மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

7.11.10

என்னைக்கோ ஒருநாள் எனும்போது, அது தப்பில்லை!

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 என்னைக்கோ ஒருநாள் எனும்போது, அது தப்பில்லை!

    என்னென்னவோ நினைத்த வண்ணம் அந்த ஜப்பானியப் பாட்டு கேட்க, கேட்க ஒரு வித்தியாசமான உணர்வை எழுப்பியது..flute சவுண்ட் ரொம்பவே சலனத்தை உண்டுபண்ணியது..

    என்னதான் வேற்றுமொழிப் பாடல்கள் மனத்தைக் கவர்ந்தாலும் பொருள் புரியாமல் என்னதான் சொல்கிறார்கள் என்று சுத்தமாகப் புரியாமல் பெரும் அவஸ்தைதான்..இருந்த போதிலும் எனக்கு ரங்கீலாவில் 'ஹாய் ராம்' பாடல் இதயத்தைக் கசக்கிப் பிழியும் அளவுக்கு உணர்ச்சி வேகத்தை ஊட்டும்..

    எதை அர்த்தமாக உள்ளடக்கியது என்பது படத்தில் பார்க்கும் போது உடலையே முறுக்கித் துவட்டி அடிக்கும் விதமான ஜாக்கி ஷெராப் ஊர்மிளா நடன மூவ்மென்ட்டுகள்  என்று படமாகப் பார்த்தாலுமே மொழி புரியாமல் என்ன சொல்லப் படுகிறது என்பது புரியாமல் கண்ணைத் திறந்து காட்டில் விட்டாலுமே காம்பஸ் இல்லாமல் வடக்கு தெற்கு தெரியாத கதைதான்..

    அதனால்  பாடல்கள்..என்றாலே தமிழ்ப் பாடல்கள்தான் என்றாகிப் போனது..

    எனக்குப் பிடித்த குரல் என்றால் அது ஜானகிதான்..

    ரொம்பப் பிடித்தது என்றால் அது ஜென்சி தான்!

    இவளது குரலோ சைலஜாவை ஒத்திருந்தது..இனிமைதான் என்றாலும் சின்னதாக கீச்சுக் குரலாகிப் போனது கொஞ்சம் மெருகூட்டத்தவறியது..  இந்த அழகுக்கு குரல் சரியாகப் பொருந்தி இருக்கவில்லையோ என்றே நினைக்கத் தோன்றியது..இந்த உலகத்தில் நாம் நினைத்தது போலவே எல்லாம் படைக்கப்பட்டிருக்கிறதா என்ன? எங்கே சுற்றினாலும் அவரின் நினைவுகளே மையம் கொண்டு அதைச் சுற்றியே நினைப்பு போவதுதான் ஆச்சரியம்..

    கன்னங்களில்  விழுந்து புரளும் செங்குழல் கற்றைகளை அலட்சியமாக தலையைக் குலுக்கி சரிசெய்து கொள்ளும் அவளின் மேனரிசம் மனதில் வந்து வந்து போனது..அவளின் இந்தக் குலுக்கலுக்கு ட்யூன் போடுவது போல அசைந்தாடிய காதில் மாட்டிய பெரிய சைஸ் வளையங்கள்   அவளது தலைக் குலுக்கலுக்குப்  பின்னும் சில நொடிகளைக் கொன்ற பின்பே ஓய்வுக்குத் திரும்பின...பிரவுன் நிற கண்கள் உயிர்த்துடிப்புடன்  ஏதேதோ தகவல்களை எனக்குப் பகிர்வதாகவே பட்டது அவளுடன் இருந்த கணங்களில்..

    முதல்தடவை சந்தித்துப் பேசும்போது அவளின் கண்களை அல்லது புருவமத்தியை மட்டுமே பார்த்துப் பேசுவதுதான் பண்பு என்று எவ்வளவுதான் நான் எச்சரிக்கையாக இருந்தபோதிலுமே என்னையும் அறியாமல்  அவள் அவ்வபோது தன் செவ்விதழ்களை நாவினால் ஈரப்படுத்தியதைக் கவனிக்கத் தவறவில்லை..அவளும் கவனித்திருப்பாளோ? இவன் ஒரு ஜொள்ளு பார்ட்டி என்று ஏதும் நம்மைப் பற்றி நினைத்திருப்பாளோ? கழுத்துக்குக் கீழே பார்க்காமல் பண்புடன்தானே நடந்துகொண்டோம்..

    பெண் நாகத்துக்கென்று மாதவி போன்ற சிலமுகவெட்டுக்களைத்தேர்ந்தேடுத்து தமிழ் சினிமா ஏற்படுத்தியிருந்த தாக்கத்தில் அப்படியொரு முகவெட்டை இவளிடம் கண்டு அதில் நாகத்தின் வேகம் சீறலாய் அவள் முகத்திலும் கண்களிலும் பொதிந்து கிடந்ததாய் உணர்ந்தேன்..செதுக்கிய கன்னக் கதுப்புகளில் மெலிதாக இழைந்திருந்த சிவப்பு ஷேட் அவளது நிறத்துக்கு மேலும் ஒரு கலர் ஷேட் தேவைதானா என்றே அங்கலாய்க்க வைத்தது..அதிலும்  ரெஸ்டாரெண்டின் சற்றே மஞ்சள் கலந்த மங்கிய வெளிச்சத்தில்  இந்த கலர்ஷேட் கொஞ்சம் பிரமிப்பையே கொடுத்தது என்றால் அது மிகையாகாது!

    என்னவென்று ஊகிக்க முடியாத ஒரு brand perfume சுகந்தமணம் நாசியை வருடியவண்ணம் கிறங்கடித்திருக்க, பேக்ரௌண்டில் லைட் மியூசிக் வேறு..மொத்தத்தில் வேறு ஏதோ உலகத்தில் இருப்பதைப் போன்றதொரு ரம்மியமான சூழலைத் தோற்றுவித்திருந்தது.பேச்சும் வேறு சுவாரஷ்யத்தினைக் கூட்டியிருக்க தன்னை மறந்து லயித்து இப்படி நேரம் போனதே தெரியாமல் கட்டுண்டு கிடப்பதைத்தான் எனக்கே தெரியாமல் என்னுள் புகுந்து வசியம் செய்வது என்று சொல்கிறார்களோ?  

    இந்த கணங்களுக்காக கொஞ்சம் பணம், நேரம் தொலைந்தால்தான் என்ன? வாழ்க்கை  ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது விஷயங்களாலேயே பொலிவு பெறுகிறது..அந்த வகையில் இன்று இவளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததுக்கு ஒரு சின்னதா சந்தோஷப்படுறதை வுட்டுட்டு ஏன் ரூமுக்குத் திரும்பிப் போக முடியலையேன்னு நினைச்சு வருத்தப் படணும்?

    ஒகே..லீவ் இட்.. நேரமாயிடுச்சு..என்ன பண்ணலாம்?..மணி பத்தை நெருங்கிக் கொண்டிருக்க..இரவு நேரத்து காற்று சில்லிப்பைக் கூட்டியிருந்தது..இவ்வளோ நேரம் மக்டொனல்ட்ஸ்லே கதையடிச்சுக்கிட்டு இருந்ததாலே ஏர் கண்டிசன் செட்டப்பிலே குளிர் தெரியலே..சீக்கிரமே வீட்டுத் திரும்பிடுவோமின்னு நினைச்சு ஓவர்கோட் வேற இல்லாமே வந்தாச்சு..

    சரிதான்..என்னிக்கோ ஒரு நாள்..இப்பிடி..வித்தியாசமான அனுபவ லிஸ்டில் இதையும் சேர்த்துட வேண்டியதுதான்..

    யோசித்தவாறே நடந்து கொண்டிருந்த நான் திரும்பிப் பார்த்தபோது ஸ்டேஷனிலிருந்து  கொஞ்சம் தூரமாகவே வந்து விட்டிருந்தேன் என்று புரிந்தது..

    சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் சற்று தூரத்தில் ஏதோ ஆட்டோமாடிக் வெண்டிங் மெஷின் கண்ணில் பட்டது..  குளிருக்கு இதமா ஏதும் ட்ரிங்க்ஸ் இருக்கான்னு பாக்கலாம்..கிட்டே நெருங்கிப் பார்த்தால் சிகரட் வெண்டிங் மெஷின் ..ஆகா... ரொம்ப நாளாச்சு.. நிப்பாட்டி..  இருந்தாலும் இப்போ மூடுக்கு அடிக்கணும்போல தோணுது..என்ன யோசனை..எப்போவோ ஒரு நாள் அடிக்குறதுலே அப்பிடி என்னதான் ஆகிடப் போகுது ...ம்ம்ம் ..சரிதான்..

    மூணு நூறு yen சில்லறை காய்ன் எடுத்து காய்ன்  ஸ்லாட்டில் போட்டு பட்டனை அழுத்த ஒரு parliyament சிகரட் பாக்கெட் வந்து விழுந்தது..எப்போவுமே லைட்டர் பர்ஸ்லேயே வெச்சுருக்குறதாலே வசதியாப் போச்சு..எடுத்து ஒரு சிகரெட்டை வாயில் வெச்சு பத்தவெச்சேன்..லேசா ஒரு இழுப்பு இழுத்து கொஞ்ச நேரம் உள்ளடக்கி குளிருக்கு இதமா உணர்ந்தபோது லேசா தலைக்கு கொஞ்சம் தூக்கலாத் தெரிய ரொம்ப நாளா அடிக்காம இருந்துட்டு அடிக்கும்போது இப்படித்தான் இருக்கும்னு உணர்ந்தேன்..நிதானமா அடுத்த ' பஃப் ' இழுத்து விட்டபடியே அங்குமிங்கும் நோட்டமிட்டேன்..ரோட்டோரம் ஒரு பாறை கண்ணில் பட அதில் சென்று சாய்ந்தவாறு உட்கார்ந்தேன்..இந்தப் பக்கம் அவ்வளவாக ஆட்கள் நடமாட்டமில்லை..பத்து மணிக்கெல்லாம் மக்கள் புழக்கம் குறைந்து விட்டது..சனிக் கிழமை என்றால் நைட் அக்டிவிடீஸ் அதிகமா இருக்கும்..இன்னிக்கு வெள்ளிக் கிழமைங்குறதாலே ஒருவேளை ஊரடங்கிப் போச்சோ? வலது பக்கம் பிரிந்தசந்தில் இருந்து ஏதோ சத்தமாகப் பேசிச் சிரித்தபடியே நாலு பேர் கடந்து போனார்கள்..அவர்களில் ஒரு சின்ன வயசுப்பெண்வேறு  ..குடித்திருப் பார்கள் போல..நடை காட்டிக் கொடுத்தது..சந்தை எட்டிப் பார்த்தேன்..நைட்க்ளப் போல..பூசணிக்காய் சைசில் சிவப்பு  லைட் தொங்க விட்டிருந்தார்கள்...

    மேலே ஆகாயம்.. நிச்சலனமாக அதிக வெளிச்சமுமில்லாமல் அதேநேரம்.. கும்மிருட்டுமில்லை .நிலா ..எங்கே..என்று தேடித் பார்த்தேன்..எனக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தது ..கழுத்தைத் திருப்பிப் பார்க்க சிரமாயிருந்ததால் பாறையில் கொஞ்சம் மேலேறி அண்ணாந்து வானத்தைப் பார்த்தவண்ணம் படுத்தேன்..பாறையின் மேடு பள்ளங்கள் முதுகில் அழுத்த கொஞ்சம் அப்படி இப்படி புரண்டு ஓரளவுக்கு வசதியாக படுத்த வண்ணம் அடுத்த ' பஃப் ' இழுத்து விட்டேன்..நிம்மதின்னா..இதுதான்..

    iPod தேடி எடுத்து பிளேலிஸ்டில் தேடி 70 எவர்கிரீன் ஹிட்சில் துழாவி..' வெள்ளி நிலாவினிலே..தமிழ் வீணை வந்தது..அது பாடும் ராகம்.. நீ ராஜா..' என்ற 'சொன்னது நீதானா' படத்து ஜெயச்சந்திரன்  பாட்டை செலக்ட் செய்து  ஹெட் செட்டைக்  செருகி மெல்லிய சத்தத்தில் இன்பத்தேனை புகவிட்டபடி இன்னும் சற்று ரிலாக்ஸ்ஸாக  அசைந்து படுத்தேன்..ஆங்காங்கே விண்மீன்களை அள்ளித் தெளித்து..கருநீலவானம்..  தேங்காய்க் கீற்று  போலே..சின்னதாய்..வெள்ளி நிலா...இன்னும் தூரத்தில் ஒரு புள்ளி 'ப்ளின்க்' ஆகிக் கொண்டிருப்பது தெரிந்தது..கூர்ந்து கவனித்த போது  இன்னும் சரியான உயரத்தில் ஏதோ மெதுவாக ஊர்ந்து செல்லும் சிறு புள்ளியான வெளிச்சம் தெரிந்தது..இது ஏதும் ஸ்பேஸ்க்ரேப்ட் ஆக இருக்குமோ? இவ்வளவு உயரத்துக்கு பிளைட் போகாதோ?என்று சந்தேகம் தோன்றியது..இது சின்ன வயசுலேருந்தே தோணுகிற சந்தேகம்தான்..இன்னிக்கும் தோணியது.. பெரிசும் சிறுசுமாக எண்ணிக்கையிலடங்காத விண்மீன்கள் கூட்டம்.. என்ன ஒரு அருமையான சூழல்..வெட்டவெளி..இப்படி..இயற்கையை அனுபவிப்பதற்கு மேலே ஆகாயத்தில் வேறு சொர்க்கம் இருக்கிறதா என்ன? உளறுகிறார்கள் மடையர்கள் என்று தோன்றியது..

    ஷூவில் ஏதோ தட்டுப்பட கொஞ்சம் சுதாரித்து எழுந்தவாறு பார்த்தால் யாரோ ஒரு ஆளின் தலை கண்ணில் பட்டது..யாரிவன்? எதற்கு நம்மை எழுப்புகிறான்? என்று குழப்பத்துடன் சற்று மிரட்சியுடனும் பாறையி லேருந்து இறங்கினாலும் அவன் ஏதோ சொல்கிறான் எனக்குத்தான் கேட்கவில்லை..என்று புரிந்து ஹெட்செட்டைக் கழட்டி என்ன? என்றொரு பார்வை பார்த்தேன்..'பாபுஜி' என்று வணக்கம் சொல்லும் தோரணையில் தலையை குனியும் இவன் முகத்தின் அந்தப் பக்கத்துக்கு கொஞ்சம் வெளிச்சம் பட்டுக்கொண்டிருந்ததால் அந்தப் பக்கமாய் நகர்ந்து  பார்த்தபோதுதான் நீக்ரோ என்பது புரிந்தது..சுருள் முடியுடன் முரட்டு ஆளாய்த் தெரிந்தான்..காந்தியின் நேட்டால் சேவை..இங்கும் இந்தியனைக் கண்டால் 'பாபுஜி' என்றே கூப்பிடுகிறார்கள் இவர்கள்..

    'என்ன வேண்டும்' என்றேன்..

    'ரெகுலர் சிஸ்டம் 2 ஹவர்ஸ்..7000 yen தான்..இன்னிக்கு அதிகம் கூட்டமில்லை..அதுனாலே 5000 yen தான் .நைட்டு முழுசுமே தங்கிக்குங்க..ட்ரிங்க்ஸ் எவ்வளோ வேணும்னாலும் குடிச்சுக்கலாம்..20 வயசுப் பொண்ணுங் கதான் சப்ளையர்ஸ்...பட் ஒன் கண்டிஷன்..தொடக் கூடாது..பேசிட்டே இருக்கலாம்..நீங்களே யார் வேணுமின்னு  செலக்ட் பண்ணிக்கலாம்..பொண்ணுங்களுக்கு ட்ரிங்க்ஸ் ஆர்டர் பண்ணுணீங்கன்னா அதுக்குத்  தனி  பில்.'னு

    மெனு கார்டு அயிட்டமா லிஸ்டை நீட்டி வாசித்தான்..பக்கத்து சந்து க்ளப்பைக் கையை காட்டி.ஆள் பிடிக்கும் வேலை பார்ப்பான் போலே..

    'உன்னை யாரு இதெல்லாம் இப்போ கேட்டா? நான் அதுக்காக வரலை..நீ வேற ஆளைப் பாரு..எனக்கு இதெல்லாம் பழக்கமில்லே..' என்று சொன்னாலும் அவன் விடுவதாக இல்லை..

    'பாபுஜி..பாபுஜி..இன்னிக்கு ஒரே தரம்..ஜஸ்ட் வந்து ஒரு ட்ரையல் பாருங்க..உங்களுக்குப் புடிச்சிருந்தா continue பண்ணலாம்..இல்லேன்னா வேணாம்..உங்க விருப்பம்தான்..'

    கொஞ்சம் சபலப்பட்டால் அவ்வளோதான் 'யப்பா..நீ..ஆளை விடு.. எனக்கு வேற வேலை இருக்கு'ன்னு உர்ருன்னு மூஞ்சியைக்காமித்தபடியே விருட்டென்று நடையைக் கட்டினேன்..

    மனுஷன் கொஞ்ச நேரம் நிம்மதியாய்ப் படுக்க முடியலியே..இவனுங்க தொல்லை பெரும் தொல்லை யாயில்லே இருக்கு..ஏரியாவையே குத்தகைக்கு எடுத்துருப்பானுங்க போலருக்கே?

    மொத்தமா சுருட்டிட்டுதான் விடுவானுங்க போலருக்கே..இது ஒரு பொழப்புன்னு கிளம்பிடுறானுங்க திட்டியபடியே..இன்னொரு சிகரெட் எடுத்துப் பத்தவெச்சேன்..காரணமேயில்லாமல் டென்சன் ஏறி கொஞ்சம் படபடப்பாக இருந்தது..சிகரெட் இழுத்தால் வேறு ஏதோ கருகின பொசுங்கின வாடை புகையாக வாய்க்குள் புகுந்தது

    என்ன என்று பார்த்தால் பில்ட்டர் சைடை பத்த வெச்சு விட்டேன்..ச்சே..டென்சனில் என்னதான் பண்றோமுன்னு நிலை தடுமாறிப் போகுது..தூக்கிப் போட்டுவிட்டு வேறு ஒண்ணை எடுத்து கவனமாப் பத்தவெச்சேன்.. நாம கேக்காமே இவனா வந்து ஏன் இதெல்லாம் நம்மகிட்டே சொல்றான்..என்னதான் பதில் சொன்னாலும் லேசுல வுடமாட்டேங்குறானே? நாமில்ல ஏதோ தப்புப் பண்ணிட்டப்போலே அந்த இடத்தைக் காலி பண்ணி நகர்ந்தாப் போதும்னு ஓடியார்ர மாதிரி ஆகிடுச்சு..வெக்கங்கெட்டவன் ..கொஞ்சம் அசந்து அவன்கூடவே போயிப் பார்த்திருந்தால் என்னா ஆயிருந்திருக்கும்?

    நமக்குத்தான் இது புதுசு..ஸீன் போடுறோம்..அவனவன் போயிட்டு வந்துட்டுத்தானே இருக்கான்..?இந்த நாட்டுலே இதெல்லாம் சர்வ சாதாரணம்..நல்ல வேளை.. இத்தோட போச்சு..வேறு மாதிரி இடமா இருந்தால் வேற என்னத்துக்கெல்லாம் கூப்டுவானுங்களோ? இப்பிடியே பலதுமாய் எண்ணவோட்டத்தின் அலைவேகம் எகிறி டர்புலேன்ட் ஆகிப் போனது. சற்று முன் படுத்து ஆகாயத்தப் பார்த்து 'இதைவிட சொர்க்கம் வேறு உண்டா?' ன்னு கேட்டதுக்குத்தான் பதில் சொல்லும் விதமாய் இவன் வந்து 'இன்னிக்கு நைட் கிளப்புக்கு வந்து பாரு'ன்னு  வந்துருப்பானோ? வேகவேகமாக டென்சனில் இழுத்த இழுப்பில் சிகரெட் காலியாகிப்கியிருந்தது..இன்னொண்ணு பத்தவெச்சே ஆகணுமுன்னு ஏதோ ஒரு வேகம்..அடுத்ததைப் பத்த வெச்சேன்..தண்ணீர் தாகம் எடுத்து தொண்டை வறட்சியாய் அங்குமிங்கும் ஆட்டோமாடிக் வெண்டிங் மெஷின் இருக்கான்னு  பார்த்தபடியே வேகம் வேகமாய் நடையைக் கட்டினேன்..

    பாட்டு கேட்டால் கொஞ்சம் படபடப்பு அடங்கும்..iPod  எடுத்து randomமாய் பாட்டைப் போட்டால்...

    'கண் போன போக்கிலே கால் போகலாமா?
    கால் போன போக்கிலே மனம் போகலாமா?
    மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?'
பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.
  
    ஆக்கம்: நெப்போலியன் ஞானப்பிரகாசம், டோக்கியோ, ஜப்பான்.

 மைனரின் எழில் மிகு தோற்றம். 
மைனர் புதிதாக ஒரு படத்தை அனுப்பி வைக்கும்வரை 
இந்தப்படம்தான் பதிவில் வரும். பொறுத்துக்கொள்க!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++===


வாழ்க வளமுடன்!''''

23 comments:

kmr.krishnan said...

ச்ச்சும்மா பேருக்குத்தான் "மைனர்வாள்".ரொம்ப சுத்தம்தான்.அதற்கு அந்த 'டாப்பர் அன்கிள்' இவரை 'பாபுஜி'என்று அழைத்ததுதும் ஒரு காரணம் என்று எனக்குத்தோன்றுகிறது.

//"..காந்தியின் நேட்டால் சேவை..இங்கும் இந்தியனைக் கண்டால் 'பாபுஜி' என்றே கூப்பிடுகிறார்கள் இவர்கள்.."//

ஏதோ போங்க!மஹாத்மா காந்திஜி இந்த அளவுக்காவது பயன்பட்டிருக்கிறாரே!
காந்திஜி போதித்த பிரமச்சரியம் இவரை வந்து தாக்கிக் காப்பாற்றிவிட்டது.

இந்தியாவைத்தவிர மற்ற எல்லா நாடுகளிலும் காந்திஜி இன்றும் மதிக்கப்படுகிறார்.130 நாடுகள் அவர் நினைவாக தபால் தலை வெளியிட்டு
கெளரவ‌ப்படுத்தியுள்ளார்கள்.இந்தியாவில் ஒரு கூட்டமே கிள‌ம்பி அவரை அவதூறு செய்வதையே தங்கள் முதல் கடைமையாகக் கொண்டுள்ளனர்.

காந்தி ஜெயந்திக்கு அவர் படத்தினை சுத்தம் கூடச் செய்வதில்லை. மற்றொரு தலைவருடைய பிறந்த,இறந்த இரு நாட்களும் அவருடைய‌ படத்திற்கு அது வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் அலுவலக நேரத்தில் எல்லோரும் ஊர்வலமாகச் சென்று மாலையிட வேண்டும் என்று நிர்வாகம் ஆணையிடுகிறது! ஏதோ காரணத்தினால் அந்த நிகழ்ச்சிக்குச் செல்ல முடியாதவர்களைப் பட்டியல் எடுத்து தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ்
நடவடிக்கை எடுக்கச் சொல்லி வெளியில் அறிவிப்புப் பலகை வைக்கிறது அத் தலைவர் சார்ந்த சமூக அமைப்பு!

hamaragana said...

அன்புடன் வணக்கம் திரு ஞான பிரகாஷம்
"""கழுத்துக்குக் கீழே பார்க்காமல் பண்புடன்தானே நடந்துகொண்டோம்"""..
"""நமக்குத்தான் இது புதுசு..ஸீன் போடுறோம்..அவனவன் போயிட்டு வந்துட்டுத்தானே இருக்கான்..?இந்த நாட்டுலே இதெல்லாம் சர்வ சாதாரணம்..நல்ல வேளை."".
"""**'கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?"""***'
பெயரிலே ஞானம் இருக்கு தவறான் வழி !! போவீர்களா ? இது போன்ற நமது மக்களின் ஒழுக்கம்தானே நம்மை உலகத்தில் உழைப்பாளிகள் என்ற பெயரும் கண்ணியமானவர்கள் என்றும் மதிக்கபடுகிறோம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டு நாகரீகத்தை உலகுக்கு கற்று கொடுப்பவர்கள் உங்கள் போன்றவெளிநாட்டில் வசிக்கும் தமிழன்தானே .வாழ்க .

sundar said...

aiyya Panchanana Yogam yendral yenna?

sundar said...

Panchanana Yogam
If all the 9 planets are in 5 houses in the birth chart, it is called Panch-anana Yogam. The person enjoys happiness, health, wealth, and high-stature all his life. sir is this right

minorwall said...

அன்பு KMRK அவர்களுக்கு,

சற்று தொலைதூரம் சென்று திரும்பினேன்..இந்தக் கதையைப் படித்து பின்னூட்டமிட்டு இருக்கிறீர்கள்..நன்றி..
//////////////காந்திஜி போதித்த பிரமச்சரியம் இவரை வந்து தாக்கிக் காப்பாற்றிவிட்டது.////////

இன்றைய கதையைப் படித்து இப்படி ஒரு முடிவுக்கு வந்தால் எப்படி? இன்னும் எவ்வளவோ இல்லை?
உண்மைச் சம்பவங்கள் ஆங்காங்கே கலந்திருந்தாலும் கற்பனையைக் கலக்காமல் எழுத முடிவதில்லை என்பதால்
நிறைய உண்மைகள் மறைவு பட்டுப் போகுமென்பது
இப்படி விஷயங்களைத் தொட்டு எழுதுபவர்களுக்கு கொஞ்சம் வசதியான விஷயம்தானே?

மற்றபடி தாங்கள் சொன்னபடி காந்தியைப் பற்றிய நினைவு இங்கு பரவலாக இருக்கிறது..
நீக்ரோக்கள்தான் இப்படி அழைப்பவர்கள்..

minorwall said...

//////////////////////
hamaragana said...
அன்புடன் வணக்கம் திரு ஞான பிரகாஷம்
"""கழுத்துக்குக் கீழே பார்க்காமல் பண்புடன்தானே நடந்துகொண்டோம்"""..
"""நமக்குத்தான் இது புதுசு..ஸீன் போடுறோம்..அவனவன் போயிட்டு வந்துட்டுத்தானே இருக்கான்..?இந்த நாட்டுலே இதெல்லாம் சர்வ சாதாரணம்..நல்ல வேளை."".
"""**'கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?"""***'
பெயரிலே ஞானம் இருக்கு தவறான் வழி !! போவீர்களா ? இது போன்ற நமது மக்களின் ஒழுக்கம்தானே நம்மை உலகத்தில் உழைப்பாளிகள் என்ற பெயரும் கண்ணியமானவர்கள் என்றும் மதிக்கபடுகிறோம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டு நாகரீகத்தை உலகுக்கு கற்று கொடுப்பவர்கள் ////////////

விமர்சனத்துக்கு நன்றி..என் அப்பா பெயர்தான் ஞானபிரகாசம்..உங்கள் விமர்சனம் அவருக்கு மிகவும் பொருந்தி வருவதால் அப்படியே இருக்கட்டும்..
எனக்கு பொருந்தாததுதான்..
வசியம் என்ற வார்த்தைக்கான விளக்கத்தை ஒரு பெரும் பாராவாகவே எழுதியிருந்தேன்..தாங்கள் அதைக் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்..மத்தபடி
."என்னைக்கோ ஒருநாள் எனும்போது, அது தப்பில்லை!" எனும் வசனங்களுக்குள் எது எது அதுவாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை வாத்தியாருக்குதான் தெரியும்..
என்னைப் பொருத்தவரைக்கும் தன் மனதுக்கு குற்ற உணர்வு வராதவண்ணம் எது செய்தாலும் அவரவர் சூழ்நிலையிலிருந்து அது சரிதான் என்றே நினைக்கிறேன்..

hamaragana said...

அன்புடன் வணக்கம் ...
"""என்னைப் பொருத்தவரைக்கும் தன் மனதுக்கு குற்ற உணர்வு வராதவண்ணம் எது செய்தாலும் அவரவர் சூழ்நிலையிலிருந்து அது சரிதான் என்றே நினைக்கிறேன்..
உங்களுடைய வார்த்தைலே"""குற்ற உணர்வு ""என்ற வார்த்தை வந்துள்ளது நல்லது .நீங்கள் கூறிய """வசியம் படித்தேன் ."""". .ஒரு அன்பர் தான் இருக்கும் சூழ்நிலை இல் ..ஒரு பெரிய வெண்மையான பரப்பில் ஒரு சிறிய கரும் புள்ளி இருந்தால் அந்த புள்ளியை கவனிக்காமல் சுற்றி இருக்கும் வெண்மை பார். அது போல நீங்கள் நடந்த ஒழுக்கம் என கண்ணில் பட்டது பாராட்டினேன்!! தன ஒழுக்கம் பேணி காப்பதில் குற்ற உணர்வு பற்றி பேசினாலே அவர் ஒழுக்கமானவரே !!!... thanks..

krishnar said...

வணக்கம் தம்பி மைனர்வாள்,

உங்கள் கட்டுரையை வாசித்ததை விட பின்னூட்டத்தில்தான் உங்களை உரித்துக் காட்டும் முயற்சி தெரிகின்றது.

மைனரின் கூற்று
///என்னைப் பொருத்தவரைக்கும் தன் மனதுக்கு குற்ற உணர்வு வராதவண்ணம் எது செய்தாலும் அவரவர் சூழ்நிலையிலிருந்து அது சரிதான் என்றே நினைக்கிறேன்..///

ஆம் "த‌ன் நெஞ்சு அறிவ‌து பொய்ய‌ற்க‌ பொய்த்த‌பின் ..."என்னும் குற‌ள் முன்னால் த‌லை காட்டுகின்ற‌து.

வாழ்த்துக்க‌ளும் பாராட்டுக்க‌ளும்.

Alasiam G said...

அகம் நானூறு அதோடு ஒன்று சேர்ந்து நானூற்று ஒன்றாகியது....
நன்று...

Uma said...

மைனர்,

எழுத்து நடை அழகு. அதிலும் ஷைலஜாவைப் பத்தின வர்ணனைகள்ள தூள் கிளப்பிட்டீங்க.

உங்க மனைவியையும் படிச்சுப் பார்க்கச் சொல்லியிருக்கலாமில்ல (வேற ஒண்ணுமில்ல, ஒரு எழுத்தாளரின் மனைவின்னு அவங்களுக்கும் ரொம்ப பெருமையா இருக்குமில்ல, அதுக்காகத்தான் சொன்னேன்).

Uma said...

ரங்கீலாவில் 'ஹாய் ராம்' பாடல்//

எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. ஸ்வர்ணலதா / ஹரிஹரன் குரல், வாவ். ஹிந்தி பாடல்களில் எப்போதாவதுதான் இந்த மாதிரிப் பாடல்கள் வரும்.

Uma said...

ஜானகி, ஜென்சி என்னோட favourite பாடகிகள். சித்ராவும் பிடிக்கும்.

ஜென்சியின் 'அடிப் பெண்ணே, பொன்னூஞ்சல் ஆடும் இளமை' பாடல், வாவ்.

Uma said...

ஆகா... ரொம்ப நாளாச்சு.. நிப்பாட்டி.. //

நிறுத்தினதுக்கு அப்புறமும் lighter எடுத்துக்கிட்டுதான் சுத்துவீங்களா?

Uma said...

கண்டால் 'பாபுஜி' என்றே கூப்பிடுகிறார்கள்//

டெல்லியில வயதானவர்களைத்தான் பாபுஜி என்று கூப்பிடுவார்கள்.

minorwall said...

////////////////
krishnar said...

வணக்கம் தம்பி மைனர்வாள்,
உங்கள் கட்டுரையை வாசித்ததை விட பின்னூட்டத்தில்தான் உங்களை உரித்துக் காட்டும் முயற்சி தெரிகின்றது.//////////

நன்றி கிருஷ்ணர் அய்யா அவர்களே..

இந்தக் கதையில் வரும் கதாபாத்திரம் நான் எனும் சுயத்தின் அடிப்படையிலேயே தொடர்வதால் படிப்பவர்க்கு நிச்சயம் இந்த வகையில்தான் எண்ணங்களைத் தூண்டும்..இது சுய சரிதை அல்ல..வேறு ஒரு கதாபாத்திரமாக எண்ணி படிக்க வேண்டுகிறேன்.அந்த மனநிலையிலேதான் இதை எழுதினேன்.நடந்தவைகளும் விவரித்தாற்போன்று சம்பவங்களின் தொடர்ச்சியாக எனக்கு நிகழந்தவைகளல்ல..பல்வேறு சமயங்களில் இப்படி தனித்தனியான சம்பவங்கள் நேர்ந்ததுண்டு..அனைத்தையும் கற்பனை நூலில் கோர்த்து இந்தக் கதையன்று நடந்ததாக கதையமைப்பில் இந்த பயணத்தை சொல்ல வேண்டும் என்றும் அதிலே எனது எழுத்து நடை பயில ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே இப்படி ஒரு முயற்சியை செய்து பார்த்தேன்..இதை முன்னுரையாக சொல்லியிருக்க வேண்டும்..பின்னுரையாக சொல்ல வாய்ப்பளித்த உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி..ஆரம்பத்தில் கதையல்ல நிஜம்..என்று தலைப்பிட்டு வீட்டைவிட்டு கிளம்பி பஸ் பிடித்து ரயில் நிலையம் சென்றது வரைக்கு மட்டுமே அந்த தலைப்பு பொருந்தும்..இப்போது தொடர்வதெல்லாம் ஆங்காங்கே எனது எழுத்துப் பயிற்சிக்கான விஷயங்கள்தான்..

minorwall said...

//////////////Uma said... உங்க மனைவியையும் படிச்சுப் பார்க்கச் சொல்லியிருக்கலாமில்ல (வேற ஒண்ணுமில்ல, ஒரு எழுத்தாளரின் மனைவின்னு அவங்களுக்கும் ரொம்ப பெருமையா இருக்குமில்ல, அதுக்காகத்தான் சொன்னேன்).////////////

என் மனைவி எதையெல்லாம் படிச்சு என்னை எப்படியெல்லாம் விமர்சித்து எதுவரை கோபப்பட்டார்கள் என்பதை தனித் தொடர் பதிவாகத்தான் போட வேண்டும்..பெருமையாமில்லே?

அதை மனதில் கொண்டால் மனக் கஷ்டம்தான்..

எந்த நல்ல மனைவியால்தான் கணவனை விட்டுக் கொடுக்க முடியும்..

மனைவிக்குத் தெரியாத கணவனின் தொடர்புகள் ஊடலைத் தருபவையல்ல..உறவையே துண்டிப்பவையே..

minorwall said...

///////////// Alasiam G said...


அகம் நானூறு அதோடு ஒன்று சேர்ந்து நானூற்று ஒன்றாகியது....
நன்று.../////////////


உங்களின் எண்ணவோட்டம் புரியவில்லை..உங்களின் தமிழ் ஆழமானதாகிப் போவதால் உண்மையில் எனக்கு எளிதில் விளங்கவில்லை..'உள்ளத்தில் உறைந்து கிடப்பவை எவ்வளவோ' என்கிற ரீதியில் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்..நன்றி..ஆலாசியம் சார்..

minorwall said...

//////////Uma said... நிறுத்தினதுக்கு அப்புறமும் lighter எடுத்துக்கிட்டுதான் சுத்துவீங்களா?\\\\\\\\\\\\\

ஒண்ணு உங்களுக்குத் தெரியுமா?

சமயங்களில் சாமிவிளக்கு ஏத்துறதுக்கே lighter தான் பயன்படுது..ரொம்ப useful ள்ளான பொருள்..அதுனாலேதான் cigaret lighter என்று போடாமல் வெறும் lighter என்றே எழுதினேன்..

உங்களின் மற்ற அனைத்து கமெண்ட்டுகளுக்கும் நன்றி..

Uma said...

பெருமையாமில்லே?//

sorry

G.Nandagopal said...

மாப்பு
நான் பின்னூட்டத்தில் என்ன சொல்லட்டும்
என்று நீங்க நினைக்கறீங்களோ அதையே நான்
சொன்னதா நினைச்சுக்குங்க
ஏன்னா இப்பதான் ஊர்லே இருந்து வந்த களைப்பு
நீங்க ஜப்பானில் சுத்தினீங்க
ஹீ..ஹீ.. நான் இந்தியாவிலே சுத்தினேன்
ஆனாலும் ஒன்னு மட்டும் புரியுது மாப்பு
எல்லாம் வெறும் மாயை
வேற என்ன சொல்லபோறேன்
(வேற ஏதாவது சொல்லிடப்போறேன்னு நீங்க நினைக்கறது எனக்கு மட்டும் தெளிவா புரியுது)
நந்தகோபால்

G.Nandagopal said...

உமா மேடம்
இதுக்கு முன்னாடி FBI இல் வேலை பார்த்தீங்களா
இல்லே உங்க உறவுக்காரா யாராவது CBI இல் இருக்காளா
lighter மேட்டரில் மைனரை மடக்கினதை தான் சொல்றேன்
உங்க வீட்டுக்காரர் பாடு திண்டாட்டம் தான் போங்கோ
welldone மேடம்
கீப் இட் அப்
நந்தகோபால்

minorwall said...

G.Nandagopal said...
மாப்பு
நான் பின்னூட்டத்தில் என்ன சொல்லட்டும்
என்று நீங்க நினைக்கறீங்களோ அதையே நான்
சொன்னதா நினைச்சுக்குங்க
ஏன்னா இப்பதான் ஊர்லே இருந்து வந்த களைப்பு
நீங்க ஜப்பானில் சுத்தினீங்க
ஹீ..ஹீ.. நான் இந்தியாவிலே சுத்தினேன்
ஆனாலும் ஒன்னு மட்டும் புரியுது மாப்பு
எல்லாம் வெறும் மாயை
வேற என்ன சொல்லபோறேன்
(வேற ஏதாவது சொல்லிடப்போறேன்னு நீங்க நினைக்கறது எனக்கு மட்டும் தெளிவா புரியுது)
நந்தகோபால்

////////////G.Nandagopal said
உங்கள் இளந்துடிப்பான
கமெண்டுக்கு நன்றி..தலைவா..///////////

'சவூதி சென்று, வென்று தாய்நாடு திரும்பும் எங்கள் அண்ணன் தொழிலதிபர் நந்தா அவர்களை வரவேற்கிறோம்' ன்னு

கோயமுத்தூர் ஏர்போர்ட்லே கட் அவுட் எல்லாம் பெருசா வெச்சுருந்தாங்களா இளைஞர் பேரவைலேருந்து?

ஊரு எப்பிடி இருக்கு?ஒரு அலசலா எழுதுங்களேன்..

Uma said...

நாங்கல்லாம் கண்ணுல விளக்கெண்ணை ஊத்திக்கிட்டு படிப்போம், அதான்.