மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.1.10

Doubt: நாட்டாமையின் மகனுக்கு எதற்காகப் பயப்பட வேண்டும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: நாட்டாமையின் மகனுக்கு எதற்காகப் பயப்பட வேண்டும்?

Doubts: கேள்வி பதில் பகுதி 18

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பதினெட்டு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email No.71
வெண்மதி, மலேசியா
1
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். தங்களின் கேள்வி பதில் வகுப்புக்கு நன்றி.
என்னுடைய கேள்விகளுக்கும் பதில் தர வேண்டுகிறேன்.
என்னுடைய கேள்விகள் இதோ.

1. குரு 8‍‍ம் இடத்தில் (மறைவிடம்)இருந்து அந்த வீட்டின் பரல்களும் மிக குறைவாக (23) இருக்கின்றபோது குருவின் நன்மைகளை பெற நவக்கிரகத்தில் உள்ள குருவை வணங்குவதா அல்லது சிவனின் அம்சமாக(குருவான நிலை) உள்ள தெட்சிணாமூர்த்தியை வணங்குவதா? இருவருக்கும் என்ன வேறுபாடு
விளக்கமாக கூறங்கள்.

தெட்சிணாமூர்த்தி என்பது சிவனின் வடிவம்தான். எந்தவடிவத்தை வேண்டுமென்றாலும் நீங்கள் வணங்கலாம்! (Dakshinamurthy is one form of Lord Shiva, where Lord Shiva is the Guru or teacher of all types of knowledge.)

2. இதேபோல் சனிபகவான் மறைவிடத்திலோ அல்லது வக்கிரமாகி இருந்தாலோ சனிபகவானின் (சுய பரல்கள் 2) நன்மைகளை பெற நவக்கிரகத்தில் உள்ள சனிபகவானை வணங்குவதா அல்லது ஆஞ்சனேயரை
வணங்குவதா? இருவருக்கும் என்ன வேறுபாடு விளக்கமாக கூறங்கள்.

சனிக்கும், ஆஞ்சனேயருக்கும் புராணங்களின்படி ஒரு தொடர்பு உண்டு. அதை எழுதினால், இன்றைய இளைஞர்கள், நம்பாமல், அதற்கும் சான்று கேட்பார்கள். எல்லாவற்றிற்குமே நம்பிக்கைதான் அடிப்படை. ஆகவே சனியின் உபாதைகளில் இருந்து மீள்வதற்கு, ஆஞ்சனேயர் உதவுவார் என்ற நம்பிக்கையோடு, அவரையே வணங்குங்கள். குறிப்பாக ஏழைரைச் சனி மற்றும் அஷ்டமச் சனி ஆட்டிவைக்கும்போது, ஆஞ்சனேயரை வழிபடலாம்! மற்ற காலங்களில் சனீஷ்வரனை வழிபடலாம்.

3. விருச்சிக லக்கினத்திற்கு செவ்வாய் லக்கினாதிபதி மற்றும் 6ம் வீட்டதிபதியும் கூட. செவ்வாய் கடகத்தில் நீச்சமாகி இருக்கின்றபோது செவ்வாய் நன்மை செய்வாரா? தீமை செய்வாரா? லக்கினாதிபதியின் அருளைப்பெற வழி (பரிகாரம்) உண்டா? விளக்க வேண்டுகிறேன்.

நீசமானவரிடமிருந்து எப்படி நன்மைகளை எதிர்பார்க்கிறீர்கள்? அதற்கு ஜாதகத்தில் வேறு இடத்தில் நஷ்டநீடு வழங்கப்பெற்றிருக்கும். ஆகவே கவலையை விடுங்கள். செவ்வாயின் பாதிப்புக்களில் இருந்து விடுபட
குமரக்கடவுளை வழிபடுங்கள் (Mars is ruled by Muruga also called Subramanya or Karthikeya. Propitiation of Muruga controls the bad results from Mars)

4. 9 கிரகங்களின் ஓரப்பார்வை எவை? விளக்க வேண்டுகிறேன் (நேர்ப்பார்வை 7ம் பார்வை என்பதை அறிவேன்)

ஓரப்பார்வை என்பது நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்டது. அதற்கு உண்மையான பெயர் விஷேசப் பார்வை (special aspect) குரு, செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்களுக்கு மட்டுமே விஷேசப் பார்வைகள் உண்டு.
குருவிற்கு விஷேசப் பார்வை (அவர் இருக்கும் இடத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்) 5ஆம் இடம், 9ஆம் இடம். செவ்வாய்க்கு விஷேசப் பார்வை (அவர் இருக்கும் இடத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்) 4ஆம் இடம், 8ஆம் இடம். சனிக்கு விஷேசப் பார்வை (அவர் இருக்கும் இடத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்) 3ஆம் இடம், 10ஆம் இடம்

5. ராசி கட்டத்திலும் நவம்ச கட்டத்திலும் லக்கணம் மாறியிருக்கிறபோது, நவம்சத்தில் கிரகங்களின் வீடுகளைக் கணக்கிடுகின்றபோது (1ம் வீடு, 2ம் வீடு,...) ராசி கட்டத்தில் லக்கணம் வீட்டிலிருந்து எண்ணுவதா அல்லது
நவம்ச கட்டத்தில் லக்கணம் வீட்டிலிருந்து எண்ணுவதா? உதாரணத்திற்கு ராசி கட்டத்தில் லக்கணத்தின் வீடு ரிசபம், நவம்ச கட்டத்தில் லக்கணத்தின் வீடு மேசம், ஒவ்வொரு கிரகமும் எத்தனையாவது வீட்டில் உள்ளது
என்று பார்க்க ரிசபத்திலிருந்து துவங்குவதா அல்லது மேசத்திலிருந்து துவங்குவதா?. மேசத்திலிருந்து துவங்கினால் மகரம் 10ம் விடு. மகரம் விட்டில் கிரக நிலை, கிரகங்களின் பார்வை வைத்து தொழில் பற்றி அலசலாமா? விளக்கமாக கூறவும்.

குழப்பிக்கொள்கிறீர்களே? நவாம்சம் என்பது ராசியைப் பூதக்கண்ணாடியால் காட்டும் படம். Navamsam is the magnified version of a Rasi Chart) பாண்டி ஆட்டத்தை ராசியில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். நவாம்சத்தில் வேண்டாம். நீங்கள் பெண்ணாக இருப்பதால் பாண்டி ஆட்டம் பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதாவது லக்கினத்தில் இருந்து கட்ட எண்ணிக்கைகளை ராசியில் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.

விளக்கங்கள் போதுமா சகோதரி?
--------------------------------------------------------
email.72
ரமேஷ் வேலுச்சாமி

Sir,
This Question is Regarding Parents
9th house & 10 th house are in Parivartna [10 th lord exchange in exaltion [sukran - kanni & Budhan - Thulam]]. and in thasmsa three planets are utcham[i,e sevvai, bhudan, ketu ] and two planets are in their own house [i,e guru & sani]. chandran in thasmsa lagna and sukran in 2nd house]. My question is :
i had gone through horoscope of my friend's daughter. before her birth their parents are not well settled after her birth they are continously in positive node. is it because of her chart. because you had told that a child horoscope will work after 12 years but the child is only 5 yrs old.

பொதுவாக 12 வயதுவரை குழந்தையின் ஜாதகம் பெற்றோர்களை வைத்துத்தான். அக்குழந்தை செல்வச் செழிப்புடன் வளர வேண்டும் என்றால், அந்தக் குழந்தையை வைத்துப் பெற்றோர்களுக்கு அதற்குத் தேவையான பணம் வரும்!
------------------------------------------------------
email.73
சேகர் வெங்கடேசன்

அன்புள்ள அய்யா,

கேள்வி பதில் பகுதி மிகவும் சுவை. அதிலும் உங்கள் பதில்கள் சில கொஞ்சுகிறது. சிலவற்றில் உரிமையுடன் கண்டிப்பும் தெரிகிறது. அதுதான் சிறப்பு என்று நினைக்கின்றேன். என் சந்தேகங்கள்.

1 அயனாம்சம் சித்ர பக்க்ஷ (365 .25 days ) முறையில் துலாமில் சனி உச்சம். மகரத்தில் குரு நீச்சம். குறிப்பு. நீச்ச பங்க பலன்( பிறந்த போது கொடுக்கப்பட்ட ஜாதக கட்டம் இந்த முறை ) ராமன் (360 days ) முறையில் லக்னத்தில் சனி. மகரத்தில் குரு நீச்சம். நீச்ச பங்க பலன் என்று குறிப்பு.
சனி விசேஷ மூன்றாம் பார்வையால் நீச்ச பங்கமா என்பது என் சந்தேகம். பிறந்த தேதி 05-06-1985 நேரம் 18- 22 இடம் சென்னை] 2. இரு முறையிலும் அம்சங்கள் மாறுகிறது. எது சரி?

கால சந்திப்பில் பிறந்தவர்களுக்கு சமயத்தில் லக்கினமும் மாறும். ராசி சந்திப்பில் உள்ள கிரகங்களும் மாறும். நீங்கள் ராமன் அயனாம்சத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது சரியான ஜாதகத்தைக் கொடுக்கும்!

3. விருச்சிக லக்னம் லக்னாதிபதி செவ்வாய் எட்டில் தோஷமா? தோஷம் என்று குறிப்பு உள்ளது.

லக்கினாதிபதி எட்டில் இருப்பது ஜாதகனுக்கு நன்மையைச் செய்யாது. போராட்டம் மிகுந்த வாழ்க்கை. எதையும் போராடித்தான் பெற வேண்டும். விருச்சிக லக்கினத்திற்கு செவ்வாய் அதிபதி. அதிபதி தனக்குத்தானே தோஷத்தைச் செய்துகொள்ள மாட்டான். அதனால் தோஷம் இல்லை!
--------------------------------------------------------------
email.74
சரவணகுமார்

அன்புள்ள ஐயா,

1.ஜாதகருக்கு, பஞ்சமகாயோகத்தில் எதாவது ஒரு யோகம் இருந்தால் அவயோகம் எல்லாம் தடைப்படுமா? உதாரணமாக, மாளவ்யா யோகம் உள்ளவர்களுக்கு மற்ற அவயோகம் எல்லாம் செயல் இழக்குமா?

ஒரு யோகத்தை வைத்து மற்ற அவயோகங்கள் எப்படி நீங்கும்? நல்ல யோகங்களும், அவயோகங்களும் கலந்ததுதான் ஜாதகம். ஒன்றிற்குப் பயந்து மற்றொன்று எப்படிப் போகும் அல்லது நீங்கும்? நாட்டாமையின் மகன் என்பதற்காக ஊரில் உள்ள அத்தனை பேரும் பயப்படுவானா என்ன?

2.யோகம் ராசியில் இருந்தால் பலன் உண்டா? அல்லது அம்சதில் சுக்ரன் நிலையும் பொறுத்து உண்டாகுமா?
அன்புடன்
சரவண்

அம்சத்தை இன்னும் நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அம்சப் பாடத்தை மீண்டும் மீண்டும் புரிகின்றவரை படியுங்கள். சுக்கிரனைப் பொறுத்து என்றால் பிடிபடவிலை ஸ்வாமி. என்ன சொல்ல வருகிறீர்கள்? சுக்கிரன் என்ன நம் மாமானாரா? அவரைப் பொறுத்து எதற்காக எதன் நிலை மாறும் என்று
எதிர்பார்க்கிறீர்கள்?
-------------------------------------------
email No.75
சுந்தரி பரமசிவம், சென்னை

சார் வணக்கம்,

1.நீங்க குழந்தை இருக்கா? இல்லையா? என்று தெரிந்து கொள்வதைப் பற்றி சொல்லிதந்திங்க அதுல 5ம் வீட்டின் அஷ்ட வ்ர்கம் அதில் இருக்கிற கிரகத்தின் சுய வர்கம்,5ம் வீட்டின் அதிபதி சொன்று அமர்ந்திருக்கும்
வீட்டின் அஷ்ட்வர்கம் அதன் சுய வர்க ப்ரல் ம்ற்றும் புத்திரகாரன் குரு அமர்ந்திருக்கும் வீட்டின் அஷ்டவர்கம் அதன் சுயவர்கம் இந்த மூன்றையும் பார்த்துதான் குழந்தை இருக்கிறதா இல்லையா என்று சொல்லமுடியும்
என்று எடுத்துகாட்டுட‌ன் விளக்கினீர்கள் மேலும் குருவின் பார்வை 5ஆம் வீட்டில் விழுந்திருந்தாலும் நிச்சயமா இருக்கும் சொன்னீங்க ஆனால் எத்தனை குழந்தைங்க அதுல பொண்ணு பையன் எத்தனை என்று கண்டு
பிடிக்க கற்றுத் தாருங்கள். மேலும் 5ம்வீட்டை 9ம் வீட்டை பார்க்கணும் என்று ரொம்ப பேரு சொல்றங்க நீங்க இதைப்ப்ற்றி சொல்லி தாங்க எல்லோருக்கும் ரொம்ப பயனாக இருக்கும்.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்குக் குழந்தைப்பேறு முக்கியமானது. ஒரு ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு எத்தனை குழந்தைகள் என்று பார்ப்பதைவிட அவர்களுக்கு ஒரு குழந்தையாவது பிறக்குமா? என்று பார்க்க வேண்டும்! அதைவிட முக்கியம் ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குத் திருமணம் ஆகுமா? அல்லது ஆகாதா? என்று பார்க்கவேண்டும்!

சரி திருமணம் ஆகிவிட்டது. குழந்தைப்பேறு இருக்கிறதா? என்று தம்பதிகள் இருவரில் ஒருவர் ஜாதகத்தை மட்டும் பார்த்துப் பயன் இல்லை. அந்த பாக்கியம் இருவர் ஜாதகத்திலும் இருக்க வேண்டும்.

குழந்தைப்பேறு என்பது கூட்டு முயற்சி:-))))

1. குழந்தை உண்டு
2. குழந்தை இருக்காது
3. ஒரு குழந்தை மட்டுமே இருக்கும்
4. ஆண் விந்தில் உயிர் அணுக்கள் என்னிக்கையில் குறைபாடு
5. பெண்ணிற்குக் கர்ப்பப்பை அல்லது கர்ப்பப்பையில் குறைபாடு
6. கர்ப்பச் சிதைவுகள். அல்லது குழந்தை இறந்தே பிறக்கும் தன்மை
என்று தலையைக் கிறுகிறுக்க வைக்கும் விஷயங்கள் ஐந்தாம் பாவத்திற்கு உண்டு!

சுருக்கமாகச் சொன்னால் பெண் என்பவள் நிலம். ஆண் என்பவன் விதை. இரண்டுமே நன்றாக இருக்க வேண்டும். இருந்தால்தான் செடி முளைக்கும். இல்லை என்றால் நர்சரியில் இருந்து செடியை வாங்கி வளர்க்க வேண்டியது தான். அதற்குப் பெயர் தத்து எடுத்தல், சுவீகாரம்

Progeny = descendants எனும் ஆங்கிலச் சொல், சந்ததி, வம்சம் என்று பொருள் படும்

இதை அறிந்துகொள்ள குறுக்கு வழி ஒன்றை முன்பு சொல்லிக்கொடுத்தேன். ஐந்தாம் வீடு.ஐந்தாம் வீட்டு அதிபதி அமர்ந்திருக்கும் வீடு, புத்திரகாரகன் குரு அமர்ந்திருக்கும் வீடு, ஆகிய 3 வீடுகளிலும் 28 பரல்களுக்குமேல் இருக்க வேண்டும். இருவர் ஜாதகத்திலும் இருக்க வேண்டும்.

கணவன் மனைவி இருவரில் ஒருவர் ஜாதகத்தில் சரியான அளவில் பரல்கள் இருந்து, இன்னொருவர் ஜாதகத்தில் பரல்கள் சரியாக இல்லை என்றால், குழந்தை பிறப்பது தாமதமாகும்.

இருவர் ஜாதகத்திலுமே பரல்கள் மிகக்குறைவாக இருந்தால், குழந்தை இருக்காது!

ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்திற்கான முக்கிய அமைப்புக்கள்:

1. நல்ல நிலையில் உள்ள குரு பகவான்
2. நல்ல நிலையில் உள்ள ஐந்தாம் வீடும், அதன் அதிபதியும்
3. Saptamsa chart
4. பெண்கள் ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு
5. நன்மை தரக்கூடிய நடப்பு தசை/புத்திகள்

மேலே உள்ளவற்றில் கோளாறு இருப்பின், அது குழந்தை பாக்கியத்திற்குத் தடையை உண்டாக்கும். பொதுவாக சனி, செவ்வாய் மற்றும் 6 & 8ஆம் இட அதிபதிகள் சம்பந்தப்பட்டாலும், தாமதங்கள் தடைகள் உண்டாகும். குரு பகவான் 6 அல்லது 8ல் போய் சுகமாக உட்கார்ந்து கொண்டுவிட்டாலும் சிக்கல்தான்!

குழந்தைகளின் எண்ணிக்கை சப்தாம்ச சக்கரத்தின் மூலம் தெரியும். அதை அலசுவதிலும் பல சிக்கல்கள் உள்ளன. (problems like miscarriages and difficulty in conception) அதைப் பிறகு நேரம் இருக்கும்போது அலசுவோம். இப்போது அஷ்டகவர்க்கத்தை மட்டும் உபயோகித்துப் பலனை அறிந்து கொள்ளுங்கள்.

2. ராகு, கேது குருவின் பார்வை பெற்றால் அவங்க எந்த வீட்டிலிருந்தாலும் அவங்க மகா தசையில சும்மாயிருப்பங்களா?
சுந்தரி

ராகு & கேது சுபக்கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தாலும் அல்லது திரிகோணங்கள் அல்லது கேந்திரங்களில் இருந்தாலும் தங்களுடைய தசா/புத்திகளில் ஜாதகனுக்குப் பல நன்மைகளைச் செய்வார்கள்.நீங்கள் சொல்வதுபோல சும்மா இருக்க மாட்டார்கள்:-))))
--------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

44 comments:

 1. மறுபடியும் சகோதரி சுந்தரியின் கேள்விக்கான பதில் நன்றாக அமைந்துவிட்டது. குழந்தை பிறப்பைப்பற்றிய பதில், சுகப்பிரசவம் ஆகி குழந்தையை மன நிறைவுடன் கண்ணுறும் தாயின் மனோபாவத்திற்கு என்னை இட்டுச்சென்றது.

  "The difference of Nakshatra Padas between Surya and Sukra will indicate the no. of child."

  இந்தக் கணக்குப்படி எனக்கு சூரியன் மகம் 2ம் பாதம்; சுக்ரன் உத்திரம் 4ம் பாதம். மகத்தில் பாக்கி 2 பாதம், பூரத்தில் 4 உத்திரத்தில் 3 ஆகமொத்தம் 9 குழந்தைகள். ஆனால் 3குழந்தைகளே பிறந்தன.பாத வித்யாசம் நான் சொல்லியுள்ளபடி பார்க்க வேணுமா? அல்லது உத்திரம்4 மகம் 2 ஆக 4 கழித்தல்2 =2 என்று கொள்ள வேண்டுமா?

  ReplyDelete
 2. நாட்டாமை ஐயாவிற்கு!!!

  முதற்க்கண் வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றேன்.

  ஒரு வழக்கு (சந்தேகம்) ஒண்ணு சபைக்கு வந்துள்ளது

  16 பட்டி தொட்டிக்கி எல்லாம் சரியான
  தீர்ப்பை வழங்கி வரும் நாட்டாமைக்காறாரு, இதற்கும்
  சரியான தீர்ப்பை வளங்கனுங்கோ!

  E - Mail No 75 க்கு தொடர்பு உடைய கேள்வி ஐயா ?

  ஒரு தாயின் வயிற்றில் உள்ள உயிர் ஜீவன், 3 or 4 மாதத்திற்கு மேல் இயற்க்கை ஆகவோ ! அல்லது செயற்கை ஆகவோ! கருகளைந்து போனால் அந்த குழந்தையை ! அந்ததாயின் வயிற்றில் உண்டான வாரிசு ஆக தானே எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்க்கு ஜாதக ரீதியாகவும் முடியுமா ?

  செயற்கையாக கருவை கலைப்பது என்பது ஒரு உயிரை கொல்வதுதானே நாட்டான்மைகாரரே!

  இந்த படுபாதக செயலை செய்ய எப்படி மனது வருகின்றது .

  ஜாதக ரீதியாக யாரு காரணம் நாட்டாமை ஐயா!!!

  (எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்)

  ReplyDelete
 3. {5. ராசி கட்டத்திலும் நவம்ச கட்டத்திலும் லக்கணம் மாறியிருக்கிறபோது, நவம்சத்தில் கிரகங்களின் வீடுகளைக் கணக்கிடுகின்றபோது (1ம் வீடு, 2ம் வீடு,...) ராசி கட்டத்தில் லக்கணம் வீட்டிலிருந்து எண்ணுவதா அல்லது
  நவம்ச கட்டத்தில் லக்கணம் வீட்டிலிருந்து எண்ணுவதா? உதாரணத்திற்கு ராசி கட்டத்தில் லக்கணத்தின் வீடு ரிசபம், நவம்ச கட்டத்தில் லக்கணத்தின் வீடு மேசம், ஒவ்வொரு கிரகமும் எத்தனையாவது வீட்டில் உள்ளது
  என்று பார்க்க ரிசபத்திலிருந்து துவங்குவதா அல்லது மேசத்திலிருந்து துவங்குவதா?. மேசத்திலிருந்து துவங்கினால் மகரம் 10ம் விடு. மகரம் விட்டில் கிரக நிலை, கிரகங்களின் பார்வை வைத்து தொழில் பற்றி அலசலாமா? விளக்கமாக கூறவும்.

  குழப்பிக்கொள்கிறீர்களே? நவாம்சம் என்பது ராசியைப் பூதக்கண்ணாடியால் காட்டும் படம். Navamsam is the magnified version of a Rasi Chart) பாண்டி ஆட்டத்தை ராசியில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். நவாம்சத்தில் வேண்டாம். நீங்கள் பெண்ணாக இருப்பதால் பாண்டி ஆட்டம் பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதாவது லக்கினத்தில் இருந்து கட்ட எண்ணிக்கைகளை ராசியில் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.
  }
  திரு.சுப்பையா,மேலும் சில கூர்மைப்புத்தலுக்காக சில வார்த்தைகள்..

  நவாம்சம் ராசியின் மேக்னிஃபைடு வெர்ஷன் என்னும் போது ராசியின் லக்னம் எந்த நவாம்ச வீட்டின் பாதிப்பில் இருக்கிறது என்பதை விளக்குவதுதானே நவாம்ச லக்னம்?
  நவாம்ச லக்னத்தை கணக்கில் எடுக்கக் கூடாது என்றால் நவாம்சத்தில் அமைந்த கிரகங்களின் பாவ நிலையும் பார்க்கப்படாதல்லவா?அவற்றின் வீட்டின் நிலை மட்டம் தானே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லையல்லவா?

  காட்டாக குரு 10 ல் ராசியில் இருக்கும் போது அம்சத்தில் 3 ல் இருந்தால்,3 ம் இடம் என்ற பாவ நிலையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா?

  நவாம்ச லக்னத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லையென்றால் இந்த 3'ம் இடம் என்ற பாவ நிலை'க் கேள்வி வராதல்லவா? just குரு அம்சத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை மட்டும்தான் வைத்து பலன் பார்ப்போம்.

  இது சரியாக இருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது.
  ராமன் ஸ்கூல் சிந்தனையும் அப்போக்கில் இல்லை என்றுதான் தோன்றுகிறது;மாற்றுக் கருத்தை அறிய ஆவலாயிருக்கிறேன்.

  ReplyDelete
 4. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

  அழகுமிகு கேள்விகள்!
  அருமையான பதில்கள்!

  நன்றிகள் பல நவில்ந்து நழுவுகிறேன்.

  அன்புடன்,
  ஆலாசியம் கோ.

  ReplyDelete
 5. அஷ்டவர்க்கத்தில்.குரு நின்ற ராசியில் இருந்து 5வது ராசியில் 3 பரல்கள் அல்லது குறைவாக இருந்தால் குறைந்த புத்திரர்கள் உண்டு அதிகமாகயிருந்தால் அதிக புத்திரர்கள் உண்டு.அசுப கிரகங்கள் இருந்தால் புத்திரபாக்கியம் இல்லை என்றும் திரு. முருகு ராஜேந்திரன் ஜோதிடமும் நவ கிரங்களும் என்ற புத்தகத்தில் எழுதி உள்ளார்.இந்த காலத்தில் ஒன்று அ இரண்டு என்று சுலபமாக கூறலாம்.

  ReplyDelete
 6. அய்யா இனிய காலை வணக்கம்,
  அய்யா இன்றைய கேள்வி பதில் பகுதி அருமை ,,,,,,

  நன்றி வணக்கம்

  ReplyDelete
 7. Dear Sir,
  Please send me Navamsam lesson. I am eagerly waiting for that. :-)

  ReplyDelete
 8. சார் வணக்கம்,
  ஐயா தங்கள் என் கேள்விக்கு ரொம்ப நல்ல பொறுமையா ம்றுபடி நீண்ட பதிலை அளித்து இருக்கிறிர்கள் ரொம்ப நனறி சார். இந்த கேள்வி பதில் பாட்ங்களை எல்லாம் ஜாதக புத்தகத்தில் சேர்த்துவிடுங்கள்.
  சுந்தரி

  ReplyDelete
 9. அஷ்டவர்க்கத்தில்.குரு நின்ற ராசியில் இருந்து 5வது ராசியில் 3 பரல்கள் அல்லது குறைவாக இருந்தால் குறைந்த புத்திரர்கள் உண்டு அதிகமாகயிருந்தால் அதிக புத்திரர்கள் உண்டு.அசுப கிரகங்கள் இருந்தால் புத்திரபாக்கியம் இல்லை என்றும் திரு. முருகு ராஜேந்திரன் ஜோதிடமும் நவ கிரங்களும் என்ற புத்தகத்தில் எழுதி உள்ளார்.இந்த காலத்தில் ஒன்று அ இரண்டு என்று சுலபமாக கூறலாம்.///
  சகோதரர் கிருஷ்க்கு, நீஙக திரு முருகு ஜோதிடரை பார்த்திருக்கிறீங்களா அவர் வட பழனியில்லதா கடை வைத்திருக்கிறார் அரசியல் வாதி, சினிமா காரர்களூக்கு
  ஜாதக்ம் ரொம்ப நல்ல சொல்லுவார். நல்ல சொல்வார். நான் இப்போ எந்த புத்தகத்தையும் படிக்கிறது இல்லை. என் குருவின் (திரு சுப்பையா சார்) பதிவை ம்ட்டும் படிப்பேன்
  சுந்தரி

  ReplyDelete
 10. Present for the todays lessons sir

  ReplyDelete
 11. kmr.krishnan said...
  மறுபடியும் சகோதரி சுந்தரியின் கேள்விக்கான பதில் நன்றாக அமைந்துவிட்டது. குழந்தை
  பிறப்பைப்பற்றிய பதில், சுகப்பிரசவம் ஆகி குழந்தையை மன நிறைவுடன் கண்ணுறும் தாயின் மனோபாவத்திற்கு என்னை இட்டுச்சென்றது.
  "The difference of Nakshatra Padas between Surya and Sukra will indicate the no. of child."
  இந்தக் கணக்குப்படி எனக்கு சூரியன் மகம் 2ம் பாதம்; சுக்ரன் உத்திரம் 4ம் பாதம். மகத்தில் பாக்கி 2 பாதம், பூரத்தில் 4 உத்திரத்தில் 3 ஆகமொத்தம் 9 குழந்தைகள். ஆனால் 3குழந்தைகளே பிறந்தன.பாத வித்யாசம் நான் சொல்லியுள்ளபடி பார்க்க வேணுமா? அல்லது உத்திரம்4 மகம் 2 ஆக 4 கழித்தல்2 =2 என்று கொள்ள வேண்டுமா?

  360 வகுத்தல் 108 நட்சத்திரப்பாதங்கள் = 3.33.சூரியனுக்கும், சுக்கிரனுக்கும் இடைப்பட்ட அதிக பட்சத் தூரம் 48 பாகைகள் வகுத்தல் 3.33 (ஒரு பாதம்) = 14 நட்சத்திரப் பாதங்கள் வரும் வாய்ப்பு உள்ளது. ஆகவே பாதக் கணக்கு சரியாக வராது. நட்சத்திரங்கள் வரலாம். அதிலும் 4 நட்சத்திரங்களுக்குள் வரலாம். ஆகவே நீங்கள் சொல்லும் கணக்கு சரியாக வரும் என்று தோன்றவில்லை. சப்தாம்சத்தில் 5ஆம்வீட்டிற்கும், அதன் அதிபதிக்கும் இடையில் உள்ள கிரகங்களை வைத்துச் சிலர் குழந்தைகளைச் சொல்வார்கள்.

  என்னிடம் ஒரு குறுக்கு வழி உள்ளது. 5ஆம் வீட்டின் மேல் சனியின் ஆதிக்கம் உள்ளது என்றால் ஜாதகனுக்கு 2 அல்லது அதற்குக் குறைவான குழந்தைகள். குருவின் ஆதிக்கம் என்றால் மூன்றும் அதற்கு அதிகமான குழந்தைகள்.

  ReplyDelete
 12. ////Shyam Prasad said...
  மிக்க நன்றி/////

  உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 13. /////kannan said...
  நாட்டாமை ஐயாவிற்கு!!!
  முதற்கண் வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றேன்.
  ஒரு வழக்கு (சந்தேகம்) ஒன்னு சபைக்கு வந்துள்ளது
  16 பட்டி தொட்டிக்கு எல்லாம் சரியான
  தீர்ப்பை வழங்கி வரும் நாட்டாமைக்காரரு, இதற்கும்
  சரியான தீர்ப்பை வழங்கணூங்கோ!
  E - Mail No 75 க்கு தொடர்பு உடைய கேள்வி ஐயா ?
  ஒரு தாயின் வயிற்றில் உள்ள உயிர் ஜீவன், 3 or 4 மாதத்திற்கு மேல் இயற்க்கை ஆகவோ ! அல்லது
  செயற்கை ஆகவோ! கருக்கலைந்து போனால் அந்த குழந்தையை அந்ததாயின் வயிற்றில் உண்டான வாரிசு ஆக தானே எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்க்கு ஜாதக ரீதியாகவும் முடியுமா ?
  செயற்கையாக கருவை கலைப்பது என்பது ஒரு உயிரை கொல்வதுதானே நாட்டான்மைகாரரே!
  இந்த படுபாதக செயலை செய்ய எப்படி மனது வருகின்றது .
  ஜாதக ரீதியாக யாரு காரணம் நாட்டாமை ஐயா!!!
  (எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்)//////

  கலியுகம், விலைவாசி, வரதட்சனை, கல்விக்கு ஆகும் பெருஞ்செலவுகள் என்று பல பாதகச் செயல்கள் மனிதனை வாட்டிக்கொண்டிருக்கின்றன. ஆகவே தன்னைக் காத்துக்கொள்ள மனிதன் செய்யும் பாதகச் செயல்கள் தவறில்லை என்னும் நிலைமை காலூன்றி/வேரூன்றி விட்டது! இதில் தீர்ப்பிற்கெல்லாம் வேலையில்லை. கல்கி அவதாரம் எடுத்து, அந்த மாயக்கண்ணன் வந்தால், தர்மம் நிலைக்கும். அதுவரை அதர்மமே நிலைக்கும்!

  ReplyDelete
 14. ////அறிவன்#11802717200764379909 said...
  ////{5. ராசி கட்டத்திலும் நவம்ச கட்டத்திலும் லக்கணம் மாறியிருக்கிறபோது, நவம்சத்தில் கிரகங்களின் வீடுகளைக் கணக்கிடுகின்றபோது (1ம் வீடு, 2ம் வீடு,...) ராசி கட்டத்தில் லக்கணம் வீட்டிலிருந்து எண்ணுவதா அல்லது
  நவம்ச கட்டத்தில் லக்கணம் வீட்டிலிருந்து எண்ணுவதா? உதாரணத்திற்கு ராசி கட்டத்தில் லக்கணத்தின் வீடு ரிசபம், நவம்ச கட்டத்தில் லக்கணத்தின் வீடு மேசம், ஒவ்வொரு கிரகமும் எத்தனையாவது வீட்டில் உள்ளது
  என்று பார்க்க ரிசபத்திலிருந்து துவங்குவதா அல்லது மேசத்திலிருந்து துவங்குவதா?. மேசத்திலிருந்து துவங்கினால் மகரம் 10ம் விடு. மகரம் விட்டில் கிரக நிலை, கிரகங்களின் பார்வை வைத்து தொழில் பற்றி அலசலாமா? விளக்கமாக கூறவும்.
  குழப்பிக்கொள்கிறீர்களே? நவாம்சம் என்பது ராசியைப் பூதக்கண்ணாடியால் காட்டும் படம். Navamsam is the magnified version of a Rasi Chart) பாண்டி ஆட்டத்தை ராசியில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

  நவாம்சத்தில் வேண்டாம். நீங்கள் பெண்ணாக இருப்பதால் பாண்டி ஆட்டம் பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதாவது லக்கினத்தில் இருந்து கட்ட எண்ணிக்கைகளை ராசியில் மட்டும்

  வைத்துக்கொள்ளுங்கள்./////
  திரு.சுப்பையா,மேலும் சில கூர்மைப்புத்தலுக்காக சில வார்த்தைகள்..
  நவாம்சம் ராசியின் மேக்னிஃபைடு வெர்ஷன் என்னும் போது ராசியின் லக்னம் எந்த நவாம்ச வீட்டின் பாதிப்பில் இருக்கிறது என்பதை விளக்குவதுதானே நவாம்ச லக்னம்?
  நவாம்ச லக்னத்தை கணக்கில் எடுக்கக் கூடாது என்றால் நவாம்சத்தில் அமைந்த கிரகங்களின் பாவ நிலையும் பார்க்கப்படாதல்லவா?அவற்றின் வீட்டின் நிலை மட்டம் தானே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லையல்லவா?
  காட்டாக குரு 10 ல் ராசியில் இருக்கும் போது அம்சத்தில் 3 ல் இருந்தால்,3 ம் இடம் என்ற பாவ
  நிலையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா?
  நவாம்ச லக்னத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லையென்றால் இந்த 3'ம் இடம் என்ற பாவ நிலை'க் கேள்வி வராதல்லவா? just குரு அம்சத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை மட்டும்தான் வைத்து பலன் பார்ப்போம்.
  இது சரியாக இருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது.
  ராமன் ஸ்கூல் சிந்தனையும் அப்போக்கில் இல்லை என்றுதான் தோன்றுகிறது;மாற்றுக் கருத்தை அறிய ஆவலாயிருக்கிறேன்./////

  நவாம்சத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று எப்பொது சொன்னேன்? ராசிக்குக் கொடுக்கும் அத்தனை மரியாதையையும் நவாம்சத்திற்கும் கொடுத்தால், எப்படி? இரண்டு பெண்டாட்டிக்காரன் கதை ஆகிவிடாதா?
  நவாம்சம் தோழி மட்டும்தான். மனைவி அல்ல! நவாம்சம் நண்பன் மட்டும்தான் எஜமானன் அல்ல! எஜமானன் என்பது ராசி மட்டும்தான்! கிரகத்தின் வலிமையைப் பார்ப்பதற்கு மட்டுமே நவாம்சத்தைப் பயன் படுத்துங்கள். வீட்டின் வலிமையைப்பார்ப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சக்கரங்கள் உள்ளன!
  திரேக்கோணச்சக்கரம் (சகோதரர்), சதுர்த்தாம்சச் சக்கரம் (ஆஸ்தி) சப்தாம்சச் சக்கரம் (குழந்தைகள்)
  நவாம்சம் (திருமண வாழ்க்கை), தசாம்சம் (தொழில்), துவதாசாம்சம் (தாய், தகப்பன்), ஷோடசாம்சம் (மகிழ்ச்சி)
  என்று வேறு பல சக்கரங்கள் ஜாதகத்தில் உள்ளது அதற்காகத்தான்! விளக்கம் போதுமா நண்பரே?

  ReplyDelete
 15. ////Alasiam G said...
  அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
  அழகுமிகு கேள்விகள்! அருமையான பதில்கள்!
  நன்றிகள் பல நவில்ந்து நழுவுகிறேன்.
  அன்புடன்,
  ஆலாசியம் கோ.////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 16. ////krish said...
  அஷ்டவர்க்கத்தில்.குரு நின்ற ராசியில் இருந்து 5வது ராசியில் 3 பரல்கள் அல்லது குறைவாக இருந்தால் குறைந்த புத்திரர்கள் உண்டு அதிகமாகயிருந்தால் அதிக புத்திரர்கள் உண்டு.அசுப கிரகங்கள் இருந்தால் புத்திரபாக்கியம் இல்லை என்றும் திரு. முருகு ராஜேந்திரன் ஜோதிடமும் நவ கிரங்களும் என்ற புத்தகத்தில் எழுதி உள்ளார்.இந்த காலத்தில் ஒன்று அ இரண்டு என்று சுலபமாக கூறலாம்./////

  உண்மைதான். நன்றி க்ரீஷ்!

  ReplyDelete
 17. அன்பு அய்யாவிற்கு வணக்கம், தங்களின் பதில்கள் அழகிய விளக்கங்களுடன் உள்ளன. மிக்க நன்றி, அய்யா மகர லக்கன காரர்களுக்கு சூரியன் பகை கிரகம், அவர் மேசதில் உச்சம் பெற்றால் நல்லதா?
  அன்புடன் ஜீவா

  ReplyDelete
 18. ////astroadhi said...
  அய்யா இனிய காலை வணக்கம்,
  அய்யா இன்றைய கேள்வி பதில் பகுதி அருமை ,,,,,,
  நன்றி வணக்கம்////

  உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 19. ////Anbu said...
  Dear Sir,
  present for today class.////

  உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 20. ////Anbu said...
  Dear Sir,
  Please send me Navamsam lesson. I am eagerly waiting for that. :-)////

  Please inform your mail ID.I will ckeck up and send it!

  ReplyDelete
 21. ////sundari said...
  சார் வணக்கம்,
  ஐயா தங்கள் என் கேள்விக்கு ரொம்ப நல்ல பொறுமையா ம்றுபடி நீண்ட பதிலை அளித்து இருக்கிறிர்கள் ரொம்ப நனறி சார். இந்த கேள்வி பதில் பாடங்களை எல்லாம் ஜாதக புத்தகத்தில் சேர்த்துவிடுங்கள்.
  சுந்தரி////

  செய்துவிடுகிறேன். நன்றி சகோதரி!

  ReplyDelete
 22. ////sundari said...
  அஷ்டவர்க்கத்தில்.குரு நின்ற ராசியில் இருந்து 5வது ராசியில் 3 பரல்கள் அல்லது குறைவாக இருந்தால்

  குறைந்த புத்திரர்கள் உண்டு அதிகமாகயிருந்தால் அதிக புத்திரர்கள் உண்டு.அசுப கிரகங்கள் இருந்தால்

  புத்திரபாக்கியம் இல்லை என்றும் திரு. முருகு ராஜேந்திரன் ஜோதிடமும் நவ கிரங்களும் என்ற புத்தகத்தில்

  எழுதி உள்ளார்.இந்த காலத்தில் ஒன்று அ இரண்டு என்று சுலபமாக கூறலாம்.///
  சகோதரர் கிருஷ்க்கு, நீஙக திரு முருகு ஜோதிடரை பார்த்திருக்கிறீங்களா அவர் வட பழனியில்லதா கடை

  வைத்திருக்கிறார் அரசியல் வாதி, சினிமா காரர்களூக்கு ஜாதகம் ரொம்ப நல்ல சொல்லுவார். நல்ல சொல்வார். நான் இப்போ எந்த புத்தகத்தையும் படிக்கிறது இல்லை. என் குருவின் (திரு சுப்பையா சார்) பதிவை மட்டும் படிப்பேன்
  சுந்தரி/////

  யாரையும் குறை சொல்ல வேண்டாம் சகோதரி!. அவரவர் பாடு அவரவர்க்கு! அதில் ஜோதிடர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

  ReplyDelete
 23. ராசி சக்கரம் தவிர்த்த மற்ற அம்ச சக்கரம் எப்படி கணிப்பது என்று எழுதிய முனிவர்கள்/ஜோதிட வல்லுனர்கள் அதை வைத்து எப்படி பலன் காண்பது என்பதை அவ்வளவாக எழுதவில்லை. ஆக அவற்றில் பலன் காண்பது பற்றி பலர் பலவாராக எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒரு வகையில் சரியாகத்தான் இருக்கிறது. எதையும் உறுதியாகக் கூறும் அளவுக்கு நான் ஜோதிடத்தில் வல்லுனன் இல்லை என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன்.

  ReplyDelete
 24. Vaathiyariya,

  Excellent reply as usual.Especially about 5th house related.

  1.If Guru in laknam but midunam (5) 5th aspects , Chevvai is 4th Aspect (1), Sani (3) with 3rd aspects - all 3 gragha aspects the 5th House then can we consider the guru's aspects is strong becuse of his parals (5 ) when compared to chevvai (1) and Sani (3)

  2.If the Lord of Laknam in 8th house, yes it always with lot of struggle only.But ( lately )most of the time, the benefit comes as well

  The below content was taken sometime back from one of the tamil website (not sure if nakeeran or others but I am keeping it on my storage)

  I will leave vaathiyar to take a decision to share this..

  ******

  ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்?

  ஜோதிட ரத்னா முனைவர்
  க.ப.வித்யாதரன்:

  பொதுவாக 8வது வீட்டில் சுக்கிரன் இருந்தால் நல்லது. “இறந்தாரை எழும்ப வைக்கும் சஞ்சீவி மந்திரம் கற்றவன் சுக்கிரன்” என வேதங்கள் கூறுகின்றன.

  ஜோதிடத்தைப் பொறுத்தவரை 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். அந்த இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால் அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும். பொதுவாக 8இல் உள்ள கிரகம் 2ஆம் இடத்தைப் பார்க்கும் என்பதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

  எனவே, 8ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது முதல் தரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. வாக்கு வன்மை, பேச்சுத்திறன், சமயோசித புத்தி, எதிர்பாராத தனவரவு, லட்சுமி கடாட்சம், உழைப்புக்கு அப்பாற்பட்ட செல்வங்கள் கிடைக்கும்.

  சுக்கிரனுக்கு அடுத்தப்படியாக சூரியன், புதன் சேர்க்கை இருப்பது அந்த ஜாதகருக்கு விபரீத ராஜயோகத்தையும், நிபுணத்துவத்தையும் அளிக்கும். இது பொதுவானது. ஆனால் லக்னத்தைப் பொறுத்தும் 8இல் என்னென்ன கிரகங்கள் இருந்தால் நல்லது என்பது மாறுபடும்.

  உதாரணத்திற்கு மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி, 8இல் அமர்ந்தால் நீண்ட ஆயுள் உண்டு எனக் கொள்ளலாம். ரிஷப லக்னத்திற்கு 8க்கு உரியவர் குரு. அவர் 8இல் இருந்தால் பெரிய யோகங்கள் கிடைக்கும். இதுபோல் ஒவ்வொரு லக்னத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.

  அதற்கடுத்தபடியாக 9ஆம் இடத்தில் சுப கிரகங்கள் (வளர்பிறை சந்திரன், சுக்கிரன், குரு) இருப்பது நல்லது. பொதுவாக 5, 9ஆம் வீடுகள் திரிகோண வீடுகள் எனப்படும். இங்கு சுப கிரகங்கள் இருப்பது சிறப்பாகும்.

  ********

  Thanks,
  Rajan

  ReplyDelete
 25. ///சப்தாம்சத்தில் 5ஆம்வீட்டிற்கும், அதன் அதிபதிக்கும் இடையில் உள்ள கிரகங்களை வைத்துச் சிலர் குழந்தைகளைச் சொல்வார்கள்.///

  ஐயா! இதற்க்கும் விதி விலக்கு உண்டு. நான் பிறந்த சிற்றூரில் என் உறவுக்கார பாட்டிக்கு 18 குழந்தைகள், இன்னும் ஒருவருக்கு 16 குழந்தைகள். இப்படி வருவதை எதன் மூலம் கணிப்பது என தெரியவில்லை.

  குழந்தை எண்ணிக்கையை கணக்கிடும் முறை பெரும்பாலும் நவீன காலத்தில் பொருத்தமாக வருவதில்லை. காரணம் குடும்பக்கட்டுப்பாடு, கருக்கலைப்பு சாதனம், கருத்தடுப்பு சாதனம் என எண்ணிக்கை பெருகிக்கொண்டுள்ளது.

  அதேபோல குழந்தை எண்ணிக்கையை கணக்கிடவும் பல வழிகளை பலர் கூறிவிட்டு சென்றுள்ளனர். இவற்றில் எதனை கணக்கில் எடுத்துக்கொள்வது என குழப்பமே மிஞ்சுகிறது.

  1. 5ம் அதிபதி எத்தனை நவாம்சங்கள் கடந்துள்ளாரோ அத்தனை குழந்தைகள் (அதில் எத்தனை தீய கிரக ஆதிக்கம் இருக்கிறதோ அத்தனை அழியும்). இதே போல் 3ம் அதிபதி மற்றும் 11ம் அதிபதிகள் சகோதர எண்ணிக்கையை காட்டும்.

  2. ராசி சக்கரத்தில் 5ம் அதிபதி, 5ம் வீடு ஆகியன எத்தனை கிரகங்களுடன் தொடர்பு பெறுகிறதோ அத்தனை குழந்தை.

  3. 5ம் அதிபதி அம்சத்தில் இருக்கும் இடத்தில் இருந்து லக்கினம் வரை எண்ணி வந்த ராசி எவ்வளவோ அத்தனை குழந்தை (ஜாதக அலங்காரம்).

  இன்னும் எத்தனையோ விதிகள் உள்ளன. இதில் எது சரியாக வருகிறதோ அதனை நாம் உபயோகிக்கலாம். அதுபோல 5ம் வீடு சனியின் தொடர்பை பெறும்போது குழந்தை எண்ணிக்கையை குறைக்கிறது, சில நேரங்களில் குழந்தை பாக்கியம் இல்லாமலும் செய்கிறது.

  கேள்வி பதில் நன்றாக செல்கிறது ஐயா!

  ReplyDelete
 26. /////ஜீவா said...
  அன்பு அய்யாவிற்கு வணக்கம், தங்களின் பதில்கள் அழகிய விளக்கங்களுடன் உள்ளன. மிக்க நன்றி, அய்யா மகர லக்கன காரர்களுக்கு சூரியன் பகைக் கிரகம், அவர் மேசத்தில் உச்சம் பெற்றால் நல்லதா?
  அன்புடன் ஜீவா////

  பகைக் கிரகம் என்பதற்காக அவரை ஒதுக்கிவிடமுடியுமா என்ன? அவர் உடல்காரகராயிற்றே! ராஜ கிரகமாயிற்றே! உச்சம் பெற்றதற்கான நன்மையான பலன்கள அவர் தனது தசா/புத்திகளில் தருவார்!
  பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்!

  ReplyDelete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete
 28. ////ananth said...
  ராசி சக்கரம் தவிர்த்த மற்ற அம்ச சக்கரம் எப்படி கணிப்பது என்று எழுதிய முனிவர்கள்/ஜோதிட வல்லுனர்கள் அதை வைத்து எப்படி பலன் காண்பது என்பதை அவ்வளவாக எழுதவில்லை. ஆக அவற்றில் பலன் காண்பது பற்றி பலர் பலவாராக எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒரு வகையில் சரியாகத்தான் இருக்கிறது. எதையும் உறுதியாகக் கூறும் அளவுக்கு நான் ஜோதிடத்தில் வல்லுனன் இல்லை என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன்./////

  உண்மைதான் நண்பரே! பழைய ஜோதிட நூல்களில் இருக்கலாம். தேடிப் பார்ப்போம்! முடிந்தால், பின்னாளில் அவற்றின் செய்ல்பாடுகளை விவரிக்கிறேன். பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
 29. /////Rajan said...
  Vaathiyariya,
  Excellent reply as usual.Especially about 5th house related.
  1.If Guru in laknam but midunam (5) 5th aspects , Chevvai is 4th Aspect (1), Sani (3) with 3rd aspects - all 3 gragha aspects the 5th House then can we consider the guru's aspects is strong becuse of his parals (5 ) when compared to chevvai (1) and Sani (3)/////

  ஆமாம்! குரு பார்க்கக் கோடி தோஷ்ம் நீங்கும் என்பார்கள்!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  2.If the Lord of Laknam in 8th house, yes it always with lot of struggle only.But ( lately )most of the time, the benefit comes as well
  The below content was taken sometime back from one of the tamil website (not sure if nakeeran or others but I am keeping it on my storage)
  I will leave vaathiyar to take a decision to share this..
  ******
  ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்?
  ஜோதிட ரத்னா முனைவர்
  க.ப.வித்யாதரன்:
  பொதுவாக 8வது வீட்டில் சுக்கிரன் இருந்தால் நல்லது. “இறந்தாரை எழும்ப வைக்கும் சஞ்சீவி மந்திரம் கற்றவன் சுக்கிரன்” என வேதங்கள் கூறுகின்றன.
  ஜோதிடத்தைப் பொறுத்தவரை 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். அந்த இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால் அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும். பொதுவாக 8இல் உள்ள கிரகம் 2ஆம் இடத்தைப் பார்க்கும் என்பதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்
  எனவே, 8ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது முதல் தரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. வாக்கு வன்மை, பேச்சுத்திறன், சமயோசித புத்தி, எதிர்பாராத தனவரவு, லட்சுமி கடாட்சம், உழைப்புக்கு அப்பாற்பட்ட செல்வங்கள் கிடைக்கும்.
  சுக்கிரனுக்கு அடுத்தப்படியாக சூரியன், புதன் சேர்க்கை இருப்பது அந்த ஜாதகருக்கு விபரீத ராஜயோகத்தையும், நிபுணத்துவத்தையும் அளிக்கும். இது பொதுவானது. ஆனால் லக்னத்தைப் பொறுத்தும் 8இல் என்னென்ன கிரகங்கள் இருந்தால் நல்லது என்பது மாறுபடும்.
  உதாரணத்திற்கு மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி, 8இல் அமர்ந்தால் நீண்ட ஆயுள் உண்டு எனக் கொள்ளலாம். ரிஷப லக்னத்திற்கு 8க்கு உரியவர் குரு. அவர் 8இல் இருந்தால் பெரிய யோகங்கள் கிடைக்கும். இதுபோல் ஒவ்வொரு லக்னத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.
  அதற்கடுத்தபடியாக 9ஆம் இடத்தில் சுப கிரகங்கள் (வளர்பிறை சந்திரன், சுக்கிரன், குரு) இருப்பது நல்லது. பொதுவாக 5, 9ஆம் வீடுகள் திரிகோண வீடுகள் எனப்படும். இங்கு சுப கிரகங்கள் இருப்பது சிறப்பாகும்.
  ********
  Thanks,
  Rajan//////

  தகவலுக்கு நன்றி! எனக்கு எட்டில் சுக்கிரன். எட்டில் இருக்கும் சுக்கிரன் இரண்டாம் வீட்டைப்பார்ப்பார். ஜாதகனுக்கு கற்பனை வளத்தைக் கொடுப்பார். கதை, கவிதைகளில் ஏடுபாட்டையும், ஆர்வத்தையும் கொடுப்பார். எழுத்தில் வன்மையைக் கொடுப்பார். இதை அவர் சொல்ல விட்டிருக்கிறார். அதோடு எட்டில் அமரும் கிரகங்களால், அதன் ஆதிபத்ய வீடுகள் நஷ்டமடையும். அதையும் அவர் சொல்லியிருக்கலாம்.

  ReplyDelete
 30. /////Ram said...
  Present for the todays lessons sir////

  உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 31. //////ராசி சக்கரம் தவிர்த்த மற்ற அம்ச சக்கரம் எப்படி கணிப்பது என்று எழுதிய முனிவர்கள்/ஜோதிட வல்லுனர்கள் அதை வைத்து எப்படி பலன் காண்பது என்பதை அவ்வளவாக எழுதவில்லை. ஆக அவற்றில் பலன் காண்பது பற்றி பலர் பலவாராக எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒரு வகையில் சரியாகத்தான் இருக்கிறது. எதையும் உறுதியாகக் கூறும் அளவுக்கு நான் ஜோதிடத்தில் வல்லுனன் இல்லை என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன்.////

  ஏறக்குறைய நீங்கள் கூறுவது உண்மைதான். ஆனால் இவைகளில் பாவச்சக்கரம், திரேக்கோணம், நவாம்சம் ஆகியன மட்டும் கொஞ்சம் கவனத்தில் இருக்கிறது. நீங்கள் கூருவது போல அத்தனை கட்டங்களையும் வரைந்து (பார்த்து) பலன் சொல்ல அதிக நேரம் பிடிக்கும். இப்பொழுது ஜோதிடமும் ஒரு பாடமாக பெருகிக்கொண்டு வருகிறது. எனவே இதுபோனற குறைகள் இனிமேல் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

  ReplyDelete
 32. Good to hear that Sukiran in 8th place for you..

  For me also same in 8th house.

  Sukiran,Pudhan and Suriyan but lord of lakinam is Pudhan..

  The below statement is my personal -

  More imaginary skills leads to more problems as well :) since thinking on anything is always ahead of others.

  Thanks
  Rajan

  ReplyDelete
 33. அன்புள்ள் அய்யா,

  மாளவ்ய யொகம் அடைந்த சுக்ரனெ பாபக்ர்தரி யொகமும் பெற்று இருந்தால் பலன் எப்படி இருகும்.எந்த யொக பலன் வேலை செய்யும்.

  (10தில் ரிஷபதில் சுக்ரன் தனியே, முன்னும் பின்னும் சனி, செவ்வாய் )
  அன்புடன்
  சரவன்குமார்.

  ReplyDelete
 34. நாட்டாமை ஐயா!!!

  E-Mail no - 71 ல் / 5 க்கு

  தாங்கள் வழங்கிய கடைசி தீர்ப்பு மிக்க மகிழ்ச்சியை தந்தது. காரணம் அடியேனுக்கு ஒரிஜினல் வில்லன் மாந்தி புண்ணியவான்!!! ராசில், இலக்கணத்தில் இருந்து 11 - வீட்டில் உள்ளார்.

  (11ல் மாந்தி இருந்தால்:ஜாதகன் அரசனைப் போல வாழ்வான். நிறையப் பெண்களின் சகவாசம்
  கிடைக்கும். சொத்து, சுகம், அதிகாரம், மகிழ்ச்சிஎன்று எதற்கும் குறை இருக்காது .
  உறவினர்களால் விரும்பப்படுவான். நாட்டமையாக இருப்பான். தலைமைப்
  பதவிகள் தேடிவரும். அரசு அங்கீகாரங்கள் )

  அடியேன் கிராமத்தான்!

  (E - Mail No 75 க்கு தொடர்பு உடைய கேள்வி ஐயா ?)

  தங்களின் தீர்ப்பு இந்த கிராமத்தானுக்கு நன்றாக விளங்க வில்லை
  வழக்கை (சந்தேகம்) நேரிடியாகவே சபையில் கேக்கின்றேன் நாட்டாமை ஐயா!!!

  ஒரு தாயின் வயிற்றில் உள்ள (உயிர்) ஜீவன், 4 மாதத்திற்கு மேல் இயற்க்கை ஆகவே ! கருக்கலைந்து போனால் அந்த குழந்தையை அந்ததாயின் வயிற்றில் உண்டான வாரிசுகளில் ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியுமா? (அல்லது) முடியாதா?

  ReplyDelete
 35. ///karmegaraja said...
  ///சப்தாம்சத்தில் 5ஆம்வீட்டிற்கும், அதன் அதிபதிக்கும் இடையில் உள்ள கிரகங்களை வைத்துச் சிலர் குழந்தைகளைச் சொல்வார்கள்.///
  ஐயா! இதற்க்கும் விதி விலக்கு உண்டு. நான் பிறந்த சிற்றூரில் என் உறவுக்கார பாட்டிக்கு 18 குழந்தைகள், இன்னும் ஒருவருக்கு 16 குழந்தைகள். இப்படி வருவதை எதன் மூலம் கணிப்பது என தெரியவில்லை.
  குழந்தை எண்ணிக்கையை கணக்கிடும் முறை பெரும்பாலும் நவீன காலத்தில் பொருத்தமாக வருவதில்லை. காரணம் குடும்பக்கட்டுப்பாடு, கருக்கலைப்பு சாதனம், கருத்தடுப்பு சாதனம் என எண்ணிக்கை பெருகிக்கொண்டுள்ளது.
  அதேபோல குழந்தை எண்ணிக்கையை கணக்கிடவும் பல வழிகளை பலர் கூறிவிட்டு சென்றுள்ளனர். இவற்றில் எதனை கணக்கில் எடுத்துக்கொள்வது என குழப்பமே மிஞ்சுகிறது.
  1. 5ம் அதிபதி எத்தனை நவாம்சங்கள் கடந்துள்ளாரோ அத்தனை குழந்தைகள் (அதில் எத்தனை தீய கிரக ஆதிக்கம் இருக்கிறதோ அத்தனை அழியும்). இதே போல் 3ம் அதிபதி மற்றும் 11ம் அதிபதிகள் சகோதர எண்ணிக்கையை காட்டும்.
  2. ராசி சக்கரத்தில் 5ம் அதிபதி, 5ம் வீடு ஆகியன எத்தனை கிரகங்களுடன் தொடர்பு பெறுகிறதோ அத்தனை குழந்தை.
  3. 5ம் அதிபதி அம்சத்தில் இருக்கும் இடத்தில் இருந்து லக்கினம் வரை எண்ணி வந்த ராசி எவ்வளவோ அத்தனை குழந்தை (ஜாதக அலங்காரம்).
  இன்னும் எத்தனையோ விதிகள் உள்ளன. இதில் எது சரியாக வருகிறதோ அதனை நாம் உபயோகிக்கலாம். அதுபோல 5ம் வீடு சனியின் தொடர்பை பெறும்போது குழந்தை எண்ணிக்கையை குறைக்கிறது, சில நேரங்களில் குழந்தை பாக்கியம் இல்லாமலும் செய்கிறது.
  கேள்வி பதில் நன்றாக செல்கிறது ஐயா!////

  தகவல் பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 36. /////karmegaraja said...
  //////ராசி சக்கரம் தவிர்த்த மற்ற அம்ச சக்கரம் எப்படி கணிப்பது என்று எழுதிய முனிவர்கள்/ஜோதிட வல்லுனர்கள் அதை வைத்து எப்படி பலன் காண்பது என்பதை அவ்வளவாக எழுதவில்லை. ஆக அவற்றில் பலன் காண்பது பற்றி பலர் பலவாராக எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒரு வகையில் சரியாகத்தான் இருக்கிறது. எதையும் உறுதியாகக் கூறும் அளவுக்கு நான் ஜோதிடத்தில் வல்லுனன் இல்லை என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன்.////
  ஏறக்குறைய நீங்கள் கூறுவது உண்மைதான். ஆனால் இவைகளில் பாவச்சக்கரம், திரேக்கோணம், நவாம்சம் ஆகியன மட்டும் கொஞ்சம் கவனத்தில் இருக்கிறது. நீங்கள் கூருவது போல அத்தனை கட்டங்களையும் வரைந்து (பார்த்து) பலன் சொல்ல அதிக நேரம் பிடிக்கும். இப்பொழுது ஜோதிடமும் ஒரு பாடமாக பெருகிக்கொண்டு வருகிறது. எனவே இதுபோனற குறைகள் இனிமேல் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.///////

  ஆமாம். பல கைகள் ஜோதிடத்தைக் கையில் எடுத்துள்ளன. எதிர்காலத்தில் அனைத்துமே கணினி மயமாக்கப்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!

  ReplyDelete
 37. ////Rajan said...
  Good to hear that Sukiran in 8th place for you..
  For me also same in 8th house.
  Sukiran,Pudhan and Suriyan but lord of lakinam is Pudhan..
  The below statement is my personal -
  More imaginary skills leads to more problems as well :) since thinking on anything is always ahead of others.
  Thanks
  Rajan/////

  எந்த நன்மையிலும் ஒரு தீமை இருக்கும்!:-))))

  ReplyDelete
 38. //////kumar said... அன்புள்ள அய்யா,
  மாளவ்ய யோகம் அடைந்த சுக்ரனே பாபகர்த்தாரி யோகமும் பெற்று இருந்தால் பலன் எப்படி இருக்கும்? .எந்த யோக பலன் வேலை செய்யும்?
  (10தில் ரிஷபதில் சுக்ரன் தனியே, முன்னும் பின்னும் சனி, செவ்வாய் )
  அன்புடன்
  சரவண்குமார்./////

  இரண்டும் வேலை செய்யும்! புயலும் அடிக்கும். அரசின் நிவாரணப் பணமும் கிடைக்கும்!

  ReplyDelete
 39. /////kannan said...
  நாட்டாமை ஐயா!!!
  E-Mail no - 71 ல் / 5 க்கு
  தாங்கள் வழங்கிய கடைசி தீர்ப்பு மிக்க மகிழ்ச்சியை தந்தது. காரணம் அடியேனுக்கு ஒரிஜினல் வில்லன் மாந்தி புண்ணியவான்!!! ராசில், இலக்கணத்தில் இருந்து 11 - வீட்டில் உள்ளார்.
  (11ல் மாந்தி இருந்தால்:ஜாதகன் அரசனைப் போல வாழ்வான். நிறையப் பெண்களின் சகவாசம்
  கிடைக்கும். சொத்து, சுகம், அதிகாரம், மகிழ்ச்சிஎன்று எதற்கும் குறை இருக்காது .
  உறவினர்களால் விரும்பப்படுவான். நாட்டமையாக இருப்பான். தலைமைப்
  பதவிகள் தேடிவரும். அரசு அங்கீகாரங்கள் )
  அடியேன் கிராமத்தான்!
  (E - Mail No 75 க்கு தொடர்பு உடைய கேள்வி ஐயா ?)
  தங்களின் தீர்ப்பு இந்த கிராமத்தானுக்கு நன்றாக விளங்க வில்லை
  வழக்கை (சந்தேகம்) நேரிடியாகவே சபையில் கேக்கின்றேன் நாட்டாமை ஐயா!!!
  ஒரு தாயின் வயிற்றில் உள்ள (உயிர்) ஜீவன், 4 மாதத்திற்கு மேல் இயற்க்கை ஆகவே ! கருக்கலைந்து போனால் அந்த குழந்தையை அந்ததாயின் வயிற்றில் உண்டான வாரிசுகளில் ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியுமா? (அல்லது) முடியாதா?//////

  முடியாது! கருவிலேயே கலைந்துவிட்ட ஜீவனுக்கு கணக்கு ஏது சாமி?
  எரிந்தால்தான் நெருப்பு
  ஒளிர்ந்தால்தான் வெளிச்சம்
  பிறந்தால்தான் வாரிசு!

  ReplyDelete
 40. ////NARESH said...
  Good Work Sir!/////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 41. சுந்தரி
  தொழில்முறை ஜோதிடர்கள் சந்தைபடுத்தும் முறையை உபயோகிக்கிறார்கள். மற்றபடி அவர்களின் ஜோதிட அறிவு அனுபவம் நன்றாகவே உள்ளது.
  அம்ச சக்கரங்களையும் லக்கனத்தை முதல் வீடாகக்கொண்டு மற்ற வீட்டு பலன்களை அறியலாம்.ராசிசக்கரத்தின் வீட்டு குணங்களே அம்ச சக்கரங்க்ளுக்கும் பொருந்தும்.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com