மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.10.12

Devotional பழநியப்பா சூப்பராகப் பாட வைத்தாய் நீயப்பா!


Devotional பழநியப்பா சூப்பராகப் பாட வைத்தாய் நீயப்பா!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை, முருகனின் பெருமை சொல்லும் பிரபலமான பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. படித்து, கேட்டு மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------

    ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
    முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும்
    கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது    என்று   நாணித்தான்
    முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
    நல்ல குருநாதன் உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது
    என்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...

    முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ
    உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
    அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
    ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
    நல்லகுரு நாதன் நீ உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
    நாணித்தான்.. அப்பனித்தலையர் தரவில்லையாதலால்
    முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
    முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே

    சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
    சக்தி வடிவேல் வடிவேல் வேல்...
    சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
    வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
    சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ?
    முருகா உனக்குக் குறையுமுளதோ?
    வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
    சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா
    உனக்கு.. குறையுமுளதோ?... முருகா உனக்குக் குறையுமுளதோ?

    ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்?
    முருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
    எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்
    என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன் தருவையரு பழனி மலையில்
    சந்ததம் குடிகொண்ட சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி
    தண்டபாணித் தெய்வமே

    பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
    பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
    சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்
    பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா

    கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு
    கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்
    கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்
    உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா

    ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
    ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
    நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
    நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
    தாயுண்டு மனம் உண்டு
    தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன்
    தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு

    ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
    ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
    மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
    மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
    ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ
    ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ


    திரைப்படம்: திருவிளையாடல்
    பாடியவர்: K B. சுந்தராம்பாள்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: K.V. மஹாதேவன்

-----------------------------------
இந்தப் பாடலை 12 வயதுக் குழந்தை ஒன்று Airtel Super Singer Junior நிகழ்ச்சியில் அசத்தலாகப் பாடியது காணொளி வடிவில் கீழே உள்ளது. கேட்டு மகிழுங்கள். குழந்தையின் பெயர் செல்வி.யாழினி
our sincere thanks to the person who uploaded the song in the net


 

செல்வி யாழினி    


 நிகழ்ச்சியைக் கேட்ட பிரபலங்கள் எல்லாம் அந்தக் குழந்தைக்குத் தெயவ அருள் இருக்கிறது. அதனால்தான் இத்தனை கடினமான பாடாலை அனாயசமாகப் பாடியது என்றார்கள். உண்மைதான். பழநியப்பன் அருள் இருந்தால் யார்தான்  சூப்பராகப் பாட முடியாது?
-----------------------------------------------------------------------------------

 ஒவ்வொரு சொல்லிலும் தெயவ மணம் கமழும் கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் பாடிய பாடலைக் கேட்க வேண்டுமா?
அதன் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். கேட்டு மகிழுங்கள்
http://www.youtube.com/watch?v=KDNSM0RyUa8
Pazham Neeyappa - Thiruvilayadal - K.B. Sundarambal

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==

21 comments:

  1. "மாறி வரும் நாரீக உலகினிலே
    மாறவில்லை நாங்கள் தெய்வபக்தியிலே"

    என்று சொல்ல வந்ததோ... இல்லை
    எது பக்தி என தெரியாமல் பாடி வந்தது

    பாட்டு இருக்கு..
    ராகம் இருக்கு..
    அட்ஷர சுத்தமிருக்கு.. நல்ல
    குரல் இருக்கு..

    ஆனால்....?

    இளைய தலைமுறையை ஊக்குவித்தனெ
    இந்த இனிய நல் வாழ்த்துக்கள்..

    இந்த பாடலினை இதுவரை REMIX செய்யாத அந்த
    இசையமைப்பாளருக்கு நன்றிகள்

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்கம்
    பாடியவர் பெருமைக்குரியவர்
    நன்றி

    ReplyDelete
  3. மிகவும் அற்புதமான கவியரசின் பாடல் அதுவும் ஒரு தெய்வீகக் குரலில்!
    குழந்தை யாழினி பாடியது யாழிசை இப்படித்தான் இருந்திருக்குமோ என்றே
    வியக்கச் செய்தது அதைவிட மனதை உருக்கச் செய்தது அதனாலே கண்களில் நீரையும் பெருக்கவும் செய்தது. இந்த சின்ன வயதில் இத்தனை ஞானமா!!! இவள் என்ன ஞானவல்லியின் சொரூபமா! அப்பன் முருகனின் சித்தம் அதுவாக இருந்ததால் தான் அந்தக் குழந்தைக்கு அவனது அருள் பெற்ற அவளுக்கு அது சாத்தியமாகி இருக்கிறது. எத்தனை சிறப்பும், பெருமையும், பெருமிதமும் தந்த நிகழ்வு....

    இந்தக் குழந்தையைப் பெற அந்த தாய் தான் எத்தனை பெரிய தவம் செய்தாளோ!!!

    அருமையானப் பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா!

    தமிழ்க் கடவுளை போற்றிப் பாடிய பாடலைக் கேட்டத் தருணத்தில் எனது கவிதை...

    அழகியத் தமிழில் அதுதரும் களிப்பில்
    எழுதிடும் கவியில் இருந்திடும் - கருத்தில்
    இனியது; சுவையோடு உயர்வது எதுவென!
    கனிந்தமனமது இயம்பிடத் துடிக்கும் - இருந்தும்
    நனிசிறந்த நற்றமிழே நம்முயிரினும் மேலான
    அணிசீருயிர் அமுதென கண்டீர்!

    உலகில் முதலானாய் உணர்விற்கு உரமானாய்
    உலகெலாம் பரவிய உம்மக்கள் எய்திட்ட
    உன்னத வாழ்விற்கு காரணம் நீயே!
    உன்னைபாடும் இக்கவிக்கு கருவும் நீயே!
    அறிவிற்கு விருந்தான மானுட மருந்தே!
    அறிவாயோ அழகிய அமுதத் தமிழே
    அரிய எங்களுயிரின் உயிரே!

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  4. பன்னிரெண்டு வயது குழந்தை ஒரு நல்ல பாடலை சிறப்பாகப் பாடலாம் நல்ல பயிற்சி இருந்தால். ஆனால் அதே பாடலைப் பாடிய பிரபலமான பாடகியின் குரலைப் போலவும், அதே நுணுக்கங்களுடனும் எந்தப் பிசிறும் இல்லாமல் பாடும்போது, கேட்போர் ரசிப்பது மட்டுமல்ல, இந்தக் குழந்தை அந்த பிரபல பாடகியையும் நினைவுபடுத்தி, அவரைப் போலவே பாடுகிறது என்றால், அது தெய்வ அருள் மட்டுமல்ல, அந்த பாடகியே மீண்டும் வந்து யாழினியாகப் பிறந்திருப்பாளோ என்று அன்று எண்ணினேன். கண்களில் நீர்வழிய அந்தக் குழந்தைப் பாடியதைக் கேட்டு மகிழும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. அந்தக் குழந்தை வாழிய நீடுழி!

    ReplyDelete
  5. அற்புதமான, நெஞ்சம் மறக்காத பாடலை வலையேற்றிய தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. மதங்களைக் கடந்தது இசை என்பதை நிரூபிக்கும் அற்புதக் குழந்தை யாழினி. 5 வயதிலிருந்தே, இந்தப் போட்டியில் பங்கு கொள்ள தொடர்ந்து முயன்று வரும் யாழினி, இந்த சீசனில் தேர்வு செய்யப்பட்டாலும், இறுதிப் போட்டியில் பங்கு கொள்ள ஒரே ஒரு படி என்ற வேளையில், வாய்ப்பை இழந்தார். ஆனாலும், தன்னம்பிக்கையுடன், தளராமல், 'வைல்ட் கார்ட் ரவுண்டில்' பாடி வரும் அந்தக் குழந்தை, இறுதிப் போட்டியில் பங்கு கொள்ள வேண்டி பாடிய பாடல்களில் ஒன்று இது. யாழினி, இறையருளால் வெற்றி பெறப் பிரார்த்திக்கிறேன். கொடுமுடி கோகிலத்தின் பாடலைக் கேட்கவும் சுட்டி கொடுத்த தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  6. உண்மையிலேயே மிகவும் கடினமான பாடலான இதன் வரிகளை இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  7. சரியாகத்தான் பெயர் வைத்தார்கள் யாழினி என்று! மிகச் சில பேருக்குத்தான் பேரும் அவர்கள் திறனும் ஒப்புமையாக அமையும்.

    இளைய சமுதாயத்திற்கு இதற்கெல்லாம் நேரமில்லை என்ற கூற்று யாழினி போன்ற சிலரால் பொய்யாக்கப்பட்டு வருகிறது.வாழ்க, வளர்க!

    பிறர் திறனுக்கு வெளிச்சம் கொடுக்கும் ஐயாவுக்கு நன்றி!

    பின்னூட்டம் இடுவதிலேயே தன் கவிதாத் திறனையும் வெளிப்படுத்திவரும்
    ஹாலாஸ்யம்ஜிக்கு என் வாழ்த்துக்கள்.

    எதுகை மோனை என்ற கட்டுக்கள் தளர்த்தி, சொல்லாழம் கூட்டி, குறைந்த சொற்களில் நிறைந்த பொருளுடன் வசன கவிதகளை கவிஞர் ஹாலாஸ்யம் எழுதலாம்.அது அவருக்கு வரும்.

    ReplyDelete
  8. இந்த பாடலை பலமுறை இசைத்தட்டுகள் , வேறு வகையிலும் கேட்டு இருக்கிறேன். மிகவும் பிடித்த பாடல். கணங்களை மூட்டி ரசித்திருக்கிறேன்.. ஆனால் யாழினியின் குரலில் கேட்டதில்லை. நான் இருக்கும் நிலையில் இப்போதும் என்னால் பார்க்கவோ கேட்கவோ முடியாது. பின்னூட்டங்களில் வந்திருக்கும் பாராட்டுகளைப் பார்க்கும் போது ....

    Thanjavooraan said...அந்த பாடகியே மீண்டும் வந்து யாழினியாகப் பிறந்திருப்பாளோ என்று அன்று எண்ணினேன். கண்களில் நீர்வழிய அந்தக் குழந்தைப் பாடியதைக் கேட்டு மகிழும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. அந்தக் குழந்தை வாழிய நீடுழி!

    ஜி ஆலாசியம் said...இந்தக் குழந்தையைப் பெற அந்த தாய் தான் எத்தனை பெரிய தவம் செய்தாளோ!!!

    Parvathy Ramachandran said... 5 வயதிலிருந்தே, இந்தப் போட்டியில் பங்கு கொள்ள தொடர்ந்து முயன்று வரும் யாழினி, இந்த சீசனில் தேர்வு செய்யப்பட்டாலும், இறுதிப் போட்டியில் பங்கு கொள்ள ஒரே ஒரு படி என்ற வேளையில், வாய்ப்பை இழந்தார். ஆனாலும், தன்னம்பிக்கையுடன், தளராமல், 'வைல்ட் கார்ட் ரவுண்டில்' பாடி வரும் அந்தக் குழந்தை, இறுதிப் போட்டியில் பங்கு கொள்ள வேண்டி பாடிய பாடல்களில் ஒன்று இது. யாழினி, இறையருளால் வெற்றி பெறப் பிரார்த்திக்கிறேன்.

    அந்த குழ்ந்தை யாழினி போட்டியில் வென்று மேன்மேலும் புகழ்பெற்று எதிர்காலத்தில் ஒரு சுந்தராம்பாளாக மாற எல்லாம் வல்ல ஆண்டவனிடம் வேண்டிக்கொண்டு வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  9. Blogger அய்யர் said...
    "மாறி வரும் நாரீக உலகினிலே
    மாறவில்லை நாங்கள் தெய்வபக்தியிலே"
    என்று சொல்ல வந்ததோ... இல்லை
    எது பக்தி என தெரியாமல் பாடி வந்தது
    பாட்டு இருக்கு..
    ராகம் இருக்கு..
    அட்ஷர சுத்தமிருக்கு.. நல்ல
    குரல் இருக்கு..
    ஆனால்....?
    இளைய தலைமுறையை ஊக்குவித்தனெ
    இந்த இனிய நல் வாழ்த்துக்கள்..
    இந்த பாடலினை இதுவரை REMIX செய்யாத அந்த
    இசையமைப்பாளருக்கு நன்றிகள்/////

    ஆனால் என்ற கொக்கியைஎல்லாம் போடாமல், அந்தக் குழந்தையை முழுமனதோடு பாராட்டுங்கள் சுவாமி!

    ReplyDelete
  10. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    பாடியவர் பெருமைக்குரியவர்
    நன்றி////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. Blogger ஜி ஆலாசியம் said...
    மிகவும் அற்புதமான கவியரசின் பாடல் அதுவும் ஒரு தெய்வீகக் குரலில்!
    குழந்தை யாழினி பாடியது யாழிசை இப்படித்தான் இருந்திருக்குமோ என்றே
    வியக்கச் செய்தது அதைவிட மனதை உருக்கச் செய்தது அதனாலே கண்களில் நீரையும் பெருக்கவும் செய்தது. இந்த சின்ன வயதில் இத்தனை ஞானமா!!! இவள் என்ன ஞானவல்லியின் சொரூபமா! அப்பன் முருகனின் சித்தம் அதுவாக இருந்ததால் தான் அந்தக் குழந்தைக்கு அவனது அருள் பெற்ற அவளுக்கு அது சாத்தியமாகி இருக்கிறது. எத்தனை சிறப்பும், பெருமையும், பெருமிதமும் தந்த நிகழ்வு....
    இந்தக் குழந்தையைப் பெற அந்த தாய் தான் எத்தனை பெரிய தவம் செய்தாளோ!!!
    அருமையானப் பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா!
    தமிழ்க் கடவுளை போற்றிப் பாடிய பாடலைக் கேட்டத் தருணத்தில் எனது கவிதை...
    அழகியத் தமிழில் அதுதரும் களிப்பில்
    எழுதிடும் கவியில் இருந்திடும் - கருத்தில்
    இனியது; சுவையோடு உயர்வது எதுவென!
    கனிந்தமனமது இயம்பிடத் துடிக்கும் - இருந்தும்
    நனிசிறந்த நற்றமிழே நம்முயிரினும் மேலான
    அணிசீருயிர் அமுதென கண்டீர்!
    உலகில் முதலானாய் உணர்விற்கு உரமானாய்
    உலகெலாம் பரவிய உம்மக்கள் எய்திட்ட
    உன்னத வாழ்விற்கு காரணம் நீயே!
    உன்னைபாடும் இக்கவிக்கு கருவும் நீயே!
    அறிவிற்கு விருந்தான மானுட மருந்தே!
    அறிவாயோ அழகிய அமுதத் தமிழே
    அரிய எங்களுயிரின் உயிரே!
    நன்றிகள் ஐயா!/////

    நெகிழ்ச்சியான உங்களின் பின்னூட்டத்திற்கும் கவிதை வரிகளுக்கும் நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  12. Blogger Thanjavooraan said...
    பன்னிரெண்டு வயது குழந்தை ஒரு நல்ல பாடலை சிறப்பாகப் பாடலாம் நல்ல பயிற்சி இருந்தால். ஆனால் அதே பாடலைப் பாடிய பிரபலமான பாடகியின் குரலைப் போலவும், அதே நுணுக்கங்களுடனும் எந்தப் பிசிறும் இல்லாமல் பாடும்போது, கேட்போர் ரசிப்பது மட்டுமல்ல, இந்தக் குழந்தை அந்த பிரபல பாடகியையும் நினைவுபடுத்தி, அவரைப் போலவே பாடுகிறது என்றால், அது தெய்வ அருள் மட்டுமல்ல, அந்த பாடகியே மீண்டும் வந்து யாழினியாகப் பிறந்திருப்பாளோ என்று அன்று எண்ணினேன். கண்களில் நீர்வழிய அந்தக் குழந்தைப் பாடியதைக் கேட்டு மகிழும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. அந்தக் குழந்தை வாழிய நீடுழி!///////

    உண்மைதான். அந்தப் பாடலை உணர்ச்சி மேலிட அந்தக் குழந்தை பாடுவதைப் பார்க்கும்போது எனக்கும் கண்கள் பனித்துவிட்டன. எல்லாம் இறைவன் அருள்!!!
    உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  13. ////Blogger Parvathy Ramachandran said...
    அற்புதமான, நெஞ்சம் மறக்காத பாடலை வலையேற்றிய தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. மதங்களைக் கடந்தது இசை என்பதை நிரூபிக்கும் அற்புதக் குழந்தை யாழினி. 5 வயதிலிருந்தே, இந்தப் போட்டியில் பங்கு கொள்ள தொடர்ந்து முயன்று வரும் யாழினி, இந்த சீசனில் தேர்வு செய்யப்பட்டாலும், இறுதிப் போட்டியில் பங்கு கொள்ள ஒரே ஒரு படி என்ற வேளையில், வாய்ப்பை இழந்தார். ஆனாலும், தன்னம்பிக்கையுடன், தளராமல், 'வைல்ட் கார்ட் ரவுண்டில்' பாடி வரும் அந்தக் குழந்தை, இறுதிப் போட்டியில் பங்கு கொள்ள வேண்டி பாடிய பாடல்களில் ஒன்று இது. யாழினி, இறையருளால் வெற்றி பெறப் பிரார்த்திக்கிறேன். கொடுமுடி கோகிலத்தின் பாடலைக் கேட்கவும் சுட்டி கொடுத்த தங்களுக்கு நன்றி./////

    உங்களுடைய மேலான பிரார்த்தனை பலிக்கட்டும். நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. //////Blogger ஸ்ரீராம். said...
    உண்மையிலேயே மிகவும் கடினமான பாடலான இதன் வரிகளை இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்/////

    உங்களைப் போன்ற பலருக்கும் பயன்படட்டும் என்றுதான் வரிகளையும் வலையில் ஏற்றினேன்!.

    ReplyDelete
  15. /////Blogger kmr.krishnan said...
    சரியாகத்தான் பெயர் வைத்தார்கள் யாழினி என்று! மிகச் சில பேருக்குத்தான் பேரும் அவர்கள் திறனும் ஒப்புமையாக அமையும்.
    இளைய சமுதாயத்திற்கு இதற்கெல்லாம் நேரமில்லை என்ற கூற்று யாழினி போன்ற சிலரால் பொய்யாக்கப்பட்டு வருகிறது.வாழ்க, வளர்க!
    பிறர் திறனுக்கு வெளிச்சம் கொடுக்கும் ஐயாவுக்கு நன்றி!
    பின்னூட்டம் இடுவதிலேயே தன் கவிதாத் திறனையும் வெளிப்படுத்திவரும்
    ஹாலாஸ்யம்ஜிக்கு என் வாழ்த்துக்கள்.
    எதுகை மோனை என்ற கட்டுக்கள் தளர்த்தி, சொல்லாழம் கூட்டி, குறைந்த சொற்களில் நிறைந்த பொருளுடன் வசன கவிதகளை கவிஞர் ஹாலாஸ்யம் எழுதலாம்.அது அவருக்கு வரும்./////

    மரபுக் கவிதைகள் எழுதும் காலம் எல்லாம் முடிந்துவிட்டது போலும். நாமும் வசன கவிதைகளை வாசிப்போம். வாழ்த்துவோம்! நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  16. ////Blogger thanusu said...
    இந்த பாடலை பலமுறை இசைத்தட்டுகள் , வேறு வகையிலும் கேட்டு இருக்கிறேன். மிகவும் பிடித்த பாடல். கணங்களை மூட்டி ரசித்திருக்கிறேன்.. ஆனால் யாழினியின் குரலில் கேட்டதில்லை. நான் இருக்கும் நிலையில் இப்போதும் என்னால் பார்க்கவோ கேட்கவோ முடியாது. பின்னூட்டங்களில் வந்திருக்கும் பாராட்டுகளைப் பார்க்கும் போது ....
    Thanjavooraan said...அந்த பாடகியே மீண்டும் வந்து யாழினியாகப் பிறந்திருப்பாளோ என்று அன்று எண்ணினேன். கண்களில் நீர்வழிய அந்தக் குழந்தைப் பாடியதைக் கேட்டு மகிழும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. அந்தக் குழந்தை வாழிய நீடுழி!
    ஜி ஆலாசியம் said...இந்தக் குழந்தையைப் பெற அந்த தாய் தான் எத்தனை பெரிய தவம் செய்தாளோ!!!
    Parvathy Ramachandran said... 5 வயதிலிருந்தே, இந்தப் போட்டியில் பங்கு கொள்ள தொடர்ந்து முயன்று வரும் யாழினி, இந்த சீசனில் தேர்வு செய்யப்பட்டாலும், இறுதிப் போட்டியில் பங்கு கொள்ள ஒரே ஒரு படி என்ற வேளையில், வாய்ப்பை இழந்தார். ஆனாலும், தன்னம்பிக்கையுடன், தளராமல், 'வைல்ட் கார்ட் ரவுண்டில்' பாடி வரும் அந்தக் குழந்தை, இறுதிப் போட்டியில் பங்கு கொள்ள வேண்டி பாடிய பாடல்களில் ஒன்று இது. யாழினி, இறையருளால் வெற்றி பெறப் பிரார்த்திக்கிறேன்.
    அந்த குழ்ந்தை யாழினி போட்டியில் வென்று மேன்மேலும் புகழ்பெற்று எதிர்காலத்தில் ஒரு சுந்தராம்பாளாக மாற எல்லாம் வல்ல ஆண்டவனிடம் வேண்டிக்கொண்டு வாழ்த்துகிறேன்.////

    உங்களின் நல்ல மனதிற்கு வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறும். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனுசு

    ReplyDelete
  17. ////SP.VR. SUBBAIYA said...
    உங்களுடைய மேலான பிரார்த்தனை பலிக்கட்டும். நன்றி சகோதரி!////

    தங்களது வார்த்தைகள் பொன்னாகிவிட்டன. அந்தக் குழந்தை இறுதிப் போட்டிக்குத் தேர்வாகிவிட்டாள். ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்படும் என்று அறிவித்து, தேர்வும் ஆன நிலையில், யாரும் எதிர்பாராமல், அதிக வாக்குகள் பெற்றதால் யாழினியும் இறுதிப் போட்டியில் பங்கு கொள்ள இருக்கிறார். தாங்கள் கூறியது போல் பழனியப்பன் அருளிருக்க யார் தான் உச்சிக்கு வர முடியாது?!!. மிக மிக நன்றி ஐயா.

    ReplyDelete
  18. அற்புதமான அக்குரலை படங்களில் மட்டுமே ரசித்ததுண்டு. KBS அவர்களை ஒரு சமயம் ஈரோடில் பார்த்திருக்கிறேன்.
    பாடல் வரிகளுக்கு நன்றிகள் பல வாத்தியாருக்கு. யாழினியின் இசை வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. ////Blogger Parvathy Ramachandran said...
    ////SP.VR. SUBBAIYA said...
    உங்களுடைய மேலான பிரார்த்தனை பலிக்கட்டும். நன்றி சகோதரி!////
    தங்களது வார்த்தைகள் பொன்னாகிவிட்டன. அந்தக் குழந்தை இறுதிப் போட்டிக்குத் தேர்வாகிவிட்டாள். ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்படும் என்று அறிவித்து, தேர்வும் ஆன நிலையில், யாரும் எதிர்பாராமல், அதிக வாக்குகள் பெற்றதால் யாழினியும் இறுதிப் போட்டியில் பங்கு கொள்ள இருக்கிறார். தாங்கள் கூறியது போல் பழனியப்பன் அருளிருக்க யார் தான் உச்சிக்கு வர முடியாது?!!. மிக மிக நன்றி ஐயா./////

    ஆமாம் சகோதரி. நானும் பார்த்தேன். தகவலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. /////Blogger SAI SRIDHAR said...
    அற்புதமான அக்குரலை படங்களில் மட்டுமே ரசித்ததுண்டு. KBS அவர்களை ஒரு சமயம் ஈரோட்டில் பார்த்திருக்கிறேன்.
    பாடல் வரிகளுக்கு நன்றிகள் பல வாத்தியாருக்கு. யாழினியின் இசை வளர வாழ்த்துக்கள்./////

    உங்களைப்போன்ற நல்ல உள்ளம் கொண்டோரின் வாழ்த்துக்கள் அந்தக் குழந்தையின் வளர்ச்சியை மேன்மைப் படுத்தும் நண்பரே! நன்றி!

    ReplyDelete
  21. Ayya

    The Gnanapazhathai pizhindhu part was written by Sri Sankaradas Swamigal

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com