மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.8.13

Astrology: Quiz புதிர் - பகுதி 3 - சற்று வித்தியாசமான கேள்விகளுடன்


Astrology: Quiz புதிர் - பகுதி 3 - சற்று வித்தியாசமான கேள்விகளுடன்

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி மூன்று

இந்தத் தொடரின் முதல் பகுதியை 19.8.2013 திங்கட்கிழமையன்றும் அடுத்த பகுதியை நேற்றும் (26.8.2013) கொடுத்திருந்தேன். ஏராளமான பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு என்னைத் திகைக்க வைத்து விட்டீர்கள். தொடரின் அடுத்த பகுதி இது.

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான புதிய பகுதி இது! அனைவரையும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வெளிவரும் இப்பதிவில் இன்று வித்தியாசமான கேள்விகளைக் கேட்டுள்ளேன். இதுவரை கடந்த ஆறரை ஆண்டுகளில் சுமார் 700 பாடங்களின் மூலம் ஜோதிடத்தை உங்களுக்கு நன்கு சொல்லிக் கொடுத்துள்ளேன். ஜாதகத்தை அலசும் முறை பற்றிய பாடங்களையும் நிறையக் கொடுத்துள்ளேன். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப்பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer
என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகத்திற்கு உரியவர்:

1. பட்டப் படிப்பு படித்தவரா அல்லது பட்டப் படிப்பு படிக்காதவரா?
2. ஜாதகர் ஏழையா? அல்லது நடுத்தரப் பணக்காரரா? அல்லது செல்வந்தரா?
3. திருமணம் ஆனவரா அல்லது திருமணம் ஆகாதவரா?
4. வேலையில் இருப்பவரா அல்லது வேலை எதுவும் செய்யாமல் சுகஜீவனத்  துடன் இருப்பவரா?

நடத்தப் பெற்ற பாடங்களில் இருந்து, கேள்விக்கு சம்பந்தப்பட்ட வீடுகளையும், அதன் அதிபதிகளையும் காரகர்களையும் வைத்து அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்

க்ளூ வேண்டுமா?

எதற்கு க்ளூ? அலசலுக்கு அதெல்லாம் வேண்டாம். சர்ஃப் எக்செல் வாஷிங் பவுடர் மட்டும் போதும். நன்றாக அலசுங்கள். கிடைக்கின்ற பதிலை எழுதுங்கள்

கேள்விக்கான ஜாதகம்:உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

54 comments:

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 2. இது பெப்சி நிறுவனத்தின் தலைவி இந்திரா நூயி அவர்களின் ஜாதகம் அல்லவா வாத்தியார் ஐயா?

  யாரின் ஜாதகம் என்று தெரிந்த பிறகு கொடுத்துள்ள கேள்விகளுக்கு பதில் அளிப்பது எளிது என்றாலும், ஜாதகத்தை அலசுகிறேன்.

  1) ஜாதகர் பெரும் படிப்பு படித்தவர். வித்யாகாரகன் புதன் உச்சம் தனது மூல திரிகோண இராசியான கன்னியில். இவரே இலக்கினாதிபதியும் நாலாம் வீட்டு அதிபதியும் யோககாரகனும் ஆகிறார். கேட்க வேண்டுமா?
  2) ஜாதகர் பெரும் செல்வந்தர். தனகாரகன் வியாழன் தனது நண்பரான சூரியனின் வீட்டில். இரண்டாம் வீட்டு அதிபதி 10ல். தனது சொந்த உழைப்பில் பெரும் செல்வம் ஈட்டும் வாய்ப்பு. இலக்கினாதிபதி வலுவாக உள்ளதையும் முதல் பதிலில் எழுதி இருக்கிறேன். இலாபாதிபதி செவ்வாய் இலக்கினாதிபதியுடன் இருக்கிறார்.
  3) களத்திரகாரகன் சுக்கிரன் ஆட்சி பலத்துடன் மூல திரிகோணத்தில் இருக்கிறார். ஏழாம் அதிபதி வியாழன் தைரிய ஸ்தானத்தில் மாந்தியுடன் (அவருக்கு 3ம் வீடு நல்ல இடம் என்று படித்த நினைவு). தனது விசேஷ 5ம் பார்வையால் 7ம் வீட்டை (தனது சொந்த வீட்டை) பார்க்கிறார்.

  4) கர்மகாரகன் சனி திரிகோண வீட்டில் உச்சம். 10ம் வீட்டு அதிபதி 3ம் வீட்டில் இருக்கிறார். நேரடி பார்வையில் பாக்கிய ஸ்தானத்தை பார்க்கிறார், மற்றொரு விசேஷ 9ம் பார்வையால் இலாப ஸ்தானத்தையும் பார்க்கிறார். வேலையில் இருப்பவர் மட்டுமல்ல. பெரிய அந்தஸ்தான வேலையில் இருப்பவர், உழைப்பால் உயர்ந்தவர்.

  மொத்தத்தில் அருமையான ஜாதகம்.

  ReplyDelete
 3. Kalai Vanakkam Ayya,
  I try answer your questions sir.
  1. Lord of the lagan is buthan kanni rasiyil irukkirar. athu nalla balam.
  2. 4th house lord Buthan is good position. but Sevai is also present in the same house who is of 6th house and 11th house.
  3. Desa starts with sani 3 years. next 17 years buthan desai. so Jathagr may studied well. up to his 20 years. After that Kethu desa until his 27 years and Kethu is in 12th place from the laganm. that is called marivuu sthanam. and owner of the house Sukran is in 6 th place from his house with Sani and Sorriyan.
  Sani bagavan is the owner of 8th and 9th place which means Astamabathi and Bagaypathi. Sooriyan is owner of the 3rd house and present in Thulam where sooriyan is nesam.
  SO JATHAGR IN KETHU DESAI COULD NOT COMPLETE HIS DEGREE OR MASTER DEGREE.
  because 5th place porva puni sathanm also not so good. because sooriyan and Sani.
  4. after kethu desai sooriya desai for 6 years. until his 33 sooriya desai. no way of getting chance to marry.
  5. Looking at 7th lord Guru in simha rasi. Mr. Manthi is present in the same place. Idam koduthaa sooriyan nesam. Kodave Sani. Klathira karagan Sukran with sooriyan and sani. Sukran Asthamanaga vaippu ullathu. for that we have see degrees.
  6. There is no guruvin parvai at 7 th place.
  7. And some worst Sani is looking at 7 th place ( 3 paarvaiyaga).
  8. lord of the second house is in menam. guruvin veedu. But guru is in 3 place. with Manthi. so next 10 yrs Chandra desai until 43.
  JATHAGAR THIRUMANAM AAGATHAVAR.
  9. lord of the 10th house guru in 3rd house with Manthi. So jathagar may not get proper job. I mean oru nilaiyann vellai. or he couldnot.
  he cannot do business because 7th position also problem.
  10. VELLAI ENBATHU ORU NIRANTHRAM ILLAI JATHAGARUKKU.
  11. laaba sathnam I mean lord of the 11th house is 4th place. Jathagar can get money from some other way. 4th place called sugasathanam.
  JATHAGAR CAN ENJOY WITH HOUSE CAR ETC ETC….. because 4th lord and lagan athipathi is in 4th place and with labathipathi.
  HE MUST BE RICH .
  12. His mother must be very good and his father too. His father also must be great. because sani and sooriyan with sukran. guru vin paarvai at 9th house.
  13. Jathagar may not get proper relation or understanding with his father because sooriyan and sani both in same place. sooriyankkum sanikkum agathu …..
  14. Jathagar appa irunthirakk vaippu illai. ( I guess)
  beginning sani desai and some more sani 8 ikkum 9 ikkum oriyavar. kodvae sooriyan.
  sani desai guru puthi period is 2 years 6 months and 12 days. iruppu desai 3 years.
  So jathagarukku last sani thisaiyil rahu puthi and guru puthi nadathu irukkum.
  Guru puthiyil he may lost his father…. ( I don’t know sir I am guessing please correct it if I do any mistakes)
  because guru with manthi and sooriyan neesam with sani.
  15. sani also looking at 11 th place (7 m paarvaiyaga) so he may lost huge wealth ….in earlier days….
  16. Sani looking at 2 place (10 m paarvaiyaga). No chance of getting familyyy.
  JATHAGAR PATTA PADIPPU PADIKATHAVAR
  JATHAGAR NALLA PANAKARAR
  JATHAGAR NOT A FAMILY MAN.
  JATHAGAR VELLAI ILLAMAL NALLA SUGAJEVANTHUDAN IRUPAVAR.
  jathagarukku next genmam illai because 12 il kethuu. Hope I answered all questions sir. I am eager to see your answer.
  thank you sir…..Ippadikku
  Kadasi desk manavan Mahes.

  ReplyDelete
 4. 1. பட்டப் படிப்பு படித்தவரா அல்லது பட்டப் படிப்பு படிக்காதவரா?

  படித்திருக்க வழியில்லை... புதனோடு ஆறினுக்கு உரிய செவ்வாய் சேர்ந்திருப்பதனால்.
  உச்ச புதன் நல்ல புத்திசாலி ஆனாலும் அவனை செயல் வீரன் செவ்வாய் தனது ஆறாம் ஆதிபத்தியத்தால் கவிழ்த்து இருப்பான் (கன்னிச் செவ்வாய் கண்ணிவெடி வைத்திருப்பான்) :)

  அதற்கு மேலாக குருவும் அந்த வீட்டிற்கு பன்னிரெண்டில் இருக்கிறார்.

  2. ஜாதகர் ஏழையா? அல்லது நடுத்தரப் பணக்காரரா? அல்லது செல்வந்தரா?

  ஜாதகர் செல்வந்தரே!

  இரண்டாம் வீட்டின் அதிபதி அந்த வீட்டிற்கு கேந்திரத்தில் லக்னாதிபதியும் (புதன்), லாபாதிபதியும் (செவ்வாய்) பார்வை பெற்று அமோகமாக இருக்கிறார். இங்கே செவ்வாய் லாபாதிபதியின் வேலை செய்கிறார். காரணம் இவரின் பார்வை அப்படி செய்யும்... அவரிருக்கும் வீட்டை தானே முன்பு காலி செய்தார் (செய்வார்) :)

  இரண்டிற்கு இரண்டில் குரு இதுவும் பலம்..

  உச்சம் பெற்ற பாக்கியாதிபதி சனியின் பார்வை இரண்டில் இது இன்னொரு அபாரமானப் பலம்...

  குருவும் பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை இடுகிறார்.... செல்வந்தரே!

  3. திருமணம் ஆனவரா அல்லது திருமணம் ஆகாதவரா?
  இரண்டாம் இடம் நன்றாக இருக்கிறது... எழிற்குரியவன் அந்த வீட்டிற்கு ஒன்பதிலே இருந்து ஏழாம் வீட்டைப் பார்க்கிறான்... உச்சம் பெற்ற பாக்கியாதிபதியும் (சனி பகவான்) ஏழாம் வீட்டை தனது மூன்றாம் பார்வையில் பார்க்கிறார்.

  எழிற்கு உரியவன் லக்னத்திற்கு அருகில் இருப்பதால் அவன் திருமணத்தை இருபத்தேழு முதல் முப்பதுக்குள் முடித்துமிருப்பான்.

  4. வேலையில் இருப்பவரா அல்லது வேலை எதுவும் செய்யாமல் சுகஜீவனத் துடன் இருப்பவரா?

  வேளையில் இருக்க முடியாது... அடுத்தவருக்கு அடிபணிந்து இருக்க மனம் ஒப்பாதவர்... பத்துக்கு உரியவன் குரு அந்த வீட்டிற்கு ஆறில்...

  ஆனால், அவன் கர்மகாரகன் உச்ச சனியின் பார்வை பெறுவதால் அந்த வீட்டிலே லாபாதிபதி செவ்வாய் பார்வை விழுவதால் அங்கே சந்திரன் இருப்பதால் தொழில் செய்யலாம்... அதற்கு அமாவின் பெயரை வைத்து; மனைவியை முன்னிலைப் படுத்தி செய்யலாம்.

  அதுவும்.... முத்து, நூல், பாத்திரங்கள், ஆடை அலங்காரப் பொருட்கள் வியாபாரம் செய்யலாம்..

  இவர் நாட்டாமை வேலையை நன்றாகச் செய்வார்.

  மனைவி, மற்றும் தாயின் மூலம் சுக ஜீவனம் இருக்கும்.

  நன்றிகள் ஐயா!

  ReplyDelete
 5. இப்போது தான் கவனித்தேன். இராகுவும் உச்சம். சூரியன் நீசம் பெற்றாலும் உச்சனுடன் இருப்பதால் நீச பங்க இராஜயோகம். 4ம் வீட்டில் இலக்கினாதிபதி புதன் உச்சம், 5ம் வீட்டில் கர்மகாரகன் சனி உச்சம், 6ம் வீட்டில் சர்ப்ப கிரகமான இராகு உச்சம். யோககாரகன் புதன் இரண்டாம் வீட்டுக்காரரான சந்திரனை பார்க்க அவர் புதனை பார்க்கிறார். இந்த ஜாதகத்தில் என்ன குறை? கேது 12ம் வீட்டில் நீசம் பெற்றிருப்பதும், வியாழனும் சந்திரனும் ஒன்றுக்கொன்று அஷ்டம சஷ்டம இடங்களில் இருப்பதை வேண்டுமானால் கூறலாம். அதே போல் சனியும் சந்திரனும். இப்போது அஷ்டமத்து சனி நடைபெறுகிறது. சந்திர தசையும் சனி புக்தியும் நடக்கும் இக்காலம் ஜாதகருக்கு சற்று சோதனைக்காலமாக இருக்கலாம். ஒரு வேளை அஷ்டக வர்க்கத்தில் இந்த வீட்டிற்கு அதிக பரல்கள் இருந்தால் அந்த பிரச்சனை இருக்காது. இந்த ஜாதகத்தின் சர்வாஷ்டக வர்க்கத்தை தருவீர்களா? மீண்டும் சொல்கிறேன், மிகவும் பிரமாதமான ஜாதகம் இது. ஜாதகர் முற்பிறவியில் நிறைய புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும்.

  ReplyDelete
 6. இந்த கேள்வி பதில் பகுதி
  இங்கே தருவது உங்களுக்கு மதிப்பென் தர

  கடந்த தேர்வுகளில்
  கண்ட உண்மை இது

  நீங்கள் பாஸாகி விட்டீர்கள்..
  உங்களுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. For Question 1:
  For higher education, 5th lord and 9th lord(5th from 5th house) needs to be considered (4th house for basic education).
  Saturn is exalted in 5th place and 5th lord venus in its own sign. No aspects on 5th house
  9th lord exalted in 5th house (9th from 9th) and 9th house is aspected by Jupiter. Good chance for post graduation (would have run Ketu dasa from age of 20 to 27 and so assuming ketu is not in Sun's nakshatra for uninterrupted higher education) .
  From the age of 3 to 20, he/she was running mercury dasa (4th lord who is also exalted) and definitely would have let the subject to finish the basic education.
  One minus : Lagna lord and 4th house lord is exalted in 4th house itself(Kendrathipathi dosham)

  For Question 2:
  For status, 2nd position needs to be considered (along with 11th house for gains).
  2nd house lord is aspected by 4th and 11th house lord.
  2nd house is aspected by 9th house lord.
  But, Moon is isolated with no planet on its sides -Kemadruma yoga (though Mercury aspects it and has chandra mangala yoga)
  So rich!(?)

  For question 3:
  7th house lord in 3rd house without any aspect. Jupiter being lord of 7th house is not a benefic but pathagathipathi for gemini which is ubaya rasi)
  7th house is aspected by 7th lord itself and Mars.
  Karaka Venus is in its own sign (but no aspect) with debilitated Sun.
  Little chance of marriage after the age of 27 (Venus dasa) but not exactly sure.

  For Question 4:
  10th lord in 3rd house with no aspects.
  10th house occupied by 2nd lord is aspected by 4th lord and 11th lord.
  Prediction - Higher chance for comfortable life. But cannot say no chance for Job.

  ReplyDelete
 8. கேள்வி பதில் இருக்கட்டும்.
  வாஜ்யேயி அவர்கள் ஜாதகத்தை
  அண்மையில் பார்க்க நேர்ந்தது

  2ல் மாந்தி பற்றி அறிய ஆவலுடன் அன்று கேட்டதையே இன்றும் கேட்கிறேன்

  தட்டிவிட்டேன் கதவை
  திறக்கும் என காத்திருக்கின்றேன்

  ReplyDelete
 9. (1) ivar uthiradathi natchatram. laknadipathi budhan atchi,utcham in fourth house for education(also kendra). second house lord in 10th house(kendra). so, well educated.
  (2) Second house lord in 10th house and eleventh house lord chevvai in 4th house with budhan laknadipathi atchi and utcham. So, very rich person.
  (3) 7th house lord in 3rd house with manthi and no planet in seventh house. Kalathirakarakan sukran in 5th house however in atchi position and surrounded by Saturn and sun. Sevvai dosham is also there.Moreover, sani-sevvai paarvai on 7th house. so, therefore, No marriage or difficult marriage. parals are not known.
  (4) fourth house lord is atchi utcham and karakan sukran in 5th house atchi. so suka jeevanam.
  Is my prediction right sir ?. please tell me .

  ReplyDelete
 10. 2 nd lord in kendra and 4th lord budhan uthcham.so this person is very well educated and completed degree also.

  again 2nd lord in kendra and 2nd lord is moon .so he family background is well and very rich family also.

  i dont know answers for other questions.

  Pls tell me my predictions are correct or wrong.

  And also one small humble request.after posting this kind of questions ,pls post answers also.

  ReplyDelete
 11. ayya,
  intha jathaagarukku laganathipathi buthan kenthirathil uchham, matrum 9m idathin athbathi sani 5m idathil ucham so laksmi yogam udayavr.enave patta padippu padithavar,thirumanam aanavar,selvanthar,aalumai thiran udayavar.migavum azhaganavar.

  ReplyDelete
 12. காலை வணக்கம் ஐயா,
  நல்ல தொடர். மிகவும் உற்ச்சாகமாக இருக்கிறது.
  +++++
  கொடுத்துள்ள ஜாதகத்தை புருஷ சாதகமாகக் கொண்டே இவ் விடையினை எழுதி உள்ளேன்.
  +++++
  கொடுத்துள்ள ஜாதகத்தில் இரண்டு பஞ்ச மகா புருஷ யோகங்கள் உள்ளன. சச, பத்ர யோகங்கள்.
  +++++
  தசா விவரம்:
  சுமார் மூன்றில் இருந்து இருபது வயது வரை (LKG - UG) புதன் தசை.
  இருபதில் இருந்து இருபத்து ஏழு வயது வரை கேது தசை.
  இருபத்து ஏழு முதல் நாற்பத்து ஏழு வரை சுக்ர தசை. இப்போதைக்கு இது போதும்.

  படிப்பு:
  நான்காம் அதிபன் (லக்கினாதிபதியும் கூட) வித்யாகாரகன் புதன் லக்கினத்துக்கும் ராசிக்கும் கேந்திரமான நான்கிலே ஆட்சி + உச்சம். கல்விக்காலம் முழுவதும் புதனின் தசை. பத்ர யோகம்.
  நல்ல படிப்பு உண்டு. பட்டப்படிப்பு உண்டு. பட்டமேல்படிப்புக்கான (PG, PhD) கிரகம் குரு பகை வீட்டில், மாந்தியுடன். அத்தோடு அதற்கான (PG studies) வயதில் கேது தசையும் நடப்பதால் பட்ட மேல்படிப்பு சந்தேகம். ஆறாம் அதிபதி செவ்வாய் நான்கில். படிப்பு தடைபட்டு இருக்கலாம். இதுவே PG செய்ய விடாமல் கொஞ்சம் தடுத்தும் இருக்கலாம். இதற்கு (ரிஷபத்தில் உள்ள) கேது தசை ஒத்து ஊதியிருக்கலாம். அந்த சமயம் ஏழரை சனியும் இருந்திருக்கும். ஆதலால் PG இல்லை என நினைக்கிறேன்.

  நிதி நிலவரம்:
  இரண்டாம் அதிபன் சந்திரன் (அந்த வீட்டிற்கு ஒன்பதாம் வீடான) பத்தில். உச்சம் பெற்ற ஒன்பதாம் அதிபன் சனியின் நக்ஷத்ரம் உத்திரட்டாதியின் சாரத்தில். புதன் (மற்றும் செவ்வாயின்) நேரடிப் பார்வையில்.

  இரண்டாம் வீட்டை ஒன்பதாம் அதிபன் உச்ச சனி விசேஷ பார்வையால் பார்க்கிறார். தன காரகர் குரு நல்ல நிலைமையில் இருப்பதாகத் தெரியவில்லை. நிதானமான ஆனால் நிலையான நிதி முன்னேற்றம் உண்டெனப் படுகிறது.

  (Continued in next comment)

  ReplyDelete

 13. திருமணம்: (டானிக் 337????)
  ஏழாம் அதிபன் பகை வீட்டில் மாந்தியுடன். மூன்றாம் வீட்டில் மாந்தி தீது அவ்வளவாக செய்ய மாட்டார் ஆகையால் கொஞ்சம் கவலை விட்டு அலசலாம்.
  ஏழாம் வீட்டின் மேல் செவ்வாய் நாலாம் பார்வை. அத்துடன் ராசிக்கு பத்தில் செவ்வாய். லேசான செவ்வாய் தோஷம் (ஆண் எனில்). பாப ஜாதகம் தான். சுத்த ஜாதகம் அல்ல. சனியின் விசேஷ பார்வையும் விழுகிறது.
  ஆனால், ஏழாம் வீட்டு அதிபன் குரு தன் வீட்டை தன் பார்வையில் வைத்து உள்ளார்.
  லக்கினத்துக்கு மிகவும் உகந்த சுக்கிரன் (+களத்திர காரகர்) ஆட்சி பலம்.
  சரி. திருமண வயதில் கேது தசை. அது இருபத்து ஏழு வயது வரை நடக்கும். இருபத்து எட்டாம் வயதில் ஏழரை சனி + கேது தசை எல்லாம் முடிந்து சுக்கிர தசை ஆரம்பித்ததும், வியாழன் கோச்சாரத்தில் தனுசு மற்றும் மகரத்தில் சஞ்சரிக்கும் காலகட்டத்தில் திருமணம் நடக்கலாம். (தனுசு = லக்கினத்துக்கு ஏழில், ராசிக்கு பத்தில் ஆனாலும் ஜாதகத்தில் அவர் அமர்ந்த வீட்டுக்கு கேந்திரத்தில் வருவதால் திருமண வாய்ப்புள்ளது; மகரத்தில் எனில் ராசிக்கு பதினொன்றில், திருமண வாய்ப்பு உண்டு). ராசியில் இருந்து எழில் ஏழாம் அதிபன் புதன் உச்சம் + ஆட்சி. செவ்வாயுடன். சற்றே தாமதமான திருமணம் உண்டு என உள்ளுகிறேன்.

  இரண்டாம் வீட்டின் நல்ல நிலைமையாலும் நான்காம் வீட்டின் நல்ல நிலைமையாலும் சுக்கிரனின் நிலைமையாலும் குடும்ப வாழ்க்கை உண்டு. ஆதலால் ஏழாம் அதிபன் கொஞ்சம் வலுவிழந்தார்ப் போல இருந்தாலும், திருமணம் தாமதமானாலும், உண்டு என நினைக்கிறேன்.

  வேலை:
  இலக்கின, லக்கினாதிபதி நிலையால் ஓரளவுக்கு மென்மைத் தன்மையான மனிதரின் ஜாதகம் என நினைக்கிறேன். ஆக தொழிலும் சௌம்யமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

  வாக்கு ஸ்தானத்துக்கு உரிய சந்திரன் கர்ம காரகன் சனியின் நக்ஷத்திர சாரத்தில் பத்தில் நிற்பதாலும், வாக்கு வன்மையை தரும் பத்ர யோகம் இருப்பதாலும் நல்ல பேச்சாளராக இருக்க வாய்ப்புண்டு. நான்காம் வீட்டில் செவ்வாய் (நான்காம் அதிபன்) புதனுடன் கூடி இருப்பதாலும், பத்தாம் இடத்தை பார்ப்பதாலும் மருத்துவத் தொழிலில் இருக்க வாய்ப்பு உள்ளது. (அடிதடி, வெட்டு குத்து, கசாப்புக் கடை, போலீஸ், ராணுவம் என இருக்க வாய்ப்பு இருந்தாலும் ஜாதகத்தின் மென்மைத் தன்மை கருதி மருத்துவம் என்றேன்).

  சௌம்யனான புதனின் மேன்மையால் நோயாளிகளிடம் பாங்குற இனிமையாகப் பேசி கர்மகாரகன் (+பாக்யாதிபதி) சனியின் மேன்மையால் நல்ல கைராசியான மருத்துவராக அமைய வாய்ப்புண்டு. தொழில் துவங்கும் வயதில் கேது தசை நடை பெறுவதும் மருத்துவ தொழிலுக்கு சகாயமாகவே படுகிறது.

  சுக ஜீவி தான். சுக்கிரன் ஆட்சி, நான்காம் வீட்டில் நான்காம் அதிபன் ஆட்சி உச்சம். பூமிகாரகன் செவ்வாய் வீட்டைக் குறிக்கும் நான்காம் வீட்டில். வீடு மனை உண்டு. சுக வாழ்க்கை உண்டு. ஆனால் செவ்வாய் ஆறாம் அதிபன் ஆதலால் அவ்வப்போது வீட்டில்/வாகனத்தில் சிறு பழுதுகள் வரும் எனப் படுகிறது.
  தந்தை வழி சொத்துக்கள் ஓரளவுக்கு கிடைக்கும் என நினைக்கிறேன். சூரியன் நீச்சம், சனி + சூரியன் சேர்த்தல் சற்றே தட்டி வைத்தாற்ப் போலத் தெரிகிறது

  சுகத்துக்கு கெடு விளைவிக்க மறைமுக சத்ருக்கள் கிளம்பினால் அவர்களை ஒரு கை பார்க்க உச்ச ராகு ஆறாம் பாவத்தில் இருக்கிறார் அல்லவோ?

  ஏதோ எனக்குத் தெரிந்த வரை எழுதினேன். Due to the restriction on the size of comment, I had to write the answer in 2 comments.

  பிழையிருப்பின் திருத்த வேண்டுகிறேன் :)

  இந்த நாள் இனிய நாளாக பயன் செறிந்து விளங்க பழனி ஆண்டவரை வேண்டுகிறேன்.

  அன்புடன்,
  புவனேஷ்வர்


  ReplyDelete
 14. வணக்கம் ஐயா, பட்டபடிப்பு படிக்கும்போதுகூட தேர்வை இவ்வளவு ஆவலாக எதிர்கொண்டதில்லை,எங்களுக்கு சொல்லிகொடுத்தது மட்டுமல்லாமல் நீங்கள் தேர்வு வைப்பது, என்னைபோன்ற கடைசிபெஞ் மாணவர்களுக்கு,எங்களின் ஜோதிட அறிவை பரிசோதித்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு. நன்றி ஐயா.

  ReplyDelete
 15. vanakam.sir.jathakar.panakarar..collage.pathiver..

  ReplyDelete
 16. 10th Lord though is in the 6th house from 10th house with Md. That does not auger well. That may cause frequent travels and upsets. Other aspects of the charts indicate, albeit slightly a medical trade. If not, this native "May be" employed in prisons as an officer/clerical post.

  ReplyDelete
 17. அன்புடன் வணக்கம் ..
  எதோ எனக்கு தெரிந்த வரை அலசியது...
  தவறாக இருக்கும் பட்சத்தில் திருத்த வேண்டுகிறேன்.!!

  லக்னாதிபதி புதன் 4 ல் உச்சம் உடன் 6+11 குரிய செவ்வாய் பகை வீட்டில் ...ஆனாலும் உயர்கல்வி தடைபட்டு கல்வி கற்றது போல் பேச்சு..!
  2..5ல் சுக்கிரன் ஆட்சி சனி உச்சம் சூரியன் நீசம் ஆகவே அரசாங்க வேலை இருக்காது தகப்பனுடன் சரியான உறவு இருக்காது ஆனால் பூர்வீஎக சொத்துக்கள் இருக்கும் சுகமாக உண்டு கழித்து இருப்பார்.

  3...6ல் ராகு ..12ல் கேது இது சர்ப்ப தோஷம் என்பதால் காலம் கடந்த திருமணம் மிகவும் சிரமப்பட்டு 30 வயதுக்கு மேல் ..அதாவது சுக்கிர திசை நடக்கும் போது ..

  4. குரு தன வீட்டை 5ம் பார்வை .குழந்தைகள் இருக்கும்

  5..12ல் கேது .அயன சயன் சுக போகம் ..ஆகவே கொஞ்சம் ஞானம் தாமதமாக வரும் அல்லது திருமணதிற்கு முன்பே கேது திசையில் ஆளை ஒரு வழி செய்து ஞானத்தை கொடுத்து திருமணம் வேண்டாம் என் சொல்ல வைக்கலாம்..(ஆனால் சுக்கிரனும் சனியும் சேர்ந்து இருப்பதால் மனிதருக்கு .............. குறைவிலாது கிடைக்கும் !!!

  குழப்புதே ???. வாத்தியார் அய்யா பதில் சொல்லுங்க !!!

  ReplyDelete
 18. 01.Patta padipu padiththavar
  02.naduthara panakkaarar. Velai parthu thanam petravaraaka iruppar.
  03.thirumanam aaki santhosham illathavar.
  04.velayil iruppavar.

  ReplyDelete
 19. 1. ஜாதகர் சில தடங்கல்களுடன் பட்டப்படிப்பை முடித்தவர்.
  கணினித் துறை டெக்னிகல் படிப்பு .

  2. இவர் செல்வந்தரே .

  3. திருமணம் ஆகி மனைவியை வேலை நிமித்தமாகப்
  பிரிந்து இருப்பவர்.

  4. அடிக்கடி வேலையை மாற்றுபவர் .
  அப்போது தற்காலிகமாக வேலையின்றி இருக்கலாம்.

  ReplyDelete
 20. 1. பட்டப் படிப்பு படித்தவரா அல்லது பட்டப் படிப்பு படிக்காதவரா?
  Lagna god and 4th house god in good position.

  Mercury period start at age of 3 to 21.
  so he wil be very intellectual person.

  2. ஜாதகர் ஏழையா? அல்லது நடுத்தரப் பணக்காரரா? அல்லது

  செல்வந்தரா?
  Normal person. becoz 2nd house god is in 10 house.
  So if he will get money if he works.


  3. திருமணம் ஆனவரா அல்லது திருமணம் ஆகாதவரா?
  At the age of 29, venus dasa starts and venus in

  his own house with neecha bangu raja yogam of

  saturn & sun. So he may have good marriage life.
  4. வேலையில் இருப்பவரா அல்லது வேலை எதுவும் செய்யாமல்

  சுகஜீவனத் துடன் இருப்பவரா?

  10 house lord is guru(in better position). Logna god also
  looking 10th house and Moon is in 10 house.
  so he will be doing job related to
  public service, traveling or marine.

  Sir... correct me If i am wrong

  ReplyDelete
 21. 1. பட்டப் படிப்பு படித்தவரா அல்லது பட்டப் படிப்பு படிக்காதவரா?

  பட்டப் படிப்பு படித்தவர்
  2. ஜாதகர் ஏழையா? அல்லது நடுத்தரப் பணக்காரரா? அல்லது செல்வந்தரா?

  நடுத்தரப் பணக்காரர்

  3. திருமணம் ஆனவரா அல்லது திருமணம் ஆகாதவரா?

  திருமணம் ஆகாதவர்

  4. வேலையில் இருப்பவரா அல்லது வேலை எதுவும் செய்யாமல் சுகஜீவனத் துடன் இருப்பவரா?

  சுகஜீவனத்துடன் வேலை இல்லாதவர்.

  ReplyDelete
 22. 1. பட்டப் படிப்பு படித்தவரா அல்லது பட்டப் படிப்பு படிக்காதவரா?
  பெரிய அறிவாளி, ஆனால் பட்டம் வாங்கவில்லை.

  2. ஜாதகர் ஏழையா? அல்லது நடுத்தரப் பணக்காரரா? அல்லது செல்வந்தரா?
  அவரிடம் இருக்கும் அளவு பணம் உலகில் வேறு யாரிடமும் இல்லை.

  3. திருமணம் ஆனவரா அல்லது திருமணம் ஆகாதவரா?
  திருமணமாகி இருபது ஆண்டு நிறைவு விரைவில் , இரண்டு பெண் ஒரு மகன்

  4. வேலையில் இருப்பவரா அல்லது வேலை எதுவும் செய்யாமல் சுகஜீவனத் துடன் இருப்பவரா?
  பல பேருக்கு வேலை கொடுப்பவர், ஓய்வெடுத்து சமூக சேவை செய்கிறார்

  ReplyDelete
 23. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
  புதிர் - பகுதி 3 உண்மையில் வித்தியாசமாக இருந்தது.
  மிதுன லக்கினம், மீன ராசியில் 1955 ஆம் வருடம் அக்டோபர் 28 இல் இரவு சுமார் 11.00 மணிக்குப் பிறந்த இந்த ஜாதகர் ஓர் ஆண். ஜோதிடத்தை நன்கு அறிந்தவராக இருப்பார். பட்டப் படிப்பு தடைப் பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் சொத்து சுகம் வாகன வசதியுடன் வசதியான வாழ்க்கை உடையவர். கலை மற்றும் இசையில் ஆர்வம் உடையவர்.
  சந்திரன் பத்தில் அமர்ந்திருப்பதால் சொந்த தொழில் செய்ய வாய்ப்பு உண்டு. திருமணம் ஆனவர். இப்போது சூரிய தசையில் ராகு புத்தி நடந்து கொண்டிருக்கிறது.

  ReplyDelete
 24. Dear Sir,

  The person might have studied good, since 4th lord in 4th. but jupiter in 3rd with mandhi. and in 5th place sun with saturn. Hence he could not study properly. He may not study degree.

  Since 11th lord in 5th along with saturn utcham, its good. but 3rd lord and 12th lord join with them. hence he will loose all his wealth by simply sitting only.

  7th lord is with mandhi and in 3rd. hence he is not married.

  10th lord is with mandhi and in 3rd. hence he will not work. He will enjoy his own property and spend the money.

  Thanking you sir.

  ReplyDelete
 25. இது உலக புகழ் பில் கேட்ஸ் அவர்களின் ஜாதகம் .
  அவரை பற்றி சொல்லவும் வேண்டுமா ?
  அவர் இருக்கும் ஊரில் வசிக்கும் வாய்ப்பு நமக்கு.
  ஆதலால் நீங்கள் கேட்ட கேள்விகளை ignore செய்து விட்டு ஜாதகரின் பெயரை மட்டும் கொடுத்துள்ளேன்.-Kalai

  ReplyDelete
 26. அய்யா நான் பாஸா என்று அறிய ஆவலுடன் உள்ளேன். வாத்தியார் வாயால் "நல்லா படிக்கிற" என்று கேட்க /பார்க்க ஆசை படுகிறேன் .-kalai

  ReplyDelete
 27. Sir,
  1.the native would have not completed his degree.
  Reason: Though bhuthan is ucham it is accompanied with sevai(mars) so he may started his education but may not be completed.Also he is clever which didn't help to complete his education.
  2.the native is Rich
  Reason : 4th lord is ucham(happy life).Ragu in 6th house also ucham.pooriva punniyam sani ucham also in neecha bhanga rajayogam So property will be there for him.
  3.The native is unmarried
  Reason: 7th lord guru hidden in 3rd place & kalathirakaragan sukran is in pabathkariyogam.Also mars in 4th house.
  4. He is neither working nor doing business but he will enjoy life with vehicles, house etc.
  Reason:10 il chandran thanithu irrukum nilamai no other planets nearby.Also 10th lord antha veetku 6il marainthu ullathu. Since lagna lord & 4th lord sugasthanam bhuthan is ucham. There will property for him from his ancestors or by any means.

  Sir i have analysed as much as i can but am not that sure in answers which i have written. As i dont know the date of birth and time correctly i couldn't find the planets nearby sun are asthangam or not. Is there anyway to find those.

  ReplyDelete
 28. 1.லக்னாதிபதி 4 ல் உச்சம் கல்விக்காரன் புதனாக இருப்பதால் படித்தவராக இருக்கவேண்டும்.
  2. இரண்டாம் அதிபதியும் பதினொன்றாம் அதிபதியும் சம்பந்தம் (நேர் பார்வையில்) இருப்பதால் செல்வந்தராக இருக்க வேண்டும்.
  3. ஏழாம் வீட்டை ஏழாம் அதிபதியே (குரு) பார்ப்பதாலும்.சுக்கிரனும் ஆட்சியில் இருப்பதாலும் திருமனம் நடந்திருக்க வேண்டும்.
  4. அத்தனை எளிதில் கனிக்க தெரியவில்லை , சுக வாசியாக இருக்கலாம் என தெரிகிறது.

  ReplyDelete
 29. குரு வணக்கம் :
  Quiz -3 Answer:
  28-oct 1955
  1.திருமணம் ஆனவர்
  2.தொழிலதிபர் (கர்மகாரகன் சனி உச்சம்)
  3.ஊலகபுகழ் பெற்றவர் (உச்ச லக்னாதிபதி)
  4.மறுபிறப்பு இல்லாதவர் (கேது 12)
  5.6ல் ராகு, எதிரிகளை தோற்கடித்து வெற்றி கண்டவர்)
  அவர்தான் - பில் கேட்ஸ்

  நன்றி
  ramadu

  ReplyDelete
 30. லக்கினாதிபதி புதன் சுகஸ்தானமாகிய 4ல் உச்சம். 5ல் நீசபங்கராஜயோகம் உள்ளது. 7ம், 10ம் அதிபதி குரு 3ல் அமந்து 7ம் வீட்டை தனது பார்வையில் வைத்திருக்கிறார். 5ம் அதிபதி சுக்கிரன் அங்கு ஆட்சி பலத்துடன் இருக்கிறார். 6ல் ராகு சட்டராகு. 12ல் கேது (மறுபிறப்பில்லை போலும்)

  ஆக

  ஜாதகர் ஒரு செல்வந்தர். பட்டப்படிப்பு படித்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது(சந்தேகமாக இருக்கிறது). திருமணம் ஆனவர் அநேகமாக சுக்கிரதிசையில் நடந்திருக்கலாம். நல்ல வேலையில் இருக்கிறார்.

  ReplyDelete
 31. இது போன்ற கேள்விகள் மிகவும் பயனுள்ளதுடன், அலசும் ஆற்றலை சுய பரிசோதனை செய்வதுடன், சிறந்த அனுபவத்தையும் தருகிறது.

  கனம் தங்கிய ஆசானே,
  இதுபோன்ற அதிக வினாக்களை எதிர் பார்க்கிறோம்.....

  ReplyDelete
 32. இந்த கேள்விகளைப் பார்த்தவுடன் எனக்கு selective memory loss ஆகி விட்டது. படித்த ஜோதிட விதிகள் மட்டும் மறந்து விட்டது. Just joking

  1) வித்யாகாரகன் புதன் கல்விஸ்தானமான 4ல் ஆட்சி/உச்சமாக இருப்பதால் ஜாதகர் பட்டப் படிப்பு படித்தவராக இருக்க வேண்டும். பொறியியல் கல்வி அமையும் வாய்ப்பு உண்டு. 4 வயதிலிருந்து 21 வயது வரை புதன் தசை. கல்வியில் தடை ஏற்படுத்தியிருக்கமாட்டார்.

  2) 2க்குரிய சந்திரன், 11க்குரிய செவ்வாய் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். தன யோக ஜாதகம். இவர் பெரும் செல்வந்தராக இருக்க வேண்டும்.

  3) 7க்குரிய குரு 7ம் இடத்தைப் பார்ப்பதால் திருமணம் ஆகி இருக்கும் என்று சொன்னாலும் அவர் மாந்தியுடன் இருப்பதும், களத்திரகாரகன் சுக்கிரன் பாப கிரகங்களுடன் பாப கர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டு இருப்பதும் திருமணத்திற்கு தடை செய்யும் அமைப்பு.

  4) 10ல் வளர்பிறச் சந்திரன் ஆற்றலுக்கு காரகரான செவ்வாயின் பார்வையில் இருப்பது தொழில் அமைய நல்ல கிரக நிலைகள். சிறந்த நிர்வாகி எனலாம்.

  சரியான விடை சொன்னால் சன்மானம் உண்டா. எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவுக்கு குறைத்து கொடுத்தால் போதும்

  ReplyDelete
 33. 1.aalu yaara erunthaa namakkenna? namakku jathagamnthaan mukkiyam.
  2.nangu padiththavar
  3.nalla vasathiyanavar
  4.thirumanam aanavar
  5.suga jeevanam seybavar.

  ReplyDelete
 34. vaNakkam sir..
  Ans 1)
  education ruled by house 4 - lord budhan- exalted there. along with lord of 6th house. 6th house is for sickness. hence my guess is his studies were graduation and could not pursue higher education because of ill health.
  Ans 2)lagna lord in 4th house and 2nd lord in 10th house - his parents would have been well off and would have set up a business for him. but since 6th lord is in 4th and looking at 10th house , he would be dissatisfied in his work, leading to constant change in work.also , sagada yoga jathagam- so finance would be up and down. 10th lord in 3 suggests self made wealth. though maandi there means not much high wealth.
  Ans 3)
  mars in 4 - sevvai dhosham. 7th lord in 3 with maandi - Saturn sees 7th house- probably very late marriage rather than no marriage , as karagan sukran is ucham.have to check navamsa for more confirmation
  Ans 4)
  as in ans 2 , 2nd lord in 10th and 10th lord in 3,exalted lagna lord views 10th house suggest self owned business.
  Hope im not entirely wrong.. Thank u sir..good question.

  ReplyDelete
 35. 1.நான்காம் இடத்தில் புதன் உச்சத்தில் இருந்தாலும்,அவருடன் செவ்வாய் இருந்ததால் படிப்புக்குத் தடைகள் இருந்திருக்கும்.நான்காம் இடத்திற்கு நான்காம் இடம்குருவினுடையது. குரு மாந்தியுடன் சேர்ந்ததால் படிப்புக்குத் தடை. கல்லூரிவரை சென்று பட்டப்படிப்பு முடிக்காமல் வெளியேறியிருக்கலாம்.

  2.6ம் இடத்து ராகு, இரண்டுக் குடைய சந்திரன் பத்தாம் இடத்தில் கேந்திரம் ஏறியது,9க்குடைய சனிபகவான் 5ல் உச்சம், சுக்கிரன் ஆட்சியில்.....
  ஜாதகர் பணத்தை மெத்தையில் வைத்துத் தைத்து அதன் மீதுபடுப்பார்.பெரும் பணக்காரர்.

  3.7ம் இடத்திற்கு குருபார்வை. 3ல் குரு, 11ம் இடத்திற்கு குருபார்வை.திருமணத் தடை ஏதும் இல்லை. திருமணம் காலாகாலத்தில் நடந்திருக்கும்.

  4. சனி உச்சத்தில் இருப்பதால் பெரிய கம்பெனியை நிர்வகிக்கக் கூடியவர். புதன் உச்சம்,மூலத்திருகோணம், லாபஸ்தானத்திற்கு குருபார்வை, பெரிய பிஸினெஸ் மாக்னெட்.

  மேலே உள்ளதை டைப் செய்துவிட்டு பிறந்த நாளைக் கணக்கிட்டேன்.
  28 அக்டோபெர் 1955 இரவு பத்துமணிக்குப் பிறந்தவர்.விக்கியை யார் என்று கேட்டேன் .
  அட! நம்ம பில்கேட்ஸ்!!!!!!

  ReplyDelete
 36. வணக்கம் ஐயா,
  1. லக்னாதிபதியும்,4ம் அதிபதியுமான புதன்,11ம் அதிபதியுடன் சுகஸ்தானமான 4ல் உச்சம் பெற்றுள்ளது,ஜாதகர் பெயர்,புகழ்,செல்வம் அனைத்தையும் பெற்றிருக்க வாய்ப்புள்ளது.
  2. 4ம்,5ம்,அதிபதிகளான புதனும்,சுக்கிரனும்,ஆட்சி பலம் பெற்றுள்ளனர்,மேலும் மேல் படிப்பிற்கான 5ம்வீட்டில் சூரியனும்,சனியும் நீச பங்க ராஜ யோகத்தில் உள்ளனர்,4ம்வீட்டு அதிபதி சந்திரனின் பார்வை பெற்றுள்ளார்.4,5ம் வீடுக்ள் பலம் பெற்றுள்ளதால் அவர் பட்டப்படிப்பு படிக்க வாய்ப்புகள் உள்ளது.
  3. 7ம் அதிபதி குரு 3ல் மாந்தியுடன் அமர்ந்துள்ளார்,அவர் அமர்ந்துள்ள வீட்டின் அதிபதி 5ல் நீசம்,என்றாலும் தன் வீட்டை தன் பார்வையில் வைத்துள்ளார். மேலும் குரு 7,9,11ம் வீடுகளையும் பார்வையில் வைத்துள்ளது சிற்ப்பு.எனவே திருமணத்திற்குப்பின் 12ல் இருக்கும் கேது,மற்றும் தனித்திருக்கும் சந்திரனால் அவர் குடும்பவாழ்க்கையை துறந்து ஞானி ஆகி இருக்கலாம்.
  4. 10மதிபதி குரு 3ல்,சனிபகவான் 5ல் உச்சம்,10ல் சந்திரன்,ஜாதகர் மதம்,போதித்தல்,மக்களை வழி நடத்துவது போன்ற துறையில் உச்சத்தில் இருக்க வாய்ப்புள்ளது.

  ஐயா சரியா,தவறா என்று தெரியாது, தேர்வில் நானும் பங்கு கொண்டேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி ஐயா.

  ReplyDelete
 37. This person must be studied well. Because Budhan is in Uccham.

  This person married as well. Because Guru is looking 7th house by 5th look.
  Ayya,


  Please find my answers.

  This person is going for work. Because 2nd house owner is sitting 10 th house. That too 10th is 9th house from second house. Even Shani is ucham.

  By doing work, he has accumulated lot of wealth. Since Moon is king planer like Sun.

  Your Student,
  Ravi

  ReplyDelete
 38. Gurji as per my understanding
  1) lagnathipathi budha in 4th position wasing moon. so he is well educated. also labathipathi mars with lagnakara waxing moon. so he would get good money with his writing. also moon in 10th position says he will be poletition.
  2) 9th lord sani uccha in 5th positon with 5th lord. so he will be born rich.
  3) he is 7th lord jupiter in 3rh position with mandhi and waxing his own house. venus in 5th positon with saturn and sun, which designates he will marry vary late or me will not have family life.
  4) his 10th lord jupiter in 3rd with mandi and waxing moon giving gaja-kesari yoga. 11th lord mars and lagnathipathi budha waxing 10th house indicates he will earn by writing/speech (may be poletecian) and will have high influence in public and earn more and live a lucarative life.

  Is this correct Guruji.

  ReplyDelete
 39. லக்னாதிபதி, 4ம் அதிபதி, 4லில் உச்சம். நல்ல படிப்பு இருக்கும்.

  11ம் அதிபதி, 4லில் அமர்ந்து 2ம் அதிபதி, 11ஐ பார்க்கிறார் செல்வந்தராக இருப்பார்.

  திருமணம் ஆகாமல் இருக்கிறார். 7ம் அதிபதி, 3லில் மாந்தியுடன். சனி 2ம் வீட்டை பார்க்கிறார்.

  லக்கினாதிபதி, 11ம் அதிபதி, 10ம் வீட்டை பார்வை. 10ம் வீட்டில், 2ம் அதிபதி. வேலை இருக்கும்.

  ReplyDelete
 40. புதிர் பகுதி 3 விடைகள்

  1.பட்டபடிப்பு படித்தவர்
  2.செல்வந்தர்
  3.திருமணம் ஆனவர் (இரு குழந்தைகள்)
  4.வேலை செய்கின்றவர்

  ReplyDelete
 41. 1) Budhan - Lord of education, Here - Laknadhipathi, Lord of 4th place(again education) - aatchi & ucham with 11th Lord Mars.
  Also Budhan dhasa period during 16~33rd Age - Give good results in education.
  Conclusion : Defenitely Higher education - Post graduate level ( I have doubt about Kendra aadhibathya dhosham only)

  2) 5th place - Poorva punniyasthanam is strong. Yogathipathy Sani Ucham, 5th Lord Sukran in Own house with Sun.
  2nd Lord in 10th House - Good money through profession(Businessman!!!)
  Conclusion : Selvandhar(Highly Rich)

  3) 7th Lord - Guru in 3rd place and looking his place. Sukiran in 5th place - Aatchi.
  2nd lord Moon in 10th house under Laknathipathy&labathibathy's direct visiblity.
  Birth year 1954~1956, now 59 yrs old approx. Marriage possiblity in Budhan thasa - Guru puthy.
  Conclusion : Happy married life.

  4) 10th Lord Guru in 3rd House, 2nd Lord Moon in 10th House, 10th House is under Laknathipathy & Labathipathy.
  Conclusion : Business man!!!

  ReplyDelete
 42. 1. பட்டப் படிப்பு படித்தவரா அல்லது பட்டப் படிப்பு படிக்காதவரா?
  budhan achi petru 4 am idathil ullar.athanudan 2am athipathi yana chandiran parvai vizukirathu kandipaaga arivaali thaan . chevvai theeya grhaam athalal konajam doubt aga ullathu.
  2. ஜாதகர் ஏழையா? அல்லது நடுத்தரப் பணக்காரரா? அல்லது செல்வந்தரா?
  kandipaaga panakaarara thaan irrukka vendum .2am athipathiyum 10 aam athipathyum kendram petru nala nilayil ullanar.antha irandu perum paarvai pargaaram veru ullathu sirrapu.
  3. திருமணம் ஆனவரா அல்லது திருமணம் ஆகாதவரா?
  sukran theeya grhathin mathiyil sikkiyullathu aanalum 7am athipathi guru avar idathya parpathal nichayam thirumanam ananvar thaan late marriage aaga irrukalam.
  4. வேலையில் இருப்பவரா அல்லது வேலை எதுவும் செய்யாமல் சுகஜீவனத் துடன் இருப்பவரா?
  patham athipathi guru 3 il ulathal ezuthu thurai sampantha patavaraga irrukavendum.chandiran pathil ullathal sakala kala valaraga irruka vendum . thayavu koornthu pizhai irrunthal manithu lollungal.

  ReplyDelete
 43. ஹும்! கவுண்டமணியெல்லாம் பொன்மொழி உதிர்க்க ஆரம்பிச்சாச்சா? விளங்கின மாதிரிதான்!

  ஓஷோவிலிருந்து கவுண்டமணிக்கு அடிச்ச'டைவ்' இருக்கே, காணக் கண் கோடி வேண்டும்.

  ஹி ஹி ஹி ஹிஹ்ஹ்ஹ்ஹி!

  ReplyDelete
 44. BUDAN UCHAM SO PATTAM PETRAVAR MIDDILE CLASS

  ReplyDelete
 45. Ayya,

  This person must be studied well. Because Budhan is in Uccham.

  This person married as well. Because Guru is looking 7th house by 5th look.

  This person is going for work. Because 2nd house owner is sitting 10 th house. That too 10th is 9th house from second house. Even Shani is ucham.

  By doing work, he has accumulated lot of wealth. Since Moon is king planer like Sun.


  Your Student,
  Trichy Ravi

  ReplyDelete
 46. Ayya...He is a school drop-out.
  He is the found of microsoft corporation. He is married to Ms.Melinda gates . He was the number one richest man until few years back.
  now he holds the position of 2nd richestman in the world.He is having three children. He is known for his charity works too.

  ReplyDelete
 47. and He is none other than Mr.Bill Gates..ayya.

  ReplyDelete
 48. 1. Patta padippu padithvar.
  2. Panakarar
  3. Thirumanam agathavar (7kku uriyan maanthiyudan maraivu sthanathil)
  4. Thozhilil iruppavar. Thozhil moolam varumanam vara petravar.

  Regards,
  Saravanakumar
  Colombo

  ReplyDelete
 49. Saturn in 5th house, debilitated sun in 5th house and Venus in 5th house caused lack of education. So no chance for education

  The person of this horoscope is very rich. the reason is Lagna lord exalted in 4th house (kendra) along with 11th lord in the direct aspect of 2nd lord placed in 10th house.

  Venus/saturn combination in 5th house gives good married life

  The person will not be in job. The reason is 10th lord Jupiter is in 3rd house.

  The horoscope is Bill Gates Horoscope  ReplyDelete
 50. Good Morning Sir
  I found the owner of the chard and realized how many questions have right answer. Need to learn a LOT more...

  ReplyDelete
 51. திரு.கே.எம்.ஆர்.கிருட்டிணன் அவர்கள் கூறியது போல இது பில் கேட்ஸ் ஜாதகமாக இருக்கலாம். நம்ம ஊர் இந்திரா நூயியும் அதே தேதியில் பிறந்தவர்தான். ஆனால் வேறு நேரமாக இருக்கலாம். ஆனால் இருவருக்குமே பிரமாதமாக வாழ்க்கை அமைந்திருக்கிறது. அன்றைய தேதியில் பிறந்தவர்கள் பெரும்பாலானோருக்கு நன்றாக வாழ்க்கை அமைய வாய்ப்பிருக்கிறது போலும். வாத்தியார் அவர்கள் இந்த ஜாதகத்தையும் அலசி, எதனால் அதே தேதியில் பிறந்த மற்றொருவருக்கு பட்டப்படிப்பும் தலைமை பதவியும் இன்னொருவருக்கு அது கிடைக்காமல் போனாலும் ஒரு பெரிய நிறுவனத்தை நிறுவும் வாய்ப்பும் அதன் மூலம் பெரும் செல்வமும் கிடைக்க வாய்ப்பு வந்தது என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும். எப்படி இருந்தாலும் இந்த இருவருமே புண்ணியம் செய்தவர்களே.

  ReplyDelete
 52. ///kmr.krishnan said...
  ஹும்! கவுண்டமணியெல்லாம் பொன்மொழி உதிர்க்க ஆரம்பிச்சாச்சா? விளங்கின மாதிரிதான்!

  ஓஷோவிலிருந்து கவுண்டமணிக்கு அடிச்ச'டைவ்' இருக்கே, காணக் கண் கோடி வேண்டும். ///

  சொல்வது யார் என்பதை விட
  சொன்னது யார் என்பது தான் முக்கியம்

  கவுண்டமனி சொன்ன வசனம்
  பெர்னாட்ஷா சொன்ன மொழி

  இப்படித்தான் சிலர்
  எனக்கு மட்டுமே தெரியும்

  நான் தான் அறிவாளி என
  தன்னை வியந்து இருப்பார்கள்

  வெண்மை எனப்படுவது என
  வள்ளுவம் சொல்கேட்டு

  மெல்ல நகைக்க வேண்டியது தான்
  மெதுவாக அவர்கள் மாறும் வரை

  ReplyDelete
 53. /கவுண்டமனி சொன்ன வசனம்
  பெர்னாட்ஷா சொன்ன மொழி//

  அப்புறம் ஏன் கவுண்டமணி படம்? குறைந்தபட்சம் கவுண்டமணி 'அப்படின்னு பெர்னாட்ஷா சொல்றாருங்கோ' என்றாவது வசனம் பேசியிருக்க வேண்டும்.
  என்னமோ கவுண்டரே உதிர்க்கிற மாதிரி போடுவானேன். என்னைக் கரித்துக்கொட்டுவானேன்?

  அவர் இதைச்சொன்னார், இவர் அதைச் சொன்னார்' என்பதை விடுத்து நீங்கள் கொண்டுள்ள சொந்த‌ அபிப்பிராயங்களைச் சொல்லுங்கள்.எல்லோருடைய அபிப்பிராயங்களும் விமர்சனத்திற்கு உட்பட்ட‌வையே. தேவையென்றால் விமர்சிப்போம். நன்றாக இருந்தால் பாராட்டுவோம்.

  ReplyDelete
 54. we do not want to see any other thing in this jatakam. whenever a person minutely escapes from kalasarpa dosham that person will be in very powerfull and influential position. but the family life of the person will not be that much good.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com