Astrology எதை முதலில் பார்க்க வேண்டும்?
முற்காலத்தில் ஒருஅரசன் இருந்தான்!
எந்த நாட்டில்?
நாடெல்லாம் முக்கியமில்லை.
கதையை மட்டும் படியுங்கள்
-------------------------------------
தன் பேரரசிற்கு ஒரு முதன் மந்திரியை நியமிக்க விரும்பினான் அவன்.
கவிராயர்கள், குருமார்கள், கல்விமான்கள், விகடகவிகள் என்று தன் அரசபையில் இருக்கும் பலரில கல்வித்தகுதி மற்றும் வயதில் சமமாக இருக்கும் 4 பேர்களை முதலில் அவனாகவே தெரிவு செய்தான். பிறகு தன் அரச சபையில் தன் தெரிவுகளை அறிவித்ததோடு, அவர்கள் நால்வருக்கும் ஒரு பரிட்சை வைக்கப்போவதாகவும், அதில் யார் முதல் நிலையில் தேர்வு
பெறுகிறாரோ, அவரே முதன் மந்திரியாகும் வாய்ப்பைப் பெறுவார் என்றும் அறிவித்தான்.
மற்றவர்கள் எப்படியோ, ஆனால் அந்த நால்வரும் பரபரப்பிற்கு உள்ளாகிவிட்டார்கள்.
ஒரு வாரம் சென்றது. ஒரு நாள் அவர்கள் நால்வரையும் அழைத்த மன்னன் சொன்னான்.
“நான் ஒரு பூட்டைத் தயார் செய்து வைத்துள்ளேன். கணித அடைப்படையில் விஞ்ஞான பூர்வமாக செய்யப்பெற்ற பூட்டு அது. நாளை காலை உங்கள் நால்வருக்கும் அந்தப் பூட்டைத் திறக்கும் வாய்ப்பு வழங்கப்பெறும். யார் ஒருவர் குறுகிய நேரத்திற்குள் சாமர்த்தியமாக அந்தப் பூட்டைத் திறக்கிறீர்களோ அவரே வெற்றி பெற்றவராவார். முதன் மந்திரி பதவியும் அவருக்குத்தான்”
அவ்வாறு மன்னன் சொன்னதைக் கேட்ட அவர்கள் நால்வரும், அரசசபையில் இருந்து தத்தம் வீட்டிற்குச் சென்று பலத்த சிந்தனைக்கு ஆளானார்கள். எப்படியாவது வெற்றி பெற்றுப் பதவியைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வம் அவர்கள் நால்வருக்கும் இருந்தது.
பூட்டுக்களின் செய்முறையை பற்றிய பழைய நூல்களையும், கணிதக் குறிப்புக்களில் பூட்டுக்களுக்கான செய்திகளையும் படித்து குறிப்பு எடுத்துவைத்துக்கொண்டார்கள்.
அவர்களில் மூவர் இரவு முழுவதும் தூங்காமல் பல நூல்களையும், ஏடுகளையும் படித்து மனதில் தக்க வைத்துக்கொண்டார்கள். ஒருவர் மட்டும் சில ஏடுகளைப் புரட்டிப் பார்த்ததோடு நிறுத்திக்கொண்டு, சீக்கிரமே நித்திரைக்கு ஆளாகி, நன்றாக உறங்கிவிட்டார்.
அடுத்த நாள் காலை!
அரசசபையில் பூட்டு கொண்டு வரப்பெற்று அவர்கள் முன்பாக வைக்கப்பெற்றது. அதன் அருகே மன்னனும் இருந்தார்.
பூட்டு அளவிலும் சரி, தொழில் நுட்பத்திலும் சரி அனைவரையும் ஆச்சரியப் படுத்தும் விதமாக பெரிதாக இருந்தது.
பூட்டின் படம் கீழே உள்ளது. நீங்களும் பாருங்கள்
ஒருவருக்குப் பின் ஒருவராக பூட்டின் அருகே சென்று பார்ப்பதற்கு அவர்கள் நால்வருக்கும் அனுமதியளிக்கப்பெற்றது. தாங்கள் எடுத்து மனதில் தேக்கி ந்வைத்திருந்த குறிப்புக்களின் படி, தங்களுக்குத் தெரிந்த விதத்தில் அல்லது தங்களுக்கு யோசனை தோன்றிய விதத்தில் அந்தப் பூட்டை அவர்கள் திற்க்க முயன்றார்கள்.
இரவு தன்னுடைய தூக்கத்தைக் கெடுத்துக்கொள்ளாமல் சீக்கிரமாகப் படுத்து உறங்கினானே, அவன் தான் அந்த நால்வரில் இறுதியாகப் பூட்டின் அருகே வந்தான். பூட்டை நன்றாகப் பரிசோத்தித்துப் பார்த்தான். அவனுடைய வியப்பைப் பல மடங்கு அதிசயப்படுத்தும் விதமான் ஒன்றை அப்போதுதான் அவன் கவனித்தான். அந்தப் பூட்டு பூட்டப்படாமலேயே இருந்தது.
சாவியைப் பயன் படுத்தாமல், பூட்டின் மேற்பகுதியில் இருந்த இணைப்புக் கம்பியை விலக்கிவிட்டு (by removing the hook) பூட்டை எளிதாக அவன் திறந்து விட்டான்.
சொல்லவும் வேண்டுமா?
அவனுக்குத்தான் முதன் மந்திரிப் பதவியும் கிடைத்தது.
உண்மை என்னவென்றால், அந்தப் பூட்டு பூட்டப் படவில்லை.(The fact was, the lock was not locked.)
மற்ற மூவரும் பரபரப்பினாலும், வெற்றிபெற வேண்டுமே என்ற ஆதங்கத்தினாலும் அதைக் கவனிக்கவில்லை.
அதாவது முதலில் எதைச் செய்திருக்க வேண்டுமோ அதை அவர்கள் செய்யவில்லை
------------------------------------------------------------------------------------
”வாத்தி (யார்) இந்தக் கதை எதற்காக?”
”ஜோதிடப் பாடம் படிக்கும் பலரும் இதைததான் செய்கிறீர்கள். பூட்டைத்தான் பார்க்கிறீர்கள். பாடத்தைத்தான் பார்க்கிறீர்கள். பூட்டு பூட்டப் பட்டுள்ளதா என்பதை முதலில் பார்க்காததைப்போல, விதிவிலக்குகளைப் பார்ப்பதில்லை. ஆகவே விதிவிலக்குகள் உள்ளதா என்று முதலில் பாருங்கள்”
To solve a problem, one must first understand the problem.To understand the problem, the mind should be calm, without tension or agitation. This will facilitate seeing things objectively.
நமது வகுப்பறை நண்பர் திரு.பிரகாஷ் அவர்கள் தான் படித்ததாகக் கூறி மின்னஞ்சலில் அனுப்பிய கதை. கதை ஆங்கிலத்தில் இருந்தது. மொழியாக்கம் மற்றும் அடியேனுடைய கைவண்ணம். அவருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
Respected Sir
ReplyDeleteGood Morning & present sir
With Regards
R.saravanan
மிக அற்புதமான கதை. அமைதியான மனம் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் சிக்கல்களைத் தீர்க்கும் என்ற ஆழ்ந்த கருத்து. நல்லதொரு கதையைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. கதையை அருமையாக மொழியாக்கம் செய்ததும், அதை ஜோதிடப்பாடத்தோடு அழகாகத் தொடர்புபடுத்தியதும் அருமை. மிக்க நன்றி.
ReplyDeleteஆஹா! அற்புதமானக் கதை...
ReplyDeleteபடிக்கும் தருணமே இப்படியாகத் தான் இருக்கும் என்றும் தோன்றியது...
எதேச்சையாக கதையிலும் அப்படியே வந்தது.
உண்மைதான் ஐயா, வாழ்க்கையிலும் கூட சிறியப் பிரச்சனையையும் கூட பெரியதாக் எண்ணி ரொம்ப மூளையைக் குடைந்து கொண்டிருப்பது உணர்ச்சிக்கு ஆளாகும் மனிதனின் இயல்பாக இருக்கிறது. நிதானமாக, நம்பிக்கையோடு, அமைதியுடன் கூடிய தெளிவாகப் பார்த்தால் தான் உண்மை தெளிவாக விளங்கும்.
நல்லக் கருத்து தந்த பதிவு.
நண்பர் பிரகாஷுக்கும், தங்களுக்கும் நன்றிகள் பல.
சிரிக்க வைக்கிறது சகோதரர் ஆனந்தமுருகன் அனுப்பிய படம். நன்றி.
ReplyDeleteஇப்படி கூர்ந்து கவனிக்கும் திறன் சிலர் அவர்களாகவே வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. சிலருக்கு அது இயற்கையாகவே அமைந்து விடும். சிலருக்கு எதுவுமே அமையாது.
ReplyDeleteஆனந்த முருகனின் படம், உண்மையில் இன்றைய யதார்த்தத்தை காட்டி "ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்" எனும் பழமொழியை நினைவு படுத்துகிறது.
ReplyDeleteமனம் ஒருங்கிணைப்பு இருந்தால் பகுத்தாய்வு செய்ய சிரமம் இருக்காது. அய்யா இதை ஒரு கதை, ஒரு ஜோதிடம் கலந்து சொல்லி உள்ளார். . கதையை அனுப்பிய நண்பர் பிரகாஷுக்கும் நன்றிகள். பதறாத காரியம் சிதறாது. இன்றைய கதை மனவளர் கட்டுரையிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
ReplyDeleteபகல் வணக்கம்,வாத்தியார்!ஏதோ பொறி தட்டியது.பூட்டை நானும் நன்றாகப் பார்த்தேன்!பெருமைக்காக சொல்லவில்லை.பகிர்வுக்கு நன்றி,ஐயா!
ReplyDeleteதலைமை பதவிக்குரியவருக்கு
ReplyDeleteதகுதியான அறிவு தேவையில்லை...
அறிவாளிகள் அநேகமாக தலைமையான
அப்பதவியை விரும்புவதில்லை..
அவர்களுடைய ஜாதக அமைப்பும்
அப்படியே அமைந்து விடு(ம்)கிறது.
நீங்கள் அறிவாளியாக இருக்க விரும்புகிறீரா? இல்லை
எங்களுக்கு தலைமை பதவிதான் என அடம் பிடிக்கிறீரா?
//// saravanan said...
ReplyDeleteRespected Sir
Good Morning & present sir
With Regards
R.saravanan/////
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!
///// Parvathy Ramachandran said...
ReplyDeleteமிக அற்புதமான கதை. அமைதியான மனம் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் சிக்கல்களைத் தீர்க்கும் என்ற ஆழ்ந்த கருத்து. நல்லதொரு கதையைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. கதையை அருமையாக மொழியாக்கம் செய்ததும், அதை ஜோதிடப்பாடத்தோடு அழகாகத் தொடர்புபடுத்தியதும் அருமை. மிக்க நன்றி.////
உங்களுடைய மனம் நிறைவான, சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
ஆசிரியர் ஐயா, இந்த கதையையும் ஒரு பாடமாகவே நாங்கள் பாவிக்கப் போகிறோம்..நன்றி.வணக்கம்!
ReplyDelete///// ஜி ஆலாசியம் said...
ReplyDeleteஆஹா! அற்புதமானக் கதை...
படிக்கும் தருணமே இப்படியாகத் தான் இருக்கும் என்றும் தோன்றியது...
எதேச்சையாக கதையிலும் அப்படியே வந்தது.
உண்மைதான் ஐயா, வாழ்க்கையிலும் கூட சிறியப் பிரச்சனையையும் கூட பெரியதாக் எண்ணி ரொம்ப மூளையைக் குடைந்து கொண்டிருப்பது உணர்ச்சிக்கு ஆளாகும் மனிதனின் இயல்பாக இருக்கிறது. நிதானமாக, நம்பிக்கையோடு, அமைதியுடன் கூடிய தெளிவாகப் பார்த்தால் தான் உண்மை தெளிவாக விளங்கும்.
நல்லக் கருத்து தந்த பதிவு.
நண்பர் பிரகாஷுக்கும், தங்களுக்கும் நன்றிகள் பல./////
நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆலாசியம்!!!
///// ஜி ஆலாசியம் said...
ReplyDeleteசிரிக்க வைக்கிறது சகோதரர் ஆனந்தமுருகன் அனுப்பிய படம். நன்றி.///
உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்துவிட்டு அவர் தொடர்ந்து இதுபோன்ற படங்களை அனுப்பிவைப்பார் என்று நம்புகிறேன் ஆலாசியம். நன்றி!
///ananth said...
ReplyDeleteஇப்படி கூர்ந்து கவனிக்கும் திறன் சிலர் அவர்களாகவே வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. சிலருக்கு அது இயற்கையாகவே அமைந்து விடும். சிலருக்கு எதுவுமே அமையாது./////
ஆமாம். எல்லாம் வாங்கி வந்த வரம்!
ReplyDelete////thanusu said...
ஆனந்த முருகனின் படம், உண்மையில் இன்றைய யதார்த்தத்தை காட்டி "ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்" எனும் பழமொழியை நினைவு படுத்துகிறது./////
நல்லது. நன்றி!
/////thanusu said...
ReplyDeleteமனம் ஒருங்கிணைப்பு இருந்தால் பகுத்தாய்வு செய்ய சிரமம் இருக்காது. அய்யா இதை ஒரு கதை, ஒரு ஜோதிடம் கலந்து சொல்லி உள்ளார். . கதையை அனுப்பிய நண்பர் பிரகாஷுக்கும் நன்றிகள். பதறாத காரியம் சிதறாது. இன்றைய கதை மனவளர் கட்டுரையிலும் சேர்த்துக்கொள்ளலாம்//////.
உங்களின் பாராட்டிற்கும் ஆலோசனைக்கும் நன்றி தனுசு!!
//// Yoga.S. said...
ReplyDeleteபகல் வணக்கம்,வாத்தியார்!ஏதோ பொறி தட்டியது.பூட்டை நானும் நன்றாகப் பார்த்தேன்!பெருமைக்காக சொல்லவில்லை.பகிர்வுக்கு நன்றி,ஐயா!/////
பூட்டைப் பார்த்தீர்கள் சரி. திறக்க முயற்சித்தீர்களா?
//// ரமேஷ் வெங்கடபதி said...
ReplyDeleteஆசிரியர் ஐயா, இந்த கதையையும் ஒரு பாடமாகவே நாங்கள் பாவிக்கப் போகிறோம்..நன்றி.வணக்கம்!////
அந்த நோக்கில்தான் நானும் பதிவிட்டுள்ளேன் சுவாமி!
///// அய்யர் said...
ReplyDeleteதலைமை பதவிக்குரியவருக்கு
தகுதியான அறிவு தேவையில்லை...
அறிவாளிகள் அநேகமாக தலைமையான
அப்பதவியை விரும்புவதில்லை..
அவர்களுடைய ஜாதக அமைப்பும்
அப்படியே அமைந்து விடு(ம்)கிறது.
நீங்கள் அறிவாளியாக இருக்க விரும்புகிறீரா? இல்லை
எங்களுக்கு தலைமை பதவிதான் என அடம் பிடிக்கிறீரா?/////
நீங்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தால் போதும் சாமி!
என் கருத்துக்கு இடம் இல்லை! வாங்கி வந்த வரத்தை நான் எப்படி மாற்ற முடியும்?
நல்ல அறிவுரை கூறும் பதிவுக்கு நன்றி ஐயா!
ReplyDelete////kmr.krishnan said...
ReplyDeleteநல்ல அறிவுரை கூறும் பதிவுக்கு நன்றி ஐயா!////
உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
நல்ல பாடம் ஐயா,
ReplyDeleteபோட்டி வைத்தாலும் அதை பற்றி கவலை படாமல் உறங்கும் மனம் வைக்க வேண்டும் .
அதிகம் கவலை படாத ( விளைவைப் பற்றி கவலை கொள்ளாத) மனம் வாயக்க இறைவனிடம் அசாத்திய நம்பிக்கை வேண்டும். அதற்க்கு ஜோதிடத்தை ஏற்கனவே நம்பியிருக்க வேண்டும். கர்ம வினைகளை நம்ப தொடங்கி இருக்க வேண்டும். இது எல்லாம் நடந்தால் அசாத்திய தைர்யம் வரும். எல்லா வற்றையும் ஒரு கை பார்க்கலாம்
உங்கள் மொழியாக்கம் மிக அருமை ஐயா... மிக்க நன்றி
ReplyDeleteRespected Sir
ReplyDeleteGood Morning & present sir
With Regards
G.Govindane