Devotional: அதுதான் என் முதல் வேலை!
பக்தி மலர்
இன்றைய பக்திமலரை 'சூலமங்கலம்' சகோதரிகள் பாடிய பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. படித்து, கேட்டு மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
முருகா உனக்கு புகழ்மாலை
சூட்டுவதே தினம் முதல்வேலை
கந்தா உன் திருவடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
(முருகா ... )
தூவிடக் குறிஞ்சி மலருண்டு
தேன் தினையோடு கனியுண்டு
பாதத்தில் வைத்திட மனம்உண்டு
பூஜையை ஏற்பாய் நீவந்து
(முருகா ... )
ஆலயம் என்பதுன் நிழல்தானே
அணையா தீபம்உன் அருள்தானே
காலமும் துணையை நீதானே
கருணையைப் பொழிவ துன்விழிதானே
(முருகா ... )
தேவயானை ஒருபுறமும்
மான்மகள் வள்ளி மறுபுறமும்
தோன்றிட நீதரும் திருக்காட்சி
மங்கலம் வழங்கிடும் அருட்காட்சி
(முருகா ... )
கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
முருகா முருகா முருகா.
----------------------------------------------
பாடலின் கானொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded this video clipping!
+++++++++++++++++++++++++++++++++++
கவிதைச் சோலை: நடுங்காத நெஞ்சம்
தும்பிக்கை போனபின் யானையைப் பூனையும்
துரத்திடும் தன்மை யேபோல்
துணிவிலாக் கோழையைச் சிறுவரும் கைகொட்டிச்
சூழ்கின்ற அவல மேபோல்
நம்பிக்கை போனவன் வாழ்க்கையும் காலத்தில்
நலிவுறும் என்ன அஞ்சி
நடுங்காத நெஞ்சோடும் தொடர்கிறேன் வருகின்ற
நாளைஎன் காலம் என்றே!
வம்புக்குச் சொக்கனை வளையாடும் கைகளில்
வளைக்கின்ற வண்ண மயிலே!
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
மதுரைமீ னாட்சி உமையே!
- கவியரசர் கண்ணதாசன்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++
பதிவு நன்றாக உள்ளது ஐயா நன்றி!
ReplyDeleteஅதிகாலை வேலை அமுதனைப் பற்றிய பாமாலை
ReplyDeleteஅழகிய இவ்வேளை எந்தன் இதயம் வருடியதே
கவியரசின் சீர்மேவிய கவிமாலை....
நெகிழ்ந்த இதயம் மகிழ்ந்தே மனம்
கமழ நிறைவான எனதுப்பாடல்.....
செவ்வேல் தனையே அனுப்பாயோ இங்கே
சிக்கித் தவிக்கும் எனை மீட்க
மவ்வல் விழியால் காண்பாயோ மனம்
கவ்விய துயரங்கள் மாயமாக
ஒளவை பாடலால் நானுனைப் பாட
திவ்விய தரிசனம் தாருவாயே
எங்கும் நிறைந்த பரபிரம்மமே நல்மனம்
தங்கும் நற்கதி மருந்தே
விம்மி அழுதிடும் எந்தன் மனமே
வேதனை போக்க வாராயோ!
கந்தா கடம்பா என்றே நானுனை
சிந்தை நிறைய அழைக்கின்றேன்
எந்தையே எந்தன் தாயினும் சிறந்த
கருணை பொழியும் கடலே
முந்தைய பாவம் யாவும் முடிந்துபோக
விந்தை புரிவாய் முகுந்தனே
பாமாலைக் கொண்டே நினக்கு யான்
பூமாலை சூட்டுகிறேன் தமிழமுதே
தரணியில் வந்துதித்த தயை மிகு
பூரணியின் புதல்வனே போற்றுகின்றேன்
திரவியமே திவ்விய ஓவியமே தேனே
தீந்தமிழே தில்லைவாழ் திருவே
வருவாய் நல்வாழ்விற்கு அருள்வாய் இறைவா
உயிரே! உயிரின் உயிரே!
போற்றி! போற்றி!! போற்றி!!!
அழகிய பதிவு ஆனந்தம் தந்தது
மிக மிக நன்றி.
தும்பிக்கை போனாலும் யானைகால் பூனைமேல்
ReplyDeleteவீழ்ந்திடப் பூனை விழும் - ஆயுதம்
நம்பிக்கை ஒன்றுண்டு தும்பிக்கையான் தந்தை
சூழ்ந்தணைத் துடன் வருவான்;
ஆலகாலம் கொண்ட காலகாலன் பாதம்
வாழும்நாள் மறப்பதில்லை - தில்லை
தாளமொடு வியாகரணம் தானருளி தாவியொரு
கோலநட மாடுஞ் சிவனே! நல்ல
சோலைகுயில் கூவிமிடம் மான்களிடை நாய்நரியை
ஊளையிட வைத்த பரனே!
காலை வணக்கம்!
Nice sir.. Just now I saw kandha sasti song in a tv.
ReplyDeleteVelundu vinai illai!!
Thanks sir,
Sathishkumar GS
ReplyDeleteஅன்புச்சகோதரர் ஆலாசியம் அவர்களின் கவிதை நன்று நன்று. தமிழ் மொழி இன்னும் உயிர்த்துடிப்போடு தான் இருக்கிறது என்பதற்கு சகோதரர் போன்ற நல்லோர்கள் வாழும் சான்றுகள். அவர் மேலும் பல கவி எழுத வாணியை வேண்டுகிறேன்!
பி. கு: சிலருக்கு, தனிப்பட்ட பாராட்டுக்கள் வகுப்பறையில் செய்வது பிடிப்பதில்லை. எனக்கு என்னவோ, பாராட்ட வேண்டும் என்றால் பாராட்டி விட வேண்டும், அப்போது தான் அவர்களுக்கும் ஊக்கம் பிறக்கும், நாமும் கடமையை செய்தவராவோம். திட்டுவதை - குறை சுட்டுவதை தனியாகவும், பாராட்டுவதை பலர் பார்க்கவும் செய்தலே முறை அன்றோ?
பதிவிற்கும் பாடலுக்கும் தலை
ReplyDeleteபணிந்து வணங்குகிறோம்
சில வருடங்களுக்கு முன்புதான் முதன் முதலாக இந்த பாடலை கேட்கும் வாய்ப்பு கிட்டியது. பக்திமனம் கமழ கேட்டேன் பாடலை. இப்போது மீண்டும் ஒருமுறை
ReplyDeleteசிருஷ்டியின் அனைத்து ஜீவராசிகளும் ஒன்றே, தோற்றத்தில் பெரிய யானையை கொல்ல சிரு எரும்புக்கு வலிமைத்தந்தவன் இறைவன்.
ReplyDelete//நாமும் கடமையை செய்தவராவோம். திட்டுவதை - குறை சுட்டுவதை தனியாகவும், பாராட்டுவதை பலர் பார்க்கவும் செய்தலே முறை அன்றோ?//
புவனாவின் கடமையும் புரிந்தது, அவர் இதுவரையில் குறை சுட்டுவதை தனியாகவுமே, பாராட்டுவதை பலர் பார்க்கவுமே செய்தார் என்பதையும் உலகம் அறிகின்றது.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஹாலாஸ்யம்ஜி , மற்றும் புவனேஷ்வரின் கவிதைகள் நன்றாக இருக்கின்றன.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அருமை உள்ளம் கொண்ட வாத்தியாக்கூ!
ReplyDeleteஅனைவருக்கும்
" மாயக்கண்ண்னை ",!
பிடிக்க காரணம் என்ன ?
பரமாத்வா இல்லையா?
அவருடைய ஜாதகத்தை சட்ரு அலசுன்களே ஸ்வாமீ?
மீரா என்ர
எலுத்தை ஷொல்லும் பொலுதும்,
கேட்கும் பொலுதும்,
பார்க்கும் பொலுதும்,
நினைக்கும் பொலுதும்
" மாயக்கண்ண்ன் ",!
தான்
முன்ன்ர் வந்து நிர்கின்ரார் ஸ்வாமீ !
இது வெண்டு கோல் மட்டுமே !
வெரும் வெண்டு கோல் மட்டுமே!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteபதிவு நன்றாக உள்ளது ஐயா நன்றி!////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDeleteஅதிகாலை வேலை அமுதனைப் பற்றிய பாமாலை
அழகிய இவ்வேளை எந்தன் இதயம் வருடியதே
கவியரசின் சீர்மேவிய கவிமாலை....
நெகிழ்ந்த இதயம் மகிழ்ந்தே மனம்
கமழ நிறைவான எனதுப்பாடல்.....
செவ்வேல் தனையே அனுப்பாயோ இங்கே
சிக்கித் தவிக்கும் எனை மீட்க
மவ்வல் விழியால் காண்பாயோ மனம்
கவ்விய துயரங்கள் மாயமாக
ஒளவை பாடலால் நானுனைப் பாட
திவ்விய தரிசனம் தாருவாயே
எங்கும் நிறைந்த பரபிரம்மமே நல்மனம்
தங்கும் நற்கதி மருந்தே
விம்மி அழுதிடும் எந்தன் மனமே
வேதனை போக்க வாராயோ!
கந்தா கடம்பா என்றே நானுனை
சிந்தை நிறைய அழைக்கின்றேன்
எந்தையே எந்தன் தாயினும் சிறந்த
கருணை பொழியும் கடலே
முந்தைய பாவம் யாவும் முடிந்துபோக
விந்தை புரிவாய் முகுந்தனே
பாமாலைக் கொண்டே நினக்கு யான்
பூமாலை சூட்டுகிறேன் தமிழமுதே
தரணியில் வந்துதித்த தயை மிகு
பூரணியின் புதல்வனே போற்றுகின்றேன்
திரவியமே திவ்விய ஓவியமே தேனே
தீந்தமிழே தில்லைவாழ் திருவே
வருவாய் நல்வாழ்விற்கு அருள்வாய் இறைவா
உயிரே! உயிரின் உயிரே!
போற்றி! போற்றி!! போற்றி!!!
அழகிய பதிவு ஆனந்தம் தந்தது
மிக மிக நன்றி.////
நெகிச்சியான, நெகிழ்ச்சியைத் தருகின்ற உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!
////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteதும்பிக்கை போனாலும் யானைகால் பூனைமேல்
வீழ்ந்திடப் பூனை விழும் - ஆயுதம்
நம்பிக்கை ஒன்றுண்டு தும்பிக்கையான் தந்தை
சூழ்ந்தணைத் துடன் வருவான்;
ஆலகாலம் கொண்ட காலகாலன் பாதம்
வாழும்நாள் மறப்பதில்லை - தில்லை
தாளமொடு வியாகரணம் தானருளி தாவியொரு
கோலநட மாடுஞ் சிவனே! நல்ல
சோலைகுயில் கூவிமிடம் மான்களிடை நாய்நரியை
ஊளையிட வைத்த பரனே!
காலை வணக்கம்!////
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும், பாடலுக்கும் நன்றி புவனேஷ்!
////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteஅன்புச்சகோதரர் ஆலாசியம் அவர்களின் கவிதை நன்று நன்று. தமிழ் மொழி இன்னும் உயிர்த்துடிப்போடு தான் இருக்கிறது என்பதற்கு சகோதரர் போன்ற நல்லோர்கள் வாழும் சான்றுகள். அவர் மேலும் பல கவி எழுத வாணியை வேண்டுகிறேன்!
பி. கு: சிலருக்கு, தனிப்பட்ட பாராட்டுக்கள் வகுப்பறையில் செய்வது பிடிப்பதில்லை. எனக்கு என்னவோ, பாராட்ட வேண்டும் என்றால் பாராட்டி விட வேண்டும், அப்போது தான் அவர்களுக்கும் ஊக்கம் பிறக்கும், நாமும் கடமையை செய்தவராவோம். திட்டுவதை - குறை சுட்டுவதை தனியாகவும், பாராட்டுவதை பலர் பார்க்கவும் செய்தலே முறை அன்றோ?////
பாராட்டுவதற்கு என்ன தயக்கம்? காசா, பண்மா? இன்றைய அதிரடி விலவாசி உயர்வில், செல்வே இல்லாதது அது ஒன்றுதான்! நன்றி!
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
நன்றி///
உங்களின் பின்னூட்டத்திற்கும் வணக்கத்திற்கும் நன்றி உதயகுமார்!
////Blogger அய்யர் said...
ReplyDeleteபதிவிற்கும் பாடலுக்கும் தலை
பணிந்து வணங்குகிறோம்/////
உங்களின் பின்னூட்டத்திற்கும் வணக்கத்திற்கும் நன்றி விசுவநாதன்!
ReplyDelete////Blogger ஒரு நண்பன் இருந்தால் said...
சில வருடங்களுக்கு முன்புதான் முதன் முதலாக இந்த பாடலை கேட்கும் வாய்ப்பு கிட்டியது. பக்திமனம் கமழ கேட்டேன் பாடலை. இப்போது மீண்டும் ஒருமுறை////
நல்லது. நன்றி!
/////Blogger ஒரு நண்பன் இருந்தால் said...
ReplyDeleteசிருஷ்டியின் அனைத்து ஜீவராசிகளும் ஒன்றே, தோற்றத்தில் பெரிய யானையை கொல்ல சிரு எரும்புக்கு வலிமைத்தந்தவன் இறைவன்.
//நாமும் கடமையை செய்தவராவோம். திட்டுவதை - குறை சுட்டுவதை தனியாகவும், பாராட்டுவதை பலர் பார்க்கவும் செய்தலே முறை அன்றோ?//
புவனாவின் கடமையும் புரிந்தது, அவர் இதுவரையில் குறை சுட்டுவதை தனியாகவுமே, பாராட்டுவதை பலர் பார்க்கவுமே செய்தார் என்பதையும் உலகம் அறிகின்றது./////
அது யார் சாமி, புவனா?
////Blogger ஊமையன் said... எப்பாடி,
ReplyDeleteநமக்கு இப்படி ஆலாசியம் அவர்களைப் போல கவிபாடும் திரனை அந்த இறைவன் தரவில்லை.
முட்டாலுக்கேது கவித்திறன், என்றாலும் அதே இறைவனை நெஞ்ஜகமே கோயிலாக, நினைவே சுகந்தமாக அன்பே மஞ்ஜல் நீர் பூஜை கொள்ள வாராய் பராபரமே என்று வேண்டவாவது விட்டுவெய்த்தான்./////
அன்பரே, முதலில் தாய்த் தமிழைப் பிழையின்றி எழுதுங்கள். நிறைய நூல்களைப் படியுங்கள். கவிதைக் காதலி தேடிவந்து உங்களை அணைத்துக்கொள்வாள்!
////Blogger zing zang said...
ReplyDeleteI love this nice song./////
நல்லது. நன்றி நண்பரே!
ReplyDelete////Blogger Maaya kanna said...
அருமை உள்ளம் கொண்ட வாத்தியாக்கூ!
அனைவருக்கும்
" மாயக்கண்ண்னை ",!
பிடிக்க காரணம் என்ன ?
பரமாத்வா இல்லையா?
அவருடைய ஜாதகத்தை சட்ரு அலசுன்களே ஸ்வாமீ?
மீரா என்ர
எலுத்தை ஷொல்லும் பொலுதும்,
கேட்கும் பொலுதும்,
பார்க்கும் பொலுதும்,
நினைக்கும் பொலுதும்
" மாயக்கண்ண்ன் ",!
தான்
முன்ன்ர் வந்து நிர்கின்ரார் ஸ்வாமீ !
இது வெண்டு கோல் மட்டுமே !
வெரும் வெண்டு கோல் மட்டுமே!/////
வேண்டுகோள் சரி! இந்த மழலைத் தமிழை எப்போது மேம்படுத்தப் போகிறீர்கள்?
////Blogger KJ said...
ReplyDeleteNice sir.. Just now I saw kandha sasti song in a tv.
Velundu vinai illai!!
Thanks sir,
Sathishkumar GS////
நல்லது. நன்றி நண்பரே!
Welcome MayaKannan, seeing your comment after a long gap.
ReplyDeleteThought busy in Dubai.
what happened to
Puratchi mani sir
Nattu sir
Thanjavooran sir
Nandhakumar sir and many of our classmates.