மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.5.16

நீ எப்படி இருக்க வேண்டும்?


நீ எப்படி இருக்க வேண்டும்?

ஆனந்தவேதம் சொல்கிறது........ நீ நீயாக இரு...
°=°=°=°=°=°=°=°=°=°=

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் மனம் கொண்டு
நீ வாழாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவரின் ஆசையில்
நீ சுகப்படாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் கண் கொண்டு
உலகைப் பார்க்காதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் கனவை
நீ காணாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் ஆசையை
உனதாக்கிக்கொள்ளாதே...
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் வாழ்வை
நீ வாழாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் சிந்தனை கொண்டு
நீ சிந்திக்காதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் வழியை
உனதாக்கிக் கொள்ளாதே . . .
நீ . . .நீயாக இரு !

 நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் நிழலை
உன் நிழலாக ஆக்காதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் பாணியை
உன் பாணியாக்கிக் கொள்ளாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு . . .
உனக்கென்று தனித்தன்மை உண்டு . . .
அதை இழந்துவிடாதே . . .

நீ . . .நீயாக இரு !
அடுத்தவராய் நீ மாறினால்,
உன்னால் ஆனந்தப்படமுடியாது . . .

நீ . . .நீயாக இரு !
நீ நீயாக இருப்பதில்
நேர்த்தியைக் கொண்டு வா . . .

நீ . . .நீயாக இரு !
அப்பொழுதுதான் நீ
உலகில் அபூர்வமாகத் தெரிவாய் . . .

நீ . . .நீயாக இரு !
சூரியன் சந்திரனாவதில்லை . . .
சந்திரன் நட்சத்திரமாவதில்லை . . .

நீ . . .நீயாக இரு !
தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .

ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்யமுடியாது . . .

அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .

எனவே நீ . . .நீயாக இரு !

கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .

தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?

நீ . . .நீயாக இரு !

காகம் மயில் போல் அழகில்லை தான் . . .

ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !

நீ . . .நீயாக இரு !

நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .

ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !

நீ . . .நீயாக இரு !

பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .

ஆனாலும் வெய்யிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !

நீ . . .நீயாக இரு !

ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .

ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !

நீ . . .நீயாக இரு !

நேற்று போல் இன்றில்லை . . .

இன்று போல் நாளையில்லை . . .

அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !

எனவே நீ . . .நீயாக இரு !

அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !

அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !

அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !

அதில் பாபம் ஏதுமில்லை !

அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !

 உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !

நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாகவே இரு !

நீ . . .நீயாக மட்டுமே இரு
===============================
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21 comments:

  1. Vanakkam Vathiyar Ayya,

    Kumaraswamy thinaiyal thangallukku ellam nallathaga nadakattum.

    Indraiya pathippu Nandraga Ullathu.

    Nandri

    S.Kumanan

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,
    இந்த பதிவுக்கு நன்றி! மிக சரியே! இதைதான் இதுவரை நான் பெற்றோர்களுக்காகவும், குடும்பத்திற்காகவும் பணம் சம்பாதிக்க கணினித் துறையில் 20 ஆண்டு பணிசெய்து விட்டேன். இனி எனுக்கு பிடித்த சமூக் சேவை செய்ய வெகு நாளாக (3 ஆண்டுகளாக) முயற்சி செய்கிறேன். இந்த பதிவு எண்ணத்தை இன்னும் உருதியாக்குகிறது. நன்றி!

    வணக்கம்,
    பன்னீர்செல்வம்.இரா

    ReplyDelete
  3. உலகம் ஒரு நாள்....
    உண்மையில் அந்த நாளுக்குள் ...

    நான் இருக்க மாட்டேன் ...
    நான் இந்த உடலை விட்டு பிரிந்து விடுவேன்

    ReplyDelete
  4. vannakam kuruji!.. very nice one. congrats.. guruji..

    ReplyDelete
  5. நல்ல அறிவுரை வாத்தியார் அவர்களே!!!

    ReplyDelete
  6. Respected sir,

    Thank q for your NEE NEEYAGA IRU. Wonderful wordings and good concept about self sustainability. Once again thank you for the above said Nee Eppadi Irukka Vendum.

    with kind regards,

    Visvanathan N

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,இதை படித்தபோது நாணலும்,அரசமரமும் கதை நினைவுக்கு வந்து நெருடிற்று.ஆனால் நாணல்,நாணலாகவே இருந்து காற்றின் வேகத்தை தாக்கு பிடித்து உயிர்த்தது.அரசமரம்,அரசமரமாகவே இருந்து வீழ்ந்தது.வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் மனிதனை தவிர்த்து மற்றனைத்தும் அவை,அவையாகவே ஆசிக்கின்றன.அதுவே இயற்கையின் சமநிலை.நன்றி.

    ReplyDelete
  8. வணக்கம் குருவே!
    மிக நல்ல பதிவு!

    ReplyDelete
  9. ///////Blogger jay kumar said...
    Super Sir/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  10. /////Blogger Kumanan Samidurai said...
    Vanakkam Vathiyar Ayya,
    Kumaraswamy thinaiyal thangallukku ellam nallathaga nadakattum.
    Indraiya pathippu Nandraga Ullathu.
    Nandri
    S.Kumanan/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கும், பிரார்த்தனைக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger Selvam R said...
    வணக்கம் ஐயா,
    இந்த பதிவுக்கு நன்றி! மிக சரியே! இதைதான் இதுவரை நான் பெற்றோர்களுக்காகவும், குடும்பத்திற்காகவும் பணம் சம்பாதிக்க கணினித் துறையில் 20 ஆண்டு பணிசெய்து விட்டேன். இனி எனுக்கு பிடித்த சமூக் சேவை செய்ய வெகு நாளாக (3 ஆண்டுகளாக) முயற்சி செய்கிறேன். இந்த பதிவு எண்ணத்தை இன்னும் உருதியாக்குகிறது. நன்றி!
    வணக்கம்,
    பன்னீர்செல்வம்.இரா/////

    நல்லது. அப்படியே செய்யுங்கள். நன்றி!

    ReplyDelete
  12. ////Blogger senthilkumar said...
    Arumai sir.../////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  13. /////Blogger வேப்பிலை said...
    உலகம் ஒரு நாள்....
    உண்மையில் அந்த நாளுக்குள் ...
    நான் இருக்க மாட்டேன் ...
    நான் இந்த உடலை விட்டு பிரிந்து விடுவேன்/////

    அந்த நாள் வந்தால் போதும்.!

    ReplyDelete
  14. /////Blogger C.P. Venkat said...
    vannakam kuruji!.. very nice one. congrats.. guruji../////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    நல்ல அறிவுரை வாத்தியார் அவர்களே!!!/////

    நல்லது. நன்றி லெக்‌ஷ்மிநாராயணன்!

    ReplyDelete
  16. /////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Thank q for your NEE NEEYAGA IRU. Wonderful wordings and good concept about self sustainability. Once again thank you for the above said Nee Eppadi Irukka Vendum.
    with kind regards,
    Visvanathan N/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,இதை படித்தபோது நாணலும்,அரசமரமும் கதை நினைவுக்கு வந்து நெருடிற்று.ஆனால் நாணல்,நாணலாகவே இருந்து காற்றின் வேகத்தை தாக்கு பிடித்து உயிர்த்தது.அரசமரம்,அரசமரமாகவே இருந்து வீழ்ந்தது.வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் மனிதனை தவிர்த்து மற்றனைத்தும் அவை,அவையாகவே ஆசிக்கின்றன.அதுவே இயற்கையின் சமநிலை.நன்றி.////

    உண்மைதான். நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  18. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மிக நல்ல பதிவு!//////

    நன்றி. வரதராஜன்!

    ReplyDelete
  19. அருமை குருஜீ

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com