மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.2.13

Astrology.Popcorn Post யாரைப் பார்த்து என்ன(டா) சொல்ல வேண்டும்?


Astrology.Popcorn Post யாரைப் பார்த்து என்ன(டா) சொல்ல வேண்டும்?

Popcorn Post No.41

புதிதாகத் திரையுலகத்திற்கு வருபவர்களுக்கு Screen Test எடுத்துத்தான் நடிப்பிற்குத் தேர்வு செய்வார்கள். சிலருக்கு இயற்கையிலே வசீகரமான முகத்தோற்றம் இருக்கும். சிலருக்கு Photogenic Face இருக்கும் (A subject, generally a person is photogenic if appearing aesthetically or physically attractive or appealing in photographs. Photogenic, describes the earliest method for recording camera images)

அதை வைத்து ஆசாமி கதாநாயகனுக்கு ஏற்றவன் அல்லது வில்லனாக அல்லது காமெடியனாக நடிக்க லாயக்கானவன் என்று முடிவு செய்வார்கள்.

நம் முனுசாமிகள் (அதாங்க நம் முனிவர்கள்) கிரகங்களை அவ்வாறு வகைப் படுத்தியுள்ளார்கள். Screen Test எதுவும் எடுக்க வேண்டாம (எடுக்க முடியுமா என்ன?) பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் விதமாக அதைப் பாட்டாகவும் எழுதி வைத்துள்ளார்கள்,

கீழே உள்ள பாடலைப் பாருங்கள்:

“காரியைப் பிடித்துப்பார்த்துக் கடுகவேவிதியைச் சொல்வாய்
சூரியனைப் பிடித்துச்சொல்லுவாய் பலன் பிதுர்க்கு
வீரிய பாம்பைப்பற்றி விளங்கவே யோகஞ் சொல்வாய்
சோர்விலாச் சுகங்கள்றன்னாற் களத்திர பலனைச் சொல்லே”


சனீஷ்வரனை வைத்து ஜாதகனின் விதியைச் சொல்லலாம். அவன் சந்திக்க இருக்கும் கஷ்டங்களைச் சொல்லலாம். எதிர்கொள்ளவிருக்கும் துன்பங்களைச் சொல்லலாம், ஆயுளைச் சொல்லலாம்.

சூரியனை வைத்து அவனுடைய தந்தையைச் சொல்லலாம், தந்தையால் கிடைக்கவிருக்கும் நன்மைகளைச் சொல்லலாம். தந்தைவழி சொத்துக்கள், உறவுகளைச் சொல்லலாம்.

ராகுவை வைத்து ஜாதகனுக்கு, ஜாதகத்தில் உள்ள யோகங்கள் கிடைக்குமா அல்லது ஊற்றிக் கொண்டுவிடுமா என்பதைச் சொல்லலாம்

சோர்வு அடையாத இன்பங்களுக்கும் சுகங்களுக்கும் களத்திரகாரகனான சுக்கிரனை வைத்துப் பலன் சொல்ல வேண்டும்

சரி, மற்ற கிரகங்களுக்கு? அதை அடுத்த பொட்டலத்தில் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

  1. வணக்கம் ஐயா,வர வர பொட்டலத்தில் பாப்கான் குறைவாக உள்ளதே ஐயா. நன்றி ஐயா.

    ReplyDelete
  2. வருகை பதிவு..

    ஆமாம் ரேசில் கூட
    குதிரையின் பெற்றோரை வைத்து
    குதிரையின் ஓட்டத்தை அளப்பர்

    TIME and DISTANCE தானே
    குதிரை ரேஸ்

    வாழ்க்கையும்
    ஜாதக கட்டமும்..

    இப்படி ஒன்றை வைத்து
    இன்னொன்றை சொல்வதற்கு

    அளவை என சொல்வதுண்டு பல அளவைகளில் இது

    கருதல் அளவை என்ன சரிதானா
    கணக்காளர் (ஆனந்த்) அவர்களே..

    வலம் வர பாடடிலிந்தும் அந்த பாடல்
    வந்தால் தடை வரலாம் என அமைதி

    ReplyDelete
  3. Reg: low content of popcorn, விலை வாசி தான் காரணம், அய்யாவுக்கு Time தான் காரணம்

    ReplyDelete
  4. Today's popcorn is not different taste because this taste is known by us from when the class started on 2007. Anyway thanks for your time to prepare this.

    - Arul, Tanzania

    ReplyDelete
  5. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    ”யாரைப் பார்த்து என்ன(டா) சொல்ல வேண்டும்” என்பது நம் முனுசாமிகள் எப்படி நிர்ணயித்தார்களோ ஆயினும் அதுதானே உண்மையாக உள்ளது.
    ஐந்தாம் இடமான துலாமில் உச்சமான காரி, வக்ர மட்டுமின்றி நேர் எதிர் பார்வையாக மேசத்தில் லக்கினாதி புதனோடு இணைந்த உச்ச சூரியனைப் பார்ப்பதொடு,என்னை படுத்தும் பாடு உள்ளதே,சொல்லில் மாளாது ஐயா.
    விதியின் விசித்திரம், என் தந்தையே எனக்கு முதல் எதிரி.முனுசாமிகளின் செய்யுள்களும் முற்றிலும் உண்மையே.தனுசுவில் அமர்ந்த ராகு விற்கு, கோதண்ட ராகு முற்றிலும் நல்ல பலன்களையே தரும் என்பது உண்மையா ஐயா?.
    நன்றியுடன்,
    -Peeyes.

    ReplyDelete
  6. ////Blogger sundari said...
    vanakkam sir
    present sir////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  7. Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா,வர வர பொட்டலத்தில் பாப்கான் குறைவாக உள்ளதே ஐயா. நன்றி ஐயா.////

    பொட்டலம் போடும் மெஷின் ரிப்பேர். சர்வீசிற்குக் கொடுத்துள்ளேன் சகோதரி!

    ReplyDelete
  8. /////Blogger அய்யர் said...
    வருகை பதிவு..
    ஆமாம் ரேசில் கூட
    குதிரையின் பெற்றோரை வைத்து
    குதிரையின் ஓட்டத்தை அளப்பர்
    TIME and DISTANCE தானே
    குதிரை ரேஸ்
    வாழ்க்கையும்
    ஜாதக கட்டமும்..
    இப்படி ஒன்றை வைத்து
    இன்னொன்றை சொல்வதற்கு
    அளவை என சொல்வதுண்டு பல அளவைகளில் இது
    கருதல் அளவை என்ன சரிதானா
    கணக்காளர் (ஆனந்த்) அவர்களே..
    வலம் வர பாடடிலிந்தும் அந்த பாடல்
    வந்தால் தடை வரலாம் என அமைதி////

    குதிரை ரேசிலும் உங்களுக்கு அனுபவம் உள்ளது போலிருக்கிறதே? விட்டது அதிகமா? பெற்றது அதிகமா? கற்றது அதிகமா?

    ReplyDelete
  9. Blogger manikandan said...
    Reg: low content of popcorn, விலை வாசி தான் காரணம், அய்யாவுக்கு Time தான் காரணம்

    காரணம் அடுத்த பதிவில் உள்ளது. படித்துப் பாருங்கள் நண்பரே!

    ReplyDelete
  10. Blogger Arul said...
    Today's popcorn is not different taste because this taste is known by us from when the class started on 2007. Anyway thanks for your time to prepare this.
    - Arul, Tanzania

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    ”யாரைப் பார்த்து என்ன(டா) சொல்ல வேண்டும்” என்பது நம் முனுசாமிகள் எப்படி நிர்ணயித்தார்களோ ஆயினும் அதுதானே உண்மையாக உள்ளது.
    ஐந்தாம் இடமான துலாமில் உச்சமான காரி, வக்ர மட்டுமின்றி நேர் எதிர் பார்வையாக மேசத்தில் லக்கினாதி புதனோடு இணைந்த உச்ச சூரியனைப் பார்ப்பதொடு,என்னை படுத்தும் பாடு உள்ளதே,சொல்லில் மாளாது ஐயா.
    விதியின் விசித்திரம், என் தந்தையே எனக்கு முதல் எதிரி.முனுசாமிகளின் செய்யுள்களும் முற்றிலும் உண்மையே.தனுசுவில் அமர்ந்த ராகு விற்கு, கோதண்ட ராகு முற்றிலும் நல்ல பலன்களையே தரும் என்பது உண்மையா ஐயா?.
    நன்றியுடன்,
    -Peeyes.////

    முற்றிலும் என்னும் வார்த்தை தவறானது. ஓரளவிற்கு நன்மைகளைச் செய்வார்!

    ReplyDelete
  12. ///குதிரை ரேசிலும் உங்களுக்கு அனுபவம் உள்ளது போலிருக்கிறதே? விட்டது அதிகமா? பெற்றது அதிகமா? கற்றது அதிகமா?///

    200 வருடங்களாக நடந்தகுதிரைரேஸ்
    20 வருடங்களுக்கு முன்னரே

    தடை செய்யப்பட்டது அறிவோம் தானே.பெற்றது கற்றது விட்டது என

    அய்யருக்கு எதுவுமில்லை
    அந்தப்பக்கம் கால்வைத்ததில்லை

    இந்த பாடலினை
    மௌனத்தவாறு

    நெஞ்சம் உண்டு,
    நேர்மை உண்டு, ஓடு ராஜா
    நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

    கொடுமையைக் கண்டு கண்டு
    பயம் எதற்கு
    நீ கொண்டு வந்தது என்னடா,
    மீசை முறுக்கு

    உண்டு, உண்டு என்று நம்பி
    காலை எடு
    இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு

    இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
    அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com