மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

11.7.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 32

 

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 32

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 32

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
சதய நட்சத்திரம். இது கும்ப ராசிக்கு உரிய நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திரம் ராகுவிற்கு உரிய நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்திற்கு

1. மிருகசீரிஷம்
2. புனர்பூசம்
3. ஆயில்யம்
4. மகம்
5. அனுஷம்
6. கேட்டை
7. மூலம்
8. ரேவதி

ஆகிய 8 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi) பார்த்தால் ஆயில்ய நட்சத்திரம் பொருந்தாது. கும்ப ராசிக்கு  மகரம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi)  ஆகவே மகர  ராசிக்கு உரிய நட்சத்திரம் எதுவும் மேலே உள்ள பொருத்தக் கணக்கில் வரவில்லை!கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

ரோகிணி, திருவாதிரை, ஹஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம் ஆகிய 6 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் சதயம் ஒரே நட்சத்திரமாக இருந்தால்  பொருந்தாது!.அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தாது!

பரணி, பூரட்டாதி, உத்திரட்டாதி,  ஆகிய 3 நட்சத்திரங்களும் பொருந்தாது.

அஸ்விணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், உத்திரம், சித்திரை, விசாகம், பூராடம், உத்திராடம், அவிட்டம் ஆகிய 10 நட்சத்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++

8 comments:

கவியாழி கண்ணதாசன் said...

நன்றி வாத்யாரே.இன்று எனக்கு பிறந்தநாள் பலனை சொல்லுங்களேன்

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா,எங்கள் வீட்டில் துக்கம் நடந்துவிட்டதால் வகுப்பிற்கு வர இயலவில்லை,மன்னித்துவிடுங்கள் ஐயா, நன்றி ஐயா.

Ak Ananth said...

உள்ளேன் ஐயா.

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
நன்றி

SP.VR. SUBBAIYA said...

/////Blogger கவியாழி கண்ணதாசன் said...
நன்றி வாத்யாரே.இன்று எனக்கு பிறந்தநாள் பலனை சொல்லுங்களேன்////

பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஜாதகத்தை எல்லாம் மறந்து விட்டு, பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் ஒரு ஃபாமிலி பேக் வாங்கி ஒரு ஓரமாக அமர்ந்து வேண்டிய மட்டும் சாப்பிட்டு மகிழுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Geetha Lakshmi A said...
வணக்கம் ஐயா,எங்கள் வீட்டில் துக்கம் நடந்துவிட்டதால் வகுப்பிற்கு வர இயலவில்லை,மன்னித்துவிடுங்கள் ஐயா, நன்றி ஐயா.////

நடந்த துக்கத்தை நீங்கள் மறக்க இறையருளைப் பிரார்த்திக்கிறேன்! இது இணைய வகுப்பு தானே! கால நேரமெல்லாம் கிடையாது! எப்போது முடியுமோ அப்போது நீங்கள் வந்து படித்தால் போதும் சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Ak Ananth said...
உள்ளேன் ஐயா.////

வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
நன்றி////

உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!