மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

8.8.13

கவிதைச்சோலை: Balance Sheet: ஐந்தொகை

 

கவிதைச்சோலை: Balance Sheet: ஐந்தொகை

கவிநயம்

வியாபாரத்திற்கு மட்டும் ஐந்தொகை என்பது கிடையாது. வருமான வரி செலுத்துவதற்கு மட்டும் ஐந்தொகை என்பது கிடையாது.வாழ்க்கைக்கு,
அதாவது வாழ்ந்த வாழ்க்கைக்கும் ஐந்தொகை உண்டு.

ஒருவர் தான் பிறந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் சென்று 30 ஆண்டுகள் பாடுபட்டு உழைத்துப் பணத்தைச் சேர்த்தார். தன்னுடைய 65ஆவது
வயதில் கணக்கைக் கூட்டிக் கழித்துப் பார்த்தார். என்ன மிஞ்சியது? அதாவது ஐந்தொகை என்ன?

அமெரிக்காவில் ஒரு பெரிய வீடு மிஞ்சியது. அதாவது தனது மனைவி மக்களுக்கு நன்றாகச் செலவழித்து, அவர்கள் விரும்பியபடி செலவழித்தது
போக மிஞ்சியது ஒரு வீடு மட்டும்தான். இந்திய மண்ணில் சேமிப்பாக போட்டு வைத்த பணத்தில் அடையாறில் 4 வீட்டு மனையில் வாங்கிய வீடு
ஒன்றும் மிஞ்சியது. மொத்தம் இரண்டு வீடுகள் மட்டுமே!

ஆனால் அதற்காக இந்திய மண்ணை விட்டுச் சென்றதால் இழந்த சின்னச் சின்ன சந்தோஷங்கள், உறவுகள் என்று பல விஷயங்களை அவர்
இழந்துள்ளார். அந்த இழப்புக்களுக்கு மிஞ்சிய இரண்டு வீடுகளும் ஈடாகாது. அதுதான் அவருடைய அவலமான ஐந்தொகை.

இப்படி ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு கால கட்டத்தில் ஐந்தொகை ஒன்றைப் போட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான்
தான் கற்றதும், பெற்றதும், அடைந்ததும், இழந்ததும் தெரியவரும்.

கவியரசர் கண்ணதாசன் இந்த ஐந்தொகையைப் பற்றித் தன்னுடைய கவிதை ஒன்றில் அழுத்தமாகச் சொல்லியுள்ளார். அதைக் கீழே கொடுத்துள்ளேன்

வாசித்துப் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------------------------
கவிதைச் சோலை: காலவிளையாட்டில் களித்தவர் கொடுக்கும் கணக்கு!
ஐந்தொகை

நீலமணி விழியிலே நீந்தினேன் அப்போதென்
    நிழலையான் காண வில்லை;
    நிகரில்லாச் செல்வத்தில் ஆடினேன் அப்போதென்
    நெஞ்சைநான் காண வில்லை;
காலவிளை யாட்டிலே களித்தநான் முடிவினைக்
    கருத்திலே கண்ட தில்லை;
    கைகால் விழுந்துபோய்க் கண்பஞ் சடைந்ததும்
    கணக்கினைப் புரட்டு கின்றேன்;
சால்வோர் சக்திஇச் சகத்திலே உண்டென்று
    சத்தியம் செய்கின் றேனே;
    தமிழிலொரு கவிமகனைச் சிறுகூடற் பட்டியில்
    தந்தமலை யரசி தாயே!

         -கவியரர் கண்ணதாசன்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++

10 comments:

இராஜராஜேஸ்வரி said...

கைகால் விழுந்துபோய்க் கண் பஞ்சடைந்ததும்
கணக்கினைப் புரட்டு கின்றேன்;
சால்வோர் சக்திஇச் சகத்திலே உண்டென்று
சத்தியம் செய்கின் றேனே;

சக்தி மிக்க வரிகள்.....!

வேப்பிலை said...

மும்பை ஸ்ரீ கனேஷ் அவர்களை
முதலில் நினைவூட்டியது ஐந்தொகை

நீண்ட நாட்களாக வகுப்பில் இல்லை எனினும்
நினைவில் இருக்கும் ஆடிட்டர் அவர்

கணக்கு பார்க்கும் உத்தியை
கச்சிதமாய் சொன்னது சரி...

தெரிந்து என்ன செய்ய என
புரிந்தவர்கள் யோசிக்கின்றனர்

சாப்பிட்ட 2 தோசைக்கு சந்தோஷபடனும்
சாப்பிடாத பல அயிட்டத்தை எண்ணி வருந்தலாமா


Ashok said...

Simply Superb!

thozhar pandian said...

உண்மைதான் வாத்தியார் ஐயா. நகர வாழ்க்கை போலத்தான் அமெரிக்க வாழ்க்கையும். உள்ளே சென்றால் சென்றதுதான். வெளியே வருவது மிகவும் சிரமம். இந்திய நகர வாழ்க்கையை விட அமெரிக்க வாழ்க்கை பல வசதிகளை கொண்டது என்றாலும் நமது சொந்தங்களை விட்டு விலகி வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்று அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். ஒரு காலத்தில் சொந்தங்களிலிருந்து விலகி இருப்பதே சிறந்தது என்று கருதிய காலம் உண்டு. ஆனால் சொந்தங்களின் அருமை இப்போதுதான் தெரிகிறது. ஒரு சமயத்தில் நாம் திரும்பி இந்தியா வர விரும்பினாலும் குழந்தைகள் வர விரும்புவதில்லை. எனக்கு தெரிந்து இந்தியா திரும்பியவர்கள் எல்லாம் தத்தம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் காலத்திற்கு முன் சென்றவர்களே. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து ஓரளவு விவரம் தெரிந்து விட்டால் நம்மை அவர்கள் திரும்பி இந்தியா வர அனுமதிப்பதில்லை. அவர்கள் பார்வையில் அதுவும் சரிதான். காத்து கொண்டிருக்கிறேன், என் பிள்ளைக்கு 25 வயது ஆகும் வரை. அதன் பின்னர் தமிழ் நாட்டில் அதுவும் தென் பகுதியில் ஒரு சிறிய நகரம் அல்லது கிராமத்தில் தான் எனது வாழ்க்கையின் எஞ்சிய பகுதி:-) எல்லாம் இறைவன் செயல்.

Dallas Kannan said...

Respected Sir
Itis totaly correct that nothing compensates the happiness to be with your family atleast when there is a funtion... I missed my own brother's wedding and so many cusin's weddings and other fuctions... but some time we can not come home even if we want... My astrologer told that I have a matru Shapam and cannot live in my own country even if I want to...hope there is a parikaram at least in my old age....

SP.VR. SUBBAIYA said...

////Blogger இராஜராஜேஸ்வரி said...
கைகால் விழுந்துபோய்க் கண் பஞ்சடைந்ததும்
கணக்கினைப் புரட்டு கின்றேன்;
சால்வோர் சக்திஇச் சகத்திலே உண்டென்று
சத்தியம் செய்கின் றேனே;
சக்தி மிக்க வரிகள்.....!////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger வேப்பிலை said...
மும்பை ஸ்ரீ கனேஷ் அவர்களை
முதலில் நினைவூட்டியது ஐந்தொகை
நீண்ட நாட்களாக வகுப்பில் இல்லை எனினும்
நினைவில் இருக்கும் ஆடிட்டர் அவர்
கணக்கு பார்க்கும் உத்தியை
கச்சிதமாய் சொன்னது சரி...
தெரிந்து என்ன செய்ய என
புரிந்தவர்கள் யோசிக்கின்றனர்
சாப்பிட்ட 2 தோசைக்கு சந்தோஷப்படனும்
சாப்பிடாத பல அயிட்டத்தை எண்ணி வருந்தலாமா////

ஆனால் பாழாய்ப்போன மனம் கேட்க மறுக்கிறதே! மனதைக் கட்டிப்போட ஏதாவது வேப்பிலை மந்திரம் உள்ளதா?

SP.VR. SUBBAIYA said...

////Blogger Ashok said...
Simply Superb!////

நல்லது. நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger thozhar pandian said...
உண்மைதான் வாத்தியார் ஐயா. நகர வாழ்க்கை போலத்தான் அமெரிக்க வாழ்க்கையும். உள்ளே சென்றால் சென்றதுதான். வெளியே வருவது மிகவும் சிரமம். இந்திய நகர வாழ்க்கையை விட அமெரிக்க வாழ்க்கை பல வசதிகளை கொண்டது என்றாலும் நமது சொந்தங்களை விட்டு விலகி வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்று அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். ஒரு காலத்தில் சொந்தங்களிலிருந்து விலகி இருப்பதே சிறந்தது என்று கருதிய காலம் உண்டு. ஆனால் சொந்தங்களின் அருமை இப்போதுதான் தெரிகிறது. ஒரு சமயத்தில் நாம் திரும்பி இந்தியா வர விரும்பினாலும் குழந்தைகள் வர விரும்புவதில்லை. எனக்கு தெரிந்து இந்தியா திரும்பியவர்கள் எல்லாம் தத்தம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் காலத்திற்கு முன் சென்றவர்களே. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து ஓரளவு விவரம் தெரிந்து விட்டால் நம்மை அவர்கள் திரும்பி இந்தியா வர அனுமதிப்பதில்லை. அவர்கள் பார்வையில் அதுவும் சரிதான். காத்து கொண்டிருக்கிறேன், என் பிள்ளைக்கு 25 வயது ஆகும் வரை. அதன் பின்னர் தமிழ் நாட்டில் அதுவும் தென் பகுதியில் ஒரு சிறிய நகரம் அல்லது கிராமத்தில் தான் எனது வாழ்க்கையின் எஞ்சிய பகுதி:-) எல்லாம் இறைவன் செயல்.////

தினமும் ஒரு பத்து நிமிடம் எல்லாம் வல்லவரைப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் வழி காட்டுவார்!
உங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி பாண்டியரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Dallas Kannan said...
Respected Sir
Itis totaly correct that nothing compensates the happiness to be with your family atleast when there is a funtion... I missed my own brother's wedding and so many cusin's weddings and other fuctions... but some time we can not come home even if we want... My astrologer told that I have a matru Shapam and cannot live in my own country even if I want to...hope there is a parikaram at least in my old age..../////

நிச்சயம் அது நிறைவேறும். நம்பிக்கையோடு இருங்கள் கண்ணன்!
உங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி கண்ணன்!