மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.10.12

கவிதைச் சோலை: நடுங்காத நெஞ்சம்


Devotional: அதுதான் என் முதல் வேலை!

பக்தி மலர்
இன்றைய பக்திமலரை 'சூலமங்கலம்' சகோதரிகள் பாடிய பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. படித்து, கேட்டு  மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------
முருகா உனக்கு புகழ்மாலை
சூட்டுவதே தினம் முதல்வேலை

கந்தா உன் திருவடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை

(முருகா ... )

தூவிடக் குறிஞ்சி மலருண்டு
தேன் தினையோடு கனியுண்டு

பாதத்தில் வைத்திட மனம்உண்டு
பூஜையை ஏற்பாய் நீவந்து

(முருகா ... )

ஆலயம் என்பதுன் நிழல்தானே
அணையா தீபம்உன் அருள்தானே

காலமும் துணையை நீதானே
கருணையைப் பொழிவ துன்விழிதானே

(முருகா ... )

தேவயானை ஒருபுறமும்
மான்மகள் வள்ளி மறுபுறமும்

தோன்றிட நீதரும் திருக்காட்சி
மங்கலம் வழங்கிடும் அருட்காட்சி

(முருகா ... )

கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை

முருகா முருகா முருகா.

----------------------------------------------
பாடலின் கானொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded this video clipping!




+++++++++++++++++++++++++++++++++++  


கவிதைச் சோலை:  நடுங்காத நெஞ்சம்

தும்பிக்கை போனபின் யானையைப் பூனையும்
    துரத்திடும் தன்மை யேபோல்
       துணிவிலாக் கோழையைச் சிறுவரும் கைகொட்டிச்
    சூழ்கின்ற அவல மேபோல்
நம்பிக்கை போனவன் வாழ்க்கையும் காலத்தில்
    நலிவுறும் என்ன அஞ்சி
       நடுங்காத நெஞ்சோடும் தொடர்கிறேன் வருகின்ற
    நாளைஎன் காலம் என்றே!
வம்புக்குச் சொக்கனை வளையாடும் கைகளில்
    வளைக்கின்ற வண்ண மயிலே!
       மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!

                   - கவியரசர் கண்ணதாசன்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++

25 comments:

  1. பதிவு நன்றாக உள்ளது ஐயா நன்றி!

    ReplyDelete
  2. அதிகாலை வேலை அமுதனைப் பற்றிய பாமாலை
    அழகிய இவ்வேளை எந்தன் இதயம் வருடியதே
    கவியரசின் சீர்மேவிய கவிமாலை....

    நெகிழ்ந்த இதயம் மகிழ்ந்தே மனம்
    கமழ நிறைவான எனதுப்பாடல்.....

    செவ்வேல் தனையே அனுப்பாயோ இங்கே
    சிக்கித் தவிக்கும் எனை மீட்க
    மவ்வல் விழியால் காண்பாயோ மனம்
    கவ்விய துயரங்கள் மாயமாக
    ஒளவை பாடலால் நானுனைப் பாட
    திவ்விய தரிசனம் தாருவாயே
    எங்கும் நிறைந்த பரபிரம்மமே நல்மனம்
    தங்கும் நற்கதி மருந்தே
    விம்மி அழுதிடும் எந்தன் மனமே
    வேதனை போக்க வாராயோ!
    கந்தா கடம்பா என்றே நானுனை
    சிந்தை நிறைய அழைக்கின்றேன்
    எந்தையே எந்தன் தாயினும் சிறந்த
    கருணை பொழியும் கடலே
    முந்தைய பாவம் யாவும் முடிந்துபோக
    விந்தை புரிவாய் முகுந்தனே
    பாமாலைக் கொண்டே நினக்கு யான்
    பூமாலை சூட்டுகிறேன் தமிழமுதே
    தரணியில் வந்துதித்த தயை மிகு
    பூரணியின் புதல்வனே போற்றுகின்றேன்
    திரவியமே திவ்விய ஓவியமே தேனே
    தீந்தமிழே தில்லைவாழ் திருவே
    வருவாய் நல்வாழ்விற்கு அருள்வாய் இறைவா
    உயிரே! உயிரின் உயிரே!
    போற்றி! போற்றி!! போற்றி!!!

    அழகிய பதிவு ஆனந்தம் தந்தது
    மிக மிக நன்றி.

    ReplyDelete
  3. தும்பிக்கை போனாலும் யானைகால் பூனைமேல்
    வீழ்ந்திடப் பூனை விழும் - ஆயுதம்
    நம்பிக்கை ஒன்றுண்டு தும்பிக்கையான் தந்தை
    சூழ்ந்தணைத் துடன் வருவான்;
    ஆலகாலம் கொண்ட காலகாலன் பாதம்
    வாழும்நாள் மறப்பதில்லை - தில்லை
    தாளமொடு வியாகரணம் தானருளி தாவியொரு
    கோலநட மாடுஞ் சிவனே! நல்ல
    சோலைகுயில் கூவிமிடம் மான்களிடை நாய்நரியை
    ஊளையிட வைத்த பரனே!

    காலை வணக்கம்!

    ReplyDelete
  4. Nice sir.. Just now I saw kandha sasti song in a tv.
    Velundu vinai illai!!
    Thanks sir,
    Sathishkumar GS

    ReplyDelete

  5. அன்புச்சகோதரர் ஆலாசியம் அவர்களின் கவிதை நன்று நன்று. தமிழ் மொழி இன்னும் உயிர்த்துடிப்போடு தான் இருக்கிறது என்பதற்கு சகோதரர் போன்ற நல்லோர்கள் வாழும் சான்றுகள். அவர் மேலும் பல கவி எழுத வாணியை வேண்டுகிறேன்!

    பி. கு: சிலருக்கு, தனிப்பட்ட பாராட்டுக்கள் வகுப்பறையில் செய்வது பிடிப்பதில்லை. எனக்கு என்னவோ, பாராட்ட வேண்டும் என்றால் பாராட்டி விட வேண்டும், அப்போது தான் அவர்களுக்கும் ஊக்கம் பிறக்கும், நாமும் கடமையை செய்தவராவோம். திட்டுவதை - குறை சுட்டுவதை தனியாகவும், பாராட்டுவதை பலர் பார்க்கவும் செய்தலே முறை அன்றோ?

    ReplyDelete
  6. பதிவிற்கும் பாடலுக்கும் தலை
    பணிந்து வணங்குகிறோம்

    ReplyDelete
  7. சில வருடங்களுக்கு முன்புதான் முதன் முதலாக இந்த பாடலை கேட்கும் வாய்ப்பு கிட்டியது. பக்திமனம் கமழ கேட்டேன் பாடலை. இப்போது மீண்டும் ஒருமுறை

    ReplyDelete
  8. சிருஷ்டியின் அனைத்து ஜீவராசிகளும் ஒன்றே, தோற்றத்தில் பெரிய யானையை கொல்ல சிரு எரும்புக்கு வலிமைத்தந்தவன் இறைவன்.

    //நாமும் கடமையை செய்தவராவோம். திட்டுவதை - குறை சுட்டுவதை தனியாகவும், பாராட்டுவதை பலர் பார்க்கவும் செய்தலே முறை அன்றோ?//

    புவனாவின் கடமையும் புரிந்தது, அவர் இதுவரையில் குறை சுட்டுவதை தனியாகவுமே, பாராட்டுவதை பலர் பார்க்கவுமே செய்தார் என்பதையும் உலகம் அறிகின்றது.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. ஹாலாஸ்யம்ஜி , மற்றும் புவனேஷ்வரின் கவிதைகள் நன்றாக இருக்கின்றன.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அருமை உள்ளம் கொண்ட வாத்தியாக்கூ!

    அனைவருக்கும்

    " மாயக்கண்ண்னை ",!

    பிடிக்க காரணம் என்ன ?

    பரமாத்வா இல்லையா?

    அவருடைய ஜாதகத்தை சட்ரு அலசுன்களே ஸ்வாமீ?

    மீரா என்ர
    எலுத்தை ஷொல்லும் பொலுதும்,

    கேட்கும் பொலுதும்,

    பார்க்கும் பொலுதும்,

    நினைக்கும் பொலுதும்

    " மாயக்கண்ண்ன் ",!

    தான்

    முன்ன்ர் வந்து நிர்கின்ரார் ஸ்வாமீ !

    இது வெண்டு கோல் மட்டுமே !

    வெரும் வெண்டு கோல் மட்டுமே!

    ReplyDelete
  13. ////Blogger kmr.krishnan said...
    பதிவு நன்றாக உள்ளது ஐயா நன்றி!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  14. Blogger ஜி ஆலாசியம் said...
    அதிகாலை வேலை அமுதனைப் பற்றிய பாமாலை
    அழகிய இவ்வேளை எந்தன் இதயம் வருடியதே
    கவியரசின் சீர்மேவிய கவிமாலை....
    நெகிழ்ந்த இதயம் மகிழ்ந்தே மனம்
    கமழ நிறைவான எனதுப்பாடல்.....
    செவ்வேல் தனையே அனுப்பாயோ இங்கே
    சிக்கித் தவிக்கும் எனை மீட்க
    மவ்வல் விழியால் காண்பாயோ மனம்
    கவ்விய துயரங்கள் மாயமாக
    ஒளவை பாடலால் நானுனைப் பாட
    திவ்விய தரிசனம் தாருவாயே
    எங்கும் நிறைந்த பரபிரம்மமே நல்மனம்
    தங்கும் நற்கதி மருந்தே
    விம்மி அழுதிடும் எந்தன் மனமே
    வேதனை போக்க வாராயோ!
    கந்தா கடம்பா என்றே நானுனை
    சிந்தை நிறைய அழைக்கின்றேன்
    எந்தையே எந்தன் தாயினும் சிறந்த
    கருணை பொழியும் கடலே
    முந்தைய பாவம் யாவும் முடிந்துபோக
    விந்தை புரிவாய் முகுந்தனே
    பாமாலைக் கொண்டே நினக்கு யான்
    பூமாலை சூட்டுகிறேன் தமிழமுதே
    தரணியில் வந்துதித்த தயை மிகு
    பூரணியின் புதல்வனே போற்றுகின்றேன்
    திரவியமே திவ்விய ஓவியமே தேனே
    தீந்தமிழே தில்லைவாழ் திருவே
    வருவாய் நல்வாழ்விற்கு அருள்வாய் இறைவா
    உயிரே! உயிரின் உயிரே!
    போற்றி! போற்றி!! போற்றி!!!
    அழகிய பதிவு ஆனந்தம் தந்தது
    மிக மிக நன்றி.////

    நெகிச்சியான, நெகிழ்ச்சியைத் தருகின்ற உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  15. ////Blogger Bhuvaneshwar said...
    தும்பிக்கை போனாலும் யானைகால் பூனைமேல்
    வீழ்ந்திடப் பூனை விழும் - ஆயுதம்
    நம்பிக்கை ஒன்றுண்டு தும்பிக்கையான் தந்தை
    சூழ்ந்தணைத் துடன் வருவான்;
    ஆலகாலம் கொண்ட காலகாலன் பாதம்
    வாழும்நாள் மறப்பதில்லை - தில்லை
    தாளமொடு வியாகரணம் தானருளி தாவியொரு
    கோலநட மாடுஞ் சிவனே! நல்ல
    சோலைகுயில் கூவிமிடம் மான்களிடை நாய்நரியை
    ஊளையிட வைத்த பரனே!
    காலை வணக்கம்!////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும், பாடலுக்கும் நன்றி புவனேஷ்!

    ReplyDelete
  16. ////Blogger Bhuvaneshwar said...
    அன்புச்சகோதரர் ஆலாசியம் அவர்களின் கவிதை நன்று நன்று. தமிழ் மொழி இன்னும் உயிர்த்துடிப்போடு தான் இருக்கிறது என்பதற்கு சகோதரர் போன்ற நல்லோர்கள் வாழும் சான்றுகள். அவர் மேலும் பல கவி எழுத வாணியை வேண்டுகிறேன்!
    பி. கு: சிலருக்கு, தனிப்பட்ட பாராட்டுக்கள் வகுப்பறையில் செய்வது பிடிப்பதில்லை. எனக்கு என்னவோ, பாராட்ட வேண்டும் என்றால் பாராட்டி விட வேண்டும், அப்போது தான் அவர்களுக்கும் ஊக்கம் பிறக்கும், நாமும் கடமையை செய்தவராவோம். திட்டுவதை - குறை சுட்டுவதை தனியாகவும், பாராட்டுவதை பலர் பார்க்கவும் செய்தலே முறை அன்றோ?////

    பாராட்டுவதற்கு என்ன தயக்கம்? காசா, பண்மா? இன்றைய அதிரடி விலவாசி உயர்வில், செல்வே இல்லாதது அது ஒன்றுதான்! நன்றி!

    ReplyDelete
  17. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நன்றி///

    உங்களின் பின்னூட்டத்திற்கும் வணக்கத்திற்கும் நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  18. ////Blogger அய்யர் said...
    பதிவிற்கும் பாடலுக்கும் தலை
    பணிந்து வணங்குகிறோம்/////

    உங்களின் பின்னூட்டத்திற்கும் வணக்கத்திற்கும் நன்றி விசுவநாதன்!

    ReplyDelete

  19. ////Blogger ஒரு நண்பன் இருந்தால் said...
    சில வருடங்களுக்கு முன்புதான் முதன் முதலாக இந்த பாடலை கேட்கும் வாய்ப்பு கிட்டியது. பக்திமனம் கமழ கேட்டேன் பாடலை. இப்போது மீண்டும் ஒருமுறை////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  20. /////Blogger ஒரு நண்பன் இருந்தால் said...
    சிருஷ்டியின் அனைத்து ஜீவராசிகளும் ஒன்றே, தோற்றத்தில் பெரிய யானையை கொல்ல சிரு எரும்புக்கு வலிமைத்தந்தவன் இறைவன்.
    //நாமும் கடமையை செய்தவராவோம். திட்டுவதை - குறை சுட்டுவதை தனியாகவும், பாராட்டுவதை பலர் பார்க்கவும் செய்தலே முறை அன்றோ?//
    புவனாவின் கடமையும் புரிந்தது, அவர் இதுவரையில் குறை சுட்டுவதை தனியாகவுமே, பாராட்டுவதை பலர் பார்க்கவுமே செய்தார் என்பதையும் உலகம் அறிகின்றது./////

    அது யார் சாமி, புவனா?

    ReplyDelete
  21. ////Blogger ஊமையன் said... எப்பாடி,
    நமக்கு இப்படி ஆலாசியம் அவர்களைப் போல கவிபாடும் திரனை அந்த இறைவன் தரவில்லை.
    முட்டாலுக்கேது கவித்திறன், என்றாலும் அதே இறைவனை நெஞ்ஜகமே கோயிலாக, நினைவே சுகந்தமாக அன்பே மஞ்ஜல் நீர் பூஜை கொள்ள வாராய் பராபரமே என்று வேண்டவாவது விட்டுவெய்த்தான்./////

    அன்பரே, முதலில் தாய்த் தமிழைப் பிழையின்றி எழுதுங்கள். நிறைய நூல்களைப் படியுங்கள். கவிதைக் காதலி தேடிவந்து உங்களை அணைத்துக்கொள்வாள்!

    ReplyDelete
  22. ////Blogger zing zang said...
    I love this nice song./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

  23. ////Blogger Maaya kanna said...
    அருமை உள்ளம் கொண்ட வாத்தியாக்கூ!
    அனைவருக்கும்
    " மாயக்கண்ண்னை ",!
    பிடிக்க காரணம் என்ன ?
    பரமாத்வா இல்லையா?
    அவருடைய ஜாதகத்தை சட்ரு அலசுன்களே ஸ்வாமீ?
    மீரா என்ர
    எலுத்தை ஷொல்லும் பொலுதும்,
    கேட்கும் பொலுதும்,
    பார்க்கும் பொலுதும்,
    நினைக்கும் பொலுதும்
    " மாயக்கண்ண்ன் ",!
    தான்
    முன்ன்ர் வந்து நிர்கின்ரார் ஸ்வாமீ !
    இது வெண்டு கோல் மட்டுமே !
    வெரும் வெண்டு கோல் மட்டுமே!/////

    வேண்டுகோள் சரி! இந்த மழலைத் தமிழை எப்போது மேம்படுத்தப் போகிறீர்கள்?

    ReplyDelete
  24. ////Blogger KJ said...
    Nice sir.. Just now I saw kandha sasti song in a tv.
    Velundu vinai illai!!
    Thanks sir,
    Sathishkumar GS////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. Welcome MayaKannan, seeing your comment after a long gap.

    Thought busy in Dubai.

    what happened to
    Puratchi mani sir
    Nattu sir
    Thanjavooran sir
    Nandhakumar sir and many of our classmates.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com