மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.5.16

நீங்களும் உங்களின் சொந்த வீடு கனவும்


நீங்களும் உங்களின் சொந்த வீடு கனவும்

சொந்த வீடு வாங்கும் யோகம் யாருக்கு உண்டு?

 சொந்த வீட்டில் வாழ்வதென்பதே ஒரு தனி மகிழ்ச்சிதான். எலி வலை என்றாலும் தனி வலை வேண்டும் என்பார்கள். அதுபோல நமக்கென ஒரு வீடு இருப்பதென்பது மனநிறைவை தரக்கூடியதுதானே. தற்போதுள்ள சூழ்நிலையில் சொந்த வீடு என்பது எட்டாக்கனியாக இருக்கின்றது.

சொந்த வீடு அமைய :

☆ சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் நிறைவேறுமா? வீடு வாங்குவதற்கு வசதி இருந்தாலும் ஜாதகத்தில் அவர் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற யோகம் வேண்டும்.

☆ சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது சொந்த வீடு ஒருவருக்கு நிலைக்க வேண்டும் என்றால் ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலுவான நிலையில் இருக்கவேண்டும்.

☆ சிலர் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துக்களை வைத்துக் கொண்டு சொந்த வீட்டில் வாழும் யோகத்தைப் பெறுகிறார்கள். ஒரு சிலர் சிறுக சேமித்து ஒரு சொந்த வீட்டிற்கு அதிபதியாகவும் ஆகிவிடுகிறார்கள்.

பரிகாரங்கள் :

☆ ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பலமற்று இருந்தால் வீடு அமையும் யோகம் தடைப்படும். அத்தடை நீங்க, சிவப்பு நிற மலர்களால் செவ்வாயை பூஜித்து வர விரைவில் சொந்தவீடு அமையும்.

☆ நிலம் அமைந்து, வீடு அமைய தாமதமாக ஆகும்போது ஒரு முறை “திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவரை” வணங்கி “ஓம் சரவண பவ” எனும் மந்திரத்தை உச்சரித்து, ஆலயத்திலே ஆறு மணி நேரம் தங்கி, அந்தக் கடல் நீரை எடுத்து வந்து மஞ்சளுடன் கலந்து, நீங்கள் வீடு கட்டுகின்ற நிலத்தைச் சுற்றி நீங்கள் தெளிக்க வேண்டும்.

☆ வீடு அமையாதவர்கள், நிலங்களே கிடைக்காதவர்கள், வீடு அமைவதே கஷ்டம் என்று ஏங்குபவர்கள் ஒரு முறை “சிறுவாபுரி முருகனை” ஒன்பது செவ்வாயன்று வணங்கி வர வீடு கட்டும் கனவு நிஜமாகும்.

☆ நிலம், வீடுவாங்கு யோகம் அமைய பூமிக்காரகனான செவ்வாயின் அதிதேவதையான சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வரவேண்டும்.

☆ வீடு, வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலைபவர்களுக்கு செம்புப் பாத்திரங்களைத் தானம் கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் வீடு வாங்குவீர்கள்.

☆ ராம நாமத்தை செங்கல்லில் எழுதி பெருமாள் ஆலயம் அமைக்கக் கொடுத்தால் வீடு வாங்கவும், கட்டவும் முடியும் என்பது ஐதீகம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

 1. குருவே வந்தனம்!
  இன்றைய பதிவு மிக மிகப் பயனுள்ள ஒன்று!வீடு வாங்கும்/கட்டும் பாக்கியம் யாருக்கு உண்டு என்பதும்,செவ்வாய் weak ஆக இருந்ததால், என்ன பரிகாரம் செய்தால் அப்பாக்கியத்தை அடைய வாய்ப்பு வரும் என்பதும் மிக அழகாக விளக்கப்பட்டிருக்கறது!
  நன்றி, வாத்தியாரையா!

  ReplyDelete
 2. வணக்கம் ஐயா,செவ்வாய் பற்றியும்,வீடு வாங்கும் யோகம் பற்றியும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லியிருந்தால் இரண்டு மாதமாக ஜோதிடப் பசியோடு இருந்த எங்களுக்கு இடைபலகாரம் கிடைத்தது போல் இருந்திருக்கும்.வாத்தியாரின் ஜோதிட நூல் வாங்க உமையாள்பதிப்பகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.பதில் இல்லை.நான் திருச்சியில் இருக்கிறேன்.வாங்கிய வலை நண்பர்கள் வழிகாட்டவும்.நன்றி.

  ReplyDelete
 3. Sir,
  How do parigarams work on a person's horoscope outcome?

  Each time a different josiyar looking into a horoscope will see the same thing and going to interpret the results based on mathematical calculations.

  While I don't doubt gods grace can change everything, is there any in horoscope explains this.

  ReplyDelete
 4. மதிப்பிற்குரிய ஐயா,

  இடம் / வீடு அமைவதில் சூரியனின் பங்களிப்பும் வேண்டுமா அல்லது செவ்வாயின் பங்களிப்பே போதுமனதா. .

  ReplyDelete
 5. /////Blogger வரதராஜன் said...
  குருவே வந்தனம்!
  இன்றைய பதிவு மிக மிகப் பயனுள்ள ஒன்று!வீடு வாங்கும்/கட்டும் பாக்கியம் யாருக்கு உண்டு என்பதும்,செவ்வாய் weak ஆக இருந்ததால், என்ன பரிகாரம் செய்தால் அப்பாக்கியத்தை அடைய வாய்ப்பு வரும் என்பதும் மிக அழகாக விளக்கப்பட்டிருக்கறது!
  நன்றி, வாத்தியாரையா!////

  நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

  ReplyDelete
 6. /////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,செவ்வாய் பற்றியும்,வீடு வாங்கும் யோகம் பற்றியும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லியிருந்தால் இரண்டு மாதமாக ஜோதிடப் பசியோடு இருந்த எங்களுக்கு இடைபலகாரம் கிடைத்தது போல் இருந்திருக்கும்.வாத்தியாரின் ஜோதிட நூல் வாங்க உமையாள்பதிப்பகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.பதில் இல்லை.நான் திருச்சியில் இருக்கிறேன்.வாங்கிய வலை நண்பர்கள் வழிகாட்டவும்.நன்றி.//////

  ஒருவாரம் பொறுத்திருங்கள். புத்தகம் கைக்குக் கிடைக்கும். பழைய பதிவுகளைப் பாருங்கள். 4ம் வீட்டைப் பற்றிய பதிவு. அதில் விபரங்கள் உள்ளது.

  ReplyDelete
 7. ////Blogger selvaspk said...
  Sir,How do parigarams work on a person's horoscope outcome?
  Each time a different josiyar looking into a horoscope will see the same thing and going to interpret the results based on mathematical calculations.
  While I don't doubt gods grace can change everything, is there any in horoscope explains this./////

  பரிகாரம் என்பது பணத்தைச் செலவழித்துச் செய்யும் பரிகாரம் அல்ல! மனம் உருகிய பிரார்த்தனையே பரிகாரம்!

  ReplyDelete
 8. /////Blogger dearsreeni said...
  மதிப்பிற்குரிய ஐயா,
  இடம் / வீடு அமைவதில் சூரியனின் பங்களிப்பும் வேண்டுமா அல்லது செவ்வாயின் பங்களிப்பே போதுமனதா./////

  செவ்வாயின் பங்களிப்பே போதும்!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com