மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

19.5.14

சாதித்துக் காட்டிய மோடியும் லேடியும்!

 
சாதித்துக் காட்டிய மோடியும் லேடியும்!

நமது தேசத்தின் புதிய பிரதமராகப் பதவி ஏற்க உள்ள திரு.நரேந்திர மோடி அவர்களை நமது வகுப்பறையின் சார்பில் வரவேற்போம். இறையருளுடன் அவர் நல்லாட்சி புரிந்து, நாட்டு மக்கள் விரும்பும் மாற்றங்களைக் கொண்டு வரட்டும்!

வாழ்க மோடி! வளர்க மோடி!
-------------------------------------------------------------

தனித்து நின்று அமோக வெற்றிபெற்ற நமது தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களையும் நமது வகுப்பறையின் சார்பில் வாழ்த்துவோம்!

தமிழகத்தில் என்ன நடந்தது? ஒரு பார்வை:

 அன்புடன்,
வாத்தியார்

-------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

வேப்பிலை said...

எதிர்பார்ப்புகள் மக்களிடம்
ஏராளம்..

சாதித்த காட்ட வந்தவன் நான்
சாதிக்காக வந்தவனல்ல என

மோடியும்..சரித்திரம் படைத்த
லேடியும்.. நம் முன்னே

சிகரங்களை தொட்ட
மேகங்களாய்...

விடா முயற்சியும்
விழாமல் எழுந்திருக்கும் பயிற்சியும்

இருந்தவிட்டால் வாழ்க்கையெனும்
இந்த பந்தயத்தில் வெற்றியே

வாழ்த்துகிறோம் உங்களுடன்
வளமான வாழ்வு கொஞ்சம் பெற

துரை செல்வராஜூ said...

திரு. நரேந்திர மோடி அவர்களின் சீரிய தலையில் நாடு நலம் பெறவேண்டும்.
நல்வாழ்த்துக்கள்..

thozhar pandian said...

வாத்தியார் அய்யா, 39ற்கு 37ஐ வென்றது அதிமுகவின் சாதனைதான். ஆனால், 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கட்சிக்கு தனியாக பெரும்பான்மை கிடைத்திருப்பது அதனினும் பெரிய சாதனை. அந்த சாதனைக்கு முக்கிய காரணம் பாரத பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் திரு.நமோ அவர்கள் தான். 30 ஆண்டுகளாக மத்திய அரசாங்கத்தை சிறு சிறு மாநில காட்சிகளும், லெட்டர் பேட் கட்சிகளும் மிரட்டிக் கொண்டிருந்ததால் தான் நாட்டில் நல்ல மாற்றங்கள் ஏற்பட பெரும் தடைக்கற்களாக இருந்தன. இந்த இழிநிலைக்கு காரணம் தேசிய அளவில் ஒரு வலிமையான தலைவர் அமையாததுதான். அந்த குறையை போக்கியிருக்கிறார் நமோ அவர்கள். அவரது தெய்வ பக்தி அனைவரும் அறிந்ததுதான். வெற்றி செய்தி கிட்டியவுடன் தனது தாயிடமும், டெல்லிக்கு சென்றவுடன் திரு.அத்வானியிடமும் ஆசி பெற்றார். கடவுள் பக்தியும், பெரியவர்களிடம் பணிவும் கொண்ட நமோவிடம் நாட்டின் தலைமை பொறுப்பு சென்றிருப்பது இந்தியாவிற்கு நல்லது. குரு பெயர்ச்சி ஏற்பட இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், இந்த நல்ல செய்தி வந்திருப்பது, இனி இந்த ஆண்டு ஏற்பட உள்ள இராகு கேது பெயர்ச்சியும் சனி பெயர்ச்சியும் இன்னும் நாட்டிற்கு இனிப்பான செய்திகளை கொண்டு வரும் என்று நினைக்கிறேன்.

தமிழகத்தில் அதிமுகவின் பெரிய வெற்றியை நான் அவ்வளவு நல்ல செய்தியாக பார்க்கவில்லை, அவரது 37 எம்.பிக்களால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தவிர. வெற்றிக்கு பின்னர் முதல்வர் மத்திய அரசிடம் இருந்து சிறந்த ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன் என்று கூறியது நல்லதே. ஆனால் இவர் தனியாக் நின்றதன் நோக்கமென்ன? தமிழகத்தில் பெரிய வெற்றியை ஈட்டி, தனது 37 எம்.பிக்கள் மூலமாக ஒன்று பிரதமராவது அல்லது பிரதமருக்கு குடைச்சல் கொடுப்பது என்ற நோக்கம்தானே? இது நாட்டிற்கு எப்படி நல்லதாகும்? தமிழக நலனை கருத்தில் கொண்டு செய்ததாக கூறுவதும் எடுபடாது. நிலையான மத்திய அரசாங்கம் அமையாமல் இருப்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மாநிலத்திற்கும் நல்ல விஷயமாக அமையாது. இதில் வெற்றியை சாதாரனமாக எடுத்துக் கொள்ளாமல் அதிமுகவின் கூட்டணி கட்சி தலைவரான சரத்குமார், "நாட்டில் என்னவோ அலை என்றனர், தமிழகத்தில் அம்மா அலைதான்" என்று நமோவை இடித்து கொக்கரிக்கிறார். இது ஒரு ஆரோக்கியமான அனுகுமுறை அல்ல. தமிழகத்தில் நமோ அலை வேலை செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்தியாவில் தமிழகம் மட்டும் மாநிலம் அல்ல, இந்த தேசத்தின் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட உ.பியில் பா.ஜ.க வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. அது மட்டுமல்ல, குஜராத், இராஜஸ்தான், ம.பி., பீகார், மகாராஷ்டிரா, சீமாந்திரா போன்ற மாநிலங்களிலும் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. தமிழகத்தில், ஏன் நமோவை தவிர இந்தியாவில் உள்ள எந்த ஒரு தலைவராலும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தி காட்ட இயலாது.

thozhar pandian said...

ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றாலும் முக்கிய சட்டங்களை நிறைவேற்ற 2/3 பெரும்பான்மை வேண்டும் என்பதால், பா.ஜ.கவிற்கு அதிமுகவின் உதவி அவசியம். அதிமுகவிற்கும் தமிழகத்தின் தேவைகளை நிறைவேற்றித் தர மத்திய அரசிடம் சுமூக அனுகுமுறை தேவையாய் இருக்கிறது. நாட்டின் நலனை கருதி இரு அரசாங்கங்களும் தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து இணைந்து பணியாற்ற வேண்டும். நமோ நிச்சயம் நல்லது செய்வார். ஆனால் தமிழக முதல்வருக்கு அது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே.

kmr.krishnan said...

மோடிக்கும் லேடிக்கும் வாழ்த்துக்கள்.

காங்கிரஸின் தோல்விக்கான காரணங்கள்.

1.கைகட்டப்பட்ட மன்மோகன் சிங்.
2. புகழ் கிடைத்தால் எட்விகெ அன்டோனியொ அன்பினொ மெய்னொ,மற்றும்
ரெவுல் வின்சியும் பகிர்ந்துகொள்வதும், இகழ் கிடைத்தால் மன்மோகன் சிங் தாங்க‌ வேண்டும் என்ற நிலை.
3.கூட்டணி அரசியலில் குடும்ப‌ சுய நலம் மட்டுமே முக்கியமாகக் கொண்ட கட்சிகளை எப்போதும் மகிழ்விக்க வேண்டிய கட்டாயம்.
4. ஊழல் செய்வது அரசியலில் தவறல்ல என்ற மனநிலை.
5. அன்னா ஹசாரே போன்ற‌ சமூக ஆர்வலர் ஊழல் எதிர்ப்பைக் கையில் எடுத்ததால் புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் ஊழல் அரசை அகற்ற முனையும் மனநிலைக்கு வந்தது.
6.காங்கிரசுக்குத் தொண்டர் படையே இல்லாமல் ஆனது. எல்லோரும் தலைவர்களே. தொண்டர்களே கிடையாது.
7.மக்கள் தொடர்பு மிககுறைந்தது. 'பிரட் விலை உயர்ந்தால், கேக் சாப்பிடட்டுமே' என்று கூறும் இங்கிலாந்து அரசியின் மனோபாவம்.
8.எதிர்கட்சியின் வலிமையைக்குறைத்து மதிப்பிட்டது.
9. வழக்கமான ஓட்டுவங்கியான இஸ்லாமியர்களும், தலித்துக்களும் மீண்டும் கைகொடுப்பார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டது.
10. அரசாள்பவரின் நிறைகளை விடக் குறைகளே மக்கள் மனதில் அதிகம் பதியும்.
11. மோடியைத் தனிப்பட்ட முறையில் தாக்கத் துவங்கிய அசிங்கம்.

venkatesh r said...

பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நமோ அவர்கள் கூறியது போல "கொடுத்த‌ தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுத்திருக்கிறது!". உதிரிக் கட்சிகளின் தயவு இல்லாமல் 5 ஆண்டுகள் வலுவான ஆட்சியையும் கொடுத்து மக்களின் எதிர்பார்ப்பையும் கண்டிப்பாக நிறைவேற்றுவார்.

hamaragana said...

அன்புடன் வணக்கம் சக தோழர்களுக்கு
***நமோ நிச்சயம் நல்லது செய்வார். ஆனால் தமிழக முதல்வருக்கு அது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே.***
தோழர்களுக்கு ..
சந்தேகமே வேண்டாம் ..மோடிஜி ஏதாவது சட்டம் இயற்ற அ இ அ தி மு க ..உதவி நாடினால் கண்டிப்பாக குடைச்சல் அதிமாகும்.
என்ன சொத்து குவிப்பு வழக்கு தள்ளுபடி..மந்திரி சபைல இடம் ..இல்லை என்றால் பிரதமர் பதவி இந்த மேடத்திற்கு....இது போன்ற குடைச்சல்கள் அதிகமாகும்..
மோடிஜி யிடம் இது செல்லாது ..!!
நாட்டு மக்களின் நலன் என்ன என்று பார்பதுதான் .அவர் பார்வை..தன்னலம் கருத தலைவர்
நமது பாரத தேசம் செய்த புண்ணியம் இந்த தலைவர். ..

வேப்பிலை said...

வெற்றிக்கான காரணத்தையும்
தோல்விக்கான காரணத்தையும்

அலசுவது சரிதான்
ஆனால் இந்த தேர்தலில்

கள்ள ஓட்டு இல்லை
கணக்கிடுக்கையில் கூட

மக்களின் ஆதரவை இதுவரை
மற்றவர்கள் எப்படி கையாண்டது

என்பது இப்போது தெளிவாகியது
என்றாலும் 1ல் கூட தேறலையே

இத்தனை ஆண்டு கட்சி வளர்த்து
இதுவா பலன்?

அரசியல் வேண்டாம்
அலசல் மட்டும் போதும்

V.C.Arunchand said...

மோடி அவர்களுக்கு எனது மனம் நிறைத்த வாழ்த்துகள் ..........

Sathiya Moorthy Krishnaswamy Vellore-632009 said...

I accept thozar pandian

thozhar pandian said...

திரு.ஹமாராகனா அவர்களே, தாங்கள் கூறுவது சரிதான். 1999ல் திரு.வாஜ்பாய் அவர்கள் ஆட்சியை அநியாயமாக கவிழ்த்து நாட்டை இன்னொரு தேர்தல் சுமையை ஏற்க வைத்து புண்ணியம் (?) தேடிக் கொண்டவர் தான் இன்றைய தமிழக முதல்வர். அப்போது அவர் ஆட்சியை கவிழ்த்ததற்கு ஏதாவது ஒரு காரணம் உண்டா? சோனியா காந்தி அவர்களுடன் தேநீர் விருந்தில் கலந்து கொண்டு சூட்டோடு சூட்டாக ஆட்சி கவிழ வாக்களித்தார். மக்களும் அடுத்து வந்த 1999 தேர்தலில் அவரை கவிழ்த்து விட்டனர். அப்படியும் சில தொகுதிகளை அவரும் அவருடன் கூட்டணி சேர்ந்திருந்த காங்கிரஸும் பெற முடிந்தது. ஆனால் இப்போது நிலைமை வேறு. அம்மா குடைச்சல் கொடுப்பது அவருக்கும் நல்லது அல்ல. 2016ல் சட்டசபை தேர்தல் வர உள்ளது. 39க்கு 37ஐ அள்ளி கொடுத்தது போல் மக்கள் அப்போதும் கொடுக்க வேண்டுமென்றால் தமிழக நலனை கருத்தில் கொண்டு அவர் செயல்பட வேண்டும். அதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை.

தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை மனமாற ஏற்றாலும், சில தலைவர்களை கவிழ்த்து விட்டார்களே என்பது வருத்தம்தான். அவர்கள் திரு.வைகோ மற்றும் திரு.இல.கணேசன்.

நன்றி வேலூர் திரு.சத்திய மூர்த்தி கிருஷ்னசாமி அவர்களே

Subbiah Veerappan said...

இன்றையப் பதிவில் திரு மோடி அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துப் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!
அன்புடன்
வாத்தியார்

BLAKNAR said...

அன்புள்ள வாத்தியாருக்கு,

வணக்கம். திரு. மோடி ஜாதகத்தையும் நாங்கள் படிக்க, இவ்விடம் அலச வேண்டும் என அன்பு விண்ணப்பம் வைக்கிறேன். அணைத்து மாணவர் சார்பிலும்...

லக்ஷ்மி நாராயணன், தூத்துக்குடி.

jegan kumar said...

அணைத்து பதுவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள். மேலும் தமிழக செய்திகள் மற்றும் உலக செய்திகளை அறிய தமிழன்குரல் இணையதளத்தை பார்க்கவும்.