மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

31.7.13

Astrology: கைய கட்டி நிக்கச் சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது!

 

Astrology: கைய கட்டி நிக்கச் சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது!

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது


என்றொரு பாடல் உண்டு. மிகவும் பிரபலமான பாடல். அந்தப்பாடலை சற்று மாற்றி நம் வகுப்பறைப் பாடத்திற்குத் தகுந்த மாதிரி மாற்றினால் இப்படி எழுதலாம்:

துன்பம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
விதியின் கதை இது


எல்லோரும் விரும்புவது துன்பம், கஷ்டம் இரண்டும் இல்லாத வாழ்க்கை. நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை. அது எல்லோருக்கும் அமையுமா என்றால் அமையாது. ஒரு பத்து சதவிகிதம் பேருக்கு ஒரு வேளை அது போன்று அமையலாம். ஆனால் அது தொடர்ந்து அப்படியே நிலைத்திருக்குமா என்றால் இருக்காது. அவர்களுக்கும் நேரம் காலம் மாறும்போது அதுவும் மாறும். அதாவது அந்த நிலைமையும் மாறும்.

ஆனால் இன்பத்தையும், துன்பத்தையும் சரிசமமாகப் பாவிப்பவர்கள். எப்போதும், கவலையின்றி இருப்பார்கள். அந்த இரண்டு உணர்வுகளுமே அவர்களை அதிகம் பாதிக்காது. அறிவும், மனமும் தெளிவாக இருப்பவர்களுக்கு அது சாத்தியமே! அந்த நிலைப்பாடு சாத்தியமே!

நாம் சும்மா இருந்தாலும், நமது நேரம் நம்மைச் சும்மா இருக்க விடாது.

அதைத்தான் கிராமத்தில் உள்ளவர்கள் இப்படிச் சொல்வார்கள். அதிர்ஷ்டம் கடிதத்தில் வரும். தரித்திரம் தந்தியில் வரும்’ இப்போது தந்தி கிடையாது. அதனால் அதை இப்படிச் சொல்லலாம். தரித்திரம் எஸ்.எம்.எஸ்ஸில் (S.M.S) வரும்.
--------------------------------------------------------------------------------------
6ஆம் வீடும், 8ம் வீடும், 12ஆம் வீடும் தீய வீடுகளாகும். விளக்கமாகச் சொன்னால் துன்பத்திற்கும் கஷ்டத்திற்கும் உரிய வீடுகளாகும். 3ஆம் வீடும் தீய வீடுதான். ஆனால் குறைந்த அளவே பாதிப்புக்களைக் கொடுக்கும் வீடாகும். அந்த வீடுகள் (6, 8 & 12ஆம் வீடுகள்) நமது பொருளாதாரத்திற்கும், நிம்மதிக்கும் வேட்டு வைக்கும் வீடுகளாகும். அந்த வீட்டில் அமர்ந்திருப் பவர்களும், அந்த வீட்டிற்கு உரியவர்களும் தங்கள் தசாபுத்திகளில் வலிகளைக் கொடுக்கக்கூடியவர்கள்.

அந்த வீட்டில் அமர்ந்திருப்பவர்கள், அல்லது அந்த வீட்டிற்கு உரியவர்கள் உச்சம் பெற்றிருந்தாலோ அல்லது ஆட்சி பலம் பெற்றிருந்தாலோ பாதிப்புக்கள் இருக்காது. அல்லது குறைவாக இருக்கும். அத்துடன் வரும் கஷ்டங்களைப் போக்கும் சக்தியை அல்லது தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர்கள் கொடுப்பார்கள்

6ஆம் வீடு தடைகள், நோய்கள், விபத்துக்கள். எதிரிகள், கடன்கள் என்று உபத்திரவப்படுத்தும். நன்றாக இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட தசாபுத்தி உபத்திரவமாக இருக்கும்.

8ஆம் வீடு கஷ்டங்கள், எதிர்மறையான விளைவுகள், மன அழுத்தங்கள், மரணம் போன்ற கொடுமைகளை உண்டாக்கும்

12ஆம் வீடு, விரையம் (Losses) பிரிவுகள்,  வேண்டாத முடிவுகளை, வேண்டாத விளைவுகளை உண்டாக்கும்.பல ஏமாற்றங்களை, துரோகங்களைச் சந்திக்க வைக்கும்!

அவைகளால் நொந்து போகாமல், நம்மைப் புடம் போட்டு, மேன்மைப் படுத்தும் வீடுகள் அவைகள் என்று அவற்றையும் நாம் நேசிக்க வேண்டும்.

’கையைக் கட்டி நிக்கச் சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது’ என்று ஒரு கவிஞன் சொன்ன வரியை நினைவில் கொண்டு,  எந்த வெள்ளம் வந்தாலும் நீந்திக் கரை சேரும் சக்தி நமக்கு வேண்டும். வெள்ளத்தோடு வெள்ளமாகப் போய்ச் சேர்ந்து விடக்கூடாது.

அதுபோன்ற சமயங்களில் மனம் உருகி இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். நீந்திக் கரை சேரும் வலிமையை அவர் கொடுப்பார்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

26 comments:

paulsam said...

அய்யா பாடம் அருமை.ஒரு சந்தேகம் அய்யா.3ம் வீடும் தீய வீடென்றால் உதாரணமாக 3ம் வீட்டில் 6,9க்குரிய குரு இருந்தால் அது தீமையா?,நன்மையா?.ஏனென்றால் 3ல் இருந்து குரு பகவான் 7,9,11ம் இடத்தை பார்வை செய்கிறார் அல்லவா.சற்று விளக்கவும் அய்யா.

துரை செல்வராஜூ said...

வணக்கம் ஐயா!..இனிய காலைப் பொழுது. எல்லாருக்கும் இனிய நாளாக அமையட்டும்!..

Anonymous said...

good morning sir..

G Alasiam said...

ஆறு எட்டுப் பன்னிரெண்டு - திசையது
தாரும் அனுபவ வாழ்வினை என்று
கூறும் அற்புதப் பாட மொன்று; எளிதினில்
யாரும் புரிந்திட நன்று!

ஆறுக்கு உரியவனவன் ஆட்சிபெற்றே -அவ்வீட்டிற்கு
ஆறில் அமர்ந்தான் அவன் -இருந்தும்
அருகில் அமர்ந்த தலை குருவினால்
ஆறுதல் தந்து காத்தா னவன்
ஆறுவயதில் வந்தவன் எனை வாழ்வெனும்
ஆற்றில் ஆழ்த்தி அமுக்கி படுத்தினாலும்
ஆறுதலாக கடைசியில் ஆனந்த வாழ்வை
ஆரம்பித்தே ஆரம்தனையும் தந்தவன் -அசுரரின்
ஆருயிரான குருவே ஆவானவன்.

எட்டிற்கு உரியவன் அவன் ஜாதகத்தில்
ஷட்பலம் மிகுந்த வளர்பிறையோன்
மட்டற்ற இடமான ஐந்தில் அமர்ந்தவன்
பற்றறுக்கும் சனியொடு பாங்குடனே திகழ்ந்தானவன்
குற்றமில்லா சனியவன் நீசபங்கம் அடைந்தாலும்
ஏற்றமிகு இரு குருக்களின் ஏழாம்பார்வையில்
சீற்றமுடன் செம்மை செய்தாரே என்பேனான்
முற்பாதி மூச்சிரைக்க ஓடவிட்ட சந்திரனோ
பிற்பாதியில் என்னை பெரும் வாழ்வில்
சிறப்புடனே சேர்த்தும் விட்டான்

பன்னிரெண்டிற்கு உரியவன் அவனே - பூர்வ
புண்ணிய ஸ்தானத்திற்கும் உரியவன் அவன்
மேன்மையான இரண்டில் உட்சம் பெற்றான்
உண்மை நாயகன் சனியொடு பரிவர்த்தனையில்
திண்மையுடன் வளம் வருகிறான் - அந்த
செந்நிற நாயகன் செவ்வாயெனும் பேரரசன்
புண்ணிய பாவங்கள் சேர்ந்தது போல்
பண்ணிய புண்ணியத்திற்கு நற்பலனையும்
கண்ணியமில்லாப் பாவத்திற்கு பரிகாரமாக
என்னளவில் தாங்கும் வண்ணம் சிற்சில
வண்ண வண்ணச் செலவுகளை வலியில்லாமல்
எண்ணமது செம்மையுற எனக்கு அளித்து
தண்மையான திசையாகத் தவழ்ந்தது போகுதுவே...

எனத னுபவம் கூறிவிட்டேன் இருந்தும்
தனத னுபவம் வேறாகும் என்றபவருக்கு
எமது கருத்தது என்ன வென்றால்
பொதுப் பலன்கள் இவைகள்தாம் -அதனால்
தமது ஜாதகத்தின் நிலை கண்டு
வாத்தியாரின் பாடம் கூறும் - இந்த
நேர்த்தியான சாரமதை புரிந் ததன்
சீர்தூக்கி நேர்படுத்து வீரே!

புதன்கிழமை இன்ற தனால் எனக்குள்ளே
புதுக் கவிதைப் பிறந்தது -யாம்
அறுப்பது இவ்வேளையில் நண்பர்களே - எனை
பொறுப்பது உமது கடனே

பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

Sattur Karthi said...

Good Morning Sir!

eswari sekar said...

vanakamsir

DevikaArul said...

ஐயா வணக்கம்..
மாத முற்பகுதியில் ( 8, 9 ஆம்தேதி) அக்னம் பற்றி சொல்லி தருகிறேன் என்று சொன்னீர்களே.. முதல் பகுதிக்கு அப்புறம் எழுதவே இல்லையே.. அடுத்த பாகம் எப்போது ?
ஆவலாய் இருக்கிறது.

Muthukrishnan Prakash said...

ayya,

6m veettathiban guru (kataga lagnam) 5il (viruchigam) irundhal matrum 8m veettathiban sani 11il (rishabam) udan chandranudan irundhal eppadi palan eduthukkolvadhu.

Thanks,

Mu.Prakaash

raja said...

வணக்கம் ஐயா,

நல்லபதிவு.... இதே 6,8,12க்கு ஊரியவர்களோ அல்லது அந்த(6,8,12 ல்)அமர்ந்திருபவர்களோ.....நல்லபாவதில் பரிவர்த்தனை(4 <--> 12 , 5 <--> 12) ஆகும்போது நிலையில் மாற்றம் காணப்படும ஐயா....


நன்றி,
ராஜா

ravichandran said...

Respected Sir,

Happy morning.. welcome back from chennai...

Have a great day.. G. Alasiam's poem is good.

With kind regards,
Ravi

Kalai Rajan said...

அய்யா
வலையின் முகப்பு மாறி விட்டதே.

Ak Ananth said...

//6ஆம் வீடு தடைகள், நோய்கள், விபத்துக்கள். எதிரிகள், கடன்கள் என்று உபத்திரவப்படுத்தும். நன்றாக இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட தசாபுத்தி உபத்திரவமாக இருக்கும்.

8ஆம் வீடு கஷ்டங்கள், எதிர்மறையான விளைவுகள், மன அழுத்தங்கள், மரணம் போன்ற கொடுமைகளை உண்டாக்கும்

12ஆம் வீடு, விரையம் (Losses) பிரிவுகள், வேண்டாத முடிவுகளை, வேண்டாத விளைவுகளை உண்டாக்கும்.பல ஏமாற்றங்களை, துரோகங்களைச் சந்திக்க வைக்கும்//

என் கருத்து என்னவென்றால் மரணம் என்பது கொடுமையல்ல. மேலே சொன்ன எல்லா துன்பங்ளிடமிருந்தும் நமக்கும் கிடைக்கும் விடுதலை.

Ak Ananth said...

ஆலாசியம் அவர்கள் கவிதையிலேயே தன் ஜாதகத்தைப் பற்றி தெரிவித்து விட்டார். தனுசு லக்கினம், செவ்வாய் 2ல், சனி, சந்திரன் 5ல், குரு சுக்கிரன் 11ல், 6 வயதில் சுக்கிர தசை ஆரம்பித்து இப்போது நடப்பது செவ்வாய் தசை. மற்ற கிரகங்கள் எங்கிருக்கின்றன என்று சொல்லவில்லையே. அவசியப் படவில்லை என்கிறீர்களோ.

G Alasiam said...

///அய்யா
வலையின் முகப்பு மாறி விட்டதே.///

ஆமாம், உண்மையில் நன்றாக இருக்கிறது... அதிலே மாணவர்கள் சற்று வளர்ந்திருப்பதையும் கண்பித்து இருக்கிறீர்கள் ஐயா.

/// மற்ற கிரகங்கள் எங்கிருக்கின்றன என்று சொல்லவில்லையே. அவசியப் படவில்லை என்கிறீர்களோ////
தாங்களும் கவிதைப் பிரியர் என்பதை அறிவேன்!
மற்ற கிரகங்களை அதிகப் படியானைத் தகவல்கள் மேலும் நீண்ட பின்னூட்டம் என்று வாத்தியார் ஐயா செல்லமா வேண்டாமே என்னும் படி கூறுவார் என்பதால்...

இருந்தும் அதையும் கூறுகிறேன். மூன்றில் ராகு, ஆக ஒன்பதில் கேது அந்த வீட்டிற்கு கேந்திரமான அங்கிருந்து நாளில் சூரியனும் நம்மாழ்வார் புதனும். பொதுவாக மறைவாக இருப்பதாக தெரியும் உள்ளபடியே இவர்கள் இருவரும் முறையே ஆட்சி, உச்சத்தில் நவாம்சத்தில்.

பலன் தூர தேசத்து வாழ்க்கை, எனக்கு எற்ற நல்ல இல்லாள் இருந்தும் கவிதையை சேர்ந்து ரசிக்க அவரின் ரசனை வேறுபட்டு இருக்கும். அது தான் புதனின் இருப்பிட கைங்கரியம். இன்னொன்றும் கூட கலை இலக்கிய ஆர்வம் இருந்தும் அதை வெளிக்கொணர்ந்து பெரிதாக போற்ற அமைப்பு, அவகாசம், வாய்ப்பு.... என்று இவைகள் இருக்கவில்லை இதுவும் அந்த புதனின் வேளைதானோ!..
(பள்ளிப் பருவத்தில் இருந்தது) சுக்கிரன் ஆட்சி (ராசி) உச்சத்தில் (அம்சம்) இருப்பதால் அந்த திசையில் அமைந்ததோ என்று எண்ணுவேன். நான் கூறுவது சரிதானா என்று வாத்தியாரும், நீங்களும் தான் சொல்லணும்...

சர்மா said...

முகப்பு மிக நன்று
பதிவும் காலத்துக்கு ஏற்ற கருத்து மிகுந்த அறிவுரை

manikandan said...

அய்யா, 6,8,12 ஆம் வீடுகலில் அமைர்ந்திருப்பது அல்லது அதபதி, சுப கிரகமாக (குரு,சுக்ரன்) இருந்தாலும், இப்படி தீமைகல் நடகுமா.......?

thozhar pandian said...

கவிதை மிகவும் அருமை ஆலாசியம் அவர்களே. இவ்வளவு அருமையாக உங்களுக்கு கவிதை எழுத வருவதற்கு காரணம், சுக்கிரன் 11ல் ஆட்சியில் இருப்பதாலா? வாழ்க வளமுடன்.

kmr.krishnan said...

கடக லக்னம் கடகராசியான எனக்கு 6க்கு உடையவரே 9க்கும் உடையவர் அதாவது குருஜி!அவ்ர் 7 மகரத்தில் அமர்ந்து நீசம். நவாம்சத்திலும் நீசம். ஆனால் சுயவர்கத்தில் 7 பரல் பெற்றார். ஆகவே எனக்கு குரு பாதியளவாவது நன்மையைச்செய்பவரானார். 8க்கு உரிய சனிபகவானே 7க்கும் உடையவர்.அவரும் பாதி நன்மையைசெய்பவரானார். மேலும் பூச நட்சத்திரம் ஆதலால் சனியின் நட்சத்திரமாக ஆகிவிட்டது.சனி தசாவும் சிறிய வயதில் போய்விட்டது.ஆகவே சனிபகவானால் தொந்திரவு ஏதும் இல்லை.புதன் 3,12க்கு உடையவராகி முழுமையாக ஆகாதவர். 2ல் அமர்ந்து சூரியன், சனியுடன் கூட்டணி. புத தசையில் தான் வேலை, திருமணம் , குழந்தைகள், வீடு வாங்கியது அனைத்தும் நடந்தது.புதனுக்கும் 5 பரல்கள் சுயவர்கத்தில்.

எப்ப்டொயோ இறையருளால் காலம் ஓரளவு நன்மையாகவே ஒடிவிட்டது.
நன்றி ஐயா!

கலையரசி said...

ஆறாம் வீட்டில் அதிக பரல்கள்.(41) அங்கு ராகு ! (கடகம்), அனால் ராகு புத்திதான் என்னை மற்றவர்களிடம் ஆஹா ஓஹோ என்று சொல்ல வைத்தது. கடல் தாண்ட வைத்தது.
ஆனால் தனிப்பட்ட முறையில் நிறைய அவமானத்தையும் ,ஏம்மாற்றத்தை தந்தது. என்ன கொடுமை என்றால் யாரும் அருகில் இல்லை .வேலையில் அவ்வளவு நெருக்கடி. ஆனால் அந்த வேளைக்கு பலரும் முன்னிலையில் பாராட்டு. அந்த வேலைக்காக பலரும் போட்டி.

எட்டாம் வீட்டில் சுப கிரகங்கள் அனைத்தும் குருவும் /சுக்ரனும் கூடவே சனியும்.
சந்திரனுக்கு(5ல் மிதுனம்) கேந்த்திரத்தில் இருப்பதால் கஜ கேசரி யோகம்(?) பெற்று யானைகளுக்கு நடுவில் உள்ள கேசரி போல் இருகிறேன். என்ன எப்போதும் கர்ஜித்து கொண்டே இருக்க வேண்டும். எந்த யானை எப்படி மிதிக்குமோ என்ற பீதியில் இருக்க வேண்டும். சனி தசா முடிந்து புதன்(ஒனபதில் நீசம் பெற்ற சூரியனுடன்) சுய புத்தி யில் இருக்கிறேன். சனி எல்லா வித ஞானத்தையும் தந்து விட்டது. இனி என்ன வந்தால் என்ன என்ற மனப்பான்மையை 32 வயதிருக்குள் வந்து விட்டது.

12-ல் கேது (கும்பத்தில்) , சன்யாசம் தருவார் என்று நம்புகிறேன். பற்று அற்ற வாழ்வை தருவார் என்றும் நம்புகிறேன் .

அய்யா பாடத்திற்கு நன்றி. அய்யா இந்த சொந்தம் பந்தம் பற்றிய அமைப்பை கொஞ்சம் சொல்லி தாருங்களேன்.(மாமன் , மைத்துனன் , மாமியார், மாமனார், கொழுந்தன், சித்தி , தாய் வழி உறவு , கணவன் வழி உறவு இதையெல்லாம் பற்றி ஒரு பதிவு போடுங்களேன் ).

G Alasiam said...

சகோதரர்கள் இரவிச்சந்திரன் மற்றும் பாண்டியன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!..

thozhar pandian said...

கலையரசி அவர்களே, 6ம் வீடு கடகம் என்றால் கும்ப லக்னமாக இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் கும்பம் 12ம் வீடு என்கிறீர்கள். கடகத்தில் இராகு இருந்தால் மகரத்தில் அல்லவா கேது இருக்க வேண்டும்? குழப்பமாக இருக்கிறதே.

Ak Ananth said...

//எனக்கு எற்ற நல்ல இல்லாள் இருந்தும் கவிதையை சேர்ந்து ரசிக்க அவரின் ரசனை வேறுபட்டு இருக்கும். அது தான் புதனின் இருப்பிட கைங்கரியம்.//

அது மட்டும் காரணமல்ல. லக்கினாதிபதியும், 7ம் அதிபதியும் 6,8 என்ற நிலையில் இருப்பதுதான். எனக்கும் அந்த நிலையில்தான் இருக்கிறார்கள். என் மனைவி ஜோதிடத்தில் சிறிது கூட ஆர்வம் இல்லாதவர்.

Anonymous said...

அய்யா , ஆறாம்வீட்டு அதிபதி செவ்வாய் கடகத்தில் மிதுன லக்னத்திற்கு இரண்டாம் வீடு செவ்வாய் நீச்சம் உடன் உச்ச குரு நீசபங்க ராஜயோகம் .செவ்வாயின் பலன்கள் கிடைக்குமா பெருமளவு.

சர்மா said...

ஒரே ஒரு வேண்டுகோள்:
லக்னாதிபதி சனி (கும்பம்)+
12ம் அதிபதியாகிய சனி எட்டில் மறைவு
எட்டர் புதன் பன்னிரண்டில்
மறைவு. இதனை பரிவர்த்தனை யாக எடுத்துக்கொள்ளலாமா.
அப்படியானால் பரிவர்த்தனை க்குரிய
பலன் என்ன?
ஆசிரியருடன் மாணவர்களும் கருத்துக்கூறலாமே.நீண்டநாள் ஐயம் தெளிவாக ஒரு சந்த்ர்ப்பம் கிடைக்கும்.
நன்றி

கலையரசி said...

தோழரே சரியாக சொன்னிர்கள். கேது இருப்பது மகரத்தில் த்தான். சனியின் வீடு . லக்னாதிபதி வீடும் அதுதான்....!கும்பம் என் லக்னம் ஆகும்.

Remanthi said...

ஐயா, வணக்கம். 6ல லக்னாதிபதியும், 12 ல ராசியாபதியும் மறைந்துட்ட... என்ன நடக்கும்?