மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

1.5.14

Humour: நகைச்சுவை: கஷ்டமர் கேர் 2020

 
Humour: நகைச்சுவை: கஷ்டமர் கேர் 2020

தலைப்பில் கஷ்டமர் கேர் என்றிருப்பதைப் பார்த்துப் பயந்து விடாதீர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவி என்பதை விட உபத்திரவம்தான் அதிகம்!
அதனால்தான் கஸ்டமர் கேர் என்பது கஷ்டமர் கேர் ஆகிவிட்டது.

வினையாகு பெயர்!

முதலில் உங்களுக்கு இணைப்புக் கிடைத்தவுடன் என்ன நடக்கிறது பாருங்கள்:

“வணக்கம், எங்கள் சேவையைத் தமிழில் பெற எண் ஒன்றை அழுத்தவும், ஆங்கிலத்தில் பெற எண் இரண்டை அழுத்தவும்”

“.....”

நீங்கள் புது வாடிக்கையாளர் என்றால் எண் ஒன்றை அழுத்தவும், இல்லை பழைய வாடிக்கையாளர் என்றால் எண் இரண்டை அழுத்தவும்”

“....”

உங்களுக்கு தகவல்கள் வேண்டுமென்றால் எண் ஒன்றை அழுத்தவும், பில்களுக்கு எண் இரண்டை அழுத்தவும். புகார்களுக்கு எண் மூன்றை
அழுத்தவும்

இப்படியே அவர்கள் சொல்கின்றபடி எழு கடல்கள், ஏழு மலைகளைக் கடந்து விட்டீர்கள் என்றால் நீங்கள் அதிஷ்டசாலி. இல்லை, ப்ளட் பிரசஷர் வந்தால் அவர்களைக் குறை சொல்ல முடியாது. விதியை நொந்துகொள்ள வேண்டியதுதான்!

பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் வேலைக்கு ஆட்கள் வைத்து அல்லாடாமல் இருக்க தங்கள் வேலைகள் எல்லாவற்றையும் கால் சென்ட்டர் சேவை மையங்களுக்குக் கொடுத்துவிட்டார்கள்.

இப்படியே போய்க் கொண்டிருந்தால் 2,020ல் என்ன ஆகும்?

ஒரு கற்பனை!
-----------------------------------------------------------------------------------------------
பசியோடு இருக்கும் கஸ்டமர் ஒருவர் ஒரு பிஸ்ஸா உணவகத்திற்குப் போன் செய்கிறார்:

“வணக்கம் சார், பிஸ்ஸா பாயின்டை அழைத்ததற்கு நன்றி! உங்கள்.....”

“என்னுடைய ஆர்டரை எழுதிக் கொள்ளுங்கள்!”

“முதலில் உங்களுடைய என்.எம்.பி.ஐ.ஸி (National Multi Purpose Identity Card) எண்ணைச் சொல்லுங்கள் சார்!”

“ஹி, ஹி..இருங்கள்...ஒன் மினிட்...ம்...இதோ..910 025 001 43536375”

“ஓக்கே சார்..உங்கள் பெயர் சோகநாதன், முகவரி, 6090 வளசரவாக்கம் இரண்டாவது அவென்யூ, உங்கள் வீட்டுத் தொலைபேசி எண் 225 4099 2266, உங்கள் அலுவலக எண் 230 2131 3388 உங்களுடைய மொபைல் எண் 999440 55664, இப்போது எந்த எண்ணில் இருந்து அழைக்கிறீர்கள்?”

“வீட்டிலிருந்து! என்னுடைய அத்தனை போன் நம்பர்களும் உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“தேசிய இணைப்பின் மூலம் எங்களுக்கு அத்தனையும் தெரியும் சார்!”

“ஓஹோ..! எனக்கு ஃபாமிலி பேக் சீஃபுட் பிஸ்ஸா ஒன்று உடனே வேண்டும். அனுப்பி வையுங்கள்”

“ஸாரி சார், அது உங்களுக்கு உகந்தது அல்ல!”

“எப்படிச் சொல்கிறீர்கள்?”

“உங்களுடைய மருத்துவ ரிப்போர்ட்டின்படி உங்களுக்கு ஹை பிளட் பிரஷர் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆகவே அது உங்களுக்குச் சரிப் படாது!”

“சரி, வேறு என்ன சாப்பிடலாம் என்கிறீர்கள்? பசி உயிர் போகிறது.சீக்கிரம் சொல்லுங்கள்”

“அகத்திக்கீரை பொதினா லீஃப் மிக்ஸட் பிஸ்ஸா இருக்கிறது சார். அது உங்களைப்போன்றவர்களுக்கு மிகவும் நல்லது. அதுவும் இல்லாமல் அதை
நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்”

“இதை எப்படிச் சொல்கிறீர்கள்?”

“கன்னிமாரா நூலகத்தில் இருந்து The advantage of Herbal Foods என்ற புத்தகத்தைச் சென்ற வாரம் எடுத்துக்கொண்டு போய் உள்ளீர்கள். அதை வைத்துச் சொல்கிறேன்.

“சரி, சரி அதிலேயே இரண்டு ஃபாமிலி சைஸ் பேக் அனுப்பி வையுங்கள். விலை என்ன ஆகும்?”

“அது நான்கு பேர்கள் உள்ள குடும்பத்திற்குத் தாராளமாகப் போதும் சார். விலை, உள்ளூர் வரி, மற்றும் டெலிவரி சார்ஜ் எல்லாம் சேர்த்து ஆயிரத்து
அறுநூற்றைம்பது ரூபாய் ( ரூ1,650:00 ) ஆகும் சார்!”

“கிரிடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாமா?”

“இல்லை, முடியாது என்று நினைக்கிறேன், நீங்கள் பணமாகத்தான் கொடுக்க வேண்டியதிருக்கும். உங்கள் கிரிடிட் கார்டின் கடன் அளவான ரூபாய் இரண்டு லட்சத்தை நீங்கள் தாண்டிவிட்டீர்கள். மேலும் இரண்டு மாதங்களாகத் தவணைத் தொகையையும் நீங்கள் செலுத்தவில்லை! ஹவுஸிங் லோன் கணக்குத் தனியாக உள்ளது!”

“சரி, பரவாயில்லை. எங்கள் பகுதியில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் பணத்தை எடுத்து வைக்கிறேன். நீங்கள் பிஸ்ஸாவை அனுப்பி வையுங்கள்!”

“அது சாத்தியமில்லை. ஏ.டி.எம் மில் நம்பர் ஆஃப் வித்டிராயல் அளவை நீங்கள் தாண்டியுள்ளீர்கள்...”

“அதைப்பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள்! பணம் தயாராக இருக்கும். உங்கள் ஆசாமி வர எவ்வளவு நேரம் பிடிக்கும்?”

“நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும் சார். அதற்குள் அவசரம் என்றால் நீங்கள் உங்கள் மோட்டார் சைக்கிளில் வந்து டெலிவரி எடுத்துக் கொள்ளலாம்.”

“என்ன சொல்கிறீர்கள்?”

“இணைப்பில் உள்ள விவரப்படி உங்களிடம் மோட்டார் சைக்கிள் ஒன்று இருக்க வேண்டுமே? இருக்கிறதல்லவா? அதன் எண்கூட 1188”

“............................”

“வேறு ஏதாவது வேண்டுமா சார்?”

“ஒன்றுமில்லை. ஆர்டருடன், உங்கள் கம்பெனி விளம்பரப்படி மூன்று இலவச கோக் பாட்டில்களையும் கொடுப்பீர்கள் இல்லையா? அவற்றையும் எடுத்து வையுங்கள்!”

“வழக்கமாகக் கொடுப்போம் சார். ஆனால் உங்களுக்குத்தர இயலாது. உங்கள் மருத்துவ ரிப்போர்ட்டின் படி நீங்கள் டயாபெட்டிக் பேஷண்டாயிற்றே!”

“?? $$**??”

“சார், மரியாதைகயாகப் பேசுங்கள். தரத் தணிக்கைக்காக நமது உரையாடல் பதிவாகிக்கொண்டிருக்கிறது!.நான் புகார் கொடுத்தால் என்ன ஆகும் தெரியுமா? சென்ற மாதம் இதுபோல பஸ் நடத்துனரிடம் தகாத வார்த்தைகள் பேசிச் சண்டை யிட்டதற்காக ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் சிறைப்பட்டதோடு, ரூபாய் ஐயாயிரம் வேறு அபராதமாகச் செலுத்தியுள்ளீர்கள். நினைவில் இருக்கிறதா?”

கஸ்டமர் இந்தப் பக்கம் தடால் என்ற பெருத்த ஓசையுடன் மயங்கிக் கீழே விழுகிறார். ஆனால் அது பசியினால் ஏற்பட்ட மயக்கம் அல்ல!

(மின்னஞ்சலில் வந்ததை மொழிமாற்றம் செய்து எனது நடையில் விரிவாக எழுதி, சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய இன்னொரு பதிவான பல்சுவைப் பதிவில் வெளிவந்ததை, இப்போது நீங்கள் அறியத்தந்துள்ளேன்)

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20 comments:

kmr.krishnan said...

Good humour. Thank you Sir
kmrk

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
Good humour. Thank you Sir
kmrk
Thursday, May 01, 2014 3:25:00 AM////

மணியைப் பாருங்கள். இந்த கருக்கல் விடியலில் நீங்களும் என்னைப் போலவே எழுந்து சுறுசுறுப்பாக கணினி முன் அமர்ந்துவிடுவீர்கள் போலிருக்கிறது. முதல் பின்னூட்டம் இட்டு பின்னூட்டக் கணக்கைத் துவங்கி வைத்த மேன்மைக்கு மிக்க நன்றி கிருஷ்ணன் சார்!

துரை செல்வராஜூ said...

இப்படியும் கஷ்ட காலம் வந்து விடுமோ!?...
நடப்பது நாராயணன் செயல்.. நடக்கட்டும்!..

Karthikraja K said...

narayana narayana...ethu enna kala kodumai...sathiyam athigam

Subramaniam Yogarasa said...

தான்,எந்த ரகசியமும் பேணப்படாது என்று உங்கள் மொழி மாற்ற கதையின் மூலம் தெளிவாகிறது,என்னமோ நடக்கட்டும்!எல்லாம் நன்மைக்கே!நல்ல கதை,விளிப்பூட்டலும் கூட!

Kirupanandan A said...

இன்று தொழிலாளர் தினம். வகுப்பறைக்கு விடுமுறையாக இருக்கும் என்று நினைத்தேன்.

அது போகட்டும். உண்மையிலேயே வாத்தியார் அதிகாலையிலேயே எழுந்து பதிவிடுகிறாரா இல்லை முதல் நாளே டைம் செட் செய்து பாடத்தை வெளியிடுகிறாரா என்ற சந்தேகம் இருந்தது. திரு KMRK பின்னூட்டம் இட்ட நேரம், வாத்தியார் அதற்கு பதில் தந்த நேரம் இதைப் பார்த்ததும் என் சந்தேகம் தீர்ந்து விட்டது.

ஆமாம் எல்லாம் சரி. 3.12 am இடுகையை வெளியிட்டிருக்கிறீர்கள். அதன் பிறகு என்ன செய்வீர்கள். மீண்டும் தூங்கி விடுவீர்களா?

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
நல்ல சிந்திக்க கூடிய நகைசுவை. .
வருங்காலம் நமது நடவடிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்தால் கண்காணிக்கபடலாம் குற்றங்கள் குறைய வாய்ப்பு ....!!!
ஆனால் இந்த மாதிரி இந்தியாவில் வருமா?? இன்னும் 2000 வருடம் போகணும். ...ம்ம்ம்

வேப்பிலை said...

நான் வரலை

sasi said...

super super

thozhar pandian said...

நல்ல கற்பனை. ஆனால் இது நடப்பது சாத்தியமே. நிறுவனங்கள் இப்போதெல்லாம் அதிகமாக மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நோட்டமிடத் தொடங்கியுள்ளன. பிரைவஸி என்பதை பற்றியெல்லாம் அவர்கள் கவலை கொள்ளாது இருப்பது கூட பெரிய செய்தி அல்ல. ஆனால் மக்களே இப்போது அதை பற்றி கவலை கொள்வது போல் தெரியவில்லை. முகநூலில் மக்கள் செய்யும் பதிவுகளை பார்த்தால் அச்சமாக இருக்கிறது. இது பற்றி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியது "அதனால் என்ன, நான் என்ன செலிப்ரிட்டியா? என்னை பற்றி அவர்கள் அதிகமாக தெரிந்து கொள்வதால் என்ன ஆகி விடப் போகிறது?" என்று. இது சற்று ஆச்சரியமான விஷயம் மட்டும் அல்ல, ஆபத்தானதும் கூட. நாம் பிரபலங்கள் இல்லை என்பதால் நமது வாழ்க்கை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்ள விரும்ப மாட்டார்கள், அதனால் நாம் என்ன வேண்டுமானாலும் நம்மை பற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளலாம் என்பது சற்று ஆபத்தான விஷயம். ஒவ்வொருவருக்கும் ஒரு அந்தரங்கம் இருக்கும், அவர்களுக்கு என்று ஒரு அந்தரங்கமான பகுதி அவசியம் தேவை. சமூக வலை தளங்களில் தேவையில்லாமல் செய்யும் சில பதிவுகள் நாளை நமக்கே வினையாக முடியலாம். இது போன்று சிலர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாம் செய்திகளில் படிக்கிறோம். தகவல் தொழில் நுட்பம் மிகவும் வளர்ந்துள்ள இந்த நிலையில் "பிக் டேட்டா" என்பது இப்போது ஹாட் டாபிக். நிறுவனங்கள் தங்களிடம் உள்ள தகவலின் மூலம், நம்மை பற்றி நம்மை விட அதிகமாக தெரிந்து வைத்துக் கொள்ள துவங்கியுள்ளனர். இதன் மூலம் குறிப்பிட்ட சில விளம்பரங்களை ("டார்கெட்டட் ஆட்ஸ்") மட்டும் நமக்கு கொடுத்தால் பரவாயில்லை. ஆனால் இந்த தகவலையும் சிலர் விற்கின்றனர் என்பது நல்ல செய்தியாக இருக்க முடியாது, நாம் பிரபலமாக இல்லை என்றாலும் அப்படித்தான்.

kmr.krishnan said...

//மணியைப் பாருங்கள். இந்த கருக்கல் விடியலில் நீங்களும் என்னைப் போலவே எழுந்து சுறுசுறுப்பாக கணினி முன் அமர்ந்துவிடுவீர்கள் போலிருக்கிறது//

ஆம் ஐயா! நீண்ட காலமாகவே இரவு 8.30மணிக்குப் படுத்து காலை 3 மணிக்கு எழுவது பழக்கமாகிவிட்டது.

கணினியில் அதிகமாக 2009ல் ஓய்வு பெற்ற பின்னரே அமர்கிறேன்.அதற்கு முன்னர் எழுந்தவுடன் எட்டுநடைப் பயிற்சி,சுவாசப்பயிற்சி,சிறிது நேரம் எலும்பு மூட்டூக்களை இயக்கும் பயிற்சி, தியானம் என்று நேரம் செலவிடுவேன்.
இப்போது அச்செயல்பாடு குறைந்து கணினியில் நேரம் செலவாகிறது.

முகம் தெரியாத பல நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். சோதிடப்பலன் பலருக்கும்
இலவசமாகக் கூறிவருகிறேன்.மிகச் சிலரிடம் மட்டும் நான் செய்து வரும் அறச் செயல்களுக்கு உதவி கேட்கிறேன். மாதம் தோறும் சுமார் 11000/‍‍= அளவில் செலவு செய்து பல நற்காரியங்கள் செய்து வருகிறேன்.சில நூறுகள் மட்டும் நண்பர்களிடமிருந்து கிடைக்கும். பெருமளவில் என் சொந்தப் பணமே செலவாகிறது.
அக்கறையுடன் விசாரித்த தங்களுக்கு என்வந்தனக்கள்.
kmrk1949@gmail.com

Subbiah Veerappan said...

////Blogger துரை செல்வராஜூ said...
இப்படியும் கஷ்ட காலம் வந்து விடுமோ!?...
நடப்பது நாராயணன் செயல்.. நடக்கட்டும்!../////

இப்போது வராது. இன்னும் ஒரு இருபது ஆண்டுகளில் வந்துவிடலாம்!

Subbiah Veerappan said...

/////Blogger Karthikraja K said...
narayana narayana...ethu enna kala kodumai...sathiyam athigam////

இல்லை, தொழில்நுட்ப வளர்ச்சியின் மறுபக்கம் இது!

Subbiah Veerappan said...

////Blogger Subramaniam Yogarasa said...
தான்,எந்த ரகசியமும் பேணப்படாது என்று உங்கள் மொழி மற்ற கதையின் மூலம் தெளிவாகிறது,என்னமோ நடக்கட்டும்!எல்லாம் நன்மைக்கே!நல்ல கதை,விளிப்பூட்டலும் கூட!////

உண்மைதான். உடையது விளம்பேல்’ என்று அவ்வையார் எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார்!

Subbiah Veerappan said...

////Blogger Kirupanandan A said...
இன்று தொழிலாளர் தினம். வகுப்பறைக்கு விடுமுறையாக இருக்கும் என்று நினைத்தேன்.
அது போகட்டும். உண்மையிலேயே வாத்தியார் அதிகாலையிலேயே எழுந்து பதிவிடுகிறாரா இல்லை முதல் நாளே டைம் செட் செய்து பாடத்தை வெளியிடுகிறாரா என்ற சந்தேகம் இருந்தது. திரு KMRK பின்னூட்டம் இட்ட நேரம், வாத்தியார் அதற்கு பதில் தந்த நேரம் இதைப் பார்த்ததும் என் சந்தேகம் தீர்ந்து விட்டது.
ஆமாம் எல்லாம் சரி. 3.12 am இடுகையை வெளியிட்டிருக்கிறீர்கள். அதன் பிறகு என்ன செய்வீர்கள். மீண்டும் தூங்கி விடுவீர்களா?////

இல்லை! எழுந்தால் எழுந்ததுதான். கதை, கட்டுரைகள், பாடங்கள் எழுதும் நேரம் அதுதான். அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை. Flow நன்றாக இருக்கும். மதிய உணவிற்குப் பிறகு உறங்கும் பழக்கம் உள்ளதால் தூக்கக் குறைபாடு தன்னிச்சையாக நிவர்த்தியாகிவிடும்.

Subbiah Veerappan said...

/////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
நல்ல சிந்திக்க கூடிய நகைசுவை. .
வருங்காலம் நமது நடவடிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்தால் கண்காணிக்கபடலாம் குற்றங்கள் குறைய வாய்ப்பு ....!!!
ஆனால் இந்த மாதிரி இந்தியாவில் வருமா?? இன்னும் 2000 வருடம் போகணும். ...ம்ம்ம்/////

இல்லை தொழில் நுட்ப வளர்ச்சியால் இந்த நிலைமை இன்னும் 20 ஆண்டுகளுக்குள் வந்துவிடும்!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
நான் வரலை////

நல்லது. நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger sasi said...
super super/////

உங்கள் இரசணை உணர்விற்குப் பாராட்டுக்கள். நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger thozhar pandian said...
நல்ல கற்பனை. ஆனால் இது நடப்பது சாத்தியமே. நிறுவனங்கள் இப்போதெல்லாம் அதிகமாக மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நோட்டமிடத் தொடங்கியுள்ளன. பிரைவஸி என்பதை பற்றியெல்லாம் அவர்கள் கவலை கொள்ளாது இருப்பது கூட பெரிய செய்தி அல்ல. ஆனால் மக்களே இப்போது அதை பற்றி கவலை கொள்வது போல் தெரியவில்லை. முகநூலில் மக்கள் செய்யும் பதிவுகளை பார்த்தால் அச்சமாக இருக்கிறது. இது பற்றி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியது "அதனால் என்ன, நான் என்ன செலிப்ரிட்டியா? என்னை பற்றி அவர்கள் அதிகமாக தெரிந்து கொள்வதால் என்ன ஆகி விடப் போகிறது?" என்று. இது சற்று ஆச்சரியமான விஷயம் மட்டும் அல்ல, ஆபத்தானதும் கூட. நாம் பிரபலங்கள் இல்லை என்பதால் நமது வாழ்க்கை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்ள விரும்ப மாட்டார்கள், அதனால் நாம் என்ன வேண்டுமானாலும் நம்மை பற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளலாம் என்பது சற்று ஆபத்தான விஷயம். ஒவ்வொருவருக்கும் ஒரு அந்தரங்கம் இருக்கும், அவர்களுக்கு என்று ஒரு அந்தரங்கமான பகுதி அவசியம் தேவை. சமூக வலை தளங்களில் தேவையில்லாமல் செய்யும் சில பதிவுகள் நாளை நமக்கே வினையாக முடியலாம். இது போன்று சிலர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாம் செய்திகளில் படிக்கிறோம். தகவல் தொழில் நுட்பம் மிகவும் வளர்ந்துள்ள இந்த நிலையில் "பிக் டேட்டா" என்பது இப்போது ஹாட் டாபிக். நிறுவனங்கள் தங்களிடம் உள்ள தகவலின் மூலம், நம்மை பற்றி நம்மை விட அதிகமாக தெரிந்து வைத்துக் கொள்ள துவங்கியுள்ளனர். இதன் மூலம் குறிப்பிட்ட சில விளம்பரங்களை ("டார்கெட்டட் ஆட்ஸ்") மட்டும் நமக்கு கொடுத்தால் பரவாயில்லை. ஆனால் இந்த தகவலையும் சிலர் விற்கின்றனர் என்பது நல்ல செய்தியாக இருக்க முடியாது, நாம் பிரபலமாக இல்லை என்றாலும் அப்படித்தான்.////

ஆமாம். அதுதான் அதிகம். பல செய்திகள் சிலருக்கு காசாகின்றது. நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

Subbiah Veerappan said...

//////Blogger kmr.krishnan said...
//மணியைப் பாருங்கள். இந்த கருக்கல் விடியலில் நீங்களும் என்னைப் போலவே எழுந்து சுறுசுறுப்பாக கணினி முன் அமர்ந்துவிடுவீர்கள் போலிருக்கிறது//
ஆம் ஐயா! நீண்ட காலமாகவே இரவு 8.30மணிக்குப் படுத்து காலை 3 மணிக்கு எழுவது பழக்கமாகிவிட்டது.
கணினியில் அதிகமாக 2009ல் ஓய்வு பெற்ற பின்னரே அமர்கிறேன்.அதற்கு முன்னர் எழுந்தவுடன் எட்டுநடைப் பயிற்சி,சுவாசப்பயிற்சி,சிறிது நேரம் எலும்பு மூட்டூக்களை இயக்கும் பயிற்சி, தியானம் என்று நேரம் செலவிடுவேன்.
இப்போது அச்செயல்பாடு குறைந்து கணினியில் நேரம் செலவாகிறது.
முகம் தெரியாத பல நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். சோதிடப்பலன் பலருக்கும்
இலவசமாகக் கூறிவருகிறேன்.மிகச் சிலரிடம் மட்டும் நான் செய்து வரும் அறச் செயல்களுக்கு உதவி கேட்கிறேன். மாதம் தோறும் சுமார் 11000/‍‍= அளவில் செலவு செய்து பல நற்காரியங்கள் செய்து வருகிறேன்.சில நூறுகள் மட்டும் நண்பர்களிடமிருந்து கிடைக்கும். பெருமளவில் என் சொந்தப் பணமே செலவாகிறது.
அக்கறையுடன் விசாரித்த தங்களுக்கு என்வந்தனக்கள்.
kmrk1949@gmail.com/////

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!