மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

3.5.16

நடக்காததை நடத்திக் காட்டும் மந்திரம்!


நடக்காததை நடத்திக் காட்டும் மந்திரம்!

எல்லா காரியங்களும் தடை பட்டுக் கொண்டே இருக்கின்றதா?
அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான்!!!
நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம்:

நீங்கள் ஒரு முயற்சி எடுக்கிறீர்கள்! என்னவெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள். ஆனால், ஏதோ தடங்கல், இடைஞ்சல் என்று தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய்விட்டது. நீங்கள் மனவருத்தத்துடன் இருக்கிறீர்கள்.

அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது.

"யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம்
அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே
அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி
ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே."

இந்த ஸ்லோகத்தைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லுங்கள்.

“பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே!
தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால்
தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே!
நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின்
துன்பத்தைப் போக்குபவனே!
லட்சுமி நரசிம்மனே! 
--------------------------------------
இணையத்தில் படித்தது. உங்களுக்கு பயன்படும் என்று அறியத் தந்திருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24 comments:

raku media said...

Dear sir, I sent few mails to you regarding verfication code in galaxy class, please add me to your class room sir, Thank you

mohan said...

நாலுமுறை படித்தால்
வட மொழியும்
வசப்படும் போல்
இருக்கிறதே....

அழகுத் தமிழும்
அமிர்தமாய்
இனிக்கிறது ஐயா....

நன்றி.

"ஓம் நமோ நாராயணாய நம:"

அன்பன்
ந.மோகனசுந்தரம்,
திருநெல்வேலி.

M RAMSUDARSAN said...

வாத்தியார் அவர்கட்கு,

எனது மரியாதைகள்.

உரிய நேரத்தில் இம்மந்திரம் பகிரப்பட்டுள்ளது.
மிக்க நன்றி .

மோ . ராம்சுதர்சன்

ravichandran said...

Respected Sir,

Pleasant morning...

Jai Narashimma,

Have a great day.

With kind regards,
Ravi-avn

govind said...

Thank you Sir!

adithan said...

வணக்கம் ஐயா,சரியான தருணத்தில் எனக்காகவே அருளியது போல் உணர்ந்தேன்.நன்றி.

kmr.krishnan said...

ஸ்ரீ துர்காவைப் போல ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரும் வரப்ப்ரச்சதி. நம்பிக்கையுடன் ஜபித்தால் காரியம் சித்தியாகும்.நன்றி ஐயா!

venkatesh r said...

வாந்தியார் அவர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்திற்கு விளக்கமுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி."சரணம் ப்ரபத்யே" என்றால் "அடைக்கலம் புகுதல்" அல்லது "சரணாகதி பண்ணுதல்" என்று அர்த்தம்.மஹாலக்ஷ்மியை சரண்டைகிறேன், துர்காதேவியை சரணடைகிறேன் என்று வேத ஸ¨க்தத்தில் வருகிற மாதிரி, மற்ற ஸ்தோத்ரங்களில் ''இந்த ஸ்வாமியை சரணடைகிறேன்,'' ''அந்த ஸ்வாமியை சரணடைகிறேன்'', என்று ஒவ்வொரு ஸ்வாமி பெயரைச் சொல்லி வரும். ஒன்றிடம் ஸர்வஸங்க பரித்யாகம் (total surrender) பண்ணிவிடுவதுதான் ப்ரபத்தி. அதாவது 'ஸரண்டர்' பண்ணுகிறவன் தன்னை அடியோடு ஸைஃபராக்கிக் கொண்டுவிட வேண்டும். அப்போது எதனிடம் இவன் 'ஸரண்டர்' பண்ணுகிறானோ, அது இவனை ஆட்கொண்டு விடும். இப்படியே பகவானிடம் தன்னை அடியோடு ஸைஃபராக்கிக் கொண்டு அவனாலேயே ஆட்கொள்ளபடும் நிலையைத்தான் பொதுவாக நாம் பார்க்கிற ஸ்தோத்ரங்கள், மந்தரங்கள் எல்லாவற்றிலும் 'ப்ரபத்யே', 'ப்ரபத்யே' என்று சொல்லியிருக்கிறது.இதைப் போன்ற பகுதிகளை தொடர்ந்து பதிவிடுங்கள்.

வேப்பிலை said...

நான் ஏதாவது சொல்லி சிலரது
நம்பிக்கையை மாற்றி சொல்ல விரும்பவில்லை...

இது போல் இணையத்தில் நிறையா
இருக்கு... அத்தனையும் நம்பினால்... ?!

சரி..
மௌனமாகவே...
மௌனம் தொடர்கிறேன்...


வரதராஜன் said...

வணக்கம் குருவே!
நன்றி, ஐயா!

C.P. Venkat said...

வணக்கம் குருஜி!. அருமையான பதிவு. வாழ்த்துகள். பாராட்டுகள். மனிதன் எத்துனை அறிவுடையவனாக இருந்தாலும் தீயவவைகள் எளிதாக உள் புகுந்து அவனை படுத்தி விடுகிறது. தாம் நல்லவர்களாக இருந்தாலும் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது அவனுக்கே வெளிச்சம். ஏதோ ஒரு வகையில் ஒருவருக்கு ஒருவரால் இடையூறு அல்லது நன்மைகள், தீமைகள் நடந்து கொண்டுதான் வருகிறது. ஆனால் மனிதனுக்கு இறை பக்தி என்ற ஒரு அற்புதமான விஷயம் எளிதில் கிடைப்பது இல்லை. அல்லது புரிவதும் வில்லை. ஒரு வேளை புரிந்து கொண்டால் உலகில் அமைதி நிலவும் நல்லது நடக்கும், தீமைகள் குறையும். அப்படி பட்ட உயர்வான இறைபக்தியை உணர (பிறவிப்பெருங்கடலை கடக்க) வழிகாட்டியாக நீங்கள் கிடைத்ததே எங்களது பாக்கியம்!

Subbiah Veerappan said...

/////Blogger raku media said...
Dear sir, I sent few mails to you regarding verfication code in galaxy class, please add me to your class room sir, Thank you/////

கேலக்‌ஷி வகுப்பு முடிந்து வெகு நாட்களாயிற்று!

Subbiah Veerappan said...

/////Blogger mohan said...
நாலுமுறை படித்தால்
வட மொழியும்
வசப்படும் போல்
இருக்கிறதே....
அழகுத் தமிழும்
அமிர்தமாய்
இனிக்கிறது ஐயா....
நன்றி.
"ஓம் நமோ நாராயணாய நம:"
அன்பன்
ந.மோகனசுந்தரம்,
திருநெல்வேலி./////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி மோகனசுந்தரம்!

Subbiah Veerappan said...

/////Blogger M RAMSUDARSAN said...
வாத்தியார் அவர்கட்கு,
எனது மரியாதைகள்.
உரிய நேரத்தில் இம்மந்திரம் பகிரப்பட்டுள்ளது.
மிக்க நன்றி .
மோ . ராம்சுதர்சன்/////

மகிழ்ச்சி. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Pleasant morning...
Jai Narashimma,
Have a great day.
With kind regards,
Ravi-avn/////

நல்லது. நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger govind said...
Thank you Sir!/////

நன்றி!

Subbiah Veerappan said...

//////Blogger adithan said...
வணக்கம் ஐயா,சரியான தருணத்தில் எனக்காகவே அருளியது போல் உணர்ந்தேன்.நன்றி./////

நல்லது. நன்றி ஆதித்தன்!

Subbiah Veerappan said...

//////Blogger kmr.krishnan said...
ஸ்ரீ துர்காவைப் போல ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரும் வரப்ப்ரச்சதி. நம்பிக்கையுடன் ஜபித்தால் காரியம் சித்தியாகும்.நன்றி ஐயா!/////

என் நண்பர் ஒருவருக்கு அந்த அனுபவம் உண்டு. நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger venkatesh r said...
வாந்தியார் அவர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்திற்கு விளக்கமுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி."சரணம் ப்ரபத்யே" என்றால் "அடைக்கலம் புகுதல்" அல்லது "சரணாகதி பண்ணுதல்" என்று அர்த்தம்.மஹாலக்ஷ்மியை சரண்டைகிறேன், துர்காதேவியை சரணடைகிறேன் என்று வேத ஸ¨க்தத்தில் வருகிற மாதிரி, மற்ற ஸ்தோத்ரங்களில் ''இந்த ஸ்வாமியை சரணடைகிறேன்,'' ''அந்த ஸ்வாமியை சரணடைகிறேன்'', என்று ஒவ்வொரு ஸ்வாமி பெயரைச் சொல்லி வரும். ஒன்றிடம் ஸர்வஸங்க பரித்யாகம் (total surrender) பண்ணிவிடுவதுதான் ப்ரபத்தி. அதாவது 'ஸரண்டர்' பண்ணுகிறவன் தன்னை அடியோடு ஸைஃபராக்கிக் கொண்டுவிட வேண்டும். அப்போது எதனிடம் இவன் 'ஸரண்டர்' பண்ணுகிறானோ, அது இவனை ஆட்கொண்டு விடும். இப்படியே பகவானிடம் தன்னை அடியோடு ஸைஃபராக்கிக் கொண்டு அவனாலேயே ஆட்கொள்ளபடும் நிலையைத்தான் பொதுவாக நாம் பார்க்கிற ஸ்தோத்ரங்கள், மந்தரங்கள் எல்லாவற்றிலும் 'ப்ரபத்யே', 'ப்ரபத்யே' என்று சொல்லியிருக்கிறது.இதைப் போன்ற பகுதிகளை தொடர்ந்து பதிவிடுங்கள்./////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
நான் ஏதாவது சொல்லி சிலரது
நம்பிக்கையை மாற்றி சொல்ல விரும்பவில்லை...
இது போல் இணையத்தில் நிறையா
இருக்கு... அத்தனையும் நம்பினால்... ?!
சரி..
மௌனமாகவே...
மௌனம் தொடர்கிறேன்...//////

நல்லது. நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
நன்றி, ஐயா!/////

நல்லது. நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

////Blogger C.P. Venkat said...
வணக்கம் குருஜி!. அருமையான பதிவு. வாழ்த்துகள். பாராட்டுகள். மனிதன் எத்துனை அறிவுடையவனாக இருந்தாலும் தீயவவைகள் எளிதாக உள் புகுந்து அவனை படுத்தி விடுகிறது. தாம் நல்லவர்களாக இருந்தாலும் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது அவனுக்கே வெளிச்சம். ஏதோ ஒரு வகையில் ஒருவருக்கு ஒருவரால் இடையூறு அல்லது நன்மைகள், தீமைகள் நடந்து கொண்டுதான் வருகிறது. ஆனால் மனிதனுக்கு இறை பக்தி என்ற ஒரு அற்புதமான விஷயம் எளிதில் கிடைப்பது இல்லை. அல்லது புரிவதும் வில்லை. ஒரு வேளை புரிந்து கொண்டால் உலகில் அமைதி நிலவும் நல்லது நடக்கும், தீமைகள் குறையும். அப்படி பட்ட உயர்வான இறைபக்தியை உணர (பிறவிப்பெருங்கடலை கடக்க) வழிகாட்டியாக நீங்கள் கிடைத்ததே எங்களது பாக்கியம்!//////

அதுவும் தெய்வ அருள் என்று வைத்துக்கொள்ளுங்கள்

Gp Sarathy said...

Guruji,
I am regularly reading your lessons for long time, it is very good and well explained. Thanks.
I like to have the astrology book written by you. How can I have it.
Please inform me or mail me gpsarathyy@gmail.com
regards,
G.Parthasarathy
Chennai

Rajam Anand said...

அன்புள்ள வாத்தியார் அவர்கட்கு வணக்கங்கள்,
இலங்கையில் அதிகமான தமிழர்கள் சைவர், அங்கு வைஷ்ணவ கோவில்களின் எண்ணிக்கை கம்மி. எனக்கு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரைபற்றியவை ஒன்றும் தெரியாது,எனக்கு கல்யாணமாகாத மகளொருத்தி இருக்கின்றாள். I strongly believe that things happen for a reason. எனவே இந்த சுலோகத்தை நாள்தோறும் சொல்லிவந்தேன் அதுமட்டுமல்லாது கூகுள் ஆண்டவரையும் கேட்டு சில விடயங்கள் தெரிந்துகொண்டேன். சில மாதங்களின் பின் எனது மகளிற்கு ஸ்கானில் சில பிரச்சனைகள் தெரியவந்தன. வலையில் தேடி இன்னும் சுலோகங்கள் எடுத்து பிரார்த்திக்க தொடங்கினேன், அவளிற்கு சத்திர சகிச்சை நடந்தது ஆனால் ஸ்கானில் தெரிந்த 50 வீதமானவை அங்கு இருக்கவில்லை. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை எனக்கு introduceபண்ணியதற்கு உங்களிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
அன்புடன்
ராஐம் ஆனந்த்