மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

3.10.12

Astrology - Popcorn Post ராசி எத்தனை ராசியடா?

Astrology - Popcorn Post ராசி எத்தனை ராசியடா?

Popcorn Post No.27
பாப்கார்ன் பதிவுகள் - எண்.27

தேதி 3.10.2012 புதன் கிழமை
-----------------------------
நெருப்பு ராசிகள் (Fire)
மேஷம், சிம்மம், தனுசு Aries, Leo, Sagittarius ஆகியவை நெருப்பு ராசிகள் எனப்படும். இந்த மூன்று ராசிகளில் ஏதாவது ஒன்றைச் சேரந்தவர்கள் - அதாவது லக்கினமாகப் பெற்றவர்கள் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவ்ய்ம், துணிச்சல் மிக்கவர்களாகவும், சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பவர்களாகவும் இருப்பார்கள். தலைமை தாங்கும் வல்லமை படைத்தவர்களாகவும் இருப்பார்கள்

நெருப்புராசியை ஜீவனமாகப் பெற்றவர்கள் (அதாவது 10ம் வீடாகப் பெற்றவர்கள்) நெருப்பு சம்மந்தப்பட்ட தொழிலில் இருக்கும் வாய்ப்பு உண்டு.
------------------------------
நில ராசிகள்:(Earth)
ரிஷபம்,கன்னி, மகரம்  Taurus, Virgo Capricorn, ஆகியவை மூன்றும் நில ராசிகள் எனப்படும். இந்த ராசியை லக்கினமாகப் பெற்றவர்கள் மிகவும் நிதானமாகச் செயல்படக் கூடியவர்களாகவும், எதையும் யதார்த்தமாக எடுத்துக் கொள்பவர்களாகவும் இருப்பார்கள். Take it easy policy காரர்கள். சிக்கனவாதிகள். இவர்களிடம் காசு கேட்டு வாங்குவதற்குள் அடுத்தவனுக்குப் பிராணன் போய்விடும் வாய்ப்பு உண்டு:-))) உப்புப் பெறாத சின்ன விஷயங்களுக்குக்கூட கவலை கொள்ளக்கூடியவர்கள்.

பத்தாம் வீடு  நில ராசியாக வந்தால் நிலம், கட்டிடம் சம்மந்தமான தொழில்கள், வேலைகள், விவசாயம் ஆகியவை நல்ல பலன்களைத் தரும்.
------------------------------------------
காற்று ராசிகள் :(Air) 
துலாம், கும்பம், மிதுனம், Libra, Aquarius, Gemini ஆகியவைகள் காற்று ராசிகள்எனப்படும். நிறைவான, நல்ல குணங்களை உடையவர்கள் இவர்கள். புத்திசாலிகள். ஆர்வம் மிகுந்தவர்கள்.

பத்தாம் வீடு காற்று ராசியாக இருந்தால், ஜாதகன் கணக்காய்வாளர், வழக்குரைஞர், ஆசிரியர் போன்ற தொழில்களைச் செய்தால் வெற்றி பெறலாம். மேன்மையடையலாம்.
--------------------------------------
ஜலராசிகள்:(Water)
கடகம், விருச்சிகம், மீனம் Cancer, Scorpio, Pisces ஆகியவைகள் ஜலராசிகளாகும்  இந்த ராசிக்காரர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் உடையவர்கள். கற்பனை வளம் உடையவர்கள். எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர்கள்.

ஜலராசி 10-வது வீடாக வந்தால் தண்ணீர் சம்மந்தப்பட்ட தொழில் அமையும் வாய்ப்பு உண்டு. குளிர் பானங்கள், துணிமணி சம்மந்தப்பட்ட தொழில், கப்பல் சம்மந்தப் பட்ட தொழில் ஆகியவறறில் ஒன்றைச் செய்தால், சிறப்பாகச் செய்து பொருள் ஈட்டக்கூடியவர்கள்
----------------------------------------
இதில் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்கள் எல்லாம் பொது விதிகள். உங்களுக்கு அப்படி அமையவில்லை என்றால், ஜாதகப்படி அதற்கு வேறு காரண காரியங்கள் இருக்கும். ஆகவே குழப்பம் அடைந்து, மண்டையைப் பிய்த்துக்கொண்டு பின்னூட்டம் இடுவதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

19 comments:

saravanan said...

Respected sir
Good morning sir and thanks a lot for your kind lesson.

With Regards
R.Saravanan

ஜி ஆலாசியம் said...

/////நெருப்பு ராசிகள் (Fire)
மேஷம், சிம்மம், தனுசு Aries, Leo, Sagittarius ஆகியவை நெருப்பு ராசிகள் எனப்படும். இந்த மூன்று ராசிகளில் ஏதாவது ஒன்றைச் சேரந்தவர்கள் - அதாவது லக்கினமாகப் பெற்றவர்கள் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவ்ய்ம், துணிச்சல் மிக்கவர்களாகவும், சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பவர்களாகவும் இருப்பார்கள். தலைமை தாங்கும் வல்லமை படைத்தவர்களாகவும் இருப்பார்கள்///

நான் மேஷ ராசி, தனுசு லக்னம்... இந்தக் குணங்கள் இருப்பதாகவே உணர்கிறேன்.

பாடத்திற்கு நன்றிகள் ஐயா!

அய்யர் said...

நிலத்தை சேர்ந்தவர்கள் நாம்
நிதானமாகவே செயல்படுகிறோம்

டேக்இட் பாலிசி தான் என்றாலும்
உப்பு பற்றி சொன்னது தான் உரசுகிறது

அஞ்சாவது எங்கே... துறை ஒதுக்காத
அது தான் ஆகாயமோ.. இருக்கட்டும்

அடுத்த கோப்பை பாப்கார்கானுக்காக
ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

Udhaya Kumar said...

குருவிற்க்கு வணக்கம்
நன்றி

krishnar said...

எனக்கும் தம்பி ஆலாச்சியம் போலவே மேடராசி தனுசு லக்கினம்.ஆனால் என்னிடம் தற்துணிபு இல்லை.மற்றவர்கட்கு பின்னாலே நிற்பதேயன்றி தரப்பட்ட தலைமையையும் ஏற்பதில்லை.துணிவு இல்லை.

ஜி ஆலாசியம் said...

////krishnar said...
எனக்கும் தம்பி ஆலாச்சியம் போலவே மேடராசி தனுசு லக்கினம்.ஆனால் என்னிடம் தற்துணிபு இல்லை.மற்றவர்கட்கு பின்னாலே நிற்பதேயன்றி தரப்பட்ட தலைமையையும் ஏற்பதில்லை.துணிவு இல்லை.////

அண்ணா! அதற்கு வேறுசில அமைப்பும் கை கொடுத்தது என்று நம்புகிறேன்..

வளர்பிறைச் சந்திரன் ஐந்தில் அவனின் மீது பரஸ்பரமாக குருவும், சுக்கிரனும் ஏழாம் பார்வையை செலுத்துகிறார்கள்.

சந்திரன் இருக்கும் வீட்டுக் காரன் செவ்வாய் உச்சம் பெற்று சந்திரனையும் பார்க்கிறான்.

மேலும் சந்திரன் இருப்பதோ நீசச் சனியோடு அவன் சந்திரனுக்கு கண்டிப்பானக் குணத்தையும் தருகிறான்..

இரண்டில் உச்ச செவ்வாய் (ராசியாதிபதி நல்ல நிலையில் இருக்கிறான்) மூன்றில் ராகு.

தைரியமும், கண்டிப்பும் இருப்பதும் மூன்றில் ராகு இருப்பதும். இன்னும் கண்டிப்பு மேலிட்டு நெருங்கிய நண்பர்கள் கூட்டம் என்பது இல்லை.

(அர்த்தமற்ற பேச்சு, பொழுது போக்கு, வெள்ளியானால் சுக்ரபுரி போவது என்பவைகளும் இயற்கையில் நாட்டம் இல்லாததும் ஒரு காரணமாகலாம் / அல்லது மேஷ ராசிக்கான இப்படி வெளிப்படையாகப் பேசும் குணமும் ஒருக்காரணமாக இருக்கலாம்.

லக்னாதிபதி குரு பதினொன்றில் வர்கோத்தமம். சந்திரன் திக் பலம் நிறைந்தும் இருக்கிறான்.
அதனால் அப்பண்புகள் இருக்கும் என நான் நம்புகிறேன்.

வாத்தியார் சொன்னது போல் பொதுவான பலன் என்றாலும் ஜாதகத்தில் மற்றவைகள் ஒத்துப் போக வேண்டும். எனக்கு ஒத்துப் போகிறது என்று நினைக்கிறேன்.

kmr.krishnan said...

நெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகளை அறிந்தோம்.மிக்க மகிழ்ச்சி.நன்றி.

வான‌த்திற்கு ஏன் ராசிகள் இல்லை என்று ஐயர் கேட்டுள்ளது சிந்திக்க வைக்கிறது.

ஐந்து பூதங்களில் வானத்திற்கு எல்லையே இல்லை. மற்ற நான்கையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.நெருப்பை உண்டாக்கவும் அணைக்கவும் முடியும்.பரவாமல் தடுக்க முடியும். காற்றினை பலூனில் அடைக்க முடியும்.நம் தேவைக்குத் தகுந்தபடி பயன் படுத்தமுடியும். சில இடங்களில் காற்றே இல்லாத சூழல் கூட உண்டாம்.நிலத்தை வேலியிட்டு சொந்தம் கொண்டாடமுடியும்.நீரும் நமக்குக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதுதான்.ஆகவே வான் ஒன்றுதான் நம் கட்டுக்குள் வராதது. நம்மிலிருந்து தனித்து இருப்பது. சம்பந்தம் செய்து கொள்ளாதது. எனவே வானுக்கு சோதிடத்தில் இடம் அளிக்கவில்லை.மற்ற நான்கினாலும் ஏற்படும் ஏமாற்றங்களுக்கு மாற்றம் கொடுப்பது வான். மற்ற நான்கும் இயங்குவது வானில்தான். வான் திரையைப்போல. மற்ற நான்கும் தங்கள் ஆட்டங்களை வான் திரையில்தான் நிகழ்த்தும்.

வானுக்கு ராசி அமைப்பது திருநெல்வேலிக்கே அல்வா கொடுப்பது போல.ananth said...

எனக்கு 10ம் இடம் மிதுனம். இங்கே குறிப்பிட்ட தொழில் அதுவாகவே அமைந்து விட்டது.

murugan said...

வணக்கம் ஐயா,

வான்,வெட்டவெளி,ஆனந்தம்,பிரம்மம்,எதனிலும்,ஒட்டாத அணு, ஆகியவற்றில் ஜாதகம், என்கின்ற விஞ்ஞானம் அடங்காது . இதற்கு மேலும் பலவிழயங்கள் உள்ளன
குரு பின்னால் விளக்குவார் என எதிர்பாற்போம்,

கு ரா முருகன்

SP.VR. SUBBAIYA said...

///// saravanan said...
Respected sir
Good morning sir and thanks a lot for your kind lesson.
With Regards
R.Saravanan/////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///// ஜி ஆலாசியம் said...
/////நெருப்பு ராசிகள் (Fire)
மேஷம், சிம்மம், தனுசு Aries, Leo, Sagittarius ஆகியவை நெருப்பு ராசிகள் எனப்படும். இந்த மூன்று ராசிகளில் ஏதாவது ஒன்றைச் சேரந்தவர்கள் - அதாவது லக்கினமாகப் பெற்றவர்கள் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவ்ய்ம், துணிச்சல் மிக்கவர்களாகவும், சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பவர்களாகவும் இருப்பார்கள். தலைமை தாங்கும் வல்லமை படைத்தவர்களாகவும் இருப்பார்கள்///
நான் மேஷ ராசி, தனுசு லக்னம்... இந்தக் குணங்கள் இருப்பதாகவே உணர்கிறேன்.
பாடத்திற்கு நன்றிகள் ஐயா!/////

உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆலாசியம்!!

SP.VR. SUBBAIYA said...

///அய்யர் said...
நிலத்தை சேர்ந்தவர்கள் நாம்
நிதானமாகவே செயல்படுகிறோம்
டேக்இட் பாலிசி தான் என்றாலும்
உப்பு பற்றி சொன்னது தான் உரசுகிறது
அஞ்சாவது எங்கே... துறை ஒதுக்காத
அது தான் ஆகாயமோ.. இருக்கட்டும்
அடுத்த கோப்பை பாப்கார்கானுக்காக
ஆவலுடன் காத்திருக்கின்றோம்.//////

நல்லது. நன்றி விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

///// Udhaya Kumar said...
குருவிற்க்கு வணக்கம்
நன்றி/////

உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி உதயகுமார்!

SP.VR. SUBBAIYA said...

/// krishnar said...
எனக்கும் தம்பி ஆலாச்சியம் போலவே மேடராசி தனுசு லக்கினம்.ஆனால் என்னிடம் தற்துணிபு இல்லை.மற்றவர்கட்கு பின்னாலே நிற்பதேயன்றி தரப்பட்ட தலைமையையும் ஏற்பதில்லை.துணிவு இல்லை.////

பொதுவிதிகளில் சில இவ்வாறு பொருந்தாமல் நிற்கும். உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//// ஜி ஆலாசியம் said...
////krishnar said...
எனக்கும் தம்பி ஆலாச்சியம் போலவே மேடராசி தனுசு லக்கினம்.ஆனால் என்னிடம் தற்துணிபு இல்லை.மற்றவர்கட்கு பின்னாலே நிற்பதேயன்றி தரப்பட்ட தலைமையையும் ஏற்பதில்லை.துணிவு இல்லை.////
அண்ணா! அதற்கு வேறுசில அமைப்பும் கை கொடுத்தது என்று நம்புகிறேன்..
வளர்பிறைச் சந்திரன் ஐந்தில் அவனின் மீது பரஸ்பரமாக குருவும், சுக்கிரனும் ஏழாம் பார்வையை செலுத்துகிறார்கள்.
சந்திரன் இருக்கும் வீட்டுக் காரன் செவ்வாய் உச்சம் பெற்று சந்திரனையும் பார்க்கிறான்.
மேலும் சந்திரன் இருப்பதோ நீசச் சனியோடு அவன் சந்திரனுக்கு கண்டிப்பானக் குணத்தையும் தருகிறான்..
இரண்டில் உச்ச செவ்வாய் (ராசியாதிபதி நல்ல நிலையில் இருக்கிறான்) மூன்றில் ராகு.
தைரியமும், கண்டிப்பும் இருப்பதும் மூன்றில் ராகு இருப்பதும். இன்னும் கண்டிப்பு மேலிட்டு நெருங்கிய நண்பர்கள் கூட்டம் என்பது இல்லை
(அர்த்தமற்ற பேச்சு, பொழுது போக்கு, வெள்ளியானால் சுக்ரபுரி போவது என்பவைகளும் இயற்கையில் நாட்டம் இல்லாததும் ஒரு காரணமாகலாம் / அல்லது மேஷ ராசிக்கான இப்படி வெளிப்படையாகப் பேசும் குணமும் ஒருக்காரணமாக இருக்கலாம்.
லக்னாதிபதி குரு பதினொன்றில் வர்கோத்தமம். சந்திரன் திக் பலம் நிறைந்தும் இருக்கிறான்.
அதனால் அப்பண்புகள் இருக்கும் என நான் நம்புகிறேன்.
வாத்தியார் சொன்னது போல் பொதுவான பலன் என்றாலும் ஜாதகத்தில் மற்றவைகள் ஒத்துப் போக வேண்டும். எனக்கு ஒத்துப் போகிறது என்று நினைக்கிறேன்.//////

உங்களின் விளக்கத்திற்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

//// kmr.krishnan said...
நெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகளை அறிந்தோம்.மிக்க மகிழ்ச்சி.நன்றி.
வான‌த்திற்கு ஏன் ராசிகள் இல்லை என்று ஐயர் கேட்டுள்ளது சிந்திக்க வைக்கிறது.
ஐந்து பூதங்களில் வானத்திற்கு எல்லையே இல்லை. மற்ற நான்கையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.நெருப்பை உண்டாக்கவும் அணைக்கவும் முடியும்.பரவாமல் தடுக்க முடியும். காற்றினை பலூனில் அடைக்க முடியும்.நம் தேவைக்குத் தகுந்தபடி பயன் படுத்தமுடியும். சில இடங்களில் காற்றே இல்லாத சூழல் கூட உண்டாம்.நிலத்தை வேலியிட்டு சொந்தம் கொண்டாடமுடியும்.நீரும் நமக்குக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதுதான்.ஆகவே வான் ஒன்றுதான் நம் கட்டுக்குள் வராதது. நம்மிலிருந்து தனித்து இருப்பது. சம்பந்தம் செய்து கொள்ளாதது. எனவே வானுக்கு சோதிடத்தில் இடம் அளிக்கவில்லை.மற்ற நான்கினாலும் ஏற்படும் ஏமாற்றங்களுக்கு மாற்றம் கொடுப்பது வான். மற்ற நான்கும் இயங்குவது வானில்தான். வான் திரையைப்போல. மற்ற நான்கும் தங்கள் ஆட்டங்களை வான் திரையில்தான் நிகழ்த்தும்.
வானுக்கு ராசி அமைப்பது திருநெல்வேலிக்கே அல்வா கொடுப்பது போல.////

மதுரை மீனாட்சிக்கே மல்லிகைபூவைக் கொடுப்பதைப்போல! உங்களின் விளக்கத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

///// ananth said...
எனக்கு 10ம் இடம் மிதுனம். இங்கே குறிப்பிட்ட தொழில் அதுவாகவே அமைந்து விட்டது./////

உங்களுக்குப் பெரும்பாலும் எல்லாம் அப்படித்தான் அமைகிறது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!

SP.VR. SUBBAIYA said...

//// murugan said...
வணக்கம் ஐயா,
வான்,வெட்டவெளி,ஆனந்தம்,பிரம்மம்,எதனிலும்,ஒட்டாத அணு, ஆகியவற்றில் ஜாதகம், என்கின்ற விஞ்ஞானம் அடங்காது . இதற்கு மேலும் பலவிஷ்யங்கள் உள்ளன
குரு பின்னால் விளக்குவார் என எதிர்பார்போம்,
கு ரா முருகன்/////

பிரபஞ்சமே வானில்தான் இயங்குகிறது. அதனால் வானம் இதில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை!

Navaneetha Giri Gurukkal said...

அற்புதமான விளக்கங்கள் ரொம்ப நன்றி வாத்தியாரே