மனமுடித்துக் கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கத் துவங்குங்கள் " என நீங்கள் முதுகில் தட்டி தேற்றியதாக நினைவு.

இது எனக்கு மிகவும் பிடித்தது. இச்சமயத்தில் ஒரு சோதிட வல்லுனராய் இல்லாது அதற்கும் மேலே சென்று அவரது அன்னையாய் அவருக்கு புத்தி சொன்னது என்னை வசீகரித்தது. இது.. இதுமட்டுமே மனிதரை வாழ வைக்கும் சோதிடம்.

தயை செய்து கீழுள்ள url அய் வெளியிடுங்கள். இந்தப் பதிவுகள் மனிதனது வாழ்க்கையை மதங்களுக்கு அப்பால் அலசுகின்றன என்பது எனது கருத்து..

பிறப்பின் பயனை அடைய நாம் செய்ய வேண்டுவன எவை?

http://vettipaechchu.blogspot.com/2011/06/blog-post_05.html

நம் பிறப்பிலே பயனுண்டா?

http://vettipaechchu.blogspot.com/2011/06/blog-post.html

உணர்தலின் மேன்மை உயிரின் மேம்படுதலா?

http://vettipaechchu.blogspot.com/2011/06/blog-post_20.html

மற்றபடி எனக்கும் உமது வகுப்பறையில் ஒரு இடம் கொடுத்தமைக்கும் எனது கருத்துக்களை வெளியிட்டமைக்கும் நன்றிகள்.

இது யாரையும் புண்படுத்தும் நோக்கோடோ அல்லது ஆதரித்து /எதிர்க்கும் நோக்கோடோ சொல்லப்பட்டவை அல்ல.

மீண்டும் நன்றிகள்

Uma said...

புதன் ஆட்சியில் / கூடவே லக் அதி சனியுடன், இருந்தாலும் இரண்டும் ஆறில். ஆனாலும் நல்ல ஞாபக சக்தி இருக்கிறது. வாக்கு ஸ்தானத்தில் குரு. நவாம்சத்தில் இரண்டில் புதன் / கூட ராகு. ஐந்து/பத்து அதி ஒருவரே. சுக். அவர் நாலில் அமர்ந்து ஏழாம் பார்வையாக சொந்த வீட்டைப்பார்க்கிறார்.

இறையருளால் நமக்கு வேறு தொழில் இருக்கிறது.//

மிகச்சரி. நானும் கற்றுத்தேறும் ஆர்வத்தில்தான் படிக்கிறேன்.

minorwall said...

'classroom chat வேண்டும்..ஆக்கபூர்வமான விவாதங்களும் சேரவேண்டும்..இல்லையென்றால் வகுப்பு கலையிழக்கும்' என அறிவுறுத்தி தஞ்சாவூரார் போன்று ஜாதகம் படிக்கவென்று வராவிட்டாலும் எப்போதாவது கலகலப்புக்காக வகுப்பறைக்கு வருவோரும் உள்ளனர்..

ஜாதகம் படிப்பது மட்டுமே என்று சீரியஸ் டைப் ஆட்களும் உள்ளனர்..

இது எங்குமே இருக்கிற நிலை..எல்லா பள்ளி, கல்லூரிகளிலுமே இருக்கிற நிலை..

எதோ ஒரு விஷயம் நடந்த பின் அதை எப்படி நாம் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே பின்னூட்டங்களும் அமைகின்றன..எதை குப்பைப் பின்னூட்டம் என்றும், எது தகுதியானது என்றும் ஆராயத் தொடங்கினால் அதை புகாரெழுப்பியவருக்கு அனுப்பினால்தான் அவரின் மன ஒத்திசைவுக்கு இயங்கி அதன் படி அவர்தம் விழைவுப்படி எடிட்டிங் செய்யப்படமுடியும்..

ரெண்டு மூணு நாளா கொஞ்சம் அதிகபட்சமாக ஆகிப்போனதென்னவோ உண்மைதான்..சிலருக்கு அரட்டை பொறுக்காது கோபம் வருவதும் இயல்புதான்.. இப்படி சமீபகாலமாக வெட்டி அரட்டையில் ஈடுபட்டோரை கிளாஸ்ரூமை விட்டு எக்ஸ்பெல் பண்ணிவிட்டு சீரியஸ் ஆட்களை மட்டும் கொண்டு கிளாஸ் எடுக்கலாம்..இது ஒரு வழி..

லிஸ்ட் போட்டால் ஒரு ஏழெட்டு பேர் தேறும். இதிலே வாத்தியாரும் அவப்போது வருவதால் எப்படிப் பரிசீலிப்பது? யார் முடிவெடுப்பது? இவர்கள் மட்டுமே பெரும்பாலும் கமென்ட் அடிக்கிறார்கள்..மற்றபடி 2700 பேருள்ள ஒரு கிளாஸ்ரூமில் யாரும் படிக்கிறார்களா?இல்லியா என்பது கூட தெரியவில்லை..படித்துப் பின்னூட்டமிடும் ஆசாமிகளைக் கணக்கெடுத்தால் தெரியும்..

'உள்ளேன் அய்யா..இன்றைய பதிவு அருமை..வணக்கம்..வாழ்த்துக்கள்' என்று சொல்லிக் கூட கமெண்ட்டுகள் வருவதில்லை..

அதிகமாக விளக்கிக் கமெண்டுகள் அடித்தாலும் பிரச்சினை இப்படிப் போகிறது..நேத்திக்கு ஒருத்தர் இப்படித்தான் வேகப்பட்டார்..இன்னொருத்தர் வெளியேறுகிறேன் என்றார்..

புகார் கொடுத்த மாணவரின் சோதிட ஆர்வத்தைப் பாராட்டி இனிமேல் கமென்ட் அடிப்பதை நான் நிறுத்தினால் கொஞ்சம் தொல்லை குறையும் என்று நினைக்கிறேன்..எனக்கும் வின்ட்டர் ரொம்ப tight schedule..
வாத்தியாரும் வாரமலர் பக்திமல்ர் வகையறாக்களை ஏறக்கட்டிவிடலாம்..இதிலேருந்துதான் பெரும்பாலும் சர்ச்சை கிளம்புகிறது..

இதுபோன்ற வகைகளில் pindrop silence ஆகக் கிளாசை கொண்டு செல்லலாம்..கருத்துக் கேட்டதற்கு நன்றி..

rajakala said...

அன்புள்ள ஆசிரியருக்கு இந்த வகுப்பறையில் மாணவர்களுக்கிடையே ஒரு ஆரோக்கியமான relationship மற்றும் ஒரு lively relationship இருந்து வருகிறது.அதில் ஒரு சின்ன சலசலப்பு.மற்றபடி எப்போதும் போல் கலகலப்பு தொடர்வதையே விரும்புகிறேன் நன்றி

Arul Murugan. S said...

இடைச்செருகல் பற்றி என் கருத்து...

எந்த ஒரு வகுப்பறைக்குமே ஆசிரியரின் உரை / பாடம் / பேச்சே பிரதானமாக இருப்பது தான் வகுப்பறைக்கு அழகு. மாணவர்களிடம் பொதுவாக ஆசான் / குரு விடம் காணப்படுகின்ற அளவு முதிர்ச்சியையும், இடத்திற்கு பொருத்தமான பேச்சையும் எதிர்பார்க்க இயலாது.

மாணவர்களை Stage'ல் ஏறி தொடர்ந்து பேச சொன்னால் யார் மனமாவது புண்பட or கருத்து மோதல் ஏற்பட வாய்ப்பு நிறையவே உண்டு. எனவே பதிவுகள் இயற்றும் / வெளியிடும் உரிமையை ஆசிரியர் அவர்கள் தன் வசம் மட்டும் வைத்துக் கொள்வது நல்லது. பின்னூட்டங்களிலும் unnecessary or unsuitable content'ஐ ஆசிரியர் cut செய்து வெளியிடலாம். Captain of the Ship, குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு we all should uphold decorum of the blog , by stopping quarelling.

kmr.krishnan said...

///வாத்தியாரும் வாரமலர் பக்திமல்ர் வகையறாக்களை ஏறக்கட்டிவிடலாம்..இதிலேருந்துதான் பெரும்பாலும் சர்ச்சை கிளம்புகிறது..///

நான் இலண்டனில் இருந்து திரும்பியதும்,ஐயாவுக்கு மின் அஞ்சல் எழுதி நான் தொடர்ந்து எழுதவா என்று கேட்டேன்.அவருடைய அனுமதியின் பேரிலேயே எழுதிவருகிறேன்.

ஒவ்வொரு முறை ஆக்கத்தை அனுப்பும் போதும் தகுதியிருந்தால் மட்டுமே வெளியிடவும் என்று குறிப்புடந்தான் அனுப்புவேன்.

குறைந்த எண்ணிக்கையில் என் ஆக்கங்கள் நிராகரிக்கப்பட்டதும் உண்டு.

சில வாக்கியங்கள் ஐயாவால் மாற்றி அமைக்கப்பட்டதும் உண்டு.இதுவும் மிகச்சில சமயங்கள் தான்.

என் பின்னூட்டங்கள் அனைத்துமே மேல் அதிகத்தகவல் அளிப்பதாகவே இருக்கும்.ஒருமுறை நண்பர் ஆலாசியத்தின் ஆக்கத்திற்கு, நான் அளித்த பின்னூட்டத்தை ஆலாசியம் தவறாகப் புரிந்து கொண்ட போது நிபந்தனை அற்ற மன்னிப்புக் கேட்டேன்.

என்னுடன் மல்லுக்கட்டும் நண்பரை தொடர்ந்து 'நீங்களும் எழுத வாருங்கள்' என்றே கேட்டு வந்துள்ளேன்.'உங்களுக்கு நிறைய விஷ‌யம் தெரியும் போல உங்கள் பின்னூட்டத்திலிருந்து அறியக் கிடைக்கிறது. அதனால் உங்கள் அறிவினை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்'என்றே தொடர்ந்து கேட்டு வந்துள்ளேன்.

ஒவ்வொரு முறையும் என்னுடைய பழைய பின்னூட்டத்திலிருந்து சொற்களை எடுத்துக் குத்திக் காண்பிப்பார்.

இப்போதும் நான் 'எழுத வாருங்கள்' என்று கேட்டதற்கு,"ஓட்டை பலூனில் ஊத விருப்பமில்லை.." என்று பதில் அளித்தார். இது என்னைக் கொஞ்சம் அசைத்துவிட்டது.

யார் ஓட்டை பலூன்? நான் மட்டுமா?அல்லது வகுப்பறைக்கு வரும் அனைவ‌ருமா? என்ற கேள்வி என் முன் நின்ற போது,
என்னை அறியாமல் சற்று நிதானம் இழந்து வார்த்தை ஆடிவிட்டேன்.

வகுப்பறையின் அமைதியை கெடுக்க என் உணர்ச்சி வேகம் காரணம் என்றால் அனைவரிடமும் மன்னீப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

இனி தொடர்ந்து எழுதச் சொன்னால் எழுதுகிறேன். இல்லாவிட்டல்
நடையைக் கட்டுகிறேன்.

Anything which starts has to end.

மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

ananth said...

//உள்ளேன் அய்யா..இன்றைய பதிவு அருமை..வணக்கம்..வாழ்த்துக்கள்' என்று சொல்லிக் கூட கமெண்ட்டுகள் வருவதில்லை..//

சரி நான் சொல்கிறேன். உள்ளேன் ஐயா.

//இவை இரண்டிற்கும் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்//

இதைப் பற்றி கருத்து சொல்லி... எனக்கு எதற்கு வீண் பொல்லாப்பு. கொட்டுவதென்பது தேளின் சுபாவம். அதை யாராலும் மாற்ற முடியாது. நானும் இந்த வகுப்பறைக்கு ஏதும் எழுதி அனுப்பலாம் என்று நினைத்தேன். அனுப்பாததற்கு காரணம் இருக்கும் பிரச்சினை போதாதென்று இது வேறா.

//புதன் (Planet for Astrology) வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும்.//

Noted. என் ஜாதகத்தில் லக்கினத்தைத் தவிர கிரகங்கள் ஏதும் வர்கோத்தமம் பெறவில்லை. ஒவ்வொன்றிற்கும் ஒரு விசேஷம் இருப்பது போல் இதற்கும் ஒரு விசேஷம் இருக்கிறது.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger தேமொழி said...
ஐயா,
என் தகுதி நிலை அறிக்கையை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்....
ஜோதிடக் கலை அறியும் தகுதி நிலை அறிக்கை:
ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும் = உண்டு
புதன் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும் = புதன் இருப்பது திரிகோணம்/ஐந்தாம் வீடு ரிஷபத்தில்
புதன் வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும் = :-(
ஐந்தாம் அதிபதியும், பத்தாம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் பார்வையில் இருக்க வேண்டும் = ஐந்தின் அதிபதியும் பத்தின் அதிபதியும் சுக்கிரனே, அவர் ஏழாம் வீட்டில் இருந்து பத்தாம் வீட்டு காரகன்/லக்கினத்தில் இருக்கும் சனியை ஏழாம் பார்வை
அத்துடன்; கேது மகரத்தில், ராகு கடகத்தில் தானே தேடிப்பிடித்து பயிலும் ஆர்வம் (சின்னவாத்தியார் சொல்லித் தந்தார்) = தானே தேடி வந்து வகுப்பறையில் பதிவு செய்து கொண்டது.
நன்றி ஆசிரியரே/////

தொடர்ந்து படியுங்கள். மற்றதை எல்லாம் தேனாண்டவர் பார்த்துக்கொள்வார்!

SP.VR. SUBBAIYA said...

/////// Blogger Srinivasa Rajulu.M said...
//அதைவிட முக்கியமாக நீங்கள் அட்டை (Board) மாட்டி ஜோதிடம் சொல்லத் துவங்குவதற்கு உங்களுக்கு நல்ல தசா புத்தி நடைபெறவேண்டும்//
நூறு சதவீதம் சரி அய்யா. இது ஜோதிடத்தைப் போலவே எல்லா துறைகளுக்கும் கூட பொருந்துகிறது.
Although many horoscopes may look similar, a few of them become famous and some of them secure a place in history. The saying, 'Right thing at right time' comes to my mind. (Meanwhile, I quickly checked the horoscope of Late Sri. B.V.Raman and found that Mercury is in vargottamam and has 5 suya-parals)
நன்றி அய்யா./////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
கடைசியில் கூறியது நல்ல அறிவுரை ஐயா!.சோதிடத்தில் வந்த பணம் நிலைக்காது என்பார்கள். ஒரு சுவடி படிப்பவர் எங்கள் பகுதியில் கொடிகட்டிப் பறந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு நாளைக்கு 3000 வருமானம்.
எல்லாம் போய் வீதிக்கு வந்ததையும் கண்ணால் கண்டேன்.
புதன் 2ல் வாக்கு ஸ்தானத்தில் இருந்தாலும் சொன்னது பலிக்கும் என்பார்கள்.
எனக்கு புத‌ன், சூரியன், சனி 2ல் சிம்மத்தில்.கெட்டது சொன்னால் பலித்து விடுகிறது. எனவே மிகவும் சிரமப்பட்டு நல்லதாகவே சொல்ல முயற்சி செய்கிறேன்.அப்படி சொல்லும் போது சொற்களுக்கு மிகவும் திண்டாடுவேன்./////

அதுபோன்ற சமயங்களில் மெளனமாக இருந்துவிடுங்கள்!:-)))))

SP.VR. SUBBAIYA said...

///Blogger Srinivasa Rajulu.M said...
இடைச் செருகலுக்கு:
வகுப்பறை மாணவர்களின் மனவோட்டம் தெரிந்தவர் வாத்தியார் அவர்கள். எனவே, வகுப்பறைக்குத் தகுந்தாற்போல் இடுகைகளையும் பின்னூட்டங்களையும் திருத்தி வெளியிடலாம். கருத்துக்களை அனுப்புபவர்கள் இதைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
நன்றி/////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Srinivasa Rajulu.M said...
இடைச் செருகலுக்கு (மேலும் ஒன்று) :
திருத்தம் மட்டுமல்ல. சில கருத்துக்களை வெளியிடாமல் இருக்கவும் வாத்தியாருக்கு உரிமை உண்டு. இங்கு எல்லோரும் நண்பர்கள். எனவே, தவறாக நினைக்க மாட்டார்கள்.
நன்றி/////

இந்தக் கருத்திற்கும் ஒரு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger RAMADU Family said...
Guru Vanakkam,
budhan in 9th house, More important ketu in 5th house. Hope I will get (with the help of Ketu) the knowledge thru him.
இடைச்சேர்க்கை :
Good if we are within our boundry. But I don't feel anything alarming.
"idhuvum kadandhu pogum"
Ramadu.////

உங்கள் அனுபவம் பேசுகிறது. அதுதான் உண்மை!

SP.VR. SUBBAIYA said...

T
Blogger தமிழ் விரும்பி said...
உண்மை தான் திரு.வெ.கோ ஐயா அவர்கள் கூறியதையே நானும் கூற ஆசைப் பட்டேன்... ஆனால், அது அதிகப் பிரசங்கித் தனமாக போகுமோ என்றும் அஞ்சி அமைதி காத்தேன். இப்போது அப்படி இருக்க வேண்டாம் என்று ஐயா அவர்களின் பின்னூட்டம் கண்டு மீண்டும் ஐயா அவர்கள் கூறியதையே நானும் வழிமொழிகிறேன்.
அவரவர், அபிப்ராயங்கள் தானே... இப்படி ஒதுங்க வேண்டாம் என்று நானும் கேட்டுக் கொள்கிறேன். விசு ஐயர்! எனது வேண்டுகோளை செவிமடுக்க வேண்டுகிறேன்.
நன்றி, வணக்கம்,
அன்புடன்,
ஆலாசியம் கோ./////

உங்கள் கருத்துத்தான் எனது கருத்தும். பார்க்கலாம் - விசுவநாதன் வேண்டுகோளைச் செவிமடுப்பார் என்று நம்புகிறேன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger thanusu said...
கரெக்ட். Mr.ராஜ் சொன்னது சரி . இதே எண்ணம் எனக்கும் வந்தது .கருத்து மோதலை விட கருத்து விளக்க மோதல் மேலானது. பொது இடத்தில மோதல் வரும்போது அதை பார்பவருகும் படிபவருக்கும் அந்த கருத்துகளை ஆராயவே எண்ணம் வரவேண்டுமே தவிர , ஹய்....யா.... சொந்தகதை தொடங்கி விட்டதே என்ற அலுப்பு வரகூடாது ஆனால் வந்து விட்டது , அது இனி வராமல் பார்த்துகொள்வது நம் பொறுப்பே. Mr KMR and Mr ayyar இருவரும் மீண்டும் வகுப்பறையில் இணைவார்கள்.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///Blogger தமிழ் விரும்பி said...
திருவாளர் அந்தோணி ராஜ் அவர்கள் கூறியதையும் மறுப்பதற்கு இல்லை...
"அளவுக்கு மீறும் போது அமுதமும் நஞ்சாகிறது"
இது வகுப்பறை என்பதாலோ? பள்ளி நாட்களில் (கல்லூரி அல்ல) குழுமியது போலவே இருக்கவும் செய்கிறது.
உங்கள் அபிப்ராயத்தையும் என் போன்றவர்கள் கணக்கில் கொள்வதும் மிகவும் அவசியமே....
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.... சில / பல நேரங்களில் எரிச்சல் அடையச் செய்திருந்தால்
வருந்துகிறேன்.. திருத்தியும் கொள்கிறேன். வகுப்பறை நல்ல இதயங்களை இணைக்கும் தளமாக இருக்கிறது.. இங்கு வந்தபின்பு நான் பெரிய மனிதர்களின் அறிமுகமும், தொடர்பும் பெற்றேன் அது தொடர வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கவும் விரும்புகிறேன்.
நன்றி வணக்கம்,
அன்புடன்,
ஆலாசியம் கோ.////

உள்ளம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

Blogger Govindasamy said...
அய்யா..
வகுப்பறை கலகலப்பாய் இருக்க வேண்டுமே தவிர கலகலத்துப் போகக் கூடாது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
உங்களது வகுப்பறைக்கு மதங்களையும், நம்பிக்கைகளையும் மீறி மாணவர்கள் வருகிறார்கள் என நினைக்கிறேன். இது ஒரு virtual classroom என்பதனால் இது சாத்தியப் படுகிறது.
பலர் சோதிடத்தையும் மீறி தங்களது எழுத்து நடைக்காகவே வருகின்றனர். இது உங்களது அனுசரனையன எழுத்துக்களிலும் யாரையும் புண்படச் செய்யா நோக்கில் தாங்கள் சொல்லும் விதத்திலும் வெளிப்படுவதைக் கண்டிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலே உங்களது மனிதாபிமானம் மற்றும் மென்மையான குணம் பாரட்டற்குரியது.
எத்துனையோ முறை வகுப்பறை மாணவர் திரு கண்ணனுக்கு " எல்லாவற்றையும் தூக்கி யெறிந்துவிட்டு அனுஷ்கா மாதிரி ஒரு பெண்ணை மனமுடித்துக் கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கத் துவங்குங்கள் " என நீங்கள் முதுகில் தட்டி தேற்றியதாக நினைவு.
இது எனக்கு மிகவும் பிடித்தது. இச்சமயத்தில் ஒரு சோதிட வல்லுனராய் இல்லாது அதற்கும் மேலே சென்று அவரது அன்னையாய் அவருக்கு புத்தி சொன்னது என்னை வசீகரித்தது. இது.. இதுமட்டுமே மனிதரை வாழ வைக்கும் சோதிடம்.
தயை செய்து கீழுள்ள url அய் வெளியிடுங்கள். இந்தப் பதிவுகள் மனிதனது வாழ்க்கையை மதங்களுக்கு அப்பால் அலசுகின்றன என்பது எனது கருத்து..
பிறப்பின் பயனை அடைய நாம் செய்ய வேண்டுவன எவை?
http://vettipaechchu.blogspot.com/2011/06/blog-post_05.html
நம் பிறப்பிலே பயனுண்டா?
http://vettipaechchu.blogspot.com/2011/06/blog-post.html
உணர்தலின் மேன்மை உயிரின் மேம்படுதலா?
http://vettipaechchu.blogspot.com/2011/06/blog-post_20.html
மற்றபடி எனக்கும் உமது வகுப்பறையில் ஒரு இடம் கொடுத்தமைக்கும் எனது கருத்துக்களை வெளியிட்டமைக்கும் நன்றிகள்.
இது யாரையும் புண்படுத்தும் நோக்கோடோ அல்லது ஆதரித்து /எதிர்க்கும் நோக்கோடோ சொல்லப்பட்டவை அல்ல.
மீண்டும் நன்றிகள்/////

உங்களின் கருத்துப் பகிர்விற்கும், பாராட்டிற்கும் நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Uma said...
புதன் ஆட்சியில் / கூடவே லக் அதி சனியுடன், இருந்தாலும் இரண்டும் ஆறில். ஆனாலும் நல்ல ஞாபக சக்தி இருக்கிறது. வாக்கு ஸ்தானத்தில் குரு. நவாம்சத்தில் இரண்டில் புதன் / கூட ராகு. ஐந்து/பத்து அதி ஒருவரே. சுக். அவர் நாலில் அமர்ந்து ஏழாம் பார்வையாக சொந்த வீட்டைப்பார்க்கிறார்.
இறையருளால் நமக்கு வேறு தொழில் இருக்கிறது.//
மிகச்சரி. நானும் கற்றுத்தேறும் ஆர்வத்தில்தான் படிக்கிறேன்.////

ஆகா..தொடர்ந்து படியுங்கள். மற்றதை மன்மோகன்சிங் பார்த்துக்கொள்வார். சாரி...பழநிஅப்பன் பார்த்துக்கொள்வார்

SP.VR. SUBBAIYA said...

Blogger minorwall said...
'classroom chat வேண்டும்..ஆக்கபூர்வமான விவாதங்களும் சேரவேண்டும்..இல்லையென்றால் வகுப்பு கலையிழக்கும்' என அறிவுறுத்தி தஞ்சாவூரார் போன்று ஜாதகம் படிக்கவென்று வராவிட்டாலும் எப்போதாவது கலகலப்புக்காக வகுப்பறைக்கு வருவோரும் உள்ளனர்..
ஜாதகம் படிப்பது மட்டுமே என்று சீரியஸ் டைப் ஆட்களும் உள்ளனர்..
இது எங்குமே இருக்கிற நிலை..எல்லா பள்ளி, கல்லூரிகளிலுமே இருக்கிற நிலை..
எதோ ஒரு விஷயம் நடந்த பின் அதை எப்படி நாம் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே பின்னூட்டங்களும் அமைகின்றன..எதை குப்பைப் பின்னூட்டம் என்றும், எது தகுதியானது என்றும் ஆராயத் தொடங்கினால் அதை புகாரெழுப்பியவருக்கு அனுப்பினால்தான் அவரின் மன ஒத்திசைவுக்கு இயங்கி அதன் படி அவர்தம் விழைவுப்படி எடிட்டிங் செய்யப்படமுடியும்..
ரெண்டு மூணு நாளா கொஞ்சம் அதிகபட்சமாக ஆகிப்போனதென்னவோ உண்மைதான்..சிலருக்கு அரட்டை பொறுக்காது கோபம் வருவதும் இயல்புதான்.. இப்படி சமீபகாலமாக வெட்டி அரட்டையில் ஈடுபட்டோரை கிளாஸ்ரூமை விட்டு எக்ஸ்பெல் பண்ணிவிட்டு சீரியஸ் ஆட்களை மட்டும் கொண்டு கிளாஸ் எடுக்கலாம்..இது ஒரு வழி..
லிஸ்ட் போட்டால் ஒரு ஏழெட்டு பேர் தேறும். இதிலே வாத்தியாரும் அவப்போது வருவதால் எப்படிப் பரிசீலிப்பது? யார் முடிவெடுப்பது? இவர்கள் மட்டுமே பெரும்பாலும் கமென்ட் அடிக்கிறார்கள்..மற்றபடி 2700 பேருள்ள ஒரு கிளாஸ்ரூமில் யாரும் படிக்கிறார்களா?இல்லியா என்பது கூட தெரியவில்லை..படித்துப் பின்னூட்டமிடும் ஆசாமிகளைக் கணக்கெடுத்தால் தெரியும்..
'உள்ளேன் அய்யா..இன்றைய பதிவு அருமை..வணக்கம்..வாழ்த்துக்கள்' என்று சொல்லிக் கூட கமெண்ட்டுகள் வருவதில்லை..
அதிகமாக விளக்கிக் கமெண்டுகள் அடித்தாலும் பிரச்சினை இப்படிப் போகிறது..நேத்திக்கு ஒருத்தர் இப்படித்தான் வேகப்பட்டார்..இன்னொருத்தர் வெளியேறுகிறேன் என்றார்..
புகார் கொடுத்த மாணவரின் சோதிட ஆர்வத்தைப் பாராட்டி இனிமேல் கமென்ட் அடிப்பதை நான் நிறுத்தினால் கொஞ்சம் தொல்லை குறையும் என்று நினைக்கிறேன்..எனக்கும் வின்ட்டர் ரொம்ப tight schedule..
வாத்தியாரும் வாரமலர் பக்திமல்ர் வகையறாக்களை ஏறக்கட்டிவிடலாம்..இதிலேருந்துதான் பெரும்பாலும் சர்ச்சை கிளம்புகிறது..
இதுபோன்ற வகைகளில் pindrop silence ஆகக் கிளாசை கொண்டு செல்லலாம்..கருத்துக் கேட்டதற்கு நன்றி..///////

pin drop silence என்றால் தூக்கம் வருமே மைனர்! அதனால் கலகலப்பாகவே வகுப்பறையைக் கொண்டு செல்வோம். பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்வோம். வந்தால் சமாளிப்போம். மனது வைத்தால் முடியாதது ஒன்றுமில்லை!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger rajakala said...
அன்புள்ள ஆசிரியருக்கு இந்த வகுப்பறையில் மாணவர்களுக்கிடையே ஒரு ஆரோக்கியமான relationship மற்றும் ஒரு lively relationship இருந்து வருகிறது.அதில் ஒரு சின்ன சலசலப்பு.மற்றபடி எப்போதும் போல் கலகலப்பு தொடர்வதையே விரும்புகிறேன் நன்றி////

உங்கள் விருப்பம் நிறைவேறும் சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Arul Murugan. S said...
இடைச்செருகல் பற்றி என் கருத்து...
எந்த ஒரு வகுப்பறைக்குமே ஆசிரியரின் உரை / பாடம் / பேச்சே பிரதானமாக இருப்பது தான் வகுப்பறைக்கு அழகு. மாணவர்களிடம் பொதுவாக ஆசான் / குரு விடம் காணப்படுகின்ற அளவு முதிர்ச்சியையும், இடத்திற்கு பொருத்தமான பேச்சையும் எதிர்பார்க்க இயலாது.
மாணவர்களை Stage'ல் ஏறி தொடர்ந்து பேச சொன்னால் யார் மனமாவது புண்பட or கருத்து மோதல் ஏற்பட வாய்ப்பு நிறையவே உண்டு. எனவே பதிவுகள் இயற்றும் / வெளியிடும் உரிமையை ஆசிரியர் அவர்கள் தன் வசம் மட்டும் வைத்துக் கொள்வது நல்லது. பின்னூட்டங்களிலும் unnecessary or unsuitable content'ஐ ஆசிரியர் cut செய்து வெளியிடலாம். Captain of the Ship, குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு we all should uphold decorum of the blog , by stopping quarelling.////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
///வாத்தியாரும் வாரமலர் பக்திமல்ர் வகையறாக்களை ஏறக்கட்டிவிடலாம்..இதிலேருந்துதான் பெரும்பாலும் சர்ச்சை கிளம்புகிறது..///
நான் இலண்டனில் இருந்து திரும்பியதும்,ஐயாவுக்கு மின் அஞ்சல் எழுதி நான் தொடர்ந்து எழுதவா என்று கேட்டேன்.அவருடைய அனுமதியின் பேரிலேயே எழுதிவருகிறேன்.
ஒவ்வொரு முறை ஆக்கத்தை அனுப்பும் போதும் தகுதியிருந்தால் மட்டுமே வெளியிடவும் என்று குறிப்புடந்தான் அனுப்புவேன்.
குறைந்த எண்ணிக்கையில் என் ஆக்கங்கள் நிராகரிக்கப்பட்டதும் உண்டு.
சில வாக்கியங்கள் ஐயாவால் மாற்றி அமைக்கப்பட்டதும் உண்டு.இதுவும் மிகச்சில சமயங்கள் தான்.
என் பின்னூட்டங்கள் அனைத்துமே மேல் அதிகத்தகவல் அளிப்பதாகவே இருக்கும்.ஒருமுறை நண்பர் ஆலாசியத்தின் ஆக்கத்திற்கு, நான் அளித்த பின்னூட்டத்தை ஆலாசியம் தவறாகப் புரிந்து கொண்ட போது நிபந்தனை அற்ற மன்னிப்புக் கேட்டேன்.
என்னுடன் மல்லுக்கட்டும் நண்பரை தொடர்ந்து 'நீங்களும் எழுத வாருங்கள்' என்றே கேட்டு வந்துள்ளேன்.'உங்களுக்கு நிறைய விஷ‌யம் தெரியும் போல உங்கள் பின்னூட்டத்திலிருந்து அறியக் கிடைக்கிறது. அதனால் உங்கள் அறிவினை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்'என்றே தொடர்ந்து கேட்டு வந்துள்ளேன்.
ஒவ்வொரு முறையும் என்னுடைய பழைய பின்னூட்டத்திலிருந்து சொற்களை எடுத்துக் குத்திக் காண்பிப்பார்.
இப்போதும் நான் 'எழுத வாருங்கள்' என்று கேட்டதற்கு,"ஓட்டை பலூனில் ஊத விருப்பமில்லை.." என்று பதில் அளித்தார். இது என்னைக் கொஞ்சம் அசைத்துவிட்டது.
யார் ஓட்டை பலூன்? நான் மட்டுமா?அல்லது வகுப்பறைக்கு வரும் அனைவ‌ருமா? என்ற கேள்வி என் முன் நின்ற போது,
என்னை அறியாமல் சற்று நிதானம் இழந்து வார்த்தை ஆடிவிட்டேன்.
வகுப்பறையின் அமைதியை கெடுக்க என் உணர்ச்சி வேகம் காரணம் என்றால் அனைவரிடமும் மன்னீப்புக்கேட்டுக்கொள்கிறேன்.
இனி தொடர்ந்து எழுதச் சொன்னால் எழுதுகிறேன். இல்லாவிட்டால்
நடையைக் கட்டுகிறேன்.
Anything which starts has to end.
மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.////

உங்களுடைய தன்னிலை விளக்கத்திற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ananth said...
//உள்ளேன் அய்யா..இன்றைய பதிவு அருமை..வணக்கம்..வாழ்த்துக்கள்' என்று சொல்லிக் கூட கமெண்ட்டுகள் வருவதில்லை..//
சரி நான் சொல்கிறேன். உள்ளேன் ஐயா.
//இவை இரண்டிற்கும் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்//
இதைப் பற்றி கருத்து சொல்லி... எனக்கு எதற்கு வீண் பொல்லாப்பு. கொட்டுவதென்பது தேளின் சுபாவம். அதை யாராலும் மாற்ற முடியாது. நானும் இந்த வகுப்பறைக்கு ஏதும் எழுதி அனுப்பலாம் என்று நினைத்தேன். அனுப்பாததற்கு காரணம் இருக்கும் பிரச்சினை போதாதென்று இது வேறா.
//புதன் (Planet for Astrology) வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும்.//
Noted. என் ஜாதகத்தில் லக்கினத்தைத் தவிர கிரகங்கள் ஏதும் வர்கோத்தமம் பெறவில்லை. ஒவ்வொன்றிற்கும் ஒரு விசேஷம் இருப்பது போல் இதற்கும் ஒரு விசேஷம் இருக்கிறது./////

பிரச்சினை எதில்தான் இல்லை? எழுதுங்கள். வந்தால் ஒரு கை பார்த்துவிடலாம்.