கை நிறையக் கனிகள், அப்பம், அவல்பொரியுடன் செல்லுங்கள்
பக்தி மலர்
விநாயகரைத் துதிக்கச் செல்பவர்கள் என்ன கொண்டு செல்ல வேண்டும்? கை நிறையக் கனிகள், அப்பம், அவல்பொரியுடன் செல்லுங்கள். அருணகிரியார் அதைத்தான் சொல்கின்றார்.
கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி’ என்று துவங்கும் அருணகிரியாரின் பாடல் ஒன்று இன்றைய பக்திமலரை அலங்கரிக்கின்றது. அந்தப் பாடலைத் திருமதி எம்.எஸ்.சுப்புலெட்சுமி அவர்கள் தனது இனிய குரலால் பாடி நமது மனதில் என்றும் நிற்கும்படி செய்கின்றார்.
அனைவரும் பாடலைக் கேட்டு மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------
கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவனுறை ரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துயரது கொடு சுப்பிரமணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.
--------------------------------------------------------
பாடலில் உள்ள அருஞ்சொற்களுக்கான விளக்கம்:
கைத்தலம் நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி:
பழம், அப்பம், அவல், பொரி ஆகியவற்றை விரும்பி உண்கின்ற யானைமுகத்தானின் திருவடிகளைப் போற்றுங்கள்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும்:
அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவன் அவர். நீங்கள் நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சம்
அவர். அவரை வணங்கினால் நம்முடைய வினைகள் யாவும் விரைவில் நீங்கிவிடும்.
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை:
ஊமத்த மலரையும், பிறைச் சந்திரனையும் தன்னுடைய சடைமுடியில் அணிந்து கொண்டிருக்கும் சிவபெருமானுடைய மகன் அவர்.
மற்போர் வீரனைப்போன்ற திரண்ட தோள்களையுடையவர் அவர். மத யானையை ஒத்தவர் அவர்.
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர்கொண்டு பணிவேனே:மத்தளம் போன்ற பெருவயிற்றை உடையவர் அவர். உத்தமியாகிய பார்வதியின் மகன் அவர். அவ்வாறாகிய கணபதியைத் தேன்
துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நாம் வணங்குவோம்.
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே:
இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூலை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய தன்மையானவர் அவர்.
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடிசெய்த அதிதீரா:
அசுரர்களின் திரி புரங்களையும் எரித்த சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரன் அவர்.
அத்துயர் அது கொ (ண்) டு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி:
வள்ளி மீது கொண்ட காதல் துயரத்தோடு அவர் தம்பி சுப்பிரமணி சுவாமிக்கு தினைப் புனத்தில் யானையாகத் தோன்றி, அக்குற மகளை அச்சிறு முருகனுக்கு அக்கணமே மணம் செய்து கொள்ள அருள் பாலித்தவர் அவர்.
------------------------------------------------------------------------------------
திரிபுரத்தின்மேல் படையெடுக்கத் தொடங்கும்போது சிவபெருமான் விநாயகரைப் பூஜித்துச் செல்ல மறந்தார். அதனால், சிவபெருமான்
ஏறி வந்த தேரின் அச்சு முறியும்படி விநாயகர் செய்தார் என்கின்றது சிவபுராணம்.
----------------------------------------------------------------------------------
பாடலைக் கேளுங்கள்!
பாடலின் காணொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded this song in the net!
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விளக்கம் மிகவும் அருமை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteVinayagar for Saraswathi puja.
ReplyDeleteGood combination?!
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையாரைப் பற்றி அருணகிரி நாதரின் திருப்புகழை, இசைப்பேரரசி எம் எஸ் அம்மாவின் குரலில் இந்த நவராத்திரி நாளில் கேட்கச் செய்த உங்கள் அரிய பணிக்குப் பாராட்டுக்கள் ஐயா!
ReplyDeleteஅரன் மகன் என்பதைவிட அனையின் மகன் என்பதே சாலப் பொருந்தும்.அன்னையின் சங்கல்பத்தால் மட்டும் உற்பவித்தவர் பிள்ளையார்.
சிவபெருமான் காவல் இருந்த பிள்ளையாரின் தலையைச் சீவிவிட்டார்.வருந்திய
அன்னைக்காக யானை முகாசுரனின் தலையைக் கொய்து பொருத்தி விநாயகர் உருவானதாகப் புராணம்.
சிவபார்வதி திருமணத்திற்கே பிள்ளையார் பூஜை செய்யப்பட்டதாமே!!! அப்படியென்றால் யார் பிள்ளை? யார் அப்பா?
Good Morning Sir!
ReplyDeleteVanakkam Aiya,
ReplyDeleteArumayana paadal...aduvum M.S.amma kuralil...migavum arumai...nandri Aiya.
///kmr.krishnan said...
ReplyDeleteசிவபெருமான் காவல் இருந்த பிள்ளையாரின் தலையைச் சீவிவிட்டார்.///
மறைவாக நமக்குள்ள
பழங்கதைகள் பேசி என
சொன்ன அந்த
சுப்பிரமணியிடம் கற்க வேண்டியது
இப்படி பழையபுரணங்களின் செய்தியின்
உண்மைகளை உணராமல்
அப்படியே எடுத்துக் கொள்வது
அறியாமையில் உள்ள
நாத்திகவாதிகளின் செயல்
நாம் தெளிவுபடுத்தினாலும்
மூன்று கால் என (நாத்திகர்கள்)
முரண்டு பிடிப்பவர்கள்
மறந்துமா இப்படி உண்மையை
மறைத்து சொல்லனும்
///சிவபார்வதி திருமணத்திற்கே பிள்ளையார் பூஜை செய்யப்பட்டதாமே!!! அப்படியென்றால் யார் பிள்ளை? யார் அப்பா?///
பவன் பிரம்மச்சாரி
பால்மொழி கன்னியாவாள்
என்கிறது சித்தியார்
என்பது தெரியும் தானே. மனித
உணர்வுகளை அல்லது
உறவுகளை உயர்வானவற்றுடன்
ஒப்பிடக் கூடாது..மனதுக்கு
ஒத்துக் கொள்ளவில்லைஎனினும்
அது கூடாது..
அறியாமையில் சொல்வதும் பிழையே
(இட்லி "கல்" போல இருக்கிறது என சொல்லாம் கல் "இட்லி" போல இருக்கிறது என சொல்வது சரியா?)
அருமை...
ReplyDeleteஅழகான விளக்கம்....
அருமையான விளக்கத்துடன்,பாடல்.அருமை,நன்றி வாத்தியாரய்யா.
ReplyDelete//இப்படி பழையபுரணங்களின் செய்தியின்
ReplyDeleteஉண்மைகளை உணராமல் //
நாங்கள் உண்மைப் புராணங்களை உணரும் வண்ணம் கொஞ்சம் எழுதுங்கள் வேப்பிலை சுவாமிகளே!
/////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteவிளக்கம் மிகவும் அருமை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்.../////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteVinayagar for Saraswathi puja.
Good combination?!////
ஆமாம்! உணர்ந்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றி!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையாரைப் பற்றி அருணகிரி நாதரின் திருப்புகழை, இசைப்பேரரசி எம் எஸ் அம்மாவின் குரலில் இந்த நவராத்திரி நாளில் கேட்கச் செய்த உங்கள் அரிய பணிக்குப் பாராட்டுக்கள் ஐயா!
அரன் மகன் என்பதைவிட அனையின் மகன் என்பதே சாலப் பொருந்தும்.அன்னையின் சங்கல்பத்தால் மட்டும் உற்பவித்தவர் பிள்ளையார்.
சிவபெருமான் காவல் இருந்த பிள்ளையாரின் தலையைச் சீவிவிட்டார்.வருந்திய
அன்னைக்காக யானை முகாசுரனின் தலையைக் கொய்து பொருத்தி விநாயகர் உருவானதாகப் புராணம்.
சிவபார்வதி திருமணத்திற்கே பிள்ளையார் பூஜை செய்யப்பட்டதாமே!!! அப்படியென்றால் யார் பிள்ளை? யார் அப்பா?/////
நதி மூலம், ரிஷி மூலங்களைப் பார்க்கக்கூடாது என்பார்கள். அதேபோல புராணங்களில் உள்ள முரண்பாடுகளையும் பார்க்கக்கூடாது. காலம் காலமாக பல இடைச் செருகல்கள் அதில் கலந்துள்ளன!
////Blogger Sattur Karthi said...
ReplyDeleteGood Morning Sir!/////
நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கும், காலை வணக்கத்திற்கும் நன்றி!
////Blogger kohilam said...
ReplyDeleteVanakkam Aiya,
Arumayana paadal...aduvum M.S.amma kuralil...migavum arumai...nandri Aiya./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!
/////Blogger வேப்பிலை said...
ReplyDelete///kmr.krishnan said...
சிவபெருமான் காவல் இருந்த பிள்ளையாரின் தலையைச் சீவிவிட்டார்.///
மறைவாக நமக்குள்ள
பழங்கதைகள் பேசி என
சொன்ன அந்த
சுப்பிரமணியிடம் கற்க வேண்டியது
இப்படி பழையபுரணங்களின் செய்தியின்
உண்மைகளை உணராமல்
அப்படியே எடுத்துக் கொள்வது
அறியாமையில் உள்ள
நாத்திகவாதிகளின் செயல்
நாம் தெளிவுபடுத்தினாலும்
மூன்று கால் என (நாத்திகர்கள்)
முரண்டு பிடிப்பவர்கள்
மறந்துமா இப்படி உண்மையை
மறைத்து சொல்லனும்
///சிவபார்வதி திருமணத்திற்கே பிள்ளையார் பூஜை செய்யப்பட்டதாமே!!! அப்படியென்றால் யார் பிள்ளை? யார் அப்பா?///
பவன் பிரம்மச்சாரி
பால்மொழி கன்னியாவாள்
என்கிறது சித்தியார்
என்பது தெரியும் தானே. மனித
உணர்வுகளை அல்லது
உறவுகளை உயர்வானவற்றுடன்
ஒப்பிடக் கூடாது..மனதுக்கு
ஒத்துக் கொள்ளவில்லைஎனினும்
அது கூடாது..
அறியாமையில் சொல்வதும் பிழையே
(இட்லி "கல்" போல இருக்கிறது என சொல்லாம் கல் "இட்லி" போல இருக்கிறது என சொல்வது சரியா?)/////
கற்றது கைமண் அளவு. கல்லாதது உலக அள்வு. அதுதான் பிரச்சினை சுவாமி
/////Blogger சே. குமார் said...
ReplyDeleteஅருமை...
அழகான விளக்கம்..../////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
/////Blogger Subramaniam Yogarasa said...
ReplyDeleteஅருமையான விளக்கத்துடன்,பாடல்.அருமை,நன்றி வாத்தியாரய்யா./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
/////Blogger kmr.krishnan said...
ReplyDelete//இப்படி பழையபுரணங்களின் செய்தியின்
உண்மைகளை உணராமல் //
நாங்கள் உண்மைப் புராணங்களை உணரும் வண்ணம் கொஞ்சம் எழுதுங்கள் வேப்பிலை சுவாமிகளே!/////
அதானே! எழுதுவதற்கு நேரமில்லை என்றால் பகுதி பகுதியாக ஒளி நாடாவில் பதிவு செய்து அனுப்புங்கள். நாங்கள் அறிந்து கொள்கிறோம்! You Tube தளத்திலும் அதை ஏற்றி, உலகறியச் செய்துவிடுவோம்!