மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

23.10.12

Astrology ஜோதிடம் கற்பதற்கு உரிய யோகம் எங்கே கிடைக்கும் ?

Astrology ஜோதிடம் கற்பதற்கு உரிய யோகம் எங்கே கிடைக்கும் ?

சரஸ்வதி துதிப் பாடல்!

இன்று சரஸ்வதியைப் பூஜிக்கும் நாள். வணங்கி மகிழும் நாள். உங்களுக்காக, அந்த முண்டாசுக் கவிஞன் இயற்றிய  சரஸ்வதி துதிப் பாடலை வலை ஏற்றியுள்ளேன். நீங்கள் அறிந்த பாடல் என்றாலும், இன்று அப்பாடலைப் படித்து சரஸ்வதி தேவியை ஒருமுறை வணங்குங்கள். எல்லா நலனும் உண்டாகும்
அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
(வெள்ளை)

உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள்
(வெள்ளை)

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழில் உடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள்
(வெள்ளை)

-மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
++++++++++++++++++++++++++++++++++++
Astrology சரஸ்வதி யோகம்! (saraswati Yoga)

இது ஒரு மேன்மையான யோகம்

ஜாதகத்தில், புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும் (புதன் தனித்திருந்தால் சுபக்கிரகம்தான்) கேந்திரம் அல்லது திரிகோணங்கள் அல்லது இரண்டாம் வீட்டில் இருக்க வேண்டும். அத்துடன் குரு பகவான் தன் சொந்தவீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ அல்லது நட்பு வீடுகளிலோ இருக்க வேண்டும். அவவாறான அமைப்பு இருந்தால்  இந்த யோகம் ஜாதகனுக்கு உண்டு

என்ன பலன்?

ஜாதகனுக்கு உயர்கல்வியில் மேன்மை உண்டாகும்.அதிகம் படித்த பண்டிதனாக இருப்பான் (Scholar). கணிதத்தில் கரை காண்பான். புராதன நூல்களையும் படித்துத் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான்.

இந்த யோகம் உடையவனுக்கு சரஸ்வதியின் அருள் இருக்கும்

அருள் இருந்தால் படித்தது மறக்காது. நினைவில் அப்படியே தங்கிவிடும். படிப்பதை விட அது முக்கியம்

ஜோதிடம் கற்றுத் தேர்வதற்கு சரஸ்வதியின் அருள் வேண்டும். இந்த யோகம் ஜாதகத்தில் இல்லா விட்டாலும், சரஸ்வதியின் அருள் இருந்தால் போதும். சரஸ்வதி தேவியை வணங்குங்கள். தேவியின் அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். ஜோதிடப் பாடங்களும் மனதில் பதியும்!

ஜோதிடம் கற்பதற்கு உரிய யோகம் எங்கே கிடைக்கும் ? என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு, பரபரப்பு அடைய வேண்டாம். அது சரஸ்வதி தேவியிடம் கிடைக்கும்!!!!
-----------------------------------------------------------------------------------------------------------
நேற்றையப் பாடத்தின் தொடர்ச்சிக்காக ஆவலாக இருப்பீர்கள். இடையில் இரண்டு தினங்கள் பூஜை நாட்களாக வந்து  விட்டது. அத்துடன் 12 மணி நேரம் மின் வெட்டும் உள்ளது. அந்தப் பாடத்தை விவரமாக எழுதிப் பதிவிட வேண்டும். அந்தப் பாடம் 25.10.2012 வியாழக் கிழமையன்று வெளியாகும். அனைவரும் பொறுத்துக்கொள்ளுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28 comments:

kmr.krishnan said...

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சரஸ்வதி யோகம் இருந்துள்ளது. அவர் புத்தகப் படிப்போ, பள்ளிப்படிப்போ இல்லாமலேயே பெரிய குருவாக விளங்கினார்.

என் லண்டன் பேரனுக்கு சரஸ்வதி யோகம் உள்ளது.பார்ப்போம் எவ்வாறு வருகிறான் என்று.

வாத்தியாருக்கும் வகுப்பறை சக மாணவ,மாணவிச் செல்வங்களுக்கும்
ஆயுத பூஜை, விஜய த‌சமி வந்தனங்கள்.

Shyam Prasad said...

மிக்க நன்றி

KJ said...

Happy pooja festivals. Thanks sir.

kmr.krishnan said...

http://www.gandhitoday.in/

"இனி காந்தி பெயரைச் சொல்லாதே"என்ற என்னுடைய ஆக்கம் 22 அக்டோபர் 2012 அன்று மேற்படி வலை தளத்தில் வெளியாகியுள்ளது.விருப்பமுடையவர்கள் படிக்க வேண்டுகிறேன்.அங்கேயே பின்னூட்டம் இடவும் வேண்டுகிறேன். இது போலவே முன்பு அங்கு வெளியான என் பதிவுக்குப் பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்திய ஹாலாஸ்யம்ஜி, தனுசு, பார்வதிஅம்மா ஆகியவர்களுக்கு மீண்டும் நன்றிகள்.

sadan raj said...

அன்புள்ள வாத்தியார் அவர்கட்கும்,மற்றும் சக மாணவர் அனைவருக்கும் சரஸ்வதி மாற்றும் ஆயுத பூஜைதின வாழ்த்துக்கள்.எல்லோரும் இன்நன்னாளில் சரஸ்வதி கடாட்ச்சம் மற்றும் வித்யாகாரகன் புதபகவான் கடாட்ச்சம் பெற்று இன்புற செந்தூர் முருகனை பிரார்த்திக்கிறேன். நன்றிகள்.

ஜி ஆலாசியம் said...

மகாகவியின் அருமையானப் பாடலோடு மிளிர்கிறது பதிவு.
அன்னை சரஸ்வதி அனைவருக்கும் அருள வேண்டி அவள் பாதம் பணிகிறேன்.

பதிவுக்கும் பகிர்விற்கும் நன்றிகள் ஐயா!

Thanjavooraan said...

மகாகவியின் பாடல் என்றால் அது பலமுறை படித்ததென்றாலும் மீண்டும் படிப்பது என் வழக்கம். அதுபோலவே சரஸ்வதி பூஜையன்று நல்லதொரு பாடலைக் கொடுத்திருப்பதற்கு நன்றி. இந்தப் பாடல் குறித்த ஒரு செய்தி, உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம், என்றாலும், மீண்டுமொரு முறை சொல்லுகிறேன். பாரதியார் படித்த நெல்லை இந்து உயர்நிலைப் பள்ளியை மூடும் நிலைமைக்கு நிதிநிலைமை மோசமடைந்தது. அங்கிருந்த ஆசிரியர்கள் பாரதியை அணுகி ஒரு பாடல் எழுதிக் கொடுத்தால் ஊர் ஊராகப் போய் பாடி, நிதி வசூல் செய்வோம் என்றனர். ஆஹா! அப்படியே செய்கிறேன், என்று இந்தப் பாடலை எழுதிக் கொண்டு போய் அன்றே கொடுத்தார். பின்னர் நடந்தவை வரலாறு. இன்றுவரை அந்தப் பள்ளிக்கூடம் சிறப்பாக நடந்து வருகிறது. "நிதி மிகுந்தவர் பொற்குவைதாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவுமற்றோர் வாய்ச்சொல் அருளீர், ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்" என்றெல்லாம் வேண்டுகோளோடு கவிதையை முடிக்கிறார் பாரதி. அனைவருக்கும் நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்!

அய்யர் said...

பதியை பாடும் நாம் சரஸ்
வதியை பாடுதல் வழக்கத்தில் உள்ளதே

வீராசனமிட்டு கையில்
வீனையுடன் இருக்குமவளை இன்று

பூமியில் ஜெனித்தநாளில்லை
பூஜிக்கும் நாளொன்று சொன்னது சிறப்பு

இன்று மட்டும் தானா என விளிப்போருக்கு
இன்னு மட்டுமாவது என திரத்த வேண்டும்

பச்சை காட்டும் புதனே நமக்கு
கச்சை கட்டி நிற்பதாலே

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;

எட்டும் அறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!

சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.

காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,

மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!

என்ற
பாரதியின் வரிகளில்
பார் மணம் கமழ வாழ்த்துகிறோம்

zing zang said...

அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்!

Ram said...

All the best wishes and happy pooja festivals for the friends here.

rajanblogs said...

அய்யா,
சரஸ்வதி யோகம் பற்றிய தங்களின் பதிவிற்கு நன்றி
இரண்டுக்குவுடைய குரு பதினொன்றில் ஆட்சியாக இருந்தாலும்,
சுக்ரனுடன் புதன், ஏழில் இருந்தாலும் ,
அதுவும் சரஸ்வதி யோகத்துடன் சேருமா?
அனைவருக்கும் தசரா வாழ்த்துக்கள்
நன்றி

rajanblogs said...

அய்யா,
சரஸ்வதி யோகம் பற்றிய தங்களின் பதிவிற்கு நன்றி
இரண்டுக்குவுடைய குரு பதினொன்றில் ஆட்சியாக இருந்தாலும்,
சுக்ரனுடன் புதன், ஏழில் இருந்தாலும் ,
அதுவும் சரஸ்வதி யோகத்துடன் சேருமா?
அனைவருக்கும் தசரா வாழ்த்துக்கள்
நன்றி

zing zang said...

என்னுடய போதாத நேரம் இந்த நன்னாளில் என்னுடய பெற்றோருடன் கொண்டாட இயலவில்லை.

எனவே ஏதோ ஒரு உரிமையில் இந்த வகுப்பறையில் எனது பெற்றோர் வயதுடய மற்றும் தாத்தா பாட்டி வயதுடய எல்லோரின் கால்களிலும் பனிகிறேன், ஆசி வேண்டி.

zing zang said...

Hi Maya Kannan,

Do you have any plan to go Sabarimala - Kerala.

I'm ready for the pathayathra. Will you call me.

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சரஸ்வதி யோகம் இருந்துள்ளது. அவர் புத்தகப் படிப்போ, பள்ளிப்படிப்போ இல்லாமலேயே பெரிய குருவாக விளங்கினார்.
என் லண்டன் பேரனுக்கு சரஸ்வதி யோகம் உள்ளது.பார்ப்போம் எவ்வாறு வருகிறான் என்று.
வாத்தியாருக்கும் வகுப்பறை சக மாணவ,மாணவிச் செல்வங்களுக்கும்
ஆயுத பூஜை, விஜய த‌சமி வந்தனங்கள்./////

நன்று! மேலதிகத் தகவலுக்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

Blogger Shyam Prasad said...
மிக்க நன்றி////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி

SP.VR. SUBBAIYA said...

/////Blogger KJ said...
Happy pooja festivals. Thanks sir.////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger sadan raj said...
அன்புள்ள வாத்தியார் அவர்கட்கும்,மற்றும் சக மாணவர் அனைவருக்கும் சரஸ்வதி மாற்றும் ஆயுத பூஜைதின வாழ்த்துக்கள்.எல்லோரும் இன்நன்னாளில் சரஸ்வதி கடாட்ச்சம் மற்றும் வித்யாகாரகன் புதபகவான் கடாட்ச்சம் பெற்று இன்புற செந்தூர் முருகனை பிரார்த்திக்கிறேன். நன்றிகள்.////

உங்களின் பிரார்த்தனை பலிக்கட்டும். நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ஜி ஆலாசியம் said...
மகாகவியின் அருமையானப் பாடலோடு மிளிர்கிறது பதிவு.
அன்னை சரஸ்வதி அனைவருக்கும் அருள வேண்டி அவள் பாதம் பணிகிறேன்.
பதிவுக்கும் பகிர்விற்கும் நன்றிகள் ஐயா!/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Thanjavooraan said...
மகாகவியின் பாடல் என்றால் அது பலமுறை படித்ததென்றாலும் மீண்டும் படிப்பது என் வழக்கம். அதுபோலவே சரஸ்வதி பூஜையன்று நல்லதொரு பாடலைக் கொடுத்திருப்பதற்கு நன்றி. இந்தப் பாடல் குறித்த ஒரு செய்தி, உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம், என்றாலும், மீண்டுமொரு முறை சொல்லுகிறேன். பாரதியார் படித்த நெல்லை இந்து உயர்நிலைப் பள்ளியை மூடும் நிலைமைக்கு நிதிநிலைமை மோசமடைந்தது. அங்கிருந்த ஆசிரியர்கள் பாரதியை அணுகி ஒரு பாடல் எழுதிக் கொடுத்தால் ஊர் ஊராகப் போய் பாடி, நிதி வசூல் செய்வோம் என்றனர். ஆஹா! அப்படியே செய்கிறேன், என்று இந்தப் பாடலை எழுதிக் கொண்டு போய் அன்றே கொடுத்தார். பின்னர் நடந்தவை வரலாறு. இன்றுவரை அந்தப் பள்ளிக்கூடம் சிறப்பாக நடந்து வருகிறது. "நிதி மிகுந்தவர் பொற்குவைதாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவுமற்றோர் வாய்ச்சொல் அருளீர், ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்" என்றெல்லாம் வேண்டுகோளோடு கவிதையை முடிக்கிறார் பாரதி. அனைவருக்கும் நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்!//////

உங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், பாரதியைப் பற்றிய மேலதிகத் தகவலுக்கும் நன்றி கோபாலன் சார்!

SP.VR. SUBBAIYA said...

Blogger அய்யர் said...
பதியை பாடும் நாம் சரஸ்
வதியை பாடுதல் வழக்கத்தில் உள்ளதே
வீராசனமிட்டு கையில்
வீனையுடன் இருக்குமவளை இன்று
பூமியில் ஜெனித்தநாளில்லை
பூஜிக்கும் நாளொன்று சொன்னது சிறப்பு
இன்று மட்டும் தானா என விளிப்போருக்கு
இன்னு மட்டுமாவது என திரத்த வேண்டும்
பச்சை காட்டும் புதனே நமக்கு
கச்சை கட்டி நிற்பதாலே
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டும் அறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.
காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!
என்ற
பாரதியின் வரிகளில்
பார் மணம் கமழ வாழ்த்துகிறோம்/////

உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger zing zang said...
அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்!////

உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...


/////Blogger Ram said...
All the best wishes and happy pooja festivals for the friends here./////

உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger rajanblogs said...
அய்யா,
சரஸ்வதி யோகம் பற்றிய தங்களின் பதிவிற்கு நன்றி
இரண்டுக்குவுடைய குரு பதினொன்றில் ஆட்சியாக இருந்தாலும்,
சுக்ரனுடன் புதன், ஏழில் இருந்தாலும் ,
அதுவும் சரஸ்வதி யோகத்துடன் சேருமா?
அனைவருக்கும் தசரா வாழ்த்துக்கள்
நன்றி/////

நம் விருப்பத்திற்காக அப்படி எல்லாம் சேராது!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger zing zang said...
என்னுடய போதாத நேரம் இந்த நன்னாளில் என்னுடய பெற்றோருடன் கொண்டாட இயலவில்லை.
எனவே ஏதோ ஒரு உரிமையில் இந்த வகுப்பறையில் எனது பெற்றோர் வயதுடய மற்றும் தாத்தா பாட்டி வயதுடய எல்லோரின் கால்களிலும் பணிகிறேன், ஆசி வேண்டி.//////

இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நினைத்தாலே போதும். அவர்களுடன் தொலை பேசியில் பேசினாலே போதும்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger zing zang said...
Hi Maya Kannan,
Do you have any plan to go Sabarimala - Kerala.
I'm ready for the pathayathra. Will you call me./////

மாயக் கண்ணனின் மின்ஞசல் முகவரி: kseetharaman007@gmail.com
அதில் அவருடன் தொடர்பு கொள்ளுங்கள். பின்னூட்டப்பெட்டியை chatting செய்வதற்குப் பயன் படுத்தாதீர்கள்
இது வேண்டுகோள்!
++++++++++++

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்,
நன்றி.

Arul Murugan. S said...

//12 மணி நேரம் மின் வெட்டும் உள்ளது.//

As our house is located in the power transmission line to 'Aavin Milk factory', there had been no regular power cuts till before 3 months. Now power goes for 1 hour a day. I have come now to Chennai for job search. Here too power goes only for 2 hrs a day.

I am able to clearly visualize Gods grace & my luck . It may be due to the presence of Jupiter in dhanus lagna, aspected by 9'th lord Sun from 7'th house.