மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

9.7.13

Astrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் - பகுதி 2

 
---------------------------------------------------------------------------------------------
Astrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் - பகுதி 2

ஜோதிடத் தொடர் - பகுதி 2

பணமா? குணமா?

பணம் இல்லை என்றால், இந்தக் காலத்தில் எந்த வேலையும் நடக்காது! ஒரு சின்னக்குழந்தையைத் துவக்கப் பள்ளியில் சேர்ப்பதில் இருந்தே பணம் தன் வேலையை, ஆட்டத்தைத் துவங்கி விடுகிறது.

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!”

என்றான் சிந்தனையாளன் ஒருவன்.

உண்மைதான். அதை யாரும் மறுக்க முடியாது.

பணம் அவசியமானதுதான். ஆனால் பணம் மட்டும்தான் வாழ்க்கையா?

இல்லை!

பணம் என்னும் தலைப்பில், தத்துவஞானி ஓஷோ அவர்கள் எழுதிய நூல் கிடைத்தால் வாங்கிப் படியுங்கள். பணத்தால் என்னென்ன முடியாது என்பதை அவர் அழகாக விவரித்திருப்பார். பணத்தால் நீங்கள் ஒரு வீட்டை வாங்கலாம். ஏன், ஒரு அரண்மனையைக் கூட வாங்கலாம். ஆனால் தூக்கத்தைக் காசு கொடுத்து வாங்க முடியுமா? உணவை வாங்கலாம். பசியை வாங்க முடியுமா? பெண்ணை வாங்கலாம். தாயை வாங்க முடியுமா? பொழுது போக்கை வாங்கலாம். உண்மையான மகிழ்ச்சியை வாங்க முடியுமா?  நிம்மதியை வாங்க முடியுமா? இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

Osho சுருக்கமாக இப்படிச் சொல்வார்: With money you can buy a house; But with money you can't buy love!

பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்"

என்று கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு இணங்க குணம்தான் நிரந்தமானது!
----------------------------------------------------------------------------------
எப்படி ஒவ்வொருவருக்கும் முகத் தோற்றம் மாறுபடுகிறதோ, அப்படி குணமும் மாறுபடும்.

அவன் ரொம்ப நல்லவனப்பா’ என்று ஒருவனைப் பற்றிச் சொல்லும் நாம், ‘அவனா, அவன் அயோக்கியன், கிராதகன் என்று வேறு ஒருவனைப் பற்றி சிலாக்கியமாகச் சொல்கிறோம். நமக்கு எப்படித் தெரிந்தது. பழக்கத்தின் மூலம், அனுபவத்தின் மூலம் தெரியும் அது

ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகளே தோற்றத்திலும், குணத்திலும் ஒன்று போல இருப்பதில்லை. படைப்பின் வினோதம் அது.

உடன் பிறப்புக்களைப் பற்றிக் கிராமங்களில் சொல்வார்கள்: ”ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பதினைந்து வயதில் பங்காளி நாற்பது வயதில் வாதி, பிரதிவாதி”

ஆனால் ஒரு வேடிக்கை பாருங்கள். இன்று பல குடும்பங்களில் உள்ள சண்டை சச்சரவுகளுக்கே காரணம் பணம். பணம் இருப்பதால், சொத்துக்களை வைத்து அதைப் பங்கு வைத்துக் கொள்வதை வைத்து சண்டைகள். வம்புகள், விரோதங்கள், வழக்குகள்.

அதே பணத்தை வைத்து நீங்களும் நானும் வாழுகின்ற இந்த சமூகத்தில் அந்தஸ்து (Status) பிரச்சினை. வீடு, வாகனம் வைத்திருப்பவன் அதேபோன்று வீடு வாகனம் உள்ளவனைத்தான் மதிப்பான். மரியாதை கொடுப்பான். அன்றாடம் காய்ச்சியை, ஏழைய அவன் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

திருமணச் சந்தையிலும் இந்த ஸ்டேட்டஸ் (அந்தஸ்து) மட்டையோடு ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. காதலில் தோல்வி அடைந்தவர்களைக் கேளுங்கள், தங்கள் பெற்றோர்களின் சம்மதம் அவர்களுக்கு ஏன் கிடைக்கவில்லை என்று கேளுங்கள். அந்தஸ்து வித்தியாசம் அடித்து நொறுக்கியதைக் கூறுவார்கள். ஜாதிப் பிரச்சினை கூட இரண்டாவது (அது ரன்னராக) கூட்டு ஆட்டக்காரராக வரும்.

ஒரு பெரிய செல்வந்தன், தன் மகளின் காதலுக்காக ஒரு குடிசை வீட்டுக்காரனை, அல்லது ஒரு ஓட்டு வீட்டுக்காரனை தன் சம்பந்தியாக ஏற்றுக்கொள்ள மாட்டான். பெரும்பாலும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

ஒருவனின் செல்வ நிலைமை ஜாதகத்தின் ஒன்று, இரண்டு, ஒன்பது, பத்து, பதினொன்றாம் வீட்டை வைத்து மாறுபடுவதைப் போல குணமும் ஜாதகத்தை வைத்து ஆளாளுக்கு மாறுபடும்.

லக்கினம், லக்கின அதிபதி, நட்சத்திரம், சந்திர ராசி (அதாவது நட்சத்திரம் அமர்ந்திருக்கும் ராசி) சுப கிரகங்கள் என்று  ஜாதத்தின் பல அமைப்புக்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் குணத்தைக் கொடுக்கின்றன.

மனிதனின் வளர்ச்சிக்கு எதிரிகளான சோம்பேறித்தனம், ஆர்வமின்மை, கஞ்சத்தனம், இடக்கான போக்கு (Negative aspect) போன்ற பல கெடுதல்கள் அல்லது கேடுகளுக்குக் காரணம் கிரகக்கோளா! ஜாதக அமைப்பே!

உலக மக்களின் இயக்கமும், மனமும் ஒரு ஒழுங்கில் இல்லை (They are not in one order) ஒரு பக்கம் உலக நன்மைக்காக பாடுபடும், உழைக்கும் மக்கள். இன்னொரு பக்கம் தீவிரவாதிகள்.

ஆனால் வானத்தில் உள்ள கிரகங்கள், ஒரு ஒழுங்கு முறையில் செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன. (The cosmic process is absolutely scientific and intelligible.) நிலையான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அவைகள் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன. எந்த உத்தரவும் அவைகளைக் கட்டுப்படுத்தாது. ஒவ்வொரு கிரகமும் தனது பணியைத் துல்லியமாகச் செய்து, ஆக்கல், நிலைத்தல், அழித்தல் வேலைகளைச் செவ்வனே செய்து கொடிருக்கின்றன

அவைகளின் கட்டுப் பாட்டில்தான் மனித வாழ்க்கையும், மனிதனின் குணங்களும், செயல்பாடுகளும் உள்ளன.

உங்களின் லக்கினத்தை வைத்தும் உங்களின் நட்சத்திரத்தை வைத்தும்தான் உங்களின் குண நலன்கள்

அதுபோல  ஒன்பது கிரகங்களை, 12 லக்கினங்களை, 27 நட்சத்திரங்களை வைத்துத்தான் உங்கள் அனைவரின் குண நலன்கள்

சரி, ஒன்பது கிரகம் 12 லக்கினத்திற்கு எத்தனை விதமான வாழ்க்கை கிடைக்கும்?

Permutations and Combinations Basics தெரியுமா உங்களுக்கு? இல்லை என்றால் கூகுள் ஆண்டவரிடம் கேளுங்கள்: Nine to the power of Twelve

விடை கிடைக்கும். உங்களுக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன்

9 to the 12th power would be 9 * 9 * 9 * 9 * 9 * 9 * 9 * 9 * 9  
which would equal 282 429 536 481

அம்மாடியோவ்...................!!!!

மற்றவை அடுத்த பதிவில்

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

27 comments:

Dallas Kannan said...

Good Morning Sir...

Lakhsmi Nagaraj said...

Very good morning sir

thanusu said...

பதிவின் கடைசி வரியைத்தான் நான் சொல்லவேண்டி வருகிறது ஆரம்பத்தின் ஜோரை

அம்மாடியோய்..................!

உணர்ந்தவை! said...

Hello Sir, very nicely said.
This is the core idea for anyone studying astrology.

arul said...

inspiring post

Kalai Rajan said...

அய்யா


பதிவு அருமையக இருக்கிறது.

murali krishna g said...

good morning ayya !. ullen ayya !

kmr.krishnan said...

"அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை-பொருள் இல்லார்க்கு
இவ் உலகம் இல்லாகியாங்கு".

அந்த சிந்தனையாளர் வாசுகியின் கணவர்தான். குறள் 247. அதிகாரம் அருளுடமை.
அழுத்தமான கருத்துக்களுக்கு நன்றி ஐயா!

Ak Ananth said...

இன்றைய காலகட்டத்தில் பணத்திற்குதான் அதிக மரியாதை கிடைக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். ஒருவரிடம் உள்ள செல்வப் செழிப்பு விலை போகாத இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

Remanthi said...

உணமைக்கே திகைப்பாக தான் இருக்கு......... கோபிR

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்,
ஒரு வருடைய நட்சத்திரமும் கிரங்கள் பன்னிரெண்டு ஸ்தானங்களில் அமர்ந்தது செய்யும் உன்னத லிலைகள் வழக்கை சக்கரம் சூழச்சியே ,என்ற பாடம் அருமையக உள்ளது
நன்றி

thozhar pandian said...

அய்யா, ஒருவரின் செல்வத்தை வைத்தே ஒருவரை மதிப்பிடுவது மிகவும் தவறானதே. ஆனால் இன்றைய உலகில் அது தான் நடந்து கொண்டிருக்கிறது. பணம் இல்லாதவர்கள் மதிக்கப்படுவதே இல்லை. அதனால்தான் அந்த பணமே பிரதானமாக கொண்டாடப்படுகிறது என்று நினைக்கிறேன். தூக்கத்தை வாங்க முடியாதுதான். ஆனால் தூக்க மாத்திரை வாங்கலாம்:-) விதண்டாவாதம் செய்கிறேன் என்று தயவு செய்து எண்ண வேண்டாம். நீங்கள் கூறுவது போல ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம் குணம், பிறகு உடல்/மன ஆரோக்கியம், பிறகு நல்ல உறவுகள், பிறகு பணம். அனைவருக்கும் இவை அனைத்தும் கிடைக்காமல் போகலாம். ஆனால் இன்றைய உலகில் பல மனிதர்கள் பெரிதும் விரும்புவது பணமே. மருத்துவ வசதிகள் பெருகி விட்ட இந்த காலத்தில் உடல் ஆரோக்கியம் பணம் இருந்தால் கிடைக்கும். நோய் குணமாகவில்லை என்றாலும் மருந்து மாத்திரை அறுவை சிகிச்சை கொண்டு ஒட்டி விடலாம். பணம் இருந்தால் அதை அனுபவிக்கும் போது மன ஆரோக்கியத்தை பற்றி யார் கவலைப்படுவார்கள். பணம் இருந்தால் உறவுகள் தானாக வரும். அவை நல்ல உறவுகள் இல்லை என்றால் என்ன என்றுதான் பலர் நினைக்கிறார்கள். குணத்தை பற்றி எல்லாம் யாரும் பெரிதாக அலட்டி கொள்வதில்லை. முக நூலில் பாருங்கல். தங்கள் வசதிகளை கொண்டு தான் அங்கு பேச்சே. இவன் நல்லவன் என்று யாரும் இப்போதெல்லாம் பாராட்டுவதில்லை. இவன் வல்லவன், பணக்காரன், உயர்ந்த பதவி வகிப்பவன் என்று தான் எல்லோரும் பாராட்டுகிறார்கள். மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.

SP.VR. SUBBAIYA said...

////Blogger Dallas Kannan said...
Good Morning Sir.../////

உங்களின் வருகைப் பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Lakhsmi Nagaraj said...
Very good morning sir/////

உங்களின் வருகைப் பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

jayanthi said...

Good morning sir
I have just started reading your old posts. Your lessons are very clear and very very interesting to read. Please tell me where I can buy your books sir.
jayanthi

SP.VR. SUBBAIYA said...

///Blogger thanusu said...
பதிவின் கடைசி வரியைத்தான் நான் சொல்லவேண்டி வருகிறது ஆரம்பத்தின் ஜோரை அம்மாடியோய்..................!/////

உங்களின் மனம் உவந்த பாராட்டிற்கு நன்றி தனுசு!

SP.VR. SUBBAIYA said...

////Blogger உணர்ந்தவை! said...
Hello Sir, very nicely said.
This is the core idea for anyone studying astrology./////

நல்லது நண்பரே! தொடர்ந்து படியுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger arul said...
inspiring post/////

நல்லது. நன்றி அருள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Kalai Rajan said...
அய்யா
பதிவு அருமையக இருக்கிறது./////

உங்களின் பாராட்டிற்கு நன்றி கலைராஜன்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger murali krishna g said...
good morning ayya !. ullen ayya !/////

வருகைப் பதிவு போட்டாயிற்று! நன்றி

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
"அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை-பொருள் இல்லார்க்கு
இவ் உலகம் இல்லாகியாங்கு".
அந்த சிந்தனையாளர் வாசுகியின் கணவர்தான். குறள் 247. அதிகாரம் அருளுடமை.
அழுத்தமான கருத்துக்களுக்கு நன்றி ஐயா!////

வள்ளுவரின் அமுத வாக்கை எடுத்துக்கொடுத்த மேன்மைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Ak Ananth said...
இன்றைய காலகட்டத்தில் பணத்திற்குதான் அதிக மரியாதை கிடைக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். ஒருவரிடம் உள்ள செல்வப் செழிப்பு விலை போகாத இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன.////

உணமைதான். செல்வப் செழிப்பு விலை போகாத இடங்கள் குறைவாக உள்ளன. அதுதான் வருந்த வேண்டிய விஷயம். நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Remanthi said...
உணமைக்கே திகைப்பாக தான் இருக்கு......... கோபிR////

உங்கள் பெயரைச் சொல்லி குழப்பத்தைத் தீர்த்ததற்கு நன்றி கோபி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்,
ஒரு வருடைய நட்சத்திரமும் கிரங்கள் பன்னிரெண்டு ஸ்தானங்களில் அமர்ந்தது செய்யும் உன்னத லிலைகள் வழக்கை சக்கரம் சூழச்சியே ,என்ற பாடம் அருமையக உள்ளது
நன்றி/////

நல்லது. நன்றி உதயகுமார்

SP.VR. SUBBAIYA said...

////Blogger thozhar pandian said...
அய்யா, ஒருவரின் செல்வத்தை வைத்தே ஒருவரை மதிப்பிடுவது மிகவும் தவறானதே. ஆனால் இன்றைய உலகில் அது தான் நடந்து கொண்டிருக்கிறது. பணம் இல்லாதவர்கள் மதிக்கப்படுவதே இல்லை. அதனால்தான் அந்த பணமே பிரதானமாக கொண்டாடப்படுகிறது என்று நினைக்கிறேன். தூக்கத்தை வாங்க முடியாதுதான். ஆனால் தூக்க மாத்திரை வாங்கலாம்:-) விதண்டாவாதம் செய்கிறேன் என்று தயவு செய்து எண்ண வேண்டாம். நீங்கள் கூறுவது போல ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம் குணம், பிறகு உடல்/மன ஆரோக்கியம், பிறகு நல்ல உறவுகள், பிறகு பணம். அனைவருக்கும் இவை அனைத்தும் கிடைக்காமல் போகலாம். ஆனால் இன்றைய உலகில் பல மனிதர்கள் பெரிதும் விரும்புவது பணமே. மருத்துவ வசதிகள் பெருகி விட்ட இந்த காலத்தில் உடல் ஆரோக்கியம் பணம் இருந்தால் கிடைக்கும். நோய் குணமாகவில்லை என்றாலும் மருந்து மாத்திரை அறுவை சிகிச்சை கொண்டு ஒட்டி விடலாம். பணம் இருந்தால் அதை அனுபவிக்கும் போது மன ஆரோக்கியத்தை பற்றி யார் கவலைப்படுவார்கள். பணம் இருந்தால் உறவுகள் தானாக வரும். அவை நல்ல உறவுகள் இல்லை என்றால் என்ன என்றுதான் பலர் நினைக்கிறார்கள். குணத்தை பற்றி எல்லாம் யாரும் பெரிதாக அலட்டி கொள்வதில்லை. முக நூலில் பாருங்கல். தங்கள் வசதிகளை கொண்டு தான் அங்கு பேச்சே. இவன் நல்லவன் என்று யாரும் இப்போதெல்லாம் பாராட்டுவதில்லை. இவன் வல்லவன், பணக்காரன், உயர்ந்த பதவி வகிப்பவன் என்று தான் எல்லோரும் பாராட்டுகிறார்கள். மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம்தான்./////

நாம் கவலைப்ப்டுகிறோம். ஆனால் பெரும்பாலனாவர்கள் கவலைப் படாத விஷயம் அது. கலி முற்றிக்கொண்டிருக்கிறது. அவ்வளவுதான் சொல்ல முடியும்!

jayanthi said...

Good morning sir. I am a new student. Your lessons are very very clear and interesting.

thozhar pandian said...

நல்லவர்கள் வாழும் போது அவர்களின் அருமையை யாரும் அறிவதில்லை. மற்றவர்களின் மதிப்பீட்டை பற்றி கவலைப்படாமல் இயலாதவர்களுக்கு இயன்ற வரை உதவும் நல்லவர்கள் சிலராவது இருப்பதால் தான் மாரி பொழிகிறது. எல்லோரும் தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் மட்டும் சிந்திக்க தொடங்கிவிட்டால், ஆதரவற்றவர்களுக்கு உதவுவது யார்? பெற்றவர்கள் இல்லாத, இருந்தும் அவர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெரியவர்களுக்கும், உடல் குறை இருப்பவர்களுக்கும், autistic பிள்ளைகளுக்கும் உதவும் நல்ல உள்ளங்களை பார்க்கும் போது தான் தெரிகிறது, நாம் செய்ய வேண்டியது செய்யக்கூடியது இந்த உலகில் எவ்வளவோ இருக்கிறது என்று.