மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

11.5.16

பாவங்கள் எத்தனை விதம்?


பாவங்கள் (Sins) எத்தனை விதம்?

பாவங்களின் 42 வகை. வள்ளலார் பாவங்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுக் கூறுகிறார்.

அவை வருமாறு:

1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.
2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.
4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.
6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.
7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.
8. தருமம் பாராது தண்டிப்பது.
9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.
10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.
11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.
12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
13. ஆசை காட்டி மோசம் செய்வது.
14. போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.
15. வேலை வாங்கிக்கொண்டு குறைப்பது.
16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.
17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.
18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.
19. நட்டாற்றில் கை நழுவுவது.
20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.
21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.
22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.
23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.
24. கருவைக் கலைப்பது.
25. குருவை வணங்கக் கூசி நிற்பது.
26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.
27. கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.
28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.
30. ஊன் சுவை (மாமிசம்) உண்டு உடல் வளர்ப்பது.
31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.
33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.
34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.
35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.
36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.
37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.
38. சிவனடியாரைச் சீறி வைவது.
39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.
41. தந்தை தாய் மொழியைத் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.
42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.

படித்ததில் பிடித்தது!. இதில் எந்தப் பாவத்தையும் நாம் செய்யாமல் இருப்போம்!.
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

kmr.krishnan said...

இது ஸ்ரீ வள்ளல் பெருமானின் "மனுமுறைகண்ட வாசகம்" ஆகும். இது திரு அருட்பாவில் பாடலாக உள்ளது. அதனை உரை நடைப்படுத்தி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.தன்னையே நொந்துகொள்வது போல பாடல் இருக்கும்.

உதாரணமாக, "நல்லோர் மனதை நடுங்கச்செய்தேனோ? வலிய வழக்கிட்டு மானங்கெடுத்தேனோ? தானம் கொடுப்போரை தடுத்து நின்றேனோ?கலந்த சினேகிதரைக் கலகஞ் செய்தேனோ?...............என்ன பாவம் செய்தேனோ?"

எங்க‌ளுடைய வார வழிப்பாட்டு நாம சங்கீர்த்தனத்தில் தவறாமல் இடம் பெறும்.இதைக்கூறி முடித்தவுடன்,

"என்ன புண்ணியம் செய்தேனோ சத் குருநாதா... சத் குரு நாதா
எததனை தவம் செய்தேனோ ..உன் அருள் பெறவே
என்ன புண்ணியம் செய்தேனோ ....!!"
என்று பாடுவோம்.

ravichandran said...

Respected Sir,

Happy morning. Hope all is well.

Good post. Thanks for sharing.

Have a pleasant day.

With kind regards,
Ravi-avn

Visvanathan N said...

Respected sir,

Thank you very much for your message on the subject of varieties of sin. As commented by Mr. KMR.Krishnan, it is from Vallal permuman's Thiru Arutpa. Published to know all, good thing and thanks once again for publishing this articles.

with kind regards,

Visvanathan N

வேப்பிலை said...

நல்ல வேலை இதில்
நம்ம அரசியல் வாதிகள் பற்றி இல்லை

வரதராஜன் said...

குருவே வணக்கம்!
நடு நடுங்க வைத்த பதிவு!வள்ளலார் குறிப்பிட்டுள்ள பாவங்களில் 24வது பாவம் சர்வ சாதாரணமாகப் பெரும்பாலோர் செய்கின்றனர்.1 முதல் 13 வரை உள்ள பாவங்களையும் தைரியமாகச் செய்கின்றனர்.24வது பாவத்தைச் செய்யத் தயங்காத காலமிது,ஏனெனில் அரசே ஆதரவளிக்கிறது!?
பொல்லாத காலமையா!
மூத்த மாணவர் அழகாக வள்ளலாரின் இப்பாடலை வார வழிபாட்டில் தவறாமல் பாடுவதாகக் கூறியுள்ளார், புண்ணியம் செய்தவர். அவருக்கு என் வந்தனங்கள்!
வாத்தியார் எல்லா பாவங்களையும் சொல்லிவிட்டு, இவற்றைச் செய்யாமலிருப்போம் என்று கடைசியில் கூறி முடிக்கிறார். அன்னாருக்கு எமது பணிவான வணக்கத்துடன் கூடிய மெல்லிய பாராட்டுக்கள!

adithan said...

வணக்கம் ஐயா, இவ்வளவு அறநெறிகளும்,நூல்களும் இருந்தும் எப்படி வழி தவறிப் போனோம் என்றால்,எதிர் கால சந்ததிகளுக்கு அவற்றை கொண்டு சேர்க்கவில்லை.நீங்களாவது அவற்றை விதைக்கிறீர்கள்.உங்கள் உணர்வு பெருமிதம் கொள்ள வைக்கிறது.வாழ்க.நன்றி.

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
இது ஸ்ரீ வள்ளல் பெருமானின் "மனுமுறைகண்ட வாசகம்" ஆகும். இது திரு அருட்பாவில் பாடலாக உள்ளது. அதனை உரை நடைப்படுத்தி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.தன்னையே நொந்துகொள்வது போல பாடல் இருக்கும்.
உதாரணமாக, "நல்லோர் மனதை நடுங்கச்செய்தேனோ? வலிய வழக்கிட்டு மானங்கெடுத்தேனோ? தானம் கொடுப்போரை தடுத்து நின்றேனோ?கலந்த சினேகிதரைக் கலகஞ் செய்தேனோ?...............என்ன பாவம் செய்தேனோ?"
எங்க‌ளுடைய வார வழிப்பாட்டு நாம சங்கீர்த்தனத்தில் தவறாமல் இடம் பெறும்.இதைக்கூறி முடித்தவுடன்,
"என்ன புண்ணியம் செய்தேனோ சத் குருநாதா... சத் குரு நாதா
எததனை தவம் செய்தேனோ ..உன் அருள் பெறவே
என்ன புண்ணியம் செய்தேனோ ....!!"
என்று பாடுவோம்./////

உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning. Hope all is well.
Good post. Thanks for sharing.
Have a pleasant day.
With kind regards,
Ravi-avn////

நல்லது. நன்றி அவனாசி ரவி!

Subbiah Veerappan said...

//////Blogger Visvanathan N said...
Respected sir,
Thank you very much for your message on the subject of varieties of sin. As commented by Mr. KMR.Krishnan, it is from Vallal permuman's Thiru Arutpa. Published to know all, good thing and thanks once again for publishing this articles.
with kind regards,
Visvanathan N/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
நல்ல வேலை இதில்
நம்ம அரசியல் வாதிகள் பற்றி இல்லை/////

கரெக்ட். நன்றி வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

//////Blogger வரதராஜன் said...
குருவே வணக்கம்!
நடு நடுங்க வைத்த பதிவு!வள்ளலார் குறிப்பிட்டுள்ள பாவங்களில் 24வது பாவம் சர்வ சாதாரணமாகப் பெரும்பாலோர் செய்கின்றனர்.1 முதல் 13 வரை உள்ள பாவங்களையும் தைரியமாகச் செய்கின்றனர்.24வது பாவத்தைச் செய்யத் தயங்காத காலமிது,ஏனெனில் அரசே ஆதரவளிக்கிறது!?
பொல்லாத காலமையா!
மூத்த மாணவர் அழகாக வள்ளலாரின் இப்பாடலை வார வழிபாட்டில் தவறாமல் பாடுவதாகக் கூறியுள்ளார், புண்ணியம் செய்தவர். அவருக்கு என் வந்தனங்கள்!
வாத்தியார் எல்லா பாவங்களையும் சொல்லிவிட்டு, இவற்றைச் செய்யாமலிருப்போம் என்று கடைசியில் கூறி முடிக்கிறார். அன்னாருக்கு எமது பணிவான வணக்கத்துடன் கூடிய மெல்லிய பாராட்டுக்கள!///////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

//////Blogger adithan said...
வணக்கம் ஐயா, இவ்வளவு அறநெறிகளும்,நூல்களும் இருந்தும் எப்படி வழி தவறிப் போனோம் என்றால்,எதிர் கால சந்ததிகளுக்கு அவற்றை கொண்டு சேர்க்கவில்லை.நீங்களாவது அவற்றை விதைக்கிறீர்கள்.உங்கள் உணர்வு பெருமிதம் கொள்ள வைக்கிறது.வாழ்க.நன்றி.//////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

selva kumar said...

வணக்கம் ஐயா,
பாவத்தின் வகை கண்டு அதிர்ந்து போய் விட்டேன். அறியாதோ, அறிந்தோ ஏதேனும் பாவத்தை செய்திருந்தால் அதற்கான பிராய்சித்தம் என்ன என்பதையும், அதனால் விளையும் தீமைகளையும் பற்றி கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Subbiah Veerappan said...

/////Blogger selva kumar said...
வணக்கம் ஐயா,
பாவத்தின் வகை கண்டு அதிர்ந்து போய் விட்டேன். அறியாதோ, அறிந்தோ ஏதேனும் பாவத்தை செய்திருந்தால் அதற்கான பிராய்சித்தம் என்ன என்பதையும், அதனால் விளையும் தீமைகளையும் பற்றி கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்./////

அடுத்த வாரம் எழுதுகிறேன் நண்பரே!