மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.1.10

Doubt: அடித்துத் துவைத்து அலசுவது எப்படி?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: அடித்துத் துவைத்து அலசுவது எப்படி?

Doubts: கேள்வி பதில் பகுதி 22

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபத்திரெண்டு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.86
செந்தில் குமார்

Dear Sir,
I thank you for teaching astrology lessons for all. I have some basic astrology knowledge now. I have some doubts kindly clear the doubts.

1. Sir, when a graha utcham in amsam that graham has full power even that is in enemy house in rasi right sir.

செவ்வாய் சனிவீட்டில்தான் உச்சமடைகிறார். அது அவருக்குப் பகை வீடுதான். இருந்தாலும் உச்சமானதற்கான பலனைத் தன் தசா/புத்திகளில் ஜாதகனுக்கு அவர் தருவார். அதுபோல உச்சமான மற் கிரகங்களும் தரும். கவலை எதற்கு?

2. My doubt is when graham has parivarthanai yogam only in amsam that is 3 and 11th graham that is sevvai in 3rd house and suriyan in 11th house and 4th and 7th graham that is guru in 4th house and bhutan in sevanth house in amsam for muthunam lagnam is it has power sir and will they do good things in their dasas.Kindly clear my doubts.
Best Regards,
R.Senthilkumar.

அம்சம் என்றால் என்ன என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். Navamsam is the magnified version of a Rasi Chart பரிவர்த்தனை பெற்றதற்கான பலன்கள் சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா புத்திகளில் நிச்சயம் கிடைக்கும்!
---------------------------------------------------------------------
email.No.87
சரவண குமார்
Dear Sir,

1. I read in our lessons if Mandhi present in 11th place, That is good. If Guru also Joined with Madhi in 11th, is that good for the native?(11=Kumbam)
Thanks
Saravana

இரண்டு லாட்டரிகள் ஒரே சமயத்தில் அடித்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். 11ஆம் வீடு கும்பம் என்றால் லக்கினம் மேஷம்.
மேஷத்திற்கு குரு பாக்கியாதிபதி. அவர் 11ல் (லாபத்தில்) அமர்வது நல்லதுதான்!
------------------------------------------------------
email.No.88
ரவிச்சந்திரன்

Respected Sir,

I humbly request u to calarify one of my doubt.
Both Bride and Bridegroom are affected by Kala Sharpa Dhosa in their own
horoscope each and finished that period as per Lagna Astawarga paral.(Age 27
bride and 31 bride groom) before marriage. In Both horoscope, Ragu is in 5th
house. Can both do marry or not?
will ragu not affect puthra dhosa when kala sarpa dhosa period completed?
I am awaiting for ur precious answer.

இருவருக்கும் ஐந்தில் ராகு இருப்பதால், நட்சத்திரங்களை வைத்து
மகேந்திரப் பொருத்தம் உள்ளதா என்று பாருங்கள். அதோடு இருவருக்கும், ஐந்தாம் வீடு, அதன் அதிபதி இருக்கும் வீடு, காரகன் குரு இருக்கும் வீடு
ஆகிய வீடுகளில் அஷ்டகவர்க்கப்பரல்கள் 28ற்குமேல் இருக்கிறதா
என்றும் பாருங்கள்
------------------------------------------------------------------
email.No.89
சந்திரசேகரன் கருணாகரன்

Respected sir,

I have one doubt, For kumba lagnam simma rasi, if Bhudhan is in kanni with suriyan.
But bhudhan is in vakram and vargothamam, If it is so what will be effect for the person in studies and carrier development. waiting for your positive reply
chandrasekarn

கல்விக்குப் பார்க்க வேண்டிய இடம் 4ஆம் வீடு. 4ஆம் வீட்டின் வலிமை,
அதன் அஷ்டகவர்க்கப்பரல்கள், அதன் அதிபதியின் வலிமை, அந்த வீடு
பெறும் பார்வைகள், அதன் அதிபதியுடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள், அம்சத்தில் அவருடைய நிலைமை, அஷ்டகவர்க்கத்தில் அவருடைய சுய வர்க்கப்பரல்கள் என்பதோடு, வித்யா காரகன் புதனையும் பார்க்க வேண்டும். புதன் எட்டில் இருந்தாலும், உச்சமாக இருப்பதுடன், வர்கோத்தமும் பெற்றிருக்கிறார். புதன் வக்கிரம் அடைந்ததை மட்டும் பார்த்திருக்கிறீர்கள். அவருடைய சுயவர்க்கப் பரல்களையும் பாருங்கள். சும்மா அலசினால், போதாது. நன்றாகக் கல்லில் அடித்துத் துவைத்து அலச வேண்டும்.
அடித்துத் துவைத்து அலசுவது எப்படி என்று முன்பே சொல்லிக் கொடுத்திருக்கிறேன். முதலில் பழைய பாடங்களை நன்றாகப் படியுங்கள்.
--------------------------------------------------------
email.No.90
R.ஹரிகரன்

ஐயா,
அய்யா லக்னத்தில் மாந்தி உடன் சந்திரன் உள்ளது. இதன் பலன் என்ன தயவு செய்து விளக்கவும்.

என்னுடன் என் மாமா இருக்கிறார். என்ன நடக்கும் சொல்லுங்கள் என்பதைப் போல உள்ளது உங்கள் கேள்வி. மாமா என்றால் தாய் மாமாவா. பெண்ணைக் கொடுத்தவகையில் மாமாவா அல்லது வேறு வகையில் மாமாவா?
உங்களுக்கும் அவருக்கும் எந்த விதத்தில் உறவு? ஏதாவது கொடுக்கல் வாங்கள் உள்ளதா? உங்களின் பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள்? உங்களின் தகுதி என்ன? என்று பல விஷயங்கள் தெரிய வேண்டாமா?
தெரியாமல் எதைச் சொல்வது?

லக்கினம் என்று எழுதினீர்களே? என்ன லக்கினம்? லக்கினாதிபதி எங்கே இருக்கிறார்? சந்திரன் உச்சமான நிலையில் உள்ளாரா? அல்லது நீசமாகிப் படுத்திருக்கிறா? என்பதை எல்லாம் சொன்னீர்களா? சொல்ல வேண்டாமா?

பொதுப்பலனாகச் சொன்னால், சந்திரன் மனகாரகன் (authority for mind) அவருடன், தீய கிரகங்கள் ஒன்றாக இருப்பது நல்லதல்ல! மன உளைச்சல் இருக்கும். எந்த அளவு அந்த உளைச்சல் இருக்கும் என்பது ஜாதகத்தின்
மற்ற அம்சங்களை வைத்து மாறுபடும்.

நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் பதிவு செய்யும் முன்பு, வழக்கு
சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் (supporting documents) எல்லாம் சரியாக
உள்ளதா என்று பார்க்காமல் இருப்போமா? அதுபோல ஒரு
கேள்வியைக் கேட்குமுன்பு, அது சம்பந்தப்பட்ட விஷயங்களைச்
சொல்லிக் கேள்வியைக் கேட்பதுதான் முறையான செயல் ஆகும்!
புரிகிறதா நண்பரே?
++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

36 comments:

  1. அய்யா இனிய காலை வணக்கம்,

    சந்தேகங்களும் அதற்க்கான விளக்கமும் அருமை .........

    ReplyDelete
  2. Dear sir,

    Thanks for your precious time spending on my questions and all our questions sir.
    உங்களுக்கு நிகர் இல்லை எங்களிடம்!!!

    மிக்க நன்றி
    சரவணா (கோவை)

    ReplyDelete
  3. குருவே வணக்கம்,

    வயதும், அனுபவமும், சொல்நயம்
    அறிவும், அதனுள் தெளிவும் பொருள் நயம்.

    செஞ்சொல் வேந்தராக, சொல்லிடை வித்தகராக
    வலைப்பதிவில் பெருவலைப் பின்னி
    (எப்படி அதுதான் பின்னி ஆலைகளில் பெற்ற அனுபவமோ?)

    திருக்கையும் சுராவும் மட்டுமல்ல பெரிய பெரிய திமிங்கிலம் எல்லாம்
    வெளியேற மனமில்லாமல் வலையுனுள்ளே (சு) வாசிக்கிறதே
    இந்த சாத்வதம், இது இயற்கை.... இல்லையா என்ன?

    இருப்பும், பொறுப்பும், இருக்கும் இடத்தில்
    நெருப்பும் இருப்பதால்
    இருபதென்ன எழுபதுக்கும் பதில் கூறப் பஞ்சமேது??

    பாராட்டவேண்டும் என்று அல்ல,
    அப்படிப் பழக வேண்டும்.... இம் ம் ம் .... அல்ல - பிறகு ஏன்?
    இல்லை எப்படி கண்டும் காணாமல்ப் போவது.......
    நாம் வேண்டாது நம்மைப் படைத்தவர்களுக்கு நன்றி
    பாராட்டுவதுப் போலத்தான் இதுவும்.
    தண்ணீர் குளிர்வதும், தணல் சுடுவதும் இயற்கை என்றாலும்
    இயம்புதல் தானே இயல்பு....

    நன்றிகள் குருவே!
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  4. வாத்தியார் ஐயா,

    வணக்கம்!

    எல்லாப் பதிவுகளையும் தவறாமல் படிக்கிறேன். அவ்வப்போது பழைய பாடங்களயும் மீண்டும் படிக்கிறேன்.

    வருகைப் பதிவுக்காக இந்தப் பதிவு!

    நன்றி, வணக்கம்!

    அன்புடன்

    மதுரை சுப்பு

    ReplyDelete
  5. ஜோதிட உலகின் சாணக்கியரே!!!

    பல ஜோதிட வித்தைகள் அறிந்த சான்றோரே!!!

    அதிகாலை வணக்கம்!!!

    பொதிகை மலை(அடிவாரம்)சாரலிலே!
    சித்திரை திங்களிலே!
    தாய்! உண்ட விஷம் முறித்து!
    வளர்பிறை திங்களிலே!
    பின் நடுசாம வேளையிலே !
    ஐந்தாவது மழலையாக!
    அத்தி பூ! பூத்தது போல், பூத்து!
    அருகம்புல் போல், வேர் ஊன்றி!
    வாழைக்கன்று போல்!செழித்து வளர்ந்து!
    குட்டி சுக்(கீ)ரன் என்னும் செல்வந்த (திசை தேவ)னால்!
    இருப்பது வருட (ஊழ் வினையால்) வாழ்வை இழந்தது!
    சூரிய தேவனை(திசையை)யே!கதி என்று!
    நித்தம்!கைதொழுது வேண்டி நிற்கும் !
    ஒரு பிரம்மசாரியின் முழுநம்பிக்கை!!

    என் குருதேவே !!!!!

    தாங்கள்(மகான்கள்)கூறும் வாக்குகள் நடைபெற!!!
    எல்லாம் வல்ல!!!எம் மூலகுரு(பழனியாண்டியை) நாதனை!11 வேண்டுகின்றேன், குருவே !!!

    1 . E - mail.No.87 பலன்
    &
    2. நீசபங்க ராஜயோக கிரகங்கள் - தாங்கள் சம்பந்தப் பட்ட வீடுகளை
    வைத்து மிகப் பெரிய - அளவிட முடியாத நன்மைகளைச் செய்துவிடும்
    அது ஒவ்வொரு லக்கினத்துக்காரர்களுக்கும் தனித்தனியாக மாறுபடும்.
    அவரவர் லக்கினத்தை வைத்து - அந்த
    நீசபங்க ராஜயோக கிரகங்கள் சம்பந்தப்
    பட்டுள்ள இடத்தை வைத்து அதற்குண்டானபலன்களை
    அள்ளித்தந்துவிடும்!
    இதுபோன்று வாழ்க்கையின் பல துறைகளிலும்
    பல நிலைப்பாடுகளிலும் இந்த நீசபங்க கிரக சேர்க்கையின் தன்மை, அது அமையப்பெற்ற ஜாதகனுக்கு அற்புதமான நன்மையைச் செய்யும்

    அந்த நன்மை எது சம்பந்தப்பட்டதாய் வேண்டுமானலும் இருக்கலாம். அது அந்த ஜாதகனின் ஜாதகம் சம்பந்தப் பட்டதாகவும், அந்தக் கிரகங்களின்
    தசா புக்திக் காலங்களிலும் நிச்சயாமாக நிறைவேறும்!

    இந்த யோகங்களுக்குரிய பலன்களை
    பின் வரும் அத்தியாயத்தில் பார்ப்போம்.

    posted by SP.VR. SUBBIAH at 12:41 AM on 30 Mar, 2007

    ReplyDelete
  6. Present sir,

    Good questions and answers today tooo........

    Thanks
    Thanuja

    ReplyDelete
  7. அய்யா இனிய காலை வணக்கம்.

    உள்ளேன் ஐயா.

    ReplyDelete
  8. அடித்துத் துவைத்து விட்டீர்கள் அய்யா! திருநெல்வேலி, கேரளா பக்கத்தில் தான் மாந்தி பார்க்கிறார்கள்.எங்கள் ஊர் சோதிடர்கள் "மாந்தி, அஷ்டவர்க்கம்...அப்படீன்னா?" என்பார்கள்.அவர்களுக்கும் பிழைப்பு நடந்துகொண்டுதான் வருகிறது.

    ReplyDelete
  9. வணக்கம் அய்யா.
    அது எப்படி சாமி, உங்களாலே மட்டும்
    இப்படி அடிச்சி துவைச்சி அலச முடியுது!
    நல்ல விளக்கங்கள் அய்யா.

    ReplyDelete
  10. எனக்கு விளங்கிய வரையில் ராசி நாம் விழுவதாக இருந்தால் விழப் போகிறோம் என்று காட்டும். நவாம்சம் நன்றாக இருந்தால் நாம் விழுவதை தடுக்க முடியாது. ஆனால் நாம் மெத்தை போன்ற இடத்தில் விழுவதைப் போன்று பலன்கள் இருக்கும். அதுவும் சரி இல்லை என்றால் cement தரையில் விழுவதைப் போல் விழுந்து மண்டை உடையலாம்.

    ReplyDelete
  11. Dear Sir,

    In Jothida rathnakaram Book, Ramanujar mentioned that If the jupiter in 11th house(Mesha Lagnam) it wont do any good to the native of that horoscope...is it true?

    please let me know.....

    ReplyDelete
  12. குருவே வணக்கம்,
    வயதும், அனுபவமும், சொல்நயம்
    அறிவும், அதனுள் தெளிவும் பொருள் நயம்.
    செஞ்சொல் வேந்தராக, சொல்லிடை வித்தகராக
    வலைப்பதிவில் பெருவலைப் பின்னி
    (எப்படி அதுதான் பின்னி ஆலைகளில் பெற்ற அனுபவமோ?)
    திருக்கையும் சுராவும் மட்டுமல்ல பெரிய பெரிய திமிங்கிலம் எல்லாம்
    வெளியேற மனமில்லாமல் வலையுனுள்ளே (சு) வாசிக்கிறதே
    இந்த சாத்வதம், இது இயற்கை.... இல்லையா என்ன?
    இருப்பும், பொறுப்பும், இருக்கும் இடத்தில் நெருப்பும் இருப்பதால்
    இருபதென்ன எழுபதுக்கும் பதில் கூறப் பஞ்சமேது??
    பாராட்டவேண்டும் என்று அல்ல,
    அப்படிப் பழக வேண்டும்.... இம் ம் ம் .... அல்ல - பிறகு ஏன்?
    இல்லை எப்படி கண்டும் காணாமல்ப் போவது.......நாம் வேண்டாது நம்மைப் படைத்தவர்களுக்கு நன்றி
    பாராட்டுவதுப் போலத்தான் இதுவும்.
    தண்ணீர் குளிர்வதும், தணல் சுடுவதும் இயற்கை என்றாலும்
    இயம்புதல் தானே இயல்பு....
    நன்றிகள் குருவே! ஆலாசியம் கோ.
    Friday, January 29, 2010 6:36:00 AM
    >>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<

    Really Very Nice, Master!!!!!!!!!!

    ReplyDelete
  13. hello sir, hope u are doing great. sir, if natural benefic planets are placed in kendras do they get affected by it ,just like the naturalbenefic kendra lords? what if malefics are placed in kendras belonging to benefic planets?eg; mars placed in virgo for meena lagna ? thanx

    also what are the other important doshas?

    ReplyDelete
  14. ////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,
    சந்தேகங்களும் அதற்க்கான விளக்கமும் அருமை .........////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  15. /////Saravana said...
    Dear sir,
    Thanks for your precious time spending on my questions and all our questions sir.
    உங்களுக்கு நிகர் இல்லை எங்களிடம்!!!
    மிக்க நன்றி
    சரவணா (கோவை)////

    நல்லது. நன்றி முருகா!

    ReplyDelete
  16. /////Alasiam G said...
    குருவே வணக்கம்,
    வயதும், அனுபவமும், சொல்நயம்
    அறிவும், அதனுள் தெளிவும் பொருள் நயம்.
    செஞ்சொல் வேந்தராக, சொல்லிடை வித்தகராக
    வலைப்பதிவில் பெருவலைப் பின்னி
    (எப்படி அதுதான் பின்னி ஆலைகளில் பெற்ற அனுபவமோ?)
    திருக்கையும் சுராவும் மட்டுமல்ல பெரிய பெரிய திமிங்கிலம் எல்லாம்
    வெளியேற மனமில்லாமல் வலையுனுள்ளே (சு) வாசிக்கிறதே
    இந்த சாத்வதம், இது இயற்கை.... இல்லையா என்ன?
    இருப்பும், பொறுப்பும், இருக்கும் இடத்தில்
    நெருப்பும் இருப்பதால்
    இருபதென்ன எழுபதுக்கும் பதில் கூறப் பஞ்சமேது??
    பாராட்டவேண்டும் என்று அல்ல,
    அப்படிப் பழக வேண்டும்.... இம் ம் ம் .... அல்ல - பிறகு ஏன்?
    இல்லை எப்படி கண்டும் காணாமல் போவது.......
    நாம் வேண்டாது நம்மைப் படைத்தவர்களுக்கு நன்றி
    பாராட்டுவதுப் போலத்தான் இதுவும்.
    தண்ணீர் குளிர்வதும், தணல் சுடுவதும் இயற்கை என்றாலும்
    இயம்புதல் தானே இயல்பு....
    நன்றிகள் குருவே!
    ஆலாசியம் கோ.////

    அன்பு மிகுதியால், அதிகமாகப் புகழ்ந்திருக்கிறீர்கள். நான் அதற்கு எல்லாம் தகுதியானவானா என்று தெரியவில்லை. நான் எளியவன். எளிமையை விரும்புகிறவன்! நன்றி~!

    ReplyDelete
  17. ////subbu said...
    வாத்தியார் ஐயா,
    வணக்கம்! எல்லாப் பதிவுகளையும் தவறாமல் படிக்கிறேன். அவ்வப்போது பழைய பாடங்களயும் மீண்டும் படிக்கிறேன். வருகைப் பதிவுக்காக இந்தப் பதிவு!
    நன்றி, வணக்கம்!
    அன்புடன்
    மதுரை சுப்பு//////

    நல்லது.நன்றி முருகா!

    ReplyDelete
  18. ////kannan said...
    ஜோதிட உலகின் சாணக்கியரே!!!
    பல ஜோதிட வித்தைகள் அறிந்த சான்றோரே!!!
    அதிகாலை வணக்கம்!!!
    பொதிகை மலை(அடிவாரம்)சாரலிலே!
    சித்திரை திங்களிலே!
    தாய்! உண்ட விஷம் முறித்து!
    வளர்பிறை திங்களிலே!
    பின் நடுசாம வேளையிலே !
    ஐந்தாவது மழலையாக!
    அத்தி பூ! பூத்தது போல், பூத்து!
    அருகம்புல் போல், வேர் ஊன்றி!
    வாழைக்கன்று போல்!செழித்து வளர்ந்து!
    குட்டி சுக்(கீ)ரன் என்னும் செல்வந்த (திசை தேவ)னால்!
    இருப்பது வருட (ஊழ் வினையால்) வாழ்வை இழந்தது!
    சூரிய தேவனை(திசையை)யே!கதி என்று!
    நித்தம்!கைதொழுது வேண்டி நிற்கும் !
    ஒரு பிரம்மசாரியின் முழுநம்பிக்கை!!
    என் குருதேவே !!!!!
    தாங்கள்(மகான்கள்)கூறும் வாக்குகள் நடைபெற!!! எல்லாம் வல்ல!!!எம் மூலகுரு(பழனியாண்டியை) நாதனை!11 வேண்டுகின்றேன், குருவே !!!
    1 . E - mail.No.87 பலன் & 2. நீசபங்க ராஜயோக கிரகங்கள் - தாங்கள் சம்பந்தப் பட்ட வீடுகளை
    வைத்து மிகப் பெரிய - அளவிட முடியாத நன்மைகளைச் செய்துவிடும்
    அது ஒவ்வொரு லக்கினத்துக்காரர்களுக்கும் தனித்தனியாக மாறுபடும்.
    அவரவர் லக்கினத்தை வைத்து - அந்த
    நீசபங்க ராஜயோக கிரகங்கள் சம்பந்தப்
    பட்டுள்ள இடத்தை வைத்து அதற்குண்டானபலன்களை
    அள்ளித்தந்துவிடும்!
    இதுபோன்று வாழ்க்கையின் பல துறைகளிலும்
    பல நிலைப்பாடுகளிலும் இந்த நீசபங்க கிரக சேர்க்கையின் தன்மை, அது அமையப்பெற்ற ஜாதகனுக்கு

    அற்புதமான நன்மையைச் செய்யும் அந்த நன்மை எது சம்பந்தப்பட்டதாய் வேண்டுமானலும் இருக்கலாம். அது அந்த ஜாதகனின் ஜாதகம் சம்பந்தப் பட்டதாகவும், அந்தக் கிரகங்களின்
    தசா புக்திக் காலங்களிலும் நிச்சயாமாக நிறைவேறும்!
    இந்த யோகங்களுக்குரிய பலன்களை பின் வரும் அத்தியாயத்தில் பார்ப்போம்.///////

    என்ன ராசா சொல்கிறீர்கள்? ஒன்றும் பிடிபடவில்லை!

    ReplyDelete
  19. ////Thanuja said...
    Present sir,
    Good questions and answers today tooo........
    Thanks
    Thanuja/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. /////Success said...
    அய்யா இனிய காலை வணக்கம்.
    உள்ளேன் ஐயா.////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  21. ////kmr.krishnan said...
    அடித்துத் துவைத்து விட்டீர்கள் அய்யா! திருநெல்வேலி, கேரளா பக்கத்தில் தான் மாந்தி
    பார்க்கிறார்கள்.எங்கள் ஊர் சோதிடர்கள் "மாந்தி, அஷ்டவர்க்கம்...அப்படீன்னா?" என்பார்கள்.அவர்களுக்கும்
    பிழைப்பு நடந்துகொண்டுதான் வருகிறது.//////

    உண்மைதான் சார், தமிழ் நாட்டில் பல ஜோதிடர்களுக்கு, அவைகள் இரண்டையும் பற்றித் தெரியாது!

    ஜாதகனுக்கு ஏற்படவுள்ள சோதனைகளைப் பார்ப்பதற்கு அவைகள் உதவும். கற்பதற்கும், பயன்படுத்துவதற்கும்
    அஷ்டகவர்கம் எளிமையானது!

    ReplyDelete
  22. ////dhana said...
    Thank you sir/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  23. /////thirunarayanan said...
    வணக்கம் அய்யா. அது எப்படி சாமி, உங்களாலே மட்டும் இப்படி அடிச்சி துவைச்சி அலச முடியுது!
    நல்ல விளக்கங்கள் அய்யா.////

    எல்லாம் துவைத்த அனுபவம்தான்!

    ReplyDelete
  24. ///ananth said...
    எனக்கு விளங்கிய வரையில் ராசி நாம் விழுவதாக இருந்தால் விழப் போகிறோம் என்று காட்டும். நவாம்சம் நன்றாக இருந்தால் நாம் விழுவதை தடுக்க முடியாது. ஆனால் நாம் மெத்தை போன்ற இடத்தில் விழுவதைப்
    போன்று பலன்கள் இருக்கும். அதுவும் சரி இல்லை என்றால் cement தரையில் விழுவதைப் போல் விழுந்து மண்டை உடையலாம்.////

    நல்லது. உங்கள் கருத்திற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  25. ////Vinodh said...
    Dear Sir,
    In Jothida rathnakaram Book, Ramanujar mentioned that If the jupiter in 11th house(Mesha Lagnam) it wont do any good to the native of that horoscope...is it true?
    please let me know.....////

    குருவைப்பற்றித் தனித்தனியாக அளாளுக்கு ஒன்று கேட்கிறீர்கள். குருவைப் பற்றி பழைய பாடங்களில், 3 அத்தியாயங்கள் எழுதியுள்ளேன். சந்தேகம் வரும் அனைவரும் அதைத் தேடிப்பிடித்துப் படியுங்கள்!

    ReplyDelete
  26. /////Anbu said...
    present for today class sir////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  27. /////kannan said...
    குருவே வணக்கம்,
    வயதும், அனுபவமும், சொல்நயம்
    அறிவும், அதனுள் தெளிவும் பொருள் நயம்.
    செஞ்சொல் வேந்தராக, சொல்லிடை வித்தகராக
    வலைப்பதிவில் பெருவலைப் பின்னி
    (எப்படி அதுதான் பின்னி ஆலைகளில் பெற்ற அனுபவமோ?)
    திருக்கையும் சுராவும் மட்டுமல்ல பெரிய பெரிய திமிங்கிலம் எல்லாம்
    வெளியேற மனமில்லாமல் வலையுனுள்ளே (சு) வாசிக்கிறதே
    இந்த சாத்வதம், இது இயற்கை.... இல்லையா என்ன?
    இருப்பும், பொறுப்பும், இருக்கும் இடத்தில் நெருப்பும் இருப்பதால்
    இருபதென்ன எழுபதுக்கும் பதில் கூறப் பஞ்சமேது??
    பாராட்டவேண்டும் என்று அல்ல,
    அப்படிப் பழக வேண்டும்.... இம் ம் ம் .... அல்ல - பிறகு ஏன்?
    இல்லை எப்படி கண்டும் காணாமல்ப் போவது.......நாம் வேண்டாது நம்மைப் படைத்தவர்களுக்கு நன்றி
    பாராட்டுவதுப் போலத்தான் இதுவும்.
    தண்ணீர் குளிர்வதும், தணல் சுடுவதும் இயற்கை என்றாலும்
    இயம்புதல் தானே இயல்பு....
    நன்றிகள் குருவே! ஆலாசியம் கோ.
    Friday, January 29, 2010 6:36:00 AM
    >>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<
    Really Very Nice, Master!!!!!!!!!!///////

    நைஸ் ஆலாசியம் என்று சொல்லுங்கள்!

    ReplyDelete
  28. /////mike said...
    hello sir, hope u are doing great. sir, if natural benefic planets are placed in kendras do they get affected by it ,just like the naturalbenefic kendra lords? what if malefics are placed in kendras belonging to benefic planets?eg; mars placed in virgo for meena lagna ? thanx
    also what are the other important doshas?/////

    இதைக் கேள்வி, பதில் பகுதிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள். விவரமாகப் பதில் சொல்கிறேன். அனைவருக்கும் பயன்படும்!

    ReplyDelete
  29. /////NARESH said...
    Nice session once again sir!////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  30. அன்புள்ள ஆசிரியருக்கு,

    முதலில் புதிய மாணவனின் வணக்கம்
    310 பாடங்கள் மற்றும் வினாக்களும் பதில்களும் ஆக (உஸ்,,,,அப்பா இப்பவே கண்ணக் கட்டுதே....!!!) படிக்க சில நாட்கள் ஆகும்.
    அதுவரையில் உங்கள் ஆசியை நாடும்
    மாணவன்
    கணேஷ்

    ReplyDelete
  31. ஜாதகத்தை எப்படி அலசுவது என்ற பாடத்திற்கு காத்துக்கொண்டிருக்கிறேன் ஐயா!

    ReplyDelete
  32. ////sriganeshh said...
    அன்புள்ள ஆசிரியருக்கு,
    முதலில் புதிய மாணவனின் வணக்கம்
    310 பாடங்கள் மற்றும் வினாக்களும் பதில்களும் ஆக (உஸ்,,,,அப்பா இப்பவே கண்ணக் கட்டுதே....!!!) படிக்க சில நாட்கள் ஆகும்.
    அதுவரையில் உங்கள் ஆசியை நாடும்
    மாணவன்
    கணேஷ்///

    சக மனிதனின் ஆசி எதற்கு? இறைவனின் ஆசி அனைவருக்கும் உண்டு!

    ReplyDelete
  33. /////karmegaraja said...
    ஜாதகத்தை எப்படி அலசுவது என்ற பாடத்திற்கு காத்துக்கொண்டிருக்கிறேன் ஐயா!/////

    இதுவரை எழுதிய 310 பாடங்களையும் படீத்தீர்களா - இல்லையா? அவற்றை வைத்தும் நீங்கள் அலசலாமே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com