மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

14.5.14

Astrology: கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி!

 

Astrology: கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி!

பொதுவாக அலசல் பாடங்களுக்குத் தெரியாத, பிரபலமில்லாதவர்களின் ஜாதகத்தைக் கொடுப்பதுதான் வழக்கம். பிரபலங்களின் ஜாதகங்களைக்
கொடுக்கும்போது, வழக்கம்போல அது யாருடைய ஜாதகம் என்று கண்டு பிடித்துப் பதில் எழுதிவிடுகிறார்கள்.  

அலசலின் நோக்கம் கெட்டுவிடுகிறது.அப்படித்தான் நேற்றுக்
கொடுத்திருந்த ஜாதகமும், ஒரு பிரபலத்தின் ஜாதகம்தான். சிலர்
அதைக் கண்டு பிடித்துப் பதில் எழுதியிருக்கிறார்கள்.

யார் அந்தப் பிரபலம்?

மறைந்த செல்வந்தர் திருபாய் அம்பாணியின் ஜாதகம்தான் அது!

ஜாதகரின் நிதி நிலைமையை அலசச் சொல்லியிருந்தேன். ஜாதகர்
யாரென்று தெரிந்த பின்பு அவருடைய நிதி நிலைமையைச் சொல்வதா கஷ்டம்? விக்கி மஹாராஜா இருக்கிறாரே! அவர் முழுத் தகவலையும் தருவாரே!
-------------------------------------------------------
சரி இப்போது பாடத்திற்கு வருவோம்.


ஜாதகர் பிறவிப் பணக்காரர் அல்ல.

Dhirajlal Hirachand Ambani என்பது அவருடைய முழுப் பெயர்
28 டிஸம்பர் 1932ஆம் தேதியன்று பிறந்தவர் அவர்.
1977ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசைத் துவங்கியவர்
25 ஆண்டுகளில், அதாவது 2002ல் அதை ஆசியாவின் மிகப் பெரிய நிறுவனமாகமாற்றினார். பெரும் செல்வந்தரானார்.
அத்துடன் அவர் 2.6.2002 ல் காலமும் ஆகிவிட்டார்.
இப்போது அந்நிறுவனத்தை அவருடைய குமாரர்கள்திறம்பட
நிர்வகித்து வருகிறார்கள்.

அம்பாணி ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தந்தை ஒரு பள்ளிக்கூட வாத்தியார். 1950ல் ஏமன் நாட்டில் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தவர். 1958ல் மும்பைக்கு வந்து சேர்ந்தார். ஒரு
அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாடகை வீட்டில் குடியிருந்தார்.
1966ல் ரிலையன்ஸ்நிறுவனத்தைத் துவங்கிய பிறகுதான் அவர் வாழ்க்கையில் வசந்தம் வந்தது. அசுர வளர்ச்சியும் வந்தது.

காலசர்ப்ப தோஷ மற்றும் யோக ஜாதகம் 33 வயதுவரை அவரை
அமுக்கிப் பிடித்திருந்த ராகு பிறகு அவரை விட்டுவிட்டதோடு,
தனது மகா திசையில்அவருக்குப் பலத்த யோகத்தையும் கொடுத்தான்.
ராகு அவருடைய ஜாதகத்தில் 3ஆம் இடமான வெற்றி ஸ்தானத்தில் இருப்பதைக் கவனியுங்கள்.

1. பாக்கிய ஸ்தான அதிபதி சூரியன் லக்கினத்தில் அமர்ந்தது மிகவும் சிறப்பாகும். எல்லா பாக்கியங்களையும் வழங்கினான்
2. அரச கிரகங்களான சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்ந்து லக்கினத்தில் அமர்ந்தது மேலும் சிறப்புக்குரியதாகும்
3. லக்கினநாதன் குரு முக்கிய கேந்திரமான பத்தில் அமர்ந்ததும்
சிறப்புக் குரியதாகும்
4. 2ல் அமர்ந்திருக்கும் சனிக்கு அது சொந்த வீடாகும். அத்துடன்
தனகாரகனாக குரு பகவானின் பார்வை அந்த வீட்டின் மேல்
விழுவதையும்கவனியுங்கள். இருவரும் கூடணி போட்டுத்தான்
அவரைப் பெரும் செல்வந்தராக்கினார்கள். குரு திசையில்
அது கைகூடியது.

விரிவான அலசலை கேலக்ஸி2007 வகுப்பில் வைத்துக்கொள்வோம்!

கேது கொடிபிடிக்கும் ஜாதகம் என்று இரண்டொருவர் எழுதியுள்ளீர்கள்.
அது தவறு. ராகு மற்றும் கேதுவைத் தவிர எல்லா கிரகங்களும்
கெடிகாரச் சுற்றில்சுழலுபவை. அதைத்தான் கணக்கில் எடுத்துக்
கொள்ள வேண்டும். மற்ற கிரகங்களுக்கு முன்பு ராகு முதலில்
(கெடிகாரச் சுற்றில்) இருப்பதைப்பாருங்கள்

கணிப்பை ஓரளவிற்கு சரியாக எழுதியவர்கள். ஐந்து பேர்கள். 
அவர்களின் பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன். அவர்களுக்கு
எனது மனம் உவந்தபாராட்டுக்கள்.
போட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------
1
/////Blogger thozhar pandian said...
    இலக்கினாதிபதி மற்றும் தனகாரகர் குரு பகவான் இலக்கினத்திற்கு கேந்திரத்திலும், இரண்டாம் வீட்டிற்கு திரிகோணத்திலும் அம்சமாக
அமர்ந்துள்ளார். சனி பகவான் இரண்டாம் வீட்டில் இருந்தாலும் அது அவரது சொந்த வீடு. அதோடு இரண்டாம் வீட்டின் மேலும் அதில்
அமர்ந்திருக்கும் இரண்டாம் வீட்டுக்காரர் சனி பகவான் மேலும் தனகாரகர் குரு பகவானின் விசேஷ பார்வை உள்ளது. இதனால் இரண்டாம் வீடு
வலுவாகவே உள்ளது என்றாலும் இரண்டாம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது ஒரு குறைதான். ஒருபுறம் சூரியன், மறுபுறம் இராகு. இலாப
வீடான 11ம் வீட்டுக்காரர் சுக்கிரன் விரயத்தில். பாக்கியஸ்தானத்தில் கேதுவும், செவ்வாயும். காலசர்ப்ப தோஷ ஜாதகம். ஜாதகர் ஏழையாக பிறந்தார்.
ஆனாலும் இராகு கொடி பிடித்து செல்லும் காலசர்ப்ப தோஷ ஜாதகம் என்பதால் தனது உழைப்பால் உயர்ந்து நடு வயதிற்கு பிறகு, அதாவது 35
அல்லது 40 வயதிற்கு பிறகு பெரும் பொருள் ஈட்டினார்.
இந்த அன்பருக்கு 32வது வயதில் இராகு தசை வந்திருக்கும். இராகு இலக்கினத்திற்கு 3ல்
இருப்பது நல்லதே. இராகு தசை முற்பாதியில் சில சோதனைகளையும் பிற்பாதியில் நல்ல உயர்வையும் கொடுத்திருக்கும். அடுத்து வந்த வியாழ
தசையில் அன்பர் மிகவும் சிறப்பாக வாழ்ந்திருப்பார்.

    Tuesday, May 13, 2014 6:46:00 AM/////
-------------------------------------------------------
2
/////Blogger Senthil Nathan said...
    ஐயா
    இந்த ஜாதகர் 28.12.1932 06.50 AM
    அன்று பிறந்தவர், இவரின் பெயர் கார்த்திகேயன் என்று இருக்கலாம்.
    கால சர்ப்பதோசத்தில் பிறந்த இவர், சாதாரண குடுப்பத்தில் பிறந்தவராவார்.,
    30 ஆண்டுகள் கழித்து 1962 ஜனவரிக்கு பிறகு இவரின் பொருளாதார நிலைமை நல்ல நிலைக்கு வர தொடங்கியிருக்கும்., பின்பு வந்த இராகு,
குரு மற்றும் சனி தசைகளில் அதிக பணக்காரராக மாறியிருப்பார்,

    இரண்டாம் அதிபதி இரண்டில் பலமாக உள்ளார்-குரு பார்வையுடன், இலாபாதிபதி சுக்கிரன் வர்க்கோத்தமம் அடைந்துள்ளார்.,-அய்யன்
இசைஞானி அவர்களுக்கு தாங்கள் சொன்னதைப்போல அதாவது பாவ, சூரிய & சந்திர மூன்று இலக்கினங்களும் ஒன்றாக இருப்பது யோக
நிலையாகும்.

    Tuesday, May 13, 2014 2:27:00 PM/////
---------------------------------------------------------------------------
3
/////Blogger kmr.krishnan said...
    சுக்கிரதசாவும், பாக்கிய ஸ்தானதிபதி சூர்யனின் தசாவும் 15 வயதுவரை ஓர‌ளவு
    வசதியைக் கொடுத்து இருக்கும்.
    அதன் பின்னர் 10 ஆண்டுகள் சந்திர தசாவில் (எட்டாம் அதிபன் தசா) அதிக சிரமம்.சந்திரன் அஸ்தங்க‌தம்.லக்கினத்தில் எட்டாம் அதிபன்
சந்திரன் அமர்ந்தது
    லக்கினத்தைப் பாழாக்கியது.
    கால சர்பதோஷ ஜாதகம் கேது கொடி பிடித்து முன் செல்கிறார். ஆகவே மிகவும் கஷ்ட ஜீவனம்.
    செவ்வாய் தசா முடிவில் 32 வயதிற்குப்பின்னர் சிறிது தலை தூக்கினார். ராகு தசா காலம் முழுவதும் 50 வயதுவரை தடங்கல்களுக்கு இடையே
முன்னேறினார்.
    குருதசாவில் நன்றாகத் த‌ன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

    அஷ்ட வர்கத்தில் 10 11 இடங்களுக்கு 38, 35 பரல்கள் இருப்பதும் ,
    கஜகேசரியோகம் இருப்பதலும் , சுய வர்கத்தில் குரு 5 பரல் பெறுவதாலும் பிற்கால வாழ்க்கை நன்றாக அமைந்தது.
    Tuesday, May 13, 2014 4:17:00 PM/////
--------------------------------------------------------------------------
4
//////Blogger Kirupanandan A said...
    சம்பாதித்து பணக்காரர் ஆனவர். சனி பாப கிரகம் ஆனாலும் 2ம் அதிபதி 2ல் ஆட்சியாகி இருப்பது நல்ல யோகம். லக்னாதிபதியும் தன
காரகனுமான குரு 10ல் இருப்பது சுயமாக நிறைய சம்பாதித்து சொத்து சேர்ப்பதற்கான யோகம்.
லக்கினாதிபதி 10ல் இருக்கும் சில ஜாதகங்களில்
இதை கவனித்திருக்கிறேன். அதாவது சுயமாக சம்பாதித்து சொத்து சேர்ப்பது. 9ம் அதிபதி லக்கினத்தில் இருப்பதும் ராஜயோகம் தரக்கூடிய
அமைப்பு.

    Tuesday, May 13, 2014 8:07:00 PM/////
-------------------------------------------------------
5
/////Blogger venkatesh r said...
    தனுசு லக்னம், தனுசு ராசி ஜாதகர். கேது கொடி பிடித்து செல்லும் கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம்.
    ஜாதகர் பிறவியில் பணத்திற்காக‌ மிகவும் கஷ்டப்பட்டு, பிறகு படிப்படியாக சம்பாதித்து பணக்காரனானவர். அதற்கான காரணங்கள்.
    1) இரண்டாம் இடமான தன ஸ்தானம், மற்றும் அதன் அதிபதி சனி பாப கர்த்தாரியின் பிடியில். அதனால் இளமையில் வறுமை.
    2)லக்னாதிபதி/ராசியாதிபதி மற்றும் தனகாரகனுமான‌ குரு 10ல் வலுவாக உள்ளார். அதனால் அவருக்கு நல்ல வேலை அமைந்தது. தவிர அவர் 2ம்
இடமான தன ஸ்தானத்தை தன் 5ம் விஷேச பார்வையில் வைத்து உள்ளார்.
    3)லாப ஸ்தானமான 11மிடம் சுப கர்த்தாரி யோகத்திலும் கர்மகாரகன் சனீஸ்வரனின் 10ம் பார்வையிலும் உள்ளது.
    எனவே ஜாதகர், தான் செய்து வந்த தொழிலில் படிப்படியாக முன்னேறி ஒரு செல்வந்தராக ஆகியிருப்பார்.
    Tuesday, May 13, 2014 10:09:00 PM/////
---------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5 comments:

வேப்பிலை said...

எதையெல்லாம் வாங்க முடியாது
என பட்டியலிட்டதில்

கவலை
கஷ்டம்

இஷ்டம்
நஷ்டம் என

சிலவற்றையும் சேர்த்துக் கொள்க
சிந்தனையை அப்படியும் செலுத்துக

kmr.krishnan said...

என் பதில் கிட்டத்தட்ட சரியாக அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.5 பேரில் ஒருவனாக வந்தது மிக்க மகிழ்ச்சி.உங்க‌ளுக்கு என் வந்தனம் உரித்தாகுக.
kmrk1949@gmail.com

kutty said...

intha jathagathirku kendra athipathya thosam illaya?

Kirupanandan A said...

நான் பார்த்தவரை லக்னாதிபதியே கேந்திராதிபதியாக வந்தால் தோஷம் செய்வதில்லை. ஒரு கேந்திரத்திற்கு அதிபதியாக வருபவர் இன்னொரு ஆதிபத்தியம் மூலம் கோணாதிபதியாகவும் வந்தால் தோஷமில்லை. இன்றைய ஜோதிடர்களின் கருத்தும் இதுதான். இதனை மனதில் இருந்திக் கொண்டு பலன் பார்த்தால் எந்தக் குழப்பமுமில்லை.

saravanan said...

sir,

if kethu leads the way and other planets following it,is it true that the person may suffer second part of the life.

pls explain.thank you