மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

8.10.12

Astrology எப்போதுடா என் கஷ்டம் தீரும்?Astrology எப்போதுடா என் கஷ்டம் தீரும்?

அலசல் பாடம்

எனது கஷ்டங்கள் எப்பொது தீரும்? என்னும் தலைப்பில் முன் பாடங்களில் சூரியன், மற்றும் சந்திரனை வைத்துப் பலன்களை அலசுவதைப் பற்றி எழுதியிருந்தேன். இன்று குருவை வைத்து எப்படி அலசுவது என்று பார்ப்போம்!

குருதான் தனகாரகன்.Authority for finance (குழந்தை பாக்கியத்திற்குக் காரகனும் கூட)

இன்று பல பிரச்சினைகளுக்குக் காரணம் பணமின்மை அல்லது பணப் பற்றாக்குறை!

இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில், தேவைகளும் அதிகமாகிவிட்டன. செலவுகளும் அதிகமாகிவிட்டன. விலவாசிகளும் கட்டுப்படுத்த யாரும் இல்லாமல் தன்னிச்சையாக ஏறிக்கொண்டிருக்கிறது!

பணப்பற்றாக்குறை இல்லாதவரே இல்லை என்று சொல்லலாம்.

சம்பளக்காரனுக்கும் பணத்தேவை உள்ளது. செல்வந்தனுக்கும் பணத்தேவை உள்ளது. சைபர்களின் எண்ணிக்கை தான் வித்தியாசம். பத்தாயிரம் தேவை உள்ளவனும் இருக்கிறான். பத்து லட்சம் தேவை உள்ளவனும் இருக்கிறான்.

ஆசைப்படாதே. இருப்பதை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு என்று வயதானவர்களுக்கு வேண்டுமென்றால் சமாதானம் சொல்லலாம். அதே சமாதானம் இளைஞர்களிடமும், நடுத்தர வயதுக்காரர்களிடமும் எடுபடாது!
_________________________________________________________________________
பணமின்மையில் இரண்டு விதம் உள்ளது.

ஒன்று ஏழ்மை அல்லது வறுமை! இன்னொன்று தற்காலிகப் பணமின்மை.

ஜாதகப்படி, இரண்டாம் வீடும், பதினொன்றம் வீடும் அடிபட்டுப் போயிருந்தால் அல்லது கெட்டுப்போய் இருந்தால்,  வாழ்க்கை முழுவதும் பணக்கஷ்டம் இருக்கும். submissive level என்பார்களே -

அதாவது கைக்கும் வாய்க்குமான நிலைமை என்பார்களே அந்த நிலையில் வாழ்க்கை நடத்த வேண்டியதிருக்கும். அதற்கு ஜாதகத்தை அலசி எப்போது பணம் வரும் என்று பார்க்கத் தேவையில்லை.

எப்போதுமே submissive level தான்!

தற்காலிக நிலைமையை இப்பொது அலசுவோம்!

1. ஜாதகத்தில் மாந்தி அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியினுடைய தசா அல்லது புத்தி நடந்தால் பணக் கஷ்டம் உண்டாகும். கொடுத்த பணம் வராது. தொழிலில் அல்லது வியாபாரத்தில் சிக்கல்கள் உண்டாகி, பணம் எங்காவது முடங்கிப்போய்விடும்.

2. ஆறாம் அதிபதியின் திசை நடந்தாலும் அதே நிலைமைதான். குறிப்பாக வைத்தியச் செலவு, நம்பிக்கைத் துரோகம் போன்ற செயல்களால், நமது பணம் முடங்கிவிடும் அபாயம் உண்டாகும்

3. பன்னிரெண்டாம் அதிபதியின் திசை நடந்தால், எதிர்பாராத செலவுகள் உண்டாகி பணப் பற்றாக்குறை ஏற்படும். பங்குச் சந்தைபோன்ற இடங்களில் பணத்தை இழக்க நேரிடும். பொதுவாக விரையத்தால் பணத்தை இழக்க நேரிடும்.

4. எட்டாம் அதிபதியின் திசை நடந்தாலும் அதே நிலைமைதான்.

5. நடப்பு தசா அல்லது புத்தி நாதன் 6, 8 அல்லது 12ஆம் வீடுகளில் இருந்தாலும் தற்காலிகப் பணக் கஷ்டங்கள் உண்டாகும். அந்தக் குறிபிட்ட திசை முடிந்தவுடன் அது நிவர்த்தியாகும்.

6. அதே போல தீய கிரகங்களான, சனி, ராகு அல்லது கேது ஆகியவற்றின் திசை அல்லது புத்திகளிலும் பணக் கஷ்டங்கள் உண்டாகும். (அக்கிரகங்கள், உச்சம், கேந்திர, திரிகோணங்களில் இருந்தால், விதிவிலக்காகும்)
------------------------------------------------------------------------------------------------------------
சரி எப்போது பணம் அதுவாக வரும்? (That is free flow of money)

1. 2ஆம் அதிபதியின் திசை, பதினொன்றாம் அதிபதியின் திசை, பாக்கிய அதிபதியின் திசைகளில் பணம் அபரிதமாக வரும் (ஜாதகத்தில் அவர்கள், உச்சம், கேந்திர திரிகோணங்களில் இருக்க வேண்டும்)

2.. கோச்சாரக்குரு, இரண்டு, ஐந்து, ஏழு, பதினொன்றாம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பணம் வரும்

3. கோச்சார சனி, 30 பரல்களுக்கு மேல் உள்ள வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பணம் வரும்
------------------------------------------------------------------------------------------------------------
பணம் எப்போதும் ஒரே மாதிரியாக வந்து கோண்டிருக்காது. புத்திசாலித்தனமாக அது வரும் காலத்தில் அதைப் பிடித்துப் பத்திரப் படுத்திவைத்துக் கொள்ள வேண்டும்.

மழைகாலத்தில் குளத்தை நிரப்பி வைத்தால்தான் வெய்யில் காலத்தில் குடிக்கத் தண்ணீர்கிடைக்கும். அதுபோலத் தான் இதுவும்.

இது மேல்நிலைப் பாடங்களில் ஒன்று. அனைவருக்கும் (மற்றவர்களுக்கும்) பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டு உள்ளேன்

வாத்தியார் வெளியூர்ப் பயணம். அதனால் வகுப்பறைக்கு 9.10.2012 செவ்வாயன்று விடுமுறை. அடுத்த வகுப்பு புதன் கிழமை ( 10.10.2012) யன்று நடைபெறும். கிடைக்கும் நேரத்தில் பழைய பாடங்களைத் திரும்பப் படியுங்கள்.

அன்புடன்
வாத்தியார் 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++==

22 comments:

Shyam Prasad said...

மிக்க நன்றி

kmr.krishnan said...

ஆனந்த முருகனின் பங்களிப்பபினைப் பற்றி சிலசமயம் 'என்ன, சின்னப் புள்ளத்தனமா இருக்கு' என்று கருதிய‌து உண்டு. இன்று அவர் காந்திஜியின்
கருத்தினை எடுத்து வைத்தது அவர் 'பெரிய புள்ளதான்' என்று அங்கீகரிக்கத் தோன்றியது.இரண்டையும் மறைக்காமல் கூறிய என்னை அவர் தப்பாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.

2 அப்டோபர் 2012 அன்று வெளிவந்த 'சத்தியசோதனை' என்ற பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை அனபர்கள் படிக்க வேண்டுகிறேன்.திரு முருகன் அவர்கள் கூறிய கருத்துக்கு மாற்றுக் கருத்தை தஞ்சாவூர் பெரியவரும் நானும் வைத்துள்ளோம்.ஆர்வமுள்ள அனபர்கள் அதனை ஒட்டியும் வெட்டியும் வாத்தியார் அனுமதித்தால் சம்வாதம் செய்யலாம்.த‌னிப்பட்ட தாக்குதலோ தலைவர்களைப் பற்றித் தரக்குறைவாகவோ இல்லாமல் சரித்திரத்தினை உள்ளது உள்ளபடி கூற வேண்டுகிறேன்.

காந்திஜி மற்றும் பாபசாகேப் அம்பேதகரும் நேருக்கு நேர் பலமுறை சந்தித்து
விவாதித்துள்ளனர். ஒருபோதும் இருவரும் தனிப்பட்ட தாக்குதலில் இறங்க‌வில்லை.

லண்டனில் காந்திஜி பாபாசாகேபைப் புகழ்ந்து பேசியது பதிவாகி இருக்கிறது.
அதே போல சட்ட அமைச்சராக பாபா சாகேப் பாராளுமன்றத்தில் "எனக்கென்ன காந்திஜியின் மீது பகையா? அவர் தாழ்த்தப்பட்டவர்களின் மீது அன்பு வைத்திருந்தார் என்பது நான் அறியாததா?" என்று பேசியுள்ளது பதிவாகியுள்ளது.இருவரும் பெரிய தலைவர்கள் மட்டுமல்ல;நல்ல மனிதாபிமானிகள்.

பிராமணர்களை 'ஆரியர்கள், வந்தேறிகள்' என்று பிரசாரம் நடந்தபோது
பாபாசாகேப்தான் "பிராமணர்கள் ஆரியர்கள் என்றால் தாழ்த்தப்பட்டவர்களும்
ஆரியர்களே! தாழ்த்தப்பட்டவர்கள் திராவிடர்கள் என்றால் பிராமணர்களும்
திராவிடர்களே" என்று ஆணித்தரமாகக் கூறியவர்.ஆரியப் படையெடுப்பு
என்ற ஆங்கிலேய விஷம சரித்திரத்தை ஆணித்தரமாக எதிர்த்தவர்களில்
முதல்வர் சுவாமி விவேகானந்தர். அடுத்தவர் பாபாசாகேப் அம்பேத்கர்தான்.
அதற்காக நான் பாபாசாகேபை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.இந்த விஷயத்தில் காந்திஜி கூட பாபா சாகேப் அளவுக்கு அழுத்தமாக தன் கருத்தைக் கூறவில்லை.

மேலும் பாபாசாகேபுக்கு தாழ்த்தப்பட்டவர்களை அப்ரஹாமிக் மதங்களுக்கு மாற்றம் செய்ய உதவும் படி எவ்வளவோ அழுத்தம் கொடுக்கப்பட்டது. எல்லாவகையிலும் அவருக்கு ஆசை காண்பிக்கப்பட்டது. ஆனால் நம் இந்திய கலாச்சரம், பண்பாடுகளின் மீது நம்பிக்கை வைத்த பாபாசாகேப், இந்திய மரபு வழி பெள‌த்த மதத்தையே தேர்ந்தெடுத்தார்.அதற்காக பாபா சாகேபுக்கு நாம் என்றென்றும் கடன் பட்டவர்களாவோம்.

காந்திஜியின் சமூக ஒற்றுமைக் கருத்துக்களை முன்னெடுக்க அனைவரையும்
அன்புடன் அழைக்கிறேன்.

இன்றைய சோதிடப்பாடம் நான் ஏற்கனவெ அறிந்தது என்றாலும் மீண்டும் நினைவு படுத்திய ஐயாவுக்கு நன்றி!.Sanjai said...

நல்ல பாடம் ... காலை வணக்கம் :)

Leo said...

kmr.krishnan said... 'சத்தியசோதனை' என்ற பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை அனபர்கள் படிக்க வேண்டுகிறேன்.திரு முருகன் அவர்கள் கூறிய கருத்துக்கு மாற்றுக் கருத்தை தஞ்சாவூர் பெரியவரும் நானும் வைத்துள்ளோம்.ஆர்வமுள்ள அனபர்கள் அதனை ஒட்டியும் வெட்டியும் வாத்தியார் அனுமதித்தால் சம்வாதம் செய்யலாம்.

Mister…Again STOP tricking people to get into Cast and Religion arguments.

Just leave your opinion about the article written by the Vathiyar.

First of all …Gopalan Sir's opinion was shared by Mr. Alasiyam.

Gopalan Sir did not represent himself in this issue, he did not put forth directly.... so do not link him here in this matter. We are people who have OUR own thinking capacity.

Learn the leadership shown by Mr. Gopalan, and respect others views, do not start an unnecessary cast system arguments again on this blog
(How do you feel when I criticize you? And remember this feeling is common to all)

Others have their rights to share their opinion about vathiyar's article too.

If you wish to discuss the religion, cast system and the other good for nothing issues …remember you have an option ...since this blog is not yours, please take your discussions to your blogs.

I am representing the Indians who wish not to hear rubbish discussions here on this blog again.

We are humans, we are Tamilians, we are Indians and we are the students of this class…and I hope you like this order of representing ourselves.

Dear vathiyar forgive me for my outburst, I usually respect others views ....but I thought enough is enough

eswari sekar said...

good morning sir

zing zang said...

அது இஸ்டத்துக்கு வந்தால் தான் அது அதிர்ஷ்டம் என்பதுவும், பணம் வரும்பொது நாம்தான் கொஞ்ஜம் இலுத்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். போகும் போது அதன் செலவு வேகத்தை அவ்வளவு எளிதில் தடைப் போட இயலாது என்று எனது வீட்டு பெரியவர்கள் சொன்னதை நினைவு கூறுகின்றது இன்றயப் பாடம்.

Shyam Prasad said...

1. ஆறாம் வீட்டு அதிபதியே ஒன்பதாம் வீட்டு அதிபதியாக இருப்பது (ஆறாம் வீடு - மிதுனம் , ஒன்பதாம் வீடு - கன்னி)
2. ஆறாம் வீட்டு அதிபதியே பதினொன்றாம் வீட்டு அதிபதியாக இருப்பது (ஆறாம் வீடு - ரிஷபம் , ஒன்பதாம் வீடு - துலாம் )
மேலே உள்ள அமைப்புகள் படி இருந்தால் , ஜாதகருடைய பலன்கள் எப்படி இருக்கும் ?
அஷ்டவர்க்கத்தில் அதன் அதிபதிகள் எவ்வாறு பலத்துடன் உள்ளார் என்று பார்க்க வேண்டுமா ?

kmr.krishnan said...

//(How do you feel when I criticize you? And remember this feeling is common to )//
நான் எந்தவிதத்திலும் புண்படவில்லை.விமர்சனங்கள் யாரைப்பற்றியும் யாரும் செய்யலாம்.

இது என்னுடைய பிளாக் அல்லதான்.இது உங்க‌ளுடைய பிளாகும் அல்ல என்பதை நினைவு படுத்துகிறேன்.உங்களுடைய த்வனி இது உங்களுடைய பிளாக் போல ஒலிக்கிறது. மொத்தத்தில் இது நம்முடைய பிளாக்.

திரு. முருகனுடைய பின்னூட்டம் வெளியிடப் பட்டதால்
மறுமொழி கொடுக்க வேண்டிவந்தது. 'வாத்தியார் அனுமதித்தால்' என்ற என்
வாசகத்தினை லியோ அவர்கள் குறித்துக்கொள்ள வேண்டுகிறேன்.

சாந்தமான சொற்களைப் பயன் படுத்தி சம்வாதம் செய்ய நாம் எப்போதுதான் பயிலப் போகிறோமோ?

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்

நன்றி

kmr.krishnan said...

http://www.gandhitoday.in/2012/10/blog-post.html#comment-form

'காந்தி இன்று' என்ற மேற்கண்ட‌ வலை தளத்தில் எனது 'காந்திஜியை முதன் முதலாக மகாத்மா என்று அழைத்தது யார்?' என்ற கட்டுரை 8 அக்டோபர் 2012 அன்று பிரசுரமாகியுள்ளது.

வகுப்பறை நண்பர்கள் வாசித்துப் பயனுற வேண்டுகிறேன்.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Shyam Prasad said...
மிக்க நன்றி/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

Blogger kmr.krishnan said...
ஆனந்த முருகனின் பங்களிப்பபினைப் பற்றி சிலசமயம் 'என்ன, சின்னப் புள்ளத்தனமா இருக்கு' என்று கருதிய‌து உண்டு. இன்று அவர் காந்திஜியின்
கருத்தினை எடுத்து வைத்தது அவர் 'பெரிய புள்ளதான்' என்று அங்கீகரிக்கத் தோன்றியது.இரண்டையும் மறைக்காமல் கூறிய என்னை அவர் தப்பாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.
2 அப்டோபர் 2012 அன்று வெளிவந்த 'சத்தியசோதனை' என்ற பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை அனபர்கள் படிக்க வேண்டுகிறேன்.திரு முருகன் அவர்கள் கூறிய கருத்துக்கு மாற்றுக் கருத்தை தஞ்சாவூர் பெரியவரும் நானும் வைத்துள்ளோம்.ஆர்வமுள்ள அனபர்கள் அதனை ஒட்டியும் வெட்டியும் வாத்தியார் அனுமதித்தால் சம்வாதம் செய்யலாம்.த‌னிப்பட்ட தாக்குதலோ தலைவர்களைப் பற்றித் தரக்குறைவாகவோ இல்லாமல் சரித்திரத்தினை உள்ளது உள்ளபடி கூற வேண்டுகிறேன்.
காந்திஜி மற்றும் பாபசாகேப் அம்பேதகரும் நேருக்கு நேர் பலமுறை சந்தித்து
விவாதித்துள்ளனர். ஒருபோதும் இருவரும் தனிப்பட்ட தாக்குதலில் இறங்க‌வில்லை.
லண்டனில் காந்திஜி பாபாசாகேபைப் புகழ்ந்து பேசியது பதிவாகி இருக்கிறது.
அதே போல சட்ட அமைச்சராக பாபா சாகேப் பாராளுமன்றத்தில் "எனக்கென்ன காந்திஜியின் மீது பகையா? அவர் தாழ்த்தப்பட்டவர்களின் மீது அன்பு வைத்திருந்தார் என்பது நான் அறியாததா?" என்று பேசியுள்ளது பதிவாகியுள்ளது.இருவரும் பெரிய தலைவர்கள் மட்டுமல்ல;நல்ல மனிதாபிமானிகள்.
பிராமணர்களை 'ஆரியர்கள், வந்தேறிகள்' என்று பிரசாரம் நடந்தபோது
பாபாசாகேப்தான் "பிராமணர்கள் ஆரியர்கள் என்றால் தாழ்த்தப்பட்டவர்களும்
ஆரியர்களே! தாழ்த்தப்பட்டவர்கள் திராவிடர்கள் என்றால் பிராமணர்களும்
திராவிடர்களே" என்று ஆணித்தரமாகக் கூறியவர்.ஆரியப் படையெடுப்பு
என்ற ஆங்கிலேய விஷம சரித்திரத்தை ஆணித்தரமாக எதிர்த்தவர்களில்
முதல்வர் சுவாமி விவேகானந்தர். அடுத்தவர் பாபாசாகேப் அம்பேத்கர்தான்.
அதற்காக நான் பாபாசாகேபை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.இந்த விஷயத்தில் காந்திஜி கூட பாபா சாகேப் அளவுக்கு அழுத்தமாக தன் கருத்தைக் கூறவில்லை.
மேலும் பாபாசாகேபுக்கு தாழ்த்தப்பட்டவர்களை அப்ரஹாமிக் மதங்களுக்கு மாற்றம் செய்ய உதவும் படி எவ்வளவோ அழுத்தம் கொடுக்கப்பட்டது. எல்லாவகையிலும் அவருக்கு ஆசை காண்பிக்கப்பட்டது. ஆனால் நம் இந்திய கலாச்சரம், பண்பாடுகளின் மீது நம்பிக்கை வைத்த பாபாசாகேப், இந்திய மரபு வழி பெள‌த்த மதத்தையே தேர்ந்தெடுத்தார்.அதற்காக பாபா சாகேபுக்கு நாம் என்றென்றும் கடன் பட்டவர்களாவோம்.
காந்திஜியின் சமூக ஒற்றுமைக் கருத்துக்களை முன்னெடுக்க அனைவரையும்
அன்புடன் அழைக்கிறேன்.
இன்றைய சோதிடப்பாடம் நான் ஏற்கனவெ அறிந்தது என்றாலும் மீண்டும் நினைவு படுத்திய ஐயாவுக்கு நன்றி!./////

பொருளாதாரத்த த்டுமாற்றம், விஷமாக உள்ள விலைவாசி, பணப்பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளால், தற்போதைய சூழ்நிலையில் யாருக்குமே எதற்குமே நேரமில்லை! மக்களில் 75 சதவிகிதம் பேர் காந்திஜியையே மறந்துவிட்டார்கள். அவர் கூறிய சமூக ஒற்றுமைக் கருத்துக்களை மட்டும் எப்படி நினைவு வைத்திருக்கப்போகிறார்கள்?

SP.VR. SUBBAIYA said...

////Blogger Sanjai said...
நல்ல பாடம் ... காலை வணக்கம் :)////

உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Leo said...
kmr.krishnan said... 'சத்தியசோதனை' என்ற பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை அனபர்கள் படிக்க வேண்டுகிறேன்.திரு முருகன் அவர்கள் கூறிய கருத்துக்கு மாற்றுக் கருத்தை தஞ்சாவூர் பெரியவரும் நானும் வைத்துள்ளோம்.ஆர்வமுள்ள அனபர்கள் அதனை ஒட்டியும் வெட்டியும் வாத்தியார் அனுமதித்தால் சம்வாதம் செய்யலாம்.
Mister…Again STOP tricking people to get into Cast and Religion arguments.
Just leave your opinion about the article written by the Vathiyar.
First of all …Gopalan Sir's opinion was shared by Mr. Alasiyam.
Gopalan Sir did not represent himself in this issue, he did not put forth directly.... so do not link him here in this matter. We are people who have OUR own thinking capacity.
Learn the leadership shown by Mr. Gopalan, and respect others views, do not start an unnecessary cast system arguments again on this blog
(How do you feel when I criticize you? And remember this feeling is common to all)
Others have their rights to share their opinion about vathiyar's article too.
If you wish to discuss the religion, cast system and the other good for nothing issues …remember you have an option ...since this blog is not yours, please take your discussions to your blogs.
I am representing the Indians who wish not to hear rubbish discussions here on this blog again.
We are humans, we are Tamilians, we are Indians and we are the students of this class…and I hope you like this order of representing ourselves.
Dear vathiyar forgive me for my outburst, I usually respect others views ....but I thought enough is enough/////

இது வகுப்பறை. இங்கே இனம், ஜாதி, மதம், தனி மனித விருப்பு மற்றும் வெறுப்பிற்கெல்லாம் இடமில்லை. அனைவரும் இதைப் புரிந்து நடந்து கொண்டு தங்களுடைய மேலான ஒத்துழைப்பை வாத்தியாருக்கு நல்க வேண்டுகிறேன்.

SP.VR. SUBBAIYA said...

////Blogger eswari sekar said...
good morning sir////

உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...
This comment has been removed by the author.
SP.VR. SUBBAIYA said...

////Blogger zing zang said...
அது இஸ்டத்துக்கு வந்தால் தான் அது அதிர்ஷ்டம் என்பதுவும், பணம் வரும்போது நாம்தான் கொஞ்சம் இழுத்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். போகும் போது அதன் செலவு வேகத்தை அவ்வளவு எளிதில் தடைப் போட இயலாது என்று எனது வீட்டு பெரியவர்கள் சொன்னதை நினைவு கூறுகின்றது இன்றயப் பாடம்./////

ஆமாம் ஜிங் ஜாங்! (பெயரே இரண்டு பெக் சரக்கு அடித்ததைப் போல உற்சாகமாக இருக்கிறதே சுவாமி)

SP.VR. SUBBAIYA said...

////Blogger Shyam Prasad said...
1. ஆறாம் வீட்டு அதிபதியே ஒன்பதாம் வீட்டு அதிபதியாக இருப்பது (ஆறாம் வீடு - மிதுனம் , ஒன்பதாம் வீடு - கன்னி)
2. ஆறாம் வீட்டு அதிபதியே பதினொன்றாம் வீட்டு அதிபதியாக இருப்பது (ஆறாம் வீடு - ரிஷபம் , ஒன்பதாம் வீடு - துலாம் )
மேலே உள்ள அமைப்புகள் படி இருந்தால் , ஜாதகருடைய பலன்கள் எப்படி இருக்கும் ?
அஷ்டவர்க்கத்தில் அதன் அதிபதிகள் எவ்வாறு பலத்துடன் உள்ளார் என்று பார்க்க வேண்டுமா ?/////

சர்வாஷ்டகவர்க்கத்தில் அந்த வீடுகளும் எவ்வாறு இருக்கின்றன என்றும் பார்க்க வேண்டும்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
//(How do you feel when I criticize you? And remember this feeling is common to )//
நான் எந்தவிதத்திலும் புண்படவில்லை.விமர்சனங்கள் யாரைப்பற்றியும் யாரும் செய்யலாம்.
இது என்னுடைய பிளாக் அல்லதான்.இது உங்க‌ளுடைய பிளாகும் அல்ல என்பதை நினைவு படுத்துகிறேன்.உங்களுடைய த்வனி இது உங்களுடைய பிளாக் போல ஒலிக்கிறது. மொத்தத்தில் இது நம்முடைய பிளாக்.
திரு. முருகனுடைய பின்னூட்டம் வெளியிடப் பட்டதால்
மறுமொழி கொடுக்க வேண்டிவந்தது. 'வாத்தியார் அனுமதித்தால்' என்ற என்
வாசகத்தினை லியோ அவர்கள் குறித்துக்கொள்ள வேண்டுகிறேன்.
சாந்தமான சொற்களைப் பயன் படுத்தி சம்வாதம் செய்ய நாம் எப்போதுதான் பயிலப் போகிறோமோ?/////

இது வகுப்பறை. இங்கே இனம், ஜாதி, மதம், தனி மனித விருப்பு மற்றும் வெறுப்பிற்கெல்லாம் இடமில்லை. அனைவரும் இதைப் புரிந்து நடந்து கொண்டு தங்களுடைய மேலான ஒத்துழைப்பை வாத்தியாருக்கு நல்க வேண்டுகிறேன்.

SP.VR. SUBBAIYA said...

////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
நன்றி/////

உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி உதயகுமார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
http://www.gandhitoday.in/2012/10/blog-post.html#comment-form
'காந்தி இன்று' என்ற மேற்கண்ட‌ வலை தளத்தில் எனது 'காந்திஜியை முதன் முதலாக மகாத்மா என்று அழைத்தது யார்?' என்ற கட்டுரை 8 அக்டோபர் 2012 அன்று பிரசுரமாகியுள்ளது.
வகுப்பறை நண்பர்கள் வாசித்துப் பயனுற வேண்டுகிறேன்.////

தகவலுக்கு நன்றி. கிருஷ்ணன் சார்!

kmr.krishnan said...

/பொருளாதாரத் த‌டுமாற்றம், விஷமாக உள்ள விலைவாசி, பணப்பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளால், தற்போதைய சூழ்நிலையில் யாருக்குமே எதற்குமே நேரமில்லை! மக்களில் 75 சதவிகிதம் பேர் காந்திஜியையே மறந்துவிட்டார்கள். அவர் கூறிய சமூக ஒற்றுமைக் கருத்துக்களை மட்டும் எப்படி நினைவு வைத்திருக்கப்போகிறார்கள்?//

இன்று மேலைநாடுகளில் காந்திஜி பல பல்கலைக் கழகங்களில் மீள் வாசிப்புச் செய்யப்படுகிறார்."சிறியதே அழ்கானது" என்ற பொருளாதார தத்துவதை உலகுக்கு அளித்த ஷூமேகர் காந்திஜியின் கருத்துக்களால் தூண்டப்பட்டவரே.

எல்லாவற்றையும் மேலை நாடுகளில் இருந்து கற்றுக்கொள்வதுபோல காந்தியைப் பற்றியும் அவர்களே நமக்கு போதிக்கும் காலம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.