மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.8.19

வயிற்றில் புளியைக் கரைக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள்!!!!


வயிற்றில் புளியைக் கரைக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள்!!!!

அழிவை சந்திக்கிறதா ஆட்டோமொபைல் சந்தை?

இந்த நிகழ்வு மோடியின் ஆட்சியால் அல்ல என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.....

இது காலத்தின் கட்டாயம்! ராகுல் பிரதமராக (அடக் கடவுளே! ஒரு பேச்சுக்குச் சொன்னேன்... கோச்சுக்காதீங்க! ) இருந்தாலும் இந்த மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று. ஒவ்வொரு தொழில் நுட்ப மாற்றத்தின் போதும் நாம் ஒன்றில் அழிந்து ஒன்றில் புதிதாய் பிறந்தே வந்துள்ளோம்.... நம்மை எப்போதும் புதுப்பித்தே வருகிறோம் எந்த ஒரு மாற்றத்திலும்!

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்சார காரை மூன்று வருடங்கள் முன் அறிமுகப் படுத்தியபோதே பெட்ரோலிய வகை கார் கப்பெனிகளின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விட்டது.

டெஸ்லா தவிர மற்ற கார் நிறுவனங்களும் அந்த சமயத்தில் தங்கள் மின்சார காரின் மாடல்களை ஆமை வேகத்தில் ஆர் & டி செய்து கொண்டிருந்தன. ₹35 லட்சம் கொடுத்து யார் வாங்கப் போகிறார்கள் என எண்ணின. ஆனால் டெஸ்லாவில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை கூடி மூன்று வருடங்களுக்கு புக் ஆகி விட்டதைக் கண்ட போதுதான் மற்றவர்கள் விழித்துக் கொண்டனர்!

டெஸ்லா மின் கார் வெளியானதும், மற்றவர்களிடமும் அவசரம் தொற்றிக் கொள்ள,  தங்களின் புதிய வகை மின்சார காரை உலக ஆட்டோ எக்ஸிபிஷனில் வைக்கத் தொடங்கினர்...

இதனிடையில் கூகுளின் ஆளில்லா கார் சற்றே புருவத்தை உயர்த்த வைத்தாலும், தற்போது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது போலத் தோன்றுகிறது.

அதே நேரம் ஃபோக்ஸ்வேகன் கம்பெனி தனது நாட்டு சகாக்களான பிஎம்டபிள்யு, ஆடி, மெர்ஸிடஸை முந்திக் கொண்டு மூன்று ரகங்களில் மின் காரை வெளியிட்டு அசத்தினர்...

சும்மா இருப்பார்களா ஜப்பானின் கார் ஜாம்பவான்கள்! தங்களின் பங்காக நிஸ்ஸான் மூலம் நடுத்தர வகை மின் காரை உருவாக்கி விட்டது. ஹோண்டா, டொயோட்டோவும் தயாராக உள்ளது.... கூடவே கொரியாவின் ஹுண்டாய், கியா!

சந்தையில் இன்றைய நிலவரப்படி, ஃபோக்ஸ்வேகன் நிறுவனமே உலக மார்க்கெட்டை முதலில் பிடிக்கும் என்றும், அடுத்து பிஎம்டபிள்யு, அடுத்து நிஸ்ஸான் என்றும் கணிக்கிறார்கள்..... டெஸ்லா தொடர்ந்து அமெரிக்க மார்க்கெட்டை தக்க வைக்கும்....

சீனாவும் தனக்கான பங்களிப்பான சகாய விலை உதிரி பாகங்கள், பேட்டரிகளைத் தந்து பின்புலத்தில் இயங்கும்!

இனி இந்தியாவில் எப்படி இருக்கும்....?

முதல் மின்காரை ஹுண்டாய் போன வாரம் முதலமைச்சரை வைத்து வெளியிட்டு விட்டு முதல் இந்திய மின் கார் எனும் பெருமையை தட்டிச் சென்று விட்டனர்... ₹35 லட்சமாம்.... அதனாலென்ன? இங்கே வாங்க ஆளிருக்கிறது! HDFC, ICICI EMI இருக்கும் வரை நாம் கவலையே பட வேண்டாம்!

இந்திய கார் ஜாம்பவான் டாடா நிறுவனம் தன் தயாரிப்புடன் ரெடியாக உள்ளது. அதே நேரம் யாருக்கும் வெளியே தெரியாமல் மாருதி சுசுகியும் தன் பங்கிற்கு ஏழைகளுக்கான மாடலை தயார் செய்து விட்டது. அந்த மாடல் மாருதி வேகன் ஆர் மாடலின் இஞ்சினை வெளியே எடுத்து விட்டு புற வடிவை பழையது போல வடிவமைத்துள்ளனர்... வேகன் ஆர் மாடல் மாருதியின் ஃப்ளாக் ஷிப் மாடல்.... அதை சட்டென்று மாற்ற ஒப்புக் கொள்ள மாட்டார்கள்....

ரொனோவும் தன் பங்கிற்கு நிஸ்ஸானின் பட்டறையில் லேபிள் மட்டும் மாற்றி தனது வாடிக்கையாளரை திருப்தி படுத்த தயாராகி விட்டது!

தவிரவும் மகிந்திரா, உலக அளவில் அதிக எண்ணிக்கை கார்களை தயாரிக்கும் கம்பெனி, தனது சீன தொழிற்சாலையில் மின் காரை வடிவமைத்து விட்டது...

மத்திய அரசின் வரி விலக்கிற்காகவே காத்திருந்தன அனைத்து நிறுவனங்களும்... மின் கார்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12% லிருந்து 5% த்திற்கு குறைத்ததும், இந்த நிறுவனங்கள், தங்களுக்குள் யார் முதலில் மின் காரை சந்தைக்குக் கொண்டு வரப் போகிறோம் எனும் போட்டிக்குத் தயாராகி விட்டது!

இனி உங்கள் பழைய கார்கள் கதி என்ன?

2025 இல் மின்கார்கள் சந்தையில் முழு வீச்சில் இயங்கும்....

பழைய கார்களை மின் கார்களாக மாற்றும் ஒர்க்ஷாப்கள் அதிகரிக்கும். ஆனால் இதற்கு அரசு அனுமதி தருமா எனத் தெரியவில்லை. அப்படி மாற்ற முடியவில்லை என்றால் பேரிச்சம் பழம் அல்லது எள்ளும் தண்ணியும்தான்....

மின் கார்கள் விலை சுமார் ₹10 லட்சத்திலிருந்து (விலை குறைந்த மாருதி மாடல் ஒரு சார்ஜிங்கில் 165 கிமி) ₹35 லட்ச நிஸ்ஸான், ரெனோ, ஃபோக்ஸ்வேகன், டொயோட்டோ, (265 கிமி) அடுத்து ஒரு கோடி வரை பிஎம்டபிள்யு, ஆடி (400 கிமி) என தோராய விலை இருக்கும்....

மின்காருக்கான லித்தியம் அயர்ன் பேட்டரிகளே இனி 30 வருடங்களுக்கான பரபரப்பு சந்தையாக விளங்கப் போகிறது. கிட்டத்தட்ட வீட்டு இன்வெர்ட்டர் பிசினஸ் போல. வாங்கி விற்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும்... அதே போல சார்ஜர்கள் (ஜிஎஸ்டியை இதற்கும் 5% ஆக குறைத்துள்ளனர்). சார்ஜர் மார்க்கெட் ஏசி ஸ்டெபிலைசர் மார்க்கெட் போலவே. பல கம்பெனிகள் இதில் இறங்க வாய்ப்புள்ளது.

பயண வழியில் நாம் தேடும் பெட்ரோல் பங்க், பங்க்சர் கடை போல மின் சார்ஜர் கடைகள் நிறைய ஹைவேக்களில் பார்க்கலாம்.... சின்ன வியாபாரம்தான்.... ஒரு மணி நேர சார்ஜுக்கு ₹500 வரை வாங்கலாம்.... வண்டிகள் நிறுத்த நிறைய இடம் தேவைப்படும்.... அங்கே ஒரு மணி நேரத்தை செலவு செய்ய சிறிய ஷாப்கள் அல்லது பானி பூரி ஃபாஸ்ட் ஃபுட் அவுட்லெட்கள், தவிர்க்கவே முடியாமல் வழக்கம் போல இந்தி பேசும் பீகார் மற்றும் பெங்காலி பையன்களும், சகாயமான சம்பளத்தில்!....

அரசு பெட்ரோலிய இறக்குமதியை குறைத்து, அந்நிய செலாவணி இருப்பை ஏற்றிக் கொண்டு, தனது ஜிடிபியை உயர்த்திக் காட்டும்....

மின் உற்பத்தி அதிகரிக்கும். குறிப்பாக சூரிய சக்தி. அதை சார்ந்த தொழில்கள் அதிகரிக்கும்... தண்ணீரில்லாத மானாவாரி நிலங்களில் சோலார் பேனல் தோட்டங்களை வழியுங்கும் இனி காணலாம்.... வீட்டு மாடிகளில் சோலார் செல்களால் நிரப்பப் படும்... பெட்ரோல் போல மின்சார விலையும் உயரும். ஆனால் கட்டுக்குள் இருக்கும்.... வீட்டில் காற்றாலைகளால் மின் உற்பத்தி பெருகும்! சுய சார்பு அதிகரிக்கும்.... (பக்கத்து வீட்டிலிருந்து 'பத்து யூனிட் கரெண்ட் கிடைக்குமா? எங்க வீட்டு சார்ஜர் வேலை செய்யலை' எனும் மத்திய வர்க்கத்தின் கொடுக்கல் வாங்கல் இதிலும் தொடரும்).

நேற்றைய தினம் என் காரை சர்வீசுக்கு விட்டேன். பில் ₹27000 வந்தது....

2025 இல் இதே கார் சர்வீசுக்கு வரும்போது டிசி மோட்டாரின் கார்பனை மட்டும் மாற்ற ₹500 செலவு மட்டுமே என எண்ணும்போது, எனக்கு சிரிப்புதான் வந்தது!

அமெரிக்காவில் டெஸ்லா கம்பெனி வாசலில் ஒரு வாசகத்தை வைத்துள்ளார்கள்!

"இந்தியாவின் பழம்பெரும் புராண இதிகாசங்களே காந்தம் பற்றிய எனது ஆராய்ச்சியை ஊக்குவித்தது! அவைகளில் இல்லாத தொழில் நுட்பமே இல்லை. இன்னொரு ஜென்மம் என்று இருந்து நான் பிறக்க நேரிட்டால், இந்தியாவில் பிறக்கவே விரும்புகிறேன்!
     - நிகோலஸ் டெஸ்லா!"

இனி எங்க ஆட்சிதான்!

- டிமிட்த் பெட்கோவ்ஸ்கி எனும் எலக்ரிகல் பொறியாளன்
----------------------------------------------------------------





படித்து அதிர்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
====================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3 comments:

  1. மோடி புராணம் பாடுறத விட்டுட்டு உங்களுக்கு நல்ல தெரிஞ்ச ஜோசியத்தை பார்க்கலாமே தலைவரே..

    அரசியல் வேறு , ஜோதிடம் வேறு , ரெண்டையும் ஏன் போட்டு குழப்பி கொள்கிறீர்கள் ...உங்கள் சாதக உணர்ச்சியை உங்களோடு வைத்து கொள்ளுங்கள் .. ஏன் இப்படி இதிலும் தவறான புராணம் பாட வேண்டும்.

    ReplyDelete
  2. /////Blogger P. CHANDRASEKARA AZAD said...
    மோடி புராணம் பாடுறத விட்டுட்டு உங்களுக்கு நல்ல தெரிஞ்ச ஜோசியத்தை பார்க்கலாமே தலைவரே..
    அரசியல் வேறு , ஜோதிடம் வேறு , ரெண்டையும் ஏன் போட்டு குழப்பி கொள்கிறீர்கள் ...உங்கள் சாதக உணர்ச்சியை உங்களோடு வைத்து கொள்ளுங்கள் .. ஏன் இப்படி இதிலும் தவறான புராணம் பாட வேண்டும்.//////

    எனக்கு எந்த சாதக உணர்வும் இல்லை. சொல்ல வந்தது. நாட்டில் நிலவும் பொருளாதார குழப்பங்கள். அவ்வளவுதான். உங்களின் அறிவுரைக்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  3. Chandra sir,
    Our Vathiyar always have fun with the messages, that is why we all are fans to him, so nothing wrong for the sensational first line.
    By
    N. Lakshminarayanan

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com