மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.7.13

முக்கியமான மகிழ்ச்சியைத் தரும் செய்தி!

 

முக்கியமான மகிழ்ச்சியைத் தரும் செய்தி!

நமது வகுப்பறை நண்பரும், சக பதிவருமான திரு.வி.பிரசன்னகுமார் அவர்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தரும் செய்தி ஒன்றை மின்னஞ்சல் மூலம் அனுப்பி யிருந்தார். அதை அப்படியே இன்று உங்களுக்கு  அறியத்தருவதில் அடியவனும் மகிழ்ச்சி கொள்கிறேன். அந்த அன்பருக்கு நம் வகுப்பறையின் சார்பில் நன்றியத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தச் செய்தியை முதன் முதலில் வெளியிட்ட ’சிறகு’ இணைய இதழ் http://siragu.com/ அமைப்பாளர்களுக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------------------------------------

நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்"
============================
சென்னை நகர வீதிகளில் மூன்று சக்கர வாகனத்தை ஓட்டும் ஓட்டுனர்கள் பயண பேரத்தில் கொடுக்கும் தொல்லையும், பயணிகள் நொந்து போவதும், அதனால் விளையும் ஏச்சும் பேச்சும் சென்னையில் வாடிக்கையாக நாம் அனுபவித்த நிகழ்வுகளில் ஒன்று.

இனி இது போல் நாம் பேசவும் தேவையில்லாமல் ஏசவும் தேவை இல்லை. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சென்னையில் புதிதாக தொடங்கப்பட்டு, மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது “நம்ம ஆட்டோ” (சென்னையின் கெளரவம்) – என்ற பெயருடைய மூன்று சக்கர வாகன நிறுவனம்.

அப்படி என்ன இங்கு புதிதாக நடக்கிறது? இதைத் தொடங்க வேண்டிய அவசியமென்ன? என்று மனதிற்குள் பல கேள்விகளுடன், தேனாம்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் “நம்ம ஆட்டோ” நிறுவனர்களைச் சந்திக்கச் சென்றோம்.

இந்நிறுவனத்தின் பொது மேலாளரான மூசா சபீர்கான் என்பவரைச் சந்தித்தோம். அவர் கூறியதாவது.

அப்துல் கஜிப், மன்சூர் அலிகான் ஆகிய இருவரும் இணைந்தே இத்திட்டத்தைக் கடந்த மே மாதம் 19ம் தேதி ஆரம்பித்தனர். ஏன் இதை தொடங்கினார் என்றால் ‘நம்ம ஆட்டோ’வின் நிர்வாக இயக்குனராக இருக்கும் அப்துல் கஜிப் அவர்கள் சென்னையில் கடந்த 10 வருடமாக மூன்று சக்கர வாகனம் ஓட்டும் ஒட்டுனர்களிடமிருந்து பெற்ற பல்வேறான கசப்பான அனுபவத்தின் விளைவாகவே இந்நிறுவனம் எப்படி இருந்தால் மக்கள் விரும்புவார்கள் என பல நாள் என்னோடு பேசுவார்.

அரசு கூறியது போலவே மீட்டர் பொருத்தி ரசீது வழங்க வேண்டும் என முடிவெடுத்தார். சென்னையில் கடந்த 15 வருடமாக மீட்டர் என்றால் என்னவென்றே தெரியாமல் மூன்று சக்கர வாகனத்தில் பயணப்பட்ட நம் மக்களுக்கு இன்று ‘நம்ம ஆட்டோ’வில் மீட்டர் பொருத்தி ரசீது வழங்குவதும், நியாயமான முறையில் பணம் வசூலிப்பதும் மிகவும் பிடித்த ஒன்றாகி விட்டது. இதைத் தொடங்கிய சில நாட்களிலிருந்தே தினமும் எங்களுக்கு 150 அலைபேசி அழைப்புகள் வருகிறது. இன்று நகருக்குள் மொத்தம் 66 மூன்று சக்கர வாகனங்கள் ஓடுகின்றன. கடந்த 45 நாட்களாக 8 ஆயிரம் பயணச்சேவை செய்துள்ளோம்.

இதுவரை மக்களின் கட்டணத் தொகையாக 7 லட்ச ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளோம் என நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. தொழில் நுட்பத் துறையில் (ஐ.டி) பணியாற்றிய இவர் தொடங்கிய இந்த “நம்ம ஆட்டோ” என்ற நிறுவனத்திற்காக கடந்த நான்கு வருடமாக உழைத்தார். காரணம் சென்னையின் உயிர் இந்த மூன்று சக்கர வாகனம். இதை அதிகம் பயன்படுத்தும் நடுத்தர மக்களின் பணம் வீண் விரயமாகக் கூடாது. நேர்மையான முறையில் அவர்களுக்கு சிறந்த பயணத்தை இந்த மூன்று சக்கர வாகனம் மூலம் அளிக்க வேண்டும் என எண்ணினார்.

நம்ம ஆட்டோவின் சிறப்பு:

‘நம்ம ஆட்டோ’வில் ஜி.பி.ஆர்.எஸ் என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியின் துணையால், எங்களின் தலைமை இடமான தேனாம்பேட்டையில் இருந்து நகருக்குள் ஓடுகின்ற ஒவ்வொரு மூன்று சக்கர வாகனத்தையும் கண்காணிக்கின்றோம். ஒரு கிலோமீட்டருக்கு 10 ரூபாயும், 2 கிலோமீட்டருக்கு 25 ரூபாயும் வசூலிக்கிறோம். இரண்டு கிலோமீட்டருக்கு மேல் ஓடும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.10 வசூலிக்கின்றோம்.

இதில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் செல்லும் தூரத்தையும், அதற்கான கட்டணத்தையும் மீட்டரில் பார்த்துக் கொண்டே பயணிக்கலாம். மீட்டர் காட்டும் கட்டணத்திற்கு மேல் ஒரு பைசா கூட வாங்கக் கூடாது என ஒவ்வொரு ஓட்டுனர்களுக்கும் கண்டிப்பான முறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் செலுத்தும் கட்டணத்திற்கு தேதி, நேரம், மூன்று சக்கர வாகன எண்ணுடன் கூடிய ரசீது பயணிகளுக்குத் தரப்படும்.

பயணிகள் எங்கள் வாகனத்தில் பயணிக்கும் போது ஓட்டுனர்கள் வருபவர்களிடம் தவறாக நடந்தாலோ, மரியாதை இன்றி பேசினாலோ அல்லது வேறு ஆபத்துகள் என்றால் உடனே பயணிகள் டிஜிட்டல் மீட்டர் அருகில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால் போதும், உடனே தலைமை அலுவலகத்தில் அலாரம் ஒலிக்கும்.

இது எதற்காக என்றால் பயணிகள் தங்கள் குறைகளை எங்களுக்குத் தெரிவிப்பதற்காகவே இந்த ஏற்பாடு. தவிர சாதாரணமாக நகருக்குள் ஓடும் மூன்று சக்கர வாகனத்தில் வசூலிக்கும் கட்டணத்தை விட நாங்கள் 50 சதவீதம் குறைவாகவே கட்டணம் வசூலிக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால் மக்களின் பணம் 50 சதவீதம் மிச்சம் ஆகிறது என்ற திருப்தி எங்களுக்கு நிறைவைத் தருகிறது.

ஒட்டுனர்களுக்கான விதிகள்:

*. “நம்ம ஆட்டோ” – ஓட்டும் பணிக்கு வரும் ஓட்டுனர்கள் முதலில் அவர்களின் ஓட்டுநர் உரிமத்தையும், பேட்ஜயும் எங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். பின்பு அவர்களுக்கு நாங்கள் தரும் நான்கு விதிகளாவன
*. முதல் விதி: 4500 ஆயிரம் சம்பளம், 30% கமிசன், கால அளவு 36 மாதம்.
*. இரண்டாம் விதி: 12 ஆயிரம் சம்பளம், 10% கமிசன், கால அளவு 40 மாதம்.
*. மூன்றாம் விதி: 15 ஆயிரம் சம்பளம், 5% கமிசன், கால அளவு 42 மாதம்.
*. நான்காம் விதி: 18 ஆயிரம் சம்பளம், கமிசன் இல்லை, கால அளவு 42 மாதம்.

இந்த விதிகளில் ஏதேனும் ஒரு விதிக்கு உட்பட்டு ஓட்டுனர்கள் பணியில் இணையலாம். இவர்கள் இந்தக் கால அளவு முடியும் வரை எந்த குறைபாடு இல்லாமலும், பயணிகள் பாராட்டும் விதத்திலும் வாகனம் ஓட்டினால் அதற்குப் பரிசாக, இக்கால அளவு முடியும் தருவாயில் இவர்களுக்கு புதிதான மூன்று சக்கர வாகனம் ஒன்று எங்கள் நிறுவனத்தால் வழங்கப்படும்.

ஓட்டுநர் பணிக்கு வருபவர்களுக்கு நாங்கள் வழங்குவது

எங்களின் மூன்று சக்கர வாகனம் தருகிறோம்.

இலவச ஓட்டுநர் சீருடை தருகிறோம்.

ஓட்டுவதற்கு எரிபொருள் தருகிறோம்.

“நம்ம ஆட்டோ” என்ற விளம்பரப் பலகையும், மீட்டரும் தருகிறோம்.

இங்கு இத்தனை மணி நேரம் தான் வேலை செய்ய வேண்டும் என்ற கால அளவு எதுவும் கிடையாது. அவரவர் மனசாட்சிப்படி வாகனம் ஒட்டினாலே போதும். அல்லது அவர்கள் ஓட்டும் நேரத்தை ஓட்டுனர்கள் விருப்பம் போல் மாற்றிக் கொண்டு பணியாற்றலாம்.

தினமும் மக்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளால் எங்களின் பொறுப்புணர்வு மேலும் மேலும் கூடுகிறது.

நம்ம ஆட்டோ ஓட்டுனரின் தகுதிகள்:

ஓட்டுநர் சீருடை அணிந்தே வாகனம் ஓட்ட வேண்டும்.

மீட்டர் போட்ட பின்பே வாகனம் ஓட்ட வேண்டும்.

மீட்டருக்கு மேல் 1 ரூபாய் கூட வசூலிக்கக் கூடாது.

போதைப் பொருட்களை உபயோகிக்கக்கூடாது.

பயணிகளிடம் கனிவான முறையில் பேச வேண்டும்.

மிதமான வேகத்திலே செல்ல வேண்டும்.

இந்த தகுதிகளை கண்டிப்பாக ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டும். இதில் பயணம் செய்பவர் ஓட்டுநர் மீது ஏதும் குறை கூறினால் பயணி பயணம் செய்த அந்தப் பயணத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அப்பயணம் இலவசமே.

இந்த விதிகளைக் கொண்ட துண்டுச்சீட்டு ஒன்று பயணிகள் பார்வைக்காக வாகனத்தில் உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும்.

ஓட்டுநர் சலுகைகள்:

ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.

இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி துறையில் வழிகாட்டுதல்.

சிறப்பாக பணியாற்றுவதற்காக சிறப்பு ஊக்கத்தொகை அளித்தல்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏற்படுத்திக்கொடுத்தல்.

வாரம் ஒரு நாள் விடுமுறை.

நம்ம ஆட்டோ அடையாளம்:

மூன்று சக்கர வாகனத்தில் மேற்புறத்தில் ஒரு புறம் தமிழிலும், மறுபுறம் ஆங்கிலத்திலும் “நம்ம ஆட்டோ” என்று எழுதப்பட்டிருக்கும். என மூசா சபீர்கான் கூறி முடித்தார்.

இது போல மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு சென்னை நகரில் தேனாம்பேட்டை சுற்றியுள்ள பகுதியில் மட்டுமே இயங்கி வரும் “நம்ம ஆட்டோ” சென்னை நகர் முழுக்க இருந்தால் இன்னும் பல மக்கள் எங்களைப் போல பயனடைவார்கள் என்று நம்ம ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறியதைக் கேட்கும் போது நமக்கும் இந்த எண்ணம் வரத்தான் செய்கிறது.

மேலும் தொடர்புக்கு : 044-65554040 & 65552020

மின்னஞ்சல் முகவரி : info@nammaauto.com
www.nammaauto.com

News Credit - http://siragu.com/   
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து உள்ளதும் மகிழ்ச்சியான விஷயம்தான். நம் விசு அய்யர் அறிவுறுத்துகிறார். படித்துப் பாருங்கள். நமக்குத் தனியானதொரு சொந்த வீடு இல்லையே என்ற கவலையை விட்டொழியுங்கள்
----------------------------------------------
தங்கம் வாங்கலையோ 
தங்கம் என்ற நிலை மாறி

வீடு வாங்கலையோ வீடு என 
விடாமல் துரத்துகின்றன ரியல் எஸ்டேட்டுகள்

பொருளாதார நிலைமை சரியில்லை என 
பொதுவாக பார்லியிலும் தினமும் விவாதம் தான்

சரி

வீடு வாங்குவது புத்திசாலிதனம் தானா
விவரமாக சிந்தித்து பார்ப்போமா

முன்பெல்லாம் வீட்டுக்கு சில ஆளு
இப்பெல்லாம் ஆளுக்கு சில வீடு

ஆவி போறதுக்குள்ள 
சாவியை கொடுன்னு மருமகள் தரும் சொத்து தகராறு

NEAT ஆக சொல்லலாம் 50 லட்சத்துக்கு குறைவா 
FLAT இப்பெல்லாம் வாங்க முடியாது

அந்த பணத்தை அப்படியே தொழிலில் போட்டால்
அசல் போக மாதம் 10/15 ஆயிரம் வரும் 

அந்த பணத்தில் வசதியான வாடகை வீட்டிலிருக்க முடியும் தானே
அதை யோசிக்காமல் மண்ணின் மீது என்ன ஆசை 

வயிற்றை கட்டி வாங்குபர்கள் சொல்கின்றனர் 
வாங்கி வைச்சா நாளைக்கு லாபம் வருமென்று

இன்றைய லட்சங்கள் 
நாளைய கோடிகள் சரிதான் ஆனால்

கோடியை வைத்துக் கொண்டு 
ஓடியா போக முடியும் இன்னொரு 

வீடு வாங்கப் போனால் அது நம்மை 
விட்டு ஓடி விடுமளவிற்குள்ளது நாளைய விலை

காசு கொடுத்தா வாங்கறோம் 
கடனாத் தானே வாங்கறோம் என சிலர் வாதம் 

வாடகை போல கடனை கட்டினால் 
வரும் சொந்த மாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு

இந்த சிந்தனையும் ஆரோக்கியமாக தெரியவில்லை
இதில் ஓளிந்து இருக்கும் வட்டியும் 

இருக்கும் வீட்டில் உள்ள வசதியும் 
இப்போ யோசித்து பார்த்தால் வேறுமாதிரி சிந்திக்க வைக்கும்

மாதம் தோறும் பராமரிப்பு கட்டணம் 
மாறாமல் வரும் பார்க்கிங் கட்டணம்
ஆண்டுக்கிருமுறை சொத்து வரி
அவ்வப்போது வரும் ரிப்பேர் தொந்தரவுகள் 

மாதம் தொடங்கியதும் 
மாறாமல் வரும் ECS தவனைகள் 

இப்படி பல 
இன்னமும் உள

காசு கொடுத்து வாங்கினாலும் பிரச்சனைகள் 
கடனாக வாங்கினாலும் தொந்திரவுகள்

தங்கம் வாங்காதீர் என 
தமிழகத்தை சேர்ந்த நிதியமைச்சர் வேண்டுகோள்

ஏரிகள் எல்லாம் 
ஏரியாக்களாச்சு என கிராம மக்கள் புலம்பல்

விளை நிலங்கங்கள்  எல்லாம் 
விற்கும் பிளாட்டுகளாகும் நிலைமை 

என்ற நிலையில் 
எப்போதாவது இது பற்றி யோசிப்பதுண்டா?

செலவு செய்யும் கலாச்சாரம் பெருகினால் 
செழிப்பாக இருக்க முடியும் தானே

வாடகைக்கு உயிர் இருக்கும் கூடே இந்த உடல் 
வாடகைக்கு இருக்க எதுக்கு சொந்த வீடு

யோசித்து பாருங்கள் மற்றவர்களிடமும்
யோனையை தவழவிடுங்கள் 

என்ற சிந்தனையை சிந்திக்க சில 
என தந்த படி

விசு அய்யர்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
விசு அய்யருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!
.....
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22 comments:

  1. எப்படியோ!... மக்களுக்கு நல்லவிதமாக சேவை செய்தால் சரி!.. மக்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!..

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள இனிய செய்தி.

    எல்லா ஊர்களிலும் இதுபோலச் செய்தால் நன்றாக இருக்கும்.

    இப்போது திருச்சியில் ஆட்டோ கட்டணத்தை விட கால்-டாக்ஸி கட்டணம் மிகவும் மலிவாக உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. வேறு வழியில்லை.ஆனாலும் நல்ல முயற்சி.

    ReplyDelete
  4. நான்
    ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
    நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்

    நியாயமுள்ள ரேட்டுக் காரன்
    நல்லவங்க கூட்டுக் காரன்

    நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
    காந்தி பொறந்த நாட்டுக் காரன்

    கம்பெடுத்தா வேட்டைக் காரன்
    பெரியவங்க உறவுக்காரன்

    எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
    ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா -

    ReplyDelete
  5. ஆமாம்
    attached family detached bathroom

    இது முன்னாளில்
    இப்போ நிலை தலை கீழாய்

    கழிவறையோடு வாழ பழகும் நம்மவர்
    கனிவான உறவுகவோடு வாழ தயங்குகிறார்கள்

    பிரச்சனைகளை "விட்டு"
    பிறர் மனம் நோகாமல்

    இன்பமாய் இருப்பதே வீடு
    இப்போ நிலைமை அப்படியா கூறு

    பாசமுள்ள வாத்தியாருக்கு
    பகிர்வை பதிந்தமைக்கு நன்றி



    ReplyDelete
  6. நல்ல ஏற்பாடு
    நலமுடன் வளரட்டும்
    தொழில் போட்டியும்
    தொல்லைமிகு அரசியலும்
    இல்லாமலே இது வளரட்டும்!!!

    சிங்கப்பூரில் எண்பதுகளிலே அறிமுகமான ஒரு நல்ல நடைமுறை... ஒருமுறை தொண்ணூறுகளில் முன்னாள் முதல்வர் இங்கு தனது மகளின் வீட்டிற்கு வந்து விட்டுப் போகும் போது இங்கிருந்த சாலை சமிக்கைகளில் பொருந்திய கேமராக்களைப் பார்த்து விட்டு,

    மறுபடியும் ஆட்சிக்கு வந்த போது அதை போன்று அப்போது சென்னையிலும் ஒரு ஏற்படைச் செய்ய போக்குவரத்து காவல் அதிகாரிகளின் கைகளில் வீடியோ கேமராக்களைத் தந்து சில ஒத்திகை நடந்தது என்று இங்கு செய்தத் தாளில் படித்த ஞாபகம்.. இப்போது நிலைமை தெரியாது!

    அறிவியலின் வளர்ச்சி நல்லதையே விரும்புவோருக்கு நல்லதொரு நண்பனாகும் என்பதை காண முடிக்கிறது...

    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  7. A good initiative that every auto-user would welcome. As a resident of Madras/Chennai for the last 35 years, I have paid as per meter only during the late '70s. In the '80s, they started tampering the meters to such an extent, no sane passenger was willing to rely on them.

    ReplyDelete
  8. ////Blogger துரை செல்வராஜூ said...
    எப்படியோ!... மக்களுக்கு நல்லவிதமாக சேவை செய்தால் சரி!.. மக்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!..////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  9. ////Blogger வை.கோபாலகிருஷ்ணன் said...
    மிகவும் பயனுள்ள இனிய செய்தி.
    எல்லா ஊர்களிலும் இதுபோலச் செய்தால் நன்றாக இருக்கும்.
    இப்போது திருச்சியில் ஆட்டோ கட்டணத்தை விட கால்-டாக்ஸி கட்டணம் மிகவும் மலிவாக உள்ளது.
    பகிர்வுக்கு நன்றிகள்.////

    கால் டாக்ஸியில் பேரம் பேச வேண்டிய அவசியமும் இல்லை. நன்றி

    ReplyDelete
  10. ////Blogger கவியாழி கண்ணதாசன் said...
    வேறு வழியில்லை.ஆனாலும் நல்ல முயற்சி./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ////Blogger வேப்பிலை said...
    நான்
    ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
    நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
    நியாயமுள்ள ரேட்டுக் காரன்
    நல்லவங்க கூட்டுக் காரன்
    நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
    காந்தி பொறந்த நாட்டுக் காரன்
    கம்பெடுத்தா வேட்டைக் காரன்
    பெரியவங்க உறவுக்காரன்
    இரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
    ஏழைக்கெல்லாம் சொந்தக் காரன்டா -/////

    எல்லோரும் (எல்லா ஆட்டோக்காரர்களும்) அப்படியா?

    ReplyDelete
  12. /////Blogger வேப்பிலை said...
    ஆமாம்
    attached family detached bathroom
    இது முன்னாளில்
    இப்போ நிலை தலை கீழாய்
    கழிவறையோடு வாழ பழகும் நம்மவர்
    கனிவான உறவுகவோடு வாழ தயங்குகிறார்கள்
    பிரச்சனைகளை "விட்டு"
    பிறர் மனம் நோகாமல்
    இன்பமாய் இருப்பதே வீடு
    இப்போ நிலைமை அப்படியா கூறு
    பாசமுள்ள வாத்தியாருக்கு
    பகிர்வை பதிந்தமைக்கு நன்றி/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலை ஸ்வாமி!

    ReplyDelete
  13. /////Blogger Kalai Rajan said...
    Ayya
    nalla oru pathivu & news////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  14. ////Blogger Kalai Rajan said...
    Ayya
    sweet news////

    ஆமாம். நல்லது. நன்றி!

    ReplyDelete
  15. ////Blogger G Alasiam said...
    நல்ல ஏற்பாடு
    நலமுடன் வளரட்டும்
    தொழில் போட்டியும்
    தொல்லைமிகு அரசியலும்
    இல்லாமலே இது வளரட்டும்!!!
    சிங்கப்பூரில் எண்பதுகளிலே அறிமுகமான ஒரு நல்ல நடைமுறை... ஒருமுறை தொண்ணூறுகளில் முன்னாள் முதல்வர் இங்கு தனது மகளின் வீட்டிற்கு வந்து விட்டுப் போகும் போது இங்கிருந்த சாலை சமிக்கைகளில் பொருந்திய கேமராக்களைப் பார்த்து விட்டு,
    மறுபடியும் ஆட்சிக்கு வந்த போது அதை போன்று அப்போது சென்னையிலும் ஒரு ஏற்படைச் செய்ய போக்குவரத்து காவல் அதிகாரிகளின் கைகளில் வீடியோ கேமராக்களைத் தந்து சில ஒத்திகை நடந்தது என்று இங்கு செய்தத் தாளில் படித்த ஞாபகம்.. இப்போது நிலைமை தெரியாது!
    அறிவியலின் வளர்ச்சி நல்லதையே விரும்புவோருக்கு நல்லதொரு நண்பனாகும் என்பதை காண முடிக்கிறது...
    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கும் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  16. /////Blogger arul said...
    thanks for sharing/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  17. ////Blogger Ganpat said...
    A good initiative that every auto-user would welcome. As a resident of Madras/Chennai for the last 35 years, I have paid as per meter only during the late '70s. In the '80s, they started tampering the meters to such an extent, no sane passenger was willing to rely on them.////

    அந்தக் காலம் திரும்ப வரவேண்டும். எல்லோருடைய நினைப்பும், விருப்பமும் அதுதான்! நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. இயலாமையால் புலம்புவதை விட்டு என்ன செய்யலாம் என்று ஆலோசித்து நடவடிக்கை எடுத்த நம்ம ஆட்டோ நிர்வாகிகள் பாராட்டுக்குரியவர்கள். இப்போது சென்னையில் 'கால் டாக்சி' போல 'கால் ஆட்டோ'வும் வந்துள்ளது.

    எல்லாத் துறையிலும் நமக்கு நாமே போன்று செயல்பட வேண்டிய காலம் வந்து விட்டது.சென்னை போன்று 400/500 குடும்பங்கள் ஒரே இடத்தில் வாழும் சூழலில் இது போன்ற திட்டங்கள் வெற்றி பெரும். அங்குள்ள குடியிருப்போர் நல சங்கமே இதனை ஏற்று நடத்தலாம்.சிறிய நகரங்களில் வெற்றிகரமாக நடத்த முடியுமா?

    வேப்பிலை சுவாமிகள் வீட்டு உரிமையாளர்கள் கொடுக்கும் 'டார்ச்சர்'களைக் கணக்கில் எடுக்கவில்லை.வாடகைக்கு இருப்பவன் அடிமையைப் போல அவர்களுக்கு.எனவே தான் இருக்க ஒரு சிறிய சொந்த‌ வீடு என்பது சரிதான். அதற்கு மேல் வீட்டில் பணம் முடக்கக் கூடாது. வேண்டுமானால் காலி மனையாக, பாதுகாக்க முடிந்தால், வைத்துக் கொள்ளலாம்.



    ReplyDelete
  19. ////Blogger kmr.krishnan said...
    இயலாமையால் புலம்புவதை விட்டு என்ன செய்யலாம் என்று ஆலோசித்து நடவடிக்கை எடுத்த நம்ம ஆட்டோ நிர்வாகிகள் பாராட்டுக்குரியவர்கள். இப்போது சென்னையில் 'கால் டாக்சி' போல 'கால் ஆட்டோ'வும் வந்துள்ளது.
    எல்லாத் துறையிலும் நமக்கு நாமே போன்று செயல்பட வேண்டிய காலம் வந்து விட்டது.சென்னை போன்று 400/500 குடும்பங்கள் ஒரே இடத்தில் வாழும் சூழலில் இது போன்ற திட்டங்கள் வெற்றி பெரும். அங்குள்ள குடியிருப்போர் நல சங்கமே இதனை ஏற்று நடத்தலாம்.சிறிய நகரங்களில் வெற்றிகரமாக நடத்த முடியுமா?
    வேப்பிலை சுவாமிகள் வீட்டு உரிமையாளர்கள் கொடுக்கும் 'டார்ச்சர்'களைக் கணக்கில் எடுக்கவில்லை.வாடகைக்கு இருப்பவன் அடிமையைப் போல அவர்களுக்கு.எனவே தான் இருக்க ஒரு சிறிய சொந்த‌ வீடு என்பது சரிதான். அதற்கு மேல் வீட்டில் பணம் முடக்கக் கூடாது. வேண்டுமானால் காலி மனையாக, பாதுகாக்க முடிந்தால், வைத்துக் கொள்ளலாம்.////

    வாடகை வீட்டில் குடியிருப்பவனுடைய கஷ்டங்கள் சொந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு முழுமையாகத் தெரியாது. சொந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு, பக்கத்துவீட்டுக் காரன் அரக்கனாக அல்லது அரை வேக்காடாக இருந்தால் தொல்லைதான். கஷ்டப்பட வேண்டிய விதி இருந்தால் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும். காசிக்குப் போனாலும் கருமம் விடாது. எல்லாம் வாங்கி வந்த வரம்! நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com