மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

14.8.13

Astrology: அஷ்டகவர்க்கமும் கோள்ச்சாரமும்!

 
Astrology: அஷ்டகவர்க்கமும் கோள்ச்சாரமும்!

கோள்சாரத்திற்கு (transit planets) அஷ்டகவர்க்கப் பரல்களை எப்படிப் பயன் படுத்துவது?

அதை இப்போது பார்ப்போம்
--------------------------------------------------------
முதலில் சூரியனுக்கான கோள்சாரப்பலன்

சூரியனின் சுயவர்கக அட்டவணையை வைத்து அதைப் பார்க்க வேண்டும்! சூரியன் தன்னுடைய சுற்றை முடிக்க ஒரு ஆண்டு காலத்தை எடுத்துக்கொள்ளும். அதாவது

ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாத காலம் இருக்கும். சித்திரை மாதம் மேஷத்தில் இருந்து தனது கோள்சாரப் பயணத்தை சூரியன் துவங்கும். அதை நினைவில் கொள்க!

1. கோள்சாரச் சூரியன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 5 முதல் 8 பரல்கள் உள்ள ராசிகளில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாத்கனுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கும் அக்காலத்தில் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளலாம். திருமணம் போன்ற சுபகாரியங்களை வீட்டில் செய்யலாம். முக்கியமான செயல்களை அக்காலகட்டத்தில் துவங்கலாம்.

2. மாறாக சூரியன் 1 முதல் 3 பரல்கள்வரை தன் சுயவர்க்கத்தில் உள்ள இடங்களில் இருக்கும் (சஞ்சாரம் செய்யும்) காலங்களில் செய்யும் செயல்கள் நிறைவடையாமல் பாதியிலேயே நின்று போய் விடும் அபாயம் உள்ளது. ஆகவே அக்காலங்களைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல அந்தக் காலகட்டத்தில் சுபகாரியங்களைத் தள்ளிப் போடுவதும் நல்லது.

3. 4 பரல்கள் உள்ள இடத்தில் சூரியன் சஞ்சாரம் செய்யும் காலங்களில் நல்லதும் கெட்டதும் கலந்த கலவையான பலன்கள் இருக்கும் That is mixed results

4. சூரியனின் சுயவர்க்க அட்டவணையில், சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து 4 ராசிகளில் உள்ள பரல்களைக் கூட்டுங்கள். (சூரியன் இருக்கும் ராசியையும் சேர்த்துக் கூட்ட வேண்டும்) அது போல அடுத்து உள்ள 4 ராசிகளின் பரல்களையும் கூட்டுங்கள். அதாவது சூரியனுக்கு 5 முதல் 8ஆம் இடம்வரை உள்ள ராசிகள். பிறகு அதற்கு அடுத்துள்ள 4 ராசிகளையும் கூட்டுங்கள். அதாவது சூரியனுக்கு 9ஆம் இடம் முதல் 12ஆம் இடம் வரை உள்ள இடங்கள், அந்த 1, 2 & 3 பகுதிகளில் எந்தப் பகுதியில் கூட்டல் அதிகமாக உள்ளதோ அதை மனதில் வைத்துக்கொண்டு ஒரு நாளின் துவக்கப் பகுதி, நடுப்பகுதி, கடைசிப் பகுதி என்று முக்கிய காரியங்களைச் செய்ய வேண்டும். காரியம் வெற்றியடையும். அதாவது முதல் பகுதியில் கூட்டல் அதிகமாக இருந்தால் பகல் முன் வேளையிலும். நடுப்பதியில் பரல்கள் அதிகமாக இருந்தால், அதற்கு அடுத்து வரும் பகல் வேளையிலும் (அதாவது மதியமும்), கடைசிப் பகுதியில் அதிகமாக இருந்தால் பிற்பகலிலும் காரியங்களைச் செய்ய வேண்டும்

எந்தப் பகுதியில் கூட்டல் மிகவும் குறைவாக உள்ளதோ அந்தப் பகுதிக்கு உரிய பகல் நேரத்தைத் தவிர்த்துவிட வேண்டும்.

இதெல்லாம் நடக்கிற காரியமா என்று சலிக்காமல், ஜோதிடத்தின் மீதும் அஷ்டகவர்க்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து செய்து பாருங்கள்
-----------------------
சந்திரனுக்கான கோள்சாரப் பலன்கள்

சந்திரன் தன்னுடைய சுயவர்க்கத்தில் எந்தெந்த வீடுகளில் அதிகமான பரல்களைக் கொண்டுள்ளதோ,  அந்த வீடுகளில் பயணிக்கும் காலத்தில் சாதகமான பல்ன்களைத் தரும்

என்ன ஒரு கஷ்டம் என்றால், சந்திரன் தன்னுடைய ஒரு சுற்றை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலம் 27 நாட்கள் மட்டும்தான்! ஒவ்வொரு ராசியிலும் அது இரண்டே கால் நாட்கள் மட்டும்தான் இருக்கும்.

1. தன்னுடைய சுயவர்க்கத்தில்  6 முதல் 8 பரல்கள் வரை இருக்கும் இடங்களில் பயணிக்கும் போது அந்த நாட்கள் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். எடுத்துச் செய்யும் காரியங்கள் வெற்றியடையும். அதனால் முக்கியமான பணிகளை அந்த நாட்களில் செய்ய வேண்டும். ஒரு வேலையில் சேர்வதற்கு, அல்லது ஒரு தொழிலைத் துவங்குவத்ற்கு, அல்லது திருமணம் செய்துகொள்வதற்கு அல்லது ஒரு பாடத்தைப் படிக்கத் துவங்குவதற்கு, ஒரு நட்பை உண்டாக்குவதற்கு போன்ற செயல்களுக்கு அந்த நாட்கள் உரியனவாகும்.

2. மாறாக  சந்திரன் தனது சுயவர்க்கத்தில் 4 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் உள்ல இடங்களில் பயணிக்கும் காலத்திற்கு உரிய நாட்களில், மேற்சொன்ன செயல்களைச் செய்யாமல் ஒத்திப் போடுவது நல்லது.

3. ஒரு நேர்காணல், அல்லது ஒரு வேலையில் சேர்வதற்கான இன்டர்வியூவிற்குச் செல்வதற்கு இந்தப் பரல்கள் அதிகம் உள்ள நாட்கள் உகந்ததாக இருக்கும். சில சமயங்களில், அது நமக்கு சரிப்பட்டு வராது. நமக்கு வரும் உத்தரவுப்படி செய்ய முடியுமே தவிர, நாள் நட்சத்திரங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அது போன்ற சந்தர்ப்பங்களில், இறைவனைப் பிரார்த்திவிட்டு நீங்கள் அதைச் செய்ய வேண்டியது முக்கியம். இறைவன் பிரார்த்தனைகளுக்கு நிச்சயம் உதவுவார். கை கொடுப்பார்!

4. திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, பெண்ணின் ஜாதக ராசி என்னவோ (அதாவது சந்திரன் இருக்கும் ராசி) அந்த ராசியில் பையனின் சுயவர்க்கத்தில் (பையனின் ஜாதகத்தில்) அதிகமான பாரல்கள் (அதாவது 6ற்கு மேற்பட்ட ) இருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இது இருபாலருக்கும் பொதுவானது
-------------------------
செவ்வாய் கிரகத்திற்கான கோள்சாரப் பலன்:

செவ்வாய் இடம், பூமி, வீடு வாசல் முதலியவற்றிற்கான அதிபதி.  He is the lord for immovable properties. செவ்வாய் தனது சுயவர்க்கத்தில் எந்த ராசியில்  அதிகமான பரல்களுடன் உள்ளாரோ, அந்த் ராசியில் அவர் பயணிக்கும் காலத்தில், இடம் அல்லது வீடு அல்லது அசையாத சொத்துக்கள் வாங்குவதற்கு உகந்ததாகும்.

அப்படிப் பார்த்து வாங்கும் சொத்து தங்கி விடும். நம்மை விட்டுப் போகாது!
--------------------------------------------------------------------
”சரி, மூன்று கிரகங்களுக்கு மட்டும்தானே கொடுத்திருக்கிறீர்கள். அஷ்டகவர்க்கத்தை வைத்து மற்ற கிரகங்களுக்கான கோள்சாரப் பலன்களை எப்படிப் பார்ப்பது? முக்கியமாக குரு மற்றும் சனீஷ்வரனின் கோள்சாரப் பலன்களை எப்படிப் பார்ப்பது?”

”பொறுத்திருங்கள். இன்னொரு நாள் அதை விரிவாகத் தருகிறேன். இது திறந்தவெளி இணைய வகுப்பு.இங்கே எழுதுவது என்பது ஒரு இளம் பெண் திறந்தவெளியில் குளிப்பதற்குச் சமமானது. இங்கே முழுமையாகக் குளித்தால் பல ஆசாமிகள் வீடியோ காமெராவுடன் தயாராக உள்ளார்கள், படமாக்கிக் கொண்டு போவதற்கு! ஆகவே எப்படித் தரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு ஏதாவது யோசனை தோன்றினால் சொல்லுங்கள்!”

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

16 comments:

வேப்பிலை said...

ஒரு சுற்று சுற்றி வந்து விட்டோம்
ஒவ்வொரு சுற்றாக இனி..

kmr.krishnan said...

ஒரு நாளில் மூன்று வேளையில் சூரியனின் பலனைப் பார்க்க, சூரியன் அந்த நாளில் இருக்கும் இடத்தில் இருந்தா அல்லது சுய ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்தில் இருந்தா, எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? கோள்சாரம் என்பதால் அன்றைய சூரியனைத்தான் கணக்கில் எடுக்க வேண்டும் இல்லையா?

karthik said...

உங்களுக்கு சந்தேகம் கேட்டு mail செய்யும் மாணவா்களுக்கு
நிங்கள் இந்த பாடத்தை அனுப்பலாமே

arul said...

good lessons

Arulkumar Rajaraman said...

Dear Sir

Nice lesson. Thanks Sir(long leave - more than 3 months)

Anbulla Manavan
Arul Kumar Rajaraman

Remanthi said...

"அஷ்டகவர்க்கமும் கோள்ச்சாரமும்" மிகவும் அருமையான பதிவு. நன்றி

கலையரசி said...

அருமையான பதிவு ! அஷ்டவர்க்கத்தில் குறுக்கு வழிகள் ...!எங்களுக்கு குறுக்கு வழி ரொம்ப பிடிக்கும் .
அய்யா ,பரல்கள் 0 என்று இருந்தால் அதன் பலன் அவ்வோளோதானா ?அதுவும் லக்ன பரல்களில் 0 என்று இருந்தால் எவ்வாறு அர்த்தம் கொள்வது ?

C Jeevanantham said...

Thank you sir.

Lessons are easily understandable.

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
ஒரு சுற்று சுற்றி வந்து விட்டோம்
ஒவ்வொரு சுற்றாக இனி..////

சுற்றுவதை நிறுத்த முடியாது.
சுற்றும்வரைதான் பூமி
எரியும்வரைதான் நெருப்பு
ஓடும்வரைதான் ஆறு

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
ஒரு நாளில் மூன்று வேளையில் சூரியனின் பலனைப் பார்க்க, சூரியன் அந்த நாளில் இருக்கும் இடத்தில் இருந்தா அல்லது சுய ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்தில் இருந்தா, எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? கோள்சாரம் என்பதால் அன்றைய சூரியனைத்தான் கணக்கில் எடுக்க வேண்டும் இல்லையா?////

கோள்சாரம் என்னும்போது, அன்றைய தினத்தில் சூரியன் இருக்கும் இடத்தைவைத்துத்தான்! சந்தேகம் தெளிவானதா சுவாமி?

Subbiah Veerappan said...

////Blogger karthik said...
உங்களுக்கு சந்தேகம் கேட்டு mail செய்யும் மாணவா்களுக்கு
நிங்கள் இந்த பாடத்தை அனுப்பலாமே////

உள்ள வேலையையே பார்க்க முடியவில்லை! இதில் கூடுதல் வேலைகளுக்கு எனக்கு நேரமில்லை ராசா!
பாடத்தில் உள்ள விதிமுறைகளை தங்கள் ஜாதகத்துடன் சம்பந்தப் படுத்திக் கேள்விகள் கேட்டும், அத்துடன் தங்கள் ஜாதகத்தைப் பார்த்து தங்கள் எதிர்காலத்தைச் சொல்லும்படியும் கேட்டு, நாள் ஒன்றிற்கு சராசரியாக 50 மின்னஞ்சல்கள் வருகின்றன. அவற்றிற்கெல்லாம் எப்படிப் பதில் எழுதுவது? அதற்கு ஒரு யோசனை சொல்லுங்கள்!

Subbiah Veerappan said...

////Blogger arul said...
good lessons////

நல்லது. நன்றி

Subbiah Veerappan said...

/////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Nice lesson. Thanks Sir(long leave - more than 3 months)
Anbulla Manavan
Arul Kumar Rajaraman/////

இணைய வகுப்பு. அதனால் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம் - போகலாம். சட்ட திட்டங்கள் எதுவும் இல்லை!

Subbiah Veerappan said...

////Blogger Remanthi said...
"அஷ்டகவர்க்கமும் கோள்ச்சாரமும்" மிகவும் அருமையான பதிவு. நன்றி/////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger கலையரசி said...
அருமையான பதிவு ! அஷ்டவர்க்கத்தில் குறுக்கு வழிகள் ...!எங்களுக்கு குறுக்கு வழி ரொம்ப பிடிக்கும் .
அய்யா ,பரல்கள் 0 என்று இருந்தால் அதன் பலன் அவ்வோளோதானா ?அதுவும் லக்ன பரல்களில் 0 என்று இருந்தால் எவ்வாறு அர்த்தம் கொள்வது ?/////

சுயவர்க்கக் கணக்கிற்கு லக்கினாதிபதியின் கட்டத்தை மட்டும் பாருங்கள், போதும்!

Subbiah Veerappan said...

////Blogger C Jeevanantham said...
Thank you sir.
Lessons are easily understandable./////

நல்லது. நன்றி நண்பரே!