மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.7.13

ஊக்குவிப்பவன் எப்போது தேக்குவிப்பான்?



ஊக்குவிப்பவன் எப்போது தேக்குவிப்பான்?
==================================================================
கவிஞர் வாலி அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக இந்தக் கட்டுரை.
==================================================================
“ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!”

- கவிஞர் வாலி அவர்கள் தன் பள்ளிப் பருவத்தில் எழுதிய வைர வரிகள்!
---------------------------------------------------
தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு திருவரங்கம் என்னும் திருத்தலம் பல நன்முத்துக்களைப் பரிசாகக் கொடுத்துள்ளது. அதில் முதன்மையான பரிசு ‘வாலி' என்னும் இரண்டெழுத்துப் பெயரைக் கொண்ட கவிஞர். அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை!

ஒரே பாட்டில் ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் அவர்.படித்தவன்முதல் பாமரன்வரை அந்தப் பாட்டில் தன்னைப்
பறிகொடுத்திருக்காதவனே கிடையாது. அந்தப் பாடல் இடம் பெற்ற படகோட்டி என்னும் திரைப்படம் புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களின்
படம் என்பதால் வெற்றி பெற்றது என்பதை விட வாலியின் பாடல்களால் அசைக்க முடியாத ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது என்பதுதான் சிறப்பு!

அதுதான் உண்மை கூட!

என்ன பாடல் அது என்கிறீர்களா? கொடுத்துள்ளேன் பாருங்கள்:

“கொடுத்ததெல்லாம் கொடுத்தான் -
அவன் யாருக்காகக் கொடுத்தான்?
ஒருத்தருக்கா கொடுத்தான் -
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா?
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை!

படைத்தவன்மேல் பழியுமில்லை
பசித்தவன்மேல் பாவமில்லை
கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ
ஒருபோதும் தெய்வம் பொறுத்ததில்லை!

இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்;
மடிநிறையப் பொருளிருக்கும் -
மனம்நிறைய இருளிருக்கும்!
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து -
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்!

-படம் படகோட்டி (வருடம் 1964)

இறைவன் கருணை வடிவானவன். பேதமில்லாதவன்

“வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல!”.

என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியதுபோல இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன். அவன் படைத்த அனைத்துமே பொதுவானதுதான்.
வானம், நீர், நெருப்பு, காற்று என்று அனைத்துமே பொதுவானதுதான்.

ஏழைக்கு ஒரு காற்று பணக்காரனுக்கு ஒரு காற்று என்று இரண்டு விதமான காற்று கிடையாது. ஒளியிலும் இரண்டு விதமான ஒளி கிடையாது.

அதைக் கவிஞர் எவ்வளவு சிறப்பாகச் சொன்னார் பார்த்தீர்களா?

”மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா?
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா?”

என்று இரண்டே வரிகளில் இறைவனின் நிலைப்பாட்டைப் புரிய வைத்தார் அல்லவா?

இங்கே நிகழும் அவலங்கள் யாவிற்கும் சகமனிதனே காரணம்.உழைத்தவர்கள் தெருவில் நிற்பதற்கும், மடி நிறையப் பொருள் இருப்பவனின் மனதில் இருள் இருப்பதற்கும் யார் காரணம்? கடவுளை எப்படிக் குறை சொல்ல முடியும்?

பாடலில் எதுகையும், மோனையும், எளிய சொற்களும் மனதில் பதியும் விதமாக அமைந்திருப்பதை நினைவில் வையுங்கள். அதனால்தான் இந்தப்
பாடல் கேட்ட அத்தனை உள்ளங்களிலும் சென்றமர்ந்துவிட்டது!
--------------------------------------------
பேசும் படம் பிறந்த 1931ஆம் ஆண்டில்தான் கவிஞர் வாலியும் பிறந்தார். இயற்பெயர் திரு.ரங்கராஜன்.

பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திருவரங்க மண்ணில்தான். சிறு வயதில் குடித்ததெல்லாம் காவிரி ஆற்றுத் தண்ணீர்! படித்ததெல்லாம் பாசுரங்கள்!
திருவரங்கத்தில் பிறந்திருந்தாலும் கொண்ட காதலெல்லாம் அருகில் இருந்த ஆனைக்காமேல்தான். ஆமாம் திருவானைக்கோவில் மீதுதான்.

காளமேகத்துக்குப் பிறகு ஆனைக்கா அகிலாண்டேஷ்வரியின் பார்வை இவரின் மேல் விழுந்தது. தினமும் சுற்றி வருகிறானே பையன் என்று
தமிழை வசப்படுத்திக் கொடுத்தாள்.

அதை வாலி அவர்களும் மறக்காமல் மனதில் வைத்திருந்து, பின்னொரு நாளில் பாட்டரங்கம் ஒன்றில் கவிதை வரிகளால் அகிலாண்டேஷ்வரிக்குத்
தன் நன்றியைச் சமர்பித்தார்.

“ஆனைக்கா அம்பிகையின்
அடியொற்றிப் பாட்டிசைத்தால்
மோனைக்கா பஞ்சமுண்டு?
முற்றெதுகை முதலான
சேனைக்கா பஞ்சமுண்டு?
சூழ்கொண்ட செந்தமிழின்
சோனைக்கா பஞ்சமுண்டு?
சுடர்கவிதை துளிர்க்காதோ?”


அதேபோல தான்பாடிய கவியரங்கங்களில், வாலி அவர்கள் தன்னை நன்கு வளர்த்து ஆளாக்கிய தமிழன்னைக்குச் சிறப்புச்செய்து நன்றி
பாராட்டும் முகமாகக் கீழ்க்கண்ட வரிகளைச் சொல்வார்.

“கொடிவருடிப் பூந்தென்றல்
குலவுகின்ற தென்பொதிகை
மடிவருடிப் பூத்தவளே!
மணித்தமிழே! மாற்றாரின்
அடிதிருடிப் பாடாமல்
அம்மா!நின் அரவிந்த
அடிவருடிப்பாட என்னை
ஆளாக்கி வைத்தனையே!”


தமிழ் அன்னையின் அரவிந்த அடிகளுக்கு இதைவிடச் சிறப்புச் செய்ய யாரால் முடியும்?
-------------------------------------------------------------------------
தமிழ் வசப்பட்டவுடன் வாலியும் சும்மா இருக்கவில்லை. தன் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத்
துவக்கினார்.

முதல் பிரதியை வெளியிட்டவர் யாரென்று நினைக்கிறீர்கள்? கேட்டால் அசந்து போவீர்கள். எத்தனை பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்?

அந்தக் காலத்தில் மிகப் பெரிய எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளராக இருந்த திருவாளர் கல்கி அவர்கள்தான் அந்தப் பத்திரிக்கையை
வெளியிட்டுச் சிறப்பித்ததோடு, வாலியின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையையும் கொடுத்துவிட்டுப் போனார். தன் கதைகளைப் பல
திருப்புமுனைகளோடு கொண்டு செல்லும் அவர், வாலியின் வாழ்விலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது அதிசயமா அல்லது தெய்வாதீனமா
என்றால் இரண்டையும் வைத்துக் கொள்ளலாம்.

அன்று திரு.கல்கி அவர்களுடன் திருவாளர் சின்ன அண்ணாமலை அவர்களும் திருச்சி வானொலி நிலைய அதிகாரி திரு.பார்த்தசாரதி அவர்களும்
வந்திருந்ததால் அடுத்து ஒரு ஏற்றம் வாலியின் வாழ்வில் நிகழ்ந்தது. வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

திருவரங்கத்தில் வாலி அவர்கள் நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையில் பல இளைஞர் கூட்டமே பங்கேற்றுக் கொண்டது. அப்படிப்
பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர்தான் பின்னாளில் பெரும் புகழ்பெற்ற எழுத்தாளராகத் தன் தனித் தமிழ் நடையால் ராஜ நடைபோட்ட எழுத்தாளர் சுஜாதா! அவரின் இயற்பெயரும் ரங்கராஜன்தான் என்பது வியப்பிற்குரிய விஷயம்!

சரி, நமது ரங்கராஜன் எப்படி வாலியானார்?

அது ஒரு சுவையான கதை. வாலிக்கு எப்படி தமிழின் மேல் ஒரு தீராத பற்று இருந்ததோ அதேபோல ஒவியத்தின் மீதும் ஒரு கண் இருந்தது.
நன்றாகப் படம் வரையும் திறமை இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த திரு.மாலி
அவர்களைப் போலவே தானும் தமிழ்கூறும் நல்லுலகத்தை ஒரு கலக்குக் கலக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தவரிடம் அவருடைய பள்ளித்
தோழன் பாபுதான் ‘மாலி'யைப் போல நீயும் சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினான். பள்ளிக்கூட
வட்டாரத்தில் வாலி என்னும் பெயர் பரவிப் பலரையும் சுழற்றி அடித்தது. அதாவது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது

ஒருமுறை வாலியென்ற கையொப்பமுடன் வாலி வரைந்த பாரதியின் படத்தை வாங்கிப் பார்த்த தமிழ் வாத்தியார், படத்தைப் பாராட்டியதோடு
நக்கலாக வேறொன்றையும் சொன்னார்.

“உனக்குத்தான் வாலில்லையே, அப்புறம் ஏன் வாலின்னு பேர் வெச்சுக்கிட்டே?”

அதைக் கேட்டு சுற்றி நின்ற மாணவர்கள் சிரிக்க, வாலி ஒரு துண்டுச் சீட்டில் இப்படிப் பதில் எழுதிக் கொடுத்தார்.

“வாலில்லை என்பதனால்
வாலியாகக் கூடாதா?
காலில்லை என்பதனால்
கடிகாரம் ஓடாதா?”


என்னவொரு நெத்தியடியான பதில் பாருங்கள்!
-------------------------------------------------------------------------
வாலி அவர்கள் எழுதிய பாடல்களில் என் மனம் கவர்ந்த பாடல்கள் ஒரு நூறுக்கும் மேல் உள்ளன. இடம், பதிவின் நீளம், மற்றும் உங்களுடைய
பொன்னான நேரம் கருதி அவற்றையெல்லாம் குறிப்பிடவில்லை. பின்னொரு சந்தர்ப்பத்தில் அவற்றை ஒரு தொடராக எழுதலாம் என்றுள்ளேன்.
அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்,


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++

25 comments:

  1. அருமையான பாடலும் பதிலும் சிறப்பு ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. காவிரிக் கரையில் பிறந்து
    கன்னித் தமிழிலோடு வாழ்ந்த
    காவியக் கவிஞன் வாலி

    ஆலிலை தவழ்ந்தக் கண்ணனையும்
    ஆலாலம் உண்டவனோடு இந்த
    ஜகம் போற்றும் ஜனனியும்
    யுகம் போற்ற பாடியவன்

    கவிஞன் இவன் வாழும்போது
    பகைக்கு பகை யானான்
    யாவருக்கும் நண்ப னான்
    எல்லோரையும் நேசித்தான்
    எல்லியோரையும் நேசித்தான்...

    இந்தக் கவிஞனை இங்கே
    நினைவு கூறும் பதிவின்
    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. வழக்கம் போல வாரம் ஒருமுறை அனுப்பும் நம்ம விசு அய்யர் அவர்களின் "கவிதா மின் அஞ்சலுக்கு" வழக்கம் போல் சற்று முன் எழுதிய கவிதையை

    நம்மக் காவியக் கவிஞர் வாலி தொடர்பான இப்பதிவோடு ஒத்து இருப்பதால் இங்கே அதைப் பதிவிடுகிறேன்...


    இறைவன் குடிகொள்ளும் குடிலது
    கருணைமிகு கோவில் அல்லவா!

    இதயம் இருப்பவரின் பண்பது
    இல்லாதவருக்கு உதவுவது அல்லவா!

    கோவிலும் கொடுக்கும் குணமும்
    பாரினில் மானிடற்கு அழகல்லவா!

    குருவிக் கூடானாலும் அமுதத்தேன்
    குழவிக் கூடானாலும் இங்கே

    ஆளுக்கொன்று இருந்தால் அதுநல்
    வாழ்வுக்கு பயனும் அல்லவா!

    தேனுக்காகப் பூவைப் படைத்தவன்
    தேடிய பொருளினை யாருக்காக?

    நாடிய; நம்பிய; நம்மில்
    வாடிய யாவருக்குமாக என்றே

    ஈட்ட, காத்த, காத்தவகுத்த
    நாட்டமுள்ள நல்ல மனிதரோ

    தேட்டமதை; இயற்கையோடு கூடிய
    வாட்டமில்லா வாழ்வதை வாழ்வாரே!

    ReplyDelete
  4. ///இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன்.///

    இந்த சொற்றடர் முரணானது
    இதற்கு இப்படி சொல்லலாமா?

    விருப்பும்
    வெறுப்பும் இல்லாததாக இருந்தால்

    அது சடமாகிவிடாதா?
    அதனால் அப்படி சொல்வதைவிட

    வெறுப்பின் மீது
    விருப்பு இல்லாதவன் என்று சொல்லனும்

    மற்றதெதல்லாம் சரி..
    மக்களை தட்டும் கானா பாடலை

    அடுத்த தொடரில் வழங்குவீர்களோ
    அமைதியாக காத்திருக்கின்றோம்

    ReplyDelete
  5. என்றும் வாழ்கின்ற கவிஞர்களில் வாலி ஒருவர்.

    அவர் புகழ் என்றும் வாழும்.

    ReplyDelete
  6. hi sir vanakkam . udalukku azivundu anal valliyin mathukkuku illamai irundadu. avar udalal namudan illavittallum avar padalkal moolan enrenrum tamil nenjankalil neenkamal vazvar.

    ReplyDelete
  7. அமரர் வாலி அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில் அருமையான பதிவு. அவர் புகழ் என்றும் நின்று நிலவும்!..

    ReplyDelete
  8. கவியரசர் கண்ணதாசன் காலத்திலேயே அவருக்கு இணையாக இல்லாவிடினும் துணையாகத் திரை இசைப் பாடல்களில் புகழ் பெற்றவர் வாலி. மீட்டருக்கு மேட்டெர், மேட்டெருக்கு மீட்டர் என்று தள்ளாடும் திரை இசைக்கு, ஈடுகொடுப்பது எல்லோராலும் முடியாது. வாலிக்கு அது கைவந்தது.தமிழ்ச் சொற்களுக்கு திரை இசைப்பாடல்களில் முக்கியத்துவம் இருந்த காலத்தில் வாலி பாடலாசிரியராக இருந்துவிட்டார்.இப்போதெல்லாம் திரை இசையில் வாத்தியக் கருவிகளுக்குத்தான் முக்கியத்துவம்.

    வாலியின் மறைவு திரைத்துறைக்கு வலிதான்.

    ReplyDelete
  9. கண்ணதாசனுக்கு அடுத்த நிலையில் ஒரு சிறந்த கவிஞர்/பாடலாசிரியர். பல காலமாகவே உடல் நலமின்றிதான் இருந்திருக்கிறார். அவர் இயற்கை எய்தியது நமக்கெல்லாம் ஒரு பேரிழப்புதான்.

    http://en.wikipedia.org/wiki/Vaali_%28poet%29 இதில் அவரைப் பற்றிய சில தகவல்களைத் தெரிந்துக் கொண்டேன்.

    ReplyDelete
  10. வாத்தியார் அவர்களுக்கும், வகுப்பறை நண்பர்களுக்கும் குருபூர்ணிமா வணக்கங்கள்.

    கவிஞர் வாலியின் புகழ் தமிழோடு கலந்து நிற்கும் என்றும். தமது திரைப்பாடல்களால் மட்டுமல்லாது, ஆன்மீக எழுத்துக்களாலும் நிகரில்லா புகழ் பெற்றவர் அவர். தன் தேன் சொட்டும் புதுக்கவிதை வரிகளால், இராமாயணத்தையும், மஹாபாரதத்தையும், பாகவதத்தையும் எளிதில் புரிந்து வாசிக்க வைத்த அருங்கவிஞர். ஆழ்ந்த ஞானமுள்ள அறிஞர் பெருமகனார். காலத்தை வென்று, அவரது தமிழ்த்தொண்டு என்றும் அவர் பெயர் போற்றி நிற்கும். அந்த மாபெரும் கவிஞனின் நினைவைப் போற்றும் பதிவிற்கு மிக்க நன்றி ஐயா!!.

    ReplyDelete
  11. காலத்தை வென்றவன் நீ
    காவியமானவன் நீ - என்று தலைவருக்கு அவர் எழுதிய பாடல் இன்று அவருக்கே பொருந்திவிட்டது. நல்லதொரு பகிர்வாஞ்சாலி.

    ReplyDelete
  12. ////Blogger eswari sekar said...
    vankam sir/////

    உங்களின் வருகைப்பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. ////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    அருமையான பாடலும் பதிலும் சிறப்பு ஐயா... நன்றி.../////

    நல்லது. நன்றி தனபாலன்!

    ReplyDelete
  14. Blogger G Alasiam said...
    காவிரிக் கரையில் பிறந்து
    கன்னித் தமிழிலோடு வாழ்ந்த
    காவியக் கவிஞன் வாலி
    ஆலிலை தவழ்ந்தக் கண்ணனையும்
    ஆலாலம் உண்டவனோடு இந்த
    ஜகம் போற்றும் ஜனனியும்
    யுகம் போற்ற பாடியவன்
    கவிஞன் இவன் வாழும்போது
    பகைக்கு பகை யானான்
    யாவருக்கும் நண்ப னான்
    எல்லோரையும் நேசித்தான்
    எல்லியோரையும் நேசித்தான்...
    இந்தக் கவிஞனை இங்கே
    நினைவு கூறும் பதிவின்
    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!/////

    நல்லது. உங்களின் தொடர் கவிதாஞ்சலிகளுக்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  15. Blogger G Alasiam said...
    வழக்கம் போல வாரம் ஒருமுறை அனுப்பும் நம்ம விசு அய்யர் அவர்களின் "கவிதா மின் அஞ்சலுக்கு" வழக்கம் போல் சற்று முன் எழுதிய கவிதையை, நம்ம காவியக் கவிஞர் வாலி தொடர்பான இப்பதிவோடு ஒத்து இருப்பதால் இங்கே அதைப் பதிவிடுகிறேன்.
    இறைவன் குடிகொள்ளும் குடிலது
    கருணைமிகு கோவில் அல்லவா!
    இதயம் இருப்பவரின் பண்பது
    இல்லாதவருக்கு உதவுவது அல்லவா!
    கோவிலும் கொடுக்கும் குணமும்
    பாரினில் மானிடற்கு அழகல்லவா!
    குருவிக் கூடானாலும் அமுதத்தேன்
    குழவிக் கூடானாலும் இங்கே
    ஆளுக்கொன்று இருந்தால் அதுநல்
    வாழ்வுக்கு பயனும் அல்லவா!
    தேனுக்காகப் பூவைப் படைத்தவன்
    தேடிய பொருளினை யாருக்காக?
    நாடிய; நம்பிய; நம்மில்
    வாடிய யாவருக்குமாக என்றே
    ஈட்ட, காத்த, காத்தவகுத்த
    நாட்டமுள்ள நல்ல மனிதரோ
    தேட்டமதை; இயற்கையோடு கூடிய
    வாட்டமில்லா வாழ்வதை வாழ்வாரே!/////

    இதற்கும் ஒரு விஷேச நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  16. /////Blogger வேப்பிலை said...
    ///இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன்.///
    இந்த சொற்றடர் முரணானது
    இதற்கு இப்படி சொல்லலாமா?
    விருப்பும்
    வெறுப்பும் இல்லாததாக இருந்தால்
    அது சடமாகிவிடாதா?
    அதனால் அப்படி சொல்வதைவிட
    வெறுப்பின் மீது
    விருப்பு இல்லாதவன் என்று சொல்லனும்
    மற்றதெதல்லாம் சரி..
    மக்களை தட்டும் கானா பாடலை
    அடுத்த தொடரில் வழங்குவீர்களோ
    அமைதியாக காத்திருக்கின்றோம்/////

    இறைவன், வேண்டுதல், வேண்டாமை இல்லாதவன் என்று அந்த தாடிக்காரர், அதான் சாமி திருவள்ளுவர் எழுதி வைத்துள்ளாரே - அதுவும் முரணானதுதானா?

    ReplyDelete
  17. ////Blogger krishnar said...
    என்றும் வாழ்கின்ற கவிஞர்களில் வாலி ஒருவர்.
    அவர் புகழ் என்றும் வாழும்./////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணரே!

    ReplyDelete
  18. ////Blogger jay said...
    hi sir vanakkam . udalukku azivundu anal valiyin mathukkuku illamai irundadu. avar udalal namudan illavittallum avar padalkal moolan enrenrum tamil nenjankalil neenkamal vazvar.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. /////Blogger துரை செல்வராஜூ said...
    அமரர் வாலி அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில் அருமையான பதிவு. அவர் புகழ் என்றும் நின்று நிலவும்!./////

    நல்லது. நன்றி நண்பரே

    ReplyDelete
  20. ///Blogger kmr.krishnan said...
    கவியரசர் கண்ணதாசன் காலத்திலேயே அவருக்கு இணையாக இல்லாவிடினும் துணையாகத் திரை இசைப் பாடல்களில் புகழ் பெற்றவர் வாலி. மீட்டருக்கு மேட்டெர், மேட்டெருக்கு மீட்டர் என்று தள்ளாடும் திரை இசைக்கு, ஈடுகொடுப்பது எல்லோராலும் முடியாது. வாலிக்கு அது கைவந்தது.தமிழ்ச் சொற்களுக்கு திரை இசைப்பாடல்களில் முக்கியத்துவம் இருந்த காலத்தில் வாலி பாடலாசிரியராக இருந்துவிட்டார்.இப்போதெல்லாம் திரை இசையில் வாத்தியக் கருவிகளுக்குத்தான் முக்கியத்துவம்.
    வாலியின் மறைவு திரைத்துறைக்கு வலிதான்./////

    திரைத்துறைக்கு மட்டுமல்ல, நம்மைப் போன்ற எண்ணற்ற வாலியின் ரசிகர்களுக்கும் அது வலிதான்! உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  21. /////Blogger Ak Ananth said...
    கண்ணதாசனுக்கு அடுத்த நிலையில் ஒரு சிறந்த கவிஞர்/பாடலாசிரியர். பல காலமாகவே உடல் நலமின்றிதான் இருந்திருக்கிறார். அவர் இயற்கை எய்தியது நமக்கெல்லாம் ஒரு பேரிழப்புதான்.
    http://en.wikipedia.org/wiki/Vaali_%28poet%29 இதில் அவரைப் பற்றிய சில தகவல்களைத் தெரிந்துக் கொண்டேன்.////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  22. ////Blogger பார்வதி இராமச்சந்திரன். said...
    வாத்தியார் அவர்களுக்கும், வகுப்பறை நண்பர்களுக்கும் குருபூர்ணிமா வணக்கங்கள்.
    கவிஞர் வாலியின் புகழ் தமிழோடு கலந்து நிற்கும் என்றும். தமது திரைப்பாடல்களால் மட்டுமல்லாது, ஆன்மீக எழுத்துக்களாலும் நிகரில்லா புகழ் பெற்றவர் அவர். தன் தேன் சொட்டும் புதுக்கவிதை வரிகளால், இராமாயணத்தையும், மஹாபாரதத்தையும், பாகவதத்தையும் எளிதில் புரிந்து வாசிக்க வைத்த அருங்கவிஞர். ஆழ்ந்த ஞானமுள்ள அறிஞர் பெருமகனார். காலத்தை வென்று, அவரது தமிழ்த்தொண்டு என்றும் அவர் பெயர் போற்றி நிற்கும். அந்த மாபெரும் கவிஞனின் நினைவைப் போற்றும் பதிவிற்கு மிக்க நன்றி ஐயா!!./////

    உங்களுடைய குருபூர்ணிமா வணக்கத்திற்கும், மேன்மையான பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  23. ////Blogger thanusu said...
    காலத்தை வென்றவன் நீ
    காவியமானவன் நீ - என்று தலைவருக்கு அவர் எழுதிய பாடல் இன்று அவருக்கே பொருந்திவிட்டது. நல்லதொரு பகிர்வாஞ்சாலி./////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி தனுசு!!

    ReplyDelete
  24. ///இறைவன், வேண்டுதல், வேண்டாமை இல்லாதவன் என்று அந்த தாடிக்காரர், அதான் சாமி திருவள்ளுவர் எழுதி வைத்துள்ளாரே - அதுவும் முரணானதுதானா?///

    இல்லை அது சரியானதே
    இதற்கு பொருள் இப்படி கொள்வோமா

    நமக்கெல்லாம் வேண்டுதல்கள் உண்டு
    நம் இறைக்கு அது இல்லை

    வேண்டுதல் உண்டு என்பதால்
    வேண்டாமையும் உண்டு

    வேண்டுதல் என்பதை வேண்டாதவன்
    என்றே கொண்டு கூட்டி பொருள் கொள்ளல் வேண்டும்..

    இறைவனின் எட்டு குணங்களை
    இந்த தாடிக்காரர் அருமையாக

    எடுத்துரைப்பதை அறிவீர் தானே
    ஏன் மறுபடியும் இப்படியொரு கேள்வி

    அந்த
    தாடிக்காரர் பட்டியலில்
    27 வருடமாக தாடியுடன் அய்யர்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com