மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

28.8.13

Astrology: ஓஹோ அவரின் ஜாதகமா இது?

 

 Astrology: ஓஹோ அவரின் ஜாதகமா இது?

நேற்று வெளியிட்ட புதிர் போட்டியில் நிறையப் பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். பலர் பின்னூட்டங்கள் மூலமும், மேலும் பலர்
மின்னஞ்சல் மூலமும் தங்கள் பதிலை அனுப்பியுள்ளார்கள். அனைவருக்கும் வாத்தியாரின் பாராட்டுக்கள் மற்றும் நன்றி உரித்தாகுக!

சிலர் நான்கு கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்லி அசத்தியிருக் கிறார்கள். அத்துடன் அதிலும் சிலர் விக்கி மஹராஜா துணையுடன், ஜாதகரின் பெயரையும் எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து! அவர்கள் அனைவருக்கும் 100/100 மதிப்பெண்கள்.

சிலர் முதல் கேள்விக்கு மட்டும் சரியான பதிலை எழுதவில்லை. ஆனால் மற்ற மூன்று கேள்விகளுக்கும் சரியான பதிலை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் 75 மதிப்பெண்கள்.

பங்கு கொண்டவர்கள் அனைவருக்குமே 35 மதிப்பெண்கள்:-)))))
------------------------------------------------------------------

அது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸின் ஜாதகம்

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் 10 பேர்களில் அவரும் ஒருவர்அவரைத் தெரியாதவர்கள் கணினி உலகில் எவரும் இருக்க முடியாது. மேலதிகத் தகவல்களுக்கு இந்தச் சுட்டிக்குச் சென்று பாருங்கள்.

http://en.wikipedia.org/wiki/Bill_Gates

பிராட்பாண்ட் கனெக்சன் படுத்தி எடுக்கிறது. இருந்தாலும் சமாளித்து இந்தப் பதிவை வலை ஏற்றுகிறேன்

அவருடையா ஜாதகத்தில் பல சிறப்புக்கள் உள்ளன. அதை விவரமாக அலசி இன்னொரு நாள் முழுப் பதிவாக வெளியிடுகிறேன். பொறுத்துக்கொள்ளுங்கள்

அவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டு விட்டு வெளியே வந்து தொழிலைத் துவங்கியவர். 4ஆம் வீட்டில் இருக்கும் செவ்வாய் அதைச் செய்தது. அதாவது முழுமையாகப் படித்து முடிக்கவிடாமல் செய்தது. இந்த ஜாதகத்திற்கு செவ்வாய் லாபாதிபதி  மட்டும் அல்ல. ஆறாம் வீட்டுக்காரனும் அவன்தான் (வில்லன்) அதை மனதில் கொள்க.

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

19 comments:

kmr.krishnan said...

இந்திர நூயி என்று ஒரு நண்பர் எழுதியிருந்தார்.பில் கேடெஸ் என்று நான் எழுதியிருந்தேன். இருவருக்கும் ஒரே பிறந்த நாள்தான்.28 அக்டோபெர் 1955.
ஆனால் நட்சத்திரம், தசாஇருப்பு பில்கேட்ஸ்தான் என்று சொல்கிறது.

வேப்பிலை said...

ஒரு புதிர் பாடத்திற்கு
இரண்டு வகுப்பறைகள் போகிறது

அதனால்

வாரத்திற்கு ஒரு புதிர்பாடமாகவும்
அதன் விடைகள் அடுத்து வரும் விடுமுறை நாட்களிலும் அமைத்தால்
நன்றாக இருக்கும் (சனி ஞாயிறு போல)

மற்ற மாணவர்களும்
ஆமோதிப்பார்க்ள் என்ற நம்பிக்கையில்

செப்டம்பரில் நிறைய பேருக்கு பிறந்த நாள் வருகிறது. அவர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்களை அட்வான்ஸாக சொல்லி மகிழ்கிறோம்

வேப்பிலை said...

இருக்கு மொபைலில்
இன்னமும் நிறைய பயன்கள் இருக்கு

இது பழைய "டிரிங்" "டிரிங்"ன்னு
இதெ பார்த்ததுமே தெரியுது

இது கூட வாங்க முடியாதவர்கள் என
இங்கு குடிமகன்கள் வாதிட வராலாம்

குறுகிய மணப்பான்மை கொண்ட
குறுக்கு தனமாக வாதத்திற்கு பதில்

மௌனமே... அது கைவசமிருப்பதால்
மௌனம்..

thozhar pandian said...

நண்பர் கே.எம்.ஆர்.கே. நீங்கள் கூறியதுதான் சரி. ஆனால் இருவருக்கும் ஒரே பிறந்த நாள்தான். பெப்சி தலைவியின் பிறந்த நேரம் எனக்கும் தெரியாது. அதனால் இலக்னம் மாறுபடலாம். அதனால்தானோ என்னவோ, இந்திரா பிரமாதமாக ப்டித்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தை நிர்வகிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். பில்லோ படிப்பை பாதியில் நிறுத்தினாலும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தையே நிறுவி உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார். இந்திராவின் இன்றைய வாழ்க்கை வரைக்கும் கருத்தில் கொண்டு அவர் எந்த இலக்னத்தில் பிறந்திருப்பார் என்று யூகிக்கும் அளவுக்கு எனக்கு அறிவு இல்லை. ஆனால் வாத்தியாரால், நேரம் இருப்பின், முடியும் என்று நினைக்கிறேன். சிம்ம இலக்னமாக இருக்குமோ?

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா,புதிர் பகுதி, நாங்கள் ஜாதகம் பார்க்கும் போது எதையெல்லாம் பார்க்க தவரிவிடுகிறோம் என்பதை தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக உள்ளது இந்த வகுப்பை தொடர்ந்து வாரம் ஒரு நாள் நடத்த வேண்டுகிறேன் ஐயா. நன்றி ஐயா.

Ak Ananth said...

//செப்டம்பரில் நிறைய பேருக்கு பிறந்த நாள் வருகிறது. அவர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்களை அட்வான்ஸாக சொல்லி மகிழ்கிறோம்//

சொல்வதைப் பார்த்தால் உங்களுக்கும் வருகிறது போலும். உங்களுக்கு அட்வான்ஸாக வாழ்த்துகள்.

இந்திரா நூயி அவர்களின் பிறந்த நேரம் அவருக்கே தெரியுமா? However this is worth reading http://www.barbarapijan.com/bpa/Commerce/commerce20_Indra_Nooyi.htm

KJ said...

Thanks sir. In this horo, except chandran, other planets locked in between ragu kethu including lagnam, if chandran sits alone its daridhara yogam.

வேப்பிலை said...

இன்றைய நாளில் செல்போன் வைத்திருப்பவரின் இப்படி ஒரு புலம்பல்...
.....


20 தேதிக்கு மேல் வரும் அழைப்புகளில் பாதி கடன் வேண்டுமா என கேட்டு வருகிறது.

மீதி கொடுத்த கடனை திருப்பிக் கேட்கிறது. என்னா வாழ்க்கை-டா........

வேப்பிலை said...

Ak Ananth said...
//சொல்வதைப் பார்த்தால் உங்களுக்கும் வருகிறது போலும். உங்களுக்கு அட்வான்ஸாக வாழ்த்துகள்.///

இன்று புதிதாய் பிறந்தோம் என்பது
இதயம் சொல்லும் வாக்கியம்

உயிர் பிறப்பதில்லை என்ற கொள்கை
உடையவர்கள் நாங்கள்

உடல் பிறந்த நாட்களை நாங்கள்
உண்மையில் கொண்டாடி மகிழ்வதில்லை

மாணவர் தலைவர் அய்யா; நம்
மனதில் நிறைந்த "லால்குடியார்" தொடங்கி

வகுப்பறையில் உள்ள மற்றும்
வந்து செல்லும் பலர் செப்படம்பரில்

பிறந்தவர்கள் அதனால் தான்
பிறகு சொல்வதற்கு பதில்

அப்போதைக்கு
இப்போதே சொல்லி வைத்தேன்

kmr.krishnan said...

//மனதில் நிறைந்த "லால்குடியார்" தொடங்கி//

நான் ஆவணிப்பூசம். பிறந்த ஆங்கிலத்தேதி 22 ஆகஸ்ட் 1949.விடியற் காலை 5.05. சீலம் நிறைந்த சேலம் மாநகரத்தில். ஜாதகத்தை அலசி தெரிந்ததைச் சொல்லலாம்.

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
இந்திர நூயி என்று ஒரு நண்பர் எழுதியிருந்தார்.பில் கேடெஸ் என்று நான் எழுதியிருந்தேன். இருவருக்கும் ஒரே பிறந்த நாள்தான்.28 அக்டோபெர் 1955.
ஆனால் நட்சத்திரம், தசாஇருப்பு பில்கேட்ஸ்தான் என்று சொல்கிறது.////

உண்மைதான். தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
ஒரு புதிர் பாடத்திற்கு
இரண்டு வகுப்பறைகள் போகிறது
அதனால்
வாரத்திற்கு ஒரு புதிர்பாடமாகவும்
அதன் விடைகள் அடுத்து வரும் விடுமுறை நாட்களிலும் அமைத்தால்
நன்றாக இருக்கும் (சனி ஞாயிறு போல)
மற்ற மாணவர்களும்
ஆமோதிப்பார்கள் என்ற நம்பிக்கையில்////

வகுப்பறைக் கண்மணிகளில் பலர் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறையளிக்கும் நிறுவனங்களில் பணி செய்பவர்கள். அதை மனதில் வையுங்கள்

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
இருக்கு மொபைலில்
இன்னமும் நிறைய பயன்கள் இருக்கு
இது பழைய "டிரிங்" "டிரிங்"ன்னு
இதெ பார்த்ததுமே தெரியுது
இது கூட வாங்க முடியாதவர்கள் என
இங்கு குடிமகன்கள் வாதிட வராலாம்
குறுகிய மணப்பான்மை கொண்ட
குறுக்கு தனமாக வாதத்திற்கு பதில்
மௌனமே... அது கைவசமிருப்பதால்
மௌனம்..////

Correct! There is a proverb: "In a war of words silence is the best weapon"

Subbiah Veerappan said...

////Blogger thozhar pandian said...
நண்பர் கே.எம்.ஆர்.கே. நீங்கள் கூறியதுதான் சரி. ஆனால் இருவருக்கும் ஒரே பிறந்த நாள்தான். பெப்சி தலைவியின் பிறந்த நேரம் எனக்கும் தெரியாது. அதனால் இலக்னம் மாறுபடலாம். அதனால்தானோ என்னவோ, இந்திரா பிரமாதமாக ப்டித்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தை நிர்வகிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். பில்லோ படிப்பை பாதியில் நிறுத்தினாலும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தையே நிறுவி உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார். இந்திராவின் இன்றைய வாழ்க்கை வரைக்கும் கருத்தில் கொண்டு அவர் எந்த இலக்னத்தில் பிறந்திருப்பார் என்று யூகிக்கும் அளவுக்கு எனக்கு அறிவு இல்லை. ஆனால் வாத்தியாரால், நேரம் இருப்பின், முடியும் என்று நினைக்கிறேன். சிம்ம இலக்னமாக இருக்குமோ?////

பொறுத்திருங்கள். தற்சமயம் நேரமில்லை. பின்னொரு நாளில் தலைவியின் ஜாதகத்தையும் அலசி விடுவோம் தோழரே!

Subbiah Veerappan said...

/////Blogger Geetha Lakshmi A said...
வணக்கம் ஐயா,புதிர் பகுதி, நாங்கள் ஜாதகம் பார்க்கும் போது எதையெல்லாம் பார்க்க தவறிவிடுகிறோம் என்பதை தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக உள்ளது இந்த வகுப்பை தொடர்ந்து வாரம் ஒரு நாள் நடத்த வேண்டுகிறேன் ஐயா. நன்றி ஐயா.////

அப்படித்தான் செய்வதாக உள்ளேன். உங்களின் ஆர்வத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger KJ said...
Thanks sir. In this horo, except chandran, other planets locked in between ragu kethu including lagnam, if chandran sits alone its daridhara yogam./////

லக்கினாதிபதியின் வலிமையான பார்வை சந்திரன் மேல் விழுவதால் அக்குறை நீங்கிவிடும்!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
இன்றைய நாளில் செல்போன் வைத்திருப்பவரின் இப்படி ஒரு புலம்பல்... .....
20 தேதிக்கு மேல் வரும் அழைப்புகளில் பாதி கடன் வேண்டுமா என கேட்டு வருகிறது.
மீதி கொடுத்த கடனை திருப்பிக் கேட்கிறது. என்னா வாழ்க்கை-டா........////

பகலும் இரவும் கலந்ததுதான் உலகம். நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. செல்போனும் அப்படித்தான்!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
//மனதில் நிறைந்த "லால்குடியார்" தொடங்கி//
நான் ஆவணிப்பூசம். பிறந்த ஆங்கிலத்தேதி 22 ஆகஸ்ட் 1949.விடியற் காலை 5.05. சீலம் நிறைந்த சேலம் மாநகரத்தில். ஜாதகத்தை அலசி தெரிந்ததைச் சொல்லலாம்./////

தெரிந்ததில் மிகவும் நல்லது இதுதான்:அதாவது வாழ்த்துவது: “வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்”

manimuthumalai said...

கன்னிச் செவ்வாய் கடலை(கடல் போன்ற செல்வத்தை)யும் வற்றச் செய்யும் என்பார்கள். அந்த விதி இவர் ஜாதகத்தில் பலிக்கவில்லை போலிருக்கிறது.

சந்திரனின் இரண்டு பக்கமும் கிரகங்கள் இல்லாமல் இருந்தால் அது கேமத் துரும யோகம் என்னும் அவயோகம்.

அதே சமயம் சந்திரன் பத்தாமிடத்தில் இருந்தால், அவயோகம் என்பது அதியோகமாக - அதாவது கல்பத்துரும யோகமாக மாறி விடும்.

அவயோகம் அதியோகமாக மாறும்போது, மிக அற்புதமான பலன்களைக் கொடுக்கும்.

காந்திஜியின் ஜாதகத்திலும் இதே போல சந்திரன் பத்தாமிடத்தில்(இரண்டு பக்கங்களிலும் கிரகங்கள் இல்லாமல்) இருப்பதைப் பார்க்க முடியும்.