மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.1.10

Doubt: வீண் வம்பிற்கு எப்போது போகக் கூடாது?

++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: வீண் வம்பிற்கு எப்போது போகக் கூடாது?

Doubts: கேள்வி பதில் பகுதி 23

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபத்திமூன்று!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.91
சரவண குமார்

Dear Sir,

1. Rishabathil Raghu Neesam, mithuna lagnathukku 12th place il Raghu ullar. Avar dhisai evaru irukkum?

தீய கிரகங்கள் நீசமானால் தீமைகள் சற்று அதிகமாகவே இருக்கும் (அதுவும் 12ல் இருப்பதால், அவருடைய தசைகளில் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். வீண் வம்பிற்குப்போகக் கூடாது. கொடுக்கல், வாங்கல் கூடாது. only routine work!

2.In general, how is neesa grahas dhisai?

பொதுவாக நீச கிரகங்களின் தசை மகிழ்ச்சிகரமாக இருக்காது!

3 Oru graham neesamaga irunthalum, avar than suyavargathil 5 paral & 26 paral irunthal, avar balamaga ullar enru eduthu kollalama sir?

ஐந்து பரல்களைப் பெற்றுள்ளார் என்றாலே அவர் ஆட்டத்திற்கு செலக்ட் ஆகிவிட்டார் என்று அர்த்தம். ஆகவே அவர் ஓரளவிற்கு நன்றாக ஆடுவார். கவலை வேண்டாம்.

4. Pathaga isthanam, athan athipathi & athan dhasi patriya paadam vendum sir?

பழைய பாடங்களில் உள்ளது. தேடிப்பிடித்துப் படியுங்கள்
---------------------------------------------------------------------
email.No.92
சந்திரசேகரன் கருணாகரன்

Respected sir,
For Meena rasi Midhuna lagnam, Raghu is in Midhunam and keethu is in dhanusu and it is vargothamam. what will be effect of this for the persons on his married life during keedhu desai. waiting for your positive reply.
chandrasekaran

ஏழாம் அதிபதி குரு பகவானை ஏன் ஒளித்துவைத்திருக்கிறீர்கள். திருமண வாழ்விற்கு அவர் முக்கியமில்லையா? கேது தசை என்பது பிரேக் இல்லாத வண்டியில் போவதைப் போன்றது. உங்களுக்குக் கேது குருவின் வீட்டில் இருப்பதால், அவருடைய தசையில் அதிக பாதிப்புக்கள் இருக்காது!
------------------------------------------------------
email.No.93
சரஸ்வதி கல்யாணம், சென்னை

மதிப்பிற்கு உரிய ஐயா

தயவு செய்து எனது சந்தேகத்தைத் தீர்த்து வைக்கவும்

1.கடக லக்னத்துக்கு மூன்றாம் அதிபதி புதன்.பன்னிரெண்டாம் அதிபதியும் புதன்.இந்த நிலை விபரீத ராஜா யோகமா?

நிச்சயமாக இல்லை!

2.ரிஷப லக்னத்துக்கு ஒன்பது பத்து அதிபதி சனி. அதனால் பிறப்பிலேயே தர்மகர்மாதி யோகம் என்று சொல்லக் கேட்டு இருக்கின்றேன் . விபரீத ராஜா யோகமும் அதேபோலவா?

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் அது விபரீத ராஜயோகம்!

3.கடக லக்னத்துக்கு கன்னியில் கேது , மிதுனத்தில் புதன் செவ்வாய் சூரியன் சுக்கிரன் இந்த நிலை பலன் என்ன?தயவு செய்து விளக்கவும்

முக்கியமான 4 கிரகங்கள் 12ஆம் வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டுள்ளன. அவைகள் கிரகயுத்ததில் உள்ளனவா, அஸ்தமனம் பெற்றுள்ளனவா, சுயவர்க்கத்தில் எத்தனை பரல்களுடன் உள்ளன, அம்சத்தில் அவற்றின் நிலை என்ன, இது போன்று பல என்ன, என்ன கேள்விகளை வைத்து, முழு ஜாதகத்தையும் அலசினால்தான் பதில் சொல்ல முடியும்! ஆகவே எனது பாடங்களை முழுமையாகப் படியுங்கள். உங்களுக்கே அலசும் தன்மை/திறமை கிடைக்கும்.
------------------------------------------------------------------
email.No.94
சோழி கணேசன்

வணக்கம் அய்யா

1.சனியின் சஞ்சாரத்தின் போது பரல்கள் குறைவாக இருக்கும் போது சிரமமான பலன்கள் ஏற்படும் என்று சொல்லியுள்ளீர்கள் ,இப்பொது எனக்கு சனி தசையில் சனி புக்தி நடக்கிறது .எட்டாம் இடத்தில சனி கோச்சாரத்தில் உள்ளார் அங்கு பரல்கள் 35 சனியின் சுயவர்க்க பரல்கள் 2 இதை எப்படி எடுத்துக்கொள்வது? பலன்கள் நன்றாக இருக்குமா அல்லது குறையுமா, அடுத்த சஞ்சரத்தின் போது 29பரல்கள் இருக்கும் இடத்திற்கு செல்லும் போது பலன்கள் குறையுமா( because the house which has lesser than the previous one ,but normal is 25 isnt it?)

அடுத்த மாற்றத்தை அது நிகழும்போது பார்த்துக்கொள்வோம். இப்போது சனி சஞ்சாரம் செய்யும் இடத்தில் 35 பரல்கள் இருப்பதால், ஏற்றமான காலம். வாழ்க்கையின் அடுத்த லெவலுக்கு சனீஷ்வரன் உங்களை உயர்த்தி
விடுவான். அஷ்டமச் சனியும் சேர்ந்திருப்பதால், அந்த உயற்சி உங்கள் கடும் உழைப்பால் மட்டுமே கிடைக்கும்.

(கோள்சாரச்சனி 35 பரல்கள் உள்ள ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாதகனுக்குப் பல நன்மைகளைச் செய்வார். தன்னுடைய சுயவர்க்கத்தில் அவர் வலிமை இழந்து காணப்படுவதால், அந்த நன்மையின் அளவுகள் குறையலாம். மற்றபடி பெரிய பதிப்பு ஒன்றும் இருக்காது. அடுத்த பெயர்ச்சியில் இருப்பதைவிட 6 பரல்கள் குறைவாக உள்ளதால், அங்கே சஞ்சரிக்கும் காலத்தில் பொருள்/பண விரையத்தை ஏற்படுத்துவார். அப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமாகக் கொடுக்கல் வாங்கல் மற்றும் நண்பர்களுக்கு ஜாமீன் கையெழுத்துப்போடும் விவகாரங்கள், கூட்டுத்தொழில் போன்ற செயல்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!)

2. இரண்டாவது சந்தேகம் பொதுவானது ,ராசியில் கிரகங்களின்
அமைப்பை வைத்து பார்க்கும் போது சில கிரகங்கள் நன்மையான
இடத்திலும் சில கிரகங்கள் பகை வீட்டிலும் இருந்தாலும் ,அம்சத்தில்
அவை நல்ல அமைப்பில் மாறிஇருக்கும் பட்சத்தில் மொத்தத்தில்
எல்லாமே நல்ல அமைப்பில் உள்ளதுபோல தோன்றுமே இதை
எப்படி எடுத்துக்கொள்வது (ie ; the four planet is in good positin in rasi
other five are good in amsa means is it worth to take this kind of consideration
which seems to be good for the person )
தங்கள் மாணவன்
கணேசன்

அம்சத்தில் நன்றாக இருந்தால் நல்லதுதானே? எதற்காகத் தோன்ற வேண்டும்? நல்லது நடக்கும். நன்மைகள் கிடைக்கும். அருகில் சோழீஸ்வரர் இருக்கையில் கவலை எதற்கு?
--------------------------------------------------------
email.No.95
ஜெய்

வணக்கம் வாத்தியரே
1.ஒரு ஜாதகத்தில் எதனை குழந்தைகள் என்று எப்படி கண்டு பிடிப்பது?

25.1.2010 அன்று, பாடம் எண் 18ல் மின்னஞ்சல் எண் 75ற்கான பதில்தான் உங்களுக்கும் உரிய பதில். அதைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்!

2.ஜாதகத்தில் மறுமணம் செய்ய செய்யகூடிய வருடத்தை எப்படி கணிப்பது?
அன்பு மாணவன்
ஜெய்

வருடத்தை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் வயதாகிவிடும். முதல் மணம் முறிந்து போனதற்கு சம்பந்தப்பட்ட ஆசாமி, நீதிமன்றத்தில் விவாகரத்துத் தீர்ப்பை வாங்கி வைத்துள்ளாரா என்று கேளுங்கள்.
வாங்கி வைத்திருக்கிறார் என்றால், மறுமணம் செய்துகொள்ள ஒரு பெண்ணைத் தேடிப் பிடிக்கச் சொல்லுங்கள் (இன்றைய சூழ்நிலையில் மறுமணத்திற்குப் புதுப்பெண் கிடைப்பது கஷ்டம். ஆகவே அவரைப் போலவே
விவாகரத்தான ஒரு பெண்ணை மணந்து கொள்வாரா என்று கேளுங்கள்). அவர் சம்மதம் என்று சொன்னால், அந்த அம்மணியும் சரியென்று சொன்னால், எதையும் பார்க்க வேண்டாம். உடனே திருமணத்தை நடத்திவிடுங்கள்!.

ராசிச் சக்கரத்தில் ஏழாம் அதிபதி 12ல் போய் (அதாவது விரைய ஸ்தானத்தில்) உட்கார்ந்திருந்தால், முதல் திருமணம் பெரும்பாலும் ஊற்றிக்கொண்டுவிடும். நவாம்சத்தில் ஏழாம் அதிபதி நன்றாக இருந்தால் (That is free from afflictions) மறுமண வாய்ப்பு உண்டு!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

36 comments:

  1. "தீய கிரகங்கள் நீசமானால் தீமைகள் சற்று அதிகமாகவே இருக்கும் (அதுவும் 12ல் இருப்பதால், அவருடைய தசைகளில் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். வீண் வம்பிற்குப்போகக் கூடாது. கொடுக்கல், வாங்கல் கூடாது."

    Ayya Sivaji Avarkalin Jathagathilum Raghu Neecham adainthu thaane irukirar.(Avar DOB vaithu Jaganaath Hora vil parthen).

    Appidi enral irukum idam (a) serkai poruthu Jathagathil Neecham analum Raghu Dasa nanmai alikuma?

    ReplyDelete
  2. குருவே வணக்கம்.

    எங்களைப் போன்ற பொறியியல் துறையில் சேர்ந்தவர்கள் படிப்பை முடித்துவிட்டு; முதல் வருட பயிற்சியில் (job oriented training) இருக்கும் போது, நாங்கள் பழுது செய்யும் வேளையில் முனையும் போது வரும் பழுதுகளை பெரிய அளவிலே யோசித்துக் கொண்டும் கற்ற கல்வியில் உள்ள ஆழ்ந்த விசயங்களைப் பற்றியே ஆழ்ந்து யோசித்து கொண்டு இருக்கையில், மிகவும் சாதாரணமாக ஒரு மூத்த பொறியாளர் வந்து கண்டு பிடித்து கூறுவார். மேலும் அது மிகவும் அடிப்படையான விசயமாகவே இருக்கும்.

    அதைப் போல, தங்களின் பாடங்களைப் படித்து விட்டு, சுய ஜாதகங்களை அலசும் போது தங்களின் கேள்வி பதில் அங்கம் மிகவும் பேருதவியாகவும், எங்களின் அறியும் திறனை இன்னும் இன்னும் (sharpening and finu tuning)கூர் தீட்டுகிறது.

    நன்றிகள் குருவே!

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  3. வணக்கம்.

    உள்ளேன் ஐயா..

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  4. உள்ளேன் ஐயா.

    Are you planning to include this question & Answer(offcourse Sensible questions only)in your Book?
    I wish this is also good references.

    ReplyDelete
  5. Doubt:
    Dear sir,
    In horoscope, In kadaga lagna kethu is there, and the same is,
    If seeing in bhava kethu is in 12th place from lagna.
    Which i have to consider.?

    ReplyDelete
  6. /////dhana said...
    Present sir../////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  7. /////Strider said...
    "தீய கிரகங்கள் நீசமானால் தீமைகள் சற்று அதிகமாகவே இருக்கும் (அதுவும் 12ல் இருப்பதால், அவருடைய தசைகளில் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். வீண் வம்பிற்குப்போகக் கூடாது. கொடுக்கல், வாங்கல் கூடாது."
    Ayya Sivaji Avarkalin Jathagathilum Raghu Neecham adainthu thaane irukirar.(Avar DOB vaithu Jaganaath Hora vil parthen). Appidi enral irukum idam (a) serkai poruthu Jathagathil Neecham analum Raghu Dasa nanmai alikuma?/////

    நீசனுடன் ஒரு உச்சமான கிரகம் சேர்ந்தால், நீச பங்க ராஜயோகம் ஏற்பட்டுக் கதையே மாறிவிடும்!

    ReplyDelete
  8. /////Alasiam G said...
    குருவே வணக்கம்.
    எங்களைப் போன்ற பொறியியல் துறையில் சேர்ந்தவர்கள் படிப்பை முடித்துவிட்டு; முதல் வருட பயிற்சியில் (job oriented training) இருக்கும் போது, நாங்கள் பழுது செய்யும் வேளையில் முனையும் போது வரும் பழுதுகளை பெரிய அளவிலே யோசித்துக் கொண்டும் கற்ற கல்வியில் உள்ள ஆழ்ந்த விசயங்களைப் பற்றியே ஆழ்ந்து யோசித்து கொண்டு இருக்கையில், மிகவும் சாதாரணமாக ஒரு மூத்த பொறியாளர் வந்து கண்டு பிடித்து கூறுவார். மேலும் அது மிகவும் அடிப்படையான விசயமாகவே இருக்கும்.
    அதைப் போல, தங்களின் பாடங்களைப் படித்து விட்டு, சுய ஜாதகங்களை அலசும் போது தங்களின் கேள்வி பதில் அங்கம் மிகவும் பேருதவியாகவும், எங்களின் அறியும் திறனை இன்னும் இன்னும் (sharpening and fine tuning)கூர் தீட்டுகிறது.
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ./////

    புரிதலுக்கு நன்றி! உங்களின் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  9. /////Success said...
    வணக்கம்.
    உள்ளேன் ஐயா..
    வாழ்க வளமுடன்//////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  10. /////சிங்கைசூரி said...
    உள்ளேன் ஐயா.
    Are you planning to include this question & Answer(offcourse Sensible questions only)in your Book?
    I wish this is also good references./////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி! உங்கள் எண்ணப்படியே, பலரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்தக் கேள்வி பதில் பகுதியும் புத்தகத்தில், separate Index page for questions & answers உடன் சேர்க்க உள்ளேன்.

    ReplyDelete
  11. /////DHANA said...
    உள்ளேன் ஐயா!/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  12. jee said...
    Doubt:
    Dear sir,
    In horoscope, In kadaga lagna kethu is there, and the same is,
    If seeing in bhava kethu is in 12th place from lagna.
    Which i have to consider.?/////

    Take the bhava for fine tuning the results of Ketu

    ReplyDelete
  13. கடக லக்னத்தை வைத்துக் கேள்விகேட்டது ஏதோ என் ஜாதகத்தைக் கையில்
    வைத்துக்கொண்டு கேட்டதைப்போலத் தோன்றுகிறது.

    வம்பு சண்டைக்கு கிரஹங்கள் நன்றாக இருந்தாலும் போகாமல் இருப்பதே ந‌ம்
    மன அமைதிக்கு நல்லது.

    ஒரு கணவன்‍ மனைவி ஓர் ஊரில் குடி புகுந்தார்கள்.வெளியூர்காரர்கள்.அந்த வீட்டம்மா சண்டைக்காரம்மா. ஏற்கனவே குடி இருந்த ஊரில் இனி சண்டை பிடிக்க யாரும் இல்லை என்ற சூழலில்தான் இங்கே வந்து குடி ஏறியுள்ளார்கள்.
    விவரம் அறியாத புது ஊர்காரர்கள் சண்டைக்காரம்மாவிடம் வந்து பேச்சுக்
    கொடுத்து விட்டு வாங்கிக்கட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள். கொஞ்ச‌ நாட்களில்
    இந்த ஊரிலும் எல்லோரும் பேசுவதை நிறுத்திவிட்டார்கள்.ப‌ழையபடி புது ஊர் தேடி அந்த ஜோடி, தட்டுமுட்டு சாமன்களை சண்டைக்காரம்மா எடுத்துக்கொள்ள சோற்று மூட்டையை அவ‌ள் கணவன் தூக்கிக்கொண்டு தெருமுனைக்கு வந்து திரும்பும்போது, எதிரில் வந்த ஒருத்தி, "அப்பாடி ஒருவழியா கிளம்பிட்டாம்மா"என்று முணுமுணுத்து விட்டாள்.காதில் விழுந்துவிட்டது நமது கதாநாயகிக்கு.விடுவாளா வந்த சண்டையை?
    "சண்டை வந்தது என் கணவா;சோற்று மூட்டையை வை கீழே!"என்றாளாம்.
    ஒரு பாட்டம் சண்டை போட்டு விட்டு அப்பறம்தான் அடுத்த ஊருக்குப் போனாளாம்.கதை முடிந்தது. க‌த்திரிக்காய் காய்த்த‌து!

    ReplyDelete
  14. Dear Sir

    Yes Sir.

    Kelvi Padhilgal Arumai.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  15. //வீண் வம்பிற்குப்போகக் கூடாது. கொடுக்கல், வாங்கல் கூடாது. only routine work!//

    நாம் வீண் வம்புக்கு போகாவிட்டால் வம்பு நம்மைத் தேடி வரும். கொடுக்கல் வாங்கல் பரவாயில்லை. எதையும் வாங்காமலேயே இருப்பதையெல்லாம் (பறி) கொடுக்க வேண்டி வரும். கெட்ட நேரம் வந்தால். விதி வலியது. இருப்பினும் தாங்கள் இதை ஒரு எச்சரிக்கைக்காக சொல்கிறீர்கள் என்பது புரிகிறது.

    நிற்க, பலர் கேள்வி கேட்பதைப் பார்த்தால் எனக்கும் ஏதாவது கேள்வி கேட்க வேண்டும் போல் உள்ளது. என்னை மறக்க முடியாத அளவுக்கு ஏதாவது சிக்கலான கேள்வி கேட்டு தங்களைத் திணற வைக்க வேண்டும் போல் இருக்கிறது. (சும்மா தமாஷ்)

    ReplyDelete
  16. அப்பனே முருகா!!!

    உச்சி! மதியம் பொழுது வணக்கம்!

    சுட்ட பழம்! வேண்டுமா? அல்லது சுடாத பழம்! வேண்டுமா? என்று

    இந்த 'அவ்வை மூதாட்டிக்கு! அறிவு ஞானத்தை போதித்த இறைவா!

    'அம்மையப்பன் தான் உலகம்! என்று

    எனக்கு பாடல் வரியடுத்து கொடுத்த தலைவா !

    அம்மா! அப்பா! விடம் கோபித்துக்கொண்டு, இப்படி

    குன்று மேல் நிற்பது முறையா !

    இது தகுமா!

    ஐயனே!

    நீ உலகத்திற்கு பாடம் சொல்லவேண்டும் என்று நினைப்பதை எவரால் தடுக்க முடியும்!

    என்ற திருவிளையாடல் வசனம் போல்!

    (சுப்) ஐயா தாங்கள் கூறும் (செயல்படுத்தும்) அனைத்தும் நன்றே!

    நலமே!

    ReplyDelete
  17. Dear Sir,
    Present for today class. Today Q&A really nice.

    If 6/8/12th house Gods get Asthangam means it will become more malefic planets? or will turn to become good?

    Few says Mercury wont get Asthangam. Is it true sir?

    ReplyDelete
  18. Present sir,
    thanks for the answers

    ReplyDelete
  19. kmr.krishnan said...
    கடக லக்னத்தை வைத்துக் கேள்விகேட்டது ஏதோ என் ஜாதகத்தைக் கையில்
    வைத்துக்கொண்டு கேட்டதைப்போலத் தோன்றுகிறது.
    வம்பு சண்டைக்கு கிரஹங்கள் நன்றாக இருந்தாலும் போகாமல் இருப்பதே ந‌ம்
    மன அமைதிக்கு நல்லது.
    ஒரு கணவன்‍ மனைவி ஓர் ஊரில் குடி புகுந்தார்கள்.வெளியூர்காரர்கள்.அந்த வீட்டம்மா சண்டைக்காரம்மா. ஏற்கனவே குடி இருந்த ஊரில் இனி சண்டை பிடிக்க யாரும் இல்லை என்ற சூழலில்தான் இங்கே வந்து குடி ஏறியுள்ளார்கள்.
    விவரம் அறியாத புது ஊர்காரர்கள் சண்டைக்காரம்மாவிடம் வந்து பேச்சுக்
    கொடுத்து விட்டு வாங்கிக்கட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள். கொஞ்ச‌ நாட்களில்
    இந்த ஊரிலும் எல்லோரும் பேசுவதை நிறுத்திவிட்டார்கள்.ப‌ழையபடி புது ஊர் தேடி அந்த ஜோடி, தட்டுமுட்டு சாமன்களை சண்டைக்காரம்மா எடுத்துக்கொள்ள சோற்று மூட்டையை அவ‌ள் கணவன் தூக்கிக்கொண்டு தெருமுனைக்கு வந்து திரும்பும்போது, எதிரில் வந்த ஒருத்தி, "அப்பாடி ஒருவழியா கிளம்பிட்டாம்மா"என்று முணுமுணுத்து விட்டாள்.காதில் விழுந்துவிட்டது நமது கதாநாயகிக்கு.விடுவாளா வந்த சண்டையை?
    "சண்டை வந்தது என் கணவா;சோற்று மூட்டையை வை கீழே!"என்றாளாம்.
    ஒரு பாட்டம் சண்டை போட்டு விட்டு அப்பறம்தான் அடுத்த ஊருக்குப் போனாளாம்.கதை முடிந்தது. க‌த்திரிக்காய் காய்த்த‌து!/////

    சிலருக்கு இயற்கையாகவே சண்டைக்குப்போகும் குணம் இருக்கும்! தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  20. /////NARESH said...
    Good After noon sir!////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  21. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Yes Sir.
    Kelvi Padhilgal Arumai.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நல்லது.நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  22. ////ananth said...
    //வீண் வம்பிற்குப்போகக் கூடாது. கொடுக்கல், வாங்கல் கூடாது. only routine work!//
    நாம் வீண் வம்புக்கு போகாவிட்டால் வம்பு நம்மைத் தேடி வரும். கொடுக்கல் வாங்கல் பரவாயில்லை. எதையும் வாங்காமலேயே இருப்பதையெல்லாம் (பறி) கொடுக்க வேண்டி வரும். கெட்ட நேரம் வந்தால். விதி வலியது. இருப்பினும் தாங்கள் இதை ஒரு எச்சரிக்கைக்காக சொல்கிறீர்கள் என்பது புரிகிறது.
    நிற்க, பலர் கேள்வி கேட்பதைப் பார்த்தால் எனக்கும் ஏதாவது கேள்வி கேட்க வேண்டும் போல் உள்ளது. என்னை மறக்க முடியாத அளவுக்கு ஏதாவது சிக்கலான கேள்வி கேட்டு தங்களைத் திணற வைக்க வேண்டும் போல் இருக்கிறது. (சும்மா தமாஷ்)////

    எதற்குக் கேள்வி எல்லாம்? வழக்கம்போல ‘ஆனந்த்’ தமாக இருங்கள் (இதுவும் ஒரு நகைச்சுவைக்காகத்தான்)

    ReplyDelete
  23. ////kannan said...
    அப்பனே முருகா!!!
    உச்சி! மதியம் பொழுது வணக்கம்!
    சுட்ட பழம்! வேண்டுமா? அல்லது சுடாத பழம்! வேண்டுமா? என்று
    இந்த 'அவ்வை மூதாட்டிக்கு! அறிவு ஞானத்தை போதித்த இறைவா!
    'அம்மையப்பன் தான் உலகம்! என்று எனக்கு பாடல் வரியடுத்து கொடுத்த தலைவா !
    அம்மா! அப்பா! விடம் கோபித்துக்கொண்டு, இப்படி குன்று மேல் நிற்பது முறையா !
    இது தகுமா!
    ஐயனே!
    நீ உலகத்திற்கு பாடம் சொல்லவேண்டும் என்று நினைப்பதை எவரால் தடுக்க முடியும்!
    என்ற திருவிளையாடல் வசனம் போல்!
    (சுப்) ஐயா தாங்கள் கூறும் (செயல்படுத்தும்) அனைத்தும் நன்றே!
    நலமே!//////

    படம் முடிந்து வணக்கம் போட்டுவிட்டார்களே சுவாமி! நீங்கள் இன்னும் கோபித்துகொண்டு நின்ற காட்சியிலேயே நிற்கிறீர்களே! சீக்கிரம் படத்தைப் பார்த்து முடியுங்கள்!

    ReplyDelete
  24. Anbu said...
    Dear Sir,
    Present for today class. Today Q&A really nice.
    If 6/8/12th house Gods get Asthangam means it will become more malefic planets? or will turn to become good? Few says Mercury wont get Asthangam. Is it true sir?////

    பாதகஸ்தான அதிபதிகள் அஸ்தமனம் பெற்றால், அவர்களுடைய இயற்கைத்தன்மைகளை வைத்துப் பலன்கள் மாறும். புதனுக்கு அஸ்தமனம் இல்லை என்று சிலர் சொல்வார்கள். அது அவர்களுடைய சொந்தக் கருத்து!

    ReplyDelete
  25. /////Ram said...
    Present sir,
    thanks for the answers////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  26. ////Strider said...
    "தீய கிரகங்கள் நீசமானால் தீமைகள் சற்று அதிகமாகவே இருக்கும் (அதுவும் 12ல் இருப்பதால், அவருடைய தசைகளில் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். வீண் வம்பிற்குப்போகக் கூடாது. கொடுக்கல், வாங்கல் கூடாது."
    Ayya Sivaji Avarkalin Jathagathilum Raghu Neecham adainthu thaane irukirar.(Avar DOB vaithu Jaganaath Hora vil parthen). Appidi enral irukum idam (a) serkai poruthu Jathagathil Neecham analum Raghu Dasa nanmai alikuma?/////

    நீசனுடன் ஒரு உச்சமான கிரகம் சேர்ந்தால், நீச பங்க ராஜயோகம் ஏற்பட்டுக் கதையே மாறிவிடும்!!"

    Ayya Sivaji avarkaluku Neecha Banga Raja Yogamamum Illaiyey.Raghu Thaniyaga thaan irukirar Neechamagi(1-10-1927)-Neengal pathivil koduthu ulla DOB thaan potu parthen...Piragu Raghu Dasa avaruku Etram vanthathu ethanal?

    ReplyDelete
  27. I like to know the 8th house lesson. Please teach that lesson as soon as possible.


    Thanks

    ReplyDelete
  28. I am using 64 bit processor and Vista, so none of the softwares given in your links are working particularly long back I was using PREDICTT software in my previous laptop, the best but now not working any other software compatible to 64 bit Vista any Idea?(Jagganath Hora working but not satisfied) pls share, I am surprised that none of our students asked about it

    With warm regards

    ReplyDelete
  29. Vanakkam sir,
    Thanks for ur Yesterday lesson. Yesterday lesson is very very nice sir.
    sundari

    ReplyDelete
  30. ////Strider said...
    "தீய கிரகங்கள் நீசமானால் தீமைகள் சற்று அதிகமாகவே இருக்கும் (அதுவும் 12ல் இருப்பதால், அவருடைய தசைகளில் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். வீண் வம்பிற்குப்போகக் கூடாது. கொடுக்கல், வாங்கல் கூடாது."
    Ayya Sivaji Avarkalin Jathagathilum Raghu Neecham adainthu thaane irukirar.(Avar DOB vaithu Jaganaath Hora vil parthen). Appidi enral irukum idam (a) serkai poruthu Jathagathil Neecham analum Raghu Dasa nanmai alikuma?/////
    நீசனுடன் ஒரு உச்சமான கிரகம் சேர்ந்தால், நீச பங்க ராஜயோகம் ஏற்பட்டுக் கதையே மாறிவிடும்!!"
    Ayya Sivaji avarkaluku Neecha Banga Raja Yogamamum Illaiyey.Raghu Thaniyaga thaan irukirar Neechamagi(1-10-1927)-Neengal pathivil koduthu ulla DOB thaan potu parthen...Piragu Raghu Dasa avaruku Etram vanthathu ethanal?//////

    சிவாஜி அவர்களின் படம் பராசக்தி வெளிவந்தது முதல் வீயட் நாம் வீடு படம் வெளிவந்தவரை இடைப்பட்ட காலத்தில் (சுமார் 18 ஆண்டு காலம்), அவருக்கு ராகுதிசைதான் நடந்தது. அந்த திசையில்தான் செல்வம், புகழ், பெயர், பெருமை எல்லாம் கிடைத்தது. அதற்குக் காரணத்தை அறிந்துகொள்ள அவருடைய பிறப்பு விவரங்கள் (Date of birth, Time of birth & place of birth) தெரிய வேண்டும். எங்காவது தேடி, பிடித்துக் கொடுங்கள்.

    ReplyDelete
  31. ////Thamu said...
    I like to know the 8th house lesson. Please teach that lesson as soon as possible.
    Thanks//////

    அடுத்த பாடம் அதுதான்!

    ReplyDelete
  32. /////Vijayakumar Anandhan said...
    I am using 64 bit processor and Vista, so none of the softwares given in your links are working particularly long back I was using PREDICTT software in my previous laptop, the best but now not working any other software compatible to 64 bit Vista any Idea?(Jagganath Hora working but not satisfied) pls share, I am surprised that none of our students asked about it
    With warm regards/////

    வகுப்பறைக் கண்மணிகளே, அவர் சொல்கின்ற பிரச்சினையைத் தீர்ர்க்கும் வழி தெரிந்தவர்கள், அவருக்கு உதவ வேண்டுகிறேன்

    ReplyDelete
  33. /////sundari said...
    Vanakkam sir,
    Thanks for ur Yesterday lesson. Yesterday lesson is very very nice sir.
    sundari/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com