மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

5.10.12

சிங்காரவேலனே தேவா - அருள் சீராடும் மார்போடு வாவா!
சிங்காரவேலனே தேவா - அருள் சீராடும் மார்போடு வாவா!

பக்தி மலர்
-----------------------------------------
50 ஆண்டுகளுக்கு முன்பு ’கொஞ்சும் சலங்கை’ என்னும் திரைப் படத்தில், திருமதி ஜானகி அவர்கள் த்ன் கொஞ்சும் குரலால சிங்கார வேலனை அழைத்துப் பாடி நம்மைப் பரவசப்படுத்தினார். அதே பாடலைச் சின்னஞ் சிறு சிட்டு ஒன்று தன் இனிய குரலால் பாடுவதை இன்று வலை ஏற்றியுள்ளேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------
பாடல்
சிங்காரவேலனே தேவா
படம்
கொஞ்சும் சலங்கை (1962)  
பாடியவர்
S.ஜானகி  
இசையமைப்பாளர்
S.M.சுப்பையா நாயுடு  
பாடலை இயற்றியவர்
கு.மா. பாலசுப்ரமணியம்
---------------------------------------

சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா - திருச்
செந்தூரில் நின்றாடும் தேவா - முல்லைச்
சிரிப்போடும் முகத்தோடும் வாவா!

செந்தமிழ்த் தேவனே சீலா - விண்ணோர்
சிறைமீட்டுக் குறை தீர்த்த வேலா
சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா! 
++++++++++++++++++++++++++++++++++
பாடலின் கானொளி
our sincere thanks to the person who uploaded the video clipping in the net
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


பெட்டியில் செல்வத்தை மறைத்து வைத்ததில்லை!!

விளையாட்டுப் பிள்ளையும் பறிக்கப் பலாமரம்
      வேரிற் பழுத்த தேபோல்
        விரும்பினாற் சமைக்கின்ற விதத்திதிலே கோழிகள்
      வீட்டினில் வளர்வ தேபோல்
வளையலார் கைக்கென்று வாரத்தில் முழுதாக
      வளர்கின்ற கீரை யேபோல்
        வருவார்கள் உண்ணவே உணவுடன் என்னையும்
      வைத்த தல்லாமல் உலகில்
வளங் கொண்ட செல்வத்தைப் பெட்டியில் மறைவாக
      வைத்ததே என்று மிலையே!
         மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
      மதுரைமீ னாட்சி உமையே!
                   - கவியரசர் கண்ணதாசன்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=========

11 comments:

saravanan said...

அன்புள்ள அய்யாவுக்கு
காலை வணக்கங்கள்
சிங்காரவேலனே தேவா என்ற இந்த பாடல்தான் பின்னணி பாடகி S.ஜானகி அவர்கள் பாடிய
முதல் திரைப்பட பாடல். நாதஸ்வரம் தனியாகவும் ஜானகியம்மாவின் குரல் தனித்தனியாக ஒலிப்பதிவு
செய்யப்பட்டு பின் இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டது.கானொளியில் காணுகிற மற்றும் பாடுகிற அந்த குழந்தையின் பெயர்
அல்கா.....விஜய் டிவியில் airtel junior super singer final லில் பாடி முதல் பரிசு பெற்ற பாடலின் நிகழ்ச்சிதான் அது.
நெகிழ்ச்சியும் கூட...பாருங்கள் ...அந்த குரலில் உள்ள சுத்தமான ஏற்றமும் இரக்கமும் , நெளிவும், சுளிவும்....அற்புதம்.
அத்தனை பின்னணி பாடகர்களையும் எழுந்து நின்று ஆர்ற்பரிக்க செய்த குரல் அந்த பெண்ணின் குரல்.
அல்கா இப்பொழுது திரைப்படங்களில் பின்னணி பாட துவங்கி இருக்கிறார்.
திருச்செந்தூர் முருகன் எத்தனை பேரை உச்சிக்கு கொண்டு போகிறான் பாருங்கள் ....
அன்புடன்
ரா.சரவணன்

kmr.krishnan said...

சலங்கை கொஞ்சுவதுபோலவே ஊல்லகுரலில் அமைந்த பாடலில் சிங்காரவேலனைக் கண்டு/கேட்டு இன்புற்றேன்.நன்றி ஐயா!

கவியரசர் பாடல் அறுசீர் கழிநெடிலடி ஆசிரியப்பா என்ற இலக்கணம் சரியா என்று கவிதை இலக்கணம் தெரிந்தவர்கள் கூறவும். இந்தப்பாடலில் கோழிதான் என்னைக் கொஞ்சம் கொத்திவிட்டது. :‍‍) :)

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
அருமையாக உள்ளது
நன்றி

Parvathy Ramachandran said...

திரை இசைப்பாடல்களில், பாடுவதற்கு மிகக் கடினமான பாடல்களில் ஒன்றாக இருக்கும் அற்புதப்பாடலே, 'சிங்கார வேலனே தேவா'. அருமையான ஆபேரி ராகப் பாடல். இசை மேதை, காருகுறிச்சி அருணாசலத்தின் அநாயாசமான வாசிப்பும், திருமதி.எஸ்.ஜானகியின் குரலில், ஸ்வரங்கள் கொஞ்சி விளையாடுவதும் அதி அற்புதம். ஆபேரியே அழகானதொரு ராகம். முருகனை அன்போடு அழைப்பதிலும் சரி, 'இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை'(திருவிளையாடல்) என்று உள்ளத்தை உருக்குவதிலும் சரி. காணொளியில் பாடுவது, தற்போது திரையிசையில் வளர்ந்து வரும் பாடகியான, செல்வி. அல்கா.

கவியரசரின் மிக அருமையானதொரு பாடலை படிக்கத் தந்தமைக்கு நன்றி. குறிப்பாக,

//வருவார்கள் உண்ணவே உணவுடன் என்னையும்
வைத்த தல்லாமல் உலகில்
வளங் கொண்ட செல்வத்தைப் பெட்டியில் மறைவாக
வைத்ததே என்று மிலையே!//

கவியரசரின் உன்னத குணத்தைப் பறைசாற்றுகிறது. நல்லதொரு பதிவுக்கு மிக்க நன்றி ஐயா.

ஜி ஆலாசியம் said...

பிரமாதம் அருமை அசத்தி விட்டாள் அந்தப் பெண்.
ரோமங்கள் சிலிர்க்க கண்கள் பனித்தன ஐயா!

அங்கே ஒரு அம்மா கண்களை மூடிய நிலையில் முருகனின் சிந்தனையிலே மூழ்கி
இருந்ததையும் காண முடிந்தது. அவர் அந்தப் பெண்ணின் தாயாக இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

எதார்த்தத்தை எளிதாகச் சொல்வதில் வல்லவர் கவிஞர் அதனாலே அவர் கவியரசர்.

''சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா - திருச்
செந்தூரில் நின்றாடும் தேவா - முல்லைச்
சிரிப்போடும் முகத்தோடும் வாவா!

செந்தமிழ்த் தேவனே சீலா - விண்ணோர்
சிறைமீட்டுக் குறை தீர்த்த வேலா
சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா!''

அப்பன் முருகனின் பாதம் பணிந்து எனது கவிதையை திருசென்தூரானுக்கு சமர்பிக்கிறேன்.

வில்லேந்தி கரிமேலேறி போரிட்ட குகனே
சொல்லேந்தி வரிகள்மேவி கவிபாடிடும்
பிள்ளை யான் உனைக்கண்டு மகிழவே
வள்ளி தெய்வானையோடு வாவா!

கடலலைச் சத்தமும் திருக் கோவில்
கவின்மிகுத் தோற்றமும் நெஞ்சை அள்ளும்
காவடி ஆட்டமும் உன்புகழ் பாடும் கானமும்
கண்டுமகிழவே கந்தாநீ வாவா!

கதிர்வேலா நீவந்தால் கதிரவனும் ஒளிகுன்றி
பொங்கியெழும் கடலுக்குள் மூழ்காதோ அதுவரையில்
கடுந்தவம் புரிந்தக்கயல்களும் நினைக்கண்டு மகிழாதோ
கடம்பனே அதனாலேநீ வாவா!

தேடி அலையும் எந்தன் உயிருக்கு
தேனினும் இனிய திகட்டாதத் தெள்ளமுதே
தேவர் குறைதீர்த்த தேவா பக்தர்குறை
தீர்க்க ஓடோடி வாவா!

அருமையானப் பதிவு பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

Thanjavooraan said...

செல்வி அல்கா எனும் சிறுமி ஜூனியர் சிங்கர் நிகழ்ச்சியில் விஜய் டி.வியில் தொடக்கம் முதலே அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வந்தார். ஜானகி அவர்களின் இந்தப் பாடலை அவர் பாடியபோது, கண்களை மூடிக்கொண்டு கேட்டவர்களுக்கு ஜானகியே பாடுவதாகத்தான் உணரமுடிந்தது என்றால், அந்தச் சிறுமியின் திறமையை என்னென்று சொல்வது. இறைவன் அந்தப் பெண்ணுக்கு அளித்த வரம் அது. எல்லா பெருமைகளோடும் அந்தப் பெண் புகழின் உச்சிக்குச் சென்று நீடூழி வாழட்டும்.

அய்யர் said...

நல்ல வேளை..
இந்த பாடல் REMIX என்ற பாணியில் வராது போனது..(ம்..ம்..)

அது கையில் போகாத பூமாலையாக அமைந்தமைக்கு மகிழ்ச்சி

பதிவில் கோ(சே)ர்த்த வாத்தியாருக்கு நன்றியை
பறைசாற்றும் மாணவர்கள் வரிசையில்

அய்யர்

அய்யர் said...

பெட்டி
செல்(ல)வம்
மறைத்தல்
வைத்தல்
இல்லை..

விளையாட்டு
பிள்ளை
பலாமரம்
கோழி

பட்டியல் தான் நீளுகிறது.. கவிஞரின் ஓட்டத்தில்
பாட்டின் பொருள் புரியவில்லை

அய்யர் said...

நவம்பர் 14 வரையில்
இந்த படம் தானா..

ஜி..
ஆ(னந்த).. முருகா..
அடுத்தது எங்கே..

அய்யர் said...

"உன்
இசையென்னும்
இன்ப வெள்ளத்தில்"

என்ற அன்றைய வசனத்தை
மீண்டும் சொல்ல வைத்தது..

இந்த
"தேனோடு கலந்த தெள்ளமுது"

எமது இல்லத்தில் தொலைகாட்சி பெட்டி இல்லை.. அதனால் தஞ்சை தோழர் சொன்ன அந்த நிகழ்ச்சியினை பார்க்கும் வாய்ப்பு இல்லை..

இங்கு
இன்னொரு முறை
அந்த குரலினை கேட்டோம் ..

கொஞ்சம் மளையாள வாசனை வந்தாலும் குரலினிமை இனிக்க வைத்தது..

வாழ்க..வாழ்க..

Bhuvaneshwar said...

இங்க பாருங்கப்பா..... கண்ணதாசன் சார் காமெடி பண்றாரு! (நகைச்சுவை உணர்வோடு படிப்பவர்களுக்கு மட்டும் இந்த பின்னூட்டம். சீரியசாகி சீனைப்போடுபவர்களுக்கு அல்ல, அல்ல, அல்ல)

சக்கப்பழம் (பலாப்பழம்) வேரிலே பழுக்குதாம், அதை விளையாட்டுப்பிள்ளை பறிக்குதாம். ஏங்க, என் வீட்டுக்கு பின்னாலும் விளையிலே மூன்று பலா மரங்கள் அனாமத்தாக காய்க்கும்! ஓரளவுக்கு புஜபல பராக்கிரமம் கொண்ட என்னாலேயே (ஹி ஹி ஹி) நன்றாக பழுத்த சக்கப்பழத்தினை ஒத்தையிலே பறிக்க இயலாது. வெட்டுக்கத்தி கொண்டு வெட்டி தான் மரத்தில் இருந்து எடுக்க முடியும். இங்க பச்சபுள்ள பலாபழம் பறிக்குதாம். (அவர் பழுப்பது குறித்து சொல்லுவதால் பழத்தை சொன்னேன்). பழத்தின் காம்பு மட்டும் இரு அங்குல தடிமன் போல இருக்கும், ஆமாம். நானும் கவிஞன் என்பதால் பொய்யழகை ரசிக்கிறேன். :))))

பழுக்காத சின்ன காயை வேண்டுமானால் கொஞ்சம் அப்படி இப்படி ஆட்டி பறிக்கலாம், சுளை உரிக்கலாம்..... பின் பொரிக்கலாம்.... பின் கொறிக்கலாம் :)))))))))))

அப்புறம்...... கோழி. நம்மாளு வேட்டையாடுறதை வரவேற்குமா? ஏதோ நாம சாப்பிடவே ஆசையோடு தன் முடிவை மகிழ்வோடு எதிர்நோக்கி "உடலெடுத்தேன் நீ வறுப்பதற்கு, இந்த பிறப்பெடுத்தேன் நீ புசிப்பதற்கு" என்று கொள்ளையில் இருப்பது போல சொல்லுகிறாரே கவியரசர்! என்ன விந்தை! நான் நல்லத்தனமாக பால் கொடுக்க பிடித்தால் கூட சிக்காமல் துள்ளி குதித்து ஓடுகிறது இங்குள்ள ஆட்டுக்குட்டி. இங்கே கோழி வா வா, என்னை பொறித்து சாப்பிடு என்றா சொல்லும்? :)))))))))))))))