மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

1.10.12

Astrology யாருக்கு யார் யோககாரகன்?
Astrology யாருக்கு யார் யோககாரகன்?

ஜோதிடப் பாடம்

தேதி.1.10.2012

Key Points (தொடர் பகுதி)

யாருக்கு யார் யோககாரகன்?

யோகம் என்றால் அதிர்ஷ்டம் (Good Luck) என்று பொருள்படும். யோககாரகன் என்பதற்கு அதிர்ஷ்டத்தைக் கொடுப்பவன்

என்று பொருள் கொள்ளுங்கள். ஜாதகத்தில் கிரகங்கள் உச்சமாக இருப்பதைவிட, யோகத்தைக் கொடுக்ககூடிய கிரகம் உச்சமாக இருந்தால் பல நன்மைகள் ஏற்படும். அதுபோல யோககாரகன், ஆட்சி, கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும் பலவித நன்மைகள் உண்டாகும்

1. ரிஷப லக்கினத்திற்கு சனி யோககாரகன் (9 & 10ஆம் இடங்களுக்கு உரியவன்)

2. துலா லக்கினத்திற்கு சனி யோககாரகன் (4 & 5ஆம் இடங்களுக்கு உரியவன்)

3. கடக லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன் (5 & 10ஆம் இடங்களுக்கு உரியவன்)

4. சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன் (4 & 9ஆம் இடங்களுக்கு உரியவன்)

5. மகர லக்கினத்திற்கு சுக்கிரன் யோககாரகன் (5 & 10ஆம் இடங்களுக்கு உரியவன்)

6. கும்ப லக்கினத்திற்கு சுக்கிரன் யோககாரகன் (4 & 9ஆம் இடங்களுக்கு உரியவன்)

7. மேஷ லக்கினக்காரகளுக்கு சூரியனும், சந்திரனும் சேர்ந்திருந்தால் பலத்த யோகத்தைக் கொடுக்கக்கூடியவர்கள். அவர்கள் 4ஆம் வீடு & 5 ஆம் வீடுகளுக்கு அதிபதிகள். அதை நினைவில் வையுங்கள்.

8. விருச்சிக லக்கினக்காரர்களுக்கு சூரியனும், சந்திரனும் சேர்ந்திருந்தால் பலத்த யோகத்தைக் கொடுக்கக்கூடியவர்கள் அவர்கள் 9ஆம் வீடு & 10 ஆம் வீடுகளுக்கு அதிபதிகள். அதை நினைவில் வையுங்கள்.

9. தனுசு மற்றும் மீன லக்கினங்களுக்கு யோககாரகன் என்று தனியாக யாரும் கிடையாது. லக்கினாதிபதி குருவே யோககாரகன் வேலையையும் செய்வார். அவர் முதல் நிலை சுபக்கிரகம் அதை மனதில் வையுங்கள். அவர் ஜாதகத்தில் அம்சமாக இருந்தால் போதும். ஜாதகன் யோகங்களுடன் இருப்பான்.

10. மிதுனம் மற்றும் கன்னி லக்கினங்களுக்கும் தனியாக யோககாரகன் கிடையாது. லக்கினாதிபதி புதனே யோககாரகன் வேலையையும் செய்வார். அவர் வித்யாகாரகன். வித்தைகளுக்கு அதிபதி. அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் போதும். ஜாதகன் யோகங்களுடன் இருப்பான்.

இது மேல்நிலை வ்குப்பில் பதியப் பெற்ற பாடம். மற்றவர்களுக்கும் பயன் படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்

29 comments:

kmr.krishnan said...

நல்ல பாடம் அளித்ததற்கு நன்றி ஐயா!

9 வது குறிப்பில் சிறிது குழப்பம் உள்ளது ஐயா.கும்பம், மீனம் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

நாளை காந்தி ஜெயந்தியையை முன்னிட்டு http://www.gandhitoday.in/

என்ற வலைதளத்தில் அடியேனின் கட்டுரை ஒன்று வெளியிடப்படலாம்.அனபர்கள் அனைவரும் படித்து என்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

Baalaaji Ve said...

ஐயா அவர்களிடம் ஓர் சிறிய சந்தேகம்
மீன லக்னத்தின் யோககாரகன் யார் என்பது குறிப்பிடப்படவில்லையே.
மேலும் விருச்சிக லக்னத்தை எட்டாவது எண்ணில் ஒரு முறையும் மீண்டும் ஒன்பதாவதாக
மறு முறையும் குறிப்பிட பட்டிருக்கிறது. ஏதாவது சிறப்பு காரணம் உண்டா?
தயவு செய்து தெளிவு படுத்துங்கள்.
நன்றி
பாலாஜி த
8. விருச்சிக லக்கினக்காரர்களுக்கு சூரியனும், சந்திரனும் சேர்ந்திருந்தால் பலத்த யோகத்தைக் கொடுக்கக்கூடியவர்கள் அவர்கள் 9ஆம் வீடு & 10 ஆம் வீடுகளுக்கு அதிபதிகள். அதை நினைவில் வையுங்கள்.

9. தனுசு & விருச்சிக லக்கினத்திற்கு யோககாரகன் என்று தனியாக யாரும் கிடையாது. லக்கினாதிபதி குருவே யோககாரகன் வேலையையும் செய்வார். அவர் முதல் நிலை சுபக்கிரகம் அதை மனதில் வையுங்கள். அவர் ஜாதகத்தில் அம்சமாக இருந்தால் போதும். ஜாதகன் யோகங்களுடன் இருப்பான்.

saravanan said...

Respected Sir
Good morning and present sir

Regards
R.Saravanan

karthik said...

இன்றைய பதிவு அருமை ஐயா எங்களுக்கு யோககாரகன் நிங்கள் தான் ஐயா.

Shyam Prasad said...

மிக்க நன்றி

1. லக்னாதிபதியாக செவ்வாய் இருந்தால், சந்திரன் மற்றும் சூரியன் யோககாரகன்கள்.
2. சந்திரன் மற்றும் சூரியன் லக்னாதிபதியாக இருந்தால், செவ்வாய் யோககாரகன்.
3. லக்னாதிபதியாக சுக்ரன் இருந்தால், சனிஸ்வரன் யோககாரகன்.
4. லக்னாதிபதியாக சனிஸ்வரன் இருந்தால், சுக்ரன் யோககாரகன்.
5. லக்னாதிபதியாக புதன் இருந்தால் , புதனே யோககாரகன்.
6. லக்னாதிபதியாக குரு இருந்தால் , குருவே யோககாரகன்.

Bhuvaneshwar said...

காலை வணக்கம் ஐயா :)

Bhuvaneshwar said...

தனுசு மற்றும் மீன லக்கினத்துக்கு என இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன், ஐயா. தனுசு மற்றும் விருச்சிகம் என குறிப்பிட்டுள்ளீர்கள். நன்றி.

krishnababuvasudevan said...

In the 8th point viruzgalakkinam yogaggaran ,sun +moon ,in the 9th point there's no separate yogaggaran ,in the thunush ,viruzgalakkinam cannot understand please explain thanks

murugan said...

ஐயா வணக்கம்,

என்னுடைய பெண்டாட்டீ பெண்டு புள்ளே அனைவரும் மீனா லக்னம் யோகக்காரன் யாரென்று கூறவில்லை ஐயா,

கு ரா முருகன் பி‌எஸ்‌என்‌எல் சென்னை

Udhaya Kumar said...

குருவிற்க்கு வணக்கம்
லக்கினங்களுக்கு யோகக்கரன்
அருமைய்ன பாடம்,
குருவே இராசிக்கும் யோகக்கரன் இவர்க்ள்தனா
நன்றி

thanusu said...

மீன லக்னத்தைப்பற்றிய அச்சுப்பிழை குறிப்பிட வந்தேன், எனக்கும் முன்பாக கிருஷ்னன், பாலாஜி, முருகன், புவனேஷ்வர் ஆகியோரும் அதனையே குறிப்பிட்டுள்ளார்கள்,

Anu Ravi said...

Thank you for your lessons Sir. Pranaam to you. Anu Ravi

ஜி ஆலாசியம் said...

யோகக்காரன் பற்றியப் பாடத்திற்கு நன்றிகள் ஐயா!

SP.VR. SUBBAIYA said...

//////kmr.krishnan said...
நல்ல பாடம் அளித்ததற்கு நன்றி ஐயா!
9 வது குறிப்பில் சிறிது குழப்பம் உள்ளது ஐயா.கும்பம், மீனம் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
நாளை காந்தி ஜெயந்தியையை முன்னிட்டு http://www.gandhitoday.in/
என்ற வலைதளத்தில் அடியேனின் கட்டுரை ஒன்று வெளியிடப்படலாம்.அனபர்கள் அனைவரும் படித்து என்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.//////

கவலையை விடுங்கள். தேசபக்தர்களின் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு! பதிவில் உள்ள பிழையைத் திருத்தி விட்டேன். தூக்கக் கலக்கம். பதிவை வலை ஏற்றிய நேரத்தைப் பாருங்கள். இப்போது சரி செய்துவிட்டேன். மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Baalaaji Ve said...
ஐயா அவர்களிடம் ஓர் சிறிய சந்தேகம்
மீன லக்னத்தின் யோககாரகன் யார் என்பது குறிப்பிடப்படவில்லையே.
மேலும் விருச்சிக லக்னத்தை எட்டாவது எண்ணில் ஒரு முறையும் மீண்டும் ஒன்பதாவதாக
மறு முறையும் குறிப்பிட பட்டிருக்கிறது. ஏதாவது சிறப்பு காரணம் உண்டா?
தயவு செய்து தெளிவு படுத்துங்கள்.
நன்றி
பாலாஜி த//////

ஆமாம். தூக்கக் கலக்கம். பதிவை வலை ஏற்றிய நேரத்தைப் பாருங்கள். இப்போது சரி செய்துவிட்டேன். மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////saravanan said...
Respected Sir
Good morning and present sir
Regards
R.Saravanan/////

உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////karthik said...
இன்றைய பதிவு அருமை ஐயா எங்களுக்கு யோககாரகன் நிங்கள் தான் ஐயா.////

ஏதோ ஆரவக்கோளாறால் சொல்கிறீர்கள்! நான் பாடம் நடத்தும் வாத்தியார் அவ்வளவுதான்!

SP.VR. SUBBAIYA said...

/////Shyam Prasad said...
மிக்க நன்றி
1. லக்னாதிபதியாக செவ்வாய் இருந்தால், சந்திரன் மற்றும் சூரியன் யோககாரகன்கள்.
2. சந்திரன் மற்றும் சூரியன் லக்னாதிபதியாக இருந்தால், செவ்வாய் யோககாரகன்.
3. லக்னாதிபதியாக சுக்ரன் இருந்தால், சனிஸ்வரன் யோககாரகன்.
4. லக்னாதிபதியாக சனிஸ்வரன் இருந்தால், சுக்ரன் யோககாரகன்.
5. லக்னாதிபதியாக புதன் இருந்தால் , புதனே யோககாரகன்.
6. லக்னாதிபதியாக குரு இருந்தால் , குருவே யோககாரகன்.//////

கரெக்ட். இப்ப்டிப் பிரித்து வைத்துக்கொண்டால், படிப்பதற்கும் நினைவில் வைத்துக்கொள்ளவும் வசதியாக இருக்கும்! நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///Bhuvaneshwar said...
காலை வணக்கம் ஐயா :)

உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...

///// Bhuvaneshwar said...
தனுசு மற்றும் மீன லக்கினத்துக்கு என இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன், ஐயா. தனுசு மற்றும் விருச்சிகம் என குறிப்பிட்டுள்ளீர்கள். நன்றி.

ஆமாம். தூக்கக் கலக்கம். பதிவை வலை ஏற்றிய நேரத்தைப் பாருங்கள். இப்போது சரி செய்துவிட்டேன். மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////krishnababuvasudevan said...
In the 8th point viruzgalakkinam yogaggaran ,sun +moon ,in the 9th point there's no separate yogaggaran ,in the thunush ,viruzgalakkinam cannot understand please explain thanks /////

ஷ்யாம் பிரசாத் அவர்களின் பின்னூட்டத்தைப் படியுங்கள் நன்றாகப் புரியும்!

SP.VR. SUBBAIYA said...

/////murugan said...
ஐயா வணக்கம்,
என்னுடைய பெண்டாட்டீ பெண்டு புள்ளே அனைவரும் மீனா லக்னம் யோகக்காரன் யாரென்று கூறவில்லை ஐயா,
கு ரா முருகன் பி‌எஸ்‌என்‌எல் சென்னை/////

முருகன் என்ற பெயரை வைத்துக்கொண்டு வீட்டிற்க்காக கவலைப் படுகிறீர்களே? அவர்களுக்கு லக்கினாதிபதி குருதான் யோககாரகன். பதிவில் திருத்தம் செய்துள்ளேன் சாமி!

SP.VR. SUBBAIYA said...

////Udhaya Kumar said...
குருவிற்க்கு வணக்கம்
லக்கினங்களுக்கு யோகக்கரன்
அருமைய்ன பாடம்,
குருவே இராசிக்கும் யோகக்கரன் இவர்க்ள்தனா
நன்றி//////

ராசிக்கெல்லாம் கோள்சாரத்தைத் தவிர தனியாக வேறு கிடையாது சாமி!

SP.VR. SUBBAIYA said...

////thanusu said...
மீன லக்னத்தைப்பற்றிய அச்சுப்பிழை குறிப்பிட வந்தேன், எனக்கும் முன்பாக கிருஷ்னன், பாலாஜி, முருகன், புவனேஷ்வர் ஆகியோரும் அதனையே குறிப்பிட்டுள்ளார்கள்,/////

ஆமாம். தூக்கக் கலக்கம். பதிவை வலை ஏற்றிய நேரத்தைப் பாருங்கள். இப்போது சரி செய்துவிட்டேன்.

SP.VR. SUBBAIYA said...

///////Anu Ravi said...
Thank you for your lessons Sir. Pranaam to you. Anu Ravi///////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

அய்யர் said...

யோகம்.. அது வேண்டி சிலர் செய்வதோ
யாகம்.. எது எப்படியோ..

பச்சை கல்லை உடைய புதனே நமக்கு..
பத்தாமதிபதி கதிர் உடன்..

தங்களின் உண்மையான SINCERITYக்கு
தலை வணங்குகிறோம்..

நாள் ஒன்றுக்கு டீ காபியை தவிர்த்து
நாளும் GREEN TEA சாப்பிடுங்கள்..

தென்பும் புதிதாய் வரும் (உடலுக்கு)
வம்பும் எதுவும் வராது

kavinsandron said...

வணக்கம்,

நன்றி ஐயா!

kavinsandron said...

வணக்கம்,

நன்றி ஐயா!