மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

10.7.13

Astrology கல்லிற்கா இந்த விலை சாமி?

 

Astrology கல்லிற்கா இந்த விலை சாமி?

தெரிந்து கொள்வோம்!

டி பியர்ஸ் நிறுவனம் பற்றித் தெரியுமா? வைரக்கற்கள் உற்பத்தியில் உலகின் நம்பர் ஒன் கம்பெனி அது. அவர்களைப் பற்றிப் படித்தால் தலை சுற்றும். உலகம் முழுவதும் பல நாடுகளில் அவர்களுக்கு அலுவலங்கள் உள்ளன. வைரச் சுரங்கங்கள் (தோண்டி எடுத்தல்), வைரங்களைத் தயாரித்தல், விற்பனை செய்தல் என்று எல்லா வேலைகளையும் அவர்கள் செய்கிறார்கள். மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 20,000 பேர்கள். ஆண்டு வருமானம், 6,100 கோடி டாலர்கள். 1888ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பெற்றதில் இருந்து இன்று வரை வெற்றியையும் தனக்கென்று ஒரு பெயரையும், மதிப்பையும் கொண்டுள்ள நிறுவனம் அது.

போட்ஸ்வானா, நாம்பியா, சவுத் ஆஃப்ரிக்கா, கனடா போன்ற நாடுகளில் அவர்களுடைய வைரச் சுரங்கங்கள் உள்ளன

விக்கி மகாராஜவிடம் கேட்டால் மேலும் பல தகவல்களைத் தருவார். சுட்டி கீழே உள்ளது. தட்டிப் பாருங்கள்:
http://en.wikipedia.org/wiki/De_Beers
----------------------------------------------------------------------
De Beers De Beers.svg
Type: Private
Industry:    Mining and trading of diamonds
Founded:     1888
Founder(s): Cecil Rhodes
Headquarters: Luxembourg, Luxembourg
Area served: Worldwide
Key people: Nicky Oppenheimer (Chairman)
Philippe Mellier: (CEO)
Gareth Penn:y (Managing Director)
Stuart Brown: (Group Finance Director and Board Member)
Products: Diamonds
Services:    Diamond marketing and promotion. Community development.
Revenue:    Decrease$6,1 Billion (FY 2012)[1]
Employees: 20,000+
------------------------------------------------------------------------
சரி சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

அவர்களுடைய காதணிகள், கழுத்தணிகள், மோதிரங்கள், மற்றும் பிற அணிகலன்கள் மிகவும் பிரபலமானவை. நம்பி வாங்கலாம்

அதைவிட முக்கியமாக அவர்கள் விற்பனை செய்யும் நவரத்தினக்கற்கள் கூடுதலான மதிப்பு மிக்கவை.

சமீபத்தில் அரிய வகை நீலக்கல் ஒன்றை ஏலத்தின் மூலம் விற்பனை செய்துள்ளார்கள். 5.16 கேரட் எடை கொண்ட ஒரே கல்லான அது சுமார் 28.8 கோடி ரூபாய்க்கு காசாகியிருக்கிறது. (அம்மாடியோவ்.....!)

ஆதாரம்: பத்திரிக்கைச் செய்தி கீழே உள்ளது
நன்றி: தினமலர்

அத்தனை கோடிகளை கொட்டிக்கொடுத்து வாங்கியவருக்கு அதனால் என்ன லாபம்? எடுத்தவரைக் கேட்டால் அல்லவா தெரியும்! லாபம் இல்லாமல், பயன் இல்லாமலா அவர் வாங்கியிருப்பார்?

பொதுவாக நீலக்கல் என்றால் விவரம் தெரிந்தவர்கள் பயப்படுவார்கள். சனி கிரகத்திற்கு உரிய கல் அது. சனியின் ஆசி உள்ளவர்கள் மட்டுமே அதை வைத்துக்கொள்ளலாம். அதாவது சனி ராசிநாதனாக அல்லது லக்கினநாதனாக உள்ளவர்கள் மட்டுமே அதை வைத்துக்கொள்ளலாம். அல்லது சனி திசை நடப்பவர்கள் வைத்துக்கொள்ளலாம். மற்றவர்கள் வைத்துக் கொண்டால் அந்தக்கல் அவர்களைப் போட்டுப் பார்த்துவிடும். உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் ஒரு சிறு நீலக்கல்லை (ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் விலைக்குள் கிடைக்கும்) வாங்கி வைத்துப் பலனைப் பரிசோதித்துப் பார்க்கலாம்.

என் நண்பருக்கு ஏற்பட்ட அனுபவம் மூலம் அது எனக்குத் தெரியும்
----------------------------------------------------------------------
சரி, இந்தக் கற்கள், அதாவது நவரத்தினக் கற்களால் என்ன பலன்? உரிய கற்களை உரியவர்கள், உரிய காலத்தில் அணிந்து கொண்டால் நன்மையானதே!

அது பற்றி பின் ஒரு நாள் விவரமாக எழுதுகிறேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

10 comments:

Dallas Kannan said...

Good Morning Sir.
Does the stone change or enhance the benifit of a planet? If that is the case Astorlogy chart predictions will change, right?

Kalai Rajan said...

அய்யா
பதிவு அருமை.உண்மை, எனது வாழ்க்கையில் நான் கண்டுள்ளேன.

manikandan said...

Informations About Diamonds Really Good, Thank you very much sir, Expecting many post reg: Stones.

manikandan said...

அய்யா ராசி நாதன் சனி தான்(கும்ப ராசி) மீன லக்னம்,புதன் தசை, நீலக்கல்லை மோதிரமாக(Gold or Silver) பயன்படுத்துவதால் என்ன நன்மை, எத்தனை carrot பயன்படுத்தலாம்...?

C.Senthil said...

அய்யா
எனக்கு ராசி நாதன் & லக்னாதிபதி இரண்டுமே சனி தான் இப்பொழுது கூட எனக்கு சனி திசை தான் ஆனால் எனக்கு குருவின் கல்லான மஞ்சள் புஷ்பராக கல்லை அணிய சொல்கிறார்கள்... ஆனால் அதற்கும் நேரம் வரவில்லை!!

Remanthi said...

" - உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் ஒரு சிறு நீலக்கல்லை (ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் விலைக்குள் கிடைக்கும்) வாங்கி வைத்துப் பலனைப் பரிசோதித்துப் பார்க்கலாம் - " எதுக்கு சார் risk எடுக்கனும், சனி பகவன்...... அவர் வேலையை செய்யட்டும். சொதித்து பார்க்க நான் விரும்பல.....

வேப்பிலை said...

கல் இல்லை கடவுள்..
கல்லை கொடுத்து கவலையும் கொடுத்துவிட்டீர்கள்

டைடானிக்கில் வரும்
நீலக் கல்லும் இப்படித்தானோ

Arasi said...

Ayya Sani Uccham Adainthavarkal Neela Kal aniyalama?

Arasi said...

Ayya Sani Uccham Adainthavargal Neela Kal Aniyalama?Ennaku Sani Ucham Anal Simha Lagnam..Neela Kal anithal enna agum?

Ak Ananth said...

நீங்கள் சொன்ன பிறகுதான் நீலக் கல் அணிய வேண்டும் என்ற ஆசையே வருகிறது. என்னதான் செய்து விடும் என்று பார்க்கலாம்.