Devotional: சிவபுராணம் - வழங்குபவர். S.P.பாலசுப்பிரமணியம்
பக்தி மலர்
இன்றைய பக்தி மலரை திரு.S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய சிவபுராணம் நிறைக்கிறது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
Our sincere thanks to person who uploaded this video clipping
in the net
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
திருவாசகத்தை
ReplyDeleteமோகனத்தில் பாடவேண்டும் என்ற வழக்கமுண்டு...
பண்மாறினால் பலனும் மாறும் என்ற
நம்பிக்கையும் உண்டு..
திருவாசம் தந்த இளையாராஜாவை தெரியும் தானே..
அந்த குழுவில் இணைந்திருந்த
ஜெகத் கஸ்பரை தெரியும் தானே..
போப்பும் திருவாசகம் படித்து கண்ணீர் விட்டது பற்றி எழுத துடிக்கும் தோழர்களே.. அவர் படித்தார் ஆனால் பாடவில்லை
சில விதிமுறைகள் சில வற்றிக்கு உண்டு..
சாப்பிடத்தான் உணவு என்பதற்காக எங்கு வேண்டுமானாலும்
உட்கார்ந்தபடி(அல்லது நின்றபடி) சாப்பிடுவது முறைதானா..?
அது சரி..
நவராத்திரி தொடக்கத்தில்
அம்பாளைத்தானே போட்டிருக்க வேண்டும்..
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteபாடும் நிலா S. P. பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய சிவபுராண கலி வெண்பா பாடலை தங்களது இன்றைய பக்தி மலரில் கொடுத்ததற்கு மிகவும் நன்றி. மஹாளய அமாவசையன்று கிடைத்த மிகவும் அரிய பொக்கிஷம் இது.
பாடல் பகிர்வுக்கு நன்றி ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வணக்கம் ஐயா,
ReplyDeleteநவராத்திரியை அனைவரும் சிறப்புடன் கொண்டாட வாழ்த்துக்கள்.
///Geetha Lakshmi A said...
ReplyDeleteநவராத்திரியை அனைவரும் சிறப்புடன் கொண்டாட வாழ்த்துக்கள்///
அன்பு சகோதரி அவர்களே
நவராத்திரி கொண்டாடும் பண்டிகை இல்லை. பக்தி செய்யவேண்டிய திருநாள்
அன்புடையீர்!..நல்லதொரு பகிர்வினுக்கு நன்றி!..
ReplyDeleteபக்தியைக் கொண்டாடக் கூடாதா? பக்தியென்றால் துக்கமாகத்தான் இருக்க வேண்டுமோ? நல்ல பக்தன் ஆனந்தமாக, திருவிழா மனநிலையில் இருப்பான்.
ReplyDeleteநீங்களே சொல்லிவிட்டீர்கள் திருநாள் என்று.திருநாள் என்றால் எப்போதும் ஆனந்தமே. ஆகவே நவராத்திரியைக் கொண்டாடலாம்.
///kmr.krishnan said...
ReplyDeleteதிருநாள் என்றால் எப்போதும் ஆனந்தமே. ///
ஆனந்தம் வேறு
அப்படி சொல்லும் கொண்டாட்டம் வேறு
திருநாள் என நாம் சொல்வதை
பெருநாள் என இஸ்லாம் சொல்லும்
பக்தி எனும்
பதத்தின் பொருள் மாறி
உலா வருகிறது என்பதை
உணர்த்தவே சொன்னது
விதிமுறைகள் எல்லாவற்றிக்குமுண்டு
விபரீதமும் உண்டு அதை மீறினால்..
வணக்கம் ஐயா,
ReplyDeleteநன்றி கிருஷ்ணன் சார், பக்தி என்பது அனுதினமும் நம் உள்ளத்தில் இருக்கவேண்டியது,பண்டிகை என்பது நம் உற்றார்,ஊறவினருடன் சேர்ந்து சந்தோசமாக கொண்டாடி,கடவுளுக்கு நன்றி செலுத்தும் திருநாள் என்று நான் கருதியதால் வாழ்த்துக்கூறினேன்,எல்லோரும் ஒரே எண்ணத்தில் இருக்கவேண்டும் என்றில்லையே,ஒரு சில கருத்துக்களுக்கு மெளனமே சரியான பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்,வேப்பிலை சார் மிகவும் புத்திசாலி என்பது தெரிகிறது,சார் வகுப்பில் நான் கூறுவது ஏதாவது தவறு இருப்பின் மன்னிப்பீராக.
வாத்தியார் ஐயா,
நான் எழுதியது யாராவது மனம் புண்படும் வகையில் இருந்தால் பிரசுரிக்கவேண்டாம். நன்றிஐயா.
///Geetha Lakshmi A said...
ReplyDeleteவேப்பிலை சார் மிகவும் புத்திசாலி என்பது தெரிகிறது,சார் வகுப்பில் நான் கூறுவது ஏதாவது தவறு இருப்பின் மன்னிப்பீராக.///
அன்பு சகோதரி அவர்களே..
தாங்கள் கூறியது போலவே
///எல்லோரும் ஒரே எண்ணத்தில் இருக்கவேண்டும் என்றில்லையே,///
யாரும் யாரையும் மன்னிக்க கூடாது யாரிடமும் மன்னிப்பு கோரக் கூடாது
என்பது எமது கருத்து..
உங்கள் கருத்தில் தவறில்லை..
ஒருவர் கருத்திற்கு பதிலோ அல்லது மறு கருத்தோ சொல்வது அவர்களின் எண்ணத்தை மறுப்பதற்கு (மட்டும்) அல்ல..
மற்றவர்களிடம் உள்ள மாற்று கருத்தினை வெளிச்சம் போடவே..
வரும் விமர்சனங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் எளிதாக எடுத்துக் கொண்டு நட்பு தொடர வேண்டும்..
உங்கள் கருத்து
உங்களுக்கு சரி..
எங்கள் கருத்து
எங்களுக்கு சரி
நீங்களும் மாறி என் கருத்தை ஏற்கலாம்
நானும் மாறி உங்கள் கருத்தை ஏற்கலாம் என
அன்பு பாராட்டி
அடுத்தது என்ன
என்ற எண்ணம் வரவேண்டும்
எப்போதும்; அதை விடுத்து
என்னை இன்று வாறி விட்டாய்
உன்னை வாற காத்திருக்கிறேன் என
இருப்பது கூடாது அப்படி
இருந்தாலும் (ஒரு வேளை)
மற்றவர் (இருவரும்)
மனம் வருந்த கூடாது
இது தான் சொல்ல வருவது
இதை இப்படியே ஏற்கவேண்டியதில்லை
நலமே பெறுக..
நன்மையையே தருக..
பலமுடன் வாழ்க..
நலமுடன் வளர்க..