மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

6.11.10

பீதியைக் கிளப்பும் உண்மைக் கதை!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 பீதியைக் கிளப்பும் உண்மைக் கதை!
.......................................................................................
06.11.2010 சனிக்கிழமை
இன்றைய இளைஞர் மலரை நமது வகுப்பறை மாணவி ஒருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள். அவரின் பெயர் பதிவின் இறுதி வரியில் உள்ளது!
------------------------------------------------------------------------
Over to her posting!
___________________________________________
                அத்வானக்காட்டில் சிகப்பு ரோஜாவும், மல்லிகையின் வாசமும்!

டிஸ்கி 1: இது ஒரு சம்பவத்தைப் பற்றியது.  இதுல முழுக்க முழுக்க என் சித்தி சொன்னதை எந்த மிகைப்படுத்தலும் இல்லாம சொல்லிருக்கேன்.

டிஸ்கி 2: இதப் படிச்சுட்டு இதெல்லாம் சுத்த ஹம்பக், நாங்க நம்ப மாட்டோம்னு யாரும் சொல்ல வேண்டாம். உங்களுக்கு வேணும்னா அந்த இடத்தோட விலாசம் தரேன்.  கொஞ்சம் செலவு பண்ணி ஒரு தடவை போய்ப் பார்த்துட்டு, எது பேசறதா இருந்தாலும் அதுக்கப்புறமா பேசுங்க.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இனிமே என் சித்தி எழுதறாங்க, சரியா?

சென்னைலேர்ந்து பெங்களூர் போற பேருந்துல நான், என் தங்கை, அவங்க பையன், பெண், என் தம்பி எல்லோரும் போய்க்கிட்டிருந்தோம்.  இருட்டத்தொடங்கிவிட்டது.  பார்க்கற எல்லாமே கொஞ்சம் மங்கலாத்தெரியுது.  வழில ஒரு இடத்துல பேருந்தைக் கொஞ்ச நேரம் நிறுத்தினாங்க.  நாங்க எல்லோரும் இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு உட்கார்ந்திருந்தோம்.

அப்ப என் தங்கை எனக்கு ஒரே கசகசன்னு இருக்கு, இங்க எங்கியாவது தண்ணீர் கிடைச்சா முகத்தை அலம்பிக்கலாம்னு சொல்லவும் எங்களுக்கும் கொஞ்சம் காத்தாட நடந்துட்டு வரலாம்னு தோணிச்சு.  சரின்னு என் தம்பியைத் தவிர மீதி பேர் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.  அந்த இடம் ஏதோ ஒரு அத்வானக்காடு மாதிரி இருந்தது.  கொஞ்ச தூரம் போனதுக்கப்புறம் ஒரு பெரிய வீடு தெரிந்தது.  வழில எங்கயும் தண்ணீர் கிடைக்கல.  தங்கை உடனே அந்த வீட்டுல போய்க்கேப்போம்னு சொல்லவும் நாங்களும் கூட போனோம்.  வெளில யாரும் காவலுக்கு இருக்கற‌ மாதிரி தெரியல. சரி உள்ளே போய்ப் பார்ப்போம்னு போனா 'சந்திரமுகி'ல வர பேய் வீடு மாதிரி இருந்தது.  வெளித்தோட்டத்துல யாராவது இருப்பாங்கன்னு நினைச்சுட்டு கொஞ்ச தூரம் உள்ளே போனோம்.

நாங்க 3 பேரும் திரும்பிப் போய்டலாம்னு சொன்னதை அவ காதுல வாங்கினாத்தானே?  ஏதோ ஒரு எழுத்தாளர் கதைல 'அமானுஷ்யமான அமைதி'ன்னு குறிப்பிட்டிருப்பாரு, அது இந்த இடத்துக்குப் பொருத்தமா இருந்தது.

சரி திரும்பிடலாம்னு முடிவு பண்ணித் திரும்பி நடக்க ஆரம்பிச்சோம்.

அப்பதான் தங்கை 'எனக்கு இந்த இடத்தைப் பார்த்தா சிகப்பு ரோஜாக்கள் படம் ஞாபகம் வருதுன்னு' சொல்லவும், வந்த எரிச்சலுக்கு நாங்க 3 பேரும் 'கொஞ்ச‌ நேரம் வாயை மூடிண்டு வர மாட்டியா'ன்னு கத்தினோம். பின்ன, ஞாபகம் வந்தா பேசாம வர வேண்டியதுதானே?  அதச் சொல்லி பீதியை எதுக்குக் கிளப்பணும்?

உள்ளேர்ந்து என்னன்னே புரியாம ஏதேதோ சத்தம் கேட்க ஆரம்பிச்சது.  திடீர்னு மல்லிகைப்பூ வாசனை வேற வர ஆரம்பிச்சது.

இதுல எனக்கு ஆஸ்துமா பிரச்சனை வேற.  மூச்சிரைக்கிற மாதிரி இருந்தது.  திடீர்னு ஜாஸ்தியாயிடுத்துன்னா என்ன பண்றதுன்னு பதட்டம் வேற.

திடீர்னு ஒரு பெண் 'ஹா ஹா'ன்னு சிரிக்கிற சத்தம்.  எங்களுக்கு ஒரு நிமிஷம் மூச்சே நின்னுபோன மாதிரி இருந்தது.

அப்ப திடீர்னு ஒரு புதருக்கு நடுவில ஏதோ அசைஞ்சா மாதிரித் தெரிஞ்சது.  நானும் கூர்ந்து பார்த்தால் ஆ!!! அந்தப் படத்துலயும் இதே மாதிரி ஒரு பூனைதானே வரும்.  ஸ்ரீதேவி தோட்டத்தைப் பார்த்திட்டிருக்கும்போது ஒரு 'கை' திடீர்னு வர்றதும் நினைவுக்கு வந்து தொலைத்தது.

ஓட்டமும் நடையுமா வெளில வந்ததும்தான் கொஞ்சம் மூச்சு வந்தது.

விடுவிடுன்னு பேருந்தை நோக்கிப் போனோம்.  போற வழில என் தங்கை, தன் பெண், பையனிடம் அங்க போய் யாருகிட்டயும் இதப் பத்தி சொல்ல வேண்டாம், எல்லாரும் நம்மளை ஓட்டுவாங்கன்னு சொல்லவும், அவள் பெண், முதல்ல உங்க அக்காகிட்ட சொல்லு, அங்க வந்து எதுவும் உளராதேன்னு அப்படின்னா.

கொஞ்ச தூரம் போகவும், எதிரில் என் தம்பி எங்களைத் தேடிக்கொண்டு வரவும் சரியாக இருந்தது.  எல்லோரும் எங்க போய்த்தொலைஞ்சீங்கன்னு அவன் சத்தம் போடவும், காதுலயே வாங்காத மாதிரி நாங்க போய் பேருந்தில் ஏறினோம்.

எனக்கு வேர்த்துக் கொட்டியிருந்தது.  உடலெல்லாம் தொப்பலா நனைஞ்சிருந்தது.  எழுந்து திரும்பிப் பார்த்தா என் கணவர் நல்லா சுகமாத் தூங்கிட்டிருந்தார்.  அடச்சே!  எனக்கு வந்த கோபம், இதுவரை பட்ட அவஸ்தை எல்லாத்தையும் சேர்த்து அவரை 2 தட்டு தட்டி எழுப்பினேன்.  'இந்தப் பசங்களோட தினம் இதே ரோதனை. கொஞ்சம் EB office-க்கு போன் பண்ணி கேளுங்கோன்னா, எப்ப கரண்ட் வரும்னு.  ச்சே, தூக்கமே போச்சு'.

டிஸ்கி 3:  ஹி ஹி, அது என்னன்னா என் சித்தி ஒரு தடவை அவங்க கண்ட கனவைப் பத்திச் சொல்லிட்டிருந்தாங்களா?  நேத்து ராத்திரி 1 மணி இருக்கும், விழிப்புக் கொடுத்தது.  அப்புறம் ஒரு 1-1/2 மணி நேரமா நான் தூங்க முயற்சி பண்ணியும் தூக்கம் வரலை.  அடச்சே தூக்கம் போயிடுச்சேன்னு ரொம்ப ஃபீலிங் ஆயி ஏதேதோ யோசிச்சிட்டிருந்தேனா, இது ஞாபகம் வந்தது.  சரின்னு மூளைக்கு கொஞ்சம் வேலை குடுத்து (என் மூளை நான் தூங்கிட்டிருக்கும்போதே பயங்கரமா வேலை பண்ணும், இதுல முழிச்சிட்டிருந்தா கேக்கணுமா) அப்படியே டெவலப் பண்ணி ஒரு கதையாக்கிட்டேன்.  சரி டிஸ்கி 1 & 2 ல இவ்ளோ பில்ட் அப் எதுக்குக் குடுத்தேன்னு கேக்கறீங்களா?  அப்பதானே கடைசி வரி வரைக்கும் படிப்பீங்க?

டிஸ்கி 4:  முதல்ல இதெல்லாம் ஒரு கதைன்னு எழுதறோமேன்னு எனக்கே தோணிச்சுதான்.  சரி எல்லாரையும் வெறுப்பேத்தலாம்னு ஒரு உயர்ந்த எண்ணத்துல துணிஞ்சு இத எழுதி அனுப்பிட்டேன்.  பார்க்கப் போனா வேற ஒரு டாபிக்தான் எழுதிட்டிருந்தேன், ஆனா இது முதல்ல முடிந்துவிட்டது.  இதுவரை பொறுமையாப் படிச்ச எல்லோருக்கும் நன்றி.  நீங்கள்லாம் ரொம்ப நல்லவங்க, யாரும் ஆட்டோ அனுப்ப மாட்டீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

ஆக்கம்: திருமதி உமா, தில்லி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

26 comments:

kannan said...

உள்ளேன் ஆசானே!

அன்பு சகோதரியே!
அநியாயமாக தீபாபளியை கொண்டாடிட்டு குதுகலமாக
மிகவும் அக்கறையோடு
யாம் உள்ள நாட்டின் நேரம் நடுசாமத்தை தாண்டி
சரியாக 02;04AMக்கு கதையை
மிகவும் விறுவிறுப்பாக படித்தால் கடைசியில் ( கண்ட கனவைப் பத்திச் சொல்லிட்டிருந்தாங்களா? ) யாமற்றி விட்டீர்ட்டீர்களே என்னை
இது நியமா ?

ஆனால், தனியாக உள்ள நான்
எமது அறையை சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு ( பேய் பிசாசு ஏதாவது வருதா என்ற ஒரு உணர்வுடன் ) படிக்கும் அளவிற்கு தங்களுடைய ஆக்கம் இருந்தது என்னவோ உண்மை தோழியே!

HVL said...

இந்த மாதிரி எத்தன பேரு கிளம்பியிருக்காங்களோ! ஈஸ்வரா!

Thanjavooraan said...

மர்மக் கதை எழுத ஆள் இல்லை என்கிற குறை திருமதி உமாவினால் இன்று தீர்ந்து போயிற்று. உண்மையாக நன்றாக ரீல் விட்டிருக்கிறார். எந்தப் பேருந்து, அதிலும் நீண்ட தூரம் போகும் பேருந்து இப்படி வழியில் நிறுத்தி இவர்கள் 'பூட் பங்களா' சென்று வர அனுமதித்தது என்று சந்தேகம் முதலிலேயே உதித்தது. என்றாலும் எனக்கு இந்த பேய், பூதம், அமானுஷ்யம் இவற்றிலெல்லாம் ஈடுபாடு, நம்பிக்கை இல்லாமையால், இந்த புருடாவை முழுமையாக ரசிப்போம் என்று படித்தேன். சும்மா சொல்லக்கூடாது. சஸ்பென்சை நன்றாகவே கொண்டு போயிருக்கிறார், பல சறுக்கல்களுக்கிடையே. நல்ல கற்பனை. தொடர்ந்து மர்ம கதைகளை எழுதுங்கள். நல்ல வரவேற்பு இருக்கும். ஆசிரியர் 'கல்கி'யின் தாக்கம் அதிகம் போலிருக்கிறது. அவருக்குத்தான் யதார்த்தத்துக்கிடையே கனவு புகுந்து கொண்டு பாடாய் படுத்தும். வாழ்க மர்மக்கதை ஆசிரியரின் பணி.

V Dhakshanamoorthy said...

கனவில் பீதியைக் கிளப்பும் உண்மைக் கதை
நன்றாக உள்ளது
நன்றி!

hamaragana said...

அன்புடன் வணக்கம்
நல்லா விறு விறுப்பாக கொண்டு போய் கடைசியல் கனவு என்று சொல்லிட்டேங்க.. ??
நல்லா P.T.Samy மாதிரி பேய் கதை எழுதுங்க ?? வாழ்த்துக்கள்

Alasiam G said...

சும்மா கலக்கிடீங்க போங்க......

kmr.krishnan said...

கனவுக் கதை என்றே சொல்லியிருக்க வேண்டும். உண்மைக் கதை என்றது உண்மையில் பீதியைக் கிளப்பிவிட்டு விட்டது. அப்புறம் புஸ்வாணமாகப் போய் விட்டதே!முன்னாலும் ஒய்ஜாப் பலகை,வூடு என்று பயம் காட்டினார்.
இப்போதும் அது போலவே டாபிக்! அந்தக் காலத்தில் குமுதம் வார இதழில்
'பயங்க‌ர பாமா' என்று ஒரு தொடர் படத் தொகுப்பு வரும்.அது போல 'பயங்கர உமா' என்று சொல்லலாமா? என்று மாமியைக்கேட்டேன்.‌
''படிக்கும் போது பயமே வரவில்லை. கடைசியில் கனவு என்று சொல்லி ஏமாற்றியதால் "உடான்ஸ் உமா"என்று வேணா சொல்லிகொள்ளுங்கள்"என்கிறார்கள்.
நான் அப்படி சொல்லாமல் விட்டு விடுகிறேன்.

minorwall said...

ஒரு பேயின் கதை அருமை..
தூக்கத்தில்
நல்ல இம்ப்ரூவ்மென்ட் தெரியுது..
கதை எழுதுவதில்
நல்ல பேய்நயம் தெரியுது...
வாழ்த்துக்கள்..

minorwall said...

'இருதரப்பு சிவிலியன் நியுக்ளியர் எனெர்ஜி ஒப்பந்தம்' கையெழுத்தாகுமானால் தேசியப் பிரச்சினையாகவுள்ள 'பவர்கட்' ஒரு முடிவுக்கு வருமென்ற கணக்கில்தான்

சென்ற வாரம் (25 -10 -2010 அன்று) இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் பிரதம மந்திரி நவோடோ கான் அவர்களைச் சந்தித்தார்..

இது நடந்தால் நியுக்ளியர் எனெர்ஜி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் அதற்கான இயந்திர உபகரணங்களையும்

ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய இது வழிவகுக்கும்..

2020 லே இந்தியாவிலே 20 ரியாக்டர் வெஸ்செல்ஸ் அமைக்க ஒப்பந்தமிட்டு அமெரிக்க கம்பனியான ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பனியும் பிரான்ஸ் கம்பனியான அரேவா SA வும்

இந்த வேலையைத் துவங்குவதற்கு ரெடியாக இருந்த போதிலும் ஜப்பான் முட்டுக்கட்டை போடுகிறது..காரணம்..

உலகம் முழுதுக்குமே தேவையான 80% forged நியுக்ளியர் ரியாக்டர் பாகங்கள் ஜப்பான் ஸ்டீல் வொர்க்ஸ் லிமிடெட் கம்பனி யால்தான் தயாரித்து வழங்கப்படுகின்றன..

அணு ஆயுத பரவல் தடை (NPT) ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததுதான் இவ்வளவுக்கும் காரணம்..அதனால் இந்தியா இனிவரும் காலங்களில் ஏதும் அணு ஆயுத சோதனை செய்யுமானால் தொழில்நுட்ப உதவிகள் ரத்து செய்யப்படும் என்ற ஷரத்துடன் ஒப்பந்தத்தை போட்டு வேலையை ஆரம்பிக்கலாமா என்று ஜப்பான் ஐடியா கொடுக்க இதற்கு இந்தியா ஒத்துக்கொள்ள முடியாத நிலையில் பேச்சுவார்த்தை இருக்கிறது.. இருந்தும் அமெரிக்காவும் பிரான்சும் கொடுக்குமழுத்தம் (இந்தியாவுடனான இந்த வர்த்தகக்) காரணமாகவும்,

சீனா கொடுக்கும் பலவகைத் தொந்தரவுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், எதிர்காலத்தில் வேறு யாரும் போட்டியாளர்கள் இந்த வர்த்தக வாய்ப்பை தட்டிப் பறித்துவிடாமல் இருக்கவும் என்று பல காரணங்களை மனதில் கொண்டு ஜப்பான்

'ஆபத்தில் உதவுபவனே உண்மை நண்பன்' என்று பெயரெடுக்கும் விதத்தில்தான் முடிவெடுக்கும் என்ற நம்பிக்கைதான்

நம் உமா போன்ற இந்தியா இல்லத்தரசிகளின் இனிமையான உறக்கத்துக்கு ஒரு நிரந்தர வழியைச் சொல்லும்..

courtesy : japantoday.com

sundar said...

aiyya Panchanana Yogam yendral yenna?

iyer said...

நமது வகுப்பறையில்
ஒரு பெண் ராஜேஷ்குமார் . .

தோழி உமாவிற்கு . .
இந்த வாழ்த்துக்களுடன் . .

பேயிடம் இருந்து வாங்கி வந்த
புதுமையான வாழ்த்துக்களும் . .

Uma said...

கண்ணன், உங்கள் பாராட்டுக்கு நன்றி.

Uma said...

HVL ,

ஹி ஹி.

Uma said...

தஞ்சாவூரான் சார்,

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. கல்கி மட்டுமில்லை, இன்னும் நிறைய எழுத்தாளர்களின் தாக்கத்தினாலும், ஆசிரியர் கொடுத்த ஊக்கத்தினாலும்தான் எழுத ஆரம்பித்ததே.

நானும் கண்ணால் பார்க்காதவரை இந்த பேய், பிசாசை எல்லாம் நம்ப மாட்டேன்.

மற்றபடி நீங்கள் எல்லாம் பாராட்டினாலும் நான் எழுதுவதில் எனக்கே இன்னும் திருப்தி வரவில்லை என்பது உண்மை.

Uma said...

தட்சிணாமூர்த்தி,

உங்கள் பாராட்டுக்கு நன்றி. ('குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா'தான் உங்க பாலிசின்னு எனக்குத் தெரியும்).

Uma said...

கணபதி சார்,

விறுவிறுப்பா இருந்ததுன்னு பாராட்டினதுக்கு நன்றி. ஆனா எனக்கு இன்னும் சிறப்பா எழுதி இருக்கலாம்னு தோன்றியது.

Uma said...

ஆலாசியம்,

உங்கள் பாராட்டுக்கு நன்றி.

Uma said...

கிருஷ்ணன் சார்,

பில்ட் அப் கொடுக்கணும்னுதான் உண்மைக்கதைன்னு சொன்னது.

மாமி உங்க காதோட சொன்னத உங்க மனசோட வெச்சுண்டு இருக்கலாமோன்னோ?

உங்கள் பாராட்டுக்கு நன்றி.

Uma said...

மைனர்,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

கடைசில என்னையே பேயா ஆக்கிட்டீங்க. சரி விடுங்க. இதெல்லாம் புதுசா என்ன?

Uma said...

நம் உமா போன்ற இந்தியா இல்லத்தரசிகளின் இனிமையான உறக்கத்துக்கு ஒரு நிரந்தர வழியைச் சொல்லும்..//

மைனர், கதைல மின்சாரத்தால தூக்கம் கெட்டது என் சித்திக்குத்தான். எங்க வீட்டில் இன்வேர்ட்டர் அதுக்குத்தானே வாங்கி வச்சுருக்கோம். அதுவுமில்லாம நான் எல்லாம் இன்வேர்ட்டர் வாங்கறதுக்கு முன்னாடியே, மின்சாரம் போனாலும் கவலைப்படாமே தூங்கற ஆளு. பாக்கி எல்லாரும் என்னைத் திட்டிக்கிட்டே மின்சாரம் வர வரைக்கும் முழிச்சிட்டிருப்பாங்க.

Uma said...

ஐயர்,

தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

நீங்க இந்த தடவையும் ராஜேஷ் குமாரோடு ஒப்பிட்டதைப் படிச்சா எனக்கே ஒரு மாதிரி இருக்கு (ராஜேஷ் குமார் படிச்சருன்னா அவருக்கு எப்படி இருக்கும்னு கற்பனை செஞ்சு பார்க்கிறேன்).

Uma said...

வழக்கம் போல, நம்ம வாத்தியார் எதுவும் எழுதல.

அவர் இதை வெளியிட்டிருப்பதே இந்தக் கதை சிறப்பாக, சுவாரசியமாக, விறுவிறுப்பாக, தேர்ந்த ஒரு எழுத்தாளரின் (!!!) நடையில், மீண்டும் மீண்டும் படிக்க ஆவலைத் தூண்டும் விதத்தில், நல்ல twist உடன் எழுதப்பட்டிருப்பதால்தான் என்பதை உணர்வதால் அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொல்கிறேன் (ஹி ஹி).

SP.VR. SUBBAIYA said...

/////Uma said...
வழக்கம் போல, நம்ம வாத்தியார் எதுவும் எழுதல.
அவர் இதை வெளியிட்டிருப்பதே இந்தக் கதை சிறப்பாக, சுவாரசியமாக, விறுவிறுப்பாக, தேர்ந்த ஒரு எழுத்தாளரின் (!!!) நடையில், மீண்டும் மீண்டும் படிக்க ஆவலைத் தூண்டும் விதத்தில், நல்ல twist உடன் எழுதப்பட்டிருப்பதால்தான் என்பதை உணர்வதால் அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொல்கிறேன் (ஹி ஹி)./////

கொல்கிறேன் என்றாலும் சரி கொள்கிறேன் என்றாலும் சரி! இது இணைய வகுப்பறை. இரண்டும் ஒன்றுதான்.
இளைஞர் மலர் மற்றும் வாரமலரில் வரும் ஆக்கங்களில் எனது கருத்திற்கு இடமில்லை. எழுதுபவருக்கு முழுச்சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. வரும் பின்னூட்டங்களுக்கும் அவர்களையே பதில் எழுதப் பணித்துவிடுவதால், அதிலும் வாத்தியாருக்கு இடமில்லை!

Uma said...

தெரியும் சார், நான் சும்மாத்தான் எழுதினேன்.

G.Nandagopal said...

மைனர்,
'அதுவுமில்லாம நான் எல்லாம் இன்வேர்ட்டர் வாங்கறதுக்கு முன்னாடியே, மின்சாரம் போனாலும் கவலைப்படாமே தூங்கற ஆளு'
இப்ப புரியுதா ஏன் நம்ம நாடு உலகநாடுக நடுவிலே
பின்தங்கியிருக்குன்னு...
டெல்லியே இப்படி தூங்கிட்டு இருந்தா எப்ப கடை தேறுவது..
மகராசியா தூங்குங்க
நந்தகோபால்

Uma said...

நந்தகோபால், பொறாமைல ஏதேதோ சொல்றீங்க, சரி பொழச்சுப் போங்க.