மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

12.8.13

Astrology.Popcorn Post: வர்கோத்தமம் என்றால் என்ன சாமி அர்த்தம்?

 
Astrology.Popcorn Post: வர்கோத்தமம் என்றால் என்ன சாமி அர்த்தம்?

Popcorn Post No.46


பாப்கர்ன் சாப்பிட்டு ரெம்ப நாள் அகிவிட்டது. அதனால் இன்று பாப்கர்ன்  பதிவு.
-----------------------------------------------------------------------------------
வர்கோத்தமம் என்பதும் ஒரு யோகம்தான் ராசா!

வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்!

ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்!

ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்!

சிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார்.

இதுபோன்று ஒவ்வொரு கிரகத்திற்கும், ஒவ்வொரு லக்கினத்தின் யோககாரனுக்கும் ஸ்பெஷல் வர்கோத்தமப் பலன்கள் உண்டு. கேட்டால், ஒரு வேளை உங்கள் ஜாதகத்தில் அப்படி யிருந்தால் அசந்துபோய் விடுவீர்கள். காற்றில் மிதப்பீர்கள். அப்படி ஒரு சந்தோஷமான மனநிலை ஏற்படும்!

உங்கள் மொழியில் சொன்னால், சாதாரணக் காருக்குப் பதிலாக உங்களுக்கு குளிரூட்டப்பெற்ற சொகுசுக்கார் கிடைக்கும். உங்களுக்குக் கிடைக்கும் பெண் (மனைவி) அனுஷ்கா சர்மாவைப் போன்ற அழகி என்பதோடு, நன்கு படித்தவளாக, நல்ல வேலையில் (மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் சாமி) இருப்பவளாகவும் அமைந்துவிடுவாள். சந்தோஷப் படுவீர்களா - இல்லையா?

அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும்.

உதாரணத்திற்கு லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்!

அதுபோல ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனியான விசேட பலன் உண்டு

என்னென்ன கிரகத்தால் என்னென்ன நன்மைகள் என்பதை இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

பாப்கர்ன் பொட்டலத்தில் இவ்வளவுதான் தரமுடியும் சாமிகளா?

அன்புடன்
வாத்தியார்

 
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

33 comments:

paulsam said...

அய்யா,பாப்கார்ன் பொட்டலம் அருமை,எனக்கு கடக லக்கினம்,செவ்வாய் விருச்சகத்தில் ராசியிலும் மற்றும் நவாம்சத்திலும் லக்கினம் மற்றும் விருச்சிக செவ்வாய் இரண்டும் அப்படியே உள்ளது ஆனால் அஷ்டக வர்க்கத்தில் விருச்சக செவ்வாய்க்கு சுயவர்க்கத்தில் 1 பரல்களே உள்ளது இந்த அமைப்பு வர்கோத்தம பலன்கள் கொடுக்குமா?.தாங்கள் விளக்கவும் அய்யா.

கலையரசி said...

ஆஹா எனக்கு இரண்டு கிரகங்கள் வர்கோத்தமம் அடைந்து உள்ளது. ஒன்பதாம் இடத்து புதன்(துலாமில்( அம்சத்தில் பத்தாம் இடமாக சுக்ரன் வீட்டில் (துலாமில்) வர்கோத்தமம் . செவ்வாய் லக்னத்தில் 10மிடத்தில் (விருசிகத்தில்), அதே செவ்வாய் அம்சத்தில் 11ம் இடமாக விருசிகத்தில் வர்கோத்மம் . இப்போ புதன் திசை, ஆரம்பித்து 2 வருடங்கள் ஆக போகிறது. கொஞ்சம் நல்ல பாதை தெரிய ஆரம்பித்து உள்ளது .போக போக தெரியும். 337 டானிக் குடித்து குடித்து பிரயாணி சுவை பிடிக்காமல் இருக்கிறது.

k.umapathy said...

Good morning sir.
Good lesson. Even malefic planet gives some good results in varkothamam is additional point to keep it in mind while analysing horoscope. What will be the result of neesa planet varkothamam sir?
Thanks with regards.
k.umapathy

வேப்பிலை said...

சூப்பர்..
சூப்பரோ சூப்பர்.,..

Sattur Karthi said...

Good Morning sir!

KJ said...

Magara lagnam (vargothamam), yogakaragan (sukran) vargothamam (12th position with sani aspect), Lagnathypathy Saniswaran at thulam. Neengal sonnathai pol ondrum nadaka villaye.

arul said...

informative post

raja said...

எனக்கு 5 கிரகம் வர்கோத்தமம் அடைந்து உள்ளது.

துலா லக்னம் --> 11ம் அதிபதி சூரியன், 10ம் அதிபதி சந்திரன் , (4,5)ம் அதிபதி சனி , 3ல் இருக்கும் கேது மற்றும் 9ல் இருக்கும் ராகுவும்.

11ம் அதிபதி சூரியன்(மகரம்) 4ல் ---> 23 பரல் மற்றும் சூரியனின் சுய பரல் 2 தான்.

10ம் அதிபதி சந்திரன்(துலாம்) 1ல் ---> 29 பரல் மற்றும் சந்திரனின் சுய பரல் 6.

(4,5)ம் அதிபதி சனி(கன்னி) 12ல் ---> 24 பரல் மற்றும் சனியின் சுய பரல் 2.

3ல் இருக்கும் கேது(தனசு) ---> 28 பரல்

9ல் இருக்கும் ராகு(மிதுனம்) ---> 30 பரல்

சுய பரல் 2 என்று மிக குறைவாக உள்ள இந்த அமைப்பு வர்கோத்தம பலன்கள் கொடுக்குமா?


நன்றி,
ராஜா ச

பெரியவாதாசன் said...

பெரியீர், வணக்கம். இப்பதிவில் ஈண்டு பகரப்பெறும் வர்க்கோத்தமம் என்னும் இவ்வமைப்பு இராஸி மற்றும் நவாம்ஸம் இடையே மட்டும்தானோ? அன்றி பிற அம்சங்களுக்கும்(D3, D10 etc.) இங்ஙனமே ஓர்ந்து நோக்க வியலுமோ?
ஐயம் தெளிவிக்க வேண்டுகிறோம்.

Kalai Rajan said...

அய்யா,
பாப்கார்ன் பொட்டலம் அருமை

Ak Ananth said...

எனக்கு லக்கினம் வர்கோத்தமம். கடக லக்கினகாரரான என் மனைவிக்கு யோககாரகர் செவ்வாய் வர்கோத்தமம்.

நிழலின் அருமை வெயிலில் போனால்தான் தெரியும் என்பார்கள். இந்த வர்கோத்தம கிரகம், அதன் தசா புத்தி நன்மை செய்தது என்பது தீய கிரகத்தின் தசா புத்தி நடக்கும்போதுதான் தெரியும்.

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா,சகோதரர் ராஜா கேட்டிருக்கும் கேள்வியிலிருந்து ஒரு சந்தேகம்,4,5மிட அதிபதியும்,துலா லக்னத்திற்கு யோக காரனுமான சனிபகவான் வர்கோத்தமத்தில் உள்ளது சந்தோசம்,அதே சமையத்தில் 12மிடத்தில் 2 பரல்களுடன் வர்கோத்தமத்தில் இருப்பது 4,5 மிடத்திற்கு பாதிப்பை ஏற்படுதுமா?
4,5மிடம்மும்,சனிபகவானும் நல்ல பார்வை பெற்றிருந்தால் நல்லது ந்டக்குமா? இல்லை, 12மிடத்தில் அமர்ந்து இருக்கும் சனிபகவான் 12மிடத்திற்கான வேலையை செய்வாரா? நன்றி ஐயா

Anonymous said...

அய்யா,

பாப்கான் பதிவு அருமை..நன்றி..

Dallas Kannan said...

Great lesson. Waiting for the answers for some of the question as I have the same.

SP.VR. SUBBAIYA said...

////Blogger paulsam said...
அய்யா,பாப்கார்ன் பொட்டலம் அருமை,எனக்கு கடக லக்கினம்,செவ்வாய் விருச்சகத்தில் ராசியிலும் மற்றும் நவாம்சத்திலும் லக்கினம் மற்றும் விருச்சிக செவ்வாய் இரண்டும் அப்படியே உள்ளது ஆனால் அஷ்டக வர்க்கத்தில் விருச்சக செவ்வாய்க்கு சுயவர்க்கத்தில் 1 பரல்களே உள்ளது இந்த அமைப்பு வர்கோத்தம பலன்கள் கொடுக்குமா?.தாங்கள் விளக்கவும் அய்யா./////

வர்கோத்தமம் பெற்றதால் அதற்கு உரிய பலன்களைச் செய்வார். ஆனால் சுயவர்க்கப் பரல்கள் குறைந்ததால் குறைவான பலன்களே கிடைக்கும்.
பத்தாயிரம் வரவேண்டிய இடத்தில் இரண்டாயிரம்தான் கிடைக்கும். கிடைத்தவரை சரி என்று திருப்தியடைந்துகொள்ள வேண்டியதுதான்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger கலையரசி said...
ஆஹா எனக்கு இரண்டு கிரகங்கள் வர்கோத்தமம் அடைந்து உள்ளது. ஒன்பதாம் இடத்து புதன்(துலாமில்( அம்சத்தில் பத்தாம் இடமாக சுக்ரன் வீட்டில் (துலாமில்) வர்கோத்தமம் . செவ்வாய் லக்னத்தில் 10மிடத்தில் (விருசிகத்தில்), அதே செவ்வாய் அம்சத்தில் 11ம் இடமாக விருசிகத்தில் வர்கோத்மம் . இப்போ புதன் திசை, ஆரம்பித்து 2 வருடங்கள் ஆக போகிறது. கொஞ்சம் நல்ல பாதை தெரிய ஆரம்பித்து உள்ளது .போக போக தெரியும். 337 டானிக் குடித்து குடித்து பிரயாணி சுவை பிடிக்காமல் இருக்கிறது./////

உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி!!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger k.umapathy said...
Good morning sir.
Good lesson. Even malefic planet gives some good results in varkothamam is additional point to keep it in mind while analysing horoscope. What will be the result of neesa planet varkothamam sir?
Thanks with regards.
k.umapathy//////

நீசமாகிவிட்டால், முற்றிலும் சேதமாகிவிட்டதாகும். Totally out. பலன் இருக்காது!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger வேப்பிலை said...
சூப்பர்..
சூப்பரோ சூப்பர்.,../////

நல்லது. நல்லதோ நல்லது!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Sattur Karthi said...
Good Morning sir!/////

உங்களின் வருகைப்பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger KJ said...
Magara lagnam (vargothamam), yogakaragan (sukran) vargothamam (12th position with sani aspect), Lagnathypathy Saniswaran at thulam. Neengal sonnathai pol ondrum nadaka villaye./////

யோககாரகன் 12ல் அமர்ந்ததாலும், சுகங்களுக்கு அதிபதியான அவனே (சுக்கிரன்) 12ல் அமர்ந்ததாலும் சுகக்கேடு. அதுதான் நீங்கள் எதிர்பார்த்தது நடந்திருக்காது!

SP.VR. SUBBAIYA said...

Blogger arul said...
informative post/////

நல்லது. நன்றி அருள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger raja said...
எனக்கு 5 கிரகம் வர்கோத்தமம் அடைந்து உள்ளது.
துலா லக்னம் --> 11ம் அதிபதி சூரியன், 10ம் அதிபதி சந்திரன் , (4,5)ம் அதிபதி சனி , 3ல் இருக்கும் கேது மற்றும் 9ல் இருக்கும் ராகுவும்.
11ம் அதிபதி சூரியன்(மகரம்) 4ல் ---> 23 பரல் மற்றும் சூரியனின் சுய பரல் 2 தான்.
10ம் அதிபதி சந்திரன்(துலாம்) 1ல் ---> 29 பரல் மற்றும் சந்திரனின் சுய பரல் 6.
(4,5)ம் அதிபதி சனி(கன்னி) 12ல் ---> 24 பரல் மற்றும் சனியின் சுய பரல் 2.
3ல் இருக்கும் கேது(தனசு) ---> 28 பரல்
9ல் இருக்கும் ராகு(மிதுனம்) ---> 30 பரல்
சுய பரல் 2 என்று மிக குறைவாக உள்ள இந்த அமைப்பு வர்கோத்தம பலன்கள் கொடுக்குமா?
நன்றி,
ராஜா ச/////

தேர்வில் வெற்றி பெற்றும் கட் ஆஃப் மார்க்கை விட வாங்கியுள்ள மார்க்குகள் குறைவாக இருந்தால் என்ன ஆகும்? விரும்பிய கல்லூரிகளில், விரும்புகின்ற ஊர்களில் இடம் கிடைக்காமல், ஏதோ ஒரு கல்லூரியில் இடம் கிடைத்து படிக்க நேரும் அல்லவா? அதுபோலத்தான் நடக்கும்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger பெரியவாதாசன் said...
பெரியீர், வணக்கம். இப்பதிவில் ஈண்டு பகரப்பெறும் வர்க்கோத்தமம் என்னும் இவ்வமைப்பு இராஸி மற்றும் நவாம்ஸம் இடையே மட்டும்தானோ? அன்றி பிற அம்சங்களுக்கும்(D3, D10 etc.) இங்ஙனமே ஓர்ந்து நோக்க வியலுமோ?
ஐயம் தெளிவிக்க வேண்டுகிறோம்./////

வர்கோத்தமம் ராசிக்கு மட்டும்தான் பெரியவரே, பெரியவர்தாசரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Kalai Rajan said...
அய்யா,
பாப்கார்ன் பொட்டலம் அருமை/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Ak Ananth said...
எனக்கு லக்கினம் வர்கோத்தமம். கடக லக்கினகாரரான என் மனைவிக்கு யோககாரகர் செவ்வாய் வர்கோத்தமம்.
நிழலின் அருமை வெயிலில் போனால்தான் தெரியும் என்பார்கள். இந்த வர்கோத்தம கிரகம், அதன் தசா புத்தி நன்மை செய்தது என்பது தீய கிரகத்தின் தசா புத்தி நடக்கும்போதுதான் தெரியும்./////

எல்லா கிரகங்களும் தங்கள் தசா புத்திகளில்தான் பலனைக் கொடுக்கும். காத்திருந்துதான் பெறவேண்டும்! உங்களின் அனுபவப் பகிர்விற்குநன்றி ஆனந்த்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Geetha Lakshmi A said...
வணக்கம் ஐயா,சகோதரர் ராஜா கேட்டிருக்கும் கேள்வியிலிருந்து ஒரு சந்தேகம்,4,5மிட அதிபதியும்,துலா லக்னத்திற்கு யோக காரனுமான சனிபகவான் வர்கோத்தமத்தில் உள்ளது சந்தோசம்,அதே சமையத்தில் 12மிடத்தில் 2 பரல்களுடன் வர்கோத்தமத்தில் இருப்பது 4,5 மிடத்திற்கு பாதிப்பை ஏற்படுதுமா?
4,5மிடம்மும்,சனிபகவானும் நல்ல பார்வை பெற்றிருந்தால் நல்லது நடக்குமா? இல்லை, 12மிடத்தில் அமர்ந்து இருக்கும் சனிபகவான் 12மிடத்திற்கான வேலையை செய்வாரா? நன்றி ஐயா/////

யோககாரகன் வர்கோத்தமம் பெற்றாலும், 12ல் அமர்ந்ததால், குறைந்த அளவே நன்மைகளைச் செய்வார். ஆனால் தீமைகளைச் செய்ய மாட்டார்!

SP.VR. SUBBAIYA said...

////OpenID Keerthana said...
அய்யா,
பாப்கான் பதிவு அருமை..நன்றி../////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Dallas Kannan said...
Great lesson. Waiting for the answers for some of the question as I have the same. /////

தொடர்ந்து படியுங்கள். எல்லாம் தெளிவாகும்!

பெரியவாதாசன் said...

ராசிக்கு மட்டும்தான்< தெரிகிறது> நாம் கேட்டது ராசி & நவாம்சம் (D9) இல் மட்டும் தான் பார்க்க முடியுமா இல்லை ராசி & D3, ராசி & D1௦ இவற்றிலும் இது உண்டா?

kmr.krishnan said...

நீசம் பெற்ற குரு வர்கோத்தமம். சிம்மத்தில் ,2ல், அமர்ந்த சனி வர்கோத்தமம்.
குரு நீசம் பெற்றாலும் சுய பரல் 7. கடன் காட்சி இல்லாத , ஒரு நடுத்தரவர்க்க‌
வாழ்க்கை அமைந்தது. துன்பங்களைத் தாங்கும் மனதினைக் கொடுத்தது.

சனைச்சரன் 8ம் இடமான கும்பத்தினைப் பார்க்கிறார்.ஆயுள்காரகன் மற்றும் எட்டமதிபதியான 2ல் சனி வர்கோத்தமம் பெற்று தன் வீட்டையே நோக்குவதால்
தர்மராஜாவுக்கு கொஞ்சம் அதிக வருடங்கள் டிமிக்கி கொடுக்கலாமோ?

Kannan said...

Vanakkam aiyaa ,

enakku lagnam(simmam) matrum Chevvai (rishabam-10 ) vargothamam. sukkiran(lagnathil in raasi)

aanaal innoru pathivil navamsathil sukkiranum (virichigam) chevvaiyum parivarthanai aagi irunthaal thirumana vaazhvu pirachanai ullathaaga amyum endru solli iruntheergal allavaa.. vargothamam petra chevvai(simathirkku yogakaaraganaaga irunthaalum) antha pirachanaigal kandipaaga irukkumaa ? #innum thirumnam aagavillai athaan bayam !!!

KJ said...

Ok sir. Theeya graham, vargothamam petral, nanmai seyum. Athe pol vargothamam perum graham, 6,8,12 pondra idangalayum nam kanakil eduthu kolla koodathu allava. Melum rasiyil oru lagnam, amsathil oru lagnam endra amaipirku, entha idathai eduthu kolvathu. Rasiyil, 9 idathil ulla graham, amsathil 8il vargothamam petral, entha kanakkil varum.

SANGEETH KANNAN said...

அன்பு வாதியார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ...
ஒரு கிரகம் ராசி மற்றூம் நவாம்சத்தில் நீச்சம் அடைந்தால் அதை வலிமை அற்ற்து என எடுத்து கொள்வதா? இல்லை வர்கொத்மம் பெட்றது என கொள்வதா?( 4 அல்லது அதர்கு மெல் பரல்கல் இருந்தால்)